07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, January 28, 2011

பே(p)ஸ் பவுலிங்

லஞ்ச் ப்ரேக் முடிஞ்சது. அடுத்து ஃபீல்டிங் எறங்க வேண்டியதுதானே? 

பேஸ் பவுலிங்க்னா ஃபாஸ்ட் பவுலிங். ஒரு டீமுக்கு ஃபாஸ்ட் பவுலிங் நல்லா இருக்க வேண்டியது ரொம்ப முக்கியம். நம்ம இந்திய கிரிக்கெட் டீம்ல ஒரு காலகட்டத்துல நல்ல ஃபாஸ்ட் பவுலர்ஸே கிடையாது. மீடியம் பேஸ் மட்டும் போட்டுட்டு அதுக்கப்புறம் ஸ்பின் வச்சே ஒப்பேத்துவாங்க. இப்பத்தான் கொஞ்சம் `ஃபாஸ்ட் பவுலர்ஸ் இந்தியா டீம்ல வந்திருக்காங்க.

ஃபாஸ்ட் பவுலிங்க்ல முக்கியமானது aggression. எதிர்ல பேட்டிங் செய்யறது பெரிய பேட்ஸ்மேன். பெஸ்ட் பேட்ஸ்மேன் அப்பிடின்னு எல்லாம் பாக்காம தைரியமா பவுலிங் பொடணும். மூஞ்சிக்கு நேரா பவுன்ஸர் போடவும் தெரியணும், காலைக்குறி வச்சி யார்க்கர் போடவும் தெரியணும். 

பதிவுலகத்துல ஃபாஸ்ட் பவுலிங்க்னா அது அரசியல் விமர்சனப் பதிவுகள் தான். யாரை விமர்சிக்கிறோம், அவங்க பெரிய ஆள்னு எல்லாம் யோசிக்காம எழுதணும். அப்படி எழுதுற பதிவர்களைத்தான் இன்னைக்கி பார்க்கப் போறோம். 

முதல்ல நாம பார்க்கப் போறது ஒரு மயிலாடுதுறைவாசி. இவரோட புனைப்பெயர் கொக்கரக்கோ. அபி அப்பா போல இவரும் ஒரு திமுக விசுவாசி மாதிரி காணப்படுறார். விவசாயம் பத்தி இவர் எழுதின பதிவு எனக்கெல்லம் நிறைய கற்றுக் கொடுக்குது. ஜெயிக்க என்ன செய்யணும்னு ஜெயலலிதாவுக்கு இவர் அட்வைஸும் கொடுக்கிறார். 

அடுத்ததா நாம பார்க்கப் போறது சங்கர் குருசாமி. இவர் தோழர்கள் ஆளும் கொல்கத்தாவுல வேலை பார்த்து வர்றார். பவுன்ஸர் போடுற ஃபாஸ்ட் பவுலர் இவர். இவர் போட்ட பவுன்ஸர்ல ஒண்ணு நமக்கு நாடாளுமன்றம் தேவயான்னு கேக்குது. மத்த சில பதிவர்களை மாதிரி புகார் மட்டும் சொல்லாம கொஞ்சம் யோசனைகளையும் குடுக்குறார். அப்பிடி இவர் சொன்னது அரசு மருத்துவமனைகளைப் பற்றி. 

அடுத்ததா பார்க்கப் போற இந்தப் பதிவர் பேரு இரா.சிவானந்தன். ஒரு படத்துல ராதிகா வெளிய பொழைக்க முடியாம ஜெயிலுக்குப் போனா சாப்பாடு கிடைக்குதுன்னு எல்லா கேஸையும் தன் மேல போட்டுக்கிட்டு ஜெயிலுக்குப் போவாங்க. அது மாதிரி இவர் வெளிய எதோ கஷ்டத்துக்காக ஜெயிலுக்குப் போயிட்டா நிம்மதின்னு நினைச்சி வேணும்னே ஒரு தப்பு செஞ்சிட்டு ஜெயிலுக்குப் போயி மீண்டிருக்காரு. தன்னோட சிறை அனுபவங்களையும், அது சார்ந்த சில செய்திகளையும் தன்னோட பதிவுல எழுதிட்டு வர்றாரு. நம்ம போலீஸும், அரசாங்கமும் பயமுறுத்துற குண்டர் சட்டத்தைப் பத்தி எழுதியிருக்காரு. தன்னோட சிறை அனுபவங்களைத் தொடரா எழுதி வர்றது இங்க

அடுத்ததா நாம பார்க்கப் போறவர் பேரு அன்பு. பெண்களூர்ல வாசம் செய்யறாரு. சமீபத்துல பெங்களூர்ல நடந்த பந்த் தேவயான்னு கேக்கறாரு. நடிகர்கள் அரசியலுக்கு வந்தா எடுபடுமான்னும் அலசறாரு. பெங்களூர்ல ஒரு கோவில்ல மனு தர்மத்தை அமல்படுத்துகிற மாதிரி இருக்கிற ஒரு சடங்கையும் சாடுறாரு. 

அடுத்ததா பார்க்கப் போறது ரதி. இவங்க இலங்கையைச் சேர்ந்த பதிவர். தொலைக்காட்சிகளின் ரியாலிட்டி ஷோக்களையும், ஈழக் குழந்தைகளின் நிலையையும் அருமையா எழுதியிருக்காங்க. ஒரு இனத்தை அழிப்பதற்காக அந்த இனத்தின் இலக்கியத்தை அழித்த ஒரு இனம் ஆளும் மண்ணில் இலக்கியத் திருவிழா நடத்துறது சரியான்னு கேள்வி கேட்டிருக்காங்க. 

அடுத்ததா நாம பார்க்கப் போறதும் ஒரு இலங்கைப் பதிவர்தான். கிருத்திகன் குமாரசுவாமி, இப்ப வசிக்கிறது கனடாவில. இவர் 2009ல இருந்து எழுதிட்டு வந்தாலும் கடந்த வருடத்தில இருந்து ரொம்ப குறைவாத்தான் எழுதறாரு. ஆனா, கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுங்கிற மாதிரி இவர் எழுதறதெல்லாம் நறுக்குன்னு தான் இருக்கும். புலம்பெயர்ந்த சில தமிழர்கள் வாழ்வு நிலையையும் அவங்க இன்னைக்கி இருக்கிற இலங்கையை எப்பிடிப் பார்க்கிறாங்கன்னும் அவர் எழுதியிருக்கிற இந்தப் பதிவோட கடைசிப் பாராவை படிச்சி கலங்காத கண்ணுல உயிரில்லைன்னு சொல்லுவேன். மன்மதன் அம்பு படத்துல ஒரு சர்ச்சையா சொல்லப்படுறது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் பாத்திரத்தைக் கமல் படைச்ச விதமும் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிற வசனமும். அதைப்பத்தி இவர்  சினிமா என்ற தளத்தை பொருளாதாரத்தையும், ஈழத்தமிழர் நுகர்வதற்கு இந்திய சினிமாவுக்குப் போட்டி போடும் அளவுக்கு ஈழத் தமிழ் சினிமா உலகம் என்று ஒன்று இல்லாததையும் வச்சி எழுதின அலசல் கட்டுரை உண்மையிலேயே அசத்தல்.

இன்னைக்கி பேஸ் பவுலர்ஸ் அவ்வளவு தான். நாளைக்கி வேறு ஒரு வித்தியாசமான கலக்‌ஷனோட உங்களை சந்திக்கும் வரை விடை பெறுவது உங்கள் முகிலன். :))

9 comments:

 1. எல்லோரும் புதுசு எனக்கு . பார்க்கிறேன்

  ReplyDelete
 2. வலைச்சரம் படிக்கும்போது தான் நிறைய பதிவர்கள் நமக்குத் தெரிய வருகிறார்கள்.
  எல்.கே சொன்னது போல இவர்களுடைய பதிவுகளை இனிமேல் தான் படிக்க வேண்டும்.
  அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 3. அருமையான அறிமுகங்கள்..... அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 4. மொத்தமுமே புது அறிமுகங்கள்.இனிமேதான் புதுசா பாக்க போறேன்

  ReplyDelete
 5. நல்ல அறிமுகங்கள் ...

  உங்கள் அறிமுகம் கொஞ்சம் வித்தியாசமா இருக்குங்க

  ReplyDelete
 6. சிறப்பான அறிமுகங்கள் நண்பரே

  தொடரட்டும் உங்கள் பணி...

  ReplyDelete
 7. புதிய அறிமுகங்கள்...நன்றி.

  ReplyDelete
 8. என்னோட குழந்தைகள் மற்றும் இலங்கையின் இலக்கியத்திருவிழா பற்றிய கட்டுரைகளை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி, முகிலன்.

  இன்னும் புதிதாய் சில பதிவர்கள் பற்றியும் தெரிந்துகொண்டேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது