07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label குயில் பாட்டு. Show all posts
Showing posts with label குயில் பாட்டு. Show all posts

Tuesday, May 22, 2012

குயில் பாட்டு




இறைவன் 
உதிர்த்த ஒருதுளி  கருணை 
''ஈரம்''
ம(பெ)ண்ணில் 

 ..ம்மா 
என்று அழுத்தி சொல்லிப்பாருங்கள் 
ஈரம் உள்ள நெஞ்சின் சுரக்கும் 
கண்ணீர் 

கருசுமந்து 
உயிரூட்டி 
இறை காட்டி 
வழிகாட்டி 
வாழ்வுடுத்தும் 
மென்மை மேண்மை பெண்மையை 
போற்றி பெருமைப் படுத்துவோம் 

பாழ்
சடங்கு சிறைக்குள் 
இன்னும் அடிமையாய் துகில்கொள்ளும் 
பெண்கள் 

பெண்ணே....
நீ ''எழு''
சுடும் அனல் வரிகளில் 
புயலாய் புறப்பட்ட 
கவி புதுமைப்பெண்கள் 

பெண் 
சமூகத்தை தட்டி எழுப்பிய 
அடிமையை உணர்த்தி 
உரிமைக்கு கவிக் குரல்கொடுத்த 
கவிக்குயில்கள் 


நான் 
மௌனமாய் வாசித்த  வாசிக்கும் 
கவி நாதர்கள் 



ஒரு 
வெறும் பதிவை (மலரை)  அல்ல 
தமிழ் நறுமணம் வீசும் 
பூந் தோட்டத்திற்கான 
வழிவீதி

வலையில் 
கவி வரிகளால் 
நம் சிந்தனையயும் வழிப் புருவத்தையும் 
உயர்த்துகிறார்கள் 
இந்த கவிக் குயில்கள் 

இந்த  
குயில்களின் இசைப்பில் 
நயமாய் இசைக்கிறது 
பெண் 
உரிமையும் 
உணர்வும் 


தேன் கவிதையும் 
நல் சிந்தனைகளும் 
சும்மா சொல்லி செல்கிறார் கவிதாயினி  தேனம்மை லஷ்மன் 



மெய்யின் 
அனல் சொல்லால் 
சொற்சித்திரங்கள் தீட்டுகிறார் தோழி லதா ராணி 

வெளித்த 
வானத்தில் ஆழ் உணர்வுகளை 
சிறகடிக்க செய்கிறார் தோழி ஹேமா 

சகோ 
சிந்தனை அலசலில் 
நீரோடையில் 
தெளிந்து ஓடுகிறது கவிதை நீர் 

தன் 
வலைத் தலைப்பில் மட்டுமல்ல 
உயிர்த்தேழுப்பும் எழுத்திலும் உணர்வின் 
புதுமை சொல்கிறார் தோழி மு .சரளா 

ஆழமான 
உணர்வுகளை வரிகளில் 
இதமாய் இசைக்கிறார் தோழி கீதமஞ்சரி 

உணர்வின் 
அடி நாளத்தின் துடிப்பை 
தான் இயற்றும் வரிகளில் செருகுகிறார் தோழி ரேவா 

எழுத்தில் 
கயவ சமூகத்திற்கான 
புரட்சியின் அனல் வேட்கையுமாய் தோழி மாலதி 

காதல் 
சுகங்கள் சுமைகள் 
வாசிப்பில் அகம் இளகும்
இதமான கவிதை படைக்கிறார் தோழி பிரஷா 

நாளை 
வருகிறார்கள் 
நவ ''காளிதாசர்கள்'' 

ம்(:

மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது