07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 22, 2012

குயில் பாட்டு
இறைவன் 
உதிர்த்த ஒருதுளி  கருணை 
''ஈரம்''
ம(பெ)ண்ணில் 

 ..ம்மா 
என்று அழுத்தி சொல்லிப்பாருங்கள் 
ஈரம் உள்ள நெஞ்சின் சுரக்கும் 
கண்ணீர் 

கருசுமந்து 
உயிரூட்டி 
இறை காட்டி 
வழிகாட்டி 
வாழ்வுடுத்தும் 
மென்மை மேண்மை பெண்மையை 
போற்றி பெருமைப் படுத்துவோம் 

பாழ்
சடங்கு சிறைக்குள் 
இன்னும் அடிமையாய் துகில்கொள்ளும் 
பெண்கள் 

பெண்ணே....
நீ ''எழு''
சுடும் அனல் வரிகளில் 
புயலாய் புறப்பட்ட 
கவி புதுமைப்பெண்கள் 

பெண் 
சமூகத்தை தட்டி எழுப்பிய 
அடிமையை உணர்த்தி 
உரிமைக்கு கவிக் குரல்கொடுத்த 
கவிக்குயில்கள் 


நான் 
மௌனமாய் வாசித்த  வாசிக்கும் 
கவி நாதர்கள் ஒரு 
வெறும் பதிவை (மலரை)  அல்ல 
தமிழ் நறுமணம் வீசும் 
பூந் தோட்டத்திற்கான 
வழிவீதி

வலையில் 
கவி வரிகளால் 
நம் சிந்தனையயும் வழிப் புருவத்தையும் 
உயர்த்துகிறார்கள் 
இந்த கவிக் குயில்கள் 

இந்த  
குயில்களின் இசைப்பில் 
நயமாய் இசைக்கிறது 
பெண் 
உரிமையும் 
உணர்வும் 


தேன் கவிதையும் 
நல் சிந்தனைகளும் 
சும்மா சொல்லி செல்கிறார் கவிதாயினி  தேனம்மை லஷ்மன் மெய்யின் 
அனல் சொல்லால் 
சொற்சித்திரங்கள் தீட்டுகிறார் தோழி லதா ராணி 

வெளித்த 
வானத்தில் ஆழ் உணர்வுகளை 
சிறகடிக்க செய்கிறார் தோழி ஹேமா 

சகோ 
சிந்தனை அலசலில் 
நீரோடையில் 
தெளிந்து ஓடுகிறது கவிதை நீர் 

தன் 
வலைத் தலைப்பில் மட்டுமல்ல 
உயிர்த்தேழுப்பும் எழுத்திலும் உணர்வின் 
புதுமை சொல்கிறார் தோழி மு .சரளா 

ஆழமான 
உணர்வுகளை வரிகளில் 
இதமாய் இசைக்கிறார் தோழி கீதமஞ்சரி 

உணர்வின் 
அடி நாளத்தின் துடிப்பை 
தான் இயற்றும் வரிகளில் செருகுகிறார் தோழி ரேவா 

எழுத்தில் 
கயவ சமூகத்திற்கான 
புரட்சியின் அனல் வேட்கையுமாய் தோழி மாலதி 

காதல் 
சுகங்கள் சுமைகள் 
வாசிப்பில் அகம் இளகும்
இதமான கவிதை படைக்கிறார் தோழி பிரஷா 

நாளை 
வருகிறார்கள் 
நவ ''காளிதாசர்கள்'' 

ம்(:

23 comments:

 1. பெண்மைக்கு முபலிடம்
  நன்று மிகமிக நன்று!  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 2. பெண்மைக்கு முதலிடம் தந்து வலைச்சர பணியை துவக்கியமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே ..!

  அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்து பெண் பதிவர்களும் அருமையான கவிஞர்கள் ..!

  ReplyDelete
 3. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள். என்னை அறிமுகப்படுத்தியமைக்கும், வலைத்தளத்தைப் படித்துப் பின்னூட்டமிட்டு ஊக்குவிப்பதற்கும், விருது கொடுத்தமைக்கும் நன்றி செய்தாலி.:) வாழ்க வளமுடன்.

  ReplyDelete
 4. சிறிது வித்தியாசமாக அறிமுகங்கள், பெண்மையோடு.அத்தனை அறிமுவாளர்களிற்கும் தங்களிற்கும் நல்வாழ்த்து. கவி வரிகளும் இதமாக உள்ளன வாழ்த்து. அன்புடன்
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 5. மு.சரளா அவர்களின் கவிதைகள் என்றால் எனக்கு திருநெல்வேலி அல்வா போல. அறிமுகம் செய்ததற்கு நன்றி. ஹேமா அவர்களின் கவிதைகளையும் படித்து ரசித்ததுண்டு. மற்றவர்களை படித்துப் பார்க்கிறேன். அறிமுகம் பெற்ற அனைவருக்கும என் நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. பெண்சக்தியோடு வலைச்சரப்பதிவை தொடங்கியிருக்கும் சகோதரருக்கு வாழ்த்துகளோடு நன்றி கலந்த வணக்கங்களும்....

  என்னையும் பிற சகோதரிகளின் கனல் தெரிக்கும் கவிகளை சுட்டிக்காட்டியமைக்கும் மிக்க நன்றி....

  சகோ இனி வரும் பதிவுகளில் நீங்கள் விரும்பிய பதிவர்களின் சுட்டி மட்டும் கொடுக்காமல், எந்த பதிவுகள் தங்கள் ரசித்தது பாதித்தது என்றும் சுட்டிக்காட்டினால் திருத்தல்களுக்கும், முன்னேறுதலுக்கும் வசதியாய் இருக்குமென்பது என் எண்ணம் சபையில் சொல்லியதில் தவறு இருந்தால் மன்னிக்கவும் :)

  ReplyDelete
 7. ஆரம்பமே அட்டகாசமகா இருக்கு நண்பா அசத்துங்கள்

  வாழ்த்துக்கள் தொடருங்கள்

  ReplyDelete
 8. நன்றி செய்தாலி வார்த்தைகளை உள்வாங்கி பிரசவிக்க உங்களால் மட்டும் முடிகிறது உங்களின் கருத்துக்கள் எங்களின் கவிதையின் கருக்கள் ...தொடர்ந்து வரும் நாட்களில் வசந்தங்களை வீசி செல்லுங்கள்

  ReplyDelete
 9. நன்றி தோழரே.முதல்நாளின் தேடுதல்கள் பெண்களிடமிருந்து தொடங்கியிருக்கிறீர்கள்.அதற்குள் நானும்.மிக்க மகிழ்ச்சி.நன்றி !

  ReplyDelete
 10. வலைச்சரத்தின் ஆசிரியராய் என் சேக்காளி... மனம் உவக்கிறேன். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் இதுவென எண்ணி மகிழ்கிறேன். இன்றைய அறிமுகங்களில் மிகச்சிலரை மட்டுமே இதுவரை நான் அறிந்திருந்தேன்... ஏனையோரை இப்போது அறியத் துவங்குகிறேன்...

  அரிய பணியில் சீரிய அறிமுகங்கள்.
  பெருமிதத்தோடு தொடருங்கள்... வாழ்த்துகள் சேக்காளி.
  நவ'காளிதாசர்களுக்காக' காத்திருக்கிறேன்.

  ReplyDelete
 11. அருமையான கவிஞர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஹேமா போன்றவர்களை அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 12. குயில்களின் குரல்களை வரிகளில் வார்த்து வைத்திருக்கும் அவர்களின் வலை(பக்கங்)களை தொகுத்து பகிர்ந்திருக்கும் விதம் அழகு நண்பா.

  ReplyDelete
 13. @புலவர் சா இராமாநுசம்

  மிக்க நன்றி ஐயா


  @வரலாற்று சுவடுகள்

  மிக்க நன்றி நண்பரே

  @Thenammai Lakshmanan

  உங்கள் வாழ்த்தில் அகம் மகிழ்ந்தேன் கவிதாயினி

  @kovaikkavi

  மிக்க நன்றி தோழி

  @நிரஞ்சனா

  அப்படியா ..ம்(:
  மிக்க மகிழ்ச்சி நன்றி தோழி

  @ரேவா

  விருப்ப பதிவுகள் தலைப்பில்
  வாசித்து ரசித்த கவிதைகளை அறிமுகம் செய்கிறேன் சகோ

  நலத்தை சொன்னதில்
  மன்னிப்புக்கு இடம் ஏது...

  மிக்க நன்றி சகோ

  @மனசாட்சி™

  மிக்க நன்றி நண்பா

  @கோவை மு.சரளா

  வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழி

  @ஹேமா

  மிக்க நன்றி தோழி

  @சிசு

  வாங்க சேக்காளி
  கருத்தில் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள்

  @chicha.in

  மிக்க நன்றி தோழி

  @விச்சு

  மிக்க நன்றி தோழரே  @AROUNA SELVAME

  மிக்க நன்றி தோழரே

  ReplyDelete
 14. நல்ல அறிமுகங்கள் . அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 15. வருக வருக
  கவித் தென்றலே...
  தங்களின் வலைச்சரப்பணி
  சிறந்து விளங்க
  என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  இனிய மனங்கவர்ந்த கவிதாயினிகளை
  அடையாளம் காட்டி இருக்கிறீர்கள்...
  வாழ்த்துக்களும் நன்றிகளும்...

  ReplyDelete
 16. அறிவாளி கவிப் பதிவர்களுடன் என்னையும் இணைத்தமைக்கு மிக்க நன்றி சகோ. அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்..

  ReplyDelete
 17. @சத்ரியன்

  மிக்க நன்றி நண்பா

  @Lakshmi

  மிக்க நன்றி அம்மா

  @மகேந்திரன்

  வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழரே

  @அன்புடன் மலிக்கா

  மிக்க நன்றி சகோ

  ReplyDelete
 18. ஆரம்பமே அசத்தல் சார் ! தொடருங்கள் !

  ReplyDelete
 19. அருமையான அறிமுகங்கள் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள். என்னை அறிமுகப்படுத்தியமைக்கும், வலைத்தளத்தைப் படித்துப் வலைச்சரப்பணி
  சிறந்து விளங்க
  என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 21. குயில் பாட்டில் கீதமஞ்சரிக்கும் ஒரு இடம் வழங்கிப் பெருமைப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி செய்தாலி. அறிமுகப்படுத்தப்பட்ட அனைத்துக் குயில் பாட்டுகளும் வாசிக்க இதம். அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது