07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 3, 2015

உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…!!!
                                    "அம்மா"  - நான் எடுத்த புகைப்படம்

எல்லோருக்குமான கடவுளின்
அவதாரம் அம்மா.!!!

அவளின் அன்பு காற்றுப் போல்
காண முடியாது...ஆனால்
உணரலாம்..!!!

பிரிவின் வலி
கண்ணீர் துளி...!!!

ஆயிரம் வார்த்தைகள்
பேசமுடியாத தவிப்பு
அவள்...
மெளனம் பேசினால்...
ஆனால்
அது புரியாது நமக்கு...

இறைவனும் அப்படித்தானே...!!!
நீயே
உணரென...!!!
மெளனமாய் நாம் பேச மட்டும்
காது கொடுக்கிறான்

வேண்டுதல் அளவு..
அவனா சொல்கிறான்...

எல்லாம் நாமே...?
வேடிக்கை...
வாடிக்கை...
அவன் ரசிப்பான்...
நாம் அம்மா...வாகும் போது...
அதன் உணர்வு புரியும்...

இறைவனும் உணரும் போதே
தெரிவான்...!!!
அம்மா எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு ஜீவன்.  எவ்வளவு வயதை நாம் கடந்து வந்த போதும் அம்மாவின் நினைவும், அவளின் வார்த்தைகளும் நமக்கு மன பலமாய் நம்முள் வீற்றிருக்கும். அவளை விட்டு நாம் எவ்வளவு தொலைவில் இருந்தாலும்....அவளின் குரலொலியில்....நாம் கரைந்தும், மகிழ்ந்தும் போய்விடுவோம். அம்மா எவ்வளவு பலம் என்பதை என் அம்மா போன பின் தான் என்னால்...முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது. தோழியான அம்மாவுடன் எதையும் பகிர்ந்து கொள்ள முடிந்தது. அம்மா அம்மாவாய், ஆசானாய், தோழியாய்,சில நேரங்களில் நமக்கு தோன்றும் எதிரியாக, அந்த அன்பை நாம் முழுமையாக புரிந்து கொள்ளாமல் விட்டு விடுகிறோம்.

இப்போது நம் குழந்தைகளுக்காக காத்திருக்கும் போது தான்...அம்மா நமக்காக காத்திருந்ததும், நமக்கு பிடித்த உணவை சமைத்திருந்ததும், இன்னும் வரவில்லையே.....என்னா ஆச்சு என தவித்திருந்ததும், நம்மை கண்டவுடன் அவளின் களிப்பும்....இப்போது கனவாகிப்போனது. பிள்ளைக்கு லீவு விட்டாச்சா...? வாவா என கூப்பிடும் போது தெரியாத அருமை கூப்பிட ஆள் இல்லாத அவளின் வீடு நம்மை பார்த்து அமைதியாய் புன்முறுவல் பூக்கிறபோது தெரிகிறது... வீட்டின் வாசல் படி அவளின் மடியாய் தெரிகிறது.


அவரவர்கள்  அவரவரின் அம்மாவை  நினைத்து அவ்வப்போது உணர்ந்ததை பதிவு செய்துஇருக்கிறார்கள். தாய்மை ஏதோ ஒரு வழியில் அவர்களை பதிவிட வைத்து இருக்கிறது.

ஒரு மகளின் மகளான அன்னை என்னும் கடிதத் தொகுப்பு 
கண்டு அசந்தேன்உளவியல்  ரீதியாக உறவுகளை கையாளும் விதம் மிகவும் பாராட்டுக்குறியதும் பயனுள்ளதும் கூட.சாகம்பரி தன் வலைத்தளம்
மகிழம்பூ வில் இம்மாதிரி கடிதங்கள் பல எளிய மொழி நடையில் 
அழகாய் பதிவிட்டு இருக்கிறார். உறவுகளின் புரிதல் எவ்வளவு முக்கியம்,அதை எவ்வாறு கையாள வேண்டும், அம்மா, மகள், மருமகள் இவர்களின் மெல்லிய உணர்வு நுணுக்கங்கள் என அக்கடிதம் பலவற்றை நமக்கு உணர்த்துகிறது. மேலும் பலவற்றை அவரின் தளத்தில் காணுங்கள்.

அம்மாவை பிடிக்குமா...?  அப்படின்னு நான்  கேட்கவில்லை...செளமியா கோபால் கேட்கிறார். தான் பிறந்ததில் இருந்து இப்போது திருமணமாகி ஜெர்மனியில் வசித்துக் கொண்டிருப்பது வரை தன் அம்மாவுடனான அனுபவங்களை அழகாக சொல்லியிருக்கிறார். ஆழமான நினைவலைகள்.

அன்று எனக்கு அம்மாவை பிடிக்கவில்லை ...
இன்று எனக்கு அம்மாவை பிடித்து இருக்கிறது.... என்கிறார் என்னவாக இருக்கும்....? அவர் நிறைய தமிழிலும் எழுதலாம்

அம்மா மடி தேடி ஓடுறப்போ.....  நம் நினைவுகள் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும் இல்லகாயத்ரி தேவி தன்னுடைய  உணர்வுகளை   என்னில் உணர்ந்தவைங்கிற தன்னுடைய வலைப்பூ வழியா வெளிப்படுத்தி இருக்காங்க...மனம் கனத்து விட்டது.  நானெனும் நான்  என நான் நானாக                 இருப்பேன் இருக்கணும்..என்கிறார். அவர்களின் வலைத்தளத்தில் நீங்க நிறைய வலம் வரலாம்...வாருங்களேன் வலம்...

ஆஸ்திரேலியா வாழ் தம்பி சொக்கன் தன்னுடைய வலைப்பூவைப் போலவே  உண்மையானவன்எங்கள் ஊருக்கு பக்கமான காரைக்குடிக்காரர்இவருக்கும்...மீசைக்கார  தம்பி எங்கள் ஊர் தேவகோட்டைக்காரரான கில்லர்ஜிக்கும் நடக்கும் கருத்து சம்பாஷனைகள் சுவாரஸ்யமாய் இருக்கும்விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிக்கிறார்தமிழ் பற்று பரம்பரையாக தொடர்கிறது...!!!   தாய்மை ச்  சிறுகதையில்  தாயாக இருக்கும் போதும்மாமியாராய் மாறும் போதும்மற்றும் மருமகளின் நிலை என பெண்ணின் நிலையை சுட்டிக் காட்டுகிறார்.ஆத்திச்சூடியை நாம் சின்ன வயசுல படித்து இருக்கிறோம்இப்போ அதை நினைவு படுத்தும் அழகான கலந்துரையாடலை காணலாமா..ஆத்திச்சூடி நமக்கு கற்றுத்தரும் வாழ்க்கைப் பாடம் சைவத் தொண்டும் தமிழ் தொண்டுமாற்றிய

 சைவ சித்தாந்தச் செல்வர் சொக்கலிங்க ஐயா  அறிந்து கொள்ள நமக்கு வாய்ப்பு கொடுத்த தம்பி சொக்கனுக்கு நன்றி.

தளிர் வலைப்பூவில்  சுரேஷ்  சகோதரர் அம்மா... பற்றிய கவிதையை மகளிர் தினத்தன்று  பதிவிட்டு இருக்கிறார். இவர் பன்முகம் உடையவர். எத்தனை முகம் அப்படின்னு கேட்காதீங்க....சொல்லவே முடியாது..அப்படின்னா பார்த்துக்குங்களேன். இவரின் சிறுகதைகள் மிகவும் அருமையாக இருக்கும். உங்க வீட்டில் பாப்பாக்கள்...இருந்தால் இவரின் பாபா மலர் - ரை  படிக்கச் சொல்லுங்க. சிறுவர் பகுதின்னு சிறுவர்களுக்காக எழுதுகிறார். யானை ஏதோ ஒரு விதத்துல நம்மை கவர்ந்து தன் பக்கம் பார் பாரென கவர்ந்து இழுத்து விடும் அல்லவா..?  யானைக்கு ஹைக்கூ  கவிதை எழுதி இருக்கிறார் பாருங்களேன்.


சகோதரி அருணா செல்வத்தை அறியாதவர்கள் இருக்க மாட்டீங்க. சிறுகதை, தொடர்கதை, கவிதைகள்,பயணக்கட்டுரை மற்றும் மரபுக்கவிதைகளை அருவியாய் கொட்டிக்கொண்டு இருப்பவர் இவர் என சொல்லிக்கொண்டே போகலம்.   அன்னையின் அன்பு     கவிதையை அந்தாதி வடிவில் பொழிந்து இருக்கிறார்... நனையுங்களேன்தேவைங்கிற கவிதையில் என்ன தேவைன்னு எழுதி இருக்கிறார்....? உண்மைதான்...இப்போ இப்படித்தானே....அட புரியலையா...படியுங்களேன் புரியும்.
குழந்தைக்கு தாலாட்டு பாட்டு வேண்டுமா.... இங்கே போய் பாருங்க.


ப்ளாகிலே என்னென்னவோ எழுதுறியே என்னை பத்தி எழுத மாட்டாயா?என
தன் மகன்  CS.மோகன் குமாரை பார்த்து அவரின் தாயார் கேட்க.... தன்னுடைய வலைப்பூ   வீடு திரும்பலில் அம்ம்மா...மை டார்லிங் ன்னு தன் அம்மாவை பற்றி எழுதி இருக்கிறார். பரீட்சையில நாம பாஸ் ஆனா நம்ம அம்மா சந்தோசப்படுவாங்க இல்லையா...?  ஆனா இவர் ACS பாஸ் பண்ணிணதுக்கு இவுங்க அம்மா குச்சியாயோட வரவேற்று கால்ல  அடித்து இருக்காங்கன்னு
சொல்கிறார். ஏன்னு நான் சொல்வதை விட நீங்களே பாருங்களேன்.

கமலா ஹரிஹரன்  தன்னுடைய அன்னைக்கு மடல்  எழுதி இருக்கிறார். அதுவும் அழகான கவிதை வடிவில் . இவரின் பதிவுகளில் இவரின் அமைதியான பொருமையான  குணம் நன்கு தெரியும்.அழுகை இவரின் அற்புதமான  சிறுகதை அழுகை + உணர்வுகளின் கனம் கண்களில்                               நீர் வடியச்செய்கிறது,அம்மா...அம்மாதான். கேட்கணும்னு நினைத்தாலும்....கடவுள்கிட்ட...கேட்டுடமுடியுமா...? அது நாம் வாங்கி வந்த வரம்  என்கிறார். என்னவாக இருக்கும்

 அம்மா என்றால் அன்பு , அன்பு என்றால் அம்மா. சொல்ல சொல்ல இனிக்கும், அம்மா என்னும் அழைப்பு. அவரவர்களின் அம்மா அவரவர்களுக்கு என்றுமே சிறப்பு தான் என்கிறார்  கோமதி அரசு. அவரின்  திருமதி பக்கங்களில். முன்பு எல்லாம் அன்னையர் தினம் என்று கொண்டாடி அம்மாவுக்கு வாழ்த்து சொன்னது இல்லை. என் அம்மாவுக்கு இப்போது வாழ்த்து சொல்கிறேன் என்கிறார்.யானையை பிடிக்காதவர்கள் இருக்கமாட்டோம்.யானை ! யானை !...பார்க்கலாமா...? பார்த்து விட்டு சிக்கு புக்கு ரயிலே ரயிலே !...என ரயில் ஏறிப்போகலாமா...?


வீணாகானம் வலைப்பூவில்  மீரா தனக்கு அண்மையில் ஏற்ப்பட்ட அனுபவத்தை தாய்மை என்ற பதிவின் வாயிலாய் பகிர்ந்து கொள்கிறார்.


 அன்புநெறி வலைப்பூவில் குருஅரவிந்தன்  உறவுகள் தொடர்கதை.என்னும் சிறுகதையில்  சூழ்நிலைகாரணமாய் பிரிதலின் வலி ,ஏக்கத்தை அழகாய் சொல்லிச் செல்கிறார்.

       இப்பொழுது ஒரு இனிமையான அம்மா பற்றிய பாட்டு கேட்கலாமா...?
 அம்மா என்றழைக்காத உயிரில்லையே.. வீடியோ லிங்க் இது. இதன் மூலமும் காணலாம் யூடியூபிற்கு சென்று.
 சில நேரங்களில் யூடியூப் திறக்காத பட்ஷத்தில் லிங்கை கிளுக்குங்கள்.

                      நிப் பெயிண்டிங்

அன்னைக்கு நன்றி.50 comments:

 1. உமையாள்,

  அன்னையைப் பற்றிய உங்களின் முன்னோட்டம் மனதைக் கலங்க வைத்துவிட்டது.

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சித்ரா.

   Delete
 2. "உள்ளம் சொல்லுமே அம்மா…. அம்மா…அம்மா…!!!"
  தாய்மை பாராட்டும் முத்தான சரம்!
  மணக்குதே இன்றைய வலைச்சரம்!

  இன்றைய சிறப்பு பதிவாளர்கள் அனைவருக்கும்
  குழலின்னிசையின் வாழ்த்துக்கள்!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. தாய்மை பாராட்டும் முத்தான சரம்!
   மணக்குதே இன்றைய வலைச்சரம்!//

   ஆஹா.அருமை...அருமை நன்றி சகோ

   Delete
 3. //சில நேரங்களில் நமக்கு தோன்றும் எதிரியாக, அந்த அன்பை நாம் முழுமையாக புரிந்து கொள்ளாமல் விட்டு விடுகிறோம்.//
  ஆமாம் தோழி :(
  இன்றைய அறிந்த ,அறியாத அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஏஞ்சலின்

   Delete
  2. அம்மா தனதாக்கிக்கொண்டான் அருமஐ காண்பிக்கும்
   போது. கவனிக்காமல்
   விட்டதாக போனது. இப்போது மனதை உறுத்துகிறது.நல்ல பதிவுக்கு. மிக நன்றி.

   Delete
 4. தாயின் அன்பைப் பகிர்ந்த விதம் ஒவ்வொருவரையும் தத்தம் உணர்வுகளை உணரும் வகையில் செய்துவிட்டது. இவ்வாறான அன்பு கிடைத்தவர்களும், தருபவர்களும் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். ஒன்றுக்கு ஒன்று நிகராகக் கூறும் உலகில் இதற்கு இணை எதுவும் இல்லை. இவ்வாறாக அன்பைப் பெறவும், வழங்கவும் பேறு பெற்ற குழந்தைகளும், தாய்மார்களும் கொடுத்துவைத்தவர்களே. அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஒன்றுக்கு ஒன்று நிகராகக் கூறும் உலகில் இதற்கு இணை எதுவும் இல்லை. இவ்வாறாக அன்பைப் பெறவும், வழங்கவும் பேறு பெற்ற குழந்தைகளும், தாய்மார்களும் கொடுத்துவைத்தவர்களே. //
   உளம் கனிந்த நன்றி ஐயா

   Delete
 5. தலைப்பும் தொகுப்பும் அறிமுகங்களும்
  தொடர்புடைய காணொளிகளும் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா

   Delete
 6. அம்மா அம்மாவாய், ஆசானாய், தோழியாய்,சில நேரங்களில் நமக்கு தோன்றும் எதிரியாக, அந்த அன்பை நாம் முழுமையாக புரிந்து கொள்ளாமல் விட்டு விடுகிறோம்.//
  நீங்கள் சொன்ன ஒவ்வொரு வரியும் அருமை.
  நன்றாக சொன்னீர்கள் உமையாள்.
  தாய்மையின் பெருமையை உணரும் காலம் அவள் தாயாகும் போதுதான்.. இப்போது தாய்மை அடைய இருக்கும் தங்கையின் மகளுக்கு உதவியாக வெளியூரில் இருக்கிறேன். உங்கள் தாய்மை பதிவை அவளிடம் சொல்வேன். இன்று ஆஸ்பத்திரியில் மதியம் பிரசவத்திற்கு நேரம் குறித்து இருக்கிறார் மருத்துவர். இந்த சமயத்தில் நாங்கள் எல்லோரும் அம்மாவை நினைத்துக் கொண்டு இருக்கிறோம். நீங்களும் என் அம்மாவின் நினைவுகளை பகிர்ந்தது மனதுக்கு மகிழ்ச்சியும், அவர்கள் ஆசியும், புதிய பலமும் கிடைத்தது போல் உள்ளது.
  உங்களுக்கு நன்றி நன்றி.
  வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள். நான் முடிந்த போது வந்து படிக்கிறேன் உமையாள்.
  இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  தகவல் சொன்ன உங்களுக்கும், யாதவன் நம்பி அவர்களுக்கும் நன்றி.
  கவிதை, நீங்கள் எடுத்த படம், பாடல் பகிர்வு அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. இப்போது தாய்மை அடைய இருக்கும் தங்கையின் மகளுக்கு உதவியாக வெளியூரில் இருக்கிறேன். உங்கள் தாய்மை பதிவை அவளிடம் சொல்வேன். இன்று ஆஸ்பத்திரியில் மதியம் பிரசவத்திற்கு நேரம் குறித்து இருக்கிறார் மருத்துவர். இந்த சமயத்தில் நாங்கள் எல்லோரும் அம்மாவை நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.//

   நல்லபடியாக உங்கள் தங்கையின் மகளுக்கு பிரசவம் ஆக பிரார்த்தித்துக் கொன்டு இருக்கிறேன் சகோ
   நீங்களும் என் அம்மாவின் நினைவுகளை பகிர்ந்தது மனதுக்கு மகிழ்ச்சியும், அவர்கள் ஆசியும், புதிய பலமும் கிடைத்தது போல் உள்ளது.//

   அம்மாவின் ஆசி அருகில் இருந்து பாதுகாத்துக் கொண்டிருக்கும் கவலை வேண்டாம்.

   மீண்டும் பாட்டியாகி சந்தோஷமாக வாருங்கள் சகோ.
   இவ்வாறான நிலையிலும் வந்து கருத்திட்டு சென்றமைக்கும் மனம் நெகிழ்கிறது.

   Delete
  2. உங்கள் வாக்கு படியும், அம்மாவின் ஆசியாலும் தங்கை மகள் ஆண்மகவு பிறந்து தாயும், சேயும் நலம். மீண்டும் பாட்டியாகி மனம் மகிழ்ந்தேன்.
   உங்கள் பிராத்தனைக்கு நன்றி.

   Delete
 7. அன்பில் நனைந்தேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சகோ

   Delete
 8. அம்மா!..

  அவளிடத்திருந்தே அனைத்தும் தொடக்கம்!..

  இன்றைய முத்தான தொகுப்பினைப் பற்றி ஏதும் சொல்லுதற்கில்லை..

  அன்னையைப் போற்றுதும்!.. அன்னையைப் போற்றுதும்!..

  ReplyDelete
  Replies

  1. அம்மா!..

   அவளிடத்திருந்தே அனைத்தும் தொடக்கம்!..

   இன்றைய முத்தான தொகுப்பினைப் பற்றி ஏதும் சொல்லுதற்கில்லை..//


   தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

   Delete
 9. அருமையான தொகுப்பு ....அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிஆனுராதா பிரேம்

   Delete
 10. அன்னையை போற்றும் அருமையான கவிதை வரிகள். அருமை சகோ.
  முதலில் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
  மூன்று நாட்களாக வலைப்பக்கம் வர இயலவில்லை. அதனால் தாங்கள் வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்றது தெரியாமல் போய்விட்டது.
  அம்மாவைப் போற்றும் பதிவில், என்னுடைய மூன்று பதிவுகளையும்,அதிலும் குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த "தாய்மை" சிறு கதையையும் அறிமுகப்படுத்தியமைக்கும், என் தளம் வந்து சொன்னதற்கும் மிக்க நன்றி சகோ.

  அறிமுகம் ஆன மற்ற நண்பராகளுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அன்னையை போற்றும் அருமையான கவிதை வரிகள். அருமை சகோ.
   முதலில் வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள். //

   மிக்க நன்றி

   அம்மாவைப் போற்றும் பதிவில், என்னுடைய மூன்று பதிவுகளையும்,அதிலும் குறிப்பாக எனக்கு மிகவும் பிடித்த "தாய்மை" சிறு கதையையும் அறிமுகப்படுத்தியமைக்கும்,//

   நன்றி

   Delete
 11. //வீட்டின் வாசல் படி அவளின் மடியாய் தெரிகிறது.//
  அழகான வரிகள் உமையாள் காயத்ரி!
  நிப் பெயின்டிங் மிகவும் அழகு!

  ReplyDelete
  Replies
  1. //வீட்டின் வாசல் படி அவளின் மடியாய் தெரிகிறது.//
   அழகான வரிகள் உமையாள் காயத்ரி!//

   ரசித்து பாராட்டியமைக்கு நன்றி அக்கா.

   நிப் பெயின்டிங் மிகவும் அழகு!//

   நன்றி.

   Delete
 12. அம்மம்மா ! ....... அம்மாடியோ !!......... :)

  தங்களின் இன்றைய தொகுப்பு மிக மிக அருமை ...... அழகோ அழகு.

  படங்களும் காணொளியும் சிறப்பாகவே தேடி இணைத்துள்ளீர்கள்.

  அனைவருக்கும் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

  தங்களுக்கும் என் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்

  ReplyDelete
  Replies
  1. அம்மம்மா ! ....... அம்மாடியோ !!......... :)

   தங்களின் இன்றைய தொகுப்பு மிக மிக அருமை ...... அழகோ அழகு.//

   அம்மா அதான் மிக அழகாக தெரிகிறது.

   படங்களும் காணொளியும் சிறப்பாகவே தேடி இணைத்துள்ளீர்கள். //

   பாராட்டுக்களுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா

   Delete
 13. அம்மா என்றால் சும்மாவா !

  என் அம்மா இப்போது உயிருடன் இருந்திருந்தால் அவங்களுக்கு 104-105 வயதாகியிருக்கும். கடைசிவரை தன் காரியங்களைத்தானே செய்துகொண்டு, எங்களுக்கும் உதவியாகவும் வழிகாட்டியாகவும் இருந்து, தன் 87வது வயதில் 1997ல் காலமாகி விட்டார்கள். :(

  இப்போதும் அவர்களின் நினைவுகளில் நான் சிக்கித்தவிக்கிறேன். அவர்களைப்பற்றி என் சில பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதை, இந்தத்தங்களின் பதிவினைப்படித்ததும் நினைவு படுத்திக்கொண்டேன்.

  http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

  http://gopu1949.blogspot.in/2013/04/6.html

  http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html

  ReplyDelete
  Replies

  1. இப்போதும் அவர்களின் நினைவுகளில் நான் சிக்கித்தவிக்கிறேன். அவர்களைப்பற்றி என் சில பதிவுகளில் குறிப்பிட்டுள்ளதை, இந்தத்தங்களின் பதிவினைப்படித்ததும் நினைவு படுத்திக்கொண்டேன்.

   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_09.html

   http://gopu1949.blogspot.in/2013/04/6.html

   http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_26.html//

   தங்கள் தளம் வந்து கண்டு படித்தேன் ஐயா.
   மிக ஆருமையாக எழுதி உள்ளீர்கள்.

   தங்களின் முந்தய பதிவுகளை படிக்க வேண்டும்

   ஐயா... வந்து படித்து கருத்திடுகிறேன்

   முந்தைய பதிவுகள் நிறைய பேர்களுக்கு தெரியாது. தாங்கள் இங்கு வந்து குறிப்பிட்டதற்கு
   மிக்க மகிழ்ச்சி. அனைவரும் படிக்க ஏதுவாக லிங்க் வழ்ங்கியமைக்கும் நன்றி ஐயா

   Delete
 14. அம்மாவிற்கு நிகர் வேறேதும் இல்லை. அருமையான அறிமுகங்கள் .
  இன்று அறிமுகமான அனைத்துப்பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. அம்மாவிற்கு நிகர் வேறேதும் இல்லை//

   உண்மையிலும் உண்மை சகோ
   தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க மகிழ்ச்சி

   Delete
 15. தமிழ் மண வாக்கிற்கும் நன்றி

  ReplyDelete
 16. ஆஹா, என் அம்மாவைப்பற்றிய மேலும் ஓர் சிறிய தொடரின் ஆரம்பத்திலேயே கொஞ்சூண்டு வருகிறது.

  அதைச்சுட்டிக்காட்ட மறந்துட்டேனே ! பலரும் விரும்பி வாசித்து ஏராளமான பின்னூட்டங்கள் கிடைத்த தொடர்ப்பதிவு ஆயிற்றே !

  http://gopu1949.blogspot.in/2012/03/1.html ஆரம்பத்தில் உள்ள ஆரம்ப முதல் பத்திகளை மட்டுமாவது படியுங்கோ. தொடர்ந்து படிக்க உற்சாகம் ஏற்படக்கூடும்.

  http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html இது அந்தத்தொடருக்கான ஒரு வித்யாசமான நன்றி அறிவிப்பு.

  ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ள மூன்றில் இரண்டுக்குப் பின்னூட்டம் இட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. மிக்க நன்றி, மேடம்.

  VGK

  ReplyDelete
 17. ஆஹா, என் அம்மாவைப்பற்றிய மேலும் ஓர் சிறிய தொடரின் ஆரம்பத்திலேயே கொஞ்சூண்டு வருகிறது

  அதைச்சுட்டிக்காட்ட மறந்துட்டேனே ! பலரும் விரும்பி வாசித்து ஏராளமான பின்னூட்டங்கள் கிடைத்த தொடர்ப்பதிவு ஆயிற்றே !//

  உங்கள் உற்சாகம் சந்தோஷமாக இருக்கிறது ஐயா

  http://gopu1949.blogspot.in/2012/03/1.html ஆரம்பத்தில் உள்ள ஆரம்ப முதல் பத்திகளை மட்டுமாவது படியுங்கோ. தொடர்ந்து படிக்க உற்சாகம் ஏற்படக்கூடும்//

  உங்கள் பதிவுகள் எப்போதுமே உற்சாகம் தரக்கூடிய ஒன்றல்லவா...


  http://gopu1949.blogspot.in/2012/03/blog-post_17.html இது அந்தத்தொடருக்கான ஒரு வித்யாசமான நன்றி அறிவிப்பு.//

  காண வருகிறேன் சார்

  ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ள மூன்றில் இரண்டுக்குப் பின்னூட்டம் இட்டுள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. //

  விரவில் மற்றவற்றையும் காண வருகிறேன் ஐயா நன்றி

  ReplyDelete
 18. தாயின் சிறப்பைப்பற்றிய உன்னதமான பதிவு தாயை யாருக்குத்தான் பிடிக்காது அப்படி பிடிக்கவில்லை என்பவன் 5 அறிவு மிருகமாகத்தான் இருக்க முடியும் நான் தாயை மிகவும் நேசிப்பவன் ஆதலால் இந்த பதிவை படிக்கும்போதே...நெகிழ்ந்து விட்டேன் தாயின் அருமையை தெரியாதவர்கள் இந்த பதிவைப்படிக்கும்போது நிச்சயம் ஒரு மாற்றுச்சிந்தனைக்கு வரவேண்டும், வரும் 80தே எமது திண்ணமான எண்ணம்.

  தாய்க்கோர் கவிதை அருமை

  இன்றைய பதிவர்கள் எனது இனிய எதிரி, திரு. சொக்கன் சுப்பிரமணியன் மற்றும் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்.

  குறிப்பு – மேலே இனிய நண்பர் என்றுதான் கணினியில் டைப்பினேன் ஏதோ கூகுள் பிரட்சினை போல இனிய எதிரி என்று காண்பிக்கிறது.

  அடிக்குறிப்பு – நான் இன்று மாலை 06.30 pm வரை கெடு கொடுப்போம் அதன் பிறகும் வரவில்லையெனில் அபுதாபி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஆஸ்திரேலியாவில் ஒருவரை 10 நாட்களாக காணவில்லை என இண்டர்நேஷனல் கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் என்று இருந்தேன் ‘’அந்த’’ ஆளு தப்பிச்சுட்டாரு…

  தமிழ் மணம் - 7
  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

  ReplyDelete
  Replies
  1. தாயின் சிறப்பைப்பற்றிய உன்னதமான பதிவு தாயை யாருக்குத்தான் பிடிக்காது அப்படி பிடிக்கவில்லை என்பவன் 5 அறிவு மிருகமாகத்தான் இருக்க முடியும் நான் தாயை மிகவும் நேசிப்பவன் ஆதலால் இந்த பதிவை படிக்கும்போதே...நெகிழ்ந்து விட்டேன் தாயின் அருமையை தெரியாதவர்கள் இந்த பதிவைப்படிக்கும்போது நிச்சயம் ஒரு மாற்றுச்சிந்தனைக்கு வரவேண்டும், வரும் 80தே எமது திண்ணமான எண்ணம்.

   தாய்க்கோர் கவிதை அருமை//

   பாராட்டிற்கு நன்றி.


   அடிக்குறிப்பு – நான் இன்று மாலை 06.30 pm வரை கெடு கொடுப்போம் அதன் பிறகும் வரவில்லையெனில் அபுதாபி போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் ஆஸ்திரேலியாவில் ஒருவரை 10 நாட்களாக காணவில்லை என இண்டர்நேஷனல் கம்ப்ளைண்ட் கொடுக்கலாம் என்று இருந்தேன் ‘’அந்த’’ ஆளு தப்பிச்சுட்டாரு//

   ஹஹஹஹா....!!!!
   Delete
 19. அம்மாவைப் பற்றிய அருமையானதொரு வலைச்சரம் தொடுத்திருக்கிறீர்கள், உமையாள் காயத்ரி. ஒவ்வொரு பதிவும் அம்மாவை நினைவூட்டியது. பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. அம்மா தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி

   Delete
 20. நான் வேற அம்மா பத்திய பதிவோன்னு நினைச்சேன். நம்ம பெத்து வளத்த அம்மாவைப் பத்தினதுன்னு படிச்ச பொறவுதான் நிம்மதி அடைஞ்சேன். த.ம.+

  ReplyDelete
  Replies
  1. நான் வேற அம்மா பத்திய பதிவோன்னு நினைச்சேன்//

   அந்த அளவுக்கு எனக்கு அரசியல்....தெரியாது...

   நம்ம பெத்து வளத்த அம்மாவைப் பத்தினதுன்னு படிச்ச பொறவுதான் நிம்மதி அடைஞ்சேன். த.ம.+

   நல்ல வேலை நான் தப்பிச்சேன்...

   நன்றி சகோ

   Delete
 21. தாய்மை சிறப்பு தொகுப்பு அனைத்தையும் ரசித்தேன் !
  த ம 9

  ReplyDelete
  Replies
  1. தொகுப்பு அனைத்தையும் ரசித்தமைக்கு நன்றி ஜி.

   Delete
 22. அம்மாவையும், இறைவனையும் தாய்மைக்கு உட்படுத்தி சொல்லிய கவிதை வரிகள் அருமை சகோதரி!

  அறிமுகங்கள் பலரையும் அறிவோம்! நண்பர்களே! கில்லர்ஜி, சொக்கன் நண்பர்கள் கலாய்ப்பது சுவாரஸ்யம் ஆம்! இருவரையும் சேர்த்து நாங்கள் கில்லரை கில்லுவோம்....ஹஹ் கலாய்ப்பது உண்டு....ரொம்ப நல்லவரு அதனால தங்கமான மனசுக்காரரு ....,...(இப்படி ஒரு பிட்ட போட்டாத்தான் அடுத்த முறை கலாய்க்கலாம் அவரை!!!!)

  அறியாத அறிமுகங்களையும் அறிந்து கொண்டோம்! அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோதரி! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. அம்மாவையும், இறைவனையும் தாய்மைக்கு உட்படுத்தி சொல்லிய கவிதை வரிகள் அருமை சகோதரி! //
   நன்றி

   அறிமுகங்கள் பலரையும் அறிவோம்! நண்பர்களே! கில்லர்ஜி, சொக்கன் நண்பர்கள் கலாய்ப்பது சுவாரஸ்யம் ஆம்! இருவரையும் சேர்த்து நாங்கள் கில்லரை கில்லுவோம்....ஹஹ் கலாய்ப்பது உண்டு....ரொம்ப நல்லவரு அதனால தங்கமான மனசுக்காரரு ....,...(இப்படி ஒரு பிட்ட போட்டாத்தான் அடுத்த முறை கலாய்க்கலாம் அவரை!!!!) //

   ஆமாம் உங்கள் மூவரின் இனியகலாய்ப்பும்...தொடரட்டும்.

   நன்றி சகோஸ்

   Delete
 23. ஃபோட்டோவும், நிப் பெயிண்டிங்க் அருமை! சொல்ல விட்டுப் போனது ! ம்ம்ம் பலரும் பன்முகக் கலைஞர்களாக இருப்பது வியக்க வைக்கின்றது! தாங்கள் உட்பட!

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...சொல்ல விட்டுப் போனதையும் மறுபடி சொல்லிச் சென்ற தங்களின் அன்பிற்கு நன்றி சகோஸ்

   Delete
 24. என்னுடைய சிறப்பான பதிவுகளை தேடி அறிமுகம் செய்து மீண்டும் அந்த நாளுக்கு அழைத்து சென்றமைக்கு நன்றி! வெளியூர் சென்றமையால் தாமத வருகை!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 25. அருமையான தொகுப்பு......

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது