07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 19, 2012

பழங்களும் பல்சுவைப்பதிவுகளும் ..!

 மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை. உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்து அதாவது புரதச் சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.பழங்கள் மலச்சிக்கலைப் போக்கி உடலை நோயின்றி காக்கின்றன.

மாம்பழம்
மாமரம் 35 - 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன் இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன.கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. இனிய மணத்தையும் கொண்டுள்ளன. பூத்து, மூன்று முதல் ஆறு மாதங்களில் பழங்கள் முற்றுகின்றன.

பலா
இந்தியா, பர்மா, இலங்கை, சீனா, மலேசியா, பிலிப்பைன்ஸ், பிரேசில், கென்யா ஆகிய நாடுகளில் பெரும்பாலாக வளர்கிறது.தென்னிந்தியாவில், மாம்பழம் மற்றும் வாழைப்பழத்துக்கு அடுத்ததாக அதிகம் பயன்படுத்தப்படுவது பலா ஆகும்.
பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன.

வாழை
முதன்மையாக அதன் பழங்களுக்காக பயிரிடப்படுகிறது எனினும் சிலவேளைகளில் அலங்காரச்செடியாகவும் நார் பெறுவதற்காகவும் வேறு தேவைகளுக்காவும் வாழை பயிரிடப்படுகிறது.
  வாழைப்பழத்தில் இயற்கையாகவே சுக்ரோஸ், குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் என்ற சர்க்கரை :இருப்பதால் தின்றவுடனே உடலுக்கு சக்தி கிடைக்கும். இது ஒன்றரை மணி நேரம் நாம் வேலை செய்யப் போதுமானதாகும்.  வாழைப்பழத்தில் உள்ள வைட்டமின் பி-6 நரம்புகளைத் தளர்ச்சி அடைய விடாமல் செய்கிறது.


கொய்யா
    கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன. கொய்யாவுக்கு சர்க்கரையைக் குறைக்கும் தன்மையுண்டு. கொய்யாக் காய்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு பெருமளவு குறைய வாய்ப்புகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.   கொய்யா மரத்தின் வேர்,இலைகள், பட்டை, மற்றும் செங்காய் இவைகளில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. குடல், வயிறு பேதி போன்ற உபாதைகளுக்கு இவை பெரிதும் குணமளிக்கின்றன.

மாதுளை
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.

எலுமிச்சை
எலுமிச்சை புளிப்பு சுவை மிக்க மஞ்சள் நிறப் பழத்தைக் கொடுக்கும் ஒரு வகைத் தாவரம்.எலுமிச்சை மருத்துவ குணம் கொண்டது.

புளி
இது தென்னிந்தியச் சமையலில் முக்கியமான ஒன்றாகும்.

அத்திப்பழம்

அத்திப்பழத்தின் பயன்கள்
   1. தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
   2. மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.
   3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
   4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப்பிடலாம்.
   5. தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.


சீதாப்பழம்
சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.

அன்னாசிப்பழம்
அன்னாசி பித்தக் கோளாறுகளை விரைந்து குணமாக்குகிறது.அன்னாசியில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து அதிகம், அன்னாசியில் புரதம் தாராளமாக இருப்பதால் ஜீரணக் கோளாறு உடலில் வீக்கம் போன்றவை எதிர்ப்படாது.

திராட்சை
உலர்ந்த திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப் பாதுகாப்புக்குரியதாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று அவுன்ஸ் என இருவேளை அருந்தி வர குணம் பெறலாம்.திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண், வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது.

பப்பாளி
 நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு அருமருந்து.
 பித்தத்தைப் போக்கும்.
 உடலுக்குத் தென்பூட்டும்.
 இதயத்திற்கு நல்லது.
 மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்.
 கல்லீரலுக்கும் ஏற்றது.

சப்போட்டா

தினமும் 2 சப்போட்டா பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுப் பெறும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். சரும பளபளப்பு கூடும்.
பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கத்தை சப்போட்டா போக்கும். சப்போட்டா பழத்துடன் ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து சாப்பிட, பித்தம் நீங்கும்.
சப்போட்டா பழ ஜூஸூடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும்.

சாத்துக்குடி
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.
ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.

ஆப்பிள்
தினம் ஓர் ஆப்பிள், மருத்துவரைத் தூர வைக்கும் .தற்போது ஆப்பிள்களுக்குப் பலவிதமான புற்று நோய்களைத் தடுக்கும் ஆற்றல் உள்ளது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இதய நோய்கள், எடைக்குறைவு, கொழுப்புச்சத்துக் குறைவு ஆகியவற்றிற்கும் ஆப்பிள் உதவுகிறது.

சமையல், இலக்கியம், திரைப்படம் எனப் பலதையும் சுவைக்கவும் ரசிக்கவும் செய்பவள். இப்பொழுது உணவுடன் எழுத்துச் சமையலும் செய்ய முற்படுகிறேன். எனக்கூறும் மாதேவி இன்று மாதுளம் பழம் பற்றிக் கூறுகிறார் .

பல்லாயிரம் மையிலுக்கப்பால்
பாசத்தை தேடுகிறேன்
சொல்லாயிரம் இருக்கிறது
சொல்லத் தெரியவில்லை! நிஜத்தின் வலி வார்த்தையில் தெரிகிறது . அம்மாவின் பிரிவைத்தான் இப்படி எழுதுகிறார் சகோதரர் அருணா செல்வமே .
வெளியூர் சென்ற வேலைப்பார்ப்பதால் தாயை விட்டுப் பிரிந்த சகோவின் வருத்தம் நிறைந்த வரிகளை பார்த்துட்டு வந்திங்களா ,இங்கே என்னைப் போலவே மீண்டு வர முடியாத இடத்திற்கு சென்ற தாயை அழைக்கும் சேகர் .

இதே போன்றும் நானும் எனது தவிப்பை வரிகளில் கொட்டித் தீர்த்தேன் பாருங்களேன் .

பெரும்பாலான ஆண்கள் இப்படித்தானா ? நான் கேட்கவில்லை வேடந்தாங்கல் - கருன் கேட்கிறார் .அவரே பதிலும் சொல்றார் வாங்க போவோம் .

வாழும் காலங்களில் ஏழையாகவே வாழ்ந்துவிட்டு இறந்த பின் பணக்காரனாக ஆக்கும் ஒப்பந்தம் என்று சொல்லும் மனசாட்சி அது என்ன ஒப்பந்தம் கேட்போம் வாங்க .

பழங்களைப் பற்றி சொன்னோம் இல்ல அப்படி பழம் வாங்கும் போது எப்படி வாங்கணும் என்று உணவு உலகத்துல சொல்றாங்க வாங்க டிப்ஸ் டிப்ஸ் ...

அவங்க அவங்களுக்கு ஆசை இருக்கும் இல்ல அது போல இயற்கைக்கும் ஆசையாம் என்ன ஆசை அது வாங்க போவோம் .சக்தி வலைப்பூவிற்கு .

’யான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம்,’ என்று கூறும் கலையரசி ஊஞ்சல் ஆட வர சொல்றாங்க ஜாலி போலாமா ...?

 பழங்களை சாப்பிட்டு கோடையை குளுமையாக்குங்கள் நாளை சிந்திப்போம் .

33 comments:

  1. பழங்கள் பற்றிய தகவல்களும் சரி... அறிமுகம் செய்திருக்கும் பதிவுகளும் சரி... அட்டகாசம்.

    ReplyDelete
  2. நன்றி சகோ அறிமுகத்துக்கு

    இன்று பழ வகைகள் அசத்தல் அப் பழங்களில் ஒரு பழமாகா மனசாட்சியும், நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. பழங்களை பற்றிய தகவல்கள் அற்புதம்.., தங்களின் உழைப்பிற்கு ஒரு சல்யூட் ..!

    சிறு வயதில் அத்திப்பழம் நிறைய சாப்பிட்டிருக்கிறேன் (அணிலுடன் போட்டிபோட்டு :).., தற்போது அயல் மண்ணில் வசிப்பதால் அதற்கான பாக்கியம் கிடைக்கவில்லை, தாய் மண்ணை மிதித்ததும் அத்திப்பழத்தை தேடுவேன் ...!

    ReplyDelete
  5. பழங்கள் பற்றி நிறைய சேதிகளை அறிந்து கொண்டேன்.....

    அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.......

    ReplyDelete
  6. நிரஞ்சனா...
    முதல் ஆளாக வநது பாராட்டினதுக்கு நன்றிம்மா.

    மனசாட்சி
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    தமிழ்வாசி பிரகாஷ்
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி .

    வரலாற்று சுவடுகள்
    அத்திப்பழம் அவ்வளவு பிடிக்குமா உங்களுக்கு. உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  7. பழங்களும்
    அதன் நன் குணங்களும்
    பல்சுவை தோழமை பதிவுகளும்
    ம்ம்ம் ....அருமை
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  8. செய்தாலி said...
    தங்கள் கருத்து மகிழ்ச்சி தந்தது சகோ. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  9. பழங்கள் பற்றிய சிறப்பான தகவல்கள் அருமை. அறிமுகம் பெற்ற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. இன் சுவைப் பழங்களைப்பற்றிய செய்திகளோடு பல்சுவைப் பதிவுகளையும் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  11. அருமையான சுவை .. பழங்கள் மட்டும் அல்ல உங்கள் அறிமுகங்களும் தான் ..

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. தக்க இடத்தில் அறிமுகம்-நன்றி சகோ.

    ReplyDelete
  14. கணேஷ் ...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    வே.நடனசபாபதி...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    "என் ராஜபாட்டை"- ராஜா...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன். தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    FOOD NELLAI...
    தங்களின் வருகையும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    வேடந்தாங்கல் - கருன்*!...
    தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  15. இனிதாய் கனிந்த பழங்களாய் சுவைக்கும் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  16. வலைச்சரத்தின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டு திறம்பட செயலாற்றும் சசிகலாவுக்கு வாழ்த்துக்கள். என் பதிவை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி தோழி!

    ReplyDelete
  17. இராஜராஜேஸ்வரி...
    தங்கள் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன் . தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

    கலையரசி...
    வருகை தந்து வாழ்த்தியமைக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .

    ReplyDelete
  18. கனிகளை நூலில் கோர்த்தழகாய்,
    கடைகளில் தொங்க வைப்பர்.
    கவிஞர்களை அழகழகாய் தேடி,
    கண்முன் கொண்டு நிறுத்தி,
    கவியரங்கம் வலைச் சரத்தில்....
    கவிஞன் நானில்லை ஆனாலும்,
    கடைநிலை ரசிகனாய் நானும்,
    கற்பூரம் ஏற்றுகிறேன்-திறமைக்கு!

    ReplyDelete
  19. இதுவரை பொறுப்பேற்ற வலைச்சர ஆசிரியர்களுக்குள் எனக்கு சந்தேகமில்லை. நீங்கள்தான் பெஸ்ட். நிறைய சேதிகள் அற்புதமான அறிமுக மெனக்கெடல், கடின உழைப்பு. பாராட்டுக்கள் சசிகலா.

    ReplyDelete
  20. எனக்கு பிடிச்சது சாத்துக்குடி ஜூஸ்தான். இப்போது உங்கள் கலெக்‌ஷனும்...

    ReplyDelete
  21. ஆரோக்கியம் நிறைந்த தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  22. பழங்கள் பற்றிய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  23. பழனி.கந்தசாமி...
    தங்களின் வருகையும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

    d.g.v.p Sekar...
    திறமைக்கு கற்பூரம் ஏற்றினதுல ரொம்ப சந்தோஷங்க. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    G.M Balasubramaniam...
    மிகப்பெரிய பாராட்டை அளித்திருக்கிறீர்கள் ஐயா. தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

    விச்சு...
    சாத்துக்குடி ஜுஸ் போல இனிமையா இருக்குன்னு சொன்னதுல சந்தோஷங்க. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    baleno...
    தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றி.

    Lakshmi...
    தங்களி்ன் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிம்மா.

    ReplyDelete
  24. பழங்கள்+பதிவர்களின் அறிமுகங்கள் 2ம் சிறப்பு!!

    ReplyDelete
  25. மிக்க நன்றி சசிகலா .திடீரென ஆசை ஆசை கவிதைக்கு பார்வையாளர்கள் தொடரவும் முதலில் காரணம் புரியவில்லை.இப்போதுதான் தெரிகிறது தங்கள் அன்பினால் வந்த ஆசை என்று.மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  26. NIZAMUDEEN...
    உங்களின் வருகையும் வாழ்த்துரையும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

    S.Menaga...
    இரண்டையும் பாராட்டிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி!

    சக்தி...
    இன்னும் பல நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தத்தான் எனக்கு ஆசை. தங்களின் வருகைக்கு என் மனமார்ந்த நன்றி!

    சே.குமார்...
    உங்கள் வருகையும் பாராட்டும் கண்டு மகிழ்ந்தேன். என் மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  27. பழங்கள் பழமரங்கள் பற்றிய அழகான தொகுப்பை தந்து பழக்கடைகளை நோக்கி எம்மை ஓட வைத்துவிட்டீர்கள்.
    அருமை.

    சின்னுரேஸ்ரியின் அறிமுகத்துக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

    ReplyDelete
  28. பழமுதிர் சோலை :-)

    ReplyDelete
  29. மிக அருமையான பழங்களுடன் பல்சுவை பதிவுகளும்

    அனைவரும் வாழ்த்துகக்ள்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது