07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 16, 2012

பொன்னும் புதனும் ...!

புதன் சூரிய குடும்பத்தின் மிகச் சிறிய கோள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது பழமொழியை தனதாக்கி ...இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.


வெள்ளி சூரியன் உதயத்திற்கு முன்னும் அஸ்தமனத்திற்குப் பின்னும் பிரகாசித்து ..காலை மாலை நட்சத்திரமென இரண்டு பெயர்களில் வலம்வரும் .

பூமி உயரினங்களின் உறைவிடம் ,இயற்கை படுத்திருக்கும் பூஞ்சோலை , கடல் அலை நடனமாடும் புண்ணிய பூமி ....


செவ்வாய் இரண்டு நிலவுகளைக் கொண்டு பூமியில் உயரினங்கள் நீரில் தான் தோன்றின என நம்பவைக்கும் ஆதாரங்களுடன் .


வியாழன் வாயுக்கள் திரண்ட கோளம்.  திடப்பொருளற்ற திரவ வடிவில் தளங்கள் .இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும்.


சனி சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை.
சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள்.


 யுரேனசு விட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும் யுரேனசு ஒரு பெரிய வாயுக்கோளம் ஆகும். இதன் வளிமண்டலத்தில் ஹைட்ரஜன், ஹுலியம், மீத்தேன் போன்ற வாயுக்கள் உள்ளன. இதன் வெப்பநிலை -197 டிகிரி செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 84 புவி ஆண்டுகள் ஆகும். இது தன்னைத் தானே சுற்றி வர ஆகும் காலம் 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் யுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும்.


நெப்டியூன் சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோளாகும். விட்டத்தின் அடிப்படையில் சூரியக்குடும்பத்தில் இது நான்காவது பெரிய கோளாகும்.


செரசு (குறுங்கோள்) எட்டாவது கோலாகிய இதற்கு செரசு எனும் ரோமானிய பெண்கடவுளின் பெயர் தான் இந்த குருங்கோளுக்கு சூட்டப்பட்டுளது.

புளூட்டோ சாரோன் ஒரு பெரிய நிலாவும் இரு சிறிய நிலாக்களும் உள்ளன.

ஏரிஸ்  இது சூரியனின் சுற்று வட்டத்தில் உள்ள 9வது பெரிய பொருள் ஆகும். 2,500 கிலோ மீட்டர் விட்டமும் புளூட்டோவை விட 27% அதிக திணிவையும் கொண்டது.

துணைக் கோள்
நிலா நிலவு ,அம்புலி ,சந்திரன் , முழுநிலா,பிறை நிலா எனவும் ,பெண்களை ஒப்புவமை செய்யவும்  அமாவாசை அன்று காணாமல் போகவும் , இயல்பாய் கோள் என்று கருதமுடியாத சிறிய அளவிலானவை .

ஒன்றைச் சுற்றி மற்றொன்று சுழல,
வாழ்வில் வாழ்வியலை விதிஎன்போம்.
ஒன்பது கோள்  வழிகாட்டியாரென்று,
புரியாமல் அறியாமல் சுழல்கின்ற,
விந்தையைக் காண்கின்றோம் ...
ஜாதகமும் கணக்குகளுமிதன் நிழலாய் ,
வாழ்வியலும் இதிலுண்டு பாடமாய்.
எங்கோஒரு புள்ளியாய் நாமிருந்து,
ஓர் கோடி நாம் இருந்து பார்க்கின்றோம் .
பேசுகின்றோம்   எழுதுகின்றோம்  எதேதோ ...
நல்லது நடப்பதற்கு
நாம் பாடும் பாட்டெல்லாம்
கதவைத் திறக்க வேண்டும்
அதுவரைப் பாடிடுவோம் .
ஒரு கோடு தனக்கமைத்து
சுழன்றாடும் கோலங்கள்
நமக்கு வழிகாட்டி
அதைப்பற்றி வாழ்ந்திடுவோம்
மலராய் மலர்ந்திடுவோம்
மணம் வீசி கவிதை செய்வோம் !


கோள்கள் ஒன்பது பார்த்தோம் இனி பதிவுலகில் நான் ரசித்த ,சிரித்த ,சிந்திக்க வைத்த பதிவுகளைப் பார்ப்போம் .

வாய் விட்டு சிரிச்ச நோய் விட்டுப் போகும்னு சொல்றாங்க . ஆனால் இங்க ராஜேஷ் நீ ஏன் சிரிச்ச? என்று கேட்கிறார் வாங்க என்னவென்று கேட்போம் .

படம் பார்த்து கதை சொல் என்று தானே சொல்வாங்க இங்க ரமேஷ் படம் பார்த்தே சிரிக்க வைக்கிறார் வாங்க போவோம் .

நல்லதே நினைங்கன்னு சொல்லித்தராங்க சந்தனமுல்லை அப்படி என்ன நல்லது என்று கேட்போம் வாங்க .

மனிதனில் மனிதத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.., ஓய்வு கிடைக்கும் நேரங்களிலெல்லாம் எதையாவது கிறுக்கிக் கொண்டிருக்கிறேன் வாசிக்க நீங்கள் இருப்பதால் ..!  வரலாற்று சுவடுகள் அறிமுகமே அழகா இருக்கு அப்போ அவரோட பதிவுகள் வாங்க பார்ப்போம் .


கொஞ்சம் ‘ஹி... ஹி...ங்க...!’ அது என்ன ஹி...ஹி என்று கேட்டால், பயங்கர படிப்பாளி என்பது இவரது படைப்புகளைப் பார்த்தாலே புரியும்.  மின்னல் இல்ல அவங்க, அதனால சிரிங்க என்பதைக்கூட ஹி ஹி ..என்று தான் சொல்வாராம் நம்ம கணேஷ் .

சும்மா இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமாங்க . அப்படி சும்மா இருக்கிறவங்களை எல்லாம் தன் வலைப் பக்கம் அழைக்கும் நம்ம ராஜி .சிலர் இருக்காங்க நாம சொல்றதுக்கு நேர்மாறா தான் செய்வாங்க அப்படிப் பட்ட மனிதர்களுக்கும் டிப்ஸ் கொடுக்கிறார் இன்றைய வானம் .

சரளமா வர சத்ரியன் எழுத்து நடையில் வந்த கதைய படிச்சா கண் கலங்க தாங்க செய்யுது கர்சீப்போட வாங்க .

அந்தி மாலை நேரம் நல்ல பசுமையான இடத்தை விரும்பாதவர் உண்டா? அப்படி பசுமையா காட்சி தர தாவரங்கள பத்தி சொல்றார் அந்தி மாலை .

உழைப்பின் உயர்வை உன்னத வரிகளால் எடுத்துரைக்கிறார் அன்புச் சகோதரர் செய்தாலி.

உழைக்காம பிழைத்திடவே
உலகம் விரும்புதப்பா!
உழைத்து வாழ்பவரை
பிழைக்கத் தெரியாதவன்னு
பேர்வைச்சு சிரிக்குதப்பா! இந்த கால சூழலை அழகாக படம் பிடித்துக் காட்டுகிறார் காரஞ்சன்(சேஷ்) .


பணம் என்னடா பணம் பணம் என்று பாடத்தூண்டும் சீனியின் சிந்தை முழுக்க சமூகம் சார்ந்த அக்கறை இருப்பதை அவர் வரிகளில் காணலாம் .

பொன்னும் புதனும் பார்த்த சந்தோஷத்தில்  நாளை வர மறந்துட போறீங்க .... தென்றலை மீண்டும் மீண்டும் வரவேற்க நீங்க எல்லாரும் வரணும் சரியா நாளை சந்திப்போம் .

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

30 comments:

 1. கிரகங்கள் கோளுடன் மிக நல்ல விளக்கம். பின்னர் அறிமுகங்கள் . மிக நல்ல தொகுப்பு சகோதரி மிக நல்ல கடின உழைப்பு - தெரிகிறது. தங்களிற்கும், தங்கள் கடின உழைப்பிற்கும், இங்கு அறிமுக வரிசைகளிற்கும் நல்வாழ்த்து. மேலும் ஆவலுடன்...
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 2. ஒன்பது கிரகங்களையும் சுற்றிக் காட்டி படங்களால பிரமிக்க வெச்சதோட நிக்காம நகைச்சுவை ததும்பும் பதிவுகளை அறிமுகம் தந்தும் அசத்திட்டீங்கக்கா... மிகமிக ரசித்த இன்னுமொரு வலைச்சரப் பதிவு. சூப்பர்.

  ReplyDelete
 3. ஒன்பது கிரகங்களைப் பற்றிய விஷயங்களை விட படங்கள் ஆச்சரியம் தந்தன தென்றல். என் பதிவை நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகமிக மகிழ்வு தந்தது. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றியும் அறிமுகம் பெற்ற அனைவருக்கும நல்வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 4. kovaikkavi ...
  நல்வாழ்த்துக்களுடன் வாழ்த்துகூற வந்த சகோதரிக்கு . எனது மனமார்ந்த நன்றி .

  ReplyDelete
 5. நிரஞ்சனா ...
  இப்படியே ரசித்து பின்னூட்டமிட்டு என்னை தூங்கவிடாம விரட்டுவதில் என்ன ஒரு சந்தோசம் என் தங்கைக்கு ...ம்ம் நடக்கட்டும் . நன்றி சகோ .

  ReplyDelete
 6. கணேஷ்....
  பதிவுலகமே ஒரு மொய் விருந்தென்று வசந்தமண்டபம் மகேந்திரன் அண்ணா சொன்னதாக நினைவு அப்படி இருக்க நன்றி வேறு எதற்கு ...

  ReplyDelete
 7. ஒவ்வொருவரும் தங்களது பிளாக்குகளில் பதிவிடத்தான் இவ்வளவு உழைப்பார்கள், ஆனால் தாங்கள் இங்கு இவ்வளவு உழைப்பை காட்டுவது பிரமிக்க வைக்கிறது, அடுத்து பொறுப்பேற்க வரும் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் கடுமையான சவால் காத்திருக்கிறது ..!

  ஹி ஹி ஹி நல்லவேளை நாம எல்லோரும் புதன் கிரகத்தில இல்லாம போயிட்டோம். அங்க இருந்திருந்தா இப்போ எனக்கு வயசு 108. அவ்வ்வ் ..!

  ReplyDelete
 8. sako!

  malaikalukkidaiye-
  kilai naanumaa!?

  pakirntha ungalukku mikkka nantri!

  ReplyDelete
 9. அருமையான அறிமுகங்கள் .. வாழ்த்துகள் .. தொடர்ந்து கலக்குங்கள்

  ReplyDelete
 10. மிக்க நன்றி அக்கா எனது பதிவையும் அறிமுகப்படுத்தியதற்கு ..!

  ///////படம் பார்த்து கதை சொல் என்று தானே சொல்வாங்க இங்க ரமேஷ் படம் பார்த்தே சிரிக்க வைக்கிறார் வாங்க போவோம்///

  இதிலுள்ள இணைப்பை சோதனை செய்யவும் ..!

  ReplyDelete
 11. நிஜமாவே எனக்கு கோள்களை வரிசைப்படுத்தி சொல்ல தெரியாது. கோள்களுடன் பல புதிய நன்பர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி

  ReplyDelete
 12. அறிவியல் தகவல்களுடன் அழகான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 13. வித்தியாச மான அறிமுக்ம்!நன்று!

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete
 14. கதம்பப் பதிவாளர்களா இன்று.கோள்கள் பற்றி மீண்டும் ஞாபகப் படுத்திட்டீங்க சசி.பள்ளி ஞாபகமும் வருது !

  ReplyDelete
 15. அண்ட
  வெளிக் கோள்களும்
  அழகிய கவிதையும்
  தோழமை அறிமுகங்களும்
  அழகு ம்ம்ம் ......அருமை

  என் இனிய மார்க்கம் வலைத்தளத்தின் பதிவை
  தென்றலில் வருடலில் ஒளிரக் கண்டேன் மகிழ்ச்சி
  மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 16. பதிவர்களை அறிமுகப்படுத்தும்போதே,புதிய தகவல்களை வித்தியாசமாய் தந்து பிரமிக்க வைத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 17. கோள்களைப்பற்றிய தகவல்களுடன் நல்ல வலைப்பூக்களையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். தகவல்களுக்கேற்ற படங்களும் அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள்.

  ReplyDelete
 18. ம்..அனைத்து கிரகங்களையும் படத்தோடு விளக்கியது அருமை.. வித்தியாசமான முயற்சிகள் தொடரட்டும்..வாழ்த்துகள்.

  ReplyDelete
 19. கோள்கள் பற்றிய குறுந்தகவல்களுடன், கதம்ப மாலையை போல் பதிவுகளின் தொகுப்பும் அருமையா இருக்கே!

  ReplyDelete
 20. அறிவியல் தகவல்களுடன் அழகான அறிமுகங்கள். வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 21. "பொன்னும் புதனும்" கோள்கள் பற்றிய தகவல்களுடன் நல்ல தொகுப்பு.

  ReplyDelete
 22. கோள்களை பற்றி தகவல்களுடன் அறிமுகஙக்ள் அருமை
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 23. வியாழன்(குரு) இடம் பெயர்கிறார் என்று சொல்லிக்கொண்டிருக்கையில் கிரகங்கள் பற்றிய அறிவியல் அறிமுகம். பகிர்விற்கு நன்றி.

  ReplyDelete
 24. கிரகங்கள் பற்றி ஸ்கூல் நாட்களில் படிச்சது...

  மீண்டும் ஞாபகப் படுத்திடிங்க...

  அறிமுகங்களும் நன்று....

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. sako!

  nalla arimukangal!

  melum-
  ariya padangal!

  vaazhthukkal!

  ReplyDelete
 26. தென்றலை மீண்டும் மீண்டும் வரவேற்க
  .காத்திருக்கிறோம்..

  பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்

  ReplyDelete
 27. நல்ல அறிமுகங்கள்...
  அருமையான விளக்கக் குறிப்புக்கள்...
  தொடருங்கள்... தொடர்கிறோம்.

  ReplyDelete
 28. அறிவியல் தகவல்களை படங்களுடன் அறிமுகப்படுத்தி பல பதிவாளர்களையும் அறிமுகப்படுத்திய உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 29. கோள்களைப் பற்றிய தகவல்கள் அருமை! என்னுடைய வலைப்பூவினை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!

  -காரஞ்சன்(சேஷ்)

  ReplyDelete
 30. எவ்வளவு பொறுப்புணர்ச்சியும், அதீத உழைப்பும் தேவைப் பட்டிருக்கும் இம்மாதிரி பதிவுகளைக் கண்டெடுப்பதிலும் சுவை கூட்டி அறிமுகப் படுத்துவதிலும். வாவ் !GREAT WORK SASIKALA.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது