வாரேன்... நான் வாரேன்... போய் வாரேன்...!
➦➠ by:
பா.கணேஷ்
அனைவருக்கும் வணக்கம்!
பா.கணேஷாகிய நான் வலைச்சரப் பொறுப்பை நிறைவு செய்யும் தினம் இன்று. ஆகவே எந்த ‘ஜோடி’யையும் அழைக்காமல் நானே வந்திருக்கிறேன். இன்று நான் விரும்பிப் படிக்கின்ற சில தளங்களை உங்களுககுச் சொல்கிறேன். இவர்களில் சிலர் உங்களுக்குப் புதியவர்களாகவும், சிலர் தெரிந்தவர்களாகவும் இருககலாம். ஆனால் இந்தத் தளங்கள் எல்லாமே ரசனைக்குரியவை என்பதில் எனக்கு ஐயமில்லை.
ஆன்மீகத்தின் அருஞ்சுவையைப் பருக விரும்புகிறீர்கள் என்றாலும் சரி... வாத்தியார் சுஜாதாவைப் பற்றியும் அவரின் படைப்புலகைப் பற்றியும் நிறையப் படித்தறிய விரும்பினாலும் சரி... பாலஹனுமான் என்ற என் நண்பரின் தளம் உங்களுக்கு உதவும்.
அழகாகக் கவிதை எழுதுகிறார் யுவராணி தமிழரசன். படித்தால் பிடித்துப் போகும் இவரது தளம்.
இவரும் கவிதைகளால் தளத்தை நிரப்பியிருப்பவர். பெயரிலேயே சீனியை வைத்திருப்பதாலோ என்னவோ இனிக்கின்றன கவிதைகள்.
என்.சொக்கன் எனக்குப் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது தளமும் படித்தால் பிடிக்கும் எனகிற ரகம்தான். படித்துப் பாருங்கள்.
இவர் மதுரை சொக்கன். திருமூலரின் திருமந்திரத்திலிருந்து ஆன்மீகக் கருத்துககளை மழையெனப் பொழிந்து தாகம் தீர்த்து வருகிறார்.
இவரது தளத்தில் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் கொட்டிக் கிடககின்றன. அ.குரு என்கிற இவர் பள்ளியில் எத்தனையோ மாணவர்களுக்குக் குரு.
அடுத்தவர் பெயர் சீனுகுரு. சிறுகதைகளும், கட்டுரைகளும் சுவாரஸ்யமாய் எழுதி வருகிறார்.
குருச்சந்திரன் என்கிற இவர் தன் தளத்தில் குறுங்கவிதைகளும் நெடுங்கவிதைகளுமாக ரவுண்டி கட்டி அடித்து வருகிறார்.
சந்தோஷ் என்கிற இவரது தளத்திற்கு ஒருமுறைதான் விஸிட் அடி்த்திருககிறேன். அந்த ஒரு இடுகையே என் கருத்துககளோடு ஒத்துப் போவதால் மிகப் பிடித்திருந்தது. நீஙகளும் படித்துப் பாருங்கள்...
arouna-selvame என்கிற இவரது பெயரை எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை. சுவாரஸ்யமான பதிவுகள் இவருடையவை.
சமுத்ரா வழங்கி வரும் கலைடாஸ்கோப் எப்போதுமே ரசனைக்கு விருந்து எனக்கு. நீங்களும் ருசித்துப் பாருங்கள்.
மிடில்கிளாஸ் மாதவி இப்போது குறைவாகத்தான் எழுதுகிறார். ஆனால் நிறைவாக எழுதுபவர் இவர்.
கீதமஞ்சரியின் எழுத்துக்களில் காணப்படும் முதிர்ச்சியும், தெளிவான சிந்தனையோட்டமும் எனக்கு மிக உவப்பானவை.
ஸ்ரீரங்கத்துககாரரான ரிஷபன் எழுதும் கவிதைகளும் சரி, சிறுகதைகளும் சரி... மனதைப் பறித்துக் கொள்ள வல்லவை.
அப்பாத்துரை ஸார் என்னைப் பொறுத்த வரை வலையுலகில் இன்று உலவும் இன்னொரு சுஜாதா என்பேன்.
எப்போதும் ஏற்றமிகு சிந்தனைகளை வழங்கி என்னையும் என்னைப் போல பலரையும் மேம்படுத்தி வருபவர் ரமணி ஸார்.
பிரதிபலனை எதிர்பார்த்தே உதவும் இவ்வுலகில் எந்தப் பிரதிபலனும் இல்லாமல் பல பயனுள்ள மென்பொருட்களையும், விளையாட்டுகளையும், தகவல்களையும் வழங்கி வருபவர் நண்பர் வேலன்.
மகேந்திரன் கட்டியிருக்கும் வசந்த மண்டபத்திற்குச் சென்றீர்கள் என்றால் அழகிய அன்னைத் தமிழ் உங்களுக்கு ஆறுதலையும், மகிழ்வையும் அளிக்கும்.
என் வலைச்சரப் பயணத்தில் நான் ரசித்த பதிவுகளை உங்களுக்கு இதுவரை அறிமுகம் செய்தேன். நான் பார்ககத் தவறிய, பார்க்க வேண்டிய நல்ல பதிவுகள் பல இருக்கும். அவர்கள் திறமையில் குறைந்தவர்கள் என்று பொருளல்ல. எனக்கு சமயம் போதவில்லை, கவனம் போதவில்லை என்பது தான் குறையாக இருக்கு்ம். அவர்கள் அனைவருக்கும் என் வந்தனம்.
இந்தச் செயலை நான் சரியாகச் செய்து முடிப்பேன் என்று நம்பிக்கை வைத்து என்னிடம் பொறுப்பைத் தந்த சீனா ஐயா அவர்களுக்கும், நண்பன் தமிழவாசி பிரகாஷுக்கும் என் இதயம நிறைந்த நன்றி!
சங்க இலக்கியத்துல ஒரு பாடலில் தலைவன் தன் தலைவியைப் பற்றிச் சொல்லும் போது ‘வினை முடித்தன்ன இனியள்’ என்று சொல்வதாக வரும். ஒரு பொறுப்பை எடுத்துக் கொண்டு அதை நன்கு முடித்தால் என்ன திருப்தி வருமோ, அத்தனை இனியவள் என் காதலி என்று பொருள். உங்கள் அனைவரின் ஆதரவோடு அப்படி வினை முடித்ததால் வந்த திருப்தி எனக்குள் இப்போது இருக்கிறது.
இறுதியாக, ஆனால் உறுதியாக ஒன்று... இயக்குனர் எவ்வளவு பாடுபட்டு எடுத்தாலும் ரசிகர்கள் பார்த்து ரசிக்காவிட்டால் அந்த சினிமாவால் என்ன பிரயோஜனம்? நான் வலைச்சரத்திலோ என் தளத்திலோ எவ்வளவு எழுதினாலும் நீங்களெல்லாம் படித்து ரசித்தால்தானே அவற்றுக்கு மதிப்பு? அப்படி பூஜ்யமாக இருக்கும் எனக்கு முன்னால் எண்களாக நின்று மதிப்பு சேர்க்கும் உங்கள் அனைவருககும்...

இதயத்தின் அடியாழத்திலிருந்து என் நன்றி!