வலைச்சரத்தில் - ஒரு - கதம்ப - மாலை...!!!
➦➠ by:
உமையாள் காயத்ரி
மனிதனே
ஒரு
கதம்பம் தானே...?
நவரச
நாயகர்கள் நமக்குள்ளே இருக்கிறார்களே...இன்பம்,நகை,கருணை,கோபம்,வீரம்,பயம்,அருவருப்பு, அற்புதம்,சாந்தம்.
கதம்ப
மாலை
பார்க்க அழகாக
கலர்
கலரா
இருக்கும். ஃப்ரூட் சாலட்
பழக்
கலவையில பல
சுவை , பல மணத்தோட இருக்கும். கோலம்
பல
வண்ணத்துல அழகா
வாவான்னு கூப்பிடும். போசும்
போதும்
ஒரே
டாபிக்கா இல்லாம
நாம
தாவி
தாவி
பேச்சு
சுவாரஸ்யத்துல ஒன்னுல
இருந்து ஒன்னுன்னு அப்படியே போய்கிட்டே இருப்போதும். கடைசியில எதை
பேச
வந்தோம்னு மறந்து
போகும்
சில
நேரங்களில்...!!!
விருந்துன்னா..... பாருங்க அப்பப்பா..வெரைட்டியான ஐடங்கள். ஸ்வீட்ல இருந்து ஆரம்பித்து இலைமுழுக்க பலவிதமான பதார்த்தங்கள். ஆகா
ஒரு
புடி
பிடிக்க வேண்டியது தான்
அப்படின்னு சந்தோஷமாக இருக்கும் சாப்பிடும் முன்னாலே...இல்லையா...? ஆடி
பதினெட்டுக்கு செய்வார்கள் பாருங்கள் கதம்ப
சாதம்.
எத்தனை
வகை
வகையா...?
கலர்கலரான வண்ணங்கள்
கலந்து கட்டி வரும் ஓவியம்
காவியம் தான் இல்லையா...?
கலர் கலரான பெயிண்டை
காணும் போது அடடா......
என்னமா இருக்கும்....!!!
அது குழைந்து குழைந்து......
நெகிழ்ந்து இருக்கையில் - நம்மையும்
நெகிழ வைத்து விடும்...
நெகிழ்ந்த தூரிகையோ
மனமில்லாமல்....
இடம் மாறும்...
அதற்கு அடையாளம்
அது என தெரியாமல்...?
அழகாய் மாறி விடும்
நிறந்தரமாய்....
நம் மனதிலும் கூடத்தான்....இல்லையா...?
கதம்ப மாலைகளின் மலர்களைக் காண்போமா...
பாலகுமாரன் பேசுகிறார் என்னும் தன்னுடைய வலைப்பூவில் பாலகுமாரன் அவர்கள் சாமியை
பற்றி பதிவிட்டு இருக்கிறார். என்னைக் கலக்கிய மகாபாரதம் நாம் இதை கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு என நினைக்கிறேன். மாகாபாரம் பற்றி இன்னும் மேலும் நாம் புரிந்து கொள்ளலாம்.
பாலகுமாரன்...ஏனோ ...தொடராமல்...தன் தளத்தி வைத்து இருக்கிறார்...இன்னும் நிறை எழுதினால் நன்றாக இருக்கும். பாருங்கள் நண்பர்களே.
shirdisaibabasayings தினமும் ஷீரடி
சாய்
பாபாவின் ஒரு
செய்தியை Shirdi Sai baba Sayings என்னும் வலைத்தளத்தில்
காணலாம்.
கரடி பொம்மை செய்முறை (teddy bear making ) செய்வது எப்படின்னு சங்கீதா
தன்னுடைய வலைத்தளத்தில் சொல்லிக் கொடுக்கிறார். மணமக்களுக்கான மெஹந்தி டிசைன் நீங்க
தேர்வு செய்து போட்டுக்கனுமா?... அப்படின்னா
இவருடைய ஆல்பத்தில் இருந்து தேர்வு செய்து
கொள்ளலாம். ஆல்பம் இதோ....மணமகளுக்கான மெஹந்தி டிசைன் / bridal mehndi design/mehndi design.
பின்னூட்டத்தில்நம் வலைப்பதிவிற்க்கு இணைப்பு கொடுப்பது எப்படி.என் று நண்பர் முரளிதரன் மூங்கில் காற்றில் அழகாக விளக்கி இருக்கிறார். மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பயன் பெறுங்கள்.
பச்சை சேலைகட்டி வா
என கலியுகம் வலைப்பூவில் நண்பர் தினேஷ்குமார் வயக்காட்டை பார்த்து உன் பக்கத்துல வந்து
சொக்கி நிற்க ஆகாத தலைமுறை
நான் என சொல்லிகிறார். நாமும்
அப்படித்தான் இருக்கிறாம் இல்லையா.
முத்துச்சிதறல் வலைத்தளத்தில் நிறை வகைவகையான முத்துக்கள் கொட்டிக்கிடக்கின்றன. சகோதரி மனோ சாமிநாதனின் ஓவியங்கள் வெகு அழகு....என்னமாய் வரைந்து இருக்கிறார்கள்.
அலைகடலும் வயிறுப்பசியும்... என்கிற ஓவியம் வாட்டர் கலரில் வரைந்து இருக்கிறார் சூப்பர். நம் கண்களுக்கு நிறைய விருந்துகள் ....இருக்கின்றன சென்று பாருங்கள். 3 கண்ணாடி ஓவியங்கள் பதிவிட்டு இருக்கிறார். ? மிக அழகான ஓவியங்கள் அவை அனைத்தும்.
கண்ணாடி ஓவியம் எப்படி வரைவது..என்பதையும் சொல்லித் தருகிறார் பயன் பெறுங்கள். செராமிக் மலர்கள் களை எவ்வளவு கலை நுணுக்கத்துடன் செய்ய முடியும் என்பதையும் இங்கு காணலாம்.
கண்ணாடி ஓவியம் எப்படி வரைவது..என்பதையும் சொல்லித் தருகிறார் பயன் பெறுங்கள். செராமிக் மலர்கள் களை எவ்வளவு கலை நுணுக்கத்துடன் செய்ய முடியும் என்பதையும் இங்கு காணலாம்.
அப்பா திருப்பதியில் இருந்து வாங்கிக் கொடுத்த பெருமாளுக்கு அனுராதா பிரேம் அழகாக வர்ணம் செய்து இருக்கிறார் பாருங்களேன் அவரின் அனுவின் தமிழ் துளிகளில்... வர்ணம் செய்த பெருமாள்
வைகுண்ட ஏகாதேசி யைப் பற்றி யும், அன்றைய விரதம் பற்றியும் சுபா ஆனந்தி தன்னுடைய Subha Ananathi வலைத்தளைத்தில் சொல்லி இருக்கிறார் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
கவிப்ரியன் அவர்கள் கலிங்க நகர் மறக்கமுடியாத நினைவுகள் என்னும் தன் வலைப்பூவில் பரோட்டாவும் தமிழர் பண்பாடும்... தமிழர்கள் வாசிக்கவேண்டிய பதிவு என பகிர்ந்து இருக்கிறார் சென்று பாருங்களேன்.
கோலம் போடத் தெரிந்தால் போதும் மெஹந்தி போடலாம். அப்படின்னு சொன்னா ....அட நமக்கு தெரியாதா.... நாம தான் தினமும் வாசலில் போட்டு கலக்குறோமே என நினைக்கும் பெண்களே...... எங்க கிளம்பிட்டீங்க ...கொஞ்சம் நில்லுங்க நானும் வருகிறேன். புதுகைத்தென்றல் லுக்கு சேர்ந்தே போகலாம். மருதாணி கோனை நாம கடைல வாங்காம நாமே தயாரித்தும், மற்றும் போட டிசைனும் தந்து அதற்கு டிப்ஸும் தந்தா.... எப்படி இருக்கும்.? என்னம்மா.....(ஆண்கள்) நாங்க வரமாட்டமா...எங்க குழந்தைகளுக்கு போட....... என கேட்கும் சகோதரர்களே....வாருங்கள் வாருங்கள்.
.
.
ஆச்சி ஆச்சி வலைத்தளத்தில் thirumathi bs sridhar
அவர்கள் உபயோகித்த உடையில் பை (BAG ) செய்வோம் என அழகான பழைய ஜீன்ஸ் பாண்டில் செய்து காட்டி சொல்லித் தருகிறார்கள். கொள்ள அழகாக இருக்கிறது. பார்த்து பயன் அடையுங்கள்.
மனசு தளத்தில் அமுதா முருகேஷன் விந்தை மனிதர்தாம் நீவிர்! என கவிதை வாயிலாக இயற்கையும் மனிதனையும் சேர்த்து என்ன உணர்வுகளைக் கொட்டி இருக்கிறார் பாருங்கள்.
கமலாவும் நிட்டிங்கும் - கடுகு தாளிப்பு வலைப்பூவில் கடுகு ஆண்கள் ஸ்வெட்டர் பின்னியது கிடையாது என ஒரு பத்திரிக்கையில் படிக்கவும் எனக்கு ( கடுகு) கொதித்தது எனவும், ஆகையால் அவர் முயன்று நிட்டிங் போட்டது எப்படி என நகைச்சுவையாக பதிவிட்டு இருக்கிறார். சிரித்து சிரித்து...முடியலைடா சாமி....!
ஆஹா,,,,,, மகாகவிக்குத்தான் எத்துனை நம்பிக்கைச் சிந்தனை.
ஆனால் நடைமுறையில் பாரதி சிந்தனைப்போல் உலகம் இனியதாகவா இருக்கிறது. நாம் ஒவ்வொருவரும் நம் மனசாட்சியிடம் இக்கேள்வியை எழுப்புவோமானால் பதில் என்னவாக இருக்கும்
கசப்பான மவுனம் தானே என இயம்புகிறார்.
பாருங்களேன்.
எதிர் விளைவை ஏற்படுத்தும் ஆன்டிபாயாடிக்ஸ் [antibiotics] என்பதை கலாகுமரன் இனியவை கூறலில் தெளியாக உரைத்திருக்கிறார். டக்டக் என ஆன்டிபயாட்டிக்ஸ் சாப்பிடுபவர்கள் உடனே போய் படியுங்கள்.
தமிழ் அறிவு கதைகள் (கதைக் களஞ்சியம் - குழந்தைகளுக்காக பாபு நடேஷன் ) இவர் குழந்தைகளுக்காக குட்டி குட்டி கதைகளை பதிவுடுகிறார். தினம் ஒரு கதை சொல் என கேட்கும் குழந்தைகளுக்கு இதை படித்து நாம் கதை சொல்லலாம்.. தமிழ் படிக்க ஆரம்பித்து இருக்கும் குழந்தைகளை இதை வாசிக்க வைக்கலாம். அவர்களுக்கு வாசிப்பு பழக்கம் ஏற்படும் அல்லவா..? நன்றியுள்ள காக்கை வாசியுங்கள் இங்கே.
இணையக் குயிலில் துரை டோனியல் வெறும் டவலைப் பயன்படுத்தி உங்கள் உயர் இரத்த அழுத்தத்தை இயற்கையான முறையில் கட்டுப்படுத்தலாம் என்கிறார். உபயோகமான தகவல் பாருங்களேன்.
தனிமை உங்களை வாட்டுகிறதா.....? என்கிற பதிவை சாரதா அவர்கள் சாரதா சமையல் என்கிற தன்னுடைய வலைத்தளைத்தில் பதி விட்டு இருக்கிறார். இவரின் தளைத்தில் சமையல் மற்றும் பலவற்றை பகிர்ந்து கொள்கிறார் காணுங்களேன்.
காய்கறிக்கலை
காய்கறிக்கலை
காய்கறிகள் என் முன்னே...!
கலைவடித்தேன் கண் முன்னே...!!!
இந்த ஒருவாரமும் என்னுடன் வந்து ஊக்குவித்து கருத்திட்டும், தமிழ்மண வாக்குகள் கொடுத்தும் வந்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
எனக்கு கொடுத்த இப்பணியை என்னால் முடிந்த வரை திருப்தியாக செய்து இருக்கிறேன் என நினைக்கிறேன்.
வலை - வழி - கைகுலுக்கள் நண்பர்களே...!!!
என் வலைத்தளத்தில் உங்களை தொடர்ந்து சந்திக்கிறேன்.....வரட்டா.
இந்த ஒருவாரமும் என்னுடன் வந்து ஊக்குவித்து கருத்திட்டும், தமிழ்மண வாக்குகள் கொடுத்தும் வந்த நண்பர்கள் அனைவருக்கும் என் மனம் கனிந்த நன்றிகள்.
எனக்கு கொடுத்த இப்பணியை என்னால் முடிந்த வரை திருப்தியாக செய்து இருக்கிறேன் என நினைக்கிறேன்.
வலை - வழி - கைகுலுக்கள் நண்பர்களே...!!!
என் வலைத்தளத்தில் உங்களை தொடர்ந்து சந்திக்கிறேன்.....வரட்டா.








