07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label Cheena (சீனா). Show all posts
Showing posts with label Cheena (சீனா). Show all posts

Sunday, January 25, 2015

செல் விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களெ ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு (25.01.2015 ) ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட சக  பதிவர் சகோதரி மனோ சாமிநாதன்   தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.

இவர் இட்ட பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 078
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 084 ( சுய அறிமுகம் உள்ளிட்ட ) 
பெற்ற மறுமொழிகள் : 300
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 040
வந்து பார்வையிட்ட சக பதிவர்கள்  : 1296

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஆசிரியப் பொறுப்பினை ஏற்க அன்புடனும் ஆர்வத்துடனும்  சகோதரி கலையரசி  இணக்கம் தெரிவித்துள்ளார்.  

காரைக்கால் இவர் பிறந்த ஊர்.  இப்போது இருப்பது புதுவையில்.தேசிய வங்கியொன்றில் சீனியர் எழுத்தராகப் பணியாற்றுகிறார். இவரது கணவரும் வங்கியில் வேலை செய்கிறார்.  இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளூம் உண்டு.   இருவருக்கும் திருமணமாகிவிட்டது. 

இவருக்குப் பிடித்த விஷயங்கள்.  உள்ளத்தனையது உயர்வு என்பதில் மிகுந்த நம்பிக்கை உண்டு.  இயற்கையில் மனமொன்றி ரசிப்பது தோட்ட வேலை இவை பிடித்த பொழுதுபோக்குகள். 

2011 ல் ஊஞ்சல் வலைப்பூ துவங்கி இதுவரை 94 பதிவுகள் மட்டுமே எழுதியிருக்கிறார்,

சாரல்,  உயிரோசை, பதிவுகள் போன்ற இணைய இதழ்களில் இவரது படைப்புகள் வெளி வந்துள்ளன.

சகோதரி மனோ சாமிநாதனை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

சகோதரி கலையரசியினை வாழ்த்தி வரவேற்று மகிழ்கிறேன்

நாளை 26.01.2015 முதல் வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ஏற்று திறம்பட ஒரு வாரத்திற்கு ( 01.02.2015 வரை ) பல சிறந்த பதிவர்களை அறிமுகப் படுத்துவார் என எதிர் பார்க்கிறேன்.

சகோதரி கலையரசியினை  வலைச்சர ஆசிரியப் பொறுப்பில் அமர்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மனோ சாமிநாதன்

நல்வாழ்த்துகள் கலையரசி 

நட்புடன் சீனா

மேலும் வாசிக்க...

Sunday, August 17, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன்  முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர்  மாயவரத்தான் எம்ஜிஆர்  என்கிற இரவி ஜி
 இவரது  வலைத்தளம்   : மாயவரத்தான் எம்ஜிஆர் 
                                                 (http://mayavarathanmgr.blogspot.com )  )
 தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,   ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 
வலைச்சர விதி முறைகளைப் பெரும்பாலும் கடைப்பிடித்திருந்தாலும் ஆங்காங்கே விதிமுறைகள் மீறலும் இருந்தன. 
வலைச்சர விதி முறைகளின் படி பல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். சுய அறிமுகமும் உண்டு - முதல் பதிவில் அவரது பதிவுகளில் இருந்து சிறந்த - மற்றவர்களால் விரும்பக்கூடிய பதிவுகள் பலவற்றை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களும் பதிவுகளூம் மட்டுமே கீழ்க்கண்ட புள்ளி விபரங்களில் வருகின்றன. 
இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 052
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 172
பெற்ற மறுமொழிகள்                            : 179
வருகை தந்தவர்கள்                              : 1512
பெற்ற தமிழ் மண வாக்குகள்             : 008

மாயவரத்தான் எம்ஜிஆர் ரவி ஜி   பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

ஒரு பதிவில்  " உலகெங்கிலிருந்தும் உள்ள பல்வேறு நாடுகளிலிலிருந்து வரும் தமிழ் மக்கள் வரும் தளமல்லவா? அதனால் அவர்கள் வாழும் பல உலக நாடுகளின் பல்வேறு மொழிகளிலிலும் அவர்களுக்கு காலை வணக்கம் சொல்வோம்! "     என்று      70 நாடுகளின் பெயர்களையும் அவர்களது மொழியில் காலை வணக்கத்தினையும் பட்டியலீட்டு வெளியிட்டிருக்கிறார்.
 - 
  -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி,  வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஜெயந்தி ரமணீ   ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 

இவரது தளத்தின் பெயர் : மணம் ( மனம் ) வீசுகிறது 
                                                                                                                                                                                     தளத்தின் முகவரி :http://manammanamviisum.blogspot.com      

இவரைப்பற்றி ஒர் அறிமுகம்.  பிறந்தது சென்னையில் 29.05.1955 அன்று..  பிறந்தது முதல் இன்றுவரை சிங்காரச் சென்னைவாசி.   படிப்பு: Diploma in Commercial Practice (இது உத்தியோகத்துக்காக), முதுகலை தமிழ் (இது தமிழ் மொழியின் மேல் உள்ள காதலுக்காக).
குடும்பம்:  அன்பான கணவர், ஆஸ்திக்கொரு ஆண், ஆசைக்கொரு பெண், இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.  அத்துடன் தாத்தா, பாட்டி பதவி உயர்வும் கிடைத்து விட்டது இவர்களது பேத்தி லயாக்குட்டியின் வரவால்.

உத்தியோகம்: கிட்டத்தட்ட 41 வருடங்கள் வேலை பார்த்தாகிவிட்டது. அதில் 39 வருடங்கள் 9 மாதங்கள் DEPARTMENT OF TELECOM, BSNL ல் பணி செய்து 31.05.2014 அன்று ஓய்வு பெற்றாகிவிட்டது.  தற்பொழுதைய முக்கிய வேலை பேத்தி லயாவின் பின்னே ஓடுவது.  ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல் DANCING TO THE TUNES OF LAYA.

விருப்பம்:  சிறுகதைகள், கவிதைகள் எழுதுவது, நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல திரைப்படங்கள் (அபியும், நானும், சந்தோஷ் சுப்பிரமணியன், பழைய நகைச்சுவைப் படங்கள்), மற்றும் சமையல்.

இவரது வலைத்தளங்கள்:
                                                                                                                                                                  இவரைப் பாராட்டி,  வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி  அடைகிறோம். 

சக பதிவர் - நாளை முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் ஜெயந்தி இரமணி அவர்களை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மாயவரத்தான் எம்ஜிஆர் இரவி ஜி 

நல்வாழ்த்துகள் ஜெயந்தி ரமணீ 
நட்புடன் சீனா 

மேலும் வாசிக்க...

Sunday, August 10, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன்  முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர்  ராஜலக்ஷ்மி பரமசிவம்
 இவரது  வலைத்தளம்   : அரட்டை ( http://rajalakshmiparamasivam.blogspot.com ) )- தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,   ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 
வலைச்சர விதி முறைகளின் படி பல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். சுய அறிமுகமும் உண்டு - முதல் பதிவில் அவரது பதிவுகளில் இருந்து சிறந்த - மற்றவர்களால் விரும்பக்கூடிய பதிவுகள் பலவற்றை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களும் பதிவுகளூம் மட்டுமே கீழ்க்கண்ட புள்ளி விபரங்களில் வருகின்றன. 

இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 043
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 154
பெற்ற மறுமொழிகள்                            : 212
வருகை தந்தவர்கள்                              : 1512
பெற்ற தமிழ் மண வாக்குகள்             : 020

இராஜலக்‌ஷ்மி பரமசிவம்  பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

இராஜலக்‌ஷ்மி பரமசிவத்தினை   -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   மாயவரத்தான் எம்ஜிஆர் ரவிஜி  ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 

இவரது தளத்தின் பெயர்   : 

மாயவரத்தான் எம்.ஜி.ஆர்


இவரது தளத்தின் முகவரி :: http://mayavarathanmgr.blogspot.com

 இவரைப் பாராட்டி,  வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி  அடைகிறோம். 

 மயிலாடுதுறையில் பிறந்த மாயவரத்தான் எம்ஜிஆர் இரவி - எம்.எஸ்ஸி (கணிதம்) ,எம். . (மனோதத்துவம்),  பி.எட்.(கணிதம்),  முது நிலை பட்டயப் படிப்பு  (மக்கள் தொடர்பு) என பல்வேறு துறைகளீல் பட்டம் பெற்று தற்போது புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் துணைக்கோட்டப்  பொறியாளராகப் பணியாற்றுகிறார்.

சக பதிவர் - நாளை முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் இரவிஜி இரவி அவர்களை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் இராஜலக்‌ஷ்மி பரமசிவம். 

நல்வாழ்த்துகள் ரவிஜி 
நட்புடன் சீனா 

மேலும் வாசிக்க...

Monday, June 23, 2014

தந்தையர் தின வாழ்த்து

அன்பின் சக பதிவர்களே !

தந்தையர் தினத்தன்று எனது அருமை மகள் சுஜா தந்தையர் தின வாழ்த்துக் கவிதை ஒன்று அனுப்பி இருந்தார். நானும் அதனைப் படித்து மகிழ்ந்து எனது தளத்தில் பதிவாக வெளி இட்டிருந்தேன்.

அதனைப் படித்த நண்பர் சுப்பு தாத்தா என அழைக்கப் படும் சூரி சிவா மகிழ்ந்து அக்கவிதையை சாரங்க இராகத்தில் அப்படியே பாடி அந்நிகழ்வினை காணொளியாக்கி யூ ட்யூப்பில் இணைத்து எனக்கு அனுப்பி இருந்தார்.

அதனைக் கண்டு மகிழ்ந்து அதனை அனைவருக்கும் பகிரும் வண்ணம் இங்கு பதிவாக்கி வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

வருகை தரும் அனைவரும் படித்து மகிழ்ந்து மறுமொழிகளும் இடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


மேலும் வாசிக்க...

Sunday, June 1, 2014

செல் விருந்தோம்பி வரு விருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர்  வெல்லூர் இராமன்    - இவரது  வலைத்தளம்   : ஒரு ஊழியனின் குரல் http://ramaniecuvellore.blogspot.in - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                         : 009
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 065
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 076
பெற்ற மறுமொழிகள்                            : 118
வருகை தந்தவர்கள்                              : 2163

வெல்லூர் ராமன்  பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   


வெல்லூர் இராமனை   -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   சுப.சம்பந்தம் என்கிற சொக்கன் சுப்ரமணீயன் ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 
இவரது  வலைத்தளம் 
    : www.unmaiyanavan.blogspot.com
இயற் பெயர் - சொக்கன் சுப்ரமணியன். ஆஸ்திரேலியாவில் ஏழு வருடங்களுக்கு மேலாக கணினித் துறையில் வேலை பார்த்து வருபவர், சிட்னி சொக்கன் என்ற பெயரில் நாடகங்களை எழுதி மேடையேற்றி வருபவர். சிட்னியில் இருக்கும் ஒரு தமிழ்  வானொலிக்கு நிகழ்ச்சிகளை வழங்குபவர். உண்மையானவன் என்ற வலைப்பூவில் அனுபவங்களையும், கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
சொக்கன் சுப்ரமனியத்தினை   வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் சுப.சம்பந்தம் என்கிற சொக்கன் சுப்ரமணீயன் 
நல்வாழ்த்துகள் வெல்லூர் இராமன்
நட்புடன் சீனா 
மேலும் வாசிக்க...

Tuesday, October 16, 2012

ஒரு அறிவிப்பு 


அன்பின் நண்பர்களே !

வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்றிருக்கும் அருமை நண்பர் ஆரண்ய நிவாஸ் ஆர் ராமமூர்த்தி - தான் பணி புரியும் அலுவலகப் பணி காரணமாக் - தினசரி பதிவுகளை மாலை ஆறு மணிக்கு மேல் பிரசுரம் செய்வார் என்பதனைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அனைவருக்கும் நல்வாழ்த்துகள் !

நட்புடன் சீனா. 
மேலும் வாசிக்க...

Sunday, November 15, 2009

இந்தியா ஒளிர்கிறது


அன்பின் பதிவர்களே

தமிழ் நாட்டினை இயற்கை சோதித்துப் பார்க்கிறது. பெரு மழை பொழிகிறது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படுகிறது. அணைகள் நிரம்புகின்றன. அருவிகள் கொட்டுகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. பெயர் புரியாத புயல்கள் சீறுகின்றன. கடல்கள் கொந்தளிக்கின்றன.

இவை வாழும் மனிதர்கள் அனைவரையும் சோதித்தாலும் - துயரப்படுத்தினாலும், இயல்பு வாழ்க்கையினை பாதித்தாலும் - சாலையோரம் வாழும் ஏழை மக்கள் - இருக்க இடமின்றி, உடுக்க உடையின்றி, உண்ண உணவின்றி - அன்றாடம் காய்ச்சியாய் அல்லல் படும் இவர்கள் மழையின் கொடுமையால் மிகவும் துன்பப்படுகிறார்களே !. இவர்களுக்கு ஒளிரும் இந்தியா ஏதும் செய்ய வில்லையே. இவர்களும் இந்தியர்கள் தானே !

நாம் சாலையோரங்களில் ஒதுங்குகிறோமே ! இயல்பாக சாலைகளை கடக்கிறோமே ! இவர்களை இவர்கள் வாழ்க்கையினை என்றாவது கவனித்திருக்கிறோமா ? பார்த்து விட்டு கடந்து போக மனம் வந்தால் நன்று. நாம் இந்தியர் தான் என உறுதிப்படுத்தி விடலாம். கடந்து போகும் போது மனம் குமுறினால் நாம் மனிதர்தான். அவர்களுக்கு ஏதாவது உதவ வேண்டுமென நினைத்து உதவி செய்ய விரைந்தால் நாம் மகாத்மா ஆகி விடுவோம்.

நாம் ஏதாவது செய்ய வேண்டாமா - சிந்திப்பது மனதோடு கரைந்து விடும். பேசுவது காற்றோடு கரைந்து விடும். செயலில் இறங்கினால்தான் நன்மை பிறக்கும். அரசு இயந்திரம் மெதுவாகத்தான் இயங்கும். நல்ல உள்ளம் படைத்த மக்கள் செயல்பட ஆரம்பிக்க வேண்டும். அப்பொழுது தான் இவர்களுக்கு உதவ முடியும்.

என்ன செய்வது ? எப்படிச் செய்வது ? தன்னார்வலர்கள் நிறைந்த தொண்டு நிறுவனங்கள் இருக்குமே ! ம்ம்ம்ம்ம்ம்

நமது கடமை இடுகை இடுவதோடு முடிந்ததா - வேறு வழி தெரியவில்லையே ! ஆனால் நிச்சயம் ஏதேனும் செய்வோம் என்பது மட்டும் உறுதி.

நமது நண்பர் ரங்கராஜன் என்ற ரங்கா ஒரு படம் வரைந்திருக்கிறார். மேலே கூறிய அனைத்தும் அவரது மனதினை துயரப்படுத்தியதால் இப்படத்தினை வரைந்திருக்கிறார். அவருக்கு நல்வாழ்த்துகள்.


சீனா
மேலும் வாசிக்க...

Sunday, July 26, 2009

ஆ.ஞான சேகரன் - வாழ்த்துகள்

அன்பின் பதிவர்களே

கடந்த சூலை 13ம் நாள் துவங்கி 19ம் நாள் வரை வலைச்சரத்தின் ஆசிரியராகச் சிறப்புடன் பணியாற்றிய அருமை நண்பர் ஆ.ஞானசேகரனை வாழ்த்தி விடையளிக்கும் பதிவு இது.

சூலை 19 / 20 - இன்னாட்களில் நான் அயலகம் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்த படியாலும் - இணையம் - தமிழ் எழுத்துரு இல்லாத காரணத்தினாலும் அவருக்கு வாழ்த்துரை இடுகை இட இயலவில்லை.

நண்பர் ஞானசேகரனின் அயராத உழைப்பும் தளராத பொறுமையும் பாராட்டுக்குரியவை. ஏழு நாட்களில் ஏறத்தாழ ஐம்பதுக்கும் மேற்பட்ட பதிவர்களை அறிமுகம் செய்து அவர்களின் சிறந்த இடுகைகளாக இருநூறுக்கும் மேற்பட்ட இடுகைகளின் சுட்டிகள் கொடுத்து ஏற்ற பொறுப்பினை செவ்வனே நிறைவேற்றியதற்கு நன்றி கலந்த நல்வாழ்த்துகளை வலைச்சரம் சார்பினில் பொறுப்பாசிரியர் என்ற முறையில் கூறிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். இவர் பெற்ற மறுமொழிகளோ ஏறத்தாழ 350.

நன்றி ஞான சேகரன் - நல்வாழ்த்துகள் ஞான சேகரன்

சீனா
-------------


மேலும் வாசிக்க...

Sunday, February 8, 2009

ரம்யாவிற்கு பிரியாவிடை

சென்ற ஒரு வார காலமாக ரம்யா ஆசிரியராகப் பொறுப்பேற்று அருமையாக, நிறைவாகப் பொறுப்பை நிறைவேற்றினார். ஏழு பதிவுகள் இட்டு ஏறத்தாழ ஆயிரத்து ஐநூறுக்கும் மேலாக மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார்.

இவரது மறுமொழிகள் எண்ணிக்கை வலைச்சர சரித்திரத்தில் ஒரு சாதனை. இவ்வளவு எண்ணிக்கையில் மறுமொழிகள் இதுவரை வரவில்லை. அவ்வகையில் இவர் பெருமைக்குரியவரே !

பதிவுகளும் புதுமையாக கடவுள் வாழ்த்து, ஒரு சமூக நிகழ்வு, புதிய பதிவர்கள் அறிமுகம், உலகநீதிப் பாடல், முடிவுரை என பல பத்திகளைக் கொண்ட பதிவுகளாக இருந்தன. பல புதிய நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தினார்.

இவருக்கு வலைச்சரத்தின் சார்பிலும் என் தனிப்பட்ட முறையிலும் நல்வாழ்த்துகளுடன் கூடிய நன்றிகளைக் கூறி விடை அளிக்கிறோம்.

சீனா
மேலும் வாசிக்க...

Monday, February 4, 2008

வருகிறேன் -- !! ( மீண்டும்) - நான் ..... !

அன்பு நட்புவட்டங்களே!

ஒரு வார காலம் வலை வீசி, மீன் பிடித்து, கருத்துகளை கையிலெடுத்தேன். அவை என்னிடம் கண்சிமிட்டிப் பார்த்தன. கும்மி அடித்த சத்தம் இன்னும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

எழுத நினைத்து, ஆசைப்பட்டு, நேரமின்மை காரணமாக விட்டுப்போனவை ஒரு சில. அவைகளில் முதன்மையானது சகோதரி துளசியின் துளசி தளம் பற்றி விரிவாக எழுத நினைத்தது. பல கருத்துகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கின்றன. மறுபடியும் அவை என் பதிவில் எட்டிப் பார்க்கும்.

மற்றொன்று - லிவிங்ஸ்மைல் வித்யா பற்றியது. அவரது பதிவுகளிலும் பல செய்திகள் உள்ளன. படித்து, மறு மொழிகள் பல இட்டிருக்கிறேன். ஒரு விரிவான பதிவு சீக்கிரமே என் சொந்த வலைப்பூவில் எழுத ஆசை. பார்க்கலாம்.

வாய்ப்பளித்த நிர்வாகத்திற்கு நன்றி.

வந்து சென்ற நட்பிற்கு நன்றி.

மறுமொழியிட்ட உள்ளங்களுக்கு நன்றி.

அடுத்து வரும் ஆசிரியருக்கு அன்பு வாழ்த்துகள்.

மேலும் வாசிக்க...

Sunday, February 3, 2008

மறு மொழி இடப்பட்ட பதிவுகள் - பதிவர்கள் - 2

அன்பின் பதிவர்களே

சென்ற பதிவினில் சில தட்டச்சுப் பிழைகள் இருந்தன. சரி பார்க்க நேரம் இல்லை. 10 மணித்துளிகளில், தட்டச்சு செய்யப்பட்டு, பதிவிடப்பட்ட பதிவு அது. பதிவிட்ட வுடன் கோவை கிளம்பி விட்டேன். 24 மணி நேரம் கழித்து இப்போது தான் வருகிறேன். சிறு தட்டச்சுப் பிழைகளை சரி செய்து விட்டேன். பொதுவாக என்னுடைய பதிவுகள் சிந்தித்து, தட்டச்சு செய்யப்பட்டு, சரி பார்க்கப் பட்டு, சரி செய்யப் பட்டு, துணைவியிடம் காண்பிக்கப்பட்டு, அவர் சொல்லும் மாற்றங்கள் எல்லாம் பொறுமையாகக் கேட்டு ( மாற்றங்கள் ஏற்கப்பட்டனவா - பரம ரகசியம் - கூறுவதோடு அவர்கள் கடமை முடிந்தது) பின்னர் தான் பதியப்படும். இப்பதிவு ஒன்று தான் மேலே கூறிய எதுவுமே செய்யாமல் ( சிந்திக்காமல் கூட) பதிவிடப் பட்டது.

086க்க்குப் பிறகு 097 - இது தட்டச்சுப் பிழைதான். இப்போதுதான் பார்த்தேன். சரி செய்ய வில்லை. இருந்து விட்டுப் போகட்டும் என விட்டு விட்டேன்.

சேதுக்கரசியின் பெயர் அடிக்கடி படிப்பதாலும், பார்ப்பதாலும், அவரது பெயர் இங்கு சேர்க்கப்பட்டு விட்டது. அவர் ஒரு வலைப்பூ வைத்திருந்தாலும், அங்கு பதிவுகள் எதுவும் போடப்பட வில்லை என நினைக்கிறேன். ஆனால் பல பதிவுகளிலே, அவருடைய மறு மொழி ஒரு ஐம்பதாவது படித்திருப்பேன். அவற்றிற்கு மறு மறு மொழி இட்டிருப்பேன். ஆகவே அவரது பெயர் இங்கே சேர்த்திருப்பது பொருத்தமே.

123 அபி பாப்பா - அடிக்கடி பதிவுகளிலே படிக்கும் பெயர் இது . அவசரத்தில் குட்டீஸ் கார்னரில் இருக்கும் என நினைத்துப் போடப்பட்டது. அவ்வளவு தான்.

097 சாம் தாத்தா - இது சாம் ஜார்ஜ் என்ற தருமி இல்லை. அவரது போலியும் இல்லல. அவரின் வயதை ஒத்த சாம். தாத்தா சாம்சன் என்பவரின் வலைப்பூ இது. இவர் சென்னையிலே வசிக்கிறார். ஓய்வு பெற்றவர். கட்டைப் பிரமச்சாரி.

இளா மற்றும் விவசாயி என இரு முறை வந்துள்ளது. இருவரும் ஒருவரே.


சரி சரி -ம் சும்மா பில்டப்பு எல்லாம் வேண்டாம் - தொடருங்க அடுத்த லிஸ்டே ன்னு ரசிகன், குசும்பன், அபி அப்பா எல்லாம் சத்தம் போடுறாங்க. அதனாலே அடுத்த லிஸ்ட் இதொ:


126 மதுமிதா

127 முதுவை ஹிதாயத்
128 புலம்பல்கள்
129 குப்பைஉலகம்
130 ரவிசங்கர்
131 தேசிகன்
132 கோபி
133 பினாத்தல் சுரேஷ்
134 முத்து தமிழினி
135 வற்றாயிருப்பு சுந்தர்
136 நாமக்கல் சிபி
137 இட்லி வடை
138 மோகன்தாஸ்
139 பொன்ஸ்
140 பொட் டீ கடை
141 ராமச்சந்திரன் உஷா
142 A & N My lens
143 நல்லடியார்
144 இம்சை அரசி
145 நண்பன்
146 இரண்டாம் சாணக்கியன்.
147 சந்தோஷ்
148 ஐகாரஸ் பிரகாஷ்
149 செந்தழல் ரவி
150 தெகா
151 பொடிச்சி
152 மு.ச்ந்தரமூர்த்தி
153 விக்கி பசங்க
154 அப்பாவி ஆறுமுகம்
155 மாதங்கி
156 அண்ணா கண்ணன்.
157 லோகேஷ்
158 மயிலாடுதுறை சிவா
159 சந்திரவதனா
160 சுகுணா திவாகர்
161 தமிழச்சி
162 தமிழ் சசி
163 சாலை ஜெயராமன்
164 ச்சின்னப்பையன்
165 இளையகவி
166 ரிஷான் ஷெரீப்
167 இப்னூஜூபைர்
168 இறக்குவானை நிர்ஷன்
169 மதுரை சொக்கன்
170 பனிமலர்
171 ரத்னேஷ்
172 வினையூக்கி
173 மார்த்தாண்டம் கவிதைகள்
174 இ.கா.வள்ளி
175 K.R.அதியமான்
176 PRINVENRSAMA
177 டெல்ஃபைன்
178 புபட்டியன்
179 பீம்பாய் ஈரோட்
180 ராதா ஸ்ரீராம்
181 ஜாலி ஜம்பர்
182 மா.சிவகுமார்
183 அரை பிளேடு
184 Doctor Bruno
185 மலைநாடான்
186 K4Karthick
187 தமிழ் மணம்
188 வந்தியத்தேவன்

189 ஆயில்யன்

190 கால்கரி சிவா

191 - 200 : மேலே குறிப்பிடப்பட்ட பதிவர்களின் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பூக்கள்

அப்பாடா - நேரமில்ல – இன்னும் இரண்டு மணி நேரத்துல அடுத்த ஆசிரியர் வந்துடுவாரு அதனாலே சீக்கிரமே முடிச்சிட்டேனே!

மேலும் வாசிக்க...

Saturday, February 2, 2008

மறுமொழி இடப்பட்ட வலைப் பதிவுகள் - பதிவர்கள்

இனிய நண்பர்களே . இதுவரை பல வலைப்பூக்களின், பதிவுகளைப் படித்து, பொறுமையாக மறுமொழியும் இட்டிருக்கிறேன். அவ் வலைப் பூக்களைத் தொகுத்துத் தருகிறேன். வரிசை ஒன்றும் அகர வரிசையோ, தர வரிசையோ, கருத்து வரிசையோ, பதிவு எண்ணிக்கை வரிசையோ அல்ல. கைக்கு வந்த வரிசை தான். நான் முதல் முதலில் படித்த பதிவு எது ? யாருக்கு நினைவு இருக்கிறது. இன்றைய தினம் தேவைப் படுமென்று அன்றே தெரிந்திருந்தால் நாட்குறிப்பாவது எழுதி வைத்திருக்கலாம். எழுத வில்லை.
எழுதும் பழக்கமும் இல்லை.

நான் இணையத்திற்கு வந்து, வலைப்பூ பார்க்க ஆரம்பித்த காலத்தில் தமிழ் மணத்தைக் கண்டு பயந்து போய், இணையத்தை விட்டே விலகி விடலாமா என நினைத்து, பின்னர் தேன்கூட்டில் இணைந்தேன். பின் சிறிது காலம் கழித்து, தமிழ் மணத்திலும் இணைந்து விட்டேன்.

இதோ நான் படித்த பதிவர்கள்:

000 இரா.முருகன்
001 தருமி
002 இளவஞ்சி
003 முத்துக்குமரன்
004 லிவிங் ஸ்மைல் வித்யா
005 பால பாரதி
006 துளசி
007 சேதுக்கரசி
008 நானானி
009 நளாயினி
010 பாசமலர்
011காட்டாறு
012 திவ்யா
013 களவாணி வித்யா
014 கண்மணி
015 சிந்தாநதி
016 முத்துலட்சுமி
017 புதுகைத் தென்றல்
018 சதங்கா
019 அருணா
020 லக்கி லுக்
021 அனு ராதா
022 குசும்பன்
023 ரசிகன்
024 அபி அப்பா
025 சர்வேசன்
026 சற்று முன் பாஸ்டன் பாலா
027 சேவியர்
028 சிவ பாலன்
029 சிவ முருகன்
030 கபீரன்பன்
031 ஜீவி
032 ஜீவா
033 கலை அரசன்
034 சின்னக் குட்டி
035 கானா பிரபா
036 ராம்
037 ஜி.ராகவன்
038 குமரன்
039 மங்களூர் சிவா
040 நாகை சிவா
041 இம்சை
042 பவன்
043 நிலா
044 நந்து
045 சஞ்ஜெய்
046 பிரபு ராஜ துரை
047 மக்கள் சட்டம் - சுந்தர் ராஜன்
048 அடுப்படி
049 வவ்வால்
050 இளா
051 விவசாயி
052 நவீன் பிரகாஷ்
053 திகழ் மிளிர்
054 புகாரி
055 ஆசிப் மீரான்
056 ஜமாலன்
057 ஆடுமாடு
058 சென்ஷி
059 டிபிசிடி
060 கோவி கண்ணன்
061 கண்ணபிரான் ரவி ஷங்கர்
062 செல்வி ஷங்கர்
063 நா.கணேசன்
064 பத்ரி
065 சுப்பையா
066 வசந்தம் ரவி
067 பிரியமுடன் கேபி
068 தமிழ் பித்தன்
069 குழலி
070 குட்டிப் பிசாசு
071 சிறில் அலெக்ஸ்
072 ஓசை செல்லா
073 வி எஸ் கே - ஆத்திகம்
074 மதுரையம்பதி மௌளி
075 தஞ்சாவூரான் ராஜா
076 மணிக்கூண்டு
077 கைலாஷி
078 என். கண்ணன்
079 கீதா சாம்பசிவம்
080 வல்லி சிம்ஹன்
081 தி ரா ச
082 ஞான வெட்டியான்
083 ரசிகவ் ஞானியார்
084 பிரியா (எ) செண்பகவல்லி
085 நவன்
086 ட்ரீம்ஸ்
097 சாம் தாத்தா
098 வேதா
099 பி.கே.சிவகுமார்
100 சக்தி
101 சதீஷ்
102 அமிர்தன்
103 இப்னு ஹம்துன்
104 நிலா ரசிகன்
105 சகாரா
106 நாடோடி இலக்கியன்
107 இராகவன் என்ற சரவணன் மு
108 பிரேம் குமார்
109 ஷைலஜா
110 அருட்பெருங்கோ
111 நம்பிக்கை பாண்டியன்
112 என்றும் அன்புடன் பாலா - பாலாஜி
113 ஜோஹன் பாரீஸ்
114 ஜோதி ராமலிங்கம்
115 ஆஷ் அம்ருதா
116 .:: மை ஃபிரண்ட் ::.
117 அப்ரா
118 சுரேஷ்
119 அந்தோணி முத்து
120 விக்கி பையன்
121 இரண்டாம் சொக்கன்
122 டி.பி.ஆர் ஜோசப்
123 அபி பாப்பா
124 அம்பி
125 இலவசக் கொத்தனார்

கை வலிக்குதுங்கோ - அப்புறமா பாக்கலாமா - அடுத்து இன்னும் எத்தனை பேரு இருக்காங்களோ தெரிலயே - மண்டையே சொரியணும்
பாப்போம்


மேலும் வாசிக்க...

அனுராதாவின் அருமையான வலைப்பூ

இப்பதிவு ஒரு புற்று நோயால் பாதிக்கப்பட்ட, அதன் துன்பங்களை அனுபவித்து வரும் ஒரு சகோதரியின் கதை. கேன்சருடன் ஒரு யுத்தம் என்ற வலைப்பூவினில், தன் நோயைப் பற்றியும், தான் படும் துன்பங்களைப் பற்றியும், அதற்கு உட்கொள்ளும் மருந்துகள் பற்றியும், பெற்றுக் கொண்டிருக்கிற சிகிச்சைகளைப் பற்றியும், தன் மருத்துவ மனை அனுபவங்களைப் பற்றியும், சந்தித்த நல்ல உள்ளங்களைப் பற்றியும் எழுதிக் கொண்டிருக்கிறார்.

சகோதரி அனுராதா இதுவரை 37 பதிவுகள் எழுதி இருக்கிறார். எட்டாம் வகுப்பு வரையே கற்ற இவர், ஆங்கிலமும் தெரியாத இவர், என்ன அழகாக, தன் துன்ப வரலாற்றை தன் கணவர் மூலம் எழுதி வருகிறார். இவர் சொல்லச் சொல்ல, அருமைக் கணவர் எழுதுகிறார். அத்தனை பதிவுகளும் இவர் சொன்னது தான்.

2003- ஆக்ஸ்டுத் திங்களில், தனக்கு மார்பகப் புற்று நோய் இருக்கிறது என்று அறிந்த உடன், அதற்கு உண்டான சிகிச்சைகளை, முறையாகத் தொடங்கி, இன்று வரை சிகிச்சை பெற்று வருகிறார். நோயின் தாக்கம் முற்றுகிறது. சிகிச்சை, மருந்துகள், மருந்துகளின் தாக்கம், சிகிச்சையின் பின் விளைவுகள் எல்லாம் பாடாய்ப் படுத்துகின்றன. அறுவைச் சிகிச்சையை விரும்பாது, கதிரியக்க சிகிச்சைகளை கடைப் பிடிக்கிறார்.

தான் சந்தித்த ஒவ்வொரு மருத்துவரைப் பற்றியும், ஒவ்வொரு மருத்துவ மனையைப் பற்றியும் எழுதி வருகிறார். சென்னை, ஹைதராபாத், சிங்கப்பூர், மதுரை என வளைய வருகிறார். தற்போது, மதுரையில் தங்கி, சிகிச்சை பெற்று வருகிறார்.

ஒவ்வொரு பதிவினையும் படிக்கும் போது, அவர் பதிவிடுவதின் நோக்கம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பெண்கள் மார்பகப் புற்று நோயை எவ்வாறு அறிந்து கொள்வது, வந்து விட்டால், என்ன சிகிச்சை பெறுவது, எங்கு பெறுவது என்ற அனைத்து விவரங்களையும் விளக்கமாகக் கூறுகிறார்.

கணவர் ஏறத்தாழ 38 ஆண்டு காலம் வருவாய்த்துறையில் பணி புரிந்து காலூன்றி நின்றவர். துணை ஆட்சியாளர் பதவி உயர்வு வரப் போகும் நேரத்தில், துணைவியின் நோய் காரணமாக, விருப்ப ஓய்வு பெற்றவர். அன்று முதல் துணைவியாருக்கு இவர் தான் எல்லாம்.

பணியில் இருந்த காலத்தில், பெரும்பான்மையினரைப் போலவே, கணவர் அலுவலகமே கதியாய்க் கிடந்தவர். அக்கால கட்டத்தில், வீட்டில் சகோதரியே ஆட்சி செய்ய வேண்டிய சூழ்நிலை. ஆக, சகோதரியே, பெற்ற மக்கள் அனைவரையும் நல்ல முறையில் வளர்த்து, மணமுடித்து, பேரன் பேத்திகள் பெற்று, மனமகிழ்ந்தவர்.

தற்போது சகோதரியின் அனைத்துத் தேவைகளையும், துணைவர் அன்புடன், ஆதரவுடன் நிறைவேற்றி வருகிறார்.

சகோதரி அனுராதாவின் ஆசைகள் எல்லாம், புற்று நோயால் அவதிப்படும் நண்பர்களுக்கு, குறிப்பாக சகோதரிகளுக்கு, ஆதரவுக் கரம் நீட்டி, நீண்ட கால பண, மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என சதா சர்வ காலமும் சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். இவரது கணவரும் ஒத்த மனதினரைத் தொடர்பு கொண்டு வருகிறார். சீக்கிரமே இவர்களின் எண்ணம் ஈடேறும்.

சகோதரி அனுராதா, பூரண நலம் பெற்று, துன்பங்களிலிருந்து விடுதலல பெற எல்லாம் வல்ல இறைவனை அனைவரும் பிரார்த்திப்போமாக. கூட்டுப் பிரார்த்தனைக்கு நிச்சயம் பலனுண்டு.

இறைவா, இவரை துன்பங்களிலிருந்து காப்பாற்று. நோயின் தாக்கத்தைக் குறை.

சகோதரி அனுராதா.
மேலும் வாசிக்க...

மீண்டும் ஒரு ஆன்மீகச்சரம்

அன்புக்கு இனிய பதிவர்களே



முன்பு, ஆன்மீகச்சரத்தினில் அறிமுகப் படுத்தப் பட்ட நண்பர் கைலாஷி, அழகாக ஒரு பதிவு இட்டிருக்கிறார். ஆன்மீக அன்பர்களை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி தெரிவித்திருக்கிறார். அப்பதிவில் அவரும் சில ஆன்மீக அன்பர்களை அறிமுகப் படுத்தி இருக்கிறார். அப்பதிவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.



அன்பர் நடராஜ் பிரகாஷ் சென்னையைச் சேர்ந்தவர். தற்போது லாஸ் ஏஞ்ஜெல்ஸில் இருக்கிறார். தமிழின் மீதும், தமிழகத்தைச் சேர்ந்த கோவில்கள் மீதும் தீராக்காதல் கொண்டவர். வாரத்திற்கு ஒரு கோவிலாக அறிமுகம் செய்கிறார். அதுவும் ஒலி வடிவினில். கேட்க கேட்க இன்பம். கற்றலின் கேட்டலே இன்பம். கேட்டு மகிழுங்களேன்.

அன்பர் Dr. N. கண்ணன் தென் கொரியாவில் இருக்கிறார். ஆழ்வார்க்கடியான் என்ற வலைப்பூவினில் அழகு தமிழில், வைணவத்தின் மகிமை பற்றியும் ஆழ்வார்களின் வேத சாரத்தினைப் பற்றியும் எழுதி வருகிறார். " இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை! " . இது இவரது பொன்மொழி. இவர் எழுதி வரும் பத்து வலைப்பூவினில். இதுவும் ஒன்று. சென்று தான் பாருங்களேன்.

அடுத்த பதிவினில் சந்திப்போமா




மேலும் வாசிக்க...

Thursday, January 31, 2008

கவிஞர்கள் அறிமுகம் - வலைச்சரம்

நண்பர்களே, சில கவிஞர்களை அறிமுகம் செய்கிறேன்.

முதலில் அருமை நண்பர் புகாரி பற்றி எழுதுகிறேன். வானூறி மழை பொழியும், வயலூறி கதிர் விளையும், தேனூறி பூவசையும், தினம்பாடி வண்டாடும், காலூறி அழகுநதி கவிபாடிக் கரையேறும், பாலூறி நிலங்கூட பசியாறும் உரந்தையில்(ஒரத்தநாடு - தஞ்சை மாவட்டம்) பிறந்தவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். தஞ்சாவூரையும் பட்டுக்கோட்டையையும் இணைத்து ஒரு கோலம் போட்டால், சிரிக்கும் பூசணிப்பூவை நீங்கள் ஒரத்தநாட்டின் கொண்டையில்தான் செருகவேண்டும். தென்னங்கீற்றைப் போல வாரி வகிடெடுத்த தெருக்கள் ஒரத்தநாட்டிற்குப் பேரழகு. உரந்தை என்று சுருக்கமாக அதன் பெயர் கொஞ்சப்படும். இவை அனைத்தும் கவிஞர் கைவண்ணம். எது என் ஊர் என ஒரு அழகுக் கவிதை, எளிய சொற்களில், நச்சென்ற முடிவுடன் படைத்திருக்கிறார். அவரது அருமைக் கவிதைகளில் இதுவும் ஒன்று. வெளிச்ச அழைப்புகள் என்றதொரு புத்தகமும் கவிப்பேரரசின் முன்னுரையோடு வெளி வந்துள்ளது.
செல்லுங்களேன் அவரது கவிதையைச் சுவைக்க.

நண்பர் நந்து, அருமை நிலாவின் தந்தை. பலவித ஒளிப்படங்கள் படைத்திருக்கிறார். அருமை அருமை. பார்க்க வேண்டிய பதிவொன்று. கண்ணுக்கு விருந்து படையுங்கள்.

நண்பர் கருப்பன் நெதர்லாண்ட்ஸில் பணியாற்றுகிறார். மாலைப் பொழுதின் மயக்கத்திலே என்ற ஒரு வலைப்பூவில் எழுதுகிறார். நகைச்சுவை மிளிர புதிய திரைப்படம் "ரோபோ" பற்று எழுதி இருக்கிறார். படியுங்களேன்.

செல்வி ஷங்கர் என்ற ஒரு பெண் பதிவர் அழகுத் தமிழில் அருமையான ஒரு வலைப்பூ வைத்திருக்கிறார். பட்டறிவும் பாடமும் என்ற வலைப்பூ. பல வித கவிதைகளும் கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். பயனுள்ள பதிவு.

நாளை சந்திப்போமா ?








மேலும் வாசிக்க...

வலைச்சர, படிக்காத, படிக்க வேண்டிய பதிவுகள்

நண்பர்களே !! வலைச்சர கொள்கைப்படி, பதிவர்களால் அதிகம் படிக்காத, ( படித்தும் மறு மொழி இடாத) , பயனுள்ள பதிவுகள் பற்றி கீழே எழுதி இருக்கிறேன்.

நண்பர் பிரபு ராஜ துரை மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி யாற்றுகிறார். பலதரப்பட்ட வழக்குகளையும் கையாளுகிறார். அவற்றைப் பற்றி எளிமையாக விளக்குகிறார். இதோ அவரது வலைப் பூவான மணற்கேணியில் வந்த
ஜல்லிக்கட்டு பற்றிய இடுகை. இதில் உச்ச நீதி மன்றத்தில் நடந்த, சல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு பற்றி விளக்குகிறார். இன்னுமொரு இடுகை அலங்காநல்லூர் சல்லிக்கட்டு பற்றியதும் இப்பதிவினில் இருக்கிறது. படியுங்களேன்.

பாண்டிச்சேரிக்கு அருகில் உள்ள கோட்டக்குப்பத்தில் வளர்ந்த நண்பர் இக்பால் தற்போது சிங்கப்பூரில் பணியாற்றுகிறார். இவர் இயற்கையோடு கூடி வாழ்ந்தால் இது சுகமே என்ற பதிவினில் பல விதமான பாட்டி வைத்தியம் பற்றிக் கூறுகிறார். பலவித
கீரைகளின் பயன்கள், இஞ்சி மற்றும் தேன், நெய் ஆகியவை எவ்விதம் நம் உடலைப் பாதுகாக்க உதவுகின்றன என்பதை எல்லாம் விரிவாக எடுத்துரைக்கிறார். சென்று தான் பாருங்களேன்.

மக்கள் சட்டம் என்றொரு வலைப்பூ மக்களுக்கான சட்டங்களை வளர்த்தெடுக்கவும், மக்கள் விரோத சட்டங்களை அடையாளம் காட்டவும் அரிய பணி யாற்றிக் கொண்டிருக்கிறது.
வங்கிகளில் நடக்கும் முறைகேடுகள் பற்றியும், பல்வேறு வங்கிகளின் கிரெடிட் கார்டுகள், அதன் மூலம் பெறப்படும் கடன்கள், அதனால் விளையும் துன்பங்கள் பற்றி எல்லாம் விரிவாக எடுத்துரைக்கிறது. பயனுள்ள பதிவு. பதிவர்கள் அலசலாமே!!

நண்பர் ஜி.ராகவன் அடுப்படி என்ற வலைப்பூவினில் சுவைக்கச் சுவைக்க சிறந்த சமையல் குறிப்புகளை சுவை படத் தருகிறார்.
முட்டைக்கோஸ் ஓட்ஸ் உப்புமா செய்வது பற்றி நகைச்சுவையாக குறிப்புகள் தருகிறார். முயற்சி செய்யலாமே.

பதிவர்களே அடுத்த பதிவில் சந்திக்கலாமா ?
மேலும் வாசிக்க...

Wednesday, January 30, 2008

படித்ததில் பிடித்த பதிவுகள் - வலைச்சரம்

நண்பர்களே ! இதுவரை தொடுத்த சரங்களில் இருந்த பூக்கள் எல்லாம், எல்லோரும் நன்கு அறிந்த வலைப் பூக்கள். ஆனால் வலைச்சரத்தின் நோக்கமே புதிய பதிவர்களை அறிமுகப் படுத்துதலும், அதிகம் அறியப்படாத பதிவர்களை அரங்கத்திற்கு கொண்டு வருவதுமே ஆகும். அவ்வடிப்படையில், இவ்விடுகையில் சில பதிவர்களை அறிமுகப் படுத்துகிறேன்.

அருமை நண்பர் சேவியர் அலசல் என்றொரு வலைப்பூ வைத்திருக்கிறார். அதில் பல்வேறு பயனுள்ள தகவல்களையும், பல்வேறு ஆய்வு முடிவுகளையும், பல்வேறு ஒளிப் படங்களையும் ( புகைப் படங்கள் அழிந்து விட்டதால் இப்போதெலாம் Digital Camera தான் அதன் மூலம் எடுக்கும் படங்களை இவ்வாறு அழைக்கலாமா), சில நகைச்சுவை இடுகைகளையும் தருகிறார். இவரது இடுகைகளில் பல்வேறு செய்திகள் இருக்கும்.வலைப்பூ ஆரம்பித்து 15 மாதங்கள் ஆகின்றன. ஏறத்தாழ 250 இடுகைகள் இட்டிருக்கிறார். அதிக பட்ச பதிவர்கள் இவ்விடுகைகளுக்கு வருவதில்லை. 90 விழுக்காடு - இடுகைகள் என்னால் படிக்கப் பட்டவை. இவரது கிரிக்கெட் கலாட்டா - சிட்னி ஸ்பெஷல் ஒரு நகைச்சுவைப் பதிவு. அனைவரும் ஒரு முறை இவ்விடுகைக்கு வருகை புரியலாமே!

மற்றொரு நண்பர் கலை அரசன் மார்த்தாண்டம். இவர் தூறல் என்ற வலைப்பூவின் உரிமையாளர். நெல்லைச் சீமையைச் சார்ந்தவர். குமரி முனையை ரசித்தவர். காவிரிக் கரையில் வசிப்பவர். கவிதைகளில் களிப்பவர். மும்பை, மராத்திய முரசு ஏட்டில் பத்துக்கும் மேற்பட்ட பைந்தமிழ்க் கவிதைகளைத் தந்தவர். 2006 சூலை முதல் இடுகைகள் இட்டு வருகிறார். கவிதைகள், சிறு கதைகள், நடப்புகள், தொடர் கவிதை, ஹைக்கூ கவிதைகள் என்று கலக்குகிறார். பேனாவைப் பற்றிய நல்லதொரு கவிதை. சென்று தான் பாருங்களேன்.

அடுத்த நண்பர் சிவமுருகன் மதுரையைச் சார்ந்தவர். பெங்களூரு பணி செய்யுமிடம். நிகழ்வுகள் என்ற வலைப்பூவில் ஈராண்டுகளாக நிறையச் செய்திகளை உள்ளடக்கிய இடுகைகள் படங்களுடன் படைத்துள்ளார். குறும்பு என்ற இடுகை அவரது பள்ளிப் பருவத்தைப் பற்றியது. குறும்பு வாரமாக ஒரு வாரத்தை, பல்வேறு குறும்புகளுடன் கொண்டாடி இருக்கிறார். படியுங்களேன். இவர் ஒரு பன்முகப் படைப்பாளர். பாராட்டி மகிழலாம். குறளை 11 மொழிகளில் ( சௌராஷ்ட்ரா உட்பட) பதிந்திருக்கிறார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைப் பற்றி அரிய படங்களுடன் சுமார் 50 இடுகைகள் இட்டிருக்கிறார்.

இனிய நண்பர் கபீரன்பன் கோவையில் வேதியியல் பொறியாளர். இவர் கபீரின் கனிமொழிகள் என்ற வலைப்பூவில், கபீர்தாஸின் இரண்டடி தோஹாக்களை தமிழ்ப் படுத்தி இருக்கிறார். சில நாட்களின் சிறைவாசம் அரவிந்தரை ஆன்மீகத்திற்குத் திருப்பியது. தீவிரமான கருத்துகளோடு சுதந்திரப் போராட்டத்தில் இருந்தவரை திசை திருப்பியது. அந்நிகழ்வை அவரது சொற்களிலேயே படைத்துக் காட்டுகிறார். அரவிந்தரின் அனுபவத்தை கபீரின் கருத்துகளோடு ஒப்பிட்டுக் கூறுகிறார். நாமும் படித்து மகிழலாமே !


மேலும் வாசிக்க...

காணவில்லை - கும்மி அடிக்கறவங்கள காணலெ -

அடப் போங்க - போரடிக்குதுங்க - ஆன்மீகச்சரம்னு எழுதுனா ஒருத்தரும் வர மாட்டீங்கரேங்க - ஒதுக்குறீங்க - ஏனுங்கோ கோவில் குளமெல்லாம் போறதுண்டா - இல்ல இந்த மாதிரி பதிவெ எல்லாம் படிச்சா யாராச்சும் முதுகுலே முத்திர குத்திடுவாங்கன்னு பயமா ? ம்ம் இருக்கட்டும்

இப்ப எல்லாம் மொக்க - கும்மி – குசும்பு – அப்பிடின்னு கலாய்ச்சாதான் எல்லோரும் வந்து கும்முறாங்க. ஜாலியா இருக்கு.

இங்க பாருங்க - இங்கன்னா இங்க இல்லீங்க - அய்யே - அடுத்த பத்தி ஆரம்பிக்கும் போது அப்பிடிச் சொல்றது வழக்கமுங்க - நம்ம இணையத்துலே ( நாம என்ன வெலைக்கு வாங்கிட்டமா ) கும்முற பதிவுகளைத் தேடிப் பிடிச்சு சுட்டலாமுன்னு ஒரு ஆசைங்க. அதென்ன விபரீத ஆசன்னு கேக்குறீங்களா ? என்ன பண்றது - ஆசாபாசங்கள் நிறைந்த மனித மனம் ஆசைப் படுவதை நிறுத்துகிறதா - இல்லையே. இம் மாபெரும் உலகில் ஒருவர் கூட ஆசைப் படக் கூடாது என ஆசைப் பட்டவன் சித்தார்த்தன் (அட நம்ம புத்தர் தானுங்க).

எனக்குப் பிடிச்ச ஒரு பதிவு என்னோட பேரனுது - பாருங்க - உடனே எங்க பாக்கணும்னு அபி அப்பா கேக்குறாரு - தொடர்ச்சியா எழுத வுட மாட்டெங்குறாங்கப்பா - சும்மா தொந்தரவு பண்ணிக்கிட்டே இருந்தா எப்படி எழுதுறது - எங்கே விட்டேன் - அட போங்கப்பா - மறந்து போச்சி.

ஆங்க்க்க்க்க், என்னோட பேரனோட வலைப்பூ சரவணன் என்ற குசும்பனோடதுங்க - சாரிடி ஷுட் ஸ்டார்ட் ஃப்ரம் ஹோம்னு சொல்லுவாங்க பெரியவங்க ( நான் தானுங்க) - அதனாலே மொதல்லே எங்காளுது - குசும்பன் இருக்கானே - அவனுக்கு பிடிச்சவங்க பிடிக்காதவங்கன்னு பாகு பாடே கெடயாது - கண்லே பட்டவங்களெல்லாம் கலாய்ப்பான். அப்பிடிப் பட்ட ஆளு - எம்மா - தாங்க முடியாது - ஒரு எட்டுப் பாத்துட்டு வந்துடுறிங்களா ? இவன் மத்தவங்க கூட எல்லாம் சேந்துக்கிட்டு குழுப் பதிவுலே எல்லாம் கும்முறான்.

அப்புறம் பாருங்க நம்ம அபி அப்பா - நட்டப்பா - கும்முறதுக்கேன்னு பொறந்தவரு - சும்மா மொக்க கும்மின்னு எதுனாச்சும் எழுதிக்கிட்டே இருப்பாரு - பொழுது போகாதப்ப - ஆணி இல்லாதப்ப பாக்கலாம் - படிக்கலாம் - ரசிக்கலாம் - பின்னூட்டத்துலே பின்னலாம் - என்னா வேணா பண்ணிக்குங்க.

கொறஞ்ச பச்சம் மூனு பேரயாச்சும் அறிமுகப் படுத்தனுமாம். வலைச்சர பொறுப்பாளர்கள் விதி எல்லாம் சொல்லிக் கொடுத்திருக்காங்க - அதனாலே வலையெல்லாம் வீசி வலைபூராத் தேடிக் கண்டு பிடிச்சேனுங்கோ - நம்ம ரசிகனே. - நம்ம ஸ்ரீதருங்க - இவருக்கு அறிமுகம் எல்லாம் தேவை இல்லீங்க - சும்மா மொக்க போட்டே மொக்கிடுவாருங்க - மொக்கையனே வுட மோசமுங்கோ - பாண்டிச்சேரிலேந்து கத்தாருக்கு வழி கேளுங்க - கரெக்டா சொல்லுவாரு.

.:: மை ஃபிரண்ட் ::. - ஏன் என்னெப் பத்தி எழுதுலே - ஆட்டோ அனுப்பட்டா - நான் தானே எல்லாப் பதிவுலேயும் 100 1000 10000 100000 னு பின்னூட்டம் போடுவேன் - கச்சி கட்டி ஹிட் ரேட்ட ஏத்திடுவேன்லெ - ஒரே பயமுறுத்தல் - மலேசியாப் பொண்ணாம் - ஒரு பத்து பதிவுலே எழுதுது. தனக்குன்னு ஒரு பதிவு – மத்ததெல்லாம் குழுப் பதிவு.

போதும்னு நெனைக்கி
றேன் - 100 பின்னூட்டம் வந்தா அடுத்ததும் இது மாதிரித்தான் - ஆமா - சொல்லிப்புட்டேன்
மேலும் வாசிக்க...

Tuesday, January 29, 2008

ஆன்மீகச் சரம் - 2

ஆன்மீகச் சரத்தினைத் தொடர்வது எனத் தீர்மானித்து இப்பதிவினைத் தொடங்கினேன். முந்தைய பதிவினில் சில ஆன்மீகப் பதிவர்களை அறிமுகப் படுத்தினேன். அறிமுகம் என்ற ஒன்று தேவை இல்லாதவர்கள் அவர்கள் அனைவரும். அவர்களை வலையுலகம் நன்கு அறியும். இருப்பினும் அவர்களை அறியாதவர்களுக்கும், புதியவர்களுக்கும், சுட்டி கொடுத்து, அவர்களது வலைப்பூவினை காணச் செய்தேன். முதல் ஆன்மீகச் சரம் தொடுத்த பின்னர் தான், இன்னும் அதிக பதிவர்கள் இருக்கிறார்கள் ஆன்மீகம் பரப்புவதற்கென்றே என்ற எண்ணம் நினைவிற்கு வந்தது. அதன் விளைவு இப்பதிவு.

அமெரிக்காவில் வசிக்கும் மாணவி ப்ரியா (எ) செண்பகலட்சுமி ( பிரியா வெங்கடகிருஷ்ணன்) ஆன்மீகம் என்ற வலைப்பூவில் ஆன்மீகம் பற்றி எழுதி வருகிறார். அப்பூவினில், ஆன்மீகத்தை பற்றிய செய்திகளை, சிறு சிறு வினா விடைகளாக, தருகிறார்.அதன் மூலம் ஆன்மீகத்தினைப் பரப்புகிறார்.

இவர் தமிழ்க் கல்வி என்ற ஒரு வலைப்பூவிலும் மற்ற சில குழுப்பூக்களிலும் கூட எழுதி வருகிறார். இவர் ஒரு தமிழ்மண நட்சத்திரப் பதிவரும் கூட என்பது மகிழ்ச்சியான செய்தி.

கைலாஷி என்ற சு.முருகானந்தம் சென்னையில் வசிப்பவர். சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்து, சென்னையிலேயே ஒரு பெரிய நிறுவனத்தில் பணி புரிபவர். நரசிம்மர், நடராசர், நவராத்ரி நாயகி, திருமயிலை, வைகுந்த ஏகாதசி, காரைக்காலம்மையார், திருப்பாவை, திருவெம்பாவை எனப் பல பூக்கள் மூலம் பக்தியைப் பரப்புகிறார். அனைத்துப் பூக்களும் படித்துப் பயன் தரத் தக்கன. புகைப்படங்களும் இலவச இணைப்பாக இணைக்கப் பட்டிருக்கிண்றன.

சென்ற பதிவில் குறிப்பிட்ட மதுரையம்பதி என்ற பதிவர் சௌந்தர்யலஹரி என்ற வலைப்பூவில், ஆனந்த லஹரி பற்றி அழகாகச் சொல்கிறார்.

நண்பர் தி.ரா.ச பல குழுப் பதிவுகளிலும் தனிப்பதிவுகளிலும் எழுதி வருகிறார். கௌசிகம் என்ற வலைப்பூவில் படங்களுடன், பாடல்களுடன், வளமான கருத்துகளைத் தருகிறார்.

சகோதரி கீதா சாம்பசிவம் பல வலைப்பூக்களில் பதிவுகள் இட்டாலும், ஆன்மீகப் பயணம் என்ற வலைப்பூவில், தன்னுடைய பயணக்கட்டுரையைத் தொடர்வதோடு, சிதம்பர ரகசியம் என்ற தலைப்பில், தில்லைச் செய்திகளை, ஆடல் வல்லானைப் பற்றிய செய்திகளை, அள்ளித் தருகிறார்.

நண்பர்களே சுட்டிகளைச் சுட்டி பயனடையுங்கள்

அன்புடன் சீனா
மேலும் வாசிக்க...

கவிதைச்சரம் - பூக்களில் உறங்கும் மௌனங்கள்

பொதுவாக வலைப் பதிவு என்பது ஒரு குறிப்பிட்ட வட்டம். அதில் பதிவர்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், இணையத் தொடர்பு இல்லாதவர்களை, வலைப்பூ அறிமுகம் இல்லாதவர்களை, வலைப் பதிவர்களின் கருத்துகள் எட்டுவதில்லை. வலைப்பூவில் உள்ள கட்டற்ற சுதந்திரம் மற்ற ஊடகங்களில் இல்லை. வலைப்பூ என்பது நம்முடைய தனிப்பட்ட நாட்குறிப்பு.

நண்பர் சிறில் அலெக்ஸ் எழுதும் தேன் என்ற வலைப் பூ முதல் முதலாக புத்தகமாக வெளி வந்துள்ளது. வலைப்பூ புத்தகமாக வெளி வருவதின் நோக்கமே ஆசிரியரின் எழுத்துகள் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நல்ல சிந்தனை தான்.

முட்டம் என்ற பெயரில் புத்தகமாக வெளி வந்திருக்கிறது. தன் பிறந்த ஊரைப் பற்றி - மலரும் நினைவுகளாக - இனிமையாகக் கழிந்த இளம் பருவத்தினைப் பற்றி எழுதி உள்ளார். ஆழி பதிப்பகம் 64 பக்கங்களில் 45 ரூபாய் விலையில் வெளியிட்டிருக்கிறது.

சிறில் அலெக்ஸ் ஒரு நச்சென்ற கவிதைப் போட்டி ஒன்று நடத்தி முடிவும் அறிவித்து விட்டார். பூக்களில் உறங்கும் மௌனங்கள் என்ற ஒரு நல்ல தலைப்பினையும் தந்து, மக்கள் எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்று அறிவதற்காக போட்டி நடத்தினார். மக்களும் பல்வேறு வகைகளில், பல்வேறு கருத்துகளில், மாறுபட்ட சிந்தனைகளோடும், பல்வேறு கருப்பொருளில், கவிதை படைத்தார்கள். அனைத்துக் கவிதைகளையும் பொறுமையாகப் படித்து, ஆராய்ந்து, முடிவும் அறிவிக்கப்பட்டு விட்டது. போட்டியாளர்களில் பெரும்பாலானவர்கள் கவிதைகள் அதிகம் எழுதியவர்கள் அல்ல. போட்டிக்கென்று, சிந்தித்து, ஒரு சிறு கவிதையை அழகு தமிழில் எழுதி உள்ளனர்.

போட்டிக்கு வந்த கவிதைகளைப் பற்றிய ஒரு சிறு அறிமுகம்.

வலைச்சர பொறுப்பாளர்களில் ஒருவரான சிந்தாநதி அழகாக எழுதி இருக்கிறார். மக்கள், பூங்காக்களில் இறக்கி வைக்கும் மனப் பாரங்களை மௌனமாகச் சுமந்து கொண்டிருக்கும் மலர்களைப் பற்றிய கவிதை.

அடுத்து அருமை நண்பர் வி.எஸ்.கே. ஆத்திகம் பற்றி அதிகம் பேசும் பதிவர். அழகாக அந்தாதி வடிவத்தில் மனித வாழ்க்கையையும், மலர்களையும் ஒப்பு நோக்கி, கனியது புளிப்பு என முடிக்கிறார்.

அடுத்து ட்ரீம்ஸ் எளிமையான சொற்களைக் கொண்டு கவிதை படைத்திருக்கிறார். மனித மனத்தையும் மலர்களின் உறக்கத்தையும் ஒப்பு நோக்குகிறார். அருமையான கவிதை.

அடுத்து குட்டிபிசாசு மலர்களைப் பற்றி - அவற்றின் ஒரு நாள் வாழ்க்கையைப் பற்றி - மலர்களும் ஒரு அழகியல் வெறுமை தான் என முடிக்கிறார்.

அடுத்து செல்வி ஷங்கர் வழக்கம் போல அழகு தமிழில் தனது தமிழறிவை வெளிப்படுத்துகிறார். மனிதனுக்குக் கூறும் அறிவுரைகளாக, பூக்களில் உறங்கும் மௌனம் போதும் என்கிறார்.

அடுத்து ஐயா சுப்பையா . அழகு - எளிமை - கவிதை அற்புதம். எதிர்காலம் என்ன வென்று தெரியாத நாமும் மலர்களும் ஒன்று தான் என்கிறார். உறங்கும் மௌனத்தை அப்படியே எழுப்பாமல் விட்டால் அது தான் நளினம் என்கிறார்.

அடுத்து வேதா சமூக அக்கறையுடன், குழந்தைத் தொழிலாளர்கள் பற்றி மன வருத்தத்தையும் தன் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி இருக்கிறார். மழலைச் செல்வங்களின் பிஞ்சு விழிகளில் உறங்கும் கனவுகளை பூக்களின் மவுனத்திற்கு ஒப்பிடுதல் அருமை அருமை.

அடுத்து பி.கே.எஸ் பேசாப் பொருளைப் பேசும் துணிவுடன் இருளைப் பற்றி எழுதுகிறார். வித்தியாசமான சிந்தனை.

அடுத்து சக்தி கை விடப்பட்ட மழலைச் செல்வங்களைப் பற்றி மிகுந்த மன வருத்தத்துடன், யாரோ செய்த பிழைகளுக்காக இவர்கள் படும் துன்பத்தை, விவரிக்கும் வரிகள் மனத்தை நெகிழச் செய்கின்றன. கண் கொண்டு பார்க்காவிட்டாலும், மனம் கொண்டு நேசிக்காவிட்டாலும், இதழ் கொண்டு தூற்றாதிருக்க வேண்டுகிறார்.

அடுத்து கண்மணி பல கவிதைகள் எழுதி இருப்பினும், இக்கவிதை மழலையின் மயக்கத்தை எண்ணி எண்ணி வருந்தும் மனதின் - உணர்வின் வலிகளை அழகாக, எளிமையான, பொருத்தமான சொற்களைக் கொண்டு எழுதிய விதம் பாராட்டத் தக்கது.

அடுத்து சதீஷ் மனித மனத்தில் தோன்றி மவுனமாக மறைந்து விடும் சொற்கள், கருத்துகள், ஆசைகள் பற்றி அழகாக கவிதையாக வடித்திருக்கிறார்.

அடுத்து அமிர்தன் காதலன் காதலி - இடையே உள்ள காதலைப் பற்றி எழுதி உள்ளார். காதலுக்கு முதல் எதிரி காதலை வெளிப்படுத்தாத மவுனம் தான்.

அடுத்து இப்னு ஹம்துன் மலரைப் பற்றி, வைரமுத்து போல, மகிழ்வுடன் எழுதி இருக்கிறார். மவுனமாக இருந்தாலும் மலர்ந்தே இருக்க அறிவுறுத்துகிறார். மவுனத்தின் அழகை ரசிக்கிறார்.

அடுத்து நிலா ரசிகன் பெண்மையைப் பற்றி, அதன் இயலாமையைப் பற்றி, அது படும் துன்பங்களைப் பற்றி அழகாக, எளிமையாக, வலிமை கொண்ட சொற்களால் வருந்தி இருக்கிறார்.

அடுத்து சகாரா கைவிடப்படும் குழந்தைகளைப் பற்றி, பொருள் பொதிந்த வரிகளுடன், மனித நேயத்துடன் யதார்த்தமாக, மொழி பெயர்க்க இயலாத மவுனத்தை எழுதி இருக்கிறார்.

அடுத்து நாடோடி இலக்கியன் வித்தியாசமான சிந்தனைச் சிதறல்கள்களாக - மௌனமாகப் பிறந்து, மௌனமாக வாழ்ந்து, மௌனமாக மரிக்கும் மலர்களைப் பற்றி எழுதி இருக்கிறார்.

அடுத்து பிரேம்குமார் பூக்களின் இயல்பான குணங்கள் - படிப்பினைகளாக நமக்கு - ஆனால் நாம் தான் எதையும் எளிதில் புரிந்து கொள்ள மாட்டோமே என வருந்துகிறார்.

அடுத்து அருமை நண்பர் சேவியர் ஈழத்தமிழர் படும் துன்பங்களைப் பற்றி எழுதி இருக்கிறார். பூக்களில் உறங்கும் மவுனங்களையே - எப்படி உறங்கும் எனக் கேட்ட வித்தியாசமான சிந்தனை.

அடுத்து இராகவன் என்ற சரவணன் மு மாந்தர் வெளியிடும் உணர்வுக் கதம்பங்கள் அத்தனையையும் உள் வாங்கியும் தன் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற கொள்கையுடன் மௌனமாக உறங்கும் பூக்கள் என்கிறார்.

அடுத்து ஷைலஜா மவுனத்தைத் தாய்மொழியாகக் கொண்ட மலர்களைப் பற்றியும், நிரந்தர மவுனத்தில் ஆழ்ந்து போகும் மலர்களின் / மனிதர்களின் பொதுவிதியைப் பற்றியும் அழகாக எழுதி இருக்கிறார்.

அடுத்து நம்பிக்கை பாண்டியன் முதிர் கன்னியரைப் பற்றி எளிமையாக, ஆழ்ந்த வருத்தத்துடன் எழுதி இருக்கிறார்.

அடுத்து அருட்பெருங்கோ புத்தாண்டில், புதுச் சிந்தனையுடன், புது திசையில், ரசிக்கும் படியான கவிதை படைத்திருக்கிறார். போட்டிக் கவிதைகளில் இதுதான் முதல் சோகக் கவிதை என நினைக்கிறேன். மாறுபட்ட சிந்தனை.

அடுத்து நண்பர் மா.கலைஅரசன் மழலைச் செல்வங்களைப் பற்றி மகிழ்ந்து எழுதி இருக்கிறார். அருமையான கவிதை. எளிமையான சொற்கள்.

அடுத்து நண்பர் நவன் பூக்களின் புரிந்து கொள்ள முடியாத மவுனத்தைப் பற்றி எழுதி இருக்கிறார்.

இறுதியாக, நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு கவிதை எழுதி போட்டியைத் துவக்கி வைத்தார். காதல், தாயின் அன்பு, மழலையின் தூக்கத்தில் சிரிப்பு, இருண்ட கோபுரத்தின் ஒற்றைத் தீபமென பலவற்றை உவமையாகக் காட்டுகிறார். சிறு கவிதை. அருமை.

இத்தனை கவிதைகளின் உட்பொருள்களையும் ஒருங்கே தருகிறார் செல்வி ஷங்கர் .

பதிவர்களே அனைத்துக் கவிதைகளையும் படியுங்கள். மனம் மகிழுங்கள்.
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது