07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, February 9, 2015

ரஞ்சனி நாராயணன் பொறுப்பில் இந்த வார வலைச்சரம்!!!

வணக்கம் வலைச்சர நண்பர்களே...
வலைச்சரத்தில் நேற்றுடன் முடிந்த வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்த உமையாள் காயத்ரி அவர்கள் தமது ஆசிரியர் பொறுப்பை மிகுந்த ஆர்வமுடனும், அதிக திறமையுடனும் செய்து முடித்துள்ளார். அவர் எழுதிய பதிவுகள் 371 மறுமொழிகளும், 1560 பக்கப்பார்வைகளும் பெற்றுள்ளது. 

தனது வலைச்சர வாரத்தை சுவைபட முடித்த உமையாள் காயத்ரி அவர்களை வாழ்த்தி வழியனுப்புவதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

இன்று முதல் துவங்கும் வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பேற்க ரஞ்சனி நாராயணன் அம்மாள் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார். "திருவரங்கத்திலிருந்து" எனும் பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் இவர் தற்சமயம் பெங்களூரில் வசித்து வருகிறார்.

2000 வது ஆண்டிலிருந்து பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்த இவர் 2011-லிருந்து வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இவருக்கு புத்தகங்கள் படிப்பது பிடித்த பொழுதுபோக்கு. பிடித்த எழுத்தாளர் திரு கி.ராஜநாராயணன். இணைய இதழ்கள் பலவற்றிலும் எழுதி வரும் இவர் இரண்டாவது முறையாக வலைச்சரம் ஆசிரியர் பதவியை ஏற்கிறார்.  

ரஞ்சனி நாராயணன் அவர்களை வருக.. வருக... என வாழ்த்தி வரவேற்பதில் வலைச்சரக் குழு பெருமகிழ்ச்சியடைகிறது.

நல்வாழ்த்துக்கள் உமையாள் காயத்ரி..
நல்வாழ்த்துக்கள் ரஞ்சனி நாராயணன்...

நட்புடன்,
தமிழ்வாசி பிரகாஷ்....

12 comments:


 1. வலைச்சரம் தொடுக்க வருகை தரும் "திருவரங்கத்திலிருந்து" வலைப்பூ சூடி தரும் ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு குழலின்னிசையின் வரவேற்பும் வாழ்த்துகளும்
  தங்களது பணி சிறக்கட்டும். நன்றி!
  விடை பெறும் சகோதரி. R.உமையாள் காயத்ரி அவர்கள் நற்பணியாற்றியமைக்கு பாராட்டுக்கள்.

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
 2. சகோதரி உமையாள் காயத்ரி அவர்களுக்கு நன்றி. இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியர்பணி பொறுப்பேற்க வந்திருக்கும் சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
  த.ம.1

  ReplyDelete
 3. அன்புடன் வரவேற்கிறேன்... வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
 4. உமையாள் காயத்ரியின் இடுகைகளும் அறிமுகங்களும் அருமை! இனிய பாராட்டுகள்.

  நம்ம ரஞ்ஜனியும் வெளுத்துக்கட்டாப்போறாங்கன்னு மனக்குரல் சொல்லிது:-)

  நல்வரவு ரஞ்ஜனி.

  ReplyDelete
 5. மிகச்சிறப்பாக ஆசிரியப்பொறுப்பை மேற்கொண்ட உமையாள் காயத்ரி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்
  இவ்வாரம் பொறுப்பேற்கும் ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு நல்வரவு.

  ReplyDelete
 6. சிறப்பாக பணியினை நிறைவு செய்த அன்பின் உமையாள் காயத்ரி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்..

  இந்த வாரம் வலைச்சர பணியேற்கும் மதிப்புக்குரிய ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு நல்வரவு!..

  ReplyDelete
 7. வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்று சிறப்பாக பணிசெய்து நேற்றுடன் விடைபெறும் திருமதி. உமையாள் காயத்ரி அவர்களுக்கு நம் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

  இன்று முதல் வலைச்சர ஆசிரியராக, மீண்டும் அரியாசனத்தில் அமர்ந்து, புதிய பொறுப்பேற்க உள்ள திருமதி ரஞ்ஜனி நாராயணன் அவர்களுக்கும் நம் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

  வருக! வருக!! வருக!!! என வரவேற்று மகிழ்கிறோம்.

  அன்புடன் VGK

  ReplyDelete
 8. சிறப்பாக பணியாற்றிய காயத்ரிக்குப் பாராட்டுக்கள்!

  ReplyDelete
 9. பாராட்டுகள் உமையாள் காயத்ரி ஜி....

  ரஞ்சனிம்மா வாழ்த்துகள்... கலக்குங்க!

  ReplyDelete
 10. அன்பின் ரஞ்ஜனி நாராயணன்

  இது வரை இரு முறைகள் வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று தூள் கிளப்பி இருக்கிறீர்கள் என அறிகிறேன் - மகிழ்கிறேன், தங்களுக்கு மூன்றாம் முறையாக வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை அளிக்க விரும்புகிறேன். ஓரிரு நாட்களீல் அழைப்பு அனுப்புகிறேன். பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது