07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, February 10, 2015

சங்கடமான சமையல விட்டு சங்கீதம் பாடப்போறேன்!வலைச்சரம் இரண்டாம் நாள்

இன்னிக்கு காலையிலிருந்தே இந்தப் பாட்டு மனசுக்குள்ள ஓடிக் கொண்டே இருக்கிறது. எப்போ இந்த சங்கடமான சமையல விடப் போறேன்னு தெரியலை. தினமும் காலைல எழுந்ததுலேருந்து டிபன் என்ன, மத்தியானம் லஞ்ச் என்ன, சாயங்காலம் கொறிக்க என்ன ‘நொறுக்’, இரவு டின்னர் என்ன அப்படின்னு யோசிச்சு யோசிச்சு தலையே குழம்பிப் போயிடும் போல இருக்கு. யாராவது மென்யூ கொடுத்தால் தேவலை என்று நினைத்து என்ன செய்யலாம் என்று கேட்டால் மென்யூவைக்  கொடுத்துவிட்டு பருப்பை ரொம்ப வறுக்காதே, மெந்தியம் ரொம்பப் போடாதே, துகையலை சட்னி மாதிரி அரைச்சுட்ட என்று ‘லொள்ளு’  வேற! நாப்பது வருஷ அனுபவத்துல  (சமையல் கட்டு அனுபவம் தான்) இதெல்லாம் சகஜம்னு விட்டுட வேண்டியதுதான்.


இங்கு ஒரு விஷயத்தை நான் ஒப்புக்கொள்ள வேண்டும். எனக்கு சமையலில் அதீத ஆர்வமோ, சுவாரஸ்யமோ இருந்ததில்லை, எப்போதுமே. இதைச் சொன்னால், என் பெண் சொல்லுகிறாள்: ஒரு காலத்தில் நானும் விதம்விதமாக செய்து போட்டிருக்கிறேனாம்; புதுப்புது ரெசிபி எழுதி வைத்துக் கொண்டு செய்து கொடுத்திருக்கிறேனாம். அதெல்லாம் எப்பவோ. இப்ப சங்கடமான சமையல் தான்.

பசிக்கு சாப்பிட சமையல் செய்ய வேண்டும். பண்டங்களை வீணடிக்கக் கூடாது. உப்பு புளி சரியாக இருக்க வேண்டும். சமையல் செய்யும் போது தினமும் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன். மொத்தத்தில் வாயில் வைக்கும்படி செய்வேன். ஒவ்வொரு நாளும் தளிகை பெருமாளுக்கு கண்டருளப் பண்ண வேண்டும். அதனால் தளிகை செய்யும்போதே வாயில் போட்டு பார்ப்பது கிடையாது. செய்து முடித்து அவரவர்கள் தட்டில் சாதிக்கும்போது அவரவரே ருசி பார்த்து கொள்ள வேண்டியதுதான். அதற்கு முன் எப்படி இருக்கிறது நான் என்று பார்க்கவே மாட்டேன். பெருமாளின் திருவுள்ளம் என் தளிகை. அதனாலேயோ என்னவோ தினமுமே நன்றாக அமைந்துவிடும். இன்றுவரை இப்படித்தான்.

அப்படியும் ஒவ்வொரு நாள் என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பி போய்விடுவேன். மார்கழி மாதம் என்றால் பொங்கல், தொட்டுக்கொள்ள கொத்சு, குழம்பு ஏதாவது பண்ணி சமாளிக்கலாம். பிள்ளை இருந்தால் அவனுக்குப் பிடித்ததாகப் பண்ண வேண்டும். அவனுக்கு அலுவலகம் இருக்கும் நாட்களில் நான் செய்வதுதான் தளிகை. அவனுக்கு கையில் கொடுத்து அனுப்ப ஒரு குழம்பு ஒரு கறியமுது தான் சரிப்பட்டு வரும். சிலநாட்களில் ‘சித்ரான்னம்’ செய்துவிடுவேன். அதுவே எங்களுக்கு மதிய சாப்பாடாகிவிடும். பிள்ளைக்கு பாதி கறிகாய்கள் பிடிக்காது. கூட்டு என்றால் பெங்களூர் கத்திரிக்காய் கூட்டு மட்டுமே பிடிக்கும். கறியமுது என்றால் ஆலு ஃப்ரை –யை மட்டுமே ஒப்புக்கொள்ளுவான். தினமும் ஆலூ ஃப்ரை சாத்தியமா? அதனால் சில நாட்கள் கத்திரிக்காய் பொடி, வாழைக்காய் பொடிமாஸ், சேனைக்கிழங்கு பொடிமாஸ் என்று செய்து சொல்லாமல் கொள்ளாமல் டிபன் பாக்ஸில் வைத்துவிடுவேன். அவனும் சமர்த்தாக சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவான்.  திடீரென்று ஒரு நாள்.......என்னவாயிற்று? சஸ்பென்ஸ்......நாளை!


குறிப்பு: இந்தப் பதிவில் சில வார்த்தைகளை நான் பயன்படுத்தி இருப்பதன் காரணம் இந்தத் தலைமுறையினருக்கு இவ்வழகான வார்த்தைகள் தெரியட்டும் என்றுதான். அடுத்த தலைமுறைக்குள் இவ்வார்த்தைகள் மறைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அதற்குள் இவ்வார்த்தைகளை பதிவு செய்துவிட வேண்டும் என்றுதான்.


மேலே தொடரும் முன் இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கப் போகும் பதிவர்  (ஒருவர் மட்டுமே) யார் என்று பார்த்துவிடலாம்.

திருமதி சுபாஷிணி ட்ரெம்மல்

[suba.jpg]

இவர் ஒருவரைப் பற்றிச் சொல்வதற்கே பல மாதங்கள் ஆகும். மலேசியாவில் பிறந்து வளர்ந்திருந்தாலும் தமிழை, தமிழகத்தை மறக்காதவர். தற்போது ஜெர்மனியில் வசிக்கிறார். ஒவ்வொரு வருடமும் தமிழகத்திற்கு வந்து தமிழகத்தின் பெருமை சொல்லும் கோவில்களையும், மரபுச் சின்னங்களையும் காணொளிகளாகவும், புகைப்படங்களாகவும் எடுத்து மின்தமிழ் என்ற குழுமத்தில் பகிர்ந்து கொள்ளுகிறார். தனது பயணங்கள் தனது நினைவுகள், தான் பார்த்த கேட்ட செய்திகள் என்று அனைத்தையும் பகிர்ந்து கொள்ளுகிறார். 12 வருடங்களாக தமிழ் மரபு அறக்கட்டளை என்ற ஒரு அமைப்பையும் நடத்தி வருகிறார். இவரது வலைத்தளங்களுக்கும் இதே வயது ஆகிறது.

இவரது படைப்புகள் சிலவற்றைப் பார்க்கலாம்.

தமிழின் பாரம்பரிய வளங்களை மின்மயமாக்கும் சர்வதேச முயற்சி.

தமிழ் மரபு அறக்கட்டளையும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து மேற்கொள்ளும் ஓலைச் சுவடிகள் தேடும் பணியைப் பற்றிய செய்திகளை இங்கு படிக்கலாம்.


சென்ற ஆண்டு தமிழகம் வந்திருந்த போது 21.6.2014 அன்று தினமணி இலக்கியத் திருவிழாவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் துணைத்தலைவர் திருமதி.சுபாஷிணி ட்ரெம்மல் ஆற்றிய உரை ஒலிப்பதிவு:

சுவாரஸ்யமான சில விழியப் பதிவுகள்


திருவிடைமருதூர் கோவில் விழியப்பதிவு http://video-thf.blogspot.in/2014/02/2014_14.html

எனக்குப் பிடித்த இவரது மற்ற பதிவுகள் சில:

ஆஹா, என்ன ஆளுமை http://ksuba.blogspot.in/2014/03/blog-post_8.html
தனது ஆசிரியை, அம்மா, செம்பியன் மாதேவி என்று பலரையும் நினைவு கூர்ந்திருக்கிறார்.

உ.வே.சா வுடன் உலா என்று தமிழ் தாத்தாவின் வரலாற்றையும் எழுதி வருகிறார்.

இவர் நடத்தி வரும் தளங்கள்:
http://subastravel.blogspot.com- சுபாவின் பயணங்கள் தொடர்கின்றன..!
http://subahome2.blogspot.com - ஜெர்மனி நினைவலைகள்..!
http://subaillam.blogspot.com - மலேசிய நினைவுகள்..!
http://ksuba.blogspot.com - Suba's Musings
http://subas-visitmuseum.blogspot.com - அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்!
http://rareartcollections.blogspot.com/ - அருங்கலைப் படைப்புக்கள்

http://tamilheritagefoundation.blogspot.com - த.ம.அ செய்திகள்
http://voiceofthf.blogspot.com - மண்ணின் குரல்
http://video-thf.blogspot.com - விழியக் காட்சிகள்
http://image-thf.blogspot.com - மரபுப் படங்கள்
http://thfreferencelibrary.blogspot.com - தமிழ் மரபு நூலகம்
http://mymintamil.blogspot.com - மின்தமிழ் மேடை
http://kanaiyazhi-ezine.blogspot.com – கணையாழி இவர் தமிழ் மொழிக்கும் தமிழகத்திற்கும் செய்துவரும் சேவைகள் அளப்பரியவை.  பல பழைய தமிழ் நூல்களை மின்னாக்கம் செய்கிறார். தமிழ் தமிழ் என்று தமிழுக்காகவே வாழ்பவர் இவர். இவரது முயற்சிகள் எல்லாம் வெற்றிகரமாக நடைபெற இவருக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம். 


இவரது ஒவ்வொரு தளமுமே சுவாரஸ்யமானவை. நிறைய தகவல்களை நமக்குக் கொடுப்பவை. இவற்றைப் படித்துப் பார்க்கவே உங்களுக்கு நிறைய நாட்கள் வேண்டும். படித்துக் கொண்டிருங்கள்.
நாளை மீண்டும் சிந்திப்போம்!
51 comments:

 1. சஸ்பென்சை அறியக் காத்திருக்கிறோம். இன்றைய வலைச்சரத்தை அலங்கரிக்கும் திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களின் பன்முகப்பார்வையினைத் தாங்கள் ஒருசேரக் கொண்டுவந்து அறிமுகப்படுத்தியுள்ள விதம் அருமையாக உள்ளது. நாளைய பதிவிற்காகக் காத்திருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க டாக்டர் ஐயா!
   வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 2. இன்றைய அறிமுகம் திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களுக்கு வாழ்த்துகள் அறிமுகப்படுத்திய திருமதி. ரமணி sorry ரஞ்சனி நாராயணன் அவர்களுக்கு நன்றியோடு...
  தம்ழ் மணம் 3
  பயத்துடன்
  கில்லர்ஜி

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி!
   எதற்கு பயம்? கில்லர்ஜி என்று பெயர் வைத்துக்கொண்டு கூடவே பெரிய மீசையும்! :))
   வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும், தமிழ்மண வாக்கிற்கும் நன்றி!

   Delete
 3. தளிகை, கறியமுது போன்ற அமுதமான முன்னுரையும், இன்றைய ஒரே அறிமுகமும் அருமை.

  இன்று அறிமுகமான அவருக்கும் தங்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ கோபு ஸார்!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும், நன்றிகளுக்கும் (!) நன்றி!

   Delete
 4. இன்றைய அறிமுகம் திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களின் முயற்சிகள் எல்லாம் வெற்றியடைய நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை செல்வராஜூ!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 5. திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனபாலன்!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 6. சுபாஷிணி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆறுமுகம் அய்யாசாமி!
   எங்கே அணிலைக் காணோம்?
   வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 7. மின் தமிழில் திருமதி சுபாஷினி அவர்களின் உரையாடல்கள், விழியப் பதிவுகள், வலைப் பக்கங்கள், என்று பார்த்து அதிசயப்பட்டு போயிருக்கிறேன் இவருக்கும் நம்மைப் போல் நாள் ஒன்றிற்கு இருபத்தினாலு மணி நேரம் தானே இருக்கும் , இல்லை இவருக்கு மட்டும் அதிகமோ என்று தோன்ற வைக்கும் அளவிற்கு அவருடைய பங்களிப்பு அதிசயக்க வைக்கும் .
  திருமதி சுபாஷினி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
  அருமையான அறிமுகத்திற்கு நன்றி ரஞ்சனி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜி!
   நானும் உங்களைப்போலத்தான். சுபாவைப் பார்த்து வியந்துகொண்டே இருக்கிறேன்.
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 8. நான் இதுவரை படித்ததில்லை. பார்க்கிறேன். படிக்கிறேன். வாழ்த்துகள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்கோ காமாக்ஷிமா!
   நிச்சயம் படித்துப் பாருங்கள். வியப்பாக இருக்கும், இத்தனை செய்யமுடியுமா என்று.

   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 9. முன்னுரைதான் சுவாரஸ்யம் என்று பார்த்தால் அறிமுகம் அபாரமாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம்! உங்கள் வரவைத்தான் ஆவலுடன் எதிர்பார்த்தேன். சமையல் சங்கடமா என்று கேட்பீர்கள் என்று நினைத்தேன்!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 10. சுபாவை நானும் இரண்டாம் முறை வலைச்சர ஆசிரியராக இருந்தபோது அறிமுகம் செய்தேன். ஆனால் இப்படித் தனியாக இவ்வளவு விபரங்கள் எல்லாம் கொடுக்கவில்லை. :))) சுபாவுக்கு எவ்வளவு வாழ்த்துச் சொன்னாலும் போதாது. அவர் உழைப்பு அப்படி! தேனியை விடச் சுறுசுறுப்பு. நம்மால் எல்லாம்(அதுவும் என்னால்) நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. :))

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீதா!
   குழுமத்தில் பகிரப்படும் அத்தனை கட்டுரைகளையும் படித்து கருத்து சொல்லி எவ்வளவு அழகாக நடத்தில் செல்லுகிறார். வியப்புத்தான்!
   என்னாலும் முடியாதுப்பா! கிரேட் சுபா!
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 11. சமையலில் உங்களுக்கு நேர் எதிர் நான். விதம் விதமாய்ச் சமைக்கப் பிடிக்கும். ரசிக்கத் தான் ஆளில்லை. குழந்தைகள் இருந்தவரை ரசிப்பார்கள். சந்தோஷமா இருக்கும். நம்ம ரங்க்ஸுக்கு விதவிதமாய்ச் சமைக்கிறேன்னா பயம் ஜாஸ்தி! :)))) அப்படியும் சில சமயம் விட மாட்டோமுல்ல! ஏதானும் பரிசோதனை பண்ணிப் பார்த்துடுவோம். அவர் தான் ஒவ்வொரு முறையும் சோதனை எலி நான் தானானு நடுங்குவார். :)))))

  ReplyDelete
  Replies
  1. நீங்கள் என் அக்காவைப்போல. நானும் சமைப்பேன். ஆனாலும் ரொம்பவும் ரசித்ததெல்லாம் இல்லை. நீங்கள் ரெசிப்பி எழுதும் விதமே உங்களது ரசனையை சொல்லுகிறதே! எங்க ரங்கஸ் நல்லா சமைப்பார். ஏதாவது ஸ்பெஷல் பண்ணட்டுமா என்று அவர் கேட்டால் முதலில் சமையலறையிலிருந்து வெளியே வந்துவிடுவேன்!

   Delete
 12. தமிழுக்கும் தமிழகத்துக்கும் அளப்பரிய சேவைகள் செய்து வரும் சுபாஷிணி ட்ரெம்மல் பற்றி ஏற்கெனவே அறிந்திருந்தாலும் அவரது பதிவுகள் பலவற்றைப் படித்ததில்லை. நீங்கள் சொல்வது போல் இவரது தளங்கள் பலவற்றைச் சுற்றிவருவதற்கே நாட்கள் அதிகம் தேவைப்படும். அருமையான பதிவரைப் பற்றியும் அவர்தம் தொண்டு பற்றியும் இங்கு அறிமுகம் செய்ததற்குப் பாராட்டுக்கள்! சுபாஷிணிக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க கலையரசி,
   தமிழர்கள் அனைவரும் அறிய வேண்டியவர் இவர். நேரம் கிடைக்கும்போது இவரது இடுகைகளைப் படித்துப் பாருங்கள்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 13. வணக்கம்
  அம்மா

  இந்த வாரம் தாங்கள்தான் வலைச்சர ஆசிரியராக உள்ளீர்கள் என்ற தகவலை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்... தொடருங்கள் சேவை வாழ்த்துக்கள் அம்மா.
  இன்றைய அறிமுகத்தை மிகவும் அசத்தி விட்டீர்கள்.
  திருமதி சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் அம்மா...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரூபன்,
   உங்கள் மகிழ்ச்சி என்னையும் தொற்றிக் கொள்ளுகிறது.
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 14. பல சொற்கள் மறைந்து போவது வாஸ்தவம்தான்! இப்படி ஆவணப்படுத்துகையில் அதன் ஆயுள் கூடும்! நான் அறியாத புதிய தளங்கள் அறிமுகத்திற்கு நன்றி! நேரம் கிடைக்கையில் சென்று பார்க்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சுரேஷ்!
   வருகைக்கும், நல்ல கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 15. இந்த வாரத்தின் வலைச்சர ஆசிரியர் ஆனதற்கு மகிழ்ச்சி அம்மா
  புதிய தளங்கள் அறிமுங்களுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சரவணன்,
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 16. சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களுக்கு வாழ்த்துகள்.பணி தொடர வாழ்த்துக்கள் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க தனிமரம்!
   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 17. அறிமுகம் அருமை..
  தம+

  ReplyDelete
  Replies
  1. வாங்க மது!
   வருகைக்கும், தமிழ்மணம் வாக்கிற்கும் நன்றி!

   Delete
 18. நாங்கூட திருமணமாகாத இன்னொரு(சின்ன) மகனைப்பற்றிய பதிவோன்னு நெனச்சுட்டேன். சமைக்க சங்கடமில்லாதவரிடம் ஒப்படைச்சுப் பாருங்க, நீங்களே அதிசயிக்கும் வகையில் காய்களை வாங்கிட்டு வருவார் உங்க மகன்.

  இன்றைய அறிமுகப் பதிவருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சித்ரா!
   திருமணமாகாத இன்னொரு (சின்ன) மகனா? எனக்கா? இருப்பதே ஒரு மகன் தானே! அவனுக்கும் திருமணம் ஆகிவிட்டது இப்போது!
   எங்க வீட்டுக்காரர் தான் காய்கள் வாங்கி வருவார். என்ன செய்யணும்னு அவரே சொல்லிடுவார்!

   வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றிங்கோ!

   Delete
 19. பெருமாளின் திருவுள்ளம் என் தளிகை. அதனாலேயோ என்னவோ தினமுமே நன்றாக அமைந்துவிடும். இன்றுவரை இப்படித்தான்.//

  பெருமாள் தளிகைக்கு சுவை கூட்டிடுவார்.

  சுபாஷிணி ட்ரெம்மல் அவர்களின் பதிவுகளை படித்துப் பார்க்கிறேன்.
  அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி!
   நீங்கள் சொல்வது நிஜம். வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி!

   Delete
 20. சுபா அசத்துகிறாரே ! அவரது வலைதளத்திற்கு உடனே செல்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க முரளி!
   நிச்சயம் சென்று பார்த்து படியுங்கள்.
   வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

   Delete
 21. அறிமுகத்துக்கு வாழ்த்துகள். அறியத்தந்த உங்களுக்கு நன்றிகள்.

  ReplyDelete
 22. மலைப்பாக இருக்கிறது. இத்தனை சாதனைகள் செய்துவரும் இவரைப் பற்றி இதுவரை தெரியாமல் இருந்ததற்காக வெட்கப்படுகிறேன். அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன். இனிதான் அந்த இணைப்பபுகளுக்குச் சென்று ஒவ்வொன்றாக படிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கவிப்ரியன் கலிங்கநகர்!
   வருகைக்கும், கருத்துரைகளுக்கும் நன்றி!

   Delete
 23. குழம்பு, கறியமுது, கூட்டு, பொடிமாஸ், ‘சித்ரான்னம்’ - இவற்றின் விளக்கமும் சொல்லிருங்களேன். நாங்களும் செய்ற சாப்பாட்டு வகைதான், ஆனா பேருதான் வித்தியாசம்னு நினைக்கிறேன்.

  //அப்படியும் ஒவ்வொரு நாள் என்ன செய்வது என்றே தெரியாமல் குழம்பி போய்விடுவேன்//

  பெரியவங்க நீங்களே இப்படிங்கிறப்போ, எனக்கு ஒரு ஆறுதல்!! தினமும் நாலு வேளையும் மண்டைய முட்டிக்க வைக்கும். எங்கூட்டுக்காரரும் எதைப் “போட்டாலும்” சத்தமில்லாம சாப்பிடுறவரா இருக்கீறது இன்னும் பெரிய தலைவலி!! :-))))

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஹூசைனம்மா!
   சாம்பார் என்பதைத்தான் குழம்பு என்று சொல்லியிருக்கிறேன். பருப்பு போட்டு செய்தால் பருப்பு குழம்பு, பருப்பு வேகவைத்துப் போடாமல் தாளித்துப் போட்டு மெந்தியமும் சேர்த்து செய்தால் மெந்தியக் குழம்பு. என் அம்மா கொட்டு குழம்பு என்று ஒன்று செய்வார்கள். பருப்பு இல்லாமல், குழம்பு பொடியும் போடாமல் காய்கறிகள் போட்டு மிளகாய் தாளித்து. அதுவும் நன்றாக இருக்கும். குழம்பு விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.
   பொரியலைத் தான் கறியமுது என்று சொல்லியிருக்கிறேன். கூட்டு என்பது பீன்ஸ், கோஸ், கொத்தவரங்காய், புடலங்காய், பெங்களூர் கத்திரிக்காய் போன்ற காய்களுடன் பயத்தம்பருப்பு சேர்த்து செய்வது. உ.பருப்பு, க. பருப்பு தனியா, காய்ந்த மிளகாய் வறுத்து இவற்றுடன் தேங்காய் சேர்த்து அரைத்து விட்டு செய்யலாம். இந்த சாமான்களையே நிறைய வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டும் பயன்படுத்தலாம். இரவு முக்கால்வாசி இதுதான் செய்வோம். காலையில் செய்த குழம்பு, ரசம் இவை இருக்கும்.

   பொடிமாஸ்: வாழைக்காய், சேனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு இவற்றை வேக வைத்து உதிர்த்து மேலே சொன்ன கூட்டுப்பொடியை போட்டு செய்வது.

   சித்ரான்னம் என்பது கலந்த சாதவகைகள். புளியோதரை, தேங்காய் சாதம், எலுமிச்சம் சாதம், எள்ளோரை என்று அந்தக் காலத்தில் செய்வோம். இப்போது இவற்றையே கொஞ்சம் மாற்றி புதினா ரைஸ், கொத்தமல்லி ரைஸ், தக்காளி ரைஸ் என்று பட்டாணி சேர்த்து செய்கிறோம்.

   வீட்டில் இருக்கும் நபர்களில் ஒருவருக்கு இது பிடிக்கும், ஒருவருக்கு அது பிடிக்கும் என்றால் என்ன செய்வது?

   வருகைக்கும், என்னை இத்தனை நீண்ட கருத்துரை போட வைத்ததற்கும் நன்றி!

   Delete
  2. மிகவும் நன்றி ரஞ்சனி மேடம், விளக்கமான பதிலுக்கு. பலரின் பதிவுகளில் இந்த வார்த்தைகள் பார்த்திருக்கேன். இப்படித்தான் இருக்கும்னு கெஸ் பண்ணாலும், உறுதியாத் தெரிஞ்சிக்கலாம்னுதான் உங்ககிட்ட கேட்டேன்.

   எல்லாமே நானும் செய்றதுதான். சாம்பார்ல புளி போடுவோம், குழம்புல புளி கிடையாது, தேங்காய் அரைச்சு சேர்ப்போம் - கெட்டித்தன்மைக்காக. இதான் (பெரிய) வித்தியாசம். :-)))))

   Delete
 24. இன்றைய அறிமுகம் சிறப்பு. அவரது சில பதிவுகள் படித்திருக்கிறேன் - பின்னூட்டம் இட்டதில்லை.

  எத்தனை தளங்களில் எழுதுகிறார் - மலைப்பு.....

  ReplyDelete
 25. வாங்க வெங்கட்!
  உண்மையில் அவர் எப்படி நேரத்தை பங்கீடு செய்கிறார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
  வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 26. அடேயப்பா.. சுபாஷினி ட்ரெம்மில் அவர்களுடைய சாதனை மிகவும் பாராட்டுக்குரியது. மண்ணின் குரல் மட்டும்தான் அறிந்திருக்கிறேன். மற்ற தளங்களின் அறிமுகத்துக்கு மிகவும் நன்றி ரஞ்சனிம்மா.இப்போதுதான் ஒவ்வொரு பதிவாகப் பார்த்து வருகிறேன். உங்கள் எழுத்துநடை மிகவும் அழகாக வீட்டாருடன் பேசுவது போன்றே உள்ளது. பாராட்டுகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கீத மஞ்சரி!
   வருகைக்கும், பாராட்டுக்களுக்கும் நன்றி!

   Delete
 27. பிரமிக்க வைக்கின்றார். இன்றைய அறிமுகத்திற்கு மிக்க நன்றி!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது