07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, March 16, 2015

இனிய தமிழ் உறவுகளே !

உள்ளத்தின் தேரோட்டம்
உணர்ச்சியின் நீரோட்டம்
உலகமேற்று பாராட்டும்
வலைச்சரம் வாழ்க"வென்று" !

இனிய தமிழ் உறவுகளே !

வணக்கம் !

குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டிருந்த இந்த ஜாக்கிக்குஇந்த வாரம் ஜாக்பாட் அடிச்சிருக்கு ! பாருங்கய்யா... பாருங்க !

"வலைச்சரம்" என்னும் இணையத்தின் இந்திரக் குதிரையை இந்த வாரம் நான் தான் ஓட்ட வேண்டுமாம் !

ஏனென்றால் நல்லா ஓடுற குதிரைக்கு கண்திருஷ்டி அதிகமாயிடிச்சின்னு நினைக்கிறேன்...

அதான் என்னை கொண்டுவந்து குதிரைக்கு கொள்ளு மாதிரி காட்டி அதன் முதுகில் உட்காரவைத்துவிட்டார்கள் அன்பின் சீனா அய்யா அவர்களும், பிரகாஷ் வாசி அய்யா அவர்களும் !

அறிமுக உபயம் குதிரை வியாபாரி கில்லர்ஜி அவர்கள் ! ( கோபம் வேண்டாம் குதிரைப் படை வீரரே ! )

வலைச்சரம் என்னும் பந்தய குதிரைக்கு முன்னால் நான் சாதாரண வெந்தயமுங்க !

ஓடுற குதிரைக்கு ஒப்புக்கு சப்பாணியாக நான் !

வெற்றிக்கோட்டை தொட வேண்டுமாம்... தொடுவதற்கு நீங்கள் அனைவரும் வலைச்சரத்தை தொடர வேண்டுகிறேன் !

இந்த வெந்தயக்குதிரை வெற்றிக்கோட்டை தொடுவதற்கு வாழ்த்தி ஆரவாரம் செய்ய வேண்டுகிறேன் !

இந்த தருணத்தில் நட்புக்கு இலக்கணமாய் திகழும் எனது நண்பர்களுக்கு நன்றியினை காணிக்கையாக்கி மகிழ்கின்றேன்.

"குழலின்னிசை" என்னும் வலைப்பூவை ஆசிர்வதித்து தொட்டு நட்டது ஒரு கை !

அது சாம் என்கிற சாமானியன் அவர்களது அன்புக் கை !

குழலின்னிசை வலைப்பூவை வலைச்சரத்தில் தொடுத்தது ஒரு கை ! அது கில்லர்ஜியின் ஆ(மீ)சைக் கை !

குழலின்னிசைக்கு அழகு வடிவம் அமைத்தது ஒரு கை ! அது திண்டுக்கல் தனபாலன் அவர்களின் பண்பு கை.

குழலின்னிசைக்கு காணொளி வடிவம் அமைத்தது 'சத்திய'ம் தவறாத சுப்பு தாத்தாவின் ஆசிர்வாத கை !

நட்புக்கை

பாரில் உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே
கொடுக்க இசைந்த குளிர்க்கை (32) (கம்பரின் திருக்கை வழக்கம்)


அரிசி கேட்டால் யானை தருபவர்

நொய்ய
எறும்புக்கும் ஆஸ்பதம் தான் இல்லை என்ற மாட்டில்
திறம்புக்க யானை தரும் செய் கை (54) (கம்பரின் திருக்கை வழக்கம்)


நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனில் கொட்டின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை (குறள் 789)

நகுதல் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்சென்று இடித்தல் பொருட்டு (குறள் 784)

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்புஆம் கிழமை தரும் (குறள் 785)


நட்புக்கு கவி பேரரசு வைரமுத்து புது புகழுரை படைப்பார்...

நட்பு என்பது, சூரியன் போல்...
எல்லா நாளும் பூரணமாய் இருக்கும்
நட்பு என்பது, கடல் அலை போல்...
என்றும் ஓயாமல் அலைந்து வரும்
நட்பு என்பது, அக்கினி போல்...
எல்லா மாசுகளையும் அழித்து விடும்
நட்பு என்பது, தண்ணீர் போல்...
எதில் ஊற்றினாலும் ஒரே மட்டமாய் இருக்கும்
நட்பு என்பது, நிலம் போல்...
எல்லாவற்றையும் பொறுமையாக தாங்கிக் கொள்ளும்
நட்பு என்பது, காற்றை போல்...
எல்லா இடத்திலும் நிறைந்து இருக்கும்
நட்பு உன்னதமானது, அதனை மதித்து அனைத்து நண்பர்களையும்
கெளரவித்து மகிழ்கின்றேன்.

நன்றி !


இனி எனது வலைப்பூவுக்கு வாசம் தந்த படைப்புகள்...

1. கவிதை
"தாய் மொழி தினம்"

நற்றமிழ் புலவன் பாரதி 


2. படம் சொல்லும் பாடம்

கண்ணீர்க் குடம் 

படம் சொல்லும் பாடம் (யானைப் பாறை) 

படம் சொல்லும் பாடம் (நண்பனே!)3. சிறுகதை

இறைவனைத் தேடி (சிறுகதை) 

அகல் விளக்கு (சிறு கதை) 

பெருமை பேசும் பொறுமை(சிறுகதை) 


4. விழிப்புணர்வு கட்டுரைகள்

" நுணலும் வெற்றிக் கோட்டைத் தொடும் " 

 விடையைத் தேடி!

பெண்மையின்றி அமையாது பேர் உலகு 


5. இன்று ஒரு தகவல்

காரணமில்லாமல் காரியமில்லை 

கடல் தரும் அமுதம் கல் உப்பு

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் 


நண்பர்களே !

இந்த வெ(ப)ந்தயக் குதிரையின் பயிற்சி ஓட்டங்களாகிய பதிவுகள் இன்று போதும் என்றே எண்ணுகின்றேன்.

நாளை நல்ல பல பதிவாளர்களின் பளிச்சிடும் பதிவுகளோடு உங்களை வந்து சந்திக்கின்றேன்.

நன்றி !

புதுவை வேலு

 

64 comments:

 1. அன்பு நண்பர் யாதவன் நம்பி

  அறிவது நலனே ! விழைவதும் அஃதே !

  பதிவு அருமை.

  இனிய தமிழ் உறவுகளே என அன்புடன் அழைத்து, கவிதை, படம் சொல்லும் பாடம், சிறுகதை , விழிப்புணர்வுக் கட்டுரைகள், இன்று ஒரு தகவலென பயிற்சி ஓட்டங்களாகிய பதிவுகளைத் தந்தது அருமையான செயல். பொறுமையாகப் படிக்க வேண்டும்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. அன்பின் அய்யா சீனா அவர்களின் முதல் பின்னூட்டம்
   உழைப்பை உற்சாகப் படுத்தும் ஊக்க சக்தி!
   வருகைக்கும், வாக்கிற்கும் நன்றி அய்யா!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 2. வணக்கம்

  சுய அறிமுகத்துடன் தங்களின் பதிவு பற்றி சொல்லியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்... தொடருகிறேன்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கவிஞரின் கவித்துவம் நிறைந்த பின்னுட்டம் மேலும் தொடரட்டும்.
   வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 3. உங்கள் பாணியில் சுய அறிமுகம் நன்று...

  மேலும் அசத்துங்க... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் வார்த்தைச் சித்தரே!
   வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
   வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 4. வாழ்த்துக்கள் நண்பரே
  தம +1

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் கரந்தையார் அவர்களே!
   வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன்.
   வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 5. ஒரு வார காலம் வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்.....

  ReplyDelete
  Replies
  1. நன்றி!
   நண்பர் கார்த்திக் சரவணன் அவர்களே!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 6. வருக.. வருக!..
  அன்பின் யாதவன் நம்பி அவர்களுக்கு நல்வரவு!..

  ReplyDelete
  Replies
  1. ஊக்கம் தரும் கருத்தினை
   உள்ளன்போடு ஏற்கின்றேன் அய்யா!
   வருகைக்கு மிக்க நன்றி
   தொடர்க!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 7. natpudan naanum payanekeran vaalthukal.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே!
   வருக! கருத்தினை தருக!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 8. Replies
  1. நன்றி நண்பரே!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 9. Replies
  1. நன்றி நண்பரே!

   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 10. வருக நண்பரே... தருக பல கவிதைகளை...

  அருமையான
  ஆரம்பமே...
  இனிய வாரமாய்
  ஈட்டிக்கொடுக்க
  உங்களால் முடியும்
  ஊதித் தள்ளுவீர்கள்
  என்று நினைக்கிறேன்
  ஏமாற்ற மாட்டீர்கள்
  ஐயமில்லையெனக்கு
  ஒளியாய், ஒலியாய்
  ஓங்கி வளந்திட
  ஔவையின் ஆசியோடு.

  நண்பன் கில்லர்ஜி
  ஊரில் போய் என்ன வியாபாரம் செய்யலாம் என பூக்களை பறித்துக்கொண்டே ஆலோசித்தேன் பரி வியாபாரமே சரி என்று தோன்ற வைத்த நண்பா நீர் வாழ்க
  தமிழ் மணம் ஐந்தருவி

  ReplyDelete
  Replies

  1. கவிதை பின்னூட்டம் ஆஹா ரகம்!
   அருமை நண்பரே!
   தொடர்க!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 11. அருமையான பதிவுடனும், சுய அறிமுகத்துடனும்...வாருங்கள் ஐயா ! வலைச்சரத்தைத் தமிழ் பூக்களால் தொடுக்க!
  //வெற்றிக்கோட்டை தொடுவதற்கு வாழ்த்தி ஆரவாரம் செய்ய வேண்டுகிறேன் !// ஆரவாரம் தொடங்கிவிட்டது ஐயா!! தொடரும்! வெற்றியைத் தொடுவதற்கு!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வெற்றிக்கோட்டை தொடுவதற்கு வாழ்த்திய ஆசானே
   வணங்கி ஏற்கின்றேன்.
   வருகைக்கு மிக்க நன்றி

   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 12. ஒரு வார காலம் பரி போல் ஓட்டம் தான் போலும்.வாழ்த்துகள் தொடர்கிறோம். பட்டையைக் கிளப்பூங்க பரி மேல், தங்களுடன் ஓட முயற்சிக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. ஊக்கம் தரும் கருத்தினை தந்தாய் சகோதரி!
   ஏற்கின்றேன் எளிமையுடன்,
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Delete
 13. வலைச்சர ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றி சகோதரி!
   வருகை தொடர்க! வாக்கினை தருக!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Delete
  2. வணக்கம் சகோதரி!
   தங்களது பதிவை சிறப்பிக்க மறந்தமைக்கு மிகவும் வருந்துகிறேன்.
   எப்படி விடுபட்டது? அயற்சியா? அல்லது முயற்சியில் உள்ள குறைபாடா?
   தவறுக்கு வருந்துகிறேன் சகோதரி!
   மன்னிக்கவும். நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 14. வருக நண்பரே! வாழ்த்துகள்! அறிமுகப் பதிவே அருமை! தொடருங்கள் !

  ReplyDelete
  Replies
  1. அறிமுக பதிவை பாராட்டி கருத்தினை தந்த புலவர் அய்யாவே
   வணங்கி ஏற்கின்றேன் வளமான உமது கருத்தை!
   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Delete
 15. ஆஹா!!! இந்தவாரம் நம்பி அண்ணா வரமா!!! குழலின் இசை எட்டுத்திக்கும் பரவட்டும்:)) வாழ்த்துகள் அண்ணா!

  ReplyDelete
  Replies
  1. எட்டுதிக்கும் பரவட்டும் வலைச்சரம் புகழ்
   என வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி சகோதர

   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Delete
 16. தமிழ் உறவுகளையும் நட்பையும் ஒரே அலைவரிசையில் பூச்சரமாக கோர்த்தது சிறப்பு.
  அதேபோல், சங்க புலவர்களின் இலக்கியத்தையும் கவி பேரரசு இலக்கியத்தையும் நட்புடன் சேர்த்தது சிறப்பு.
  இந்திர குதிரையை அழைத்தது, இந்திர விழா கொண்டாடிய சிலப்பதிகாரத்தின் வாசமோ ?
  அறிமுகத்தில் அசத்திய புதுவை வேலு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  sattia vingadassamy

  ReplyDelete

 17. தமிழ் உறவுகள்
  சங்க இலக்கியம்
  நட்பு
  மூன்றையும் முன் நிறுத்தி
  பின்னூட்டத்தை வெகு சிறப்பாய் தந்தமைக்கு நன்றி நண்பரே!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 18. Replies
  1. வாழ்த்தினை வணங்கி ஏற்கின்றேன் நண்பரே!
   வருக! வாக்கினைத் தருக!

   நன்றியுடன்,
   புதுவை வேலு

   Delete
 19. வாழ்த்துக்கள்.சிறக்கட்டும் உங்கள் பணி.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்தினை வழங்கிய சகோதரி அனிதா சிவா அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 20. எடுத்ததும் வேகம் பிடித்து விட்டதே வெந்தயக் குதிரை :)
  த ம 10

  ReplyDelete
  Replies
  1. தங்களது "கொசுக்கடி" ஜோக்கை படித்ததனால் வந்த ஓட்டம்.
   கொசு கடியில் இருந்து தப்பிக்க ஓடிய ஓட்டம் வெந்தயக் குதிரையின் பந்தய ஓட்டம் பகவான் ஜி அவர்களே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 21. இணையத் தமிழை இதயத்தில் சுமந்து இமயத்தில் வலம் வரும் வலைச்சர தேருக்கு சாரதியாய் வந்திருக்கும் நண்பரே...

  உங்களை பெருமையுடனும் பூரிப்புடனும் வாழ்த்துகிறேன் !

  ஒரு குட்டிக் கதையின் ஞாபகம் வருகிறது...

  மகா கஞ்சன் ஒருவன் மரணத்துக்கு பின்னால் எமதர்மனின் முன்னால் நிறுத்தப்படுகிறான்...

  அவனின் பாவ புண்ணிய கணக்குகளை கேட்கிறான் எமன். எச்சில் கையால் காக்காய் ஓட்டாத இந்த உலோபி ஒரு புண்ணியமும் பண்ணியதில்லை என்கிறான் சித்திரகுப்தன் !

  எமதர்மன் அந்த கஞ்சனை நரகத்தில் தள்ள கட்டளையிட,

  " நான் ஒரு புண்ணியம் பண்ணியிருக்கிறேன் பிரபுவே ! "

  என கதறிய உலோபி,

  " வழி தவறிய மூதாட்டி ஒருத்திக்கு என் ஆட்காட்டி விரலை நீட்டி சரியான பாதையை காட்டியிருக்கிறேன் ! " என கூறுகிறான் !

  " அப்படியானால் இந்த பாவியின் ஆட்காட்டி விரலை மட்டும் வெட்டி சொர்க்கத்தில் போட்டுவிட்டு இவனை நரகத்தில் தள்ளுங்கள் ! " என எமன் கர்ஜிக்கும் சமயத்தில்,

  " தவறு நடந்துவிட்டது மகாபிரபு ! இவனின் ஆயுள் இன்னும் முடியவில்லை ! " என பதைக்கிறான் சித்திரகுப்தன் !

  மீன்டும் உயிர்பெற்று வீதியில் நடக்கும் அந்த கஞ்சனிடம் ஒருவன் வழி கேட்க, தன் உடல் முழுவதையும் உலுக்கி, ஆட்டி, குணிந்து வளைந்து வழி காட்டினானாம் உலோபி !!!

  தோழரே...

  நான் உங்களுக்கு உதவியதும் இதை போலத்தான் ! தெருவோரமாய் நின்றிருந்த என்னிடம் வலைச்சந்தைக்கு வழி கேட்டீர்கள்... ஆட்காட்டி விரல் நீட்டினேன் ! மற்றப்படி உங்கள் சரக்கு நயம் சரக்கு... கடை களைகட்டிவிட்டது ! அவ்வளவுதான் !

  ( சரக்கு என்றதும் புதுவையின் பெயர்போன "சரக்கு" உங்களுக்கு ஞாபகம் வந்தால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது ! நான் கூறியது நண்பர் புதுவை வேலுவின் அறிவு சரக்கை மட்டுமே !!! )

  நிச்சயமாய் சிறப்புறப் போகும் உங்களின் இந்த வலைச்சர பொறுப்பு எதிர்கால சிறப்புகளுக்கான தொடக்கமாய் அமைய வேண்டி வாழ்த்துகிறேன் !

  " ... யாரங்கே !... தாரை தப்பட்டைகள் கிழியும்படி வேலு ஜாக்கிக்கு வரவேற்பை தொடங்குங்கள்.... "

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. நிச்சயமாய் சிறப்புறப் போகும் உங்களின் இந்த வலைச்சர பொறுப்பு எதிர்கால சிறப்புகளுக்கான தொடக்கமாய் அமைய வேண்டி வாழ்த்துகிறேன்!
   கர்ணனின் பலம் கவச குண்டலத்தில் என்பது போல் எனது பலம் நட்பு தான் என்பதை நன்கறிந்த நண்பர் சாமானியரே! உமது வாழ்த்தின் வலிமை தாரை தப்பட்டைகளோடு சேர்ந்து ஒலிக்கட்டும்! பலிக்கட்டும். நன்றி! நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 22. வாழ்த்துக்கள்...பணி சிறக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துப் பணி சிறக்க நல்லாசி வழங்கிய தனிமரம்
   பதிவாளர் நண்பருக்கு புதுவை வேலுவின் புகழ் வணக்கம்!
   வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 23. வாங்க வாங்க...
  கச்சேரி களைகட்டட்டும்...
  இவ்வாரம் முழுக்க அசத்துங்கள் சகோ. வாழ்த்துக்கள்.

  ஆவலுடன்...

  தம 12

  ReplyDelete
  Replies
  1. அசத்தல் வாரமாக அமைய அறிய பதிவை தந்தமைக்கு நன்றி சகோதரி!
   வலைச்சரம் தொடுப்பில் புகழ் மலர் தாங்கள் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 24. அருமையான ஒரு சுயாறிமுகம்.
  தொடரட்டும் தங்களது ஆசிரியர் பணி,

  ReplyDelete
  Replies
  1. சொக்கத் தமிழ் சொக்கரின் தமிழ் வாக்கு பலிக்கட்டும் சிறக்கட்டும்!நன்றி நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 25. வாழ்த்துக்கள்!
  த.ம.13

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திற்கும், வாக்கிற்கும் ,வணக்கமும் நன்றியும் நண்பரே!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 26. வலைச்சர ஆசிரியர் ஆனமைக்கு வாழ்த்துக்கள்! தொடருங்கள் உங்கள் இன்னிசையை!

  ReplyDelete
  Replies
  1. குழலின்னிசையை பெருமை படுத்தினீர்கள் நண்பரே தங்களது வலைப் பூவில் அன்று!
   இசைக்கு பெருமை சேர்க்க இனிய கருத்தினை தந்தீர் இன்று!
   தொடரட்டும் நம் நட்பு நாளையும் நன்று!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 27. வலைச்சரம் ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் எங்கள் மண்ணின் மைந்தர் புதுவை வேலு அவர்களுக்குப் பாராட்டுக்கள்! சிறப்பான பணி செய்ய வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வலைச் சரம் தொடுத்து அதன் மணம் கமழும் வாசனையை நமது புதுவை மண்ணிலும் கொண்டு சேர்ப்போம் சகோதரி!
   வாழ்த்திற்கு நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 28. அருமையான அறிமுக உரை, நட்பு கவிதை மிக அருமை.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. இதம் தரும் இன்பம்
   இசைபட இயைந்தீர் சகோதரி!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 29. அன்பின் சக பதிவர்களே !

  வருகிற 23.03.2015 / 30.03.2015 / 06.04.2015 / 13.04.2015 / 20.04.2015 / 27.04.2015 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் இருந்து ஒரு வார காலத்திற்கு வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க விரும்பும் நண்பர்கள் cheenakay@gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்க. ஆவன செய்ய முயற்சி எடுக்கப் படும்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 30. அன்பின் சக பதிவர்களே !

  வருகிற 23.03.2015 / 30.03.2015 / 06.04.2015 / 13.04.2015 / 20.04.2015 / 27.04.2015 ஆகிய நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் இருந்து ஒரு வார காலத்திற்கு வலைச்சர ஆசிரியப் பொறுப்பேற்க விரும்பும் நண்பர்கள் cheenakay@gmail.com என்ற முகவரிக்குத் தொடர்பு கொள்க. ஆவன செய்ய முயற்சி எடுக்கப் படும்.

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சீனா அய்யா அவர்களுக்கு,
   புதுவை வேலுவின் புகழ் நன்றி!
   தங்களது முயற்சி திருவினயாக்கும்!
   நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 31. வலைச்சர ஆசிரியர் பணி முடிய இருக்கும் தினத்தில் வாழ்த்துச் சொல்வது சரியல்ல என்றாலும்...
  கலக்கலான வாரமாக கொண்டு செல்லும் தங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. கலக்கல் வாரத்தின் இலக்கே
   உங்களை போன்றோர் தரும் பதிவுகளின் சிறப்பே ஆகும்!
   நல்லது நண்பரே! நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 32. பரிவை சே.குமார் அவர்களின் கருத்தையே நானும் முன் மொழிகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கலக்கல் வாரத்தின் இலக்கே
   உங்களை போன்றோர் தரும் பதிவுகளின் சிறப்பே ஆகும்!
   நல்லது நண்பரே! நன்றி!
   நட்புடன்,
   புதுவை வேலு

   Delete
 33. வாருங்கள் ராஜ்குமார் ரவி அவர்களே!
  வணக்கம்!
  பரிவை சே.குமார் அவர்களின் கருத்துக்கு,
  நான் தந்த பதிலையே, உங்களுக்கு ,நானும் முன் மொழிகிறேன்.
  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 34. நட்பின் ஆழத்துடன் துவங்கும் ஆசிரியப்பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது