"இவரு அப்பாதுரை.. ரொம்ப விட்டா பேசுவாரு" - இது அறிமுகம்.
"இவரு அப்பாதுரை.. ரொம்ப விட்டா பேசுவாரு.. ஆனா விட்டா ரொம்பப் பேசுவாரு" - இது விமரிசனம்.
நீளம் காரணமாக என் அறிமுகங்களை விமரிசனமாகக் கருத வேண்டாம். விமரிசனம் செய்யும் தகுதி எனக்கில்லை.
ஜீவி சொன்னது போல் ஒரு 'ஆழ்ந்த அறிமுகம்'. சத்ரியன் படிக்கும் சத்ரியன் (நயம்) சொன்னது போல அறிமுகப் பதிவைப் படிக்க உந்தும் ஒரு உத்தி. பலித்ததா என்பது உங்களுக்கு மட்டுமே தெரியும்.
இந்த வாரம் உண்மையில் எனக்கு ஒரு அறிமுகமே தவிர, நான் குறிப்பிட்ட பதிவர்களுக்கல்ல. என் வட்டத்தை விரிவாக்கவும் உங்கள் வட்டத்தில் இடம்பிடிக்கவும் எனக்குக் கிடைத்த ஒரு நல்வாய்ப்பு. தொடர்ந்து படித்தும், ஒரு படி மேலேறிப் பின்னூட்டம் இட்டும், அரவணைத்த அத்தனை பேருக்கும் மனமார்ந்த நன்றி.
படிப்பு, வேலை, குடும்பம், நெரிசல், பயணம்.. இவை போதாதென்று மின்சார வெட்டு, கணினி வசதி.. இந்த morbid constraintsகளையும் கடந்தால்.. பவள சங்கரி சொன்னது போல சக பதிவர்களின் பின்னூட்ட quid pro quoத்தனம்.. என்று அத்தனையும் சமாளித்து, தொடர்ந்துப் பதிவெழுதும் பெருந்தகைகளால் மட்டுமே தமிழ் வலைப்பூ உலகம் சுழல்கிறது - என் போன்ற சொகுசுப் பதிவர்களால் அல்ல - என்பதை நன்கறிவேன். இந்நிலையில் பதிவு/பதிவர்ளை முன்னிறுத்தும் வலைச்சரம் போன்ற அமைப்புகள் இன்றியமையாதவை. வலைச்சரத்துக்கு நன்றி.
இன்னொரு நீண்ட இடுகை எழுதி உங்கள் ஓய்வு நாள் வாசிப்பில் குறுக்கிட விரும்பவில்லை (என்னா? இதுவே நீளமா?). நேரமிருந்தால் - வந்ததோ வந்தீர்கள் - விட்டுப் போனதைக் கொஞ்சம் தட்டிப் பாருங்களேன்? சுட்டிகள் இதோ:
மெல்லிசைக் காணிக்கையோடு விடைபெறுகிறேன்.
மேலும் வாசிக்க...
இன்றைய ஸ்பெஷல்
உப்புமடச் சந்தி
எழுத்துப்பிழை
சிவகுமாரன் கவிதைகள்
அன்பே சிவம்
உள்ளக் கமலம்
எங்கள் Blog
    கணப்பொறிக்கும் காட்டுத்தீக்கும் என்ன வேறுபாடு?
காதலர் கவிஞராவதற்கும் கவிஞர் காதலராவதற்கும் இடையிலான வேறுபாடு.
        "அங்கிருந்து நீயனுப்பும் அஞ்சலுறைக் குள்தேடி
        எங்கேயும் இல்லையடி இன்பங்கள் - இங்கெனக்கு
        முத்தங்கள் சேர்ந்துபோய் மூச்சிரைப்பு வாங்குதடி
        இத்தோ டிணைத்துள்ளேன் இச்."
        "கிடைத்தது உங்கள் கிறங்கிய முத்தம்
        அடைத்துத் திணித்திருந்த அஞ்சல் - எடைக்கு
        எடைதருவேன் முத்தங்கள் இங்குவந்தால்- கொஞ்சம்
        அடக்கி இருந்திடுங்கள் அங்கு."
நீங்கள் படித்தது சிவகுமாரனின் போதையூட்டும் வெண்பா உரையாடல். இவருடைய 'காதல் வெண்பாக்கள்' வலையுலக blockbuster. காட்டுத்தீ.
தான் பணிபுரியும் ஆலையில் விழிப்புணர்ச்சி பரவ இவர் எழுதியவற்றுள் சில:
    காலணி தலைக்கவசம் கண்ணாடி இம்முன்றும்
    ஆளைக் காக்கும் அரண்.
    கருகும் வாசனை நுகர்ந்தால் கவனி
    அருகே எங்கோ ஆபத்து.
    தூசியும் கழிவும் துளிகூடத் தேங்காத
    மாசில்லா ஆலையாய் மாற்று.
பாதுகாப்பு சுகாதாரம் உற்பத்தி முன்னேற்றம் காண விழையும் ஒவ்வொரு ஆலையிலும் ஆளுயர போஸ்டர் அடித்துப் பரப்ப வேண்டிய குரல். முழுமையாகப் படிக்க: ஆலைக்குரல்.
காதல், ஈழம், அரசியல், பாமரன் நிலை, சமூகம் என்று பல வகையிலும் குரல் கொடுக்கும் குமாரனின் கவிதைகளில் என்னை மிகவும் கவர்ந்த ஒரு கவிதை: மதுரையில் மீனாட்சி-சுந்தரேசர் திருக்கல்யாணம் நடக்கும் அதே வேளையில் வெளிப் பிரகாரத்தில் ரிக்ஷா தொழிலாளி மாரிமுத்துவுக்கும், அவன் கூட்டாளி மாடசாமியின் தங்கை செல்வராணிக்கும் திருமணம் இனிதே முடிய, புதுத் தம்பதியரின் பேச்சைக் கேளுங்களேன்?.
தன் கவிதைகளைப் பற்றிய சிவகுமாரனின் அறிமுகம் இது: வரம்புடைத்து மீறுகிற வார்த்தைகளின் அரங்கேற்றம்.
உண்மை. பதிவுலக நண்பர்கள் பத்துப் பேரைக் கூட்டி, ஒரு சிறிய மேடையமைத்து சிவகுமாரனை மேலேற்றி, வரம்புடைத்து வரும் வார்த்தை வெள்ளத்தைக் கேட்க வேண்டும் என்ற தீராத ஆவலை உண்டாக்குமளவுக்கு உண்மை. வெண்பா, சிந்து, புதுக்கவிதை என்று வகை வகையாக வரம்புடையும் வார்த்தை வெள்ளம். இவர் எழுதிய எந்தக் கவிதைக்கும் மரபு வந்துவிடுவது போல் ஒரு மயக்கம் (குரல், குறளைப் போலத் தோன்றுகிறதா இல்லையா?).
தன் ஆன்மீகத் தேடலுக்கு அருட்கவி எனும் வலைப்பூவில் அருமையான ஆத்திகக் கவிதைகள் வடிக்கும் இளைய சிவகுமாரனுக்கு முப்பது மணி நேர நாளும் கணினி வசதியும் கவிபாட அமைதியும் வழங்கப்பா, மூத்த சிவகுமாரா.
    சளைக்காமல் எழுதும் பதிவர்கள் பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன். எங்கள் Blog அந்த வகை. வருடத்துக்கு முன்னூறு இடுகைகளாவது எழுதுகிறார்கள். நானறிந்த வலைப்பூக்களில் least common denominator வாசக அடிப்படையில் எழுதப்படும் ஒரே வலைப்பூ எங்கள் Blog என்று நினைக்கிறேன். படிக்கும் பொழுதெல்லாம் அந்த நாள் குமுதம் நினைவுக்கு வரும். தத்துவம், நகைச்சுவை, புதிர், போட்டி, புகைப்படம் (ஞாயிறு தோறும்), அனுபவம், சிறுகதை, தொடர்கதை, கவிதை, சினிமா, இசை, அரசியல், ஆத்திகம், புத்தகம்,... எல்லாத் தரப்பு வாசகருக்கும் சுவாரசியமாக ஏதாவது இருக்கும். ஆபாசம் மட்டும் கிடையாது.
ஏதோ ஒரு க்ரிகெட் இடுகையில் உண்டான அறிமுகம் எங்கள் Blog என்று நினைக்கிறேன். குண்டப்பாவைப் பற்றிப் புகைப்படங்களுடன் எழுதுவதாகச் சொல்லி விரிக்கப்பட்ட வலைக்குள் விழுந்தேன். விடாமல் படித்துக் கொண்டிருக்கிறேன். நான் அதிகமாக பின்னூட்டங்கள் எழுதுவதும் இங்கேதான். பின்னூட்டக் கும்மியில் anything goes.
simple இடுகை. புரிகிறதா பாருங்களேன்? கண பூஜை. இது போல டஜன் கணக்கில் இடுகைகள் உள்ளன. இரண்டு நிமிடம் படித்தோம், இரண்டு நிமிடம் சிந்தித்தோம், ஒரு புன்னகையோ வருத்தமோ மௌனமோ வெளிவர முடித்தோம். இதுவே எங்கள் Blog வாசிப்பனுபவம்.
முதன் முதலாக லஞ்சம் கொடுத்த அனுபவம். எளிமையான வித்தியாசமான இடுகை. லஞ்சம் கொடுக்கும் பழக்கம் உங்களுக்கு எப்போது உண்டானது என்று நினைவிருக்கிறதா? கொடுத்துக் கொடுத்து மறந்து விட்டதா?
நான் மிகவும் ரசித்த ஒரு சிறுகதை இதோ: சாயங்காலங்கள். கதையில் வரும் முதியவரை தினசரி சந்திக்கிறோம்; அடையாளம் புரிவதில்லை.
உள் பெட்டியிலிருந்து என்று அடிக்கடி வரும் இடுகைகளில் சிலவற்றைச் சேர்த்து வைத்திருக்கிறேன்.
சமீபத்தில் படித்து நினைவில் நின்றத் தொடர்: நடக்கும் நினைவுகள். நானும் தினம் வாக்கிங் போகிறேன், பதிவெழுதுற மேட்டராத் தோணுதா? (அதை ஏன் 'வாக்கிங் போகிறேன்' என்கிறோம், 'வாக் போகிறேன்' என்றல்லவா சொல்லவேண்டும்? - இதான் எங்கள் பிளாக் influence என்பது.)
மொக்கைக்கும் இலக்கியத்துக்கும் நடுவில் தங்களுக்கென்று வசதியான இடம் தேடிக்கொண்டிருக்கும் 'எங்கள் Blog', வலைப்பூக்களின் under recognized செம்பருத்தி என்று அடிக்கடி தோன்றும்.
    பல வருடங்களாகப் படித்து வரும் 'அன்பே சிவம்' ஒரு வித்தியாசமான வலைப்பூ. அன்பர் முரளிகுமாரின் எழுத்து படிப்பவரைச் சுண்டியிழுக்க வல்லது. பெரும்பாலும் திரைப்பட விமரிசனங்கள் (பன்னாட்டுத் திரைப்படங்கள்) எழுதி வந்தவர் கவிதை, கட்டுரை, இசை, புத்தகம் என்று பல பரிமாணங்களில் கலக்குகிறார்.
என்னைக் கவர்ந்தத் திரை விமரிசனங்கள் இரண்டு:
ரோஸ்மேன் பாலத்தின் நான்கு நாட்கள் எப்போதோ பார்த்த சுமாரான படம். இவருடைய விமரிசனத்தைப் படித்ததும் மீண்டும் தேடிப்பிடித்துப் பார்த்தேன். அந்த அளவுக்கு இருந்தது இவருடைய விமரிசனம். க்லிந்ட் இவருக்குத் தனியாகக் காணிக்கை தரவேண்டும் :)
ஜூலியட்டுக்குக் கடிதங்கள் நூலகத்தில் கண்ணில் பட்ட போதெல்லாம் புறக்கணித்த டிவிடி. பார்க்கத் தூண்டிய விமரிசனம்.
கிறுக்கல்கள் என்ற தலைப்பில் நல்ல கவிதைகள் பல எழுதியிருக்கிறார்.
"இன்னும் மூணு நாளுக்குள்ள
போனஸ் பணம் கிடைச்சுப்புடும்" எனத் தொடங்கும் இந்தக் கவிதையைப் படித்துப் பாருங்கள்.
இவருடைய சிறுகதைகளில் என்னைக் கொஞ்சம் உறுத்தியது இறக்காத இரவுகள்.
"அதிகநேரம் ஆகாததால் பிரேதம் இன்னும் உப்பிவிடவில்லை. மல்லாக்காய் படுக்க போட்டிருந்தார்கள். கருப்பாய் இருந்தாலும் கலையாய் இருக்கிறான் என்றே பெயரெடுத்தவர் இன்று மேலுதடு சற்று வீங்கி வாய் திறந்திருந்தது. இவ்வளவு கோரமாய் அவரை நான் என்றுமே பார்த்தது இல்லை. எல்லோரும் என்னென்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள், நான் அவருடைய கால்களையே பார்த்துகொண்டிருந்தேன். பாலம் பாலமாய் வெடித்து வீங்கியிருந்தது. எத்தனை தூரம் இந்த கால்கள் விடியலை தேடி நடந்திருக்கும்?".
அந்தக் கடைசி வரி.. விடியலைத் தேடிய கால்கள்.. அது தான் என்னைத் தொடர்ந்து படிக்க வைத்தது.
இடையே சிறிது ஓய்வெடுத்திருந்த பதிவர் மீண்டும் எழுதத் தொடங்கியிருப்பதில் மகிழ்ச்சி.
    ஈழத்து முற்றம் வழியே அறிமுகமானவர் பதிவர் மணிமேகலா. உள்ளக் கமலம் என்ற இவரது பதிவில் ஆன்மீகம், ஆத்திகம், தன்முனைப்பு, சுயமுன்னேற்றம், சமூகநோக்கு என்று "பிறவி நோக்கம்" என வழங்கப்படும் கனமான topicகளில் எழுதி வருகிறார்.
    ":உயிர்கள் இடத்திலே குண வேற்றுமைகள் இருப்பது ஏன்?
    :ஒரே கடலின் நீரானாலும் கொதிக்கின்ற பாத்திரத்திலே வைத்த நீர் கொதிக்கும். குளிர்ந்த பாண்டத்திலே வைத்த நீர் குளிர்ந்திருக்கும். அவ்வாறே அந்தந்த ஆத்மாக்களின் உடலங்களுக்கேற்பவே குண பேதங்களும் அமையும்".
நசிகேதன் கதையல்ல. காளிதாசன் கதை. மகாகவி காளிதாஸ் படத்தில் வரும் உரையாடலாம். சுவையான இடுகை. உயிரோடிருந்தால் உடலம்; செத்தால் சடலம். ஈங்கு சிறிதுத் தமிழும் ஈயப்படும்.
ஒரு பற்றின் பயணம் என்ற இந்த இடுகை நீண்ட நாட்கள் மனதில் அசைந்து கொண்டிருந்தது. ஒரு வரி எழுதியிருந்தாலும் தாக்கம் மாறுபட்டிருக்குமோ?
இனங்களைத் தாண்டியும் என்ற இந்த இடுகையைப் படித்துப் பாருங்கள். உங்கள் மனம் கனத்து ஒரு சொட்டுக் கண்ணீராவது சுரக்கும் என்பேன். சிட்டுக்குருவி கவிதை எழுதியவன் சொல்கிறேன்.
ஏறக்குறைய நான்கு வருடங்களில் ஐம்பதுக்கும் குறைவான இடுகைகள் எழுதியிருக்கிறார். பெரும்பாலும் அரைப்பக்க இடுகைகள். அமைதிப்படுத்தும் இரவு நேர வாசிப்பு.
    ஹேமா என்றதும் வலையுலகில் பலருக்கும் அவருடைய கவிதைகள் நினைவுக்கு வரும். காதல் கவியரசிக்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது. கதை, கட்டுரை, சமூகம் என்று ஆழமான இடுகைகள் கொண்ட இவரின் 'உப்புமடச் சந்தி' என்னுடைய favorite பதிவுகளில் ஒன்று.
சந்தியில் நான் முதலில் முழுமையாகப் படித்த இடுகை மீண்டும் மகளாகிறாள் என்றத் தொடர்கதை (உண்மைக்கதை பின்புலம்). ஈழமும் தமிழும் மணக்க உயிரைப் பிழியும் கதை. (நிஜக் கதை(?)யின் நாயகி நலமாக இருக்கிறாரா ஹேமா?)
    "ஏண்டா கோயில்ல இருக்க சாமி கிரீடத்தை திருடினே?"
    "சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்...அதான்"
சத்தியமாக ஹேமாவின் பதிவிலிருந்து திருடியது. சிரித்து மாளவில்லை. இப்படியொரு கோணமா? முழுமையாகப் படிக்க:எமக்கு இப்போ வேண்டிய இரண்டும்
நூற்றாண்டு கால சிங்கள-தமிழ் இனப் பகைக்கு வட்டாரப் பிரிவினை ஒரு தீர்வு என, இலங்கை சுதந்திரம் பெறுமுன் இங்கிலாந்து அரசு அறிந்தும் ஏதும் செய்யாதிருந்தது என்று படித்திருக்கிறேன். இங்கிலாந்து அரசு இந்தியத் தலைவர்களையும் கலந்தாலோசித்திருக்க வேண்டும் என்று இப்போது சொல்கிறார்கள். இந்தியாவையே பிரிக்க எண்ணியிருந்தவர்கள் எங்கே செய்திருக்கப் போகிறார்கள்?! ஸ்ரீமா இங்கிலாந்தின் பிரிவினைத் தந்திரங்களில் தேர்ச்சி பெற்றவர் என்று இப்போது வரும் புத்தகங்கள் சொல்கின்றன. பிள்ளைப் பிராயத்தில் கொழும்பு நகரை வைத்து இலங்கையை எடை போட்டப் பலருள் நானும் ஒருவன். தமிழ்நாட்டை விடச் செழிப்பானது இலங்கை என்ற எண்ணம் இருந்தது. எழுபதுகளில் இலங்கையில் வளர்ந்த தமிழர் நிலை பற்றிய அருமையான கண் திறக்கும் கட்டுரை நிறைய உண்மைகளை வெளிக்கொண்டு வருகிறது.
என் தேசம் என் ஊர் என்று இவர் எழுதிய நெகிழ்ச்சியானக் கட்டுரை இது.
இந்தியா 2020 பற்றிக் கொஞ்ச வருடங்கள் முன்பு நிறைய அடிபட்டது. எந்த அளவுக்கு வந்திருக்கிறது தெரியாது. இந்த இடுகையில் இடம்பெறும் ஏதாவது நிறைவேறியிருக்கிறதா? அந்தக் கடைசி கணிப்பு - ஹிஹிஹி.
ஈழத்து முற்றம் இங்கிருந்து அறிமுகமான பொக்கிஷம் - உப்புமடச் சந்திக்கு நன்றி.
    "மனம் ஒரு சந்தோஷ நிலையில் இருக்கும் தருணத்தில் உம்ம கதையவோ, கவிதையவோ படிப்பதில்லை. படிச்சா ஒரு விதமான எரிச்சல் கலந்த மனோநிலை நிகழும். இருந்தாலும் படிக்காமல் இருந்ததில்லை... காலையில் இருந்து நல்லா இருந்திச்சு. எளவு, இப்ப இந்த கவிதையை படிச்சிட்டேன்"
இத்தகையப் பின்னூட்டம் போகனின் எழுத்துக்கு மட்டுமே கிடைக்கும் அங்கீகாரம். ultimate compliment. பின்னூட்டமிட்ட ராஜகோபால், "படிக்காமல் இருந்ததில்லை" என்பதைக் கவனியுங்கள். என் நிலையும் இதே தான். 'நாளை முதல் குடிக்க மாட்டேன்' சத்தியம் போல. பின்னணியில் நிர்வாணக் கவர்ச்சியும் sinister musicம் விரவ, நம் உள்மன வக்கிரங்களை துருப்பிடித்த நூறு கொக்கிகள் போட்டு இழுப்பது போன்ற மெல்லிய மெரிவானா எழுத்துக்குச் சொந்தக்காரர் போகன். this man has two sides, dark and darker என்று இவரைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறேன். ஏதாவது எழுதியிருக்கிறாரா என்று தினம் ஏங்கிப் பார்க்க வைக்கும் பதிவு இவருடையது என்பதை போகனின் வாசகர் வட்டம் அறியும். முதிர்ந்த வாசகருக்கான மேல்தட்டு இலக்கியம்.
மேலே குறிப்பிட்டப் பின்னூட்டத்தை elicit செய்த போகனின் 'புணர் நிமித்தம்' கவிதை இதோ.
இவருடைய சூட்சுமக் கவிதைகள் படிக்கவும் சிந்திக்கவும் சுவையானவை. சமீபப் படைப்புகளான எலிப் பத்தாயம் மற்றும் இலக்கியம் பேசுதல் கவிதைகளைப் படித்துப் பாருங்கள். இலக்கியம் பேசுதல் கவிதையில் உடையவிழ்வதையும், குறி துடிப்பதையும் எப்படிப் புரிந்து கொள்கிறீர்களென்று அறியத் துடிக்கிறேன்.
களவு காதல் கற்பு எனும் தொடர்கவிதை சுவையானக் கற்பனை. என்னை சிரிக்க வைத்தப் பாலியல் கவிதை இது.
பேரழகியான யட்சி ஒருத்தி ரகசியமாகக் குளிக்கிறாள். 'அம்பு போல் எழுந்த குறியோடு' மனிதன் ஒருவன் தன்னை அணுகுவதை உணர்ந்த யட்சி, வாள் போன்ற பற்கள் வெடிக்கச் சிரித்து, "ஓராயிரம் சலிப்பான இரவுகள் வேண்டுமா, கடைசி அணுவும் சிதறும் ஒரு இரவு வேண்டுமா?" என்று கேட்கிறாள். மனிதன் தேர்வைக் கவிதையில் தெரிந்து கொள்ளுங்கள். யட்சி என்ற இந்தக் கவிதை பெண் வர்ணணையில் ஒரு உச்சம்.
மூடியப் பெட்டியாகவே பெரும்பாலும் கையாளப்படும் காம variantகளை அக்கு வேறு ஆணி வேறாக பிரிக்கிறார் தன்னுடையப் பதிவுகளில். no inhibitions. படிப்பவர் கவனம். இவர் எழுதிவரும் தொடர்களான உடல் தத்துவம் மற்றும் கண்ணி இரண்டையும் படித்துப் பாருங்கள். போகன் என்றைக்குத் தொடரப்போகிறாரோ தெரியாது, உளவியல் ஆழங்களை மூடியக் காமச்சருகுகள் விரவியிருக்கும் இரண்டு தொடர்களுமே புத்தகமாக வெளிவந்து மிகப் பெரிய வரவேற்பைப் பெறும் தகுதியுடையவை. rockstar போகன் மனது வைக்க வேண்டும்.
    சங்கரநாராயணனும் கிங்கரயானையும் எனும் இடுகையைப் படித்திருக்கிறீர்களா? வித்தியாசமான தலைப்பு என்று படித்தால், முதலில் புரியவில்லை. பிறகும் புரியவில்லை. திடீரென்று நெற்றியலடித்தது. தமிழ் புரிந்து கொள்ளும் நாலைந்து மழலைகளுக்கு ஒரு நாள் இதைக் கொஞ்சம் அசைபோட்டுச் சொல்ல வேண்டும் என்றுத் துடித்துக் கொண்டிருக்கிறேன். 'கரிசக்காடு' உதயசங்கருக்கு இன்றைய shoutout.
➤➤7. நன்றி
மேலும் வாசிக்க...
இன்றைய ஸ்பெஷல்
DISPASSIONATED DJ
மரகதம்
நித்திலம்
கே.பி.ஜனா...
உயிரோடை
தமிழ் உதயம்
kashyapan
    ஆசிரிய நண்பர் அரசன் அறிமுகப்படுத்தியது, டிசேயின் வலைப்பூ.
இலங்கைத் தமிழர் பற்றி உரையாடும் பொழுதெல்லாம் இங்கிருக்கும் சில புலம்பெயர் நண்பர்கள் காட்டமாக ஏதோ சொல்வார்கள். ரத்தம் கொதிக்கும். உள்ளம் விழிக்கும். எனினும்.. நான் இவர்களை அறிந்தப் பனிரெண்டு வருடங்களாக சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் வாரிசுகள் பியான்சே ஹசர்சன் அடெல் என்று கலந்து, கிழக்கின் கொழும்பு வீதிக்கதைகள் எல்லாம் முகம் மறந்தத் தாத்தாக்களின் நிழல்ஜாலம் என்ற நிலைப்பாட்டிற்கு வந்தபின்னும்... சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். வாரிசுகளுக்குப் பாரம்பரியம் ஒரு சட்டை போல. எனக்கும் தான். உடை மாற்றுவது தவறில்லை என்பது மட்டுமல்ல, அவசியமும் கூட என்று நினைக்கிறேன். எனினும் பாட்டனின் நிழல்ஜாலங்கள், உயிர்வருடலாக அமைவதையும் உணர்ந்திருக்கிறேன், மதிக்கிறேன்.
புலம்பெயர் இலங்கைத் தமிழர் பதிவுகள் இணையத்தில் நிறைய உள்ளன. டிசேயின் பதிவை மேல்தட்டில் வைப்பேன். இவர் பதிவின் பல இடுகைகள் நிழல்ஜால உலகத்துக்கான ஓபன் டிகெட். மனம் விரும்பியபடி கொழும்பு நினைவுகளில் தொலைந்து போகலாம். விடுதலைப்புலிகளை வைத்து இலங்கையைப் புரிந்து கொண்டிருப்போரின் கண்களைத் திறக்கும் பல இடுகைகளில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்: யாரோடு நோவோம் யார்க்கெடுத்து உரைப்போம்?, புலம்பெயர் வாழ்வு: நெருக்கடிகளும், உயிர்த்திருத்தலும்....
இவர் எழுதும் கவிதைகளுக்குப் பெரும்பாலும் தலைப்பு வைக்காதது சுவாரசியம். எண்ணங்களுக்கு ஏன் பெயர் வைக்க வேண்டும்?
    "மிக இயல்பாய் உரையாடத்தொடங்கும் இவர்களில் யாரேனும் ஒருவர்
    காதலியாகவோ தோழியாகவோ
    நமக்கு வாய்க்கக்கூடும் நாளை"
ரசமான கவிதை வரிகளுக்கு முன்னும் பின்னும் கலாசார அதிர்வு இருக்கிறது. படித்துப் பாருங்கள்.
எதைப் படிக்க முடியாமல் போனாலும், ஐந்து நிமிடங்கள் இந்த இடுகையில் செலவழியுங்கள்:
"உலக வரைபடத்தை விரித்து வைத்தால் அதிலொரு சிறு தீவாக மிதக்கும் இலங்கை, பலருக்கு இதமான காலநிலையுள்ள கடற்கரைகள் கொண்ட ஒரு நாடாகத் தெரியலாம். .ஆனால் இதைப் பூர்வீகத் தாயகமாய்க் கொண்ட -என்னைப் போன்றவர்களுக்கு- இலங்கை விதைக்கும் நினைவுகளோ வேறுவிதமானவை. அது போர் என்கின்ற, எதைக் கொண்டு கரைக்கவோ அழிக்கவோ முடியாத, சிவப்பும் கறுப்புமான வர்ணங்களைக் கொண்ட மாபெரும் துயரச் சித்திரம்" எனத் தொடங்கும் சில அரசியல் பிரதிகள் இடுகையில் இலங்கைத்தமிழர் பற்றிப் புத்தகங்கள் வாயிலாக bite size cultural knowledge தருகிறார். படித்து முடிப்பதற்குள் வலி விதைகள் முளை கண்டிருக்கும்.
இதயவருடல் என்றது இதையே.
    "மன்னார்குடியில் யார் வீட்டுக்குச் சென்றாலும் இட்லிக்குக் கொத்சு தான் செய்வார்கள்"
'ஆ! இட்லிக்குக் கொத்சா?' என்று நினைத்தேன் இதைப் படித்தவுடன். கொத்சுடன் இட்லி சாப்பிட்டதே இல்லை.
கொத்சு ஏறக்குறைய சாம்பார் போலவே இருப்பதைப் பார்த்தவுடன் என் அம்மாவுடனான சமையல் விவாதங்கள் நினைவுக்கு வந்தன.
    : இன்னிக்கு என்னம்மா சமையல்?
    : பொறிச்ச குழம்பு, தொட்டுக்கக் கூட்டு
    : பொறிச்ச குழம்பு இருக்கு.. கூட்டு எங்கேமா?
    : இதோ..
    : அம்மா.. இது பொறிச்ச குழம்புமா..
    : அதாண்டா.. இது பொறிச்ச குழம்பு.. இதோ பொறிச்ச கூட்டு (காய்களை மட்டும் வடித்தெடுத்து)
குரோம்பேட்டையில் யார் வீட்டுக்குச் சென்றாலும் கூட்டுதான் செயவார்கள்.
புவனேஸ்வரி ராமநாதனின் 'மரகதம்', நான் விரும்பும் சைவப் பதிவுகளில் ஒன்று :). கோவில், தேவாரம், மெல்லிசை, சமையல் என்று நிறைய எழுதியிருக்கிறார். 'கதம்ப முறுக்கு', 'முந்திரி அமிர்தம்' என்றால் என்ன தெரியுமா? இவருடைய சமையல் குறிப்பு இடுகைகளை படியுங்கள், தெரியும். சமையல் குறிப்பைப் படித்துக் கொண்டே வருகிறீர்கள்.. திடீரென்று கேழ்வரகு அல்வா, கொள்ளுத் துவையல், வெந்தயக் கஞ்சி என்றெல்லாம் வரும், அஞ்சேல், அது விருந்தினருக்காகச் சமைக்க வேண்டியவை.
மெல்லிசைப் பிரியர் போல. இவருடைய என்றும் இனியவை-ஏ.எம்.ராஜா இடுகையில் நிறைய நேரம் செலவழித்திருக்கிறேன். வாணி ஜெயராமின் பாடல்களைத் தொகுத்து ஒரு இடுகை வெளியிட்டிருக்கிறார். தேடிப் பிடித்து ரசியுங்களேன்?
கோவில்கள் பற்றி எழுதுவதைத் தன்னுடைய சாதனையாக நினைக்கிறார் - என்று நான் நினைக்கிறேன். உழைப்பும் முனைப்பும் உள்ளங்கை நெல்லிக்கனி. தமிழ்ப் பதிவுகளின் மிக நேர்த்தியான "கோவில்" பதிவு என்று தயங்காமல் சொல்வேன். விவரங்களும், படங்களும், தலப்பாடல்களும் சேர்த்து extremely well presented. சமீபத்தில் படித்த இவரின் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை திருக்கோயில் பதிவு என்னை நெகிழ வைத்தது. என் அம்மா ஊரில் என் அம்மா பெயரில் ஒரு கோவில் கட்டியிருக்கிறார்களே? about time!
    வல்லமை இதழின் பொறுப்பாசிரியராகவும் நித்திலம் பதிவின் ஆசிரியராகவும் வியக்க வைக்கிறார் பதிவர் பவள சங்கரி.
    "நான் என் 'சுயம்' என்பதை எப்படி கண்டுபிடிப்பது? ஆள் காட்டி விரலைத் திருப்பி என் மீதே காட்டுவதா? இல்லை தத்துவ ஞானிகளை நாடுவதா?".
அருமையான கேள்வி. தன்னுடைய ஆன்மீகப் பதிவு ஒன்றில் விளக்கியிருக்கிறார், படியுங்கள்.
நித்திலம் பதிவில் வந்திருக்கும் ஆங்கிலக் கவிதைகளின் தமிழ் மொழியாக்கம் அவசியம் படிக்க வேண்டியவை. பெண் சாதனையாளர்கள் பற்றிய இவருடைய பதிவுகளில் எளிதில் கிடைக்காத விவரங்களைச் சேர்த்திருப்பது சுவை. அன்னி பெசந்ட் அம்மையார் கீதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த விவரம் ஒரு உதாரணம். பெண்களைக் காந்தியவாதிகள் என்று வித்தியாசமான பார்வையோடு இவர் சொல்வதை ஓரளவுக்கு ஏற்க முடிகிறது.
தமிழ் மொழி எத்தனை தொன்மையானது? அ) 10,000 வருடங்கள் ஆ) 25,000 வருடங்கள் இ) 50,000 வருடங்கள் ஈ) 100,000 வருடங்களுக்கும் முந்தையது.
விடையை இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளுங்கள்.
இவர் எழுதியச் சிறுகதைகளில் வித்தியாசமான 'பொதுவில் வைப்போம்' பாணிச் சிறுகதை. யதார்த்தமான கதை.
தொடர்கதை எழுதுவது, சிரமத்தின் உச்சியில் ஒரு ஸ்டூல் போட்டு அதன் மேல் நிற்பது போல. முனைப்போடு எழுதுவது nearly impossible. பொதுவாகக் கதைகளை யாரும் படிப்பதில்லை; தொடர்கதை என்றால் கேட்கவே வேண்டாம். 'அருமையான தொடர்' என்று விழும் பின்னூட்டங்களை நம்பி எத்தனை நாள் எழுத முடியும்?. ஒரு வேகத்தை வெளிப்படுத்த எழுதினாலும், மனதோரமாக "..த்தா.. எவனாச்சும் படிக்கிறானா?" என்ற கேள்வி எழுந்துகொண்டே இருக்கும். தொடர்கதை எழுதி முடிக்கத் தீவிர உறுதி வேண்டும். கற்பனை, கரு, நடை எல்லாம் secondary.
அந்த வகையில் பதிவர் எடுத்த செயலை முடித்தச் சாதனையாளர். முப்பத்து நான்கு தொடர்களாக இவர் எழுதிய 'வெண்ணிலவில் ஒரு கருமுகில்' எனும் தொடர்கதை குறுநாவலாக வெகுஜனப் பத்திரிகையில் வந்ததைப் படித்ததும் நிறைவாக இருந்தது.
    பட்டினிக் குழந்தைகள் பளீரென்று சிரிக்கும் புகைப்படத்துக்கு இந்தக் கவிதை:
    "ஆதரவில்லை, ஆனாலும் கண்களில் ஒளி!
    அடுத்த வேளை சோறில்லை,
    ஆனாலும் முகத்தில் நம்பிக்கை!"
"இல்லீங்க, அவங்க சிரிக்கச் சொன்னாங்க போட்டோவுக்கு!"
சுருக்கென்று தைக்கும் இது போன்ற கவிதைகளை கே.பி.ஜனாவின் வலைப்பூவில் படிக்கலாம்.
நிறைய அரைப்பக்க ஒருபக்கச் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அப்பா ஒரு நாளும் என்ற இந்தப் பரிசுச் சிறுகதையின் நெறிச்சிக்கல் யதார்த்தமானது. மோதிரக்கையின் எதிர்பாரா திருப்பம் ரசிக்க வைக்கும்.
'பாடாத பாடல்கள்' எனும் பதிவில் திரைப்படத்துடன் ஒன்றிப்போனப் பாடல் காட்சிகள் பற்றி எழுதுகிறார். சுவாரசியமான ஆக்கம். தொடர்ந்து எழுதுவாரென்று நம்புகிறேன்.
    நாள்பட்டுத் தெரிந்து கொண்ட ஒரு சிறுகதைப் போட்டி வழியாக அறிமுகமான மேல்தட்டுப் பதிவு, உயிரோடை.
பெரும்பாலும் கவிதைகள். மயனின் மாளிகை போல ஜாலக் கொக்கி போட்டு இழுக்கும் வரிகள். கானல் போலிருக்கிறதே கவிதை வரி என்று கால் வைத்தால், கடலினும் ஆழம் கவிதைக் கரு. பின் வரும் கவிதைகளைப் படியுங்கள். பிறகு, இருவரிக் கவிதை பற்றி எத்தனை நேரம் சிந்திக்கிறீர்கள் என்று கணக்கிடுங்கள்.
    "கால் தழுவ வரும் அலையாய் என் காதல்
    எட்டி உதைக்கும் சிறுபிள்ளையாய் உனது..."
    "கரை புரண்ட வெள்ளமாய் காவேரி
    கடக்க கிடைப்தென்னவோ கொள்ளிடம் மட்டுமே..."
    "உனது குடை விரிப்புகளில் சட்டென
    அடங்கியது எனக்கான வான்.."
என்ன நான் சொல்வது?
கட்டுரைகளும் கதைகளும் அப்படித்தான். வளவளவென்று எழுதுவதில்லை. பயணக்கட்டுரை உட்பட! சொல்ல வந்ததை சுருங்கச் சொல்லிப் போகிறார். படித்த பிறகு நாம் தான் மணிக்கணக்கில் உருட்டிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது. படுத்தும் எழுத்தைப் படித்துப் பாருங்களேன்?: ஊர்மிளையின் புலம்பல், பொம்மலாட்டம்.
live as or live in? அகக்கண்ணாடி பார்க்கச் சொல்லும் பெண்ணியம் பாராட்டுக்குரியது. படித்தபின் இயல்பாக வரும் மென்னகையைக் கட்டுப்படுத்த முடிந்தால் நீங்கள் விசுவாமித்திரர்.
கடவுளர் தவறான உதாரணமாகலாமா?, எனக்குப் பிடித்த இன்னொரு கட்டுரை. gotta love it, of course.
சொல்லாட்சி பற்றி இவரது எழுத்திலிருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன். இலக்கிய mood வந்தால் நான் படிக்கும் பதிவுகளில் ஒன்று. 'தமிழ்த்திமிர் பிடித்தவள்' என்ற இவரின் சுய அறிமுகம் is an intellectual turn-on.
    கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் கவிதை, கொஞ்சம் சிறுகதை, கொஞ்சம் சமூகம், கொஞ்சம் தன்னலசல், கொஞ்சம் உட்பார்வை, கொஞ்சம் சினிமா என்று 360° சுற்றும் எழுத்துக்குச் சொந்தமான 'தமிழ் உதயம்' இடுகைகளைப் பல ஆண்டுகளாகப் படித்து வருகிறேன்.
இவருடைய சிறுகதைகள் பிரபல பத்திரிகைகளில் வெளியானதில் ஆச்சரியம் இல்லை; பத்து வருடங்களுக்கு முன்பு வெளியானவற்றைச் சேமித்து வைத்திருக்கிறாரே என்பதில் உண்டு! பத்திரிகை சிறுகதை வெளியீட்டில் பத்து வருடங்களுக்குள் எத்தனை மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று புரிந்து கொள்ள முடிந்தது. என்னைக் கவர்ந்த சிறுகதைகள் சில:
அகதி: கணையாழியில் வெளிவந்த கதை. உண்மைக்கதை என்கிறார் பதிவர்.
காயங்கள்: சாவியில் வந்த கதை. கதை வெளிவந்த (1994) இதழுடன் சாவி நின்றுவிட்டதாம். உபரி விவரம் சுவாரசியம்.
எதுவரை..: கல்கியில் வந்தக் கதை. நான் மிகவும் ரசித்த காதல் மஸ்லின் கதை.
சமூகம் மற்றும் உட்பார்வைப் பதிவுகளில் யதார்த்தச் சிக்கல்கள் பலவற்றை அலசியிருக்கிறார். "நினைத்த வாழ்க்கை கிடைத்தால் சந்தோஷமா... கிடைத்த வாழ்க்கையில் மகிழ்வதில் சந்தோஷமா?" என்ற பதிவை என் நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறேன். உங்கள் பார்வைக்குச் சில:
நீயா... நானா...?: வாழ்க்கைப் பயணத்தில் இந்தப் போராட்டம் எந்த வயதில் தொடங்குகிறது? எப்போது முடிகிறது?
கோபத்தைக் கொன்றுவிடு: எத்தனை பேர் எப்படிச் சொன்னால் என்ன? 'உங்களுக்கு அசாத்திய கோபம் கண்ட நேரத்தில் கண்டதற்கும் வருகிறதா? அரை மாத்திரை கோபஸ்வா சாப்பிட்டால் பூரண குணம்' என்று யாராவது விளம்பரம் செய்கிறார்களா என்று நானும் ஏழு வயதிலிருந்துப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
செகன்ட் இன்னிங்கஸ்: விளையாட்டில் மட்டுமா இரண்டாவது இன்னிங்க்ஸ்? அற்புதமான கட்டுரை.
குடும்பம் ஒரு கதம்பம்: ஒரு கோடை ஞாயிறில் நான், என் மகன், அவனுடைய நண்பர்கள் எல்லாரும் இந்தப் பட்டியை நிறைவு செய்தோம். உங்கள் குடும்பம் எத்தனை பெரிது? உங்கள் பிள்ளைகள் அண்ணாந்து பார்த்தால் குடும்ப மரத்தில் எத்தனை குரங்குகளைக் காண்பார்கள்? (ஓகே, புலிகளை).
    பதிவுகளைப் படிக்கும் பொழுதும் சரி, எப்பொழுதாவது இவருடன் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தாலும் சரி.. இவர் எதற்கும் யாருக்கும் அஞ்சாதவர் என்பது தெரியும்; அதே நேரம், எல்லோரைப் பற்றியும் கவலைப்படுபவர் என்றும் புரியும். 'உலக உபாதைகளுக்கு அமெரிக்காவே காரணம்' posture தவிரப் பெரும்பாலும் sophism தாண்டிய சிவப்புச் சிந்தனை.
முற்போக்கு எழுத்தாளர் காஸ்யபனின் இடுகைகள், பல விதங்களில் இன்றைய தலைமுறைக்குப் பயன்படுவதாக நம்புகிறேன். அந்த நாள் அரசியல், பொருளாதாரம், கட்சிகள், கடன்கள், தந்திரங்கள் என்று பலவற்றைப் புரிந்து கொள்ள முடிகிறது. எங்கிருந்து வந்திருக்கிறோம் என்று அறிந்து கொள்ள ஒரு அவசரக் காலங்காட்டி. உதாரணமாக:
மின்சார இலாகாவும் மின்சார வாரியமும்
தென் இந்திய ரயிலும் செட்டிநாட்டு முதலாளிகளும்
1967ம் ஆண்டு தேர்தல்
அரசியல் தலைமையும் நிர்வாகத் தலைமையும்.
காட்டமான அரசியல் மற்றும் சமூகச் சாடல்களுக்கு இடையில் மதம், கடவுள், வெளி, உயிர், மொழி, நாத்திகம் பற்றிய அறிவார்ந்த பதிவுகள் எழுதுகிறார். இவருடைய பட்டறிவு என் போன்றவருக்குப் பாடசாலை.
சிறு கதை என்றால் என்ன? என்ற இடுகை, சிறுகதை எழுதுவோருக்கு மட்டுமல்ல, படிப்போருக்கும் பயன்படும்.
இவருடைய சிறுகதைகள் are in a different plane. துணிச்சலான, எதிர்பார்க்க முடியாத, சில சமயம் நடுங்க வைக்கும் கருத்துக்கள். இபிகோ 375 என்றச் சிறுகதையைப் படியுங்கள். இருபது இருபத்தைந்து வரிகள் தான். ஆயுள் முழுதும் நினைவில் நின்று பாதிக்கும். இது உண்மையாக இருக்குமா? சாத்தியம் உண்டா? அரைச் சாத்தியம் இருந்தாலும் எப்படி வழி வழியாக அரைச் சாத்தியத்தை ஏற்றோம்? என்ன துணிச்சல் இவருக்கு? முற்போக்கு என்ற பெயரில் என்ன வேண்டுமானாலும் எழுதுவதா?... என்று பலதரப்பட்ட சிந்தனைகள் படிப்பவரின் பக்குவத்துக்கேற்ப ஓடும். மெள்ளத் தெளிவேற்பட்டு இந்தக் கதையின் சிக்கலான யதார்த்தம் சிலருக்கு மட்டுமே உறைக்கும் என்று நினைக்கிறேன். எத்தனை முறை படித்திருக்கிறேன், எத்தனை சபாஷ்கள் போட்டிருக்கிறேன் என்று கணக்கே கிடையாது. அவசியம் படியுங்கள். சிறுகதையைப் படித்துவிட்டு, மீண்டும் இவரின் 'சிறுகதை என்றால் என்ன?' இடுகையைப் படியுங்கள்.
பிற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஒன்று தொடங்கலாம் என்றிருக்கிறேன். யாராவது சேருவார்களா?
    ஆதிரா பார்வைகள் பதிவில் இலக்கியத்தில் மருத்துவம் என்ற தலைப்பில் அருமையான கட்டுரைகள் எழுதிவந்த (வரும்?) ஆதிரா முல்லைக்கு இன்றைய shout out.
➤➤6. கைக்குள் இலக்கியம்
மேலும் வாசிக்க...
இன்றைய ஸ்பெஷல்
மெட்ராஸ் தமிழன்
கண்ணனுக்காக
வேல் கண்ணன்
சித்தர்கள் இராச்சியம்
டங்கு டிங்கு டு
மனதோடு மட்டும்
    மெட்ராசில் இருக்கும் கிக் சென்னையில் இல்லை.
நான் காதலித்த மண்ணை சீநாய், சேநாய், ஷெனாய் என்று என் உள்ளூர் நண்பர்கள் பலவாறாகச் சிதைப்பது பழகிவிட்டது என்றாலும், மொழிவெறியால் மரணித்த மெட்ராஸ் என் நெஞ்சில் என்றும் நிலைக்கும். மொழிவெறியர் இன்னும் 'காபி' 'டீ' குடிப்பதேன்?
அதற்காகவே 'மெட்ராஸ் தமிழன்' பிடித்திருக்கிறது. தவிர, பம்பாய் பற்றி மெட்ராஸ் தமிழன் எழுதியிருக்கும் கட்டுரைகள் மிகச் சுவையானவை.
கல்லூரி முடித்த green bean வாலிபன் ஊர் விட்டு முதன்முறையாக பம்பாய் போகிறான். வேலையில் சேர்வதற்காக. 'பம்பாயில் இங்கே தங்கலாம்' என்று ரயில் பயணிகளிடம் தெரிந்துகொண்ட ஒரு இடத்தை அடைகிறான்.
    "நான் சூட்கேஸுடன் மாடிப்படியில் ஏறி அங்கு கல்லாவில் உட்கார்ந்திருப்பவரிடம் சென்று "நான் சென்னையில் இருந்து வருகிறேன். எனக்கு இங்கு வேலை கிடைத்திருக்கிறது. தங்குவதற்கு இடம் வேண்டும்" என்றேன். அவர் என்னை ஏற இறங்க பார்த்து விட்டு "இடமெல்லாம் இல்லை" என்றாரே பார்க்கலாம். எனக்கு பயங்கர அதிர்ச்சி. அடக்கடவுளே! இடம் இல்லையாமே! இப்போது என்ன செய்வது? எங்கே தங்குவது? இவ்வளவு பெரிய ஊரில் யாரையுமே தெரியாதே! நாளைக்கு வேலையில் வேறு சேர வேண்டுமே! என்ன செய்வது?"
இப்படித் தொடங்கும் இவருடைய சலாம் பம்பாய் தொடர் கட்டுரை is a must read.
சில இடுகைகளில் நகைச்சுவை, சில அதிர்ச்சி, சில நெகிழ்ச்சி என்று இவர் எழுதியிருப்பதில் ஏறக்குறையப் பாதிக்கு மேல் சென்னை நினைவுகள். கருத்தும் நடையும் சுவாரசியத்தை அளவோடு பொட்டலம் கட்டித் தருகின்றன. சென்னையைக் காதலிக்கும் கீயில் தொடங்கி ம்ல் முடியும் பெயர் கொண்டவர், இவருடையக் கட்டுரைகளைப் படித்ததும் சென்னையை வெறுக்கத் தொடங்கிவிடுவார் என்பதே என் கலக்கம்.
என்னைக் கவர்ந்த மெட்ராஸ் தமிழன் இடுகைகளில் சில:
"1971ம் ஆண்டு டிசம்பர் மாதத்தை மறக்கவே முடியாது. இந்தியா பாகிஸ்தான் போர் மூண்டிருந்த நேரம். சென்னை நகரம் முழுவதும் இரவு ஏழு மணி முதல் அரசாங்கத்தின் 'blackout ' உத்தரவு இருந்தது. வீட்டில் உள்ள அனைத்து விளக்குகளையும் அணைத்து விடவேண்டும்." - இது அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே என்ற பத்தியத் தலைப்பில் எழுதப்பட்டிருக்கும் நெஞ்சைக் கிள்ளும் கட்டுரையிலிருந்து.
"ஒரு முறை வீட்டுக்குள் பகலிலேயே திருடன் புகுந்து விட்டான். பீரோவிலிருந்து அவன் திருடிக்கொண்டிருந்த போது சமயோசிதமாக எனது தாயார் கதவின் தாழ்ப்பாளை வெளிப்புறத்திலிருந்து பூட்டிவிட்டார்." வீடு - இந்தக் கட்டுரையை நான் பலமுறை படித்திருக்கிறேன்.
பாகிஸ்தான் போரையொட்டிய இன்னொரு கட்டுரை ஐ.என்.எஸ். விக்ராந்த் பற்றியது. இந்த வருடத்துக் கட்டுரைகளில் தேடிப்பிடித்துப் படியுங்களேன்? விக்ராந்த்தை காப்பாற்றிய இன்னொரு சென்னைத் தமிழரின் சாகசங்களைப் புரிந்து கொண்டு சிலிர்க்கலாம்.
    "எங்கள் வேலைகளிலேயே நாங்கள் மிகவும் சோர்ந்து போகிறோம். வாரத்தில் ஒரு முறையாவது உறவு வைத்துக் கொள்ளாவிட்டால் மனைவி, அவள் மீது எங்களுக்கு பாசம் இல்லை என்று நினைத்துவிடுகிறாள். அப்படி ஒரு எண்ணம் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் படுக்கையை பகிர்ந்து கொள்கிறோம்".
கணவர்கள் இப்படி எண்ணுகிறார்களா? மனதோடு மட்டும் பதிவில் தாம்பத்தியம் பற்றிய இடுகைகளை விரும்பிப் படித்து வருகிறேன். ஆண்-பெண் உறவின் பல பரிமாணங்களை அனாயாசமாகத் தொடுகிறார் பதிவர் கௌசல்யா ராஜ். அந்தரங்கம், கள்ளக்காதல், மனைவி என்று பகுத்து வழங்கியிருக்கும் அத்தனை பதிவுகளையும் படிக்க வேண்டும். படித்தால் 'கணவன்' என்ற பகுப்பை ஏன் தவறவிட்டார் என்ற கேள்வி உங்களுக்கும் எழலாம் :).
கள்ளக்காதல் என்ற பெயரே சரியில்லை என்று தோன்றுகிறது. கழிசடைத்தனத்துக்குக் 'காதல்' என்ற பெயர் சூட்டுவானேன்? உண்மையிலேயே மனங்கனிந்த காதல் என்றால், அதைக் குற்றமாக்குவானேன்? காதல் ஏற்பட்டால் ஏற்பட்டது தான். கள்ளத்தனம் எங்கே வந்தது? ஒரு இடத்தில் இல்லாத அன்பும் நேசமும் இன்னொரு இடத்தில் ஏற்படுகிறது என்ற யதார்த்த நோக்கு அவசியமென்று நினைக்கிறேன். திருட்டு கொள்ளை எனும் குற்றப்போர்வையில் அதை மூடுவானேன்? பிள்ளைகள், பெற்றோர், சமூகம், குடும்ப மானம், கலாசாரம், பண்பாடு எனும் peripheral and often meaningless காரணங்களைக் காட்டி குற்றமாக்காமல், காதல் உண்டானால் முடிவெடுக்கத் தேவையான முதிர்ந்த அறிவு பற்றி மேலும் எழுதுவார் என்று நினைக்கிறேன். everyone needs a second chance, for we live only once.
குழந்தைகள் வளர்ப்பு பற்றித் தொடர்ந்து எழுதி வருகிறார். பாலியல் ஈர்ப்பு பற்றி இவர் எழுதியிருக்கும் பல கட்டுரைகளை நடுநிலைப் பள்ளியில் பாடமாக வைக்கலாம். இன்றைய பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்தக் கட்டுரைகளை (பதிவாசிரியர் அனுமதியுடன்) தளமிறக்கி வீட்டிலோ பள்ளியிலோ சேர்ந்து படித்துக் கலந்துரையாடலாம். பெண்ணின் மார்பை வெறிக்கும் ஆணின் விடலைத்தனம் குறைய வாய்ப்புண்டு. காரணமில்லாமல் ஆணைக் கண்டு அஞ்சும் பெண்ணின் மனப்பாங்கு மறையவும் வாய்ப்புண்டு.
மேற்சொன்னக் கருத்துக்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் 'மனதோடு மட்டும்' பதிவின் ஏறத்தாழ ஐம்பது கட்டுரைகளை அவசியம் படிக்கவேண்டும். புத்தகமாக வரவேண்டிய கட்டுரைகள்.
இத்தகையக் கருத்துக்களை "இந்தியப் பண்பாடு மற்றும் கலாசாரத்துக்கு" ஏற்றவாறு இடக்கரடக்கலோ இனிப்புப் பூச்சோ ஏதோ ஒரு மறைக்குள் வைத்து எழுத வேண்டியிருக்கிறது. (ஏன்?). எழுதுவது பெண் என்றால் உடனே stereotype செய்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. இவை எல்லாவற்றையும் மனதில் வைத்து இத்தகைய topicகளில் எழுதுவது can be stressful. time consuming. exhausting. எனினும், தொடர்ந்து எழுதும் கௌசல்யா ராஜ் பாராட்டுக்குரியவர்.
தன் ஓய்வு நேரத்தில்(?) இன்னொரு பொன்னான செயலைச் செய்கிறார் சமூக உணர்வுள்ள கௌசல்யா ராஜ். பசுமை விடியல் என்று ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார். உங்கள் குடும்ப அல்லது சமூக விழாவில் இந்த முயற்சி பொருந்துமா பாருங்களேன்?
    'நந்தவனத்தாண்டி பாடல்கள்' வழியாக இந்தப் பதிவு அறிமுகமானது என்று நினைக்கிறேன். விசித்திரமான பெயரும் ஒரு காரணம். பதிவும் பெயரும் புரிந்ததும் பழக்கமாகிவிட்டது.
பதிவர் சத்தியமூர்த்தியின் கவிதைகளில் சொல்லப்படும் சிக்கல்கள் நாம் தினம் உணர்பவை. கற்பனைச் சிறகுடன் தொடுவானில் பறக்கும் உணர்வுகளைப் பற்றி இவர் அதிகம் எழுதாதது என்னைக் கவர்கிறது. தினசரிச் சிக்கல்கள் என்றாலும் சிந்திக்க வைக்கும்படி எழுதுகிறார். உதாரணமாக:
    அவனைக் கொண்டு போய் நீ
    அருவிக்கு பக்கத்தில் நிறுத்தினாய்.
    பிறகு அருவிக்குள் கொண்டு நிறுத்தினாய்.
    ...
    அவன் அப்போதே அங்கிருந்து ஓடி விடத் துடித்தான்.
    நீ தான் விடவில்லை.
    இன்று துரத்தியடிக்கப்பட்டிருக்கிறான்.
கவிஞர்களுக்கேயுரிய கோபமும் தாபமும் தணலாய் வெளிப்படுகிறது சமூகச் சாம்பல் மூடிய இவரது கவிதைகளில். கர்த்தர் வருகையின் சமீபம் குறித்து இவர் எழுதியிருக்கும் கவிதையைப் படித்துப் பாருங்களேன்? இந்தக் கவிதையின் தரை தொடும் யதார்த்தம் உங்கள் பொறுமை எல்லைக்குள்ளும் புகுந்து புறப்படுகிறதா? பாலசுப்ரமணியம் கவிதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
    "அதிகாலையில் கர்லாகட்டை சுற்றுபவர்களும் இராவில் கல்லுடைப்பவர்களும்
    பச்சைமுட்டைகளை விரும்பிக் குடிக்கிறார்கள்"
எனத்தொடங்கும் இவரின் 2011 வருடத்து 'இரவில் கல்லுடைப்பவர்கள்' என்ற கவிதையைத் தேடிப் படித்துப் பார்த்து, என்ன புரிந்து கொண்டீர்கள் என்று சொல்லுங்களேன்? ஒவ்வொரு புரிதலும், பிரமிப்பூட்டும் விதத்தில் வேறுபடும் என்பது மட்டும் நிச்சயம்.
இது போன்ற சில கவிதைகளைப் படித்தப் பிறகே இவர் பதிவின் தலைப்பு உறைக்கத் தொடங்கியது. வாழ்வியல் சிக்கல்களை விளங்காத இசையாகப் பார்க்கிறாரா சத்தியமூர்த்தி? அல்லது வாழ்வியல் இசையை விளங்காத சிக்கலாகப் பார்க்கிறாரா?
புத்தகப் பித்து போல. நிறைய நூல் விமரிசனங்களும் எழுதியிருக்கிறார். இதைப் படித்த நாளிலிருந்து புத்தகத்தை வாங்கக் காத்துக் கொண்டிருக்கிறேன். 'சிவாஜிகணேசனின் முத்தங்கள்' என்ற தலைப்பில் இவர் வெளியிட்டிருக்கும் கவிதைப் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தோன்றுகிறது - தலைப்புக்காகவேனும்.
டங்கு டிங்கு டுவிலிருந்து வெளியேறுவதற்குள் அரசியல் கவிதை கவிதை அரசியலானது பற்றிய இந்தப் பதிவையும் ஒருமுறை படித்துவிடுங்கள்.
    "பல்லாயிரக்கணக்கான கால்கள் முளைத்த பூரான்களைப் போல யாதவர்கள் கூட்டம் கூட்டமாகக் காடுகளையும், பாலைவனங்களையும் நோக்கிச் சென்றனர். முற்றிலும் புதிய நாட்டில், புதியதோர் உலகை நாடிச் சென்றார்கள். சுதந்திரமாகவும், இன்பமாகவும் வாழவேண்டி தொலைதூரத்தில் எங்கோ இருக்கும் செளராஷ்டிரக் கடற்கரையை நோக்கி நடந்தனர். சிலர் மாட்டுவண்டிகளிலும், சிலர் குதிரை வண்டிகளிலும், சிலர் ரதங்களிலும், சிலர் பல்லக்குகளிலும், பெரும்பான்மையான சாமானிய மக்கள் நடந்தும் பயணம் செய்தனர். பலராமனும், உத்தவனும் தலைமை வகித்து நடத்திச் செல்ல, உக்ரசேனர், வசுதேவர், அக்ரூரர் மற்ற யாதவத் தலைவர்கள் அனைவரும் ரதங்களில் தங்கள் குடும்பங்களோடு பயணம் செய்ய, இளைஞர்களில் பலரும் குதிரைச் சவாரி செய்து வந்தனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமான கால்நடைகள் ஒட்டகங்கள், மாடுகள், யானைகள், குதிரைகளும் அவைகளால் தூக்க முடிந்த அளவுக்குப் பொதியைத் தூக்கிச் சுமந்து பயணம் செய்தன. வேடுவர்களும், நாகர்களும் மற்றவர்களும் கூடவே பயணம் செய்தனர். அவர்களைப் பின் பக்கமிருந்து சாத்யகி தலைமையில் மற்ற யாதவ இளைஞர்கள் பாதுகாவல் செய்து வந்தனர்."
பழைய DeMille படங்களின் panorama கண்முன் விரியவில்லை?
பன்திறப் பதிவர் கீதா சாம்பசிவம் எழுதி வரும் பல பதிவுகளில் என்னை மிகவும் கவர்ந்தது 'கண்ணனுக்காக'. மகாபாரதப் புராணத்திலிருந்து கண்ணனை ஒட்டியப் பல குணச்சித்திரங்கள், கதைகளை வைத்துத் தொடராக எழுதி வருகிறார். கண்ணன் தன் இனத்தோடு மதுராவை விட்டு துவாரகைக்குப் பெயரும் படலத்திலிருந்து ஒரு சிறு பகுதியை மேலே படித்தீர்கள்.
ருக்மிணியின் திருமணம், யாதவர்களின் புலம்பெயர்தல் இரண்டிலும் கண்ணன் என்னும் தலைவனின் strategy, leadership, carpe diem மற்றும் citizenship பண்புகளை அற்புதமாக எடுத்துக் காட்டியிருக்கிறார். கடவுள் என்ற நினைப்பே வராமல் படிக்க முடிகிறது. ஒரு இனத்தலைவன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று புரிகிறது. மதுராவிலிருந்து கடைசிப் பூச்சியும் கிளம்பிய பின்னரே தான் அங்கிருந்து வெளியேறுவதாகச் சொல்வதுடன், தன் இனத்தை இன்னார் இன்ன விதத்தில் தலைமை தாங்கிப் பாதுகாப்புடன் வழி நடத்தவேண்டும் என்று கண்ணன் விவரிப்பதாக இவர் எழுதியிருப்பதைப் படிக்கையில் புல்லரிக்கும்.
கீதா சாம்பசிவத்தின் magnum opus, கண்ணனுக்காக. புத்தகமாக வெளிவர வேண்டும்.
ஸ்வேதகேதுவின் சரிவு, ருக்மிணியின் திருமணம் பற்றிய இடுகைகள் விறுவிறுப்பானவை. ருக்மிணியின் திருமணப் படலம் - தனியாகத் திரைப்படம் எடுக்கும் அளவுக்கானத் திரைக்கதை என்பேன்.
ரைட். ஸ்வேதகேது யாருன்னு இவங்க பதிவைப் படிச்சுத்தான் தெரிஞ்சுகிட்டேன். அது சரி, ஷாயிபா யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? ..யாரு? ..தப்பு.. இவங்களுக்கு ஒரு பா. தாடியும் கிடையாது. ஓகே, ஷாயிபா யாருன்னு தெரியணும்னா இதைப் படியுங்க :)
now, ருக்மணியா ருக்மிணியா?
    மேல்தட்டு இலக்கியம், பெரும்பாலும் கவிதைகள், எழுதும் வேல்கண்ணனின் பதிவுக்குள் எப்படி நுழைந்தேன் என்று தெரியவில்லை. வெளியேற முடியவில்லை என்பது மட்டும் தெரியும்.
இலக்கிய வாசனையை விரும்பி நுகர்வோருக்கு இவர் இடுகைகள், வாடா இலக்கியப்பூ.
சமீபத்தில் வேல்கண்ணனின் இந்தக் கவிதை வரிகளை அடிக்கடி அசை போட்டிருக்கிறேன்:
    "பிறிதொரு ரகசிய அழைப்பு வரும் வரை
    உன் ஞாபக பிசுபிசுப்பில் கடந்து போகும்
    எனக்கான இரவுகள்."
இன்னொரு முறை படியுங்கள். கடந்து போவது புரியும். கவிதையை இங்கே படிக்கலாம்.
இன்னொரு கவிதை என்னை மிகவும் பாதித்தது என்பேன். இதில் கவிஞர் படம் பிடித்திருக்கும் காவேரி அக்காவைப் போல் நிறைய பேரை நானறிவேன். அவர்கள் காவேரி அக்காக்கள் என்பது அந்தக் கணத்தில் புரியாமல் போனதே என்று அடிக்கடி வியக்கிறேன். காவேரி அக்கா பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
    "மச்சத்தின் இருத்தலில் சொல்லிவிட முடியும் பெண்ணின் குணங்களை
    என்றவனை வாய்பிளந்து பார்த்தாள்
    யோனி தைக்கப்பட்ட ஆப்பிரிக்க பெண்ணொருத்தி".
இந்தக் கவிதையின் தாக்கம் வருடக்கணக்காய் எனக்குள். இவரின் மச்ச பலன் படித்து நீங்களும் அவதிப்பட விரும்புகிறேன்.
சில வருடங்களுக்கு முன் போகன் எழுதிய சித்தர்கள் (அகத்தியர்?) பற்றிய ஒரு இடுகையின் பின்னூட்டதிலிருந்து அறிமுகமானவர் பதிவர் தோழி என்று நினைக்கிறேன். மாணவர் என்று தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் 'தோழி', சகட்டு மேனிக்குப் பதிவுகள் எழுதித் தள்ளுகிறார். யோசிக்க வைக்கிறது. சூட்சுமச் சொல்லா? நாமெல்லாருமே மாணவர்கள் தானா? இவரும் சொற்சித்தர் போலிருக்கிறது என்ற நினைப்புடன் இவரது இடுகைகளைப் படிக்கத் தொடங்கினால், மீண்டு வர வெகு நேரமாகும். சொல்லிவிடுகிறேன்.
காயகல்பம், ரசவாதம், பில்லி சூனியம், வசியம், சாவுத் தவிர்ப்பு (சித்தர்கள் சாவதில்லை என்று சித்தர்களை நம்புவோர் நம்புகிறார்கள்), மாயம், ரசமணி, குண்டலினி என்று பல exotic topicகளில் இலக்கியத் தரத்தோடு நிறைய எழுதுகிறார். என்னுடைய விபரீதச் சிறுகதைகளுக்கான ஆராய்ச்சித் தளங்களில் இவரது பதிவும் ஒன்று. படிக்கத் தொடங்கினால் பிரமிக்கத் தொடங்குவீர்கள். நிச்சயம்.
esoteric சமாசாரம் என்றாலும் இவர் இடுகைகளில் குறிப்பிடும் தமிழ்ப்பாடல்கள் பலவும் மிகவும் ரசிக்கத்தக்கவை. இவருடைய சித்தர் பாடல்கள் பற்றிய அறிவு மிக ஆழமானது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன். பெண் சித்தர்கள், ஈழத்து சித்தர்கள்... எவரையும் விட்டுவைக்கவில்லை. கருவிலிருப்பது ஆணா பெண்ணா என்று அறியும் முறையை அகத்தியர் சொல்லியிருப்பதாகத் தெரிவிக்கிறார். படித்துப் பாருங்கள்.
சித்தர்கள் கைபடாத சிக்கலே இல்லை போலிருக்கிறது. மாதவிடாயிலிருந்து மரணத்தேதி வரை அத்தனையும் தொட்டிருக்கிறார்கள் போல. இவருடைய பதிவுகளைத் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருக்கலாம்.
ஜீவ சமாதி என்ற மிக நுட்பமான விஷயம் பற்றி இவர் எழுதியிருப்பதை இந்த இடுகையைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். இதை ஒரு தொடராக விறுவிறுப்பும் சில்லிப்பும் உண்டாகும்படி அருமையாக எழுதியிருக்கிறார்.
ஜீவ சமாதி என்ற concept எனக்குப் புரிகிறது. இதைப் பற்றி நசிகேத வெண்பாவில் எழுதியிருக்கிறேன். சற்றே futuristic போல் தோன்றும் இந்த ஜீவசமாதி தந்திரம், அடிப்படையில் மிகத் தொன்மையானது என்று நம்புகிறேன். தன் உயிரைத் தானே அடக்கும் திறன். தன் உயிரை.. தன் ஆன்மாவை அறிந்தால், தானே அடக்க முடியும். சித்தர்கள் தங்கள் ஆன்மாவை அறிந்தவர்களாவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. அல்லது தங்கள் ஆன்மாவை அறிந்தவர்கள் சித்தர்களாவர் என்றுப் பரவலாக நம்பப்படுகிறது.
தோழி எழுதியிருக்கும் நூற்றியெட்டு சித்தர்களின் ஜீவ சமாதிகளின் தொகுப்பை படியுங்கள். ஜீவ சமாதி இருக்கும் ஊரருகே வசித்தால் ஒருமுறை ஜீவ சமாதியில் நுழைந்து பார்த்துவிடுங்கள். இரவு பனிரெண்டு மணிக்கு மேல் தனியாகப் போவது உத்தமம்.
இன்றைய shout outன் நாயகர்: 'ஆரண்ய நிவாஸ்' ஆர். ராமமூர்த்தி. உங்க அப்பன் வீட்டு ரோடா? போல் நறுக் நறுக் என்று நாலு வருடங்களாக நிறைய எழுதிவருகிறார்.
➤➤5. கதம்ப முறுக்கு
மேலும் வாசிக்க...
இன்றைய ஸ்பெஷல்
எம்.ஏ.சுசீலா
யவ்வனம்
தேவியர் இல்லம்
கைகள் அள்ளிய நீர்
அகரம் அமுதா
மனவிழி
    "புதுத்தாலி உடுத்தியிருக்கும் சத்யா
    சவூதியிலிருக்கும் கணவனின் நினைப்பில்
    தலைக்கு ஊற்றும் நடுநிசிகளால்
    நடுக்கமுறுகின்றன இரவுகள்"
படித்ததும் கொஞ்ச நேரம் அப்படியே பின்சாய்ந்து வரிகளை மனதுள் உருட்டத் தோன்றவில்லை? 'சத்யாகாலம்' என்ற இக்கவிதையைப் பதிவர் கதிர்பாரதியின் யவ்வனம் வலைப்பூவில் படிக்கலாம். கவிஞர் சொல்ல வந்திருப்பது எளிதாகப் புரிகிறது. என்றாலும் உங்களை அதிகம் பாதித்தது புதுத்தாலியா, தலைக்கு ஊற்றுவதா, நடுக்கமுறும் இரவா? பாதிப்பில் இருக்கிறது புரிதல். அல்லது புரிதலில் இருக்கிறது பாதிப்பு.
தவளைகள் நீரில் அளைந்து எழுப்பும் ஒலியைப் புணர்ச்சியின் அதிரலுக்கு ஒப்பிடும் இவரது கற்பனையை ரசிக்காமல் இருக்க முடியவில்லை. படித்ததும் வாய்விட்டுச் சிரித்தேன். நகைச்சுவையை மனதில் நிறுத்தி எழுதினாரா தெரியாது. குளம் கவிதையைப் படித்துச் சொல்லுங்கள்.
கௌரவத்தம்மாள் யார் தெரியுமா? பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பற்றிய இந்தக் கட்டுரையைப் படித்து ரசித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
    "முக்காலத்திலும் கால் பரப்பியிருக்கும்
    முனிவனிடம் வந்தது புழுவொன்று"
ஆயிற்றா? இடுகையில் மிச்சக் க(வி)தையைப் படியுங்கள். லேசான திடுக்.
யவ்வனம் வலைப்பூ என்னைக் கவர்வதற்கு இன்னொரு மிகச்சிறிய almost subliminal காரணம் ஒன்று உண்டு. எனக்கு மிகவும் பிடித்த வடமொழிச் சொற்களுள் யௌவனம் ஒன்று. இளமை என்று தமிழில் பொருள் கொண்டாலும், வடமொழி யௌவனத்தில் there is more to it than youth. இந்தப் பெயர் என் யௌவன நினைவுகளைக் கிளறும். இதே பெயரில் என் விடலை நண்பர்களுடன் ஒரு கையெழுத்துப் பிரதி நடத்தினேன். ஆகா.. அந்த நாள் ஞாபகம்.
    அகரம் அமுதனின் "பா"ப்பதிவுகள் பிரபலம். சமீபமாக இவர் எழுதிவரும் "படப்பா"க்களின் குறும்பு, பெரும்பாலும் கரும்பு. அவசியம் படியுங்கள்.
இவர் எழுதிய 'அமுதன் குறள்' புத்தகம் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன். தொடக்கப் பள்ளிகளில் தமிழ்ப்பாடமாகச் சொல்லிக் கொடுக்க வேண்டிய குறட்பாக்கள். தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தில் யாருக்கு எழுதி எப்படித் தெரியவைப்பது?
தமிழ் மரபுக்கவிதையின் வேர்களை நாம் மறந்துவிடாமலிருக்க அமுதன் புரியும் பணி போற்றத்தக்கது. இவருடையப் 'வெண்பா எழுதலாம் வாங்க' பதிவைப் படித்து வெண்பா இலக்கணம் மற்றும் வடிவம் பற்றி நிறையக் கற்றுக் கொண்டேன். இவர் எனக்கு ஆசான்.
மரபுக்கவிதை மட்டுமே இவருக்கு வரும் என்று நினைத்தால், இதைப் படியுங்கள்:
    "மரபறியாத வானம்
    அம்பெறிந்த பிறகு
    வில்லை வளைக்கிறது"
வானவில் பற்றிய எத்தனை நயமான கவிதை!
அமுதனின் ஏக்கவெடி! கவிதை, குறுக வைக்கும் சுருக்.
    தமிழ்மணம் நுகர்ந்து கொண்டிருந்த போது ஒரு நாள், 'தேவியர் இல்லம் திருப்பூர்' என்ற வித்தியாசமான பெயர் என்னைக் கவர்ந்தது. அன்றிலிருந்து படித்துவருகிறேன். நிறைய அரசியல் சமூகக் கட்டுரைகள். இலங்கைத் தமிழர் இன்னல்களுக்குத் தமிழ்நாட்டுத் தமிழர்கள் காரணம் என்று சிலநேரம் சொல்லும் பொழுது இவரது முகவரியைப் பெற்றுச் சந்திக்கத் தோன்றியது :).
ராஜீவ் காந்திப் படுகொலைத் தொடரில் நிறைய விஷயங்களைத் தொட்டிருக்கிறார். தனிப் புத்தகமாக வெளியிட வேண்டிய படைப்பு.
இவர் எழுதியத் தொடர் நிறைய நினைவுகளைக் கிளறினாலும், அறிந்திராத விவரங்களைத் தெரியப்படுத்தியது. விறுவிறுப்பான இடுகைகள். பிரபாகரனை அசலில் உணர்த்திய சில பதிவர்களில் ஒருவர். அவரின் முனைப்புகளின் பின்புலத்தை விவரமாகப் பல பதிவுகளில் எழுதியிருக்கிறார். (ஹ்ம்ம்ம்.. வீர சூர அடைமொழி எதுவும் தராமல் பிரபாகரன் என்று எழுதியதற்காக ஒரு முறை எனக்குப் பல மிரட்டல் கொச்சைக் கடிதங்கள் வந்தன. நுனிப்புல் மேயும் #%ஃஸ்D^*! என்று தினம் ஒருவர் இமெயில் அனுப்பினார். திட்டுறதுனா என்னைத் திட்டுங்க, திருப்பூரை விடுங்க.)
வேன்கூவரிலும் ஹைடல்பர்கிலும் சிலகாலம் நட்புடன் பழகிய இலங்கைத் தமிழர் ஒருவர் (என் பெயரைக் கண்டு அவருக்கு ஆச்சரியம், அவர் பெயரைக் கண்டு எனக்கு) 'அந்நியத் தமிழனான' என்னால் தமிழீழ விடுதலை இயக்கத்தைப் புரிந்து கொள்ளவே முடியாது என்றார். ஈழத்தமிழர்களின் நிலையைக் கண்டு வழியில் பத்து நொடிகள் நின்று அனுதாபம் தெரிவிக்கும் தமிழ்ச்சட்டை அணிந்தக் கோடிக்கணக்கான பாதசாரிகளில் ஒருவன் நான் என்றார். உண்மையென்றே தோன்றியது. என்னை மட்டுமே அப்படிச் சொல்கிறார் என்று மேலும் அசைபோட்ட போது புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் பலரையும் அதே வகையில் சேர்த்தது திடுக்கிட வைத்தது. "என்ன செய்வது? ரணங்களின் வடுக்கள் ரணத்தைப் போல் வலிப்பதில்லை" என்று அவர் சொன்னது சிந்திக்க வைத்தது. தேவியர் இல்லம் மற்றும் சிலரின் 'இலங்கைத் தமிழர் நிலை' பற்றியப் பதிவுகளைப் படிக்கும் பொழுது, எனக்கு நண்பரின் நினைவு வரும். தன்னலமற்றத் தலைவன் ஒருவன் தமிழினத்துக்கு கிடைக்கவில்லையே என்று வருந்தாமலிருக்க முடியவில்லை.
இலங்கைத் தமிழரோடு நில்லாமல் உள்ளூர் அரசியல் பற்றியும் காட்டமாக எழுதுகிறார். ஊழல், பதுக்கல் விவரங்களை அம்பலப்படுத்தி எழுதுகிறார். துணிச்சல்காரர். அனேகமாக எல்லாமே நீண்டக் கட்டுரைகள். ஆய்வும் விவர உணர்வும் புலப்படுவதால் ஒரே அமரலில் படிக்க முடிகிறது. உதாரணத்துக்கு இவர் எழுதிய அய்யாவுக்கு அடிவாங்கும் தமிழன் எழுதுவது இடுகை.
"கடந்து போன அனுபவங்களிலிருந்து பாடம் கற்றுத் தன்னை மாற்றிக் கொள்ளாதவர்கள், சபிக்கப்பட்ட வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து வாழ்கிறார்கள்" என்ற இவரது பதிவறிமுக வரிகள் என்னைக் கவர்ந்தவை.
    சத்ரியனை வலைப் பின்னூட்டங்களில் அடிக்கடி சந்தித்திருந்தாலும், சமீபத்தில் அதீதம் மின்னிதழில் இவர் எழுதிய ஆலிங்கனா கதை வழியாக இவர் தளத்தைத் தொடர்ந்து படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டேன். இத்தனை நாள் தவற விட்டிருக்கிறேனே என்ற ஆதங்கம் ஏற்பட்டது. கதை, கட்டுரை, (நிறைய) கவிதை என்று எழுதிக் கலக்குகிறார்.
சமீபத்தில் இவர் எழுதிய
    "கண் தானம் சிறந்தது தான் என்றாலும்
    என் கண்களைத் தானம் வழங்கும் அனுமதியை
    நீங்கள் அவளிடம் தான் கேட்க வேண்டும்"
என்ற வரிகளின் குறும்பையும் காதலையும் ரசிக்க முடிகிறது, இல்லையா?
இவரின் 2010 வருடப் படைப்புகளை ஒன்று விடாமல் படியுங்கள். இந்தக் கவிதைக்கு வரும் பொழுது இவருக்கு, மனதார வாயார, ஒரு 'ஜே!' போடுங்கள்.
    "காதல் தீ சுடும் என்றேன்.
    சுட்டாலும்
    'உன்னை தீண்டும் இன்பம்
    தோன்றுதடா' என்றாய்.
    இதோ
    பற்றி எரிகிறது பார் என்கிறேன்
    'பிடில் வாசி போடா' என்கிறாய்".
beautiful!
வித்தியாசமான கற்பனை என்று நான் கருதும் இன்னொரு கவிதை:காதல் குழந்தை.
    கவிதைக்காக ஒன்று, கலந்து எழுத ஒன்று என இரண்டு வலைப்பூக்களைத் தொடர்ந்து எழுதிவருகிறார் சுந்தர்ஜி.
'கைகள் அள்ளிய நீர்' வலைப்பூவைத் தொடர்ந்து படித்து வருகிறேன். இவருடைய எழுத்து இத்தகையது என்று வேலிகட்ட முடியவில்லை. இலக்கிய ஆழம். மழலையின் வெகுளி. இயலாமையின் சோகம். எழுச்சியின் தீவிரம். அறிவின் வீச்சு. அமைதியின் இதம். எது எப்போது தாக்கும் என்று சொல்லமுடியாத எழுத்தரக்கர்.
நான் சொல்வதைச் சரிபார்க்க, இவரது சமீப முயற்சியான தஷிணாயனம் படித்துப் பாருங்கள். தொடர் எதைப் பற்றியது என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை; ஒரு போதையுடன் ரசிக்க முடிகிறது என்பதை மட்டுமே காரணமாகக் கொண்டு படிக்கிறேன். இடையே ஓய்வெடுத்தத் தொடரை மீட்டது நன்று.
பலவகை இசை, புத்தகம், சங்க இலக்கியம், ஆன்மீகம் என்று அவ்வப்போது அறிமுகம் செய்கிறார். வலைப்பூவின் sidebar கவிதைகள் பல அருமை.
இவர் வலைப்பூவில் நிரந்தரமாக இருக்கும் தாடிக்காரர் யாரென்று தெரியாமல்.. சுந்தர்ஜியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். பிறகு இவருடைய பழைய இடுகைகளைத் தேடிப் படித்துத் தாடிக்காரருக்கும் இவருக்குமுண்டான பந்தம் பற்றி அறிந்து கொண்டேன்.
"வறண்டிருந்த ஏரிக்குள் இறங்குகிறேன். முதல் நாள் மிக நல்ல மழை பெய்திருக்கிறது. ஆங்காங்கே எருமைகள் தேங்கிக்கிடக்கும் நீரில் முதுகு தெரிய மூழ்கியபடி ஏதோ ரசானுபவத்தில் மயங்கிக்கிடக்கின்றன. அவற்றைச் சுற்றி மேலும் சில எருமைகள் புற்களை மேய்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு பாலே நடனக்காரியின் லாவகத்தோடு தயங்கும் கால்களோடு கண்ணைப் பறிக்கும் வெண் நாரைகள் அந்த எருமைகள் பின்னாலேயே நடக்கின்றன. எருமையின் குளம்பு ஈரமான மண்ணைக் கிளறியபடிச் செல்ல பின்னால் காத்திருக்கும் நாரைகள் அம்மண்ணிலிருந்து புழுக்களை லாவகமாக கொத்தித் தின்ன அப்படிப் போகிறதா கதை? என்று நாரைகளையும் கொக்குகளையும் ஆச்சரியத்துடன் கடந்தேன்."
யாத்ரா இடுகைகள் சுவையானவை. ஒரு wandererன் பார்வையில் profound philosophyஐக் கொண்டு வரும் எழுத்து. visualஆக நிறையக் கொண்டுவர முயல்வது unique.
    கதை, கவிதை, புத்தகம், பயணம் என்று ஒன்று விடாமல் தமிழிலக்கியச் சுவையை அளவாக ஒவ்வொரு இடுகையிலும் வழங்கும் எம்.ஏ.சுசீலாவின் வலைப்பூ, ஒரு இணைய வரம்.
வரும் இந்தியப் பயணத்தில் இவரின் 'அசடன்' மொழிபெயர்ப்பு நாவலை வாங்கிப் படிக்க வேண்டும். must be monumental. ஒரிஜினல் புத்தகச் சுருக்கத்தை (அதுவே நீளம்) கல்லூரியில் படித்திருக்கிறேன். வாங்கிப் படிக்க எண்ணியிருக்கும் இவரின் இன்னொரு புத்தகம் 'தேவந்தி'. தேவந்தி யாரென்று தெரியாமல் இருந்தேன். :)
"பெற்றுப் பல ஆண்டுக் காலமாகியும் மகனைப் பிரிய நேருகையில் பதட்டமும் பரிதவிப்பும் மேலிடப் பால்சுரக்கும் தாய்" போன்ற கம்பன் கற்பனையைப் படிக்கவும் புரிந்து கொள்ளவும் இவர் பதிவு ஒரு திறந்தப் புத்தகம். சிறந்தப் புத்தகம்.
"சஞ்சலமான சூழ்நிலையில் நாம் எதிர்கொண்ட சில காட்சிகளும், அனுபவங்களும் பின்னாளில் அசை போட்டுப் பார்க்கும்போது ஞாபகங்களின் சுகமான வருடல்களாகிவிடுவதைப் பார்த்தாயா" என்று சீதை ஊர்மிளையிடம் சொல்வதாக இவர் எழுதிய ஒரு சிறுகதையில் வருகிறது. இவருடைய தமிழின் சரளம் வரிக்கு மெருகேற்றுவதைப் பலமுறை கவனித்திருக்கிறேன். complex எண்ணங்களை எளிமையாக, அதே நேரம் கனமாக, எழுதும் திறமை..ஆளுமை... எதனால் இப்படி எழுத முடிகிறது என்று வியந்திருக்கிறேன். இவர் தமிழாசிரியர் என்பதாலா அல்லது தமிழ்க்காதலர் என்பதாலா?
இவர் மொழிபெயர்த்தச் சிறுகதைகளில் சமீபத்தில் என்னை மிகவும் பாதித்தது, குந்தியும் நிஷாதப் பெண்ணும்.
அவசியமெனில் சாடும் சமூகப்பார்வையும் இவருக்கு உண்டு. பிண அரசியலுக்கு நடுவே ஒரு மே தினம் என்ற இந்த இடுகையைப் பலமுறை படித்திருக்கிறேன். இவர் குறிப்பிடாவிடில் இது போன்ற சிவப்புக் கவிதைகளைப் படிக்க எனக்கு வாய்ப்பில்லை.
    இன்றைய shout outன் நாயகர் அரசூரான். வெடிச்சிரிப்பு நகைச்சுவையோடு நச்சென்று பதிவிட்ட நண்பர் அரசூரானுக்கு ஜே!
➤➤4. யாதும் சென்னை யாவரும் தமிழர்
மேலும் வாசிக்க...
இன்றைய ஸ்பெஷல்
அதீத கனவுகள்
ராகவன்
கண்ணன் பாட்டு
Consent to be......nothing!
கனவுகளின் காதலன்
ஈழத்து முற்றம்
hemikrish
    அதீத கனவுகள் (நடுவில் க் வருமா?) வலைப்பூவில் கதை, கவிதை, கட்டுரை என்று நிறைய எழுதியிருக்கிறார் ராதாகிருஷ்ணன். இவர் எழுதியிருக்கும் கட்டுரைகளில் கணிசமான அறிவியல் காணப்படுவது என்னை மிகவும் கவர்கிறது.
தமிழில் எழுத வருமென்றாலும் எண்ணத்தை சிலநேரம் மொழிபெயர்க்கத் திணறி, நான் சட்டென்று வசதியான ஆங்கிலத்துக்குத் தாவிவிடுவேன். இவர் நல்ல தமிழிலேயே சரளமாக எழுதுகிறார். உதாரண வரி: "ஈர்ப்பு விசையும், எதிர் விசையும் அதனால் உண்டாகும் சம விசையும் எண்ண விசைக்கு உட்பட்டதே".
பயமாக இருந்தால் சமாதானமடையுங்கள். மொத்த விசையும் சேர்த்துப் படிக்கும் பொழுது நன்றாகவே புரியும். எல்லா விசையும் இறைவனைத் தேடியறியும் முயற்சியில் சுபமாக முடிகிறது. பரம்பொருளே மெய்ஞானம் என்று நிச்சயமாக நம்புகிறார். சுவாரசியமாகவும் எழுதுகிறார். ராதாகிருஷ்ணன் என்ற பெயர் ரேட்ஸ் என்று செல்லமாக அழைக்கப்படுவதற்கும் மேற்சொன்ன சவாலங்கிடிக்கும் சம்பந்தம் உண்டு. படித்துப் பாருங்களேன்.
பின்னூட்டங்களைத் தனியாக சேமிக்க வேண்டும் என்று எனக்கும் தோன்றும். "சில நேரங்களில் அதிக சிரத்தை எடுத்து பின்னூட்டங்கள் நாம் எழுதுவோம். மட்டுறுத்தல் வைத்திருக்கும் வலைத்தளங்களில் அது பரிசீலனைக்கு உட்படாமல் போகலாம். நாம் பின்னூட்டம் எழுதிய இடுகை மறைந்து போகலாம். அவ்வாறான நேரங்களில் பின்னூட்டத்தை சேமித்து வைத்திருந்தால் நன்றாக இருக்குமே என தோன்றும்" என்று தொடங்கி ராதாகிருஷ்ணன் எழுதியிருக்கும் இந்தப் பதிவைப் படித்தபோது அசந்து போனேன். அட, நம்ம பிரச்சினை இவருக்கும் இருக்கும் போல என்றுத் தொடர்ந்து படித்தேன். தன்னுடையப் பின்னூட்டங்களைத் தொகுத்துப் பதிவாக எழுதத் தொடங்கியவர், ஏனோ தொடரவில்லை. தொடர விரும்புகிறேன்.
'கம்யூனிசமும் கருவாடும்' என்ற தலைப்பில் இவரது தொடர் கட்டுரையை மிகவும் ரசித்துப் படித்திருக்கிறேன். 'ஆண்டாளுக்குக் கல்யாணம்' கோதைநாச்சியாரைப் பற்றிய சுவாரசியமான கதை. எதிர்பார்க்க மாட்டீர்கள். இரண்டையும் தேடிப் பிடித்துப் படியுங்களேன்?
'நுனிப்புல்' என்ற இவரது தொடர்கதையை இந்த வருடம் படித்து முடிக்க வேண்டும்.
    "புன்னை இலைகளால் ஒரு படுக்கை தயார் செய்யும் கண்ணன்...
    அவன் அருகில் வரும் வேளையில், அவனை ஒதுக்கி, கீழே தள்ளிவிடும் ராதை!
    கண்ணன் உடம்பிலும் அடி, உள்ளத்திலும் அடியா??
    ஹைய்யோ! திடீரென்று, என்னவாயிற்று இந்த ராதைக்கு?"
படித்ததும் நானுந்தான் சொக்கிப் போனேன்.
எங்கேயோ எதையோ தேடிப் போகையில், பரவசப்படுத்தும் எழுத்துக்களில் சில சமயம் விழுந்திருக்கிறேன். 'கண்ணன் பாட்டு' வலைப்பூ அந்த வகை. கண்ணபிரான், ரவிசங்கர் (KRS), லலிதா மிட்டல், கவிநயா, குமரன், ஷைலஜா என்று நிறைய பேர் எழுதுகிறார்கள். எல்லோரும் சூரர்கள்.
கண்ணன் பாட்டு வலைப்பூவில் எல்லாமே.. ரைட்.. கண்ணன் பற்றிய பாடல்கள். அஷ்டபதியிலிருந்து சினிமாப் பாட்டு வரை பதிவெல்லாம் கண்ணன் மணம். சோர்ந்த நேரங்களில் தொலைந்து போன வலைப்பூக்களில் ஒன்று. படிக்கவும் இன்பம், கேட்கவும் இன்பம். நிறைய இசைப்பதிவுகள். கவனம்: ஒருமுறை இறங்கினால் அரைமணியாகும் மீள. ஓ! மறந்தே போனது. இந்தப் பதிவில் இருக்கும் படங்கள் - அற்புதம்.
எம்எல்வியின் குரலைக் கேட்க அவ்வப்போது இந்தப் பதிவுக்குப் போவேன். கண்ணன் மன நிலையைத் தங்கமே தங்கம் பாடலை எம்எல்வி பாடியிருப்பதைப் பதிவின் தயவில் தெரிந்து கொண்டேன். கேட்டுப் பாருங்களேன். lilting.
பாடலை (பத்து முறையாவது) கேட்பதுடன் கூடவே உரையையும் படித்து விடுங்கள். 'தங்கமே தங்கம்' என்று முண்டாசு யாரைக் குறிப்பிடுகிறார் என்பது ஒருபுறம் இருக்கட்டும். கண்ணன் மனநிலை அறிவது பற்றி கண்ணபிரான், KRS எழுதியிருப்பதைப் படிக்கும் ஒவ்வொரு முறையும் எங்கள் கிராம வீட்டில், திறந்தக் கதவுகளின் வழியே இளங்கோடையின் வெளிப்புறத்து மணங்கள் வீச, நடுஹால் ஊஞ்சலில் அமர்ந்து ஆடுவது போலிருக்கும். உங்களுக்கு உண்டாகும் அனுபவம் எப்படியிருக்கும்?
இந்த இடுகையில் இணைக்கப்பட்டிருக்கும் வீட்டு மாடி நடனம் விடியோவை ஒரு முறை பார்த்துவிடுங்கள். அதற்குப் பிறகு எத்தனை முறை பார்க்கிறீர்கள் என்பதைத் தனியாகக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். ஒலியை அடக்கினால் அதிகமாக ரசிக்க முடிகிறது. (நீங்களும் என்னைப் போல் எம்.எஸ் குரலை ரசிக்கமுடியாத அபூர்வ சீக்காமணியாக இருந்தால்)
புன்னை இலைகளால்... ஜெயதேவர் அஷ்டபதி காதலா காமமா? படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.
    காரசாரமான அரசியல் விவாதம் எனக்குப் பிடிக்கும். அரசியலை அரசியலாக எழுதுவது கலை. இணையத்தில் நிறைய அரசியல் பதிவுகள் இருந்தாலும், பெரும்பாலானவற்றில் தலையங்கப் பார்வை தென்படுவதில்லை. இலங்கைத் தமிழர், இந்திய அரசியல், அன்னா ஹசாரே, கூடங்குளம், கனிமொழி... அரசியலை மெல்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தாலும், புலம்பல் அல்லது காழ்ப்புணர்ச்சியில் எழுதுவது போலவே தோன்றுகிறது. கிருஷ்ணமூர்த்தி சாடுகிறார். சாடினாலும் தலையங்கப் பார்வை படிக்க வைக்கிறது. நான் விரும்பிப் படிக்கும் அரசியல் பதிவு 'Consent to be......nothing!'.
இவருடைய 'சன்டேன்னா மூணு' இடுகைகள் சுவாரசியமானவை. தேடிப்பிடித்துப் படியுங்களேன்? சமீபமாக சன்டே இடுகைகளைக் காணோம். ஏனென்று தெரியவில்லை.
இது இவரது வலைப்பூவில் நான் படித்த முதல் இடுகை என்று நினைக்கிறேன். அல்லது அடிக்கடி படித்த இடுகையாக இருக்கலாம். பொழுதைப் போக்க.....பொழுதுபோக்கு நாத்திகம்....!.
பொழுதுபோக்கு நாத்திகம் - எத்தனை insightful expression!. இந்தியாவின் பிரபல நாத்திகப் போலிகள் பொழுதுபோக்கு நாத்திகத்தைப் பேணியதால் நாத்திகம் வளரவேயில்லை என்று நினைக்கிறேன்.
    சிறுவயதில் 'காமிக்ஸ்' படிப்பது பெரும்பாலும் எல்லோருக்கும் பிடிக்கும். வளர்ந்த பின்னும் 'காமிக்ஸ்' பித்து.. ஆண்களுக்கு மட்டுமே அல்லது ஆண்களுக்கு அதிகம் என்று நினைக்கிறேன். 'இரும்புக்கை மாயாவி'யில் தொடங்கி முத்து காமிக்சின் எத்தனையோ தலைப்புகள் சேர்த்து வைத்திருந்தேன். ஆங்கில 'classics illustrated' காமிக் புத்தகங்கள் ஐம்பதாவது சேர்த்திருப்பேன். கல்கி கோகுலம் புத்தகங்களில் வந்த சித்திரக்கதைகள்.. கல்கியில் வந்த 'அம்புலிக்கு அப்பால்' என்ற சித்திரக்கதையை எத்தனை விரும்பினேன் என்று எழுத்தில் வடிக்க முடியாது. சென்னையை விட்டு விலகிச் சில வருடங்களானதும் வீட்டுக்கு வந்தால் அத்தனையும் காணோம்! வலியை இப்போதும் உணர முடிகிறது.
எதற்குப் புலம்புகிறேன் என்றால்.. இது போன்ற சோகப் புலம்பல்களுக்கிடையே ஒரு நாள் இணையத்தில் திடீரென்று கிடைத்த வலைப்பூ, கனவுகளின் காதலன். காமிக்சுக்காகவே தனியான வலைப்பூ! முதல்முறை படித்ததும் சிலிர்த்துப் போனேன்!
காமிக் புத்தகங்கள், சினிமா, கட்டுரைகள் என்று நிறைய எழுதுகிறார். 2009-10 காலக்கட்டத்தில் இவர் எழுதியிருக்கும் பதிவுகள் மிகவும் சுவாரசியமானவை. காமிக்ஸ் பற்றி சுவையாக, படிப்பவரின் ஆர்வம் குன்றாமல், எழுதுவது சுலபமே அல்ல. இவருடைய திறமை, ஆர்வம் மற்றும் உழைப்பைப் புரிந்து கொள்ள மலைக்காட்டின் மரணக்காற்று படித்துப் பாருங்கள்.
இவரது பலங்களை அறிய, இவரது சமீபப் பதிவான அமெரிக்கக் காட்டேரியைப் படித்துப் பாருங்கள். (காட்டேரிக்கும் எனக்கும் ஒரு இது..)
நான் கனவுகளின் காதலனின் காதலன்.
    வம்சிப் போட்டிக்கு முன்பே ராகவன் படைப்புகளைப் படித்திருந்தாலும், அதற்குப் பின் இன்னும் ஆழமாகப் படிக்கத் தொடங்கினேன் எனலாம். இலக்கியம் எனக்கு வராது. ஆனால் பிடிக்கும். இவருக்கு மூச்சு விடுவது போல இலக்கியம் எழுத வருகிறது. மனம் கனக்கும் நேரங்களில் சிலசமயம் மனம் கனக்கும் இவரது சிறுகதைகள் கவிதைகளைப் படிப்பேன். உதாரணத்துக்கு இந்தக் கவிதை:
    "ஊன்றுகோல் ஆணியில் தொங்கியது
    தாத்தா உத்தரத்தில் தொங்கிய பின்".
funny, how they repel! அரை மணி நேரம் இவரது இடுகைகளைப் படித்தால் கனத்த மனம் கனத்த மாதிரியும் இருக்கும், லேசானது போலவும் இருக்கும். இலக்கிய அத்வைதம்.
    "அந்த ஒற்றை வயலின்
    உடுத்தி களைத்த
    மெல்லிய பருத்தி புடவையில்
    சுற்றப்பட்டிருந்தது
    ஒரு குழந்தையை போல"
மிச்சக் கவிதையை அவரது வலைப்பூவில் படியுங்கள். கடைசி வரிகளின் அதிர்ச்சி பிரமிக்க வைக்கும். உத்தரவாதமாகச் சொல்வேன்.
பாத்திரங்களின் குணாதிசயங்களைப் படிப்பவர்கள் அறியச்செய்யும் உத்தி, இவரது சிறுகதை எழுத்திலிருந்து பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாகும். இந்தக் கதையைப் படித்துப் பாருங்கள். காற்றில் திறக்கும் கதவுகள்....
கொஞ்ச நாளாக ராகவன் எதுவும் எழுதவில்லை. மீண்டும் எழுத வேண்டும்.
    மீண்டும் எழுத வேண்டும் என விரும்பும் இன்னொரு பதிவர் hemikrish. அளவை விடத் தரம் அதிகம் காணப்படும் இடுகைகள் என்றாலும், கொஞ்ச நாளாக எதையும் காணோம்.
சோகம் தெரியும். உயிர் தெரியும்.
மனதின் ஆழத்தில் புதைந்திருக்கும் சோகத்தைச் சுரண்டி எடுக்கிறீர்கள்.. எடுக்கும் பொழுது நக இடுக்கில் கொஞ்சம் உயிரும் ஒட்டிக் கொண்டுவிட்டதே என்று கலங்கிச் சோகத்தை அங்கேயே உதறப் பதறுகிறீர்கள்.. இந்த அனுபவத்தை தருமளவுக்கு இவரால் எப்படி எழுத முடிகிறது என்று வியந்து மறுபடி சோகத்தைச் சுரண்டப் போகிறீர்கள். relax, hemikrish படிப்பதால் உண்டாகும் வலிப்போதை. அஷ்டே.
உதாரணத்துக்கு இந்தக் கவிதை:
    "சன்னல் சட்டங்களை பற்றியபடி பதிந்த விரல்கள்..
    சற்று மேல் இரு புள்ளியாய் சிறுத்த கண்கள்
    எப்பொழுதும் தென்படுகிறது அவ்வீட்டினில்...
    அக்கண்களின் ஏக்கங்கள் வாடைக் காற்றை கிழித்து நேர் கோடாய் நிறுத்தப்படுகிறது அவ்வீதியினில்..."
நிதானமான சுவாரசியமான தொடக்கம் என்று நினைத்து while you savor.. தொடரும் வரிகளில் சோக frappe.. பிறகு இப்படி முடித்து அசர வைக்கிறார்:
    "எப்பொழுதாவது அவ்வீதியின் வழியே நீங்கள் போக நேரிடலாம்...
    அவள் விடுத்த கனவுகளும் ஆசைகளும் வீதியில்தான் அலைகிறது..
    அதன் வாசத்தை நீங்கள் நுகர நேரிடலாம்...
    அதன் மீது மோதிட நேரிடலாம்...
    அவ்வாறெனில்...
    ஒரு கணம் அச்சன்னலை பார்த்துவிட்டுச் செல்லுங்கள்..."
'தினமொரு ராஜகுமாரன்' கவிதையை முழுமையாக அவரது வலைப்பூவில் படியுங்கள். முடிந்தால் அத்தனை இடுகைகளையும் படியுங்கள். 2009லிருந்து எழுதி வருகிறார். இதுவரை ஐம்பதுக்கும் குறைவாகவே எழுதியிருக்கிறார். ஒரு மணி நேரத்தில் அத்தனையும் படித்துவிடலாம் என்று நினைத்தால் நீங்கள் தூண்டிலில் சிக்கிய மீன்.
இவருடைய கவிதைகளில் நான் bookmark செய்த வரிகள்:
    "புள்ளியினுள் பயணித்து வரையப்படுகின்ற கோலத்தினில் விழுகிறது மழைத்துளி.. சலனப்பட்ட என் மனம் போல்...".
what an imagination! what a gift!
    ”அட ஒம் தம்பி் நான் உன்ணாணை தீர அயத்துப்போனனெடா, என்னடா இங்கை வீட்டுவேலையும் முத்தம் வாசல் கூட்டி ஆட்டுக்கு குழையும் வெட்டிபோட்டு அந்த இந்த வேலையெல்லாம் பாத்துக்கொண்டிருந்ததாலை தீர அயத்துப்போனனெடா தம்பி”
'அயத்துப் போவது' என்றால் என்னவென்று தெரியுமா? தெரியாவிட்டால் ஒன்றும் குறைந்துவிடாது, உண்மைதான். ஆனால் தெரிந்து கொண்டால் கிடைக்கும் மொழிச் சுகத்தை வார்த்தைகளில் வடிக்க இயலாதே? உதாரணத்துக்கு, கரவைக்குரல் எழுதிய இந்தப் பதிவைப் படித்துப் பாருங்கள்: தீர அயத்துப்போனன். ஸ்... அலோ! முத்தம்னதும் உடனே தாவிப் படிச்சீங்கன்னா தடுக்கி விழுவீங்க. கவனம்.
நான் மிகவும் விரும்பி அடிக்கடிப் படிக்கும் வலைப்பூ 'ஈழத்து முற்றம்'. இலங்கைத் தமிழ்ப் பொக்கிஷம். குழுமமாக எழுதுகிறார்கள். கதை கவிதை கட்டுரைகளில் இலங்கைத் தமிழ் கொஞ்சுகிறது. படித்தால் இலங்கையில் பேசப்படும் பல்வகைத் தமிழ் வழக்குகளை அறிந்து என்னைப் போலவே ஆச்சரியப்படுவீர்கள். ஈழத்து முற்றத்தில் நான் கற்றச் சொற்களை வைத்து ஒரு கதை எழுதி வருகிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
பேச்சு வழக்கு என்றில்லை.. நடை, உடை, உணவு, இசை, நூல் என்று பல பரிமாணங்களைத் தொட்டு எழுதியிருக்கிறார்கள் குழுமப் பதிவர்கள். சில நினைவுகள் மனதை மிகவும் நோகடிக்கின்றன.
'மாங்காய் சம்பல்' சாப்பிட்டிருக்கிறீர்களா? படிக்கையில் ஒரு வகைக் கார மாங்காய்ச் சட்டினியெனப் புரிந்தது. நாக்கில் ஈரமாகி ஒரு தீற்று சம்பல் யாராவது வைக்க மாட்டார்களா என்று தோன்றியது. செய்து பார்த்தேன். not bad. spicy, tangy and tasty. மறுமுறை தேங்காய் குறைத்துச் செய்து பார்த்தேன். much better. scotchக்கு உகந்தத் துணை. இட்லி தோசைக்கு உதவாது என்கிறார் பதிவர். தோதாகவே இருந்தது. modicum sour cream கலந்தத் தயிருடன் சம்பல் சாதம் பிசைந்து சாப்பிட்ட ஒரு மழைமதியம், சொர்க்கமானது. ஈழத்து முற்றத்தில் பாரம்பரியச் சம்பல் recipe கொடுத்தப் பதிவர் மணிமேகலாவை இந்த வாரம் தனியாக மீண்டும் சந்திப்போம்.
    ஒரு வாரத்துக்கு வலைச்சரம் பக்கமே வருவதில்லை என்று தீர்மானித்திருப்பீர்கள் என நினைத்தேன். திரும்பி வந்தத் துணிச்சலைப் பாராட்டுகிறேன். போகுமுன் இன்றைய shout outல் என்னுடன் இணைந்து குரல் கொடுத்துவிட்டுப் போங்கள். தையல்காரர் எனும் நுண்மையான சிறுகதையை எழுதி எம்மைச் சிலிர்க்கச் செய்த வித்யா சுப்ரமணியத்துக்கு ஜே!
➤➤3. தாயே வேலன்டைனம்மா
மேலும் வாசிக்க...
    முதல் கோணம் என்று சொல்ல வந்தேன். bleepin subconscious alert.
மூன்றாம் சுழியின் பெரும்பான்மையான படைப்புகள் சற்றே முதிர்ந்த வாசகருக்கானவை - கெட்ட வார்த்தைகள், நடத்தைகள்(?), செக்ஸ், தகாத உறவு, நாத்திகம், வன்முறை.. இவை அடிக்கடி வருவதனால்.
இனி நிறைய பேர் மூன்றாம் சுழி படிப்பார்கள் என்று தோன்றுகிறது.
மற்றபடி முதிர்ந்த அறிவுக்கும் எனக்கும் தொடர்பே இல்லை, அதான் பெயரிலே மூன்று சுழி:
    - பேய்க்கதைகள் விரும்பினால் இவற்றைப் படியுங்கள்: நாகூர் 2012, புகை, கோமதீ, பாலுவின் கோடை
    - விளிம்புக் கதைகளுக்கு: வருகை, பெரியவர் ஆசி, சுசுமோ, சாதல் மீறும், லிக
    - பலானக் கட்டுரைகளுக்கு: அதர்மு மாமா கதை, தமிழ்வேட்டி, முதலில் பெண் அடுத்தது காமம், இறையும் குறையும்
    - சுமாரானக் கவிதைகளுக்கு: புதுமைப்பெண், ட்டிக் ட்டிக் விதை, ஆறுதல், தடங்களுக்கு வருந்தவில்லை
நெஞ்சைத் தொடும் அருமையான இலக்கியம் பிடிக்குமென்றால், அடுத்த பிலாகில் தேடுங்கள்.
நகைச்சுவையாக எழுத வரவில்லை, படிக்கவாவது செய்வோம் என்று பெரும்பாலும் அடங்கிவிடுவேன். இருப்பினும், என்னுடைய நகைச்சுவை உணர்வின் முத்தாய்ப்பான அன்புமல்லி கேரக்டரை வைத்து நிறைய கதைகள் - அஞ்சற்க - என்றைக்காவது எழுத எண்ணியிருக்கிறேன். இதுவரை எழுதிய அன்புமல்லி கதைகள் சிலவற்றை மூன்றாம் சுழியில் படிக்கலாம். கதைகளைப் படித்துவிட்டு, பெரியசிவம் என்பவர் என்னை 'ஆகா ஓகோ' என்று புகழ்ந்துத் தள்ளியிருந்தார். கடைசி வரியில், 'இப்படிக்கு, உன்னுடைய மாமா' என்று எழுதாமல் விட்டிருக்கலாம். பெயரை மாற்றிக் கொண்டுப் பின்னூட்டமிட்டு என்ன பலன்?
நசிகேதன் கதையை வெண்பா வடிவில் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. நசிகேத வெண்பாவை வெண்பாவுக்காகப் படிக்காவிட்டாலும், பின்னூட்டங்களுக்காக நீங்கள் அவசியம் படிக்க வேண்டும்.
பட்டருக்கு மனமிரங்கி அபிராமி நிலவைக் காட்டியதாகக் கட்டியக் கதை பட்டரின் புகழ் பெருக உதவியது என்றாலும், தமிழ்ப்பாடல் என்ற முறையில் மிகவும் ரசிக்க வேண்டிய இறையிலக்கிய நூல் அபிராமி அந்தாதி. எத்தனையோ உச்ச விளக்கங்களுக்கு இடையில் என்னுடைய துச்ச விளக்கமும் இருந்துவிட்டுப் போகட்டும் என்றுத் தமிழ்ப்பார்வையுடன், கிளைக்கதைகள் சேர்த்து எழுதினேன். என்னுடைய விளக்கம் முக்கியமில்லை. அபிராமி அந்தாதி பாடல்களைப் பாடிய என் அம்மாவின் இனிமையான, கம்பீரமானக் குரலைப் பலரும் கேட்க ஒரு வாய்ப்பாக இருக்கட்டும் என்று ஒலிப்பதிவு செய்து சேர்த்ததே, பதிவுக்குக் கிட்டியப் பரவலான வரவேற்புக்குக் காரணம். நேரம் கிடைக்கும் பொழுது அவசியம் கேளுங்கள், படியுங்கள்.
சூடாமுடி என்று ஒரு சரித்திரத் தொடர் எழுதத் தொடங்கினேன். தமிழக வரலாற்றில் மறந்து போன, அல்லது அதிகம் எழுதப்படாத, காலக்கட்டம் மற்றும் நிகழ்வுகளை ஒட்டியக் கற்பனைக் கதை. இப்போதைக்கு இனர்ஷ்யா.
இதற்குமேல் என்னைப் பற்றி எழுதினால் நானே என்னை அடிக்க வரலாம்.
    பதிவெழுதுவது சிரமம். தொடர்ந்து எழுதுவது இன்னும் சிரமம். தொடர்ந்து சுவையாக எழுதுவது மிகச் சிரமம். தொடர்ந்து சுவையாகப் பல வருடங்கள் எழுதுவது, சிரமத்தின் உச்சம். வலைச்சரத்தில் நான் கொஞ்ச நினைக்கும் பதிவுகளுக்கு அறிமுகமே தேவையில்லை. சிரமத்தின் உச்சத்திலிருந்து வருடக்கணக்காக எழுதப்படுபவை. நான் (அவ்வப்போது) படித்து ரசித்துப் பொறாமைப்படுபவை. full disclosure.. இப்பதிவுகளைப் பற்றி எழுதும் சாக்கில் என் எழுத்தை இங்கே அறிமுகம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்பதை உணர்கிறேன். இப்பதிவுகளில் ஒன்றிரண்டை யாராவது இதுவரை அறியாதிருந்து, அறிமுகமாக அமைந்துவிட்டால் அது பெரிய நிறைவாகும் (நப்பாசை எனக்கு வைடமின் போல).
பதிவுகளை இப்பொழுதே குறிப்பிட்டு விடுகிறேன்.
hold on. அதற்கு முன் இவர்களுக்கு ஒரு shout out: சளைக்காமல் எழுதிவரும் வல்லிசிம்ஹன், துளசி கோபால், இராஜராஜேஸ்வரி, கீதா சாம்பசிவம். ஜே! ஜே! ஜே! இவர்களில் ஒருவர் 2004லிருந்து எழுதி வருகிறார் (2004! அப்பல்லாம் பிலாகர் இருந்துச்சா என்ன?). ஒருவர் தினமொரு பதிவு எழுதுகிறார் - seldom fails (எங்கிருந்து தான் விஷயம் கிடைக்குதோ!). ஒருவர் நாலைந்து பதிவுகள் போதாதென்று சமூகத் தளங்களிலும் எழுதுகிறார் (நடுவே ஊரை விட்டு ஓடினாலும்). ஒருவர் புகைப்படங்கள் நினைவுகள் என்று கலந்து எழுதுகிறார் (நெகிழ்ச்சி மொத்தமாகவும் சில்லறையாகவும் கிடைக்கிறது இவர் பதிவுகளில்). மறுபடி ஜே!
back to blogroll. கீழ்க்கண்டப் பதிவுகளை, புதிதாக ஏதும் தென்படாவிடினும், நேரம் கிடைக்கும் பொழுது ஒரு விசிட் அடித்து விடுங்கள். என்னைக் கவர்ந்தக் காரணங்களை வரும் நாட்களில் விவரிக்கிறேன். ஒத்துப் போகிறதா பாருங்கள், போகவில்லையா, பெயரை மாற்றிக்கொண்டு உங்கள் கன்னாபின்னா, அதாவது, கருத்தை எழுதி அவர்கள் பதிவில் பின்னூட்டமிடுங்கள். கடைசி வரியில் கவனமாக இருங்கள்.
மெட்ராஸ் தமிழன்
எழுத்துப் பிழை
கண்ணன் பாட்டு
DISPASSIONATED DJ
கைகள் அள்ளிய நீர்
            அதீத கனவுகள்
            மரகதம்
            நித்திலம்
            கண்ணனுக்காக
            அன்பே சிவம்
            hemikrish
            உயிரோடை
                    எங்கள் Blog
                    எம்.ஏ.சுசீலா
                    மனவிழி
                    உப்புமடச் சந்தி
                    ஈழத்து முற்றம்
                    மனதோடு மட்டும்
                    கனவுகளின் காதலன்
            kashyapan
            வேல் கண்ணன்
            யவ்வனம்
            ராகவன்
            சிவகுமாரன் கவிதைகள்
            கே.பி.ஜனா...
            அகரம் அமுதா
Consent to be......nothing!
தமிழ் உதயம்
சித்தர்கள் இராச்சியம்
தேவியர் இல்லம்
உள்ளக் கமலம்
டங்கு டிங்கு டு
➤➤2. சம்பல் வம்பு
மேலும் வாசிக்க...