செல்விருந்தோம்பி நல்விருந்து காத்திருத்தல்
➦➠ by:
* அறிமுகம்,
இவருக்கு வரவேற்பு,
சீனா,
மஞ்சு பாஷிணி
அன்பின் சக பதிவர்களே
09.11.2014 ல் முடியும் வாரத்திற்குஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் இட்ட அருமை நண்பர் சதங்கா தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 053
அறிமுக படுத்திய பதிவுகள் : 054
பெற்ற மறுமொழிகள் : 069
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 9
10.11.2014 முதல் துவங்கும் வாரத்தில் இருந்து ) இரு வார காலத்திற்கு ( 23.11.2014 ) ஆசிரியப் பொறுப்பினை ஏற்று அன்புடனும் ஆர்வத்துடனும் வெங்கட் நாகராஜ் அறிமுகப் பதிவுகளை வெளியிட்டு தான் ஏற்ற பொறுப்பினை சரி வர முழு மனதுடன் நிறைவேற்றி இன்று மாலையில் நம்மிடமிருந்து விடை பெறுகிறார்.
இவர் இட்ட பதிவுகள் : 014
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 72
அறிமுக படுத்திய பதிவுகள் : 137
பெற்ற மறுமொழிகள் : 541
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 72
அறிமுக படுத்திய பதிவுகள் : 137
பெற்ற மறுமொழிகள் : 541
பெற்ற தமிழ் மண வாக்குகள் : 74
இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பதிவுலகில் காலடி எடுத்து வைத்தார். ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாம் வருடமாக பதிவு எழுதுவது தொடர்கிறது. பிறந்தது நெய்வேலியில். தற்போது வசிப்பது இந்தியத் தலைநகரில். பயணம் செய்வது, புத்தகங்கள் வாசிப்பது, புகைப்படங்கள் எடுப்பது ஆகியவற்றில் அதிக ஈடுபாடு உடையவர். இருபத்தி மூன்று வருடங்களுக்கு மேலாக தலைநகர் வாசம். மனைவியும் மகளும் இரு வலைப்பூக்கள் வைத்துக் கொண்டு தனித் தனியாகப் பதிவுகளை எழுதி வருகிறார்கள்.
நாளைய வலைச்சர ஆசிரியப் பொறுப்பினை ( 24.11.2014 ) ஏற்கும் மஞ்சு பாஷினி சம்பத் குமாரினை வருக வருக - ஆசிரியப் பொறுப்பேற்று ஒரு வார காலத்திற்கு ( 30.11.2014 ) சிறந்த பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளை அறிமுகம் செய்யும் பதிவுகளைத் தருக எனக் கூறி வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இவர் பெயர் மஞ்சுபாஷிணி… இவரது கணவர் சம்பத்குமார், இவரது குழந்தைகள் விக்னேஷ்ராம், இபானேஷ்ராஜ், அம்மா, தம்பி தீபக்ராஜேஷ் (குடும்பம்) எல்லோருடனும் குவைத்தில் வசிக்கிறார். கதை, கவிதை, பாடல் எல்லாமே இஷ்டம் இவருக்கு.
மனிதராய் பிறக்கும் ஒவ்வொருவருக்கும் ரசனை கண்டிப்பாக இருக்கும். ரசனை இல்லாத வாழ்க்கையை நினைத்துப்பார்க்கவே முடியாது. இல்லை என்றால் பிறந்து இத்தனை வருடங்கள் ஒவ்வொரு நொடியும் ஒரு அட்வென்ச்சர் போல் அடுத்து என்ன நடக்கும் என்று அறியாமல் இவரது குடும்பத்தினர் நாட்களை நகர்த்திக்கொண்டு இருப்பார்களா ???
இவரது தளத்தில் இவர் இவரது படைப்புகள் பதிவதை விட பிறரின் படைப்புகள் வாசித்து இவர் எப்படி உணர்கிறார் ? அவர்கள் வரிகளை படித்து என்பதை இவரது கருத்தாய் சமர்ப்பிப்பதில் இவருக்கு கூடுதல் விருப்பம்.
நல்வாழ்த்துகள் சதங்கா