07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 4, 2015

என்னைக் கடந்து செல்பவனே

வணக்கம் நண்பர்களே!
"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பதைப் பாட நூல்களில் படித்தும், பின் பெருமையாகவும்  சொல்லிக்கொள்வோம். ஆனால் உண்மையிலேயே அப்படி இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால்...பார்த்துட்டீங்களா? இப்போ இங்க வாங்க.. உண்மையில் அப்படி இல்லைதானே? அறியாதவரைப் பார்த்தால் சிரிப்பதோ, ஹாய் சொல்லுவதோ நம் ஊரில் இல்லை. ஆனால் கணியன் பூங்குன்றனார் நம்மூர்! 
"யாதும் ஊரே அறிந்தவர் கேளிர்" என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம். ஏனென்றால் அறியாதவரிடம், பேசப் பழக பயம். யார் நல்லவர், யார் கெட்டவர் என்று தெரியாது. இப்படித்தான் நானும் வலைத்தளம் ஆரம்பித்து அதைப் பரப்புவதற்கு யோசித்தேன்..பின்னர் மெதுவாக வெளியே வர வர, எத்தனை நல்ல நட்புகள்! உலகமெங்கும்!! வெளியே வந்து பேசினால் தானே அறியாதவர் அறிந்தவராக முடியும்? 

ஆங்கிலக் கவிஞர் வால்ட் விட்மன் என்பவர் ஒரு கவிதையில் இது போல் சொல்லியிருப்பார், 
"யாரோ, என்னைக் கடந்து செல்பவனே,
என்னோடு பேச நீ விழைந்தால்
ஏன் பேசக் கூடாது?
நானும் ஏன் பேசக் கூடாது?" இது அவர் கவிதையிலிருந்து என்னைக் கவர்ந்து என் நினைவில் பதிந்த  ஓரிரு வரிகளின் தமிழாக்கம். 
அன்னியர் இருவர் சந்தித்தால், பேசினால் தானே அறிந்தவர் ஆக முடியும்? அப்படிப் பேசுவதைத் தான் கவிஞர் விரும்பியிருக்கிறார். கணியன் பூங்குன்றனாரும் இதைத் தான் பல ஆண்டுகள் முன்னரே சொல்லியிருக்கிறார். விட்மன் கவிதை படித்தபொழுது நான் இப்படித்தான் இரண்டையும் இணைத்துப் பார்த்தேன்.

பயம், சந்தேகம் இவற்றைக் கடந்து கவனத்துடனும் ஒரு அடி எடுத்து வைத்தால் நட்புச் சிறகு விரிக்கும். இதை வலைத்தளத்தில் நான் பார்க்கிறேன்.
சரி, இன்று நான் இங்கு அறிமுகப்படுத்தப் போகும் தளங்களைப் பார்க்கலாம்.

'இங்கே எழுத்தாக நான்' என்று தன் சுயவிவரத்தில் சொல்லியிருக்கும் மிருணா கண்டிப்பாகத் தெரிகிறார் அவர் எழுத்துகளில். ஒரு சில இங்குப் பகிர்கிறேன்,  சைக்கிள் என்ற அவர் தளம் சென்று மற்றதைப் பாருங்கள்.

"அவளது ஓட்டத்தின் ஏற்ற இறக்கங்களில்
தானும் சறுக்கு விளையாடிக் கொள்ளும்
மெலிந்த போன இடுப்புக் குழந்தை." காட்சி கண்முன் வந்து மனதைப் பிசைகிறது. இன்றும் இந்நிலை இருக்கும்பொழுது வளர்ந்துவிட்டோம் என்று சொல்வது விந்தையான விசயம். முழுக்காட்சியையும் காண இங்கே சொடுக்குங்கள், பேசும் பொற்சித்திரமே."வறண்டு போன ஆறுகளின் செம்பழுப்புத்  தோல் தடங்கள்" என்ன ஒரு சொற்கோவை, ஈரக்காற்று கவிதையில். சொற்களும் கருத்தும் இனிதே உறவாடும் இவர் கவிதைகளின் ஊற்று எங்கிருந்து வந்திருக்க வேண்டும் என்று நான் நினைப்பது இப்பதிவில் சொர்ணம் அம்மா நீ.

அமிர்தா அவர்களின் தளம் நந்தவனம். வாழ்க்கைப் பயணத்தில் ஏற்படும் அனுபவப் பகிர்தல் என்று சொல்லும் அவரின் தளத்தில் சமூகம் சார்ந்த விசயங்கள் நிறைய இருக்கின்றன. அமிர்தா அவர்களின் தளத்தில் இருந்து சில பதிவுகள்,

எப்பாடு பட்டாவது பிள்ளைகளைக் கரையேற்ற தாய் படும் பாடும், சமூகத்தின் வெட்டிப்பேச்சும், மேரியம்மா பதிவில். 

2012ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது பெற்ற தோல்  - நாவல் ஒரு அலசல்.
சிறந்த ஒரு ஆசிரியர், சொர்ணவல்லி மிஸ்.

அனிதா என்ற தளத்தில் எழுதிவருகிறார் அனிதா சிவா அவர்கள்.அவரின் சில பதிவுகள், 
 தெருவில் விடப்பட்ட தாய்  
வேலைக்குச் செல்லும் பெண்கள்.
இவர் அதிகம் எழுதவில்லை என்று நினைக்கிறேன், இனி எழுத வாழ்த்துவோம்.

செந்தமிழ் அவர்களின் தளம் அறிவை விசாலமாக்கு. புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள இத்தளத்தில் அறிவுத் தோட்டம் - இது விவசாயினுடைய கதை என்ற பதிவு, அவர் ஒரு இயற்கை விவசாயி என்று சொல்கிறது. அவரின் இந்த முயற்சிக்கு  நல்வாழ்த்துக்களைச் சொல்வதோடு  மேலும் நிறைய எழுதவும்  வாழ்த்துவோம். அவரின் கனவோ காத்திருக்கு அருமையான ஒரு தாலாட்டு.

செந்தழல் சேது அவர்களின் தளம் அரும்பிதழ், கவிதைகள், கதைகள், சமூகம் பற்றிய பதிவுகள் இவர் தளத்தில் காணலாம்.
"என் பார்வையில் 
எத்தனை 
ஏக்கங்களென்று 
கணித மேதையாலும் 
கணித்து 
விட முடியாது " வாழும் வறுமை கவிதையிலிருந்து.
மகத்தான பால்யம் கவிதை.

மீண்டும் நாளை சந்திக்கும் வரை விடை பெறுவது,
--------------கிரேஸ் பிரதிபா 
43 comments:

 1. இன்று நிறைய கவிதை பெண்கள் நட்பாகும் வாய்ப்பு கிடைத்திருகிறது.. தொடருங்கள் கிரேஸ். வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்
  தமிழ் மணம் 1

  ReplyDelete
 3. எளிய நடையில் நிறைவான விஷயத்தை விளங்க வைத்திருக்கின்றீர்கள்..

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 4. நல்ல பணிம்மா...வாழ்த்துகள்

  ReplyDelete
 5. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete
 6. நல்லா சொன்னீங்க..!

  ReplyDelete
 7. // பயம், சந்தேகம் இவற்றைக் கடந்து.... // நாம் நல்லவர் என்றால் அனைவரும் நல்லவர்களே...! // உண்மை...

  முதல் போனியிலே மூன்று தளங்கள் (அமிர்தா, செந்தமிழ், செ செந்தழல் சேது) புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் அண்ணா.
   உங்களுக்கே அறிமுகப்படுத்துவது என்றால் அது பெரிய விசயம் அண்ணா.. :)
   நன்றி.

   Delete
 8. அருமையா தொகுத்து இருக்கீங்க கிரேஸ் :)

  ReplyDelete
 9. என் கவிதைகளை
  நோக்கிய
  கண்களுக்கு
  நன்றியினை
  தவிர
  சொல்லும்
  வார்த்தையேதும்
  எழவில்லை
  மிக்க நன்றி!
  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 10. எளிய சொற்கள், அரிய கருத்துக்கள், புதிய அறிமுகங்கள். நன்றி.

  ReplyDelete
 11. சர்வதேசப் பெண்கள் தின நினைவாக நிறையப் பெண் படைப்பாளிகளை அறிமுகப் படுத்திய விதம் அருமை. வால்ட்விட்மன்-கணியன் பூங்குன்றன் ஒப்பீடும் வியப்பளித்தது. உஙகள் வாசிப்புத்தளத்தின் ஆழ-அகலம் கண்டும் வியந்து மகிழ்ந்தேன். அந்தத் தளங்கள் சிலவற்றிற்கும் சென்று பார்த்தேன்மா. உண்மையிலேயே பார்க்க வேண்டிய -இதுவரை பார்க்காமல் விடுபட்டிருந்த- நல்ல தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிம்மா. தொடரட்டும் பணிகள்.

  ReplyDelete
  Replies
  1. ஆழமான அன்பான கருத்திற்கு மிக்க நன்றி அண்ணா..

   Delete
 12. புதியவர்களை அறிமுகம் செய்வதே ஆசிரியப்பணியின் நோக்கம் அப்படி புதியவர்களை அறிமுகம் செய்ததில் அறிமுகப் பதிவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், அப்படி நினைத்துத்தான் முயற்சி செய்கிறேன். நன்றி தோழி.

   Delete
 13. உங்களுக்கும் இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!

  ReplyDelete
 14. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி.

  ReplyDelete
 15. வலைச்சரத்தில் என் தளத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ.தொடர்ந்து எழுதுவேன்.

  ReplyDelete
  Replies
  1. மகிழ்ச்சி அனிதா, கண்டிப்பாக எழுதுங்கள்.

   Delete
 16. வலைசரத்தில் என் தளத்தை அறிமுகப்படுத்தலாமே..!!
  என் தளம் :- http://techtamilblog.blogspot.com/

  ReplyDelete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. ஊக்கம் தரும் சொற்களுக்கும், பதிவிற்கும் நன்றி தோழி.கிரேஸ்.

  ReplyDelete
 19. விட்மன் கவிதையும், நட்பைப்பற்றி நீங்கள் சொன்னதும் அருமை.
  பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. நல்ல அறிமுகங்கள். இவற்றில் பலவற்றை இப்போதுதான் படிக்கிறேன். நன்றி

  ReplyDelete
 21. அனைத்தும் நல்ல அறிமுகண்கள். புதியவையே மிக்க நன்றி சகோதரி! தாமதமாக வருகிறோம்...

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோதரரே.
   உங்கள் வருகையே மகிழ்ச்சி, தாமதமானால் என்ன? :)

   Delete
 22. நான் அறியாத புதிய தளங்கள் நிறைய! நேரம் கிடைக்கையில் சென்று பார்க்கிறேன்! நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது