07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label சீனா. Show all posts
Showing posts with label சீனா. Show all posts

Sunday, February 1, 2015

செல்விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு (01.02.2015 ) ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட சக  பதிவர் சகோதரி கலையரசி   தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள்                                                                                 :  007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்                                                              :  097
அறிமுகப் படுத்திய பதிவுகள் :  ( சுய அறிமுகம் உள்ளிட்ட )   : 098
பெற்ற மறுமொழிகள்                                                                                : 302
பெற்ற தமிழ் மண வாக்குகள்                                                                 : 033
வந்து பார்வையிட்ட சக பதிவர்கள்                                                     : 1390
சகோதரி கலையரசி அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.


நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ( 02.02.2015 |) ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சகோதரி உமையாள் காயத்ரி இணக்கம் தெரிவித்துள்ளார். 

இவரது சொந்த ஊர் தேவகோட்டை
திருமணமான பின் 22 1/2 வருடங்கள் ஓசூர் வாசம்.
பின் கணவரின் பணியின் நிமித்தமாக 3 1/2 வருடங்கள் ஆந்திரா (கடப்பா பக்கம்) வாசம்
இப்போதும் கணவரின் பணியின் காரணமாய் 2 1/2 வருடங்களாக எகிப்தில் வசித்துக் கொண்டு இருக்கிறார்.
அன்பாய் ஒரு மகன் ஆஸ்திரேலியாவில் எம்.பி ஏ.படிக்கிறான்.
உமையாள் காயத்ரி என்கிற  பெயரிலெயே எளிமையான யதார்த்தம் என்கிற  ப்ளாகில் எழுதி வருகிறார்.
கவிதை, சிறுகதை, சமையல், அனுபவம், கலை, பார்த்த இடங்கள்,
புகைப்படம், என இவருடைய ரசனைகளை பகிர்ந்து கொள்கிறார்.

நல்வாழ்த்துகள் கலையரசி 

நல்வாழ்த்துகள் உமையாள் காயத்ரி  


நட்புடன் சீனா

மேலும் வாசிக்க...

Sunday, January 11, 2015

செல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் இரு வாரத்திற்கு (11.01.2015 )ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமைச் சகோதரி ஆதி வெங்கட் - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் வித்தியாசமான முறையில் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் காண வேண்டிய இடங்கள் என்ற தலைப்பில் ஏறத்தாழ நாற்பது இடங்களை அறிமுகப் படுத்தி - சக பதிவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும் ஏறத்தாழ பதினைந்து பண்டிகைகளயும் அவை தொடர்பான தகவல்களையும் அறிமுகப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 014
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 061
அறிமுக படுத்திய பதிவுகள் : 087
பெற்ற மறுமொழிகள் : 492
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 075

இன்று வரை தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி - பதிவுகள் இட்டு - சிறந்த முறையில் பணியாற்றிய சகோதரி ஆதி வெங்கட்டினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரி ஆதி வெங்கட்டினைப் பாராட்டி - சென்று வருக - நலம் பெறுக என வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும் சக பதிவர் கவிப்ரியன் இணக்கம் தெரிவித்துள்ளார். இவர் "மறக்க முடியாத நினைவுகள்" என்னும் பெயரில் வலைப்பூ எழுதி வருகிறார்.

இவர் வேலூருக்கு அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.பத்தாண்டுகளாக சென்னை வாசம் - அதன் பிறகு பணி நிமித்தமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை விட்டு வெளியே வசிக்கிறார் தற்போது ஒரிசாவில் வசித்து வருகிறார்.தமிழ் மொழி வளர்ச்சியில் ஈடுபாடு உள்ளவர், அதிகம் வாசிப்பவர்.

இணையத் தொடர்பு ஏற்பட்ட பின்னர் வலைப்பூக்களைப் படிக்கும் வாய்ப்பு பெற்றவர். அதன் தாக்கமாய் " மறக்க முடியாத நினைவுகள் " என்னும் தலைப்பில் இவரது கடந்த காலம் மற்றும் நிகழ் காலம் நினைவூட்டும் நிகழ்வுகளைப் பதிவு செய்து" வருக.. வருக.. என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் கவிப்ரியன் 
நல்வாழ்த்துகள் ஆதி வெங்கட் 

நட்புடன் சீனா வருகிறார்.

நண்பர் கவிப்ரியன் நாளை ( 12.01.2015 ) காலை ஆறு மணி முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்று, விதிமுறைகளின் படி பதிவிடத் துவங்குவார். அவரை வாழ்த்தி 
மேலும் வாசிக்க...

Sunday, December 28, 2014

செல்விருந்தோம்பி வரு விருத்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு (28.12.2014 )ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் குருநாதன்   தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 012
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 076
அறிமுக படுத்திய பதிவுகள் : 076
பெற்ற மறுமொழிகள் : 215
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 049 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சகொதரி ஆதி வெங்கட்  இணக்கம் தெரிவித்துள்ளார்.  

இவர் பிறந்தது சிவகங்கைச் சீமையில். படித்தது வளர்ந்தது எல்லாம் கொங்கு நாடாம் கோவை மாநகரில். திருமணத்திற்கு பின் பத்து வருடங்கள் தலைநகர் தில்லியிலும், தற்சமயம் பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்திலுமாக வாசம். படித்தது D.M.E AUTOCAD, CNC (TURNING & MILLING). : ஒரு சுட்டிப் பெண்ணுக்கு அம்மாவாக, - சமுதாயத்தில் சிறப்பான பெண்ணாக மகளை - மாற்ற என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்பதை……:முழு கவனத்துடன் சிந்தித்துக் கொண்டு இருக்கிறார்.

இன்று வரை தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி - பதிவுகள் இட்டு - சிறந்த முறையில் பணியாற்றிய நண்பர் குருநாதனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சகோதரி ஆதி வெங்கட் நாளை ( 29.12.2014 ) காலை ஆறு மணீ முதல் பதிவிடத் துவங்குவார்.

சகோதரியினை வாழ்த்தி நாளை முதல் ஒரு வார காலத்திற்கு ஆசிரியப் பொறுப்பினைத் திறம்பட நடத்த வேண்டும் எனக் கூறி விடை பெறுகிறேன்.

நல்வாழ்த்துகள் குரு நாதன்

நல்வாழ்த்துகள் ஆதி வெங்கட் 

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

Sunday, November 23, 2014

செல்விருந்தோம்பி நல்விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே
09.11.2014 ல்  முடியும் வாரத்திற்குஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் சதங்கா  தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 053
அறிமுக படுத்திய பதிவுகள் : 054
பெற்ற மறுமொழிகள் : 069
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 9 

10.11.2014 முதல் துவங்கும் வாரத்தில் இருந்து )   இரு வார காலத்திற்கு ( 23.11.2014  ) ஆசிரியப் பொறுப்பினை ஏற்று அன்புடனும் ஆர்வத்துடனும்  வெங்கட் நாகராஜ்  அறிமுகப் பதிவுகளை வெளியிட்டு தான் ஏற்ற பொறுப்பினை   சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி இன்று மாலையில் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.  

இவர் இட்ட பதிவுகள் : 014
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 72
அறிமுக படுத்திய பதிவுகள் : 137
பெற்ற மறுமொழிகள் : 541
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 74
இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தார்.  ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாம் வருடமாக பதிவு எழுதுவது தொடர்கிறது.  பிறந்தது நெய்வேலியில். தற்போது வசிப்பது இந்தியத் தலைநகரில்.  பயணம் செய்வது, புத்தகங்கள் வாசிப்பது, புகைப்படங்கள் எடுப்பது ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவர்.  இருபத்தி மூன்று வருடங்களுக்கு மேலாக தலைநகர் வாசம். மனைவியும் மகளும் இரு வலைப்பூக்கள் வைத்துக் கொண்டு  தனித் தனியாகப்  பதிவுகளை எழுதி வருகிறார்கள். 

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ( 24.11.2014  ) ஏற்கும்  மஞ்சு பாஷினி சம்பத் குமாரினை  வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு ( 30.11.2014 ) சிறந்த  பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளை  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறி வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இவர் பெயர் மஞ்சுபாஷிணி… இவரது  கணவர் சம்பத்குமார், இவரது  குழந்தைகள் விக்னேஷ்ராம், இபானேஷ்ராஜ், அம்மா, தம்பி தீபக்ராஜேஷ் (குடும்பம்) எல்லோருடனும் குவைத்தில் வசிக்கிறார். கதை, கவிதை, பாடல் எல்லாமே இஷ்டம் இவருக்கு. 

மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ரசனை கண்டிப்பாக இருக்கும். ரசனை இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே முடியாது. இல்லை என்றால் பிறந்து இத்தனை வருடங்கள் ஒவ்வொரு நொடியும் ஒரு அட்வென்ச்சர் போல் அடுத்து என்ன நடக்கும் என்று அறியாமல் இவரது குடும்பத்தினர் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்பார்களா ??? 

இவரது தளத்தில் இவர் இவரது  படைப்புகள் பதிவதை விட பிறரின் படைப்புகள் வாசித்து இவர்  எப்படி உணர்கிறார் ? அவர்கள் வரிகளை படித்து என்பதை இவரது  கருத்தாய் சமர்ப்பிப்பதில் இவருக்கு  கூடுதல் விருப்பம்.

நல்வாழ்த்துகள் சதங்கா 

நல்வாழ்த்துகள் வெங்கட் நாகராஜ்

நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி சம்பத் குமார் 

நட்புடன் சீனா 
மேலும் வாசிக்க...

Sunday, November 9, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் வாரத்திற்கு (09.11.2014 )ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் சதங்கா  தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 053
அறிமுக படுத்திய பதிவுகள் : 054
பெற்ற மறுமொழிகள் : 069
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 9 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  வெங்கட் நாகராஜ்   இணக்கம் தெரிவித்துள்ளார்.  

இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தார்.  ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாம் வருடமாக பதிவு எழுதுவது தொடர்கிறது.  பிறந்தது நெய்வேலியில். தற்போது வசிப்பது இந்தியத் தலைநகரில்.  பயணம் செய்வது, புத்தகங்கள் வாசிப்பது, புகைப்படங்கள் எடுப்பது ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவர்.  இருபத்தி மூன்று வருடங்களுக்கு மேலாக தலைநகர் வாசம்.

நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  வெங்கட் நாகராஜினை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு சிறந்த  பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவுகளைத்  தருக எனக் கூறி வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


நல்வாழ்த்துகள் சதங்கா 

நல்வாழ்த்துகள் வெங்கட் நாகராஜ்

நட்புடன் சீனா 









































மேலும் வாசிக்க...

Sunday, September 14, 2014

செல்விருந்தோம்பி நல்விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் முனைவர் இரா குண சீலன் .

இவரது  வலைத்தளம்   :  வேர்களைத் தேடி : www.gunathamizh.com  .   - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து   முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.  

 இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்             : 065
அறிமுகப் படுத்திய பதிவுகள்               : 065
பெற்ற மறுமொழிகள்                            : 168
வருகை தந்தவர்கள்                              : 1281

முனைவர் இரா.குணசீலன் பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

முனைவர் இரா குணசீலன்   -    இவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   கீத மஞ்சரி  என்னும் தளத்தில் எழுதிவரும் கீதா மதிவாணன்   ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் (http://geethamanjari.blogspot.co.au/)

இவரது பெயர் கீதா மதிவாணன். பிறந்த ஊர் திருச்சி, இந்தியா.  கடந்த ஆறேழு வருடங்களாக ஆஸ்திரேலியாவில் குடும்பத்துடன் 
வசித்துவருகிறார்.. பள்ளிக் காலத்திலிருந்தே எழுத்தில் ஆர்வம் உண்டு. இவருடைய கீதமஞ்சரி என்னும் வலைத்தளத்தில் பல சிறுகதைகள், கவிதைகள், தொடர்கதைகள், கட்டுரைகள், இந்தி, ஆங்கில மொழிபெயர்ப்புக் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கதைகள் எழுதியுள்ளார்.. தினமலர் பெண்கள் மலர், மஞ்சரி போன்ற பத்திரிகைகளிலும் வல்லமை, அதீதம், நிலாச்சாரல், பதிவுகள் போன்ற இணையதளங்களிலும் இவரது  படைப்புகள் வெளியாகியுள்ளன.  


நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்கும்  கீதா மதிவாணனை -வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்தில் சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளையும்  அறிமுகம் செய்யும் பதிவினைத்  தருக எனக் கூறுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.


நல்வாழ்த்துகள்  குணசீலன் 

நல்வாழ்த்துகள் கீதா மதிவாணன்  

நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது