07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 6, 2011

தங்கம்பழனியின் தம்பட்டம்..

வலையுலக நண்பர்களுக்கு வணக்கம்.

எனது இயற்பெயர் பழனிவேல்.வலைப்பூவுக்கு தங்கம்பழனி நாமக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவன்.முதலில் இந்த அருமையான வாய்ப்பை வழங்கிய வலைச்சரத்தின் ஆசிரியர்குழுவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக சீனா ஐயா அவர்களுக்கு.

வாய்ப்பு கிடைக்கவில்லையே என ஏங்குவதைக் காட்டிலும், வாய்ப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டும் எனும் சிந்தனையை எனக்குள்  ஆழமாக விதைத்துக்கொண்டவன் நான்.

உண்மையான முனைப்புடன்- முயற்சியுடன் செய்யும் செயல்கள் வெற்றிப்பெறுகின்றன என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை..

உள்ளங்கையில் உலகம் என இருந்த எனது வலைப்பூ, ஒரு சில காரணங்களால்  தங்கம்பழனி என பெயர் மாற்றம் பெற்றது. அந்த உள்ளங்கையில் உலகத்தைப் பற்றிய அறிமுகப் பதிவொன்றும் முன்னரே இடம்பெற்றிருக்கிறது என்பதை அறிய தருவதில் எனக்கு இரட்டை மகிழ்ச்சி.

எனது  பார்வையில் தங்கம்பழனி:

ஒரு மனிதனுக்கு தன்னம்பிக்கை முக்கியம். தன்னம்பிக்கை இருந்தால் தானே தரணியில் தலை நிமிர்ந்து வாழமுடியும்..தடைகளை உடைத்து முன்னேற முடியும்..அந்த வகையில்  தன்னம்பிக்கை தரும் (கவிதை?)யாக அமைந்தது. இனி தடைகள் இல்லை உனக்கு

கவிதை என்றால் என்ன என்றே தெரியாத வயதில் நான் எழுதிய கவிதைகள் ஏராளம்.. அதை இப்போது படித்தாலும் என்னுடைய அறியாமையும், சிறுபிள்ளைத்தனமும் தெரியும். தொடர்ந்து ராணி வார இதழுக்கு இத்தகைய கவிதைகளை எழுதி அனுப்பியதில்.. ஒன்றை மட்டும் தேர்வு செய்து வெளியிட்டார்கள்.. அந்த கவிதை வெள்ளியின் விடியலை வந்து பார்!


நம்மைப் பார்த்துதான் நம் குழந்தைகளும் கற்றுக்கொள்கிறார்கள்.. நம்மிடமிருந்துதான் பல பண்புகளும் நம்முடைய குழந்தைகளுக்கு செல்கின்றன என்பதன் அடிப்படைச் சிந்தனையில் எழுந்த பதிவு...
உங்கள் குழந்தைகளுக்குச் சூழலைக் கற்றுக்கொடுங்கள்


நாளும் இந்த காட்சிகளை நாம் பார்க்கலாம். பள்ளி, கல்லூரி நாட்களில் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான பயணம செய்வார்கள். குறிப்பாக கல்லூரிமாணவர்கள். இதனால் ஒரு சில அசம்பாவிதங்களும், உயிர்ச்சேதமும் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கவே இச்சிறு (குறும்பதிவு)
நேரத்தின் மதிப்பும் - உயிரின் மதிப்பும்


அனைவருக்குமே சிறுபிள்ளை பிராயத்தை மறக்க முடியாத நிகழ்வுகள் மனதில் பொதிந்திருக்கும்.. அவற்றில் என்றும் மனதில் நிலைத்து நிற்பவை ஒரு சில. அந்த வகையில் என்மனதில் இன்னும் ஒரு வரிகூட மறக்காமல், குறிப்பாக மழைக்காலத்தில் நினைவுக்கு வரும் பாடலை நினைவு கூர்ந்த பதிவு..நீங்களும் சிறுபிள்ளை ஆகலாம்!


இன்றும் கூட ஒரு சிலர் இருக்கிறார்கள்.. மற்றவர்களை ஏளனம் செய்வதிலும், அவர்களின் குறைகளை சொல்லி வேதனையூட்டுவதிலும் அற்ப மகிழ்ச்சியடைவார்கள். பேருந்தில் ஒரு சிலர் நடக்கும் விதத்தையும் அவர்களின் மனநிலையில் என்ன மாற்றம் வர  வேண்டும் என்றும் விளக்க முற்படும் பதிவு..!! அது அவர்கள் செய்த பாவம் அல்ல!!


பள்ளிச் சிறார்களை பாழ்படுத்தும் திரைப்படங்களை சாடிய பதிவு இது.. தொடர் பதிவாக எழுதும் விருப்பத்தின் பேரில் தொடங்கப்பட்டது...சீரழியும் சமுதாயம், சீரழிக்கும் சினிமா!

வேலை பார்க்கும் நிறுவனத்தில் எழும் பிரச்னைகளை எளிதாக தீர்க்க உதவும் ..பணிபுரியும் இடங்களில் பிரச்னையா?

அடுத்து தொழில்நுட்ப பதிவொன்று..  தேடுபெட்டியும் அதன் பயன்களும்  உங்கள் பிளாக்கரில் search box இணைப்பது எப்படி?


நகர்புறங்களில், நகரின் பேருந்து நிலையங்களில் கேட்பாரற்று அனாதையை கிடக்கும் மனநோயாளிகளைப் பற்றி எழுந்த சிந்தனைப் பதிவு திக்கு  தெரியாமல் திண்டாடும் மன நோயாளிகள் ..!

மேலும் ஒரு சில பதிவுகள் ,

பிரச்சனைகளை சமாளிக்க,
சோம்பலை விரட்ட, 

உங்களை திருத்திக்கொள்ள
முன்னேற கால்கள் வேண்டுமா?
இரண்டு வரி சாதனை
உடல் எடை குறைய
நேர நிர்வாகம்
தன்னம்பிக்கையின் எதிரி?
வலைப்பதிவுகள் உருவான கதை
 பூமி தோன்றிய கதை


நாளை முதல் வித்தியாசமான அறிமுகங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன். 

என்றும் அன்புடன்
உங்கள் தங்கம்பழனி. 

நன்றி நண்பர்களே..!!


17 comments:

 1. அறிமுகப்படலம் அசத்தல் நண்பரே,தொடருங்கள்,அசத்துங்கள்.

  ReplyDelete
 2. லேட்டா வந்தாலும் அசத்தலா இருக்கு

  ReplyDelete
 3. வலைச்சர ஆசிரியர் பணியை ஏற்றதற்கு வாழ்த்துக்கள் நண்பரே! அறிமுகம் நன்றாக உள்ளது.

  ReplyDelete
 4. உங்கள் ஒவ்வொரு பதிவும் சேமித்து வைக்க வேண்டிய பதிவு ...

  ReplyDelete
 5. நன்றி அன்புச் சகாதரர்களே..!

  ReplyDelete
 6. அசத்தல் .. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 7. ஆரம்ப அறிமுகமே அசத்தல்.வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 8. வாழ்த்துகள் சகோ. நிறைய அறிமுகங்கள் பற்றி எழுதுங்கள்.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள் நண்பா....

  ReplyDelete
 10. வாத்துக்கள் பாஸ்

  ReplyDelete
 11. வாழ்த்துக்கள்,பழனி.

  ReplyDelete
 12. நண்பரே நல்லாயிருக்கு தலைப்பு!

  ReplyDelete
 13. விடுபட்டு விட்டது -- அறிமுகங்களும் நன்று.

  ReplyDelete
 14. வருக வருக நண்பரே
  வலைச்சரத்தை இனிமையுற
  தொடுத்திட வருக...
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 15. இரண்டு நாள் ஆகிவிட்டது பழனி என்ன ஆனீர்கள்...

  ReplyDelete
 16. தங்கம்பழனி !

  வாழ்த்துகள்!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது