07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, March 3, 2015

தேன் மதுரத்தமிழ் கிரேஸ் பொறுப்பில் இந்த வார வலைச்சரம்....

வணக்கம் வலைச்சர நண்பர்களே...

தவிர்க்க இயலாத காரணத்தால் கடந்த மாதம் 23-ம் தேதி முதல் துவங்கும் வாரத்தில் வலைச்சரத்தில் பதிவுகள் வெளிவரவில்லை. ஒவ்வொரு நாளும் வலைச்சரத்தை எட்டிப் பார்த்து ஏமாந்த வாசகர்கள் எப்போதும் போல வலைச்சர பதிவுகளுக்கு தங்களின் ஆதரவைத் தருவார்கள் என்ற நம்பிக்கையில், சிற்சில வாரங்களில் ஆசிரியர் பொறுப்பினில் வலைப்பதிவர்களை அமர்த்த இயலாத நிலையில் உள்ளோம் என்பதை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

வலைச்சரத்தில் 22-02-2015 அன்று முடிந்த  வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த சாஸிகா கிச்சன் வலைப்பதிவர் மேனகா அவர்கள் தமது ஆசிரியர் பொறுப்பை மிகுந்த ஆர்வமுடனும், பொறுப்புடனும், அனைவரும் பாராட்டும் படியாக செய்து முடித்துள்ளார். 

அவர் எழுதிய பதிவுகளில் சமையல் கில்லாடி பதிவர்கள் பலரையும் குறிப்பிட்டு சிறப்பான, சுவாரஸ்யமான வலைச்சர வாரமாக நமக்கு அளித்திருந்தார்.
அவர் தனது வலைச்சர வாரத்தில் ஏழு இடுகைகள் வரை எழுதி  250-க்கும் மேற்பட்ட மறுமொழிகளும்,  2550 பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளது.

தனது வலைச்சர வாரத்தை சுவைபட முடித்த மேனகா அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

இந்த வாரத்தில் நாளை முதல் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்க "தேன் மதுரத்தமிழ்" என்னும் வலைப்பூவை எழுதி வரும் சகோதரி கிரேஸ் பிரதிபா அவர்களை அழைக்கின்றேன். இவர் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றுக் கொள்வது இது மூன்றாவது முறையாகும்.


தேன் மதுரத்தமிழ் கிரேஸ் என்று பதிவர்கள் வட்டத்தில் அறியப்படும் அவரது முழுப்பெயர் கிரேஸ் பிரதிபா. மதுரையில் கல்லூரிப் படிப்பை முடித்து வளாகத் தேர்வின் மூலம் பெங்களூருவாசியாகித் தற்பொழுது கணவர் மற்றும் இருமகன்களுடன் அட்லாண்டாவில் வசித்து வருகிறார். 


அவரது வலைத்தளப் பயணம் 2008இல் ஆரம்பித்தது. அப்போது ஆங்கிலத் தளம் ஆரம்பித்து கவிதைகள், அனுபவங்கள், கதைகள் என்று எழுதிக் கொண்டிருந்தார். அதன் பிறகு 2012இல் இருந்து 'தேன் மதுரத் தமிழ்' என்ற தமிழ்த் தளத்தைத் தொடங்கி இலக்கியம் கலந்து பதிவுகளை எழுதி வருகிறார். மதுரையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பில் 'துளிர் விடும் விதைகள்' என்ற கவிதைத்தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்.


சங்க இலக்கியப் பாடல்களை ஆங்கிலத்தில் Sangam Tamil Literature in English (http://sangamliteratureinenglish.blogspot.com/) என்ற தளத்தில் எளிமையான முறையில் எழுத்துப்பெயர்ப்போடு மொழிமாற்றம் செய்து கொண்டிருக்கிறார்.


கிரேஸ் பிரதிபா அவர்களை வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி "வருக.... வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் மேனகா..
நல்வாழ்த்துக்கள் கிரேஸ் பிரதிபா...

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....

23 comments:
 1. கிரேஸ் பிரதிபா அவர்களை வலைச்சர ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தி "வருக.... வருக.." என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக்குழுவோடு இணைந்து "குழலின்னிசையும்"
  வாழ்த்தி வரவேற்று மகிழ் மடல் வாசிக்கின்றது.

  பதிவுகள் பதிகங்கள் ஆகட்டும்
  சிறப்புறட்டும் அரிய ஆசியர் பணி

  வாழ்த்துகளுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
 2. வருக வருக வாழ்த்தி வரவேற்கிறோம் கிரேஸ்

  ReplyDelete
 3. வாருங்கள் சகோதரி... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 4. வருக வருக....வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 5. வாழ்த்தி வரவேற்ற அனைவருக்கும் நன்றி!

  ReplyDelete
 6. வருக.. வருக.. நல்வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 7. வருக கிரேஸ்! வலைச்சரம் வழியே, “சொல்புதிது, பொருள்புதிது“ எனும்படியான பல புதிய வலைத்தள அறிமுகங்களைத் தருக தருக என வரவேற்கிறேன்.

  ReplyDelete
 8. வலைச்சர ஆசிரியராய் பொறுப்பேற்றிருக்கும் உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 9. Amazing Grace... How Sweet thy Sound..

  ReplyDelete
 10. வருக வருக தேமதுரத் தமிழ் கிரேஸ்.

  ReplyDelete
 11. வலைச்சர ஆசிரியை பொறுப்பேற்கும் தேமதுரத் தமிழ் கிரேஸுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 12. சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் அவர்களை வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன்!
  த.ம.6

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் தோழியே..!

  ReplyDelete
 15. கிரேஸ் டியர்!!! welcome!!! welcome!

  ReplyDelete
 16. வருக! வருக! கிரேஸ் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. வாய்பினை தந்த குழுவிற்கு நன்றிகள் பல, இந்த வார ஆசிரியை கிரேஸ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 18. வாழ்த்துகள்மா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது