07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, February 5, 2015

வலை - வழி - கைகுலுக்கல் - 2காதல் கோட்டை சினிமா..  ரொம்பப்பிரபலமா பேசப்பட்டது. அடடடே பார்க்காமலே காதலா...? அப்படின்னு.  அன்பை மட்டுமே மையமாக வைத்து வளர்ந்த காதல் கதை அது. அவர்களுக்கு உண்டான திடமான அன்பு ஜெயிக்கும். காதல் கோட்டை ஒன்று...அது இருவருக்கு  மட்டுமே...!!!

ஆனாங்க இந்த வலைக்கோட்டை( வலைச்சரம் ) இருக்கே....ரொம்பப் பெருசுங்க எத்தனை பேர் வந்தாலும் தாங்கும். இங்கு முகம் காட்டியும், காட்டாமலும்....அன்பான நட்பூ பிணைப்பு இருக்கே அழகு தாங்க. தோழமை ஒரு சுகம். அதுவும் இத்தனை தோழமை என்பது மெய் சிலிர்க்க வைக்கிறது. மனப்பரிமாற்றம்....விதவிதமான திறமைகள்...சமூக சிந்தனைகள்..இலக்கணம், இலக்கியம்...என பகிர்ந்து கொள்ள முடிகிறது.

அன்னிய தேசத்தில் அன்னியமாகிப்போன போது....வலைப்பூ நாம் அன்னியம் ஆகவில்லை என உணர்த்துகிறது.


இரட்டையர்கள் இணைந்து நடத்தும் தளம் இது. சமூக அக்கரையுடனும், நகைச்சுவையுடனும்...கதை, கட்டுரை, விமர்சனம், கவிதை,...இன்னும் நிறைய சொல்லிக் கொண்டு போகலாம் இவர்கள் தளம்  பற்றி....
Thillaiakathu Chronicles.  அப்படின்னு நீங்க முன்னமே கண்டு பிடித்து இருப்பீர்கள் என தெரியும். துளசி சகோதரரும், கீதா சகோதரியும் அந்த இரட்டையர்கள். கண்கள் இருந்தும் குருடர்களாய் வாழ்வோர் காணாததை காணும் கண்பார்வை இழந்தவர்கள் எவ்வளவு உண்மையில்லையா...?  ஆம் உண்மை தான். நாம் சிலவற்றை இவ்வாறுதான் கவனித்து சுவைக்க விட்டு விடுகிறோம். எத்தணை எத்தனையை நாம் மிஸ் பண்ணி விட்டோம் என நம்மைநாமே கேட்டுக் கொள்வோம். பாருங்களேன்.
 ஒரு FLASH BACK ஒரு சினிமா பார்த்தது மாதிரி இருக்கும்ங்க இந்த நகைச்சுவை சிறு கதையை படித்தீங்கன்னா...அதற்கு நான் கேரண்டி..ஆமா..சொல்லிப்புட்டேன்...பணம் வெற்றுக் காகிதமாகின்றதோ...? அப்படின்னு விலைவாசியை ஆராய்ந்து பதிவிட்டு இருக்கிறார்கள்...ப்ளீஸ் ஒரு விசிட் அடிங்களேன்

துள்ளலான பதிவர் இவர். உற்சாகமாய், ஜாலியாக பதிவிடுவார்அப்படியே மற்றவர்களுக்கும் கருத்திடுவார். தன் குழந்தைகளின் பெயரில் மகிழ்நிறை
என தளம் வைத்து இருக்கிறார் மைதிலி. ஆங்கில வாத்தியாரம்மா...ஆனால் தமிழ் மேல் ஆர்வம் அதிகம் உள்ளவர்வின்சியோடு ஒரு நாள் ங்கிற கதையை அருமையாக எழுதி இருக்கிறார்...விறுவிறுப்பாக...நீங்களும் விறுவிறுப்பாக போய் படியுங்கள்.  எல்லார் வீடுகளிலும் முருங்கை பூக்கும்...அப்படின்னா நமக்கு என்ன தோணும்...சீக்கிரம் காய் வந்து விடும் அப்படின்னு..ஆனா இவர் வீட்டு முருங்கைப்பூ....இவரை வெண்பா பாட வைத்து விட்டது என்றால் பாருங்களேன். ( நாங்க அவர்கள் வீட்டு முறுங்கைப்பூவைப் பார்த்தால் பா வருமா...? அப்படின்னு கேட்கட்கூடாது) அவர் சும்மா இருக்கும் போது எல்லாம் எழுத்தை எப்படி பிரிக்கனும் அப்படின்னு ஆராய்ச்சி தொடர்ந்து செய்ததால் பா வந்து விட்டது.  நாம சும்மா இருந்துட்டு வருமான்னா..வராது தானே...எனக்கு சொல்லிக்கிட்டேங்கமுருங்கை பூத்திருக்கு:) வெண்பாவை பாருங்கள் 
கைப்பை - 5 என்னது மைதிலி 5 கைப்பை வாங்கிட்டாங்களா...? என்ன விலை...என்ன கலர்...அப்படின்னு நீங்க நினைத்து ஏமாந்து போனால் நான் பொறுப்பல்ல....அதுக்குள்ள என்ன இருக்குன்னு நான் க்ளு கொடுக்காம  நீங்க நேரே போய் பார்த்தால் தெரிந்து விடும்...ஐயையோ அடிக்க வராதீங்க...சாமி...ஜீட்...

ஹாய் நலமா...?ன்னு டாக்டர். எம்.கே.முருகானந்தன் அவர்கள் தன் வலைத்தளம் வாயிலாக நம்மை கேட்கிறார்கள்இவருடைய தளத்தில் பயனுள்ள பதிவுகள் நமக்கு கிடைக்கிறதுசென்று பாருங்கள்.  உங்களுக்கு ஏதேனும் கேட்க வேண்டும் என்றால் கேட்கலாம், அவர்கள் பதில் தருகிறார்கள். சமையலறயில் வெட்டும் பலகை பற்றி என்ன சொல்கிறார்கள் என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லவா  செல்லலாமா...?
மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்...என்னது அதுக்குள்ள யாரையும் காணோம்..அடடே அவர் தளத்துக்கு போயிட்டீங்களா...? என்னது நாங்க நிற்பது உனக்கு தெரியவில்லையா...? என முறைக்காதீர்கள்...சிலர் நிற்பது தெரிந்து விட்டது. அப்பாடா எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு....நல்ல பொறுப்புடா சாமி...


காவியக்கனி வலைத்தள உரிமையாளர் இனியா அவர்கள் இனிமையானவர். என்ன பெயரிலேயே தெரியுதுங்குறீங்களா...கவிதை வடிப்பதில் வல்லவர்
உயிரிலும் மேலாய் உணர்வதனாலே ... சரஸ்வதி தேவிக்கு இவரின் பாமாலையை காண்போமா...நேற்று பிறந்த காளானும் நேரில் நின்று போராடும் வெற்றியையும், தோல்வியையும் நாம் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை அழகான சொல்லாடலில் சொல்கிறார். சொல்லாடல் நம்மை சொக்க வைக்கிறது. ரொம்ப நாள் ஆசை யாருக்குன்னு நினைக்குறீங்க வெள்ளை எலியாருக்கு...அது என்னன்னு ஒர் எட்டு போகலாம் நடங்க...அதுக்குள்ள அந்த எலி எங்கேயும் ஓடாம இருக்கனும். இனியா நமக்காக புடிச்சு வச்சு இருப்பாங்க....வாங்க.

காகிதப் பூக்களில் ஞ்சலின் Loud Speaker  14 என எழுதும் பதிவு மிக வித்தியாசமாக இருக்கும். உபயோகமான பலவற்றை இதில் பகிர்ந்துள்ளார். குழந்தை வளர்ப்பு குறித்து இவரின் பதிவு இளம் பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய  ஒன்று   குழந்தைகள் மீது பாலியல் வன்முறை . 
குடும்பப் பெண்களையும் விட்டு வைக்காத அபாயகரமான ஒரு போதைப் பழக்கம்  ஒயிட்னர் முகர்தல் பழக்கம் எப்படி போதைபாதையில் தள்ளுகிறது என்பது அறியாத விஷயம் அவசியம் பாருங்கள்

5 பேர் சேர்ந்து நடத்தும் எங்கள் பிளாக் வலைத்தளத்தில் பாஸிடிவ் செய்திகள் - கடந்த வாரம் என்று பல நல்ல விஷயங்களை தொகுத்து வழங்குகிறார்கள்.
அனுபவம் தந்த பாடம் அனுபவம் தந்த பாடம்! செவ்வாய் அணிந்தது என்ன?  அப்பப்பா   சிரித்து சிரித்து வயிறு புண்ணா போச்சு..போங்க ஆனா மனசுக்கு நல்லது இல்லையா..


கீத மஞ்சரி இவரை தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.
எழுதுவதில் வல்லவர். இவரின் எழுத்துக்களை கண்டு மலைத்து இருக்கிறேன். தவறிய கணிப்பு ( ஆஸ்திரேலிய காடுறை கதை )  என இவரின் மொழி பெயர்ப்பு கதை அருமை.  உறவுகள்...உன்னதங்கள்...தொடர்ச்சி..... உறவை  ஆழமாக, நுண்ணோக்கிய பார்வையில் அன்பாக   எழுதி இருக்கிறார். இவரின் நிலா பக்க கவிதைகளில் ஒன்றான பெரிய மனுஷியாகிவிட்டாளாம்... .சூப்பர். நீங்களும் வாசியுங்களேன்சித்ரா சுந்தரின் பொழுது போக்கு ...என்ன தெரியுமா...?  புகைப்படத்தின் வாயிலாக  நம்மிடம்  மறைந்து இருப்பது என்ன ...?  என அவ்வப்போது மூளைக்கு வேலை கொடுத்து கேட்பது தான். இப்படி தானா...எல்லாப் பதிவும் அப்படின்னு நினைத்து விடாதீர்கள் .இவரின் தேங்காய் படுத்திய பாடு  ( பாட்டை )பாருங்களேன். நாம சிரித்து மாளாதுஇவருக்கு நகைச்சுவை யுணர்வு இயற்கையாகவே இருக்குன்னா மிகையாகாது. நடைப் பயிற்சி பார்த்தீங்கன்னா உங்களுக்கே தெரியும்

புதுவை வேலுவின் குழல் இன்னிசை பலவித ராகங்களை இசைத்துக் கொண்டு இருக்கிறது. தை பிறந்தாச்சி! (சிறுகதை) யும் அதனுள் கவிதையும் அழகு.  படம் சொல்லும் பாடம் (யானைப் பாறை)  ஒரு யானை தண்ணீர் குடிப்பது போல் அமைந்துள்ள இந்த படம் ஐஸ்லாண்டில் உள்ள ஹிமே என்ற இடத்தில் இருக்கும் இடமாம். அந்த படத்தயும் அதற்குஏற்ற கவிதையையும் வடித்து ருக்கிறார்  யாதவன் நம்பி. தமிழ் இலக்கணம் படிக்கவேண்டுமா...?  யாப்புச் சூக்குமம் தெரிந்து வெண்பா எழுதும் ஆவல் உண்டா....அப்படின்னா... ஊமைக்கனவுகள் என்கிற வலைத்தளத்திற்கு செல்லுங்கள். தமிழ் வாத்தியாரான இவர் அழகாய் இலக்கணப்பாடங்களை மிக தெளிவாக விளக்கமாக  சொல்லித் தருகிறார்.  

வளரும் கவிதை என்கிற வலைத்தள முத்து நிலவன் ஐயாவை உங்கள் எல்லோருக்கும் தெரியும். ,...விளக்கங்கள் இவ்வளவு அழகாக விளக்க முடியுமா என ஆச்சரியமாக இருக்கிறதுமூனுசுழி “ண“ , ரெண்டுசுழி “ன“ என்ன வித்தியாசம்? என்கிற பதிவில் இலகுவான முறையிலும் நாம் என்றும் மறவாமல் இருக்கும் விதமாகவும் ஐயா சொல்லித்தருகிறார்கள் பாருங்களேன்.உன்னதமான வாழ்விற்கு இது ஒன்றே வழியாகும் மிக அற்புதமான கவிதை.அம்பாள் அடியாள்இவர் கவிதைகள் ,பாக்கள், பாடல்கள் என அருமையாக அருவியாக பொழிந்து விடுபவர். தமிழ் மேல் ஒரு தனிக்காதல் உண்டு இவருக்கு. தமிழுக்காக இவர் உருகி பாக்கள் பல புனைந்துள்ளார்.

 எங்கோ இருந்து என்னை இயக்கும் அழகுப் பெண்ணே ரதியே என்ற தலைப்பில் சூப்பரான பாடலை இயற்றியர்  தீதும் நன்றும் பிறர் தர வாரா என்ற வலைத்தளத்தின் சொந்தக்காரர் ரமணி ஐயா அவர்கள். சினிமா பாடலா...இது...? எந்த சினிமாவில வந்தது என கேட்பீர்கள் இந்த பாடலை படித்தால்...! கவிதைகளின் குவியலைக்கான, ருசிக்க விரும்புவோர் உடனே செல்லுங்கள்.  

 யாருக்குத் தான் கவலை இல்லை ? !!! என நம்ம சுப்பு தாத்தா சொல்லுறாங்க.
சுப்பு தாத்தா வலைக்கு வாருங்கள் என்கிற தளத்தில் பலவிதமான சமாச்சாரங்களை நீங்கள் காணலாம் ,கேட்கலாம், படிக்கலாம். Surya subburathinam siva ங்கிற பெயரில் எழுதுகிறார்கள். பாருங்கள். கடந்த வியாழன் நான் எழுதிய சாய் பாமாலையை சுப்புத்தாத்தா பாடி யூ ட்யூபில் பதிவிட்டிருக்கிறார்கள்.. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி..


                                                பென்சில் டிராயிங்
இன்று என் வலைத் தளத்தில் ..
நெல்லிக்காய் சூப்

61 comments:

 1. உமையாள்,

  இன்றைய வலைவழி குலுக்கல் 2 ல் நானும் உண்டா ! நன்றி உமையாள். இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. அன்பு தமிழ் உறவே!
  ஆருயிர் நல் வணக்கம்!
  திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களுக்கு,

  இன்றைய வலைச் சரத்தில் "குழலின்னிசை" நாதம் இசைக்க வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி.

  எனது "கவி ஒளி (வள்ளலார்) கவிதைக்கு பெருமை சேர்த்த இசை பெருமகனார்
  சுப்பு தாத்தவின் இனிய குரலில், தங்களது " சாய் நாமம் போதும் சாயீ வேதம் போதும்"
  வேத இசை கானத்தை கேட்டு மெய் மறந்து நின்றேன். மெய் சிலிர்ப்பு!

  சிறப்புமிகு பதிவாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  நன்றியுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வலை வழி குலுக்கல் 2 ல் என்னையும் இணைத்து கொண்டதற்கு மிக்க நன்றி தோழி தகவலை பகிர்ந்த சகோதரருக்கு மிக்க நன்றி

   Delete
  2. மிக்க நன்றி புதுவை வேலு

   Delete
 3. வலை வழி குலுக்கல் 2 ல் என்னையும் இணைத்து கொண்டதற்கு மிக்க நன்றி தோழி

  ReplyDelete
 4. //காதல் கோட்டை ஒன்று...அது இருவருக்கு மட்டுமே...!!!

  ஆனாங்க இந்த வலைக்கோட்டை( வலைச்சரம் ) இருக்கே....ரொம்பப் பெருசுங்க எத்தனை பேர் வந்தாலும் தாங்கும். இங்கு முகம் காட்டியும், காட்டாமலும்....அன்பான நட்பூ பிணைப்பு இருக்கே அழகு தாங்க. தோழமை ஒரு சுகம். அதுவும் இத்தனை தோழமை என்பது மெய் சிலிர்க்க வைக்கிறது. மனப்பரிமாற்றம்....விதவிதமான திறமைகள்...சமூக சிந்தனைகள்..இலக்கணம், இலக்கியம்...என பகிர்ந்து கொள்ள முடிகிறது.

  அன்னிய தேசத்தில் அன்னியமாகிப்போன போது....வலைப்பூ நாம் அன்னியம் ஆகவில்லை என உணர்த்துகிறது.//

  மிகப்பெரிய உண்மையை வெகு அழகாக எடுத்துச் சொல்லியுள்ளீர்கள்.
  பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  >>>>>

  ReplyDelete
 5. தாங்கள் வரைந்துள்ள பென்சில் ஓவியத்தில் உயிரோட்டம் உள்ளது. ஸ்பெஷல் பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. ஸ்பெஷல் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி ஐயா.

   Delete
 6. //வளரும் கவிதை என்கிற வலைத்தள முத்து நிலவன் ஐயாவை உங்கள் எல்லோருக்கும் தெரியும். ண,ன...விளக்கங்கள் இவ்வளவு அழகாக விளக்க முடியுமா என ஆச்சரியமாக இருக்கிறது. மூனுசுழி “ண“, ரெண்டுசுழி “ன“ என்ன வித்தியாசம்? என்கிற பதிவில் இலகுவான முறையிலும் நாம் என்றும் மறவாமல் இருக்கும் விதமாகவும் ஐயா சொல்லித்தருகிறார்கள் பாருங்களேன்.//

  உடனடியாகப் போய்ப் பார்த்தேன். இரண்டு பின்னூட்டங்களும் கொடுத்துள்ளேன். தகவலுக்கு மிக்க நன்றி. அவருக்கான என் பின்னூட்டங்களை அவர் வெளியிட்டபின் தாங்களும் அவற்றைப்படித்துப்பார்த்தால் மேலும் மகிழ்வேன்.

  இங்கு அவரின் தளத்தினை அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளது தமிழுக்குத் தாங்கள் செய்துள்ள மிகப்பெரிய தொண்டு என்பேன். பாராட்டுக்கள்.

  >>>>>

  ReplyDelete
  Replies
  1. சகோதரி உமையாள் அவர்களின் அன்புக்கும், அதை எனக்கும் தெரிவித்து இங்கும் தந்துள்ள வை.கோ.அய்யாவின் அன்புக்கும் என் நன்றி. சகோதரி உமையாள் அவர்களின் வலைக் கவனம் வியப்பூட்டுவதாக உள்ளது. அவர்களின் பணி வாழ்க. வலைச்சரத்திற்கும் என் நன்றி வணக்கம்.

   Delete
  2. உடனடியாகப் போய்ப் பார்த்தேன். இரண்டு பின்னூட்டங்களும் கொடுத்துள்ளேன். தகவலுக்கு மிக்க நன்றி. அவருக்கான என் பின்னூட்டங்களை அவர் வெளியிட்டபின் தாங்களும் அவற்றைப்படித்துப்பார்த்தால் மேலும் மகிழ்வேன்.//

   இதோ சென்று காண்கிறேன் ஐயா.

   இங்கு அவரின் தளத்தினை அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளது தமிழுக்குத் தாங்கள் செய்துள்ள மிகப்பெரிய தொண்டு என்பேன்//

   முத்து நிலவன் ஐயா, நீங்கள்.....என உங்களை போன்றோர்கள் செய்யும் தமிழ் தொண்டை பார்த்து கற்றுக் கொள்கிறோம் ஐயா. எதையும் செய்யவில்லை .
   நன்றி

   Delete
  3. முத்து நிலவன் ஐயாவிற்கு மிக்க நன்றி

   Delete
  4. தாங்கள் முத்து நிலவன் ஐயாவின் பதிவில் இட்ட பின்னூட்டத்தை படித்து வந்தேன் ஐயா.

   Delete
 7. இன்றைய அறிமுகங்களில் தில்லைக்காட்டு க்ரோனிக்கல்ஸ், காகிதப் பூக்கள் ஏஞ்சலின், எங்கள் பிளாக், கீதமஞ்சரி, அம்பாள் அடியாள், தீதும் நன்றும் ... ரமணி ஐயா ஆகிய பதிவர்களுடன் எனக்குக் கொஞ்சம் பரிச்சயமும் தொடர்புகளும் நல்லெண்ணங்களும் உண்டு என்பதால் அவர்களை சிறப்பித்து அடையாளம் காட்டப்பட்டுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள். தங்களுக்கு என் நன்றிகள்.

  ooooo

  ReplyDelete
 8. மிக்க நன்றி வைகோ சார்! தங்களின் வாழ்த்திற்கு! தங்களைப் போன்ற பெரியோர்களின், எழுத்துலக, வலையுலக ஜாம்பவான்களின் நல்லாசியும், வாழ்த்துக்களும்தான் எங்களையும் உற்சாகப்படுத்தி, உயிர்ப்புடன் எழுத வைக்கின்றது என்பதை எங்கள் சிரம் தாழ்த்தி கோடானுகோடி வணக்கங்களுடனும், நன்றிகளுடனும், மகிழ்வுடனும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம். எங்கள் மதிப்பிற்குரிய தங்களுக்கு மீண்டும் நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களைப் போன்ற பெரியோர்களின், எழுத்துலக, வலையுலக ஜாம்பவான்களின் நல்லாசியும், வாழ்த்துக்களும்தான் எங்களையும் உற்சாகப்படுத்தி, உயிர்ப்புடன் எழுத வைக்கின்றது என்பதை எங்கள் சிரம் தாழ்த்தி கோடானுகோடி வணக்கங்களுடனும், நன்றிகளுடனும், மகிழ்வுடனும் இங்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.//

   ஆம் உண்மை தான் சகோ

   Delete
 9. அன்னியத்தை அன்னியமாக்கிய தங்களின் முன்னுரை நன்று. சக வலைப்பதிவர்களைத் தாங்கள் அறிமுகப்படுத்தும் பாணி சிறப்பாக உள்ளது. பாராட்டுகள். பாடலும், ஓவியமும் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. நாளை சந்திப்போம்.

  ReplyDelete
  Replies
  1. தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா

   Delete
 10. சகோதரி! இன்றைய வலைச்சரத்தில் எங்களையும் தொடுத்ததற்கு மிக்க நன்றி! நாங்கள் அதற்கெல்லாம் தகுதி உடைய்வர்கள் தானா என்பது தொக்கி நிற்கும் கேள்வி! எனினும் தங்களின் அன்பிற்கு தலை வணங்குகின்றோம் சகோதரி!

  ஆம்! காதல் கோட்டை போல இது காணாமல் எழுத்தின் மூலம் நட்பு வளர்க்கும் வலை உலகக் கோட்டை. இதில் தான் எத்தனை எத்தனை நட்புகள்!! நீங்கள் சொல்லுவது போல் இந்த உலகம் முழுவதும் நமக்கு நண்பர்கள்! அதுவும் விஜு ஆசான், கவிஞர், தாத்தா போன்ற ஜாம்பவான்களுடன் எங்களையும் தொடுத்து.....பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பது போல்.....மிக்க நன்றி! சகோதரி!

  இன்றைய வலைச்சரத்தைத் திறந்தவுடன் சாயி நாதர்! மனதிற்கு மிகவும் மகிழ்வு அளித்தது.

  இன்றைய அறிமுகங்கள் அனைவரும் ஆஹா நட்புகள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! சுப்பு தாத்தா த க்ரேட் !!! அருமையாகப் பாடியுள்ளார். அவர் பதிவுலக மார்க்கண்டேயர் எனலாம். இன்றும் இளமைத் துள்ளலுடன் நகைச்சுவையுடன் , பாட்டும் பாடி வருகின்றார். தாத்தா உங்களுக்கு ராயல் சல்யூட்!!!

  மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. மகிழ்வான நன்றி சகோஸ்

   Delete
 11. யாதவன் நம்பி/புதுவை வேலு அவர்களே உங்களுக்கு மனமார்ந்த நன்றி! வலைச்சரத்தில் எங்கள் அறிமுகத்தைப் பற்றித் தகவல் கொடுத்ததற்கு! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. யாதவன் நம்பி/புதுவை வேலு அவர்களே உங்களுக்கு மனமார்ந்த நன்றி! வலைச்சரத்தில் எங்கள் அறிமுகத்தைப் பற்றித் தகவல் கொடுத்ததற்கு! மிக்க நன்றி! //

   ஆமாம் நானும் அவர்களுக்கு மிக்க மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

   Delete
 12. ஒவ்வொரு தளத்தையும் அறிமுகம் செய்த விதம் சிறப்பு... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. சகோதரி தங்களின் சாயி நாதரின் சித்திரம் மிக மிக அருமை!!!

  ReplyDelete
  Replies
  1. ரசித்து சொன்னதற்கு நன்றி

   Delete
 14. முதலில் வலைச்சர ஆசிரியருக்கு வணக்கம். மேலும் பணிசிறக்க வும் வாழ் த்துகிறேன். என்னையும் தங்கள்வலிச்சரத்தில் இணைத்தமைக்கு மிக்க நன்றி என்னுடன் சேர்ந்து இணைந்தவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ..! அத்துடன் சாயி பாடலும் சித்திரமும் வெகு அருமை !

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்களுக்கு, மிக்க நன்றி சகோ

   Delete
 15. கண் காணாமல் பூத்த காதல் கோட்டை திரைப்படத்தைப் போல
  இதுவும் முகம் காணாமல் - எழுத்தின் மூலம் நட்பு வளர்க்கும் கலைக் கோட்டை!..

  முத்தான பதிவர்களை முன் நிறுத்தி சிறப்பு செய்திருக்கின்றீர்கள்.. மகிழ்ச்சி!..
  அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..

  ReplyDelete
  Replies
  1. ஆஹா...நன்றாக இருக்கிறது கலைக்கோட்டை

   வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

   Delete
 16. அறியத் தந்த சகோதரர் யாதவன்நம்பி அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துக்களும்...!

  ReplyDelete
 17. எல்லோருமே தெரிந்த பதிவர்கள் என்றாலும் அவர்களின் முக்கியமான பதிவுகளைச் சுட்டியமைக்கு நன்றி. த.ம.+

  ReplyDelete
 18. உங்களோட முன்னுரையும், பதிவர்கள் பற்றிய அறிமுகமும் மிக அருமையாக தொகுத்து வழங்குகின்றீங்க. சாய் நாமம் இனிமை. பென்சில் ஆர்ட் அழகு.பாராட்டுக்கள் உமையாள்.
  இன்று அறிமுகப்படுத்திய அனைத்துப் பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. அடேடே..... சரத்தில் நாங்களும்.

  நன்றி... நன்றி... நன்றி.

  ReplyDelete
 20. இன்றைய வலைச்சரம் மிக அருமை. ஆரம்பம் முதல் அனைத்து பதிவர்கள் அறிமுகப்படுத்திய விதம் அருமை. அனைவரும் மிக சிறப்பான பதிவர்கள்.
  அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
  உங்கள் சாய்பாபா ஓவியம் மிக அழகு.
  வாழ்த்துக்கள் உமையாள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி அம்மா

   Delete
 21. அன்புச் சகோதரி,
  என்னையும் ஒரு பொருட்டாய்க்கருதி இங்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றியையும், இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட என்னினும் மூத்த பதிவர்கள் அனைவருக்கும் வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  நான் தமிழ் வாத்தியாராய் இருந்தால் நிச்சயம் நன்றாயிருக்கும்.
  ஆனால் இல்லை.
  புதுவை வேலு அவர்கள் வலைச்சரத்தின் மக்கள் தகவல் தொடர்பாளராகி எங்களுக்கு எல்லாம் நாங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட தகவலை அறியத் தந்தார்.
  அவருக்கும் என் மனப்பூர்வமான நன்றி!
  வலைச்சர ஆசிரியராய் அவரும் பணியாற்றும் நாள் தொலைவில் இல்லை என்றே நினைக்கிறேன்.
  அவருக்கும் முன் கூட்டியான என் வாழ்த்துகள்.
  மீண்டும் உங்களின் அறிமுகமும் ஊக்கமும் நான் செய்யும் தவறுகளைத் திருத்தவும், எழுத்தினை செம்மையாக்கவும் நிச்சயம் உதவும் என நம்புகிறேன்.
  தங்களுக்கு என் நெஞ்சம் நிறை நன்றி!

  த ம 7

  ReplyDelete
  Replies
  1. நான் தமிழ் வாத்தியாராய் இருந்தால் நிச்சயம் நன்றாயிருக்கும்.
   ஆனால் இல்லை.//

   வலைத்தளைத்தில் தமிழ் வாத்தியாராக......தான் எல்லோராலும் பொரும்பாலும் அறியப்படுகிறீர்கள்.

   வருகைக்கும் கருத்திற்கும் தமிழ் மண வாக்கிற்கும் நன்றி

   Delete
 22. வணக்கம் இன்றைய பூச்சரம் தொடுத்த விதமும் அருமை
  இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துகள் அனைவரும் எமது நண்பர்களே... குறிப்பாக வில்லங்கம் விருமாண்டி கோஷ்டிகள் (தில்லை அகத்தார்)

  ஓவியம் சிறப்பாக இருந்தது
  3 குழந்தைகளின் படம் நான் எனது பதிவில் இட்டிருந்தேன் அருமை.

  காலையில் பார்க்கும்போது வில்லங்கம் பார்ட்டி பதிவில் ஒரு தவறு இருந்தது இப்பொழுது மாற்றி விட்டீர்கள் அதையும் கண்டேன்.

  தமிழ் மணம் – 8 (வழக்கம்போலே எட்டு ராசியான நம்பரோ ?)
  அன்புடன்
  தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.

  ReplyDelete
  Replies
  1. ஓவியம் சிறப்பாக இருந்தது//

   நன்றி
   3 குழந்தைகளின் படம் நான் எனது பதிவில் இட்டிருந்தேன் //

   கூகுளில் தேடும் போது வந்தது பிடித்திருந்ததால் இங்கு போட்டேன்.

   தமிழ் மண வாக்கிற்கும், கருத்திற்கும் நன்றி சகோ

   Delete
 23. காவியக்கனி Iniya , காகிதப்பூக்கள் Angelin மற்றும் வளரும் கவிதை முத்துநிலவன் சார், கீத மஞ்சரி இதுபோன்ற பல நண்பர்கள் மற்றும் பல வலைப்பூ எழுதும் பல பதிவர்களையும் அறிமுகப்படுத்தியது மிக்க மகிழ்ச்சி. பென்சில் டிராயிங் சூப்பர். வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோ

   Delete
 24. அருமையான பதிவர்களுடன்
  என்னையும் இணைத்து அறிமுகம்
  செய்தது மகிழ்வளிக்கிறது
  மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி ஐயா

   Delete
 25. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும், கருத்திற்கும் நன்றி சகோ

   Delete
 26. சாயி படம் வெகு அழகு! தோழி என் தோழிகள், சகோக்களோடு அறிமுகமாகி இருப்பது மிக்க மகிழ்ச்சியை தருகிறது. மிக்க நன்றி தோழி!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி மைதிலி

   Delete
 27. சாய்பாபா படமும் வீடியோவும் அருமை...
  இன்று கைகுலுக்கிய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி குமார்

   Delete
 28. வலை வழி கைக்குலுக்கலில் என்னையும் கரங்கோர்த்திருக்கும் அன்புக்கு மிகவும் மகிழ்கிறேன். மனம் நிறைந்த நன்றி உமையாள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி கீத மஞ்சரி

   Delete
 29. நான் தொடரும் சிலர் இன்றைய அறிமுகத்தில்..... மிக்க மகிழ்ச்சி.

  அனைவருக்கும் வாழ்த்துகள்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது