07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, December 22, 2014

வேட்கை                                                                                            சி.குருநாதசுந்தரம்.

           ஒரு இனிதான மாலைப்பொழுதுநான் அப்போதுதான் கணினியைத்  திறந்தேன்தமிழ்வாசி பிரகாஷ் மின்னஞ்சலில் கூப்பிட்டார்.
  “வணக்கம் “
நிமிர்ந்தேன்.
  “என்ன்ங்கய்யா “ என்ற பார்வையுடன் அம்மின்னஞ்சலைப் பார்த்தேன்,
  ” உங்கள வலைச்சரத்துக்கு ஒருவாரத்துக்கு ஆசிரியரா போடலாம்னு இருக்கோம்.   
    உங்க அனுமதி வேணும்.”
பகீரென்றது எனக்குஉள்ளுக்குள் ஒரு படபடப்பும்பரிதவிப்பும் படர்ந்ததாய் உணர்ந்தேன்
 “ உண்மையாகவா? “
 “ ஆம் ” என்றார்.
 அவர் எழுத்துக்கண்களில் ஆர்வம் தெரிந்தது.
” சரிங்கையா ” சொல்லிவிட்டு வெளியே வந்தேன்.
பனிக்காற்று இதமாய்ச் சீண்டியது.
” சரியா செஞ்சுருவோமா? ” மனதுக்குள் நெருடிய முள்ளுணர்வுகளில் என் தேகம் ஒருமுறை ஆடியதுமனிதமனம் ஒரு புரியாத புதிர்தானென்பது எனக்கு அன்றுதான் தெரிந்ததுதொடங்கும் முன் எதையும் பெரிதாக எடுத்துக்கொண்டு உணர்வுகளைப் பயமுறுத்தும் மூர்க்கம் மனதிற்கு மட்டுமே உண்டுஆனால் செயலின் உள்ளே சுகமான பயணங்களை முன்னிறுத்தும் இனிய முகமும் மனதிற்கு உண்டுமனதை வெல்லும் வேட்கையில் திட்டமிடத் தொடங்கினேன்.
 “ நான் இருக்கேன்பயப்படாத “  என்றது என்  பெருநாழி
 “ நாங்களும் இருக்கோம் பயப்படாதப்பா “  என்றன என் நண்பர்களின் வலைப்பூக்கள்பூக்களின் மணத்தை எவ்வாறு விளக்க முடியும் ? அதன் எம்முகத்தை வெளிப்படுத்துவது என்ற சிந்தனையில் தெருவில் நடந்தேன்.
            அப்பொழுது தான் தன் குட்டிகளைப் பிரசவித்த மகிழ்வின் களைப்பில் ஒரு தெருநாயொன்று என்னைப் பார்த்து ஓடியதுகுட்டிகளைக் களவாடும் மனிதப் பதரென்று என்னை நினைத்து விட்டதோவென என் மனம் கூசியது.
 ‘ சேநாய்க்குக்கூட மனிதன் மேல நம்பிக்கை வரலப்பா,  “
  அப்போதுதான் வந்த இராசையன் என்னோடு நடையில் சேர்ந்து கொண்டார்.
 “ ஆமாமா, ” தலையாட்டினேன்.
 “ இந்த நாயைப் பத்தி ஒரு கத எழுதினயேஎன்ன ஆச்சுப்பா? “
என்றார் இராசையன்அவரின் வார்த்தைகளில் ஆர்வம் இல்லைஆயினும் ஏதோ பேச வேண்டுமென்ற ஒரு நிச்சயச் சூழலில் அவர் இருப்பதாக எனக்குப் பட்டதுநடைப்பயிற்சிக்கு துணை வேண்டிய அவரது பேச்சின் நிழல் என்னை வெகுவாய்க் கவர்ந்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.
              சிலசமயங்களில் பிறரின் முக்கியமில்லாத பேச்சுகள் கூட நமக்கு ஆர்வத்தை ஏற்படுத்திவிடும் மாயையை அன்று தான் இராசையனின் பேச்சில் கண்டேன்..
 “ ஆமாண்ணேஎன் வலைப்பூவுல போடுருக்கேன். “
  “ பேருகூட திருப்பதியின் தங்கம் தான? ” என்றவரிடம் ஆசையாக
“ ஆமாண்ணே ” என்றேன்.
 “ படிச்சிருக்கீங்களாண்ணே ” என்றேன் ஒரு அதீத ஆர்வத்துடன்.
“ இல்லப்பாஅதுக்கெல்லாம் எங்க நேரமிருக்குது? “ என்றவரின் மேல் இப்பொழுது   
  வெறுப்பு வந்து தொற்றிக் கொண்டது.
  “ என்னண்ணே , தம்பியோட கத உங்களுக்கு பிடிக்கலையா? “
  “ இல்லப்பாஇன்னிக்குப் படிச்சுடரேன் ” என்றவரின் கையைப்பிடித்து கோர்த்துக் கொண்டேன்.
“ படிச்சிருவேன்பா. ” என்று தன் கையை என்னிடமிருந்து விடுவித்துக் கொண்டார்.   “ சரிப்பாவீட்டுக்கு போகணும் . நேரமாச்சுநான் வரட்டா,
”” அண்ணே கதய கட்டாயம் படிச்சிருங்கண்ணே, ”என்று கூறினேன்.
           இராசையனுக்கு இரண்டு மனைவிகள் இருந்தார்கள்நான்கு பிள்ளைகள்அதில் மூன்று பெண்பிள்ளைகளும் அடக்கம்கமலினி பத்தாவதும் எழிலினி பன்னிரண்டாவதும் படித்துக்கொண்டிருந்தார்கள்மூன்றாவது பெண் போதும்பொண்ணு ஏழாவது படித்துக் கொண்டிருந்தாள்.
           கடைக்குட்டிப் பையனுக்கு வீட்டில் மிகுந்த செல்லம்அவன் இப்போதுதான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டுருப்பதாக போதும் பொண்ணு சொன்னாள்.
          என் பள்ளியில் இப்பெண் பிள்ளைகளை எனக்கு மிகவும் பிடிக்கும்.
          அன்று ஆசிரியர் அறையில் ஓய்வாக அமர்ந்திருந்தேன்.
எழிலினி என்னருகே வந்தாள்.
 “ ஐயா.. ” இழுத்தாள்.
  என்ன என்பது போல் புருவம் நிமிர்த்தினேன்.
 “ நேத்து எங்க அப்பாவோட கம்ப்யூட்டருல..”
 “ என்ன புள்ள , சீக்கிரமா சொல்லித் தொலைஎனக்கு நெறைய வேலையிருக்கு. ”
அவளிடம் அந்நேரத்தில் எரிந்து விழுவது எனக்கே வெறுப்பைத் தந்தது.
 “ உங்க கவிதை படிச்சேன் ஐயா. “
   நிமிர்ந்து உட்கார்ந்தேன்அவளிடம் எரிந்து விழுந்ததற்காய் மனதிற்குள் மன்னிப்புக் கேட்டுக்கொண்டேன்.
 “ சொல்லும்மா, ” குரலில் கனிவு தெரிந்த்து.
 “ கர்மவீர்ர் காமராஜர் பற்றி நீங்க எழுதுன கவிதைய படிச்சேன் ஐயாரொம்ப நல்லாயிருக்கு.”  
 “ நல்லாயிருக்காஉண்மையாகவா?”
 அவளுக்கு ஏதாவது கொடுத்தே ஆக வேண்டுமென்று என் மனம் பரபரத்தது.
அப்போது பார்த்து ஏழாம்வகுப்பு பிரகாஷ் தன் பிறந்தநாளுக்காக சாக்லேட் கொண்டு வந்து கொடுத்தான்அவனை வாழ்த்திவிட்டு நிமிர்ந்தேன்.
 “ இன்னோரு கவிதையும் படிச்சேன் ஐயா,”
  “ என்ன கவிதை? “
  எனக்கு இன்ப அதிர்ச்சியாய் இருந்தது.
  “ நிசமாவா?”
 ஆம் என்பது போல் தலையாட்டினாள்.
” இந்தா இத வச்சுக்கோ. ” சாக்லேட்டை அவள் கையில் திணித்தேன்,.
 “ அப்புறம் சொல்லும்மா.”
 “ வள்ளுவரப் பத்தி ஐயனின் ஐம்புலன்கள் என்ற தலைப்புல நீங்க எழுதுன கட்டுரை ரொம்ப நல்லாயிருக்குதுன்னு மாலா டீச்சர் சொன்னாங்க ஐயாஅதயும் இப்பவே படிக்கணும் போல இருக்கு.”
 “ என்னது மாலா டீச்சர் சொன்னாங்களாஇருக்காதேகாலயில கூட என்னப் பாத்தாங்கஒன்னும் சொல்லலியே?”
 “ இல்லங்கய்யாஇன்னிக்கு வகுப்புல குறள் நடத்துறப்போ இத பத்திச் சொன்னாங்க.”
 “ அப்புறம் வேற என்ன சொன்னாங்க? “
 “ உங்களோட பல கட்டுரைகளையும் பத்திச் சொன்னாங்கய்யா” .
 “ பட்டுக்குட்டிஅப்படியா சொன்னாங்க? “
அவள் பலமாகத் தலையாட்டினாள்அவளின் கண்கள் மேசை மீதிருந்த மற்றொரு சாக்லேட்டின் மீது லயித்திருப்பது தெரிந்தது.
 “ இந்தா இதயும் வச்சிக்கோ ” என்றேன்
  “ வேண்டாங்கய்யா, ”
  “ சும்மா வச்சுக்கோ எழில். ”
  “ அப்புறம் ? “
  “ காளிகாம்பாள் டீச்சரும் பள்ளிக்கூடத்த பத்தி நீங்க எழுதுன நானும் கரும்பலகையும் கவிதையப் பத்திச் சொன்னாங்க. ”
 “ அப்படியா? “
      நான் மகிழ்வின் உச்சத்திலிருந்தேன்இருக்காதா பின்னேஎன் எழுத்தின் மணம் அனைவரின் உள்ளத்திலும் ஏதோவொரு துள்ளலை ஏற்படுத்தியிருந்ததை எழிலினியின் பேச்சு உறுதிப் படுத்தியது..
     “ அப்புறம் இராசசேகரன் சாரு கூட உங்க நண்பர் முத்துநிலவனோட ஒரு கட்டுரையை வாசிச்சுக் காமிச்சாங்கய்யாஅதனோட தலைப்பு கூட.. “
நான் முந்திக்கொண்டேன்.. ஏனெனில் முத்துநிலவன் என் நண்பர் மட்டுமல்லஎன் வலைப்பூவின் ஒரு வேர் அவரால் ஊன்றப்பட்டது.
 “ ஐயாஅந்த சாக்லேட்டையும் கொடுத்தீங்கன்னா.. “
 இழுத்தாள் கமலினி.
 “ இந்தாப்பாஎல்லாம் உனக்குத் தான் . வச்சுக்கோ. ” என்றவாறே மிகிழ்ச்சியாக மீதியிருந்த சாக்லேட்டையும் கொடுத்தேன்.
 “ நாளைக்கும் வந்து சொல்லு “  என்றேன் ஆர்வமாக.
 “ சரிங்கய்யா, ” என்றபடி சிட்டாகப் பறந்து போனாள்.
    கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தேன்மனதில் கொஞ்சம் கர்வம் வந்திருந்தது.
பாரதியின் ஒரு முகப்பொலிவு எனக்கு வந்த்தாய் என் மனம் கூறிக்கொண்டது.
    “ இந்தத் தமிழய்யாவப் பாருபிறந்த நாள் வாழ்த்துக்காகக் கொடுத்த சாக்லேட்டையெல்லம் பெரிய கொடைவள்ளல் மாதிரி எழிலினிக்குத் தூக்கிக் கொடுத்திட்டாருசே, ”
   என் பெயர் அடிபடவே என் காதுகள் உற்றுக் கவனித்தன.
   கமலா டீச்சர் காளிகாம்பாள் டீச்சரிடம் கூறிக்கொண்டிருந்த்து கேட்டது.
   “ அதுனால என்ன டீச்சர்? “
  “ இல்லப்பாஎழிலினி இன்னிக்கு தன்னோட தங்கச்சிகளுக்கு முட்டாய் வாங்கிக் கொடுக்க காசு கொண்டு வரல போலஉடனே அந்த கிளாஸ் மேனகா எழிலினிகிட்ட போயி , தமிழய்யாவப் போயி பாருஅவரோட படைப்புகள பத்தி புகழ்ந்து பேசுஉனக்கு முட்டாய் தருவாருஏன்னா ஏழாம் வகுப்பு பிரகாஷ் இப்ப தான் அவர்கிட்ட முட்டாய் கொடுத்திட்டுப் போனான்அத உன் தங்கச்சிகிட்ட கொடுத்து சமாளிச்சிக்கோன்னு சொன்னத கேட்டதும் எனக்குத் தூக்கி வாரிப் போட்டிருச்சு.
தன் கைக்காசு போட்டு முட்டாய் வாங்கி என்னக்கித் தமிழய்யா கொடுக்கிறாரோ அன்னக்கித் தான் அவரோட படைப்புகள ஸ்டூடன்ஸ் படிப்பாங்க. “
     எனக்கு முன்னால் என் பெருநாழி சிரித்துக் கொண்டிருந்தது.

                                                                 ( தொடரும்..)

39 comments:

 1. வலைச் சரத்திற்கு வருக வருக என வரவேற்கின்றேன்
  தொடக்கமே அருமை நண்பரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர். தங்களின் ஊக்கம் எனக்குப் பெரும் பேறு.

   Delete
 2. அசத்தலான ஆரம்பம். வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி தோழர்.

   Delete
 3. Replies
  1. மிக்க நன்றி தோழர். தங்களின் இடுகைகளுக்கு ஈடு கொடுக்க முடியுமா பார்ப்போம்.

   Delete
 4. அட்டகாசம் போங்க...! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஐயா,வணக்கம். எல்லாம் உங்களால் தான். புதுக்கோட்டை வகுப்பு எங்களைப் பக்குவப்படுத்தியுள்ளது. குறைகளைச் சொல்லுங்கள் தோழர். நன்றி.

   Delete
 5. வருக வருக!.. என அன்புடன் தங்களை வரவேற்கின்றேன்.
  சிறப்புடன் தொடர்வதற்கு நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. வரவேற்பிற்கு நன்றி தோழர்.

   Delete
 6. தொடக்கம் அருமை...தொடர்கிறோம். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி தோழர்.

   Delete

 7. ‘அருமையான ஆரம்பம் பாதி முடிந்தாற்போல்’ என்பது ஆங்கிலப் பழமொழி. அருமையாய் ஆரம்பித்திருக்கிறீர்கள். வெற்றிகரமாக பணியை முடிக்க வாழ்த்துக்கள். நீங்கள் உங்களின் படைப்புகளுக்கு கொடுத்திருக்கும் இணைப்பு திரும்பவும் இதே பக்த்திற்குத்தான் வருகிறது. சரி செய்யவும்.

  ReplyDelete
 8. வணக்கம்
  ஐயா
  அட்டகாசமான அசத்தல் இந்த வாரம் வலைச்சரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழர். தங்களின் ஊக்கம் என் எழுத்துகளைக் கூராக்கும்.

   Delete
 9. முதல்நாள் பார்த்த மாலா டீச்சர் உங்ககிட்ட சொல்லலங்கிறதுக்காக, முந்தினநாள் பார்த்த நீங்களும் எங்கக்கிட்ட சொல்லல பாருங்க... அய்யா, அருமையான தொடக்கம் அய்யா... அசத்துங்க.. ஆழமான செய்திகளை அழகுத்தமிழில் சொல்லுங்க... அப்படியே உங்கள் “இந்தியா டுடே“கதைகளையும் உங்கள் தளத்தில் ஏற்றுங்கள் அ்யயா. என்னையும் உங்கள் அறிமுகத்தில் சேர்த்துச் சொன்னதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கமும். உங்களின் தொடர்பயணத்தில் வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஒரு மைல்கல் ஆக வாழ்த்துகள். வணக்கம்.

  ReplyDelete
  Replies
  1. இயல்பாய் வரவேடுமென்ற உந்துதலில் எழுதினேன் ஐயா. ம்கூம் வரவில்லை. வர முயற்சி செய்கிறேன் ஐயா. தங்களின் வழிகாட்டுதல்கள் என் எழுத்தின் உயிப்பென்று நான் சொல்லவும் வேண்டுமோ?

   Delete
 10. அன்பின் குருநாத சுந்தரம்

  பதிவு அருமை - துவக்கம் நன்று - நாளை முதல் இன்னும் சிறப்பாக எழுத நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. இன்னும் சிறப்பாக என்பது இரண்டாம் பதிவிற்கு ஊக்கமூட்டுவதாக உள்ளது ஐயா. முதல் பதிவு ஓரளவு நன்றாக உள்ளதா ஐயா?

   Delete
 11. துவக்கமே தூள் பறக்கிறது!
  வாருங்கள் வலைச் சரத்தை
  நறுமணங் கமழும் சரமாக தொடுப்பதற்கு!

  நாராக நாம் இருப்போம்!-நற்றமிழ்
  மனம்தரும் மாலையை
  நீவீர்
  சூடிடவே!

  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. நாராக நான் இருப்பேன்!-நற்றமிழ்
   மனம்தரும் மாலையை
   நீவீர்
   சூடிடவே! - மிக்க நன்றி தோழர்/

   Delete
 12. ஹா.....ஹா....ஹா...செம தொடக்கம்:))) அருமை அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. மிக்க நன்றி தோழர். கஸ்தூரியையும் கொஞ்சம் வரச்சொல்லுங்கள் !

   Delete
 13. வாழ்த்துக்கள் தொடருங்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தியமைக்கு நன்றி தோழர்.

   Delete
 14. ஆஹா சுவாரஸ்யமான தொடக்கம்.....

  பிரகாஷ் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க அழைத்ததுமே சுடச்சுட காஃபியும் ஜில்லென்ற ஐஸ்க்ரீமும் ஒன்றாய் வயிற்றுக்குள் இறங்கியது போன்று தோன்றியது உங்கள் வரிகளை படிக்கும்போது.

  நண்பரை வழியில் சந்தித்து, குட்டிகளை ஈன்ற நாயை சந்தித்து, பள்ளியில் முட்டாய் வாங்க வந்த எழிலினி சொன்ன படைப்புகள் எல்லாமே ரசிக்கவைத்தது...

  அருமையான அசத்தலான தொடக்கம்..

  தொடருங்கள்... உடன் பயணிக்கிறோம்..

  அன்பு வாழ்த்துகள் !

  த.ம.2

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழர். உங்களின் எழுத்தூக்கத்திற்கு என் வணக்கங்கள்.

   Delete
 15. ஆசிரியருக்கு வணக்கம். வருக வருக என வரவேற்கிறேன்.
  த.ம..3

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா!. புதுக்கோட்டையில் சந்தித்ததை நினைவு கூர்ந்தமைக்கு மிக்க நன்றி.

   Delete
 16. வாழ்த்துக்கள் சார்,நீங்கஉங்கபடத்த போட்டதாலதான்
  ஆகா நம்ம சாராச்சேன்னு கண்டுபிடிக்க முடிந்தது
  தொடக்கமே தூள் சிறக்கட்டும் தங்கள் பணி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி. வாழ்த்துக்கு வணக்கம்.

   Delete
 17. முதல் நாளின் இனிய பயணத்தில் கலந்துகொண்ட அன்புள்ளங்களுக்கு நாளைய கவிதைப்பயணத்தில் கலந்துகொள்ள அழைக்கிறேன்.

  ReplyDelete
 18. சிறப்பான ஆரம்பம். பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ஐயா.

   Delete
 19. அறிமுகம் அருமை. தயக்கத்துடன் தாங்கள் பொறுப்பேற்றாலும் சிறப்பாக ஆசிரியப்பணியை ஆற்றிவருவதை தங்களின் பதிவுகள் உணர்த்துகின்றன.

  ReplyDelete
 20. தூயதமிழில் தங்களின் அறிமுகம் அருமை அண்ணா !!!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது