வணக்கம் வலைச்சர நண்பர்களே...
தவிர்க்க இயலாத காரணத்தால் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் துவங்கும் வாரத்தில் வலைச்சரத்தில் பதிவுகள் வெளிவரவில்லை. ஒவ்வொரு நாளும் வலைச்சரத்தை எட்டிப் பார்த்து ஏமாந்த வாசகர்கள் எப்போதும் போல வலைச்சர பதிவுகளுக்கு தங்களின் ஆதரவைத் தருவார்கள் என்ற நம்பிக்கையில், சிற்சில வாரங்களில் ஆசிரியர் பொறுப்பினில் வலைப்பதிவர்களை அமர்த்த இயலாத நிலையில் உள்ளோம் என்பதை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
வலைச்சரத்தில் 22-02-2015 அன்று முடிந்த வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த சாஸிகா கிச்சன் வலைப்பதிவர் மேனகா அவர்கள் தமது ஆசிரியர் பொறுப்பை மிகுந்த ஆர்வமுடனும், பொறுப்புடனும், அனைவரும் பாராட்டும் படியாக செய்து முடித்துள்ளார்.
அவர் எழுதிய பதிவுகளில் சமையல் கில்லாடி பதிவர்கள் பலரையும் குறிப்பிட்டு சிறப்பான, சுவாரஸ்யமான வலைச்சர வாரமாக நமக்கு அளித்திருந்தார்.
அவர் தனது வலைச்சர வாரத்தில் ஏழு இடுகைகள் வரை எழுதி 250-க்கும் மேற்பட்ட மறுமொழிகளும், 2550 பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளது.
தனது வலைச்சர வாரத்தை சுவைபட முடித்த மேனகா அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
இந்த வாரத்தில் நாளை முதல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க "தேன் மதுரத்தமிழ்" என்னும் வலைப்பூவை எழுதி வரும் சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்களை அழைக்கின்றேன். இவர் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொள்வது இது மூன்றாவது முறையாகும்.
தேன் மதுரத்தமிழ் கிரேஸ் என்று பதிவர்கள் வட்டத்தில் அறியப்படும் அவரது முழுப்பெயர் கிரேஸ் பிரதிபா. மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்து வளாகத் தேர்வின் மூலம் பெங்களூருவாசியாகித் தற்பொழுது கணவர் மற்றும் இருமகன்களுடன் அட்லாண்டாவில் வசித்து வருகிறார்.
அவரது வலைத்தளப் பயணம் 2008இல் ஆரம்பித்தது. அப்போது ஆங்கிலத் தளம் ஆரம்பித்து கவிதைகள், அனுபவங்கள், கதைகள் என்று எழுதிக் கொண்டிருந்தார். அதன் பிறகு 2012இல் இருந்து 'தேன் மதுரத் தமிழ்' என்ற தமிழ்த் தளத்தைத் தொடங்கி இலக்கியம் கலந்து பதிவுகளை எழுதி வருகிறார். மதுரையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் 'துளிர் விடும் விதைகள்' என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.
கிரேஸ் பிரதிபா அவர்களை வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி "வருக.... வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
நல்வாழ்த்துக்கள் மேனகா..
நல்வாழ்த்துக்கள் கிரேஸ் பிரதிபா...
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....
மேலும் வாசிக்க...
வணக்கம் வலைச்சர நண்பர்களே...
வலைச்சரத்தில் இன்றுடன் முடிகிற வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த ரஞ்சனி நாராயணன் அம்மாள் அவர்கள் தமது ஆசிரியர் பொறுப்பை மிகுந்த ஆர்வமுடனும், அதிக திறமையுடனும் செய்து முடித்துள்ளார்.
அவர் எழுதிய பதிவுகளில் தமது அனுபவங்களை சுவாரஸ்யமாய் பகர்ந்ததோடு பதிவர்கள் பலரையும் குறிப்பிட்டு சிறப்பான, சுவாரஸ்யமான வலைச்சர வாரமாக நமக்கு அளித்தார்.
அவர் எழுதிய ஏழு பதிவுகளில் 350 மறுமொழிகளும், 2250 பக்கப்பார்வைகளும் கிடைத்துள்ளது.
தனது வலைச்சர வாரத்தை சுவைபட முடித்த ரஞ்சனி நாராயணன் அம்மாள் அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்க "சாஸிகா கிச்சன்" என்ற வலைப்பூவை எழுதி வரும் மேனகா சத்யா அவர்களை அழைக்கின்றேன். அவர் தற்போது குடும்பத்துடன் பிரான்ஸில் வசித்து வருகிறார். அவர் தன் வலைப்பூவில் தான் சமைத்த, ருசித்த உணவுகள் பற்றிய செய்முறை குறிப்புகளை பகிர்ந்து வருகிறார்.
மேனகா சத்யா அவர்களை வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி "வருக.... வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
நல்வாழ்த்துக்கள் ரஞ்சனி நாராயணன் அம்மாள்..
நல்வாழ்த்துக்கள் மேனகா சத்யா...
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....
மேலும் வாசிக்க...
வணக்கம் வலைச்சர நண்பர்களே...
வலைச்சரத்தில் நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த உமையாள் காயத்ரி அவர்கள் தமது ஆசிரியர் பொறுப்பை மிகுந்த ஆர்வமுடனும், அதிக திறமையுடனும் செய்து முடித்துள்ளார். அவர் எழுதிய பதிவுகள் 371 மறுமொழிகளும், 1560 பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளது.
தனது வலைச்சர வாரத்தை சுவைபட முடித்த உமையாள் காயத்ரி அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
இன்று முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க ரஞ்சனி நாராயணன் அம்மாள் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார். "திருவரங்கத்திலிருந்து" எனும் பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் இவர் தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார்.
2000 வது ஆண்டிலிருந்து பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்த இவர் 2011-லிருந்து வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இவருக்கு புத்தகங்கள் படிப்பது பிடித்த பொழுதுபோக்கு. பிடித்த எழுத்தாளர் திரு கி.ராஜநாராயணன். இணைய இதழ்கள் பலவற்றிலும் எழுதி வரும் இவர் இரண்டாவது முறையாக வலைச்சரம் ஆசிரியர் பதவியை ஏற்கிறார்.
ரஞ்சனி நாராயணன் அவர்களை வருக.. வருக... என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.
நல்வாழ்த்துக்கள் உமையாள் காயத்ரி..
நல்வாழ்த்துக்கள் ரஞ்சனி நாராயணன்...
நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே
இன்றுடன் முடியும் இரு வாரத்திற்கு (11.01.2015 )ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமைச் சகோதரி ஆதி வெங்கட் - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் வித்தியாசமான முறையில் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் காண வேண்டிய இடங்கள் என்ற தலைப்பில் ஏறத்தாழ நாற்பது இடங்களை அறிமுகப் படுத்தி - சக பதிவர்களை சுற்றுலாவிற்கு அழைத்துச் சென்றிருக்கிறார். மேலும் ஏறத்தாழ பதினைந்து பண்டிகைகளயும் அவை தொடர்பான தகவல்களையும் அறிமுகப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றிருக்கிறார்.
இவர் இட்ட பதிவுகள் : 014
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 061
அறிமுக படுத்திய பதிவுகள் : 087
பெற்ற மறுமொழிகள் : 492
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 075
இன்று வரை தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி - பதிவுகள் இட்டு - சிறந்த முறையில் பணியாற்றிய சகோதரி ஆதி வெங்கட்டினை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரி ஆதி வெங்கட்டினைப் பாராட்டி - சென்று வருக - நலம் பெறுக என வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும் சக பதிவர் கவிப்ரியன் இணக்கம் தெரிவித்துள்ளார். இவர்
"மறக்க முடியாத நினைவுகள்" என்னும் பெயரில் வலைப்பூ எழுதி வருகிறார்.
இவர் வேலூருக்கு அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர்.பத்தாண்டுகளாக சென்னை வாசம் - அதன் பிறகு பணி நிமித்தமாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை விட்டு வெளியே வசிக்கிறார் தற்போது ஒரிசாவில் வசித்து வருகிறார்.தமிழ் மொழி வளர்ச்சியில் ஈடுபாடு உள்ளவர், அதிகம் வாசிப்பவர்.
இணையத் தொடர்பு ஏற்பட்ட பின்னர் வலைப்பூக்களைப் படிக்கும் வாய்ப்பு பெற்றவர். அதன் தாக்கமாய் " மறக்க முடியாத நினைவுகள் " என்னும் தலைப்பில் இவரது கடந்த காலம் மற்றும் நிகழ் காலம் நினைவூட்டும் நிகழ்வுகளைப் பதிவு செய்து" வருக.. வருக.. என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் கவிப்ரியன்
நல்வாழ்த்துகள் ஆதி வெங்கட்
நட்புடன் சீனா வருகிறார்.
நண்பர் கவிப்ரியன் நாளை ( 12.01.2015 ) காலை ஆறு மணி முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்று, விதிமுறைகளின் படி பதிவிடத் துவங்குவார். அவரை வாழ்த்தி
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் ராஜலக்ஷ்மி பரமசிவம்
இவரது வலைத்தளம் : அரட்டை ( http://rajalakshmiparamasivam.blogspot.com ) )- தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
வலைச்சர விதி முறைகளின் படி பல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். சுய அறிமுகமும் உண்டு - முதல் பதிவில் அவரது பதிவுகளில் இருந்து சிறந்த - மற்றவர்களால் விரும்பக்கூடிய பதிவுகள் பலவற்றை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களும் பதிவுகளூம் மட்டுமே கீழ்க்கண்ட புள்ளி விபரங்களில் வருகின்றன.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 043
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 154
பெற்ற மறுமொழிகள் : 212
வருகை தந்தவர்கள் : 1512
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 020
இராஜலக்ஷ்மி பரமசிவம் பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.
இராஜலக்ஷ்மி பரமசிவத்தினை - அவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு மாயவரத்தான் எம்ஜிஆர் ரவிஜி ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்
இவரது தளத்தின் பெயர் :
மாயவரத்தான் எம்.ஜி.ஆர்
இவரது தளத்தின் முகவரி :: http://mayavarathanmgr.blogspot.com
இவரைப் பாராட்டி, வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
மயிலாடுதுறையில் பிறந்த மாயவரத்தான் எம்ஜிஆர் இரவி - எம்.எஸ்ஸி (கணிதம்) ,எம். ஏ. (மனோதத்துவம்),
பி.எட்.(கணிதம்), முது நிலை பட்டயப்
படிப்பு (மக்கள்
தொடர்பு) என பல்வேறு துறைகளீல் பட்டம் பெற்று தற்போது
புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில்
துணைக்கோட்டப் பொறியாளராகப்
பணியாற்றுகிறார்.
சக பதிவர் - நாளை முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் இரவிஜி இரவி அவர்களை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் இராஜலக்ஷ்மி பரமசிவம்.
மேலும் வாசிக்க...
அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர் இனியா. - இவரது வலைத்தளம் : kaviyakavi.blogspot.com - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் புதுமையாக ,ஏற்கனவே பிரபலமான பல பதிவர்களை அவர்களது பெயர்களையும் அவரகளது சிறப்பினையும் மட்டுமே குறிப்பிட்டு அறிமுகப் படுத்தி இருக்கிறார். இவர்களது பதிவுகளை அறிமுகப் படுத்த வில்லை.
இவர் வலைச்சர விதி முறைகளின் படியும் சில பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். சுய அறிமுகமும் உண்டு - முதல் பதிவில் அவரது பதிவுகளில் இருந்து சிறந்த - மற்றவர்களால் விரும்பக்கூடிய பதிவுகள் பலவற்றை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களும் பதிவுகளூம் மட்டுமே கீழ்க்கண்ட புள்ளி விபரங்களில் வருகின்றன. பிரபலமான பதிவர்கள் கீழ்க்கண்ட புள்ளி விபரங்களீல் வரவில்லை.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 062
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 087
பெற்ற மறுமொழிகள் : 384
வருகை தந்தவர்கள் : 1864
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 049
இனியா பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.
இனியாவினை - அவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு தியானா ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்
இவர் மதுரையில் பிறந்து வளர்ந்தவர்.. இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு முழுவதும் மதுரையில் படித்தவர்தான். தியாகராசர் பொறியியல் கல்லூரியிலிருந்து வளாகத் தேர்வு மூலம் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பெற்று பெங்களூர் சென்றார்..
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள். முதல் குழந்தை பிறந்தவுடன், அவளுக்காக மூன்று ஆண்டுகள் விடுப்பு எடுத்து மீண்டும் வேலையில் சேர்ந்தார்.. தற்பொழுது இரண்டரை வயதாகும், இரண்டாவது குழந்தைக்காக மீண்டும் விடுப்பில் இருக்கிறார். கூடிய விரைவில் வேலையில் சேர உள்ளார்.
இவரது முதல் குழந்தையைப் பற்றி, அவள் விளையாட்டுகளைப் பதிவு செய்யவே இவரது தளத்தை அவள் பெயரில் ஆரம்பித்தார்.. குழந்தைகளுடன் நேரம் செலவளிப்பதே இவரது பொழுது போக்கு. தற்பொழுது அமெரிக்காவில் வசிக்கிறார்.
இவரது தளத்தின் பெயர் பூந்தளிர்
இவரது தளத்தின் முகவரி :: http://dheekshu.blogspot.com.
இவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நல்வாழ்த்துகள் தியானா
நல்வாழ்த்துகள் காவிய கவி : இனியா
நட்புடன் சீனா
மேலும் வாசிக்க...