07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, February 11, 2015

சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான்...!


வலைச்சரம் மூன்றாம் நாள்

திடீரென்று ஒருநாள் இனிமேல் நான் சப்பாத்திதான் சாப்பிடப் போகிறேன்என்று அறிக்கை விட்டான் என் மகன். சப்பாத்தி செய்வதும் எனக்கு எளிதுதான். அதிலேயும் 35 வருட அனுபவம். அதிலும் சுக்கா என்று சொல்லப்படும் பூல்கா நன்றாக வரும். ஒவ்வொரு சப்பாத்தியும் பூரி மாதிரி தணலில் போட்டவுடன் உப்பும். ஆனால் என்ன கஷ்டம் என்றால் அதற்கு தொட்டுக் கொள்ள என்ன செய்வது? நாங்கள் சின்னவர்களாய் இருக்கும்போது எங்கள் அம்மா ரொட்டி பண்ணுவாள். (எண்ணெய் போட்டு செய்தால் ரொட்டியாம். எண்ணெய் போடாமல் செய்தால் சப்பாத்தியாம். என் ஓர்ப்படி இப்படி ஒரு விளக்கம் கொடுத்தாள்.) காலையில் செய்த குழம்பு, ரசவண்டி, இல்லை கறியமுது, கீரை கூட்டு இப்படி எது இருந்தாலும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டுவிடுவோம். வேறு ஒன்றும் செய்யவும் மாட்டாள் அம்மா.

ஆனால் இப்போது சப்பாத்தி செய்தால் சன்னா, ராஜ்மா, பட்டாணி இவைகளை வெங்காயம், மசாலா போட்டு கீரை என்றால் பாலக் பனீர் என்று செய்ய வேண்டியிருக்கிறது. எங்களைப் போல எதை வேண்டுமானாலும் தொட்டுக் கொள்ள மாட்டார்கள் என்  குழந்தைகள். சப்பாத்திக்கு குழம்பா? ரசவண்டியா? தமாஷ் பண்ணாதம்மா!என்கிறார்கள். இந்த சமையல் சாப்பாடே தினசரி பெரிய பாடாகிவிடும் போலிருக்கு. ஒரு வழியாக காலை டிபன், மதியம் சாப்பாடு முடித்துவிட்டு வந்து ஏதாவது எழுதலாம் என்று உட்கார்ந்தால் சாயங்காலம் என்ன?’ என்ற கேள்வி வருகிறது. அப்போதுதான் இந்த சங்கடமான சமையலை விட்டுபாட்டு அசரீரியாக காதுக்குள் ஒலிக்கும். 

நான் சப்பாத்தி செய்ய ஆரம்பித்த புதிதில் கூட்டுக் குடித்தனம். தினசரி  சமையல் என்ன என்று மாமனார் மாமியார் கூட்டு சேர்ந்து ரொம்ப நேரம் யோசித்து(!!!) சொல்வார்கள். வெங்காயம் வீட்டினுள்ளேயே வரக்கூடாது. சப்பாத்திக்கு என்ன சைட் டிஷ்? சாயங்காலம் முக்கால்வாசி நாட்கள் பயத்தம்பருப்பு போட்டு செய்யும் கூட்டுதான் சாதத்திற்கு. சிலநாட்கள் தேங்காய் துவையல், அல்லது கொத்துமல்லி, கறிவேப்பிலை, பருப்புத் துவையல்  இருக்கும். துவையல் இல்லாத நாட்களில் ஊறுகாய்தான் கூட்டு சாதத்திற்குத் தொட்டுக்கொள்ள. என் கணவருக்கு மட்டும் நான்கு சப்பாத்திகள். மற்றவர்களுக்கு சாதம் என்று தீர்மானமாயிற்று. கரெக்ட்டாக நான்கு சப்பாத்திகள் செய்ய வராது எனக்கு. ஒன்றிரண்டு அதிகம் இருக்கும். என் மைத்துனர்கள் எனக்கு எனக்கு என்று போட்டுக்கொள்வார்கள். ஆசையாக சாப்பிடுகிறார்களே என்று கொஞ்சம் அதிகமாகவே மாவு கலந்து சப்பாத்தி செய்ய ஆரம்பித்தேன். நாளடைவில் மாமனார், மாமியார் தவிர மற்ற எல்லோரும் சப்பாத்திக்கு மாறினோம். ஆ.......சொல்ல வந்ததை விட்டுவிட்டு எங்கேயோ போய்விட்டேனே! சைட் டிஷ்! வெங்காயம் உள்ளே வரக்கூடாதே அதனால் ஒரு யோசனை தோன்றியது. நான் செய்யும் கூட்டிலேயே (மாமனார் மாமியாருக்கு தனியாக எடுத்து வைத்துவிட்டு) கொஞ்சம் மசாலா பொடியை (வெளியில் வாங்கியதுதான்!) போட ஆரம்பித்தேன். உற்சாகமான வரவேற்பு! காணாது கண்ட மாதிரி எல்லோரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

இரண்டு நாட்கள் சமையல் பார்த்தாயிற்று. நாளை சங்கீதம்!

இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கப் போகிறவர்கள்:


எழுத்தும் எழுத்து நிமித்தமும் என்ற வலைத்தளத்தின் சொந்தக்காரர். பெண்கள் பத்திரிக்கை என்றால் சமையலும், அழகுக்குறிப்பும், கோலமும் புடவைப் பரிசுப் போட்டிகளும், ஆன்மீகமும் தானா? பெண்களுக்கு வேறு எதுவும் தெரிய வேண்டாமா என்று கேட்கிறார் இந்தப் பதிவில்விழியன் பக்கம் ஆசிரியர் விழியன் என்கிற திரு உமாநாத்.


குழந்தைகள் புத்தகத்திற்காக பல விருதுகள் வாங்கியிருக்கிறார். நிறைய குழந்தை கதை புத்தகங்கள் எழுதியிருக்கிறார்.

சினிமா பாட்டுக்களை ஒரு வித்தியாசமான கோணத்தில்         நகைச்சுவையாக அலசுகிறார்கள். ஜி. ராகவன் (GiRa) என். சொக்கன், moksh krish என்னும் மோகனகிருஷ்ணன்.
தென்றல் பாதை  N. சொக்கன்
இறைவன் இருக்கின்றானா?  மோகனகிருஷ்ணன்

பேரு வச்சியே, சோறு வச்சியா?  என்று கேட்பவர் யமுனா என்ற பெயரில், My Mars and Venus என்ற வலைத்தளத்தில் எழுதும் விக்னேஸ்வரி சுரேஷ். படித்து சிரித்து வயிற்றுவலி வந்தால் நான் பொறுப்பல்ல!


கேட்பவர் உயிரி என்ற பெயரில் வலைத்தளம் எழுதும் திரு p. ஜகந்நாதன். இவர் ஒரு காட்டுயிர் ஆராய்ச்சியாளர். பல்லுயிர்ப் பாதுகாப்பின் அவசியத்தை எளிய வகையில் அவரவர்  தாய்மொழியில் அனைவருக்கும் எடுத்துச் சொல்வது ஒவ்வொரு இயற்கை ஆர்வலர்களின், காட்டுயிர் ஆராய்ச்சியாளர்களின்  கடமை எனக் கருதுபவர். இந்த வலைப்பதிவின் நோக்கமும் அதுதான்.
நேரம் போவது தெரியாமல் இவரது வலைப்பூக்களைப் படித்துக் கொண்டிருக்கலாம்.

சிலிகான் ஷெல்ப் நடத்தும் ஆர்வி புத்தகங்களை அறிமுகப்படுத்துவதுடன் சிறு கதைகளையும் எழுதுகிறார்.
மகாபாரதத்தை அடிப்படையாக வைத்து இன்னொரு கதை இவர் எழுதியது மீன்வாசம்

ஆசிரியர் டாக்டர் ராஜண்ணா. இவரும் பசுமை நடையில் பங்கு கொள்ளுகிறார். சினிமா விமரிசனம், புத்தக விமரிசனம் என்று எழுதுகிறார்.
‘உழவர்களை நாம் கொண்டாட மறந்து பல ஆண்டுகள் ஆகின்றன. உழவுத் தொழில் நசிந்து உணவு உற்பத்தி குறையும் நிலை பல நாடுகளில் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உழவு பற்றிய அறிவை நம் மக்களுக்கு தெரியவைக்கவும் குழந்தைகளுக்கு நம் கலாசாரம் பற்றிய ஒரு அறிமுகத்தை அளிக்கவும் முயற்சிகள் எடுக்க வேண்டியது அவசியமாகிறது’ என்கிறார் இந்தப் பதிவின் அறிமுகத்தில்.
மேலே படித்துப் பாருங்கள்
பாம்புக் கடி பற்றி எழுதுகிறார்.

என்ற தலைப்பில் வலைத்தளம் நடத்தும் திரு என். சொக்கன் தன் குழந்தைகளுடனான அனுபவங்களை பகிர்வது எனக்கு பிடிக்கும். நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். இவரது  இரண்டு படைப்புகள்.


பெங்களூருவில் கம்பராமாயணம் முற்றோதலுக்கு காரண கர்த்தா. இவரது அலுவலகத்திலேயே இந்த நிகழ்வு நடக்கிறது.

சக்கரகட்டி ராஜாத்தி ஒரு தெருப்பாடகனை நமக்கு அறிமுகம் செய்கிறார்.
பெண்கள்....வாகனம்...கட்டுப்பாடு இரண்டு சக்கர வாகனம் ஓட்டும் ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய கட்டுரை.

சீரியஸ் பதிவுகளுக்கு நடுவில் நகைச்சுவையாகவும் எழுதுகிறார். சீரியஸ் விஷயத்தையும் நகைச்சுவையுடன் சொல்வதில் வல்லவர்.


சித்திரவீதிக்காரன் என்ற பெயரில் வலைத்தளம் வைத்திருக்கும் திரு சுந்தர். பசுமை நடைதான் இவரது சிறப்பு. எத்தனை இடங்களுக்கு நடந்து போய்விட்டு வருகிறார் என்று இவரது பதிவுகளில் படிக்கலாம்.

ஆசிரியர் அசின் ஸார்
சகாராவைத் தாண்டும் ஒட்டகங்கள்  மாணவர்களின் படைப்புத் திறனை வெளிக்கொண்டுவருவது பற்றி சொல்லுகிறார், படியுங்கள்.
துஞ்சு விரட்டு  கான்க்ரீட் காடுகளுக்குள் புகுந்த சிறுத்தை என்ன செய்தது?

நாளை சந்திப்போம்! 

57 comments:

 1. சப்பாத்தி சப்பாத்திதான் ரொட்டி ரொட்டிதான் என்று ஒரு பாட்டு கேட்ட நினைவு:-)

  ReplyDelete
  Replies
  1. //சப்பாத்தி சப்பாத்திதான் ரொட்டி ரொட்டிதான் என்று ஒரு பாட்டு கேட்ட நினைவு:-)//

   துளசி மேடம்... படம் நவாப் நாற்காலி. நாகேஷ் நடிப்பில் ஏ எல் ராகவன் குரலில் பாடல். :)))))

   Delete
  2. ஆஹா.... நன்றி ஸ்ரீராம்!

   Delete
  3. வாங்க துளசி!
   வருகைக்கு நன்றி!
   உங்க கேள்விக்கு பதில் சொன்ன ஸ்ரீராமிற்கு நன்றி!

   Delete
 2. இரண்டு நாள் சமையல் ருசித்தோம். நாளை சங்கீதத்திற்காக் காத்திருக்கிறோம். அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க டாக்டர் ஐயா!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 3. சமையல் அனைவரையும் கவரும் டெக்னிக் சூப்பர் அம்மா...

  இன்றைய பல்சுவை பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன்!
   வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 4. மசாலா பொடிபோட்டு அனைவரையும் கவர்ந்து விட்டீர்கள்!

  இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 5. உண்மையில் ரொட்டிக்கும் சப்பாத்திக்கும் வித்தியாசம்தான் என்ன? தெரிஞ்சாதானே நாங்களும் செஞ்சு காமிக்க முடியும் ஹிஹி

  ReplyDelete
  Replies
  1. வாங்க முரளி!
   வித்தியாசம் சொல்லியிருக்கேனே! ஏறி பெஞ்ச் மேல நில்லுங்க! ஆசிரியருக்கே தண்டனை!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   Delete
  2. தந்தூர் எனப்படும் தணல் அடுப்பில் சுட்டு எடுப்பது ரொட்டி. கொஞ்சம் கனமாக இருக்கும். அதையே கனம் குறைவாக தோசைக்கல்லில் போட்டு ஒரு துணியை வைத்து அழுத்தி அழுத்தி உப்ப வைத்து எடுத்தால் சப்பாத்தி. தோசைக்கல்லில் ஈரம் காயும் வரை போட்டுப் பின்னர் தணலில் சுட்டு எடுப்பது ஃபுல்கா ரொட்டி. மூன்றுக்குமே நெய்யோ, எண்ணெயோ எடுத்த பின்னர் அவரவர் தேவையைப் பார்த்துக்கொண்டு தடவிக்கலாம். தோசைக்கல்லில் சப்பாத்தியைப் போட்டு இரண்டு பக்கமும் நெய்யோ எண்ணெயோ விட்டு எடுப்பது என்பது தமிழ்நாட்டுச் சப்பாத்தி! கல்யாணம் ஆகிப் போறவரைக்கும் இதைத் தான் பண்ணிக் கொண்டிருந்தேன் நானும். தொட்டுக்க வெங்காயம் போட்டோ போடாமலோ பயத்தம்பருப்புக் கூட்டு. உ.கி. கறி. அல்லது கடலைமாவுச் சட்னி. பாம்பே சட்னி என்பார்கள் அதை. வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் போட்டுப் பண்ணணும். அதுவே ஒரு பெரிய விருந்து மாதிரி பீலிங் ஆஃப் இந்தியாவா இருக்கும். (feeling of India)

   Delete
  3. இப்போல்லாம் பராத்தாவே விதம் விதமாப் பண்ண ஆரம்பிச்சப்புறமா அதை எல்லாம் நினைச்சால் சிப்பு சிப்பா வருது! :)))) ஆனாலும் எங்க சொந்தக்காரங்களில் சிலர் இன்னமும் தோசைக்கல்லில் எண்ணெயோ, நெய்யோ விட்டுத் தமிழ்நாட்டுச் சப்பாத்தி பண்ணி கடலைமாவு சட்னி பண்ணிப் பெருமையாச் சொல்லிட்டு இருக்காங்க! :))) நாங்க மனதுக்குள்ளே சிரிச்சுப்போம். :))))) ஹிஹிஹிஹி

   Delete
  4. வாங்க கீதா!
   என்ன ஒரு ருசிகரமான கருத்துரை!
   நீங்க சொல்ற மாதிரிதான் எங்க அக்கா வீட்டிலேயும் சப்பாத்தி பண்ணுவாங்க. என் மாமியார் பூரிக்கு இந்த கடலைமாவு சட்னி பண்ணுவார். என் அம்மா சப்பாத்தியை சின்னதா இட்டு, ஒரு பாதியில் நெய் தடவி மடிச்சு அதை மறுபடி
   இட்டு தோசைக் கல்லில் போட்டு சுற்றி நெய் ஊற்றி எடுப்பாள். அதுக்கு கடலைமாவு சட்னிதான்!
   சமையல் கலை வித்தகிதான் நீங்க!

   Delete
 6. சப்பாத்தி மகாத்மியம் சுவையோ சுவை!..
  அதைப் போலவே அறிமுக தளங்களும் அருமை!..

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை செல்வராஜூ!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 7. அம்மா சுவைபட சப்பாத்தி + அறிமுகங்கள்
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க உமையாள் காயத்ரி!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 8. ரொட்டி அல்லது சப்பாத்தி தணலில் காட்டினால் உப்பும் என்னும் அந்த விஷயம் சில நேரங்களில் நிகழாமல் போகும்! நான் அந்தக் காலத்திலேயே சப்பாத்திக்கு இந்த குழம்பு ரசம் தொட்டுக் கொள்ள மறுத்து விடுவேன். உ.கி மசாலா அல்லது குருமா! ஆனால் நேற்று சப்பாத்திக்கு (வேறு வழியில்லாமல்) தக்காளி பொரிச்ச கூட்டு தொட்டுக் கொண்டு சாப்பிட்டேன். ம்ம்ம்.... பரவா........யில்லை!

  சமையலைப் பற்றி முன்னுரை சொல்கிறீர்கள் என்பதால் குடித்தனம் கூடவா "கூட்டு" குடித்தனமாக ::P

  வெங்காயம் பூண்டு ஆகியவற்றை ஒதுக்குபவர்களைப் பார்த்து நான் பரிதாபப் படுவேன்.

  அறிமுகப் பதிவர் நண்பர்களில் 70 சதவிகிதம் புதுசு எனக்கு! ராகவன் ஜி முன்னர் நைஜீரியா ராகவன் என்று எழுதிக் கொண்டிருந்தவரா என்று தெரியவில்லை. துளசி டீச்சர் பதிவுகளில் திரு ஜிரா கமெண்ட்ஸ் பார்த்திருப்பதால் அவர் தளம் சென்று பார்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம்!
   நீங்கள் பலசமயங்களில் எங்கள் நண்பர் பார்த்தசாரதியை நினைவு படுத்துகிறீர்கள். அவரைப் பற்றியும் எழுதுகிறேன் அடுத்தடுத்த பதிவுகளில்.
   நானும் பூண்டு சேர்க்க மாட்டேன்.

   இந்தப் பதிவர்கள் எல்லோரும் வேர்ட்ப்ரஸ் காரர்கள்.
   துளசி டீச்சர் பதிவில் போடும் ஜிரா தான் இவர். இவர் மாணிக்க மாதுளை என்று தனியாகவும் ஒரு தளம் வைத்திருக்கிறார்.

   வருகைக்கும் சுவாரஸ்யமான கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 9. அனைவருக்கும் + தங்களுக்கும் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு ஸார்!
   வருகைக்கும் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 10. ஜிரா, விழியன் ஆகியோரின் பதிவுகள் நன்கு அறிமுகம். விழியனை நானும் என் வலைச்சர வாரத்தில் அறிமுகம் செய்தேன். ஆனாலும் உங்கள் பாணி அருமை! அதிலும் தினம் ஒன்று "திங்க" கொடுத்துட்டுப் போடறதாலே கூட்டம் கூடுது! சமாளிங்க, எஞ்சாய்!!!!!!!!!!!!!!!!!!!!! :)))))) மற்றப் பதிவர்கள் புதியவர்கள்.

  ReplyDelete
  Replies
  1. அப்படி ஒன்றும் அதிகம் பேர் வரவில்லை, கீதா. முந்நூறுக்கும் குறைவுதான்!
   பாராட்டுக்கு நன்றி!

   Delete
 11. சித்திரவீதிக்காரன் பதிவும் பார்த்திருக்கேன்.

  ReplyDelete
  Replies
  1. இவரோட பசுமை நடைப் பதிவு பார்க்கும் போதெல்லாம் எனக்கும் கூட போகணும் போல இருக்கும்....!

   Delete
 12. நிறைய நேரம் எடுத்துக்கொண்டு எல்லாப் பதிவுகளையும் படிக்க வேண்டும். பதிவுகளைப் படிக்கும்போதே ஆஹா எப்படியெல்லாம் எழுதுகிரார்கள்எம்மாதிரியானதிரியான
  புலமைமிக்கவர்கள் என்று அவர்களை மனக்கண்ணாலேயே பார்த்து மகிழ்ந்துவிடும் குணமெனக்கு உண்டு. அம்மாதிரி யாவருக்கும் பாராட்டுகள்.
  இன்றும் ரொட்டி செய்வதாகத்தான் வார்த்தை வருகிறதே தவிர சப்பாத்தி என்று சொல்வதே இல்லை. அந்தப் புராணமும். மென்மையாகவும், ருசியாகவும் இருக்கிறது.
  பூண்டு,வெங்காயமெல்லாம் எங்கள் வீட்டிலும் வரவே வராது. இப்போது வந்து விட்டு
  தரிசனம் கொடுத்துக்கொண்டே இருக்கிரது.
  எல்லாப்பதிவுகளையும் பார்க்கிறேன். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ காமாக்ஷிமா!
   நீங்கள் சொல்வதுபோல விதம்விதமாக எழுதுகிறார்கள் எல்லோரும். நமக்குத்தான் படிக்க நேரம் கிடைக்க வேண்டும். அதிக நேரம் உட்கார்ந்து படிப்பது கஷ்டமாக இருக்கிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 13. சுவையாக தந்துள்ளீர்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மாதேவி!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 14. இன்றைய சமையல் ருசிகரம்.
  பதிவர்களுக்கு எமது வாழ்த்துகள்.

  கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 15. உங்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாங்க எழில்!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 16. சப்பாத்தி அனுபவங்கள் ரசிக்கும்படி இருந்தது. இங்கே (ஒடிஸாவில்) சப்பாத்தியை பரோட்டா என்கிறார்கள். கொஞ்சம் எண்ணையையும் எள்ளையும் சேர்த்து அதை 'நான்' என்கிறார்கள். இன்றைய அறிமுகங்களும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கவிப்ரியன் கலிங்கநகர்!
   நாம் அரிசியில் விதம் விதமாகச் செய்வது போல அவர்கள் கோதுமை மாவில் செய்வார்கள் போலிருக்கிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 17. உணவிலிருந்து ஆரம்பித்துப் பலவற்றையும் பகிர்ந்துள்ளீர்கள் ரஞ்சனிம்மா அருமை. :)

  சப்பாத்தி செய்து சாப்பிடப்போறேன். டெய்லி நைட் அதுதான். :)

  கீதா மேம் சொன்ன விளக்கங்கள் அருமை. :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க தேனம்மை!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி! நாளை நிச்சயம் வந்துவிடுங்கள். சும்மா!

   Delete
 18. பல தளங்கள் நான் அறியாதவை ,அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி !உங்களுக்கு எப்படி இவ்வளவு தளங்களை பார்க்க நேரம் கிடைக்கிறது ?ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் இதற்காக செலவு செய்வீர்கள் ?
  த ம 7

  ReplyDelete
 19. வாங்க பகவான்ஜி!
  Eat, Sleep, Play எல்லாமே கணணிதான்! (சும்மா சொன்னேன்!)
  வேர்ட்ப்ரஸ் இல் தினமுமே freshly pressed என்று எல்லாரும் எழுதுவது வரும். அதைத் தவிர இவர்கள் எல்லோருமே நான் follow செய்பவர்கள்.
  வருகைக்கும், கருத்துரைக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி!

  ReplyDelete
 20. வலைச்சரத்தில் என் வலைப்பக்கத்தை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி மேடம். கடுமையான பணிச்சுமைக்கு மத்தியிலும், நான் வலைப்பக்கத்தில் பதிவு எழுதுவதற்கு, உங்களைப்போன்றவர்கள் ஊக்குவிப்பு தான் முக்கியக்காரணம். தாமத வருகைக்கு மன்னிக்கவும். இன்று, முற்பகல் முழுவதும் வெளியூர் வேலை, மதியம் அலுவலகப்பணி முடிந்து வருவதற்கு இரவு வீடு வர 11 மணியாகி விட்டது. மீண்டும் ஒரு முறை நன்றி மேடம்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆறுமுகம் அய்யாசாமி!
   தாமதத்திற்கு பரவாயில்லை. நான்கூட உங்கள் பதிவுகளை தாமதமாகத்தான் சில சமயங்களில் படிக்க முடிகிறது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 21. அனைவருக்கும் வாழ்த்துக்கள்
  http://samaiyalattakaasam.blogspot.com/2015/02/blog-post_10.html
  சப்பாத்தி சப்பாத்தி தான் ரொட்டி ரொட்டி தான்

  ஜலீலாகமால்

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜலீலா!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 22. சமையலைவிட சமையலைப் பற்றிய பதிவு சுவையா இருக்கு. ரசவண்டி, கடலைமாவு சட்னியெல்லாம் புதுசா இருக்குங்க.

  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா!
   ரசவண்டி என்றால் பருப்பு ரசத்தின் அடியில் இருப்பது. எல்லோரும் ரசத்தைத் தெளிவாக காலையில் சாப்பிட்டு விடுவோம். இரவு ரசத்தில் வண்டி தான் இருக்கும். நிறைய பருப்புடன் வெகு ருசியாக இருக்கும் ரசவண்டி.
   கடலைமாவு சட்னி என்பது கடலைமாவை மோரில் கரைத்து, வாணலியில் கடுகு, உ. பருப்பு, க. பருப்பு, பச்சை மிளகாய் எல்லாம் தாளித்து இந்தக் கரைசலையும் ஊற்றி நன்கு கொதிக்க வைத்தால் கிடைப்பது. சிலர் இதில் வெங்காயம், தக்காளி சேர்த்தும் செய்வார்கள்.
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 23. சப்பாத்திக்கு விதம் விதமான சைட் டிஷ் எல்லாம் இப்போது தானே.... முன்பெல்லாம் வெறும் பாசிப்பருப்பு தக்காளி போட்ட தால் அல்லது உருளைக்கிழங்கு மசாலா தான். ஆனாலும் தில்லி வந்த பிறகு விதம் விதமாகத் தேவையாக இருக்கிறது.

  இன்றைய அறிமுகங்களில் சிலர் தொடர்ந்து படிப்பவர்கள். சிலர் புதியவர்கள். நேரமெடுத்து படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட்!
   பதிவுகளை நிதானமாகப் படியுங்கள்.
   சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள சரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் சாப்பிடவே முடியாது.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 24. கருத்துரை இட்டதில்லையே தவிர இங்கு அறிமுகமாகியிருக்கும் பல பதிவர்களை வாசித்திருக்கிறேன். மிகவும் சுவையான தரமான பயனுள்ள பதிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். புதியவர்களை இப்போது சென்று பார்க்கிறேன். அறிமுகப் பதிவுகளுக்கும் அழகான சமையல் அனுபவத்துக்கும் மிகுந்த பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீத மஞ்சரி!
   வருகைக்கும் கருத்துரைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

   Delete
 25. நீங்கள் கூறும் சமையல் விடயங்களைக்கேட்டால் தங்கள் கையால் சமைக்கப்பட்ட உணவை உண்ணவேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்துக்கொண்டே வருகிறது அக்கா .

  பதிவர்களை எங்கிருந்துதான் பிடிக்கிறீர்களோ தெரியவில்லை . எல்லாமே அருமையான பதிவுகளாக இருக்கிறது .

  ReplyDelete
 26. வாங்க மெக்னேஷ் திருமுருகன்!
  நிச்சயம் வீட்டிற்கு வாருங்கள். சாப்பிடலாம்.
  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 27. பல புதிய அறிமுகங்கள் சகோதரி! அறியத் தந்தம்மைக்கு மிக்க நன்றி!

  ReplyDelete
 28. சிலிகன் ஷெல்ஃப் தளத்தைப் பற்றிய பாராட்டுகளுக்கு நன்றி!

  ReplyDelete
 29. எத்தனை எத்தனை பதிவர்கள்! சிறப்பாக தொகுத்து அசத்தி விட்டீர்கள் வாழ்த்துக்கள்! வேலைப்பளுவால் உடனே கருத்திட முடியவில்லை! மன்னிக்கவும்! நன்றி!

  ReplyDelete
 30. நிறைய பேர் எனக்கு புதியவர்கள்! நேரம் கிடைக்கையில் சென்று வாசிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது