07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 4, 2015

வலை - வழி - கைகுலுக்கல் - 1இந்தகால சின்ன வயது காரர்களைப் பார்க்கும் போது எனக்கு கொஞ்சம் பொறாமையா இருக்கும். இருக்காதா பின்னே...அவர்களுக்கு போன், செல்போன், பேஸ்புக், டிவிட்டர் இமெயில், வைபர், வாட்ஸப் என அவர்களின் பள்ளி, கல்லூரி மற்றும் நிறைய நண்பர்களுடன் அவர்களால் நட்பை நீட்டித்துக் கொள்ள முடிகிறது. நமக்கு இந்த வசதி வாய்ப்புகள் அப்போது இல்லை.

ஆண்களாவது சில நட்பு வட்டத்தை தொடர முடிகிறது. ஆனால் பெண்களுக்கு ம்கூம்... கடிதப்போக்கு வரத்துகள் சிலகாலம் மட்டுமே நீட்டிக்கிறது.  அப்புறம் வீடுமாறுதல், குழந்தைகளைக் கவனிப்பது எனவும், சில தோழிகள் கல்யாணமாகிப் போனவுடன் அவர்கள் சூழ்நிலை காரணமாய் காலதாமதம். அப்படி இப்படின்னு நிறை வழிகளில் நின்று விடுகிறது.

பின் அக்கம் பக்கத்து நட்புகள்  , குழந்தைகளின் வகுப்பு தோழர்களின் அம்மாக்களின்  நட்புகள் என ஆகிவிடுகிறது. ஆனாலும் பழைய நட்புகள் மனதின் ஓரத்தில் பனிமூடிய நினைவுகளாய் மங்கலாக தங்கிவிடுகிறது.

ஆனா...இப்போ எனக்கு நல்ல நட்புக்களை இந்த வலைப்பூ தந்திருக்கிறது. ஆகையால் நான் இப்போ எனக்கு ப்ளாகர் நண்பர்கள்   உலகம் பூராவும் இருக்கிறார்கள் என பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

நல்ல ஆரோக்கியமான நட்புகளும், பாராட்டுக்களும் மனதிற்கு தெம்பும், நம்முடைய பல திறமைகள் வெளிவரவும் நல்ல வடிகாலாகவும் இருக்கிறது.

நாம கற்றுக் கொள்ளவும் முடிகிறது. மற்றவர்களுக்கும் நாம் பயனுள்ளவர்களாய் இருப்பதில் மனத்திருப்தியும் கிடைக்கிறதுஇவரா எங்களுக்கு தெரியுமே....என எல்லோரும் கோரஸாக சொல்லக்கூடிய இவரை நான் எப்படி புதுசா சொல்லுறது....?
சித்தர் சித்தர் அப்படின்னு சொல்லுறாங்க...எல்லாம் (வலைப்பூவில்) அறிந்ததால் தானோ....? இவருக்கு இப்படி பெயர் சூட்டி இருக்கிறார்கள் என நினைக்கிறேன். சித்தர்னா சித்து வேலை எல்லாம் செய்யாம இருப்பாங்களா...சொல்லுங்க தெரியாமத்தான் கேட்கிறேன்....?  இவர் வலைத்தளத்தின் சித்து வேலைகளை நமக்கு கற்றுக் கொடுப்பார்...தனக்குன்னு சித்து எல்லாம் செய்யமாட்டார். தீதும் நன்றும் பிற தர வாரா...அப்படின்னு தெரிந்து நமக்கு  வழிகாட்டியாய் திகழ்பவர்...
நம்ம  சகோதரர்  திண்டுக்கல் தனபாலன் அவர்கள்.   வலையில் எனக்கு கிடைத்த முதல் சகோதர நண்பர். இவரின் ஊக்குவிப்பு எப்போதும் உண்டு. உதவி என்று கேட்டால் உளமாற செய்யக்கூடியவர். அவரின் சிரிப்பை பார்த்தாலே தெரியும்எது அறிவு (பகுதி 1 ) போய் பாருங்களேன்.  அப்பவெல்லாம் கோனார் உரை வாங்கிப் படிப்போம். ஆனா இப்போ குறளுக்கு விளக்கத்தை 
வ்வளவு எளிமையாச் சொல்லித்தருகிறார். உங்களுக்கு களைப்பே வராது 
சினிமா  பாட்டுப் பாடி நம்மளை படிக்க வைக்கும் ஜாலியான ஆசிரியர் இவர்.
இவருக்கு கை வந்த கலை எது? பாருங்கள் இங்கே.கைகளைப்பற்றி ஒருபதிவு. எது நாகரீகம்..அப்படிங்கிற இவரின் பதிவு பார்க்க வேண்டிய ஒன்று.


மீசைக்காரர் என்றால்...கண்டு பிடித்து விட்டீர்களா...? அதுவும் வித்தியாசமாகம் விறுவிறுப்பாகவும் அதிரடியாகவும் பதிவிடுபவர் இவர். சொந்த ஊரையும் வாழ்கிற நாட்டையும் மறக்காதவர்.தேவகோட்டை மண்ணின் மைந்தர். பார்க்க பயமான பெரிய மீசையுடனான  தோற்றம் கொண்டாலும் பழக இனிமையான இவர் தான் கில்லர்ஜி.தளதின் பெயரும் கில்லர்ஜி தான். காந்தியே இவர் கனவில் போய் என்னமா பேசி  இருக்கிறார்...தெரியுமா...? கனவில் வந்த காந்தி  இவரும் சும்மா இல்லங்க வந்த காந்தியையே எல்லோர்கிட்டயும் அனுப்பி வைத்திருக்கிறார்ன்னா ... பார்த்துக்குங்களேன்.
பல மொழி ஆற்றலுடைய இவரின் ஹிந்தமிழ்  ஹிந்தி...ஆதங்கம் என்ன...? பொது மொழியின் அவசியத்தை உரைக்கிறார் நியாயம் தானே.. அன்றைய மனிதர்கள் ஒரு அப்பட்டமான உண்மை. இவரும் தில்லை சகோதரரும் பொதுவாக கருத்துக்களை கலகலப்பாக பகிர்ந்து கொள்வார்கள். சுவாரஸ்யம் தான்.


ரொம்ப பிரியமான பாசக்காரங்க இவுங்க. எனக்கு கிடைத்த முதல் பெண் வலைப்பூ வாசின்னா இவுங்க தான். பெயரிலேயே பிரியமான இவர்தான் பிரியசகின்னு நீங்க ஊகித்து இருப்பீங்க. பிரியசகி ங்கிற இவரின் தளம் தான் பிங்சிட்டியோ அப்பாடின்னு நீங்க நினைத்தால் ஆச்சரியப்படுறதுக்கில்லை. அழகான முகப்பு உடையதுஇந்தவருட கோடை விடுமுறைக்கு  இவுங்க சுற்றிப்பார்க்க போன தேசம் எது தெரியுமா..? எங்க ஊரு தாங்க அது. ...இவர்களின் பயண அனுபவத்தை    பிரமிடு தேசத்தில்  ...அப்படின்னு பதிவிட்டு இருக்கிறார்கள்.                                   என்னுடைய சமையலை முதலில் செய்து பார்த்து புகைப்படம் எடுத்து அனுப்பினார். அதை நான் முகநூலில் வெளியிட்டேன். அவ்வப்போது செய்து பார்த்து தன்னுடைய வலைத்தளத்தில் வெளியிட்டு  எனக்கு உற்சாகம் கொடுப்பவர்அசத்தலாமே சமையலில் - 2 என்னுடைய சமையலையும், மேனகா சத்யாவின் குறிப்புக்களையும் செய்து பார்த்து பதிவிட்டு எங்கள் இருவரையும் மகிழ்வித்து விட்டார்.  ஜெர்மனியில் உள்ள ஹம் நகரத்தில் காமாட்சி அம்மனுக்கு வருடாந்திர மகோற்சவத்தையும், தேர் திருவிழாவையும் கண்டால் நம்மூர் தான் என நினைக்கத்தோன்றும். திருவிழா பார்த்து வாருங்கள்..தீபாவளி கவிதைப் போட்டியில் பரிசு வாங்கின இந்த நிலாவை எல்லோரும் அறிவீங்க. ஆமா...நிலாவை பார்க்காதவுங்க இருப்பாங்களா....ஆனா ஒன்னுங்க இந்த நிலா பாலொளி மட்டும் வீசாது...தமிழ் பாவை ஓளியாக ஒலியாக சிந்திக்கிட்டே இருக்கும். அம்மா ஒரு பா எழுதுறீங்களா...? அப்படின்னு நீங்க கேட்டீங்கன்னு வச்சுக்குங்க இது போதுமா...இன்னும் கொஞ்சம் வேணுமா...? அப்படின்னு கேட்பாங்க...நீங்க அதை படிக்கத்தான் நேரம் போதாது.  இளைய நிலா வலைத்தளத்தின் உரிமையாளர் இளமதி  தாய்மையின் பூரிப்பில் பொங்கிய இந்த அறுசீர் விருத்த வண்ணமிகு வதனடி யை  பாருங்களேன்..  வண்ணப்பறவை நானாகி அருமையான கவிதை. வலிகள் மறந்து அவர்கள் நினைவுகள் வசந்தமாய் பறக்க பிரார்த்திக்கிறேன்.வலைகாப்பு க்கு வித்தியாசமாய் இவர் வழங்கிய பரிசு என்ன தெரியுமா...? நான் சொல்ல மாட்டேன் நீங்களே போய் பாருங்க.

.

கல்வித்துறையை சார்ந்த விச்சு நமக்கு கற்றலின் பொருட்டு நிறைய பதிவிடுபவர். அலையல்ல சுனாமி அப்படிங்கிற இவர் தளம் கல்விச் சுனாமி அப்படின்னா பொருத்தமாக இருக்கும். இலவசமா 1000க்கும்ம்மேற்பட்டதமிழ் புத்தகங்கள் தரவிரக்க  புத்தகங்களின் லிங்க் எத்தனை கொடுத்து இருக்கிறார்..பாருங்களேன்.  என்னை மிகவும் கவர்ந்த கதை . கையளவு நீர்.
டிகிரியோ...டிகிரி...என்னங்க டிகிரி காப்பியா இது....? அப்படின்னு நீங்க நினைக்கிறீங்களா...? அட என்னன்னு பாருங்க நாம் தெரிந்து கொள்ளனும் இல்ல.


பண்டிகைக்கு பண்டிகை இவரும் இவர் நண்பரும்சேர்ந்து போட்டி வைத்து நம்மை எழுதத்தூண்டுபவர்கள். இவர்கள்  இரட்டை சகோதரர்கள் மாதிரி.
ஒருவர் உருகி உருகி காதல் கவிதைகள் படைப்பதில் வல்லவர். ஆஹா...இப்போது தெரிந்து விட்டதா...? யாருன்னு ஆமாம் சரிதான் நீங்கள் ஊகித்தது. தம்பி ரூபன் தான்.ரூபனின் எழுத்துப்படைப்புகள் என்னும் தன் வலைத்தளத்தில்அத்தை வீட்டு சின்னக்கிளி ....க்கு இவர் உருகி வடித்த கவிதை இதோ.அதுமட்டுமில்லங்க சமூக கவிதைகள் வாயிலாக  நம் கண்ணில் நீர் வடிய வைத்து விடுவார். அப்படி உருக்கமா இருக்கும் அப்படின்னு சொல்லவந்தேன்.  குடிகார அப்பாக்கள். தன் தந்தையின் மேல் இவர் வைத்திருக்கும் அன்புள்ள அப்பா  இக்கவிதை வாயிலாக காணலாம்


இரட்டையரில் அடுத்தவர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கன் இவர் யாழ்பாவாணத்தில் வசிக்கிறார்இவர் கவிதைகள் வடிப்பதில் சிறந்தவர். இளம் வயதுக்காரர்கள் மேல் அக்கரையாகவும் ,அதே சமயம் வருத்தமாகவும் பதிவுடுவார் தன்னுடைய தளமான் யாழ்பாவாணனின் எழுத்துகள்லில் காதலைவிட நட்பே பெரிது.. ங்கிற கவிதையைப்பாருங்களேன்ஆண்டவன் கணக்கில் என்ன இருக்கு
 பார்க்கலாமா...?  பிள்ளையார் பற்றி கதைகள் பல உண்டு. ஆனா...குட்டியா புதிய தெரு பார்த்த பிள்ளையார்புதிய தெரு பார்த்த பிள்ளையார்.
கதையை நமக்கு சொல்கிறார்...?


கோவில் உலா வரனுமா...? மார்கழி மாதம் ஒன்று போதும் எல்லாம் கோவிலுக்கும் ஒரு ரவுண்டு போயிடலாம். கையோட புண்ணியத்தையும் சேர்த்துக்கலாம். அதில் கொஞ்சம் ஐயாவுக்கு போயிடும் அப்படின்னு நினைக்கிறேன். ஆமா இல்லையா....? பின்னே.  குவைத்தில் இருந்தே நமக்கு வழிகாட்டுறார் இல்லையா...?  தஞ்சையம்பதி அப்படிங்கிற துரைசெல்வராஜூ ஐயாவின் தளம் போய் பார்த்தீங்கண்ணா..ஆமான்னு சொல்லிவீங்கமார்கழி 30 மார்கழி - 30 பாருங்களேன். ஆதிமனிதனோடு நாய்களுக்கு அடுத்ததாக இணங்கியவை ஆதிமனிதனோடு நாய்களுக்கு அடுத்ததாக இணங்கியவை ஆநிரைகள்  என மாட்டுப்பொங்கல் அன்று பதிவிட்டு இருக்கிறார்...நாம் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவிது.நேற்று தைபூசம் இல்லையா...கோவிலுக்கு போக முடியலைனு என்னை மாதிரி வருத்தப்படுகிறவர்கள் இங்கே போங்க. தைப்பூசத் திருநாள் 


ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் என்னும் தொடரை தேவியர் இல்லம் வலைத்தளத்தில் ஜோதிஜி திருப்பூர் அவர்கள் எழுதி முடித்து நூலாகாவும் வந்து விட்டது. திருப்பூர் தொழிற்சாலைகளில் நடை பெறுவதை அப்படியே நம்முன்காட்டி இருக்கிறார். தலைமைப்பண்பு எவ்வளவு முக்கியமான ஒன்று. அதிகாரம் எல்லா இடங்களிலும் இப்போது செல்லுபடியாகாது. ஆனால் இதமான வார்த்தைகள் எவ்வளவு கடினமான வேலையையும் கரையேற்றி விடும் என்பதை மிக தெளிவாய் குறிப்பிட்டு இருக்கிறார். படித்து பாருங்களேன்  இங்கே அவரின் புத்தகத்தை நாம் தரவிரக்கம் செய்து படிக்க வசதியாக ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் கொடுத்து இருக்கிறார். உண்மையான வீச்சுடன் நூல் முழுவதும் இவரின் எழுத்து பிரவகிக்கிறது. நாமும் இவருடன் இருந்து நேரில் காண்பது போல் நூல் நம்மை கூட்டிச் செல்கிறது. 5 மின்னூல்கள் வெளியிட்டு இருக்கிறார். எனக்கு தெரிந்ததை விட உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரிந்து இருக்கும். 
 சத்துணவகம் சத்துணவகம் என்ற பதில் இவர் சத்தான பானம் பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்து எப்படி செய்யனும் என நமக்கு விளக்கி இருக்கிறார் பாருங்களேன்  ஆரோக்கிய பானம்.


 வை கோபால கிருஷ்ணன் சார் இவரை அறியாதோர் யாருமில்லை அப்படின்னு சொன்னா அது மிகையாகது. ஆமாம், ஆமாம் என எல்லோரும் சொல்லுறீங்கன்னு எனக்கு நல்லா கேட்குது. இவர் சிறுகதை விமர்சன போட்டி நடத்திய விதம், கெடு நாளை நினைவுபடுத்துதல், நடுவரை மறைத்து வைத்திருந்து அதற்கு ஒரு போட்டி வைத்தது, பரிசுகள், புள்ளி விபரங்கள் என…………..சொல்லிக்கிட்டே போகலாம் இவரை பாராட்டுவதற்கான காரணங்களை. 
இதை சொல்ல மறந்துட்டீயேம்மா..ப்ளீஸ் அதுக்குத்தான் வருகிறேன். என் வீட்டு தோட்டத்தில் பூத்த மலர்களும் அவற்றை வலைச்சரத்தில் அருமையாகத் தொடுத்த அன்புக் கரங்களுமென வலைச்சர அறிமுகப்பதிவுகளை அழகாய் சமர்பித்து இருக்கிறார். ங்கள் ப்ளாக்... ஒட்டு மொத்தமாக எங்கள் வீட்டில்.... ப்ளாக்  நண்பர்களின் சந்திப்பை பதிவு  செய்து இருக்கிறார்.  சுவையாய், சுவாரஸ்யமாய் இருக்கிறது பாருங்களேன்.
நேர மேலாண்மை  பெரியவாளைப்பற்றிய பதிவு கட்டாயம் படியுங்கள் அன்பர்களேநன்றே செய் ! அதுவும் இன்றே செய் !! அருமையிலும் அருமையான சிறுகதை காணத்தவராதீர்கள்.

                                                 கத்தி ஓவியம்


55 comments:

 1. எனது வலைத்தளத்தினையும் இன்றைய தங்களின் வலைச்சரத்தினில் தொடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete
  Replies
  1. எனது வலைத்தளத்தினையும் இன்றைய தங்களின் வலைச்சரத்தினில் தொடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது//

   எனக்கும் மகிழ்வாக இருக்கிறது ஐயா. நன்றி

   Delete
 2. //இப்போ எனக்கு நல்ல நட்புக்களை இந்த வலைப்பூ தந்திருக்கிறது. ஆகையால் நான் இப்போ எனக்கு ப்ளாகர் நண்பர்கள் உலகம் பூராவும் இருக்கிறார்கள் என பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.//

  தாராளமாகச் சொல்லிக்கொள்ளலாம். மிக்க மகிழ்ச்சி.

  //நல்ல ஆரோக்கியமான நட்புகளும், பாராட்டுக்களும் மனதிற்கு தெம்பும், நம்முடைய பல திறமைகள் வெளிவரவும் நல்ல வடிகாலாகவும் இருக்கிறது.//

  மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  //நாம் கற்றுக் கொள்ளவும் முடிகிறது. மற்றவர்களுக்கும் நாம் பயனுள்ளவர்களாய் இருப்பதில் மனத்திருப்தியும் கிடைக்கிறது.//

  ஆமாம். இதில் ஏதோவொரு ஆத்ம திருப்தி கிடைக்கத்தான் செய்கிறது.

  ooooo

  ReplyDelete
  Replies
  1. ஆமாம். இதில் ஏதோவொரு ஆத்ம திருப்தி கிடைக்கத்தான் செய்கிறது.//

   முற்றிலும் உணமை தான்

   Delete

 3. நெஞ்சை அள்ளும் வலைப்பதிகாரமாக, ஆழ் கடலில் கண்டெடுத்த முத்தான பதிவுகளை,
  மீண்டும் ஒரு முறை படித்து இன்புறும் வகையில் அல்லவா அமந்துள்ளது நமது நண்பர்களின் நற்படைப்புக்கள்!

  தேர்வு பதிவுகள் யாவும் தேன்சாராலாய் நெஞ்சைத் தொட்டது! அருமை!
  இன்றைய தேர்வாளர்கள் அனைவரும் போற்றத் தகுந்த பெருமைக்குரியவர்கள்!
  குழலின்னிசைக்கு பெருமை சேர்த்தவர்கள். வாழ்த்துக்கள்!

  நன்றியுடன்,
  புதுவை வேலு
  WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

  ReplyDelete
  Replies
  1. நெஞ்சை அள்ளும் வலைப்பதிகாரமாக, ஆழ் கடலில் கண்டெடுத்த முத்தான பதிவுகளை,
   மீண்டும் ஒரு முறை படித்து இன்புறும் வகையில் அல்லவா அமந்துள்ளது நமது நண்பர்களின் நற்படைப்புக்கள்!//

   ஆம்.


   தேர்வு பதிவுகள் யாவும் தேன்சாராலாய் நெஞ்சைத் தொட்டது! //

   மிக்க நன்றி சகோ

   Delete
 4. அருமையான பதிவர்களை
  மிக மிக அருமையாக அறிமுகம்
  செய்தமைக்கும்
  இந்த வார வலைச்சர
  ஆசிரியர் பணி சிறக்கவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. அன்பான வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஐயா

   Delete
 5. மகிழ்ச்சியுடன் மிக்க மிக்க நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. எனக்கும் மிக்க மகிழ்ச்சி சகோ...

   நன்றி

   Delete
 6. ஆ...!! எனக்கு பிடித்த நிறைய பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். அவர்களோடு என்னையும் அறிமுகப்படுத்தியதில் மிக்க சந்தோஷம். வலை வழி கைகுலுக்கல்.. கொஞ்சம் கையை நீட்டுங்களேன். ஹாஹா...நட்புடன் தொடர்வோம்.

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா....

   நட்புடன் தொடர்வோம் சகோ நன்றி

   Delete
 7. வலை வழியான கைகுலுக்கலுக்கு நன்றி. அதிகமான பதிவர்களையும், குறிப்பாக அறிமுகமான பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். அவர்களைப் பற்றிய தங்களின் எண்ணப்பகிர்வு நட்பின் ஆழத்தினை வெளிப்படுத்துகிறது. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. அவர்களைப் பற்றிய தங்களின் எண்ணப்பகிர்வு நட்பின் ஆழத்தினை வெளிப்படுத்துகிறது. //

   உண்மை தான் ஐயா. அவர்களைப் பற்றிய என்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்த வலைச்சரம் முக்கிய தளமாய் உதவி விட்டது ஐயா. அன்பு அழகான் ஒன்று அல்லவா..
   வலைச்சரத்திற்கும் தொடர்ந்தரென்னை ஊக்குவிக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றி ஐயா

   Delete
 8. வலை - வழி கை குலுக்கல்!..

  மிகவும் நயமான - இனிமையான - புதுமையான சொற்பிரயோகம்!..

  நிஜமாகவே - பொதிகைத் தென்றல் ஊடாடியது போல இருக்கின்றது.

  மிகச்சிறப்பான தளங்களுடன் - தஞ்சையம்பதியையும் அடையாளங்காட்டி அறிமுகம் செய்தமைக்கும் தளத்திற்கு வந்து அறிவித்தமைக்கும் நன்றி.. மகிழ்ச்சி..

  மேலும் - தகவல் அளித்த அன்பின் யாதவன் நம்பி அவர்களுக்கும் நன்றி..

  இன்றைய தொகுப்பில் அறிமுகமாகியுள்ள அன்புநிறை நண்பர்கள் அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. வலை - வழி கை குலுக்கல்!..

   மிகவும் நயமான - இனிமையான - புதுமையான சொற்பிரயோகம்!..//

   மிக்க நன்றி

   நிஜமாகவே - பொதிகைத் தென்றல் ஊடாடியது போல இருக்கின்றது. //

   அஹா...அப்படியா ஐயா...மிக்க மகிழ்ச்சி

   Delete
 9. வணக்கம்
  சகோதரி

  இன்றைய வலைச்சரத்தில் என்னுடைய வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.. அத்தோடு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன் மற்ற அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களின் பணி சாலச் சிறந்தது.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டிற்கு நன்றி ரூபன்

   Delete
 10. வணக்கம்
  தகவல் வழங்கிய தங்களுக்கும் மற்றும்.யாதவன் நம்பி அவர்களுக்கும் நன்றி

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. யாதவன் நம்பிக்கு...என்னுடைய மிக்க நன்றி

   Delete
 11. ஆனா...இப்போ எனக்கு நல்ல நட்புக்களை இந்த வலைப்பூ தந்திருக்கிறது. ஆகையால் நான் இப்போ எனக்கு ப்ளாகர் நண்பர்கள் உலகம் பூராவும் இருக்கிறார்கள் என பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

  நல்ல ஆரோக்கியமான நட்புகளும், பாராட்டுக்களும் மனதிற்கு தெம்பும், நம்முடைய பல திறமைகள் வெளிவரவும் நல்ல வடிகாலாகவும் இருக்கிறது.

  நாம கற்றுக் கொள்ளவும் முடிகிறது. மற்றவர்களுக்கும் நாம் பயனுள்ளவர்களாய் இருப்பதில் மனத்திருப்தியும் கிடைக்கிறது//

  உண்மை! உண்மை! உண்மை! எங்களுக்கும் அதே!

  ஆஹா! நாங்கள் விரும்பிப் படிக்கும் அனத்து நண்பர்களும் இங்கே! அறியாதவர்கள் ஓரிருவர் இருந்தாலும் அவர்களையும் அறிந்து கொள்கின்றோம்.

  கொடுவா மீசைக்காரரும் அவருக்கு அறிமுகம் தேவையா!!! ஹஹஹ்ஹ அவர்தான் உலகம் முழுசும் சுத்தோ சுத்துனு சுத்திக்கிட்டுருகாரே! அதான் வலைத்தள உலகை....நம்ம வலை சித்தர் அவரது சிஷ்யனான தம்பி ரூபன், இப்ப அந்தப் பட்டியலில் கொடுவா மீசைக்காரரு....எந்த தளத்துக்கும் போனாலும் (னாங்க போறதே லேட்டு...) அங்க முத ஆளா பெரும்பாலும் இவரு மீசைய முறுக்கிகிட்டு இருப்பாரு.....ஹஹஹஹ்

  அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  கத்தி பெயிண்டிங்க்! ...கத்தி படம் போல கத்தி போடாமல், கத்தியால் இப்படியும் பயன் உண்டு கத்தியையும் தூரிகை ஆக்கலாம் ஒரு கலைக் காவியத்தையே படைக்கலாம் என்று சொல்லுகின்றது தங்களின் பெயிண்டிங்க்! அருமை!!!! வாழ்த்துக்கள்! சகோதரி!

  ReplyDelete
  Replies
  1. ஹலோ என்னது எங்க ஏரியாவுல ஓவரா.....வந்து சவுண்டு ?

   Delete
  2. கொடுவா மீசைக்காரரும் அவருக்கு அறிமுகம் தேவையா!!! ஹஹஹ்ஹ அவர்தான் உலகம் முழுசும் சுத்தோ சுத்துனு சுத்திக்கிட்டுருகாரே! அதான் வலைத்தள உலகை....நம்ம வலை சித்தர் அவரது சிஷ்யனான தம்பி ரூபன், இப்ப அந்தப் பட்டியலில் கொடுவா மீசைக்காரரு....எந்த தளத்துக்கும் போனாலும் (னாங்க போறதே லேட்டு...) அங்க முத ஆளா பெரும்பாலும் இவரு மீசைய முறுக்கிகிட்டு இருப்பாரு.....ஹஹஹஹ்//

   ஹஹஹா...

   வருகைக்கும் கருத்திற்கும், கத்தி ஓவிய பாராட்டிற்கும் நன்றி சகோஸ்

   Delete
 12. உங்கள் (எழுத்து) நடை இயல்பாகவும் இனிமையாகவும் இருக்கிறது. பல அருமையான பதிவர்களைப் பற்றி ரசனையுடன் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. உங்கள் (எழுத்து) நடை இயல்பாகவும் இனிமையாகவும் இருக்கிறது. பல அருமையான பதிவர்களைப் பற்றி ரசனையுடன் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள்//

   அன்பான வருகைக்கும் கருத்திற்கும் நன்றி கவிநயா

   Delete
 13. இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. நல்ல நல்ல பதிவர்களையும் அவர்களது நல்ல படைப்புகளையும் அடையாளம் காட்டிச் சிறப்பித்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். எல்லோரும் தெரிந்தவர்கள் என்பது கூடுதல் சந்தோஷம்!

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் தெரிந்தவர்கள் என்பது கூடுதல் சந்தோஷம்

   நானுமா ? அம்மா

   Delete
  2. அம்மா...தங்களின் வருகைக்கும் பாராட்டிற்கும் அன்பான நன்றி

   Delete
 15. இன்றைய அறிமுகங்கள் அணைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. வணக்கம் சகோதரி வலைப்பூவில் எம்மையும் கோர்த்து மணம் பெற வைத்த தங்களுக்கு எமது மனம் நிறைந்த நன்றி //கனவில் வந்த காந்தி// பதிவுலகையே ஒரு கலக்கு கலக்கியது தாங்கள் அறிந்த விசயமே மேலும் //ஹிந்தமிழ்// பொதுநலம் விரும்பி நான் எழுதியது, //அன்றைய மனிதர்கள்// எமது உள்ளக்குமுறலை, ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தேன் மூன்று முத்துக்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி
  இன்றைய அறிமுகங்கள்
  திரு. திண்டுக்கல் தனபாலன், திருமதி. பிரியசகி, திருமதி. இளமதி, திரு. விச்சு, திரு. ரூபன், திரு. யாழ்பாவாணன், திரு. துரை செல்வராஜூ, திரு. ஜோதிஜி திருப்பூர், திரு. வை. கோபாலகிருஷ்ணன் அனைவரும் நான் தொடரும் எமது நண்பர்களே அவர்களுக்கும் எமது வாழ்த்துகள்
  ஓவியம் சிறப்பாக இருந்தது

  தங்களுக்கான பதிவு எமது தளத்தில் இன்று...
  العـــربــيةArabic -

  தகவல் தந்த தங்களுக்கும், ‘’ஈபிள் டவர்’’ உரிமையாளர் திரு. யாதவன் நம்பி அவர்களுக்கும் நன்றி.

  தமிழ் மணம் – 8 (வழக்கம்போலே எட்டு)
  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

  ReplyDelete
  Replies
  1. தங்களுக்கான பதிவு எமது தளத்தில் இன்று...
   العـــربــيةArabic - //

   தங்கள் தளம் வந்து கண்டு வந்தேன் சகோ.
   சொல்லிய படி இரண்டு நாட்களில் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி.

   யாதவன் நம்பிக்கு மிக்க நன்றி

   தமிழ் மண வாக்கிற்கும் நன்றி

   Delete
 17. சகோதரி //அன்றைய மனிதர்கள்// கிளிக்கினால் அதுவும் ஹிந்தமிழுக்கே போகிறது... கவனிக்கவும். நன்றி.

  ReplyDelete
  Replies
  1. இதோ..கவனிக்கிறேன்..

   Delete
  2. சரி செய்து விட்டேன் சகோ

   Delete
  3. சரி செய்தமைக்கு...

   شــــكرا

   ஸுக்ரான் - நன்றி

   Delete
 18. இன்றைய கைகுலுக்கலில் அறிமுகமாகும் அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி அக்கா.

   Delete
 19. ஆஹா! தோழியா!!! ரொம்ப சந்தோசம். நல்ல பணி. வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மைதிலி

   Delete
 20. மிகவும் அருமையான கருத்தினை தொடக்கவுரைதனில் சொல்லியிருக்கிறீர்கள்.
  மிகமிக சந்தோஷம் உமையாள். இத்தனை பதிவர்கள் மத்தியில் என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த நன்றிகள்.
  இன்று அறிமுகம் செய்தவைத்த அனைத்துப்பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் உமையாள்.

  ReplyDelete
  Replies
  1. மிகவும் அருமையான கருத்தினை தொடக்கவுரைதனில் சொல்லியிருக்கிறீர்கள்//
   மிக்க நன்றி சகோ

   Delete
 21. அருமையான பதிவர்கள், அவர்களை அறிமுகம் செய்த விதம் எல்லாம் அருமை. தங்கள் கத்தி ஓவியம் அழகு.
  இன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்க்ளுக்கும் வாழ்த்துக்கள்.
  நட்பு வாழ்க!

  ReplyDelete
  Replies
  1. முக்கியமான வேலைகளுக்கு நடுவில் வந்து கருத்திட்டமைக்கு நன்றி.

   Delete
 22. நல்ல அறிமுகங்கள் அக்கா...
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி குமார்

   Delete
 23. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
 24. நான் இந்தியப் பயணம் மேற்கொண்டதால் தளத்திற்கு வரமுடியவில்லை.
  எனது தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.
  தங்கள் பணி தொடர வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது