07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 29, 2012

சம்பல் வம்பு
இன்றைய ஸ்பெஷல்
அதீத கனவுகள்
ராகவன்
கண்ணன் பாட்டு
Consent to be......nothing!
கனவுகளின் காதலன்
ஈழத்து முற்றம்
hemikrish    தீத கனவுகள் (நடுவில் க் வருமா?) வலைப்பூவில் கதை, கவிதை, கட்டுரை என்று நிறைய எழுதியிருக்கிறார் ராதாகிருஷ்ணன். இவர் எழுதியிருக்கும் கட்டுரைகளில் கணிசமான அறிவியல் காணப்படுவது என்னை மிகவும் கவர்கிறது.

தமிழில் எழுத வருமென்றாலும் எண்ணத்தை சிலநேரம் மொழிபெயர்க்கத் திணறி, நான் சட்டென்று வசதியான ஆங்கிலத்துக்குத் தாவிவிடுவேன். இவர் நல்ல தமிழிலேயே சரளமாக எழுதுகிறார். உதாரண வரி: "ஈர்ப்பு விசையும், எதிர் விசையும் அதனால் உண்டாகும் சம விசையும் எண்ண விசைக்கு உட்பட்டதே".

பயமாக இருந்தால் சமாதானமடையுங்கள். மொத்த விசையும் சேர்த்துப் படிக்கும் பொழுது நன்றாகவே புரியும். எல்லா விசையும் இறைவனைத் தேடியறியும் முயற்சியில் சுபமாக முடிகிறது. பரம்பொருளே மெய்ஞானம் என்று நிச்சயமாக நம்புகிறார். சுவாரசியமாகவும் எழுதுகிறார். ராதாகிருஷ்ணன் என்ற பெயர் ரேட்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படுவதற்கும் மேற்சொன்ன சவாலங்கிடிக்கும் சம்பந்தம் உண்டு. படித்துப் பாருங்களேன்.

பின்னூட்டங்களைத் தனியாக சேமிக்க வேண்டும் என்று எனக்கும் தோன்றும். "சில நேரங்களில் அதிக சிரத்தை எடுத்து பின்னூட்டங்கள் நாம் எழுதுவோம். மட்டுறுத்தல் வைத்திருக்கும் வலைத்தளங்களில் அது பரிசீலனைக்கு உட்படாமல் போகலாம். நாம் பின்னூட்டம் எழுதிய இடுகை மறைந்து போகலாம். அவ்வாறான நேரங்களில் பின்னூட்டத்தை சேமித்து வைத்திருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றும்" என்று தொடங்கி ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தப் பதிவைப் படித்தபோது அசந்து போனேன். அட, நம்ம பிரச்சினை இவருக்கும் இருக்கும் போல என்றுத் தொடர்ந்து படித்தேன். தன்னுடையப் பின்னூட்டங்களைத் தொகுத்துப் பதிவாக எழுதத் தொடங்கியவர், ஏனோ தொடரவில்லை. தொடர விரும்புகிறேன்.

'கம்யூனிசமும் கருவாடும்' என்ற தலைப்பில் இவரது தொடர் கட்டுரையை மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன். 'ஆண்டாளுக்குக் கல்யாணம்' கோதைநாச்சியாரைப் பற்றிய சுவாரசியமான கதை. எதிர்பார்க்க மாட்டீர்கள். இரண்டையும் தேடிப் பிடித்துப் படியுங்களேன்?

'நுனிப்புல்' என்ற இவரது தொடர்கதையை இந்த வருடம் படித்து முடிக்க வேண்டும்.    "புன்னை இலைகளால் ஒரு படுக்கை தயார் செய்யும் கண்ணன்...
    அவன் அருகில் வரும் வேளையில், அவனை ஒதுக்கி, கீழே தள்ளிவிடும் ராதை!
    கண்ணன் உடம்பிலும் அடி, உள்ளத்திலும் அடியா??
    ஹைய்யோ! திடீரென்று, என்னவாயிற்று இந்த ராதைக்கு?"
படித்ததும் நானுந்தான் சொக்கிப் போனேன்.

எங்கேயோ எதையோ தேடிப் போகையில், பரவசப்படுத்தும் எழுத்துக்களில் சில சமயம் விழுந்திருக்கிறேன். 'கண்ணன் பாட்டு' வலைப்பூ அந்த வகை. கண்ணபிரான், ரவிசங்கர் (KRS), லலிதா மிட்டல், கவிநயா, குமரன், ஷைலஜா என்று நிறைய பேர் எழுதுகிறார்கள். எல்லோரும் சூரர்கள்.

கண்ணன் பாட்டு வலைப்பூவில் எல்லாமே.. ரைட்.. கண்ணன் பற்றிய பாடல்கள். அஷ்டபதியிலிருந்து சினிமாப் பாட்டு வரை பதிவெல்லாம் கண்ணன் மணம். சோர்ந்த நேரங்களில் தொலைந்து போன வலைப்பூக்களில் ஒன்று. படிக்கவும் இன்பம், கேட்கவும் இன்பம். நிறைய இசைப்பதிவுகள். கவனம்: ஒருமுறை இறங்கினால் அரைமணியாகும் மீள. ஓ! மறந்தே போனது. இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் - அற்புதம்.

எம்எல்வியின் குரலைக் கேட்க அவ்வப்போது இந்தப் பதிவுக்குப் போவேன். கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம் பாடலை எம்எல்வி பாடியிருப்பதைப் பதிவின் தயவில் தெரிந்து கொண்டேன். கேட்டுப் பாருங்களேன். lilting.

பாடலை (பத்து முறையாவது) கேட்பதுடன் கூடவே உரையையும் படித்து விடுங்கள். 'தங்கமே தங்கம்' என்று முண்டாசு யாரைக் குறிப்பிடுகிறார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். கண்ணன் மனநிலை அறிவது பற்றி கண்ணபிரான், KRS எழுதியிருப்பதைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் எங்கள் கிராம வீட்டில், திறந்தக் கதவுகளின் வழியே இளங்கோடையின் வெளிப்புறத்து மணங்கள் வீச, நடுஹால் ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவது போலிருக்கும். உங்களுக்கு உண்டாகும் அனுபவம் எப்படியிருக்கும்?

இந்த இடுகையில் இணைக்கப்பட்டிருக்கும் வீட்டு மாடி நடனம் விடியோவை ஒரு முறை பார்த்துவிடுங்கள். அதற்குப் பிறகு எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்பதைத் தனியாகக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். ஒலியை அடக்கினால் அதிகமாக ரசிக்க முடிகிறது. (நீங்களும் என்னைப் போல் எம்.எஸ் குரலை ரசிக்கமுடியாத அபூர்வ சீக்காமணியாக இருந்தால்)

புன்னை இலைகளால்... ஜெயதேவர் அஷ்டபதி காதலா காமமா? படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.    காரசாரமான அரசியல் விவாதம் எனக்குப் பிடிக்கும். அரசியலை அரசியலாக எழுதுவது கலை. இணையத்தில் நிறைய அரசியல் பதிவுகள் இருந்தாலும், பெரும்பாலானவற்றில் தலையங்கப் பார்வை தென்படுவதில்லை. இலங்கைத் தமிழர், இந்திய அரசியல், அன்னா ஹசாரே, கூடங்குளம், கனிமொழி... அரசியலை மெல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும், புலம்பல் அல்லது காழ்ப்புணர்ச்சியில் எழுதுவது போலவே தோன்றுகிறது. கிருஷ்ணமூர்த்தி சாடுகிறார். சாடினாலும் தலையங்கப் பார்வை படிக்க வைக்கிறது. நான் விரும்பிப் படிக்கும் அரசியல் பதிவு 'Consent to be......nothing!'.

இவருடைய 'சன்டேன்னா மூணு' இடுகைகள் சுவாரசியமானவை. தேடிப்பிடித்துப் படியுங்களேன்? சமீபமாக சன்டே இடுகைகளைக் காணோம். ஏனென்று தெரியவில்லை.

இது இவரது வலைப்பூவில் நான் படித்த முதல் இடுகை என்று நினைக்கிறேன். அல்லது அடிக்கடி படித்த இடுகையாக இருக்கலாம். பொழுதைப் போக்க.....பொழுதுபோக்கு நாத்திகம்....!.

பொழுதுபோக்கு நாத்திகம் - எத்தனை insightful expression!. இந்தியாவின் பிரபல நாத்திகப் போலிகள் பொழுதுபோக்கு நாத்திகத்தைப் பேணியதால் நாத்திகம் வளரவேயில்லை என்று நினைக்கிறேன்.    சிறுவயதில் 'காமிக்ஸ்' படிப்பது பெரும்பாலும் எல்லோருக்கும் பிடிக்கும். வளர்ந்த பின்னும் 'காமிக்ஸ்' பித்து.. ஆண்களுக்கு மட்டுமே அல்லது ஆண்களுக்கு அதிகம் என்று நினைக்கிறேன். 'இரும்புக்கை மாயாவி'யில் தொடங்கி முத்து காமிக்சின் எத்தனையோ தலைப்புகள் சேர்த்து வைத்திருந்தேன். ஆங்கில 'classics illustrated' காமிக் புத்தகங்கள் ஐம்பதாவது சேர்த்திருப்பேன். கல்கி கோகுலம் புத்தகங்களில் வந்த சித்திரக்கதைகள்.. கல்கியில் வந்த 'அம்புலிக்கு அப்பால்' என்ற சித்திரக்கதையை எத்தனை விரும்பினேன் என்று எழுத்தில் வடிக்க முடியாது. சென்னையை விட்டு விலகிச் சில வருடங்களானதும் வீட்டுக்கு வந்தால் அத்தனையும் காணோம்! வலியை இப்போதும் உணர முடிகிறது.

எதற்குப் புலம்புகிறேன் என்றால்.. இது போன்ற சோகப் புலம்பல்களுக்கிடையே ஒரு நாள் இணையத்தில் திடீரென்று கிடைத்த வலைப்பூ, கனவுகளின் காதலன். காமிக்சுக்காகவே தனியான வலைப்பூ! முதல்முறை படித்ததும் சிலிர்த்துப் போனேன்!

காமிக் புத்தகங்கள், சினிமா, கட்டுரைகள் என்று நிறைய எழுதுகிறார். 2009-10 காலக்கட்டத்தில் இவர் எழுதியிருக்கும் பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை. காமிக்ஸ் பற்றி சுவையாக, படிப்பவரின் ஆர்வம் குன்றாமல், எழுதுவது சுலபமே அல்ல. இவருடைய திறமை, ஆர்வம் மற்றும் உழைப்பைப் புரிந்து கொள்ள மலைக்காட்டின் மரணக்காற்று படித்துப் பாருங்கள்.

இவரது பலங்களை அறிய, இவரது சமீபப் பதிவான அமெரிக்கக் காட்டேரியைப் படித்துப் பாருங்கள். (காட்டேரிக்கும் எனக்கும் ஒரு இது..)

நான் கனவுகளின் காதலனின் காதலன்.    ம்சிப் போட்டிக்கு முன்பே ராகவன் படைப்புகளைப் படித்திருந்தாலும், அதற்குப் பின் இன்னும் ஆழமாகப் படிக்கத் தொடங்கினேன் எனலாம். இலக்கியம் எனக்கு வராது. ஆனால் பிடிக்கும். இவருக்கு மூச்சு விடுவது போல இலக்கியம் எழுத வருகிறது. மனம் கனக்கும் நேரங்களில் சிலசமயம் மனம் கனக்கும் இவரது சிறுகதைகள் கவிதைகளைப் படிப்பேன். உதாரணத்துக்கு இந்தக் கவிதை:
    "ஊன்றுகோல் ஆணியில் தொங்கியது
    தாத்தா உத்தரத்தில் தொங்கிய பின்".

funny, how they repel! அரை மணி நேரம் இவரது இடுகைகளைப் படித்தால் கனத்த மனம் கனத்த மாதிரியும் இருக்கும், லேசானது போலவும் இருக்கும். இலக்கிய அத்வைதம்.

    "அந்த ஒற்றை வயலின்
    உடுத்தி களைத்த
    மெல்லிய பருத்தி புடவையில்
    சுற்றப்பட்டிருந்தது
    ஒரு குழந்தையை போல"
மிச்சக் கவிதையை அவரது வலைப்பூவில் படியுங்கள். கடைசி வரிகளின் அதிர்ச்சி பிரமிக்க வைக்கும். உத்தரவாதமாகச் சொல்வேன்.

பாத்திரங்களின் குணாதிசயங்களைப் படிப்பவர்கள் அறியச்செய்யும் உத்தி, இவரது சிறுகதை எழுத்திலிருந்து பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள். காற்றில் திறக்கும் கதவுகள்....

கொஞ்ச நாளாக ராகவன் எதுவும் எழுதவில்லை. மீண்டும் எழுத வேண்டும்.    மீண்டும் எழுத வேண்டும் என விரும்பும் இன்னொரு பதிவர் hemikrish. அளவை விடத் தரம் அதிகம் காணப்படும் இடுகைகள் என்றாலும், கொஞ்ச நாளாக எதையும் காணோம்.

சோகம் தெரியும். உயிர் தெரியும்.

மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் சோகத்தைச் சுரண்டி எடுக்கிறீர்கள்.. எடுக்கும் பொழுது நக இடுக்கில் கொஞ்சம் உயிரும் ஒட்டிக் கொண்டுவிட்டதே என்று கலங்கிச் சோகத்தை அங்கேயே உதறப் பதறுகிறீர்கள்.. இந்த அனுபவத்தை தருமளவுக்கு இவரால் எப்படி எழுத முடிகிறது என்று வியந்து மறுபடி சோகத்தைச் சுரண்டப் போகிறீர்கள். relax, hemikrish படிப்பதால் உண்டாகும் வலிப்போதை. அஷ்டே.

உதாரணத்துக்கு இந்தக் கவிதை:
    "சன்னல் சட்டங்களை பற்றியபடி பதிந்த விரல்கள்..
    சற்று மேல் இரு புள்ளியாய் சிறுத்த கண்கள்
    எப்பொழுதும் தென்படுகிறது அவ்வீட்டினில்...
    அக்கண்களின் ஏக்கங்கள் வாடைக் காற்றை கிழித்து நேர் கோடாய் நிறுத்தப்படுகிறது அவ்வீதியினில்..."
நிதானமான சுவாரசியமான தொடக்கம் என்று நினைத்து while you savor.. தொடரும் வரிகளில் சோக frappe.. பிறகு இப்படி முடித்து அசர வைக்கிறார்:
    "எப்பொழுதாவது அவ்வீதியின் வழியே நீங்கள் போக நேரிடலாம்...
    அவள் விடுத்த கனவுகளும் ஆசைகளும் வீதியில்தான் அலைகிறது..
    அதன் வாசத்தை நீங்கள் நுகர நேரிடலாம்...
    அதன் மீது மோதிட நேரிடலாம்...
    அவ்வாறெனில்...
    ஒரு கணம் அச்சன்னலை பார்த்துவிட்டுச் செல்லுங்கள்..."
'தினமொரு ராஜகுமாரன்' கவிதையை முழுமையாக அவரது வலைப்பூவில் படியுங்கள். முடிந்தால் அத்தனை இடுகைகளையும் படியுங்கள். 2009லிருந்து எழுதி வருகிறார். இதுவரை ஐம்பதுக்கும் குறைவாகவே எழுதியிருக்கிறார். ஒரு மணி நேரத்தில் அத்தனையும் படித்துவிடலாம் என்று நினைத்தால் நீங்கள் தூண்டிலில் சிக்கிய மீன்.

இவருடைய கவிதைகளில் நான் bookmark செய்த வரிகள்:
    "புள்ளியினுள் பயணித்து வரையப்படுகின்ற கோலத்தினில் விழுகிறது மழைத்துளி.. சலனப்பட்ட என் மனம் போல்...".

what an imagination! what a gift!    ”அட ஒம் தம்பி் நான் உன்ணாணை தீர அயத்துப்போனனெடா, என்னடா இங்கை வீட்டுவேலையும் முத்தம் வாசல் கூட்டி ஆட்டுக்கு குழையும் வெட்டிபோட்டு அந்த இந்த வேலையெல்லாம் பாத்துக்கொண்டிருந்ததாலை தீர அயத்துப்போனனெடா தம்பி”

'அயத்துப் போவது' என்றால் என்னவென்று தெரியுமா? தெரியாவிட்டால் ஒன்றும் குறைந்துவிடாது, உண்மைதான். ஆனால் தெரிந்து கொண்டால் கிடைக்கும் மொழிச் சுகத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாதே? உதாரணத்துக்கு, கரவைக்குரல் எழுதிய இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்: தீர அயத்துப்போனன். ஸ்... அலோ! முத்தம்னதும் உடனே தாவிப் படிச்சீங்கன்னா தடுக்கி விழுவீங்க. கவனம்.

நான் மிகவும் விரும்பி அடிக்கடிப் படிக்கும் வலைப்பூ 'ஈழத்து முற்றம்'. இலங்கைத் தமிழ்ப் பொக்கிஷம். குழுமமாக எழுதுகிறார்கள். கதை கவிதை கட்டுரைகளில் இலங்கைத் தமிழ் கொஞ்சுகிறது. படித்தால் இலங்கையில் பேசப்படும் பல்வகைத் தமிழ் வழக்குகளை அறிந்து என்னைப் போலவே ஆச்சரியப்படுவீர்கள். ஈழத்து முற்றத்தில் நான் கற்றச் சொற்களை வைத்து ஒரு கதை எழுதி வருகிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பேச்சு வழக்கு என்றில்லை.. நடை, உடை, உணவு, இசை, நூல் என்று பல பரிமாணங்களைத் தொட்டு எழுதியிருக்கிறார்கள் குழுமப் பதிவர்கள். சில நினைவுகள் மனதை மிகவும் நோகடிக்கின்றன.

'மாங்காய் சம்பல்' சாப்பிட்டிருக்கிறீர்களா? படிக்கையில் ஒரு வகைக் கார மாங்காய்ச் சட்டினியெனப் புரிந்தது. நாக்கில் ஈரமாகி ஒரு தீற்று சம்பல் யாராவது வைக்க மாட்டார்களா என்று தோன்றியது. செய்து பார்த்தேன். not bad. spicy, tangy and tasty. மறுமுறை தேங்காய் குறைத்துச் செய்து பார்த்தேன். much better. scotchக்கு உகந்தத் துணை. இட்லி தோசைக்கு உதவாது என்கிறார் பதிவர். தோதாகவே இருந்தது. modicum sour cream கலந்தத் தயிருடன் சம்பல் சாதம் பிசைந்து சாப்பிட்ட ஒரு மழைமதியம், சொர்க்கமானது. ஈழத்து முற்றத்தில் பாரம்பரியச் சம்பல் recipe கொடுத்தப் பதிவர் மணிமேகலாவை இந்த வாரம் தனியாக மீண்டும் சந்திப்போம்.    ரு வாரத்துக்கு வலைச்சரம் பக்கமே வருவதில்லை என்று தீர்மானித்திருப்பீர்கள் என நினைத்தேன். திரும்பி வந்தத் துணிச்சலைப் பாராட்டுகிறேன். போகுமுன் இன்றைய shout outல் என்னுடன் இணைந்து குரல் கொடுத்துவிட்டுப் போங்கள். தையல்காரர் எனும் நுண்மையான சிறுகதையை எழுதி எம்மைச் சிலிர்க்கச் செய்த வித்யா சுப்ரமணியத்துக்கு ஜே!➤➤3. தாயே வேலன்டைனம்மா


26 comments:

 1. நல்ல அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ‘கண்ணன் பாட்டு’ நான் படித்து, கேட்டு ரசித்திருக்கிறேன். ஆனாலும் இந்த ‘மொட்டை மாடி’ பாட்டு நான் தவறவிட்டது. மற்றவை எல்லாம் புதிய தளங்களே. அருமையான அறிமுகங்கள்! அசத்தறீங்க ஸார்!

  ReplyDelete
 3. மொட்டைமாடிப் பாட்டை பிடித்துக் கொள்ள அழகான காரணங்கள் உண்டு கணேஷ்.

  ReplyDelete
 4. நன்றாக படிப்பீர்கள் என்பது தெரியும்... குறிப்பிடும் பதிவுகள் உங்கள் வாசிப்பின் விசாலத்தை தெளிவாக காட்டுகிறது...
  வலைச்சரம் சிறப்பான ஆசிரியரை தேர்ந்தேடுத்துள்ளது.. வாரக்கணக்கோடு நிறுத்தாமால் சென்றால் தமிழ் வலைப்பதிவுகளுக்கு நல்ல வழிகாட்டியாக அமையும்....

  ReplyDelete
 5. நன்றி பத்மநாபன். முன் போல இப்போது படிக்கவோ எழுதவோ நேரம் கிடைப்பதில்லை. முனைப்பும் சரிந்து வருகிறது.

  ReplyDelete
 6. அப்பாதுரை அவர்களே! நீர் ஒரு ராட்சசன். அம்புட்டுதான் சொல்லமுடியும்---காஸ்யபன்.

  ReplyDelete
 7. ஒவ்வொருவரையும் மிக விரிவாக அறிமிகம் செய்கின்றேர்கள் .. வாழ்த்துகள்

  ReplyDelete
 8. அறிமுகங்கள் அருமை!

  இன்று நரிமுகத்தில் விழித்தேன்:-)

  ராகவன்....... ஒரு அற்புதம்!

  ReplyDelete
 9. ராகவன் தவிர மற்ற பதிவர்கள் எனக்கு புதிதுதான் இனிதான் வாசிக்க வேண்டும். அறிவியல், கண்ணன் பற்றிய பதிவுகளை இனி படிக்கணும்.
  பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 10. நல்ல அறிமுகங்கள் .அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 11. ராகவன் நானும் படித்திருக்கிறேன். மற்ற அறிமுகங்கள் அருமை. படிக்கிறோம்.
  பத்துஜி சொன்னது போல வாரக்கணக்கில் நிறுத்தாமல் மாசக்கணக்கில் இருந்தால் நிறைய பொக்கிஷங்களை தெரிந்துகொள்ளலாம் என்று நினைக்கிறேன் அப்பாஜி! நன்றி. :-)

  ReplyDelete
 12. சிறப்பான அறிமுகங்கள் நேரம் இருக்கும் போது கண்டிப்பாக போய் பார்க்கவேண்டும் . தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 13. ஓரிரு பதிவுகள் என்று சொல்லாமல் அந்தப் பக்கங்களின் சிறப்புகளையும் ரசித்த வரிகளையும் எடுத்துப் போட்டு ரசித்திருப்பது சிறப்பு. அறிமுகப் படுத்தப் போகும் பதிவர்களை முதல் நாளே பட்டியலிட்டு தினம் சிலரை வகைப் படுத்துவதும் புதுசு, அழகு. பத்மநாபன், ஆர் வி எஸ்ஸை வழி மொழிகிறேன்.

  ReplyDelete
 14. ராகவனையும் வித்யா சுப்ரமணியத்தையும் தவிர மற்றவர்களை இது வரை வாசித்ததில்லை.

  சிறப்பான அறிமுகங்கள்..

  ReplyDelete
 15. படிக்கவும் இன்பம், கேட்கவும் இன்பம். நிறைய இசைப்பதிவுகள். கவனம்: ஒருமுறை இறங்கினால் அரைமணியாகும் மீள. ஓ! மறந்தே போனது. இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் - அற்புதம்.

  அற்புதமான பதிவுகளின் தொகுப்புக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 16. விரிவாக நீங்கள் அறிமுகப்படுத்தியவிதம் அருமை. நானும் வாசிக்கிறேன்.

  ReplyDelete
 17. நல்ல அறிமுகங்கள் ! வாழ்த்துக்கள் சார் !

  ReplyDelete
 18. வியந்து, அன்பவித்து, படித்து,
  அறிமுகங்கள் தந்தீர்கள்...
  நானும் படி(த்துப் பார்)க்கிறேன்...

  ReplyDelete
 19. அறிமுகங்ககளை அறிமுகப் படத்திய விதம் அருமை... புதுமை.

  அழகான அறிமுகங்களுக்கு வாழ்த்துககள்.

  ராகவன் அண்ணாவின் கதைகளுக்கு நான் தீவிர ரசிகன். அவர் மீண்டும் எழுத வேண்டும் என்று நானும் கேட்டு்க்கொள்கிறேன்.

  ReplyDelete
 20. வாழ்த்துக்கள் நல்ல அறிமுகங்களுக்கு

  விஜய்

  ReplyDelete
 21. பிரபலங்கள்தான் உங்கள் தோழர்களா அப்பாஜி.மிகவும் பிடித்த அறிமுகங்கள் !

  ReplyDelete
 22. இந்தப் பதிவர்களில் hemikrish மட்டும் படித்து வியந்திருக்கிறேன். மற்றவர்கள் எனக்கு புதியவர்கள்.
  எனக்கு24மணிநேரம் போதாது,
  இன்னொரு பிறவி எடுக்க வேண்டும் போல - இத்தனையும் துய்க்க.

  ReplyDelete
 23. நல்ல அறிமுகங்கள். ஈழத்து முற்றம் பதிவு பற்றி இன்றே அறிந்தேன். அதே போல் காமிக்ஸுக்கான தளம் குறித்தும். எனக்கு மனது கொஞ்சம் சரியில்லைனா காமிக்ஸ் தான் படிப்பேன் முதலில். நம்ம ஊர் காமிக்ஸை விடவும் ஆர்ச்சி காமிக்ஸ் ரொம்பப் பிடிக்கும். இல்லைனா தேவன் படிப்பேன். சரியாயிடும். :)))))

  ReplyDelete
 24. அறிமுகங்கள் கிட்டத்தட்ட எல்லாம் புதிது. அயத்துப் போகாமல் வாசிக்க வேண்டும்( இது எங்கடை பாசை). நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 25. அன்புள்ள அப்பாதுரை,

  வலைச்சர ஆசிரியராக ஒருவாரம் நீங்கள் பொறுப்பேற்றிருந்ததும், அதில் என்னுடைய வலைத்தளத்தைப் பற்றிக் குறிப்பிட்டிருந்ததையும் இப்போது தான் அறிந்தேன், ஆனால் உங்களுக்கு நன்றி சொல்வதாயில்லை! ஏற்கெனெவே என்னுடைய பதிவைப்பற்றி வேறொருவர் இங்கே அறிமுகம் செய்ய முயன்றதை நிராகரித்து, நீக்கிவிடுமாறு சீனா அய்யாவின் மெயில் முகவரிக்குத் தகவல் அனுப்பி நீக்கப்பட்டது. இப்போதும், இந்தத் தளத்து நிர்வாகிகளிடம் அதையே வேண்டுகிறேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது