07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 5, 2014

பல்சுவை பதிவர்கள் -ஐந்தாம் நாள்.

வலைச்சரம் ஐந்தாம் நாள் 5-12-2014 வெள்ளிக்கிழமை
இன்றைய பதிவில் சில பல்சுவை பதிவர்களை அறிமுகப்படுத்த விழைகிறேன்.

1.கடல் பயணங்கள்
கடையின் முதலாளி : திரு ரமேஷ் குமார்.
http://www.kadalpayanangal.com/

அன்னம் பிரம்மம் என்று சொல்வார்கள். திரு ரமேஷ் அந்த பிரம்மத்தை அனுதினமும் நேரில் காண்பவர். காணுவது மட்டும் அல்ல. அந்த பிரம்மத்துடனேயே ஒன்றிப்போனவர்.

ஒரு மட்டை ஊறுகாயில்  பிரம்மத்தைக் காணும் காட்சியைக் காணுங்கள்.


இவர் ரசிக்கும் அந்த மட்டை ஊறுகாயப் பாருங்க.
                                               


எந்த ஊரில், எது, எங்கே நன்றாக இருக்கும் என்று கண்டுபிடித்து அதை அனுபவித்து யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறுக என்ற நோக்கத்தில் பதிவுகள் இடுகிறார். என்னால் அந்த ஊருக்கெல்லாம் இந்த வயசான காலத்தில் போக முடியுமா? அதனால் அவர் பதிவுகளைப் பார்த்து "ஜொள்" விட்டுக் கொண்டிருக்கிறேன். முடிந்தவர்கள் நேரில் சென்று சுவைத்து இன்புறலாம்.

2. கோவை நேரம்
       முதலாளி : திரு ஜீவானந்தம்.

இவர் என் வீட்டுக்கு சமீபத்தில், 2 கி.மீ. தூரத்தில் குடியிருக்கிறார். இவர் கொடுக்கும் இம்சைகளையும், உண்டாக்கும் வயிற்றெரிச்சலையும் நான் யாரிடத்தில் முறையிடுவேன் என்று கவலைப் பட்டுக்கொண்டிருந்த போது, கடவுள் திரு சீனா ஐயா ரூபத்தில் வந்து அனுக்கிரஹம் செய்தார். இதோ இங்கே உனக்கு ஒரு வலைத்தளம் ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறேன். அதில் உன் வயிற்றெரிச்சலை எல்லாம் கொட்டிக்கொள்ளலாம் என்று வரம் கொடுத்தார். (திரு ஜீவானந்தம் மன்னிக்கவேண்டும்)

திரு ஜீவானத்தந்திற்கு வீட்டில்  கிடைக்கும் உணவோடு திருப்தி அடைவதில்லை. நல்ல உணவு கிடைக்கும் உணவு விடுதிகளை இனம் காணுவதில் வல்லவர். அதுவும் என் வீட்டைச்சுற்றி ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள உணவகங்கள்தான் இவருக்கு கண்ணில் படும் போல. அங்கு போய் ஒரு வெட்டு வெட்டிவிட்டு உடனே அதைப் பதிவில் எழுதி விடுவார்.

இதப்பாருங்க.

                              


இந்தச்சாப்பாடு 

இராமசாமி உணவகம், (Ramasamy Canteen ) கவுண்டம்பாளையம், கோவை


என்கிற இடத்தில் வெகு சீப்பாகக் கிடைக்கிறதாம். ருசியோ ருசியாம். இந்த இடம் என் வீட்டிலிருந்து 2 கி.மீ.

அப்புறம் இதைப் பாருங்க


முட்டை பப்ஸ், ஸ்ரீ லட்சுமி ஐயங்கார் கேக் ஷாப், கவுண்டம்பாளையம், கோவை


இந்த இடத்தில முட்டை பப்ஸ் செய்யறத நேர்ல போய் பார்த்து படம் எடுத்துப் போட்டிருக்கார். இதைப் பார்த்த பிறகு அதன் பேரில் ஆசை வராமலிருக்குமா? ஆனால் எனக்கு வீட்டில் ஓட்டலுக்குப் போகக்கூடாது என்று தடா. நான் என்ன செய்யட்டும்.

இன்னொரு வயித்தெரிச்சல் பாருங்க


இது கிடைக்கிற இடம் .

A -1 பிரியாணி ஹோட்டல், சாய்பாபா காலனி, கோவை


இந்தக் கடை, என் வீட்டிலிருந்து ஒரு பர்லாங்க் தூரத்தில் இருக்கிற கடை. எங்க ஊட்ல ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.  பிரியாணி சாப்பிட்டா ஊட்டுக்குள்ள வரப்படாது அப்படீன்னு. இதப் பார்த்துட்டு எப்படீங்க சும்மா இருக்கிறது?  நான் என்ன செய்யட்டும், நீங்களே சொல்லுங்க 


3.கமலாவின் அடுப்பங்கரை
இவரின் தளத்தின் லிங்க் : லிங்க் : http://adupankarai.kamalascorner.com/

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே என்கிற கொள்கைப்பாடு உடையவர் திருமதி கமலா அவர்கள். திருவாளர்கள் சுரேஷ் மற்றும் ஜீவானந்தம் சொன்ன உணவகங்களில் சாப்பிட்டு சலித்துப் போனவர்கள் இந்த அடுப்பங்கரைச் சமையலைச் சாப்பிட்டு நாக்கைத் தேத்திக்கொள்ளலாம்.

இஞ்சிப்புளி ஜீரணத்திற்கு முகவும் நல்லது.
               
                         

செய்முறையை விவரமாக கமலா அவர்கள் கொடுத்திருக்கிறார்கள்.

இஞ்சிப் புளி சாப்பிட்டு பசி எடுத்ததும் சாப்பிட டபுள் பீன்ஸ் சாதம் ரெடி
                           
                               

இப்படி பல உணவு தயாரிக்கும் முறைகள் இந்த தளத்தில் உள்ளன.


4.ஜலீலா
தளம். சமையல் அட்டகாசங்கள்

லிங்க்: http://samaiyalattakaasam.blogspot.com/

இந்தத் தளத்தில் ஒரு வார்னிங்க் போர்டே வைத்துவிட்டார்கள்

கமலா அம்மாவின் அடுப்பங்கரைச் சமையல் சலித்துப்போனால் ஜலீலா பேகத்தின் சமையலை ருசிக்கலாம்.

சிக்கன் மஜ்பூஸ் பாருங்கள்

பார்க்கும்போதே நாவில் எச்சில் ஊறுகிறதல்லவா? இப்படி பல உணவுகள் தயாரிக்கும் முறைகள் இவருடைய தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன.


5. ஸ்கூல் பையன்
புனைபெயரில் தளம் அமைத்திருக்கும் இவரின் பதிவுகள் வெகு சுவாரஸ்யமானவை. மனம்மயக்கும் மூனாறு பதிவில் மூனாறு பற்றிய சுவாரஸ்யமான பல விவரங்கள் இருக்கின்றன. இது போல் பல பயணக்கட்டுரைகளும், சினிமா விமர்சனங்களும், சமுதாயச் சார்பு கட்டுரைகளும் இவர் தளத்தில் பார்க்கலாம்.

6.கரிசக்காடு

உதயசங்கர் இந்த தலைப்பில் வைத்திருக்கும் தளத்தில் வட்டார செய்திகளைச் சார்ந்த பதிவுகளைப் பார்க்கலாம். கவிதைகளைப் பற்றிய இவர் பார்வை வித்தியாசமானது. பல நூல்கள் வெளியிட்டிருக்கிறார்.
சிறுகதைகளும் இவர் பதிவில் உண்டு. 


காற்றில்கரைந்த பூதம் சாப்பாட்டுப் பிரியர்கள் படிக்கவேண்டிய ஒரு கதை.

7.நிகழ்காலத்தில் சிவா

இவர் பெயரும் சிவா தான். நான் சந்தித்திருக்கிறேன்.இவர் ஒரு இமாலய சாதனையாளர். எப்படியென்றால் திருக்கைலாய யாத்திரை இரண்டு முறை சென்று வந்திருக்கிறார். அதில் என்ன விசேஷம் என்றால் கைலாய மலையை பரிக்ரமா நடந்தே செய்திருக்கிறார். பெரும்பலானோர் மானசரோவரோடு நிரும்பி விடுவார்கள். இந்த யாத்திரையைப் பற்றா விரிவாக தன் தளத்தில் பதிந்திருக்கிறார்.

வேறு பல உபயோகமான பதிவுகளும் இவர் தளத்தில் இருக்கின்றன.
உடலில் வியர்வை நாற்றம் வராமலிருக்க இவருடைய உத்திகள் பிரயோஜனமானவை.

8. கோவை எம். தங்கவேல்

எல்லோருக்கும் ஏதாவது ஒரு சமயத்தில் சொத்து அதாவது வீடு கட்டும் மனை, அல்லது பெரிய இடங்கள் வாங்கும் சந்தர்ப்பம் வரும். சொத்து வாங்குவதிலும் விற்பதிலும் பல சட்ட திட்டங்களும் சட்ட ஓட்டைகளும் உண்டு. அதைப் பற்றிய அனைத்து விவரங்களும் ஆலோசனைகளும் இவர் பதிவுகளில் காணலாம்.

ஆன்மீகத்தலும் இவர் சிறந்து விளங்குகிறார். மகாபாரதத்தில் தர்மத்தின் பாதையைப் பற்றி கண்ணனும் உத்தவரும் வாதம் செய்வதை அருமையாக விளக்குகிறார். அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் தேவையான தளம்.


9. கில்லர்ஜி
தன் பெயரையே தளத்தின் பெயராகவும் வைத்துள்ள இவர் தன்னைப் பற்றி என்ன சொல்கிறார் பாருங்கள்
கடவுளிடமே சவால்விடும் அளவிற்கு துணிவு கொண்டவர்.

படித்துப் பாருங்கள். சிரித்திச் சிரித்து வயிற்று வலியால் அவதிப்படுவீர்கள்.


10. சதீஷ் சங்கவி

தன் பெயரையே தளத்தின் பெயராக வைத்துள்ள இவர் ஒரு கால கட்டத்தில் ஈரோடையே கலங்கடித்துக் கொண்டிருந்தார். பதிவுலக நடைமுறைப்படி இப்போது கொஞ்சம் அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார். ஈரோடு பதிவர் சந்திப்புகளின் மூலம் எனக்கு நன்கு பரிச்சயமானவர். பயங்கர கலகலப்பானவர்.

இராத்திரிநேர பூஜையில் என்ற இவர் பதிவைப் பாருங்கள். கொஞ்சம் விரசமான பாட்டை எப்படி கிண்டல் செய்திருக்கிறார்!
ரயில்வே நிர்வாகத்தை இவர் துவைத்து எடுப்பதைப் பாருங்கள்.
பழகுவதற்கு இனிமையானவர். இவரை அறிமுகப் படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

17 comments:

 1. சுவையான பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 2. அனைத்தும் ...அட்டகாசங்கள்..!

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. பிரியாணி சாப்பிட்டா ஊட்டுக்குள்ள வரப்படாது அப்படீன்னு!.. - உங்களுக்கே சொல்லியிருக்காங்கன்னா,

  இவ்விடத்தில் - ஐயப்ப சாமிக்கு விரதம்!.. - நான் என்னத்தைச் சொல்ல!?..

  அதனால இன்றைய சமையலறை சமாச்சாரங்களைப் பற்றி ஒன்னும் சிந்திக்க முடியவில்லை!..

  ReplyDelete
 4. கலாட்டா ஊர்வலம் தான் இன்றைய பதிவர்களின் அறிமுகங்கள் ஐயா. ரசித்து வாசித்தேன்.

  த.ம.2

  ReplyDelete
 5. வணக்கம்
  ஐயா
  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.... தொடருகிறேன் பதிவுகளை
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. அன்பின் ஐயா என்னையும் மதித்து எனது வலைப்பூவையும் அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சியே.... மனமார்ந்த நன்றிகள்.

  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
  த.ம.3

  ReplyDelete
 7. ஐயா, எனது பதிவுகளை அறிமுகபடுதியதர்க்கு மிக்க நன்றி, நீங்கள் என் பதிவுகளை படிக்கிறீர்கள் என்ற தகவலே சந்தோசம் தருகிறது, நானும் தங்கள் மன அலைகளை படிப்பவன்… விரைவில் உங்களை சந்திக்க ஆவல் !

  ஒரு சிறு திருத்தம்…… எனது பெயரை ரமேஷ் என்று குறிப்பிட்டு இருக்கிறீர்கள், எனது சரியான பெயர் சுரேஷ் என்பதாகும்.

  ReplyDelete
  Replies
  1. மன்னிக்கவும் சுரேஷ். இப்போதே சரி செய்து விடுகிறேன்.

   இந்த சுரேஷ் - ரமேஷ் எப்பவும் எனக்கு குழப்பம்தான்.

   Delete
 8. இன்றைய அறிமுகத்தில் KILLERGEE மற்றும் ஸ்கூல் பையன் ஆகியோரின் வலைத்தளங்கள் எனக்கு பரிச்சயமானவை. மற்ற தளங்களுக்கும் செல்லவேண்டும். அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. புதியவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. இப்புதியவர்களில் சிலர் எனக்கு முன்னரே அறிமுகம் ஆனவர்கள். மற்றவர்களின் பதிவுகளை விரைவில் படிப்பேன்.

  ReplyDelete
 10. இங்கு என்னையும் அறிமுகப்படுத்திய பழனி கந்தசாமி அவர்களுக்கு மிக்க நன்றி, இதை எனக்குதெரிவித்த இராஜ ராஜேஸ்வரிக்கும் மிக்க நன்றி, மற்ற அறிமுகங்கள் எல்லாம் கலக்கலாகவே இருக்கிறது ,
  அந்த வார்னிங் போட்டது , சமையல் குறிப்ப போட்டதுமே உடனே திருட ஆரம்பிச்சுடுறாங்க , இப்ப வர ஜனவரிக்கு போட இப்ப வே குறிப்புகளை அவர்கள் குறிப்பு போல் எடுத்து போட்டு கொள்வார்கள்,.
  அதான் ஒரு மனத்திருப்திக்கு போட்டு வைத்துள்ளேன், அதை பார்த்தாலாவது திருடாமல் இருப்பார்களானு ஒரு யுகம் தான்

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி, ஜலீலா பேகம்.

   Delete
 11. அருமையான பல்சுவை பதிவர்கள்.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 12. இன்றைய பதிவர்கள் அறிமுகத்தில் கோவை நேரம், கமலாவின் அடுப்பங்கரை, நிகழ்காலத்தில் சிவா ஆகிய வலைத் தளங்கள் எனக்கு புதியவை. சென்று பார்க்கிறேன். மற்றவர்கள் பதிவுகளை அடிக்கடி படிப்பதுண்டு.
  த.ம.5

  ReplyDelete
 13. ஒன்றிரண்டு பேர் எனக்கு புதியவர்கள்.

  அறிமுகம் செய்யப்பட்ட அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகள்.

  த.ம. +1

  ReplyDelete
 14. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது