07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, December 17, 2013

மார்கழிப் பனியில் - செவ்வாய்

அன்பு மலர்.


அனைவருக்கும்  வணக்கம். 

நேற்று முதல் பதிவில்  - வருகை தந்து கருத்துரையை பதிவு செய்து  பாராட்டி மகிழ்ந்த - மகிழ்வித்த,   நண்பர்கள் அனைவருக்கும்  மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வலைச்சரத்தில் இரண்டாம் நாளாகிய இன்று -  முதலில் ஆலய தரிசனம் செய்வோம். 

வருக - நண்பர்களே!..

1998 முதல் கணினி என்னும் இந்தப் பலகணி வழியே உலகைக் கண்டாலும் 2005 -ல் தஞ்சை கரந்தையில் - ஸ்ரீவிஷ்ணு கம்ப்யூட்டர்ஸ்  ( DTP. Works) - என,  நான் அமர்ந்த பிறகு தான் முழுதும் கை வசமாகியது.

அந்த நாட்களில், கரந்தை தமிழவேள் உமாமகேசுவரனார் கலைக் கல்லூரி மாணவர்களுக்காக - இணையத்தில் ஏதோ ஒரு தகவலைத் தேடிய நான் - எதிர்பாராமல் நுழைந்தது - வகுப்பறை.   

இது தான் நான்  கண்ட முதல் வலைத் தளம். அங்கே -

திரு.சுப்பையா வீரப்பன் அவர்கள். ஜோதிட பாடங்களை அழகுத் தமிழில் வழங்கிக் கொண்டிருந்தாலும் கவியரசர் கண்ணதாசனின் பரம ரசிகரான அவர் ஆங்காங்கே கவியரசரின் அழகு கவிதைகளைப் பதிவிட்டிருந்தார்.

கவியரசரின் ரசிகனான நானும் அதில் மயங்கியதில் வியப்பில்லை!..
மாமதுரை அழகு மீனாட்சியையும்  - இந்த இளங்காலைப் பொழுதில் தரிசித்து மகிழுங்கள்.

அதன்பின் - என் தேடலில் நான் கண்டது - மாதவிப் பந்தல்.

அங்கே - கண்ணபிரான் ரவிசங்கர் (KRS) அவர்கள்  பகிர்ந்து கொண்டிருந்தது

மனதிற்கு இனிய தோழி - சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாளின் திருப்பாவை!..

பற்பல விஷயங்களைத் தொகுத்து தான் சொல்ல வரும் கருத்துக்கு - பற்பல துணைத் தகவல்களை நுணுக்கமாகத் தொகுத்து வழங்குவதில் வல்லவர். அவருடைய பதிவுகளில் - 

பேயாய்த் திரிந்த - காரைக்கால் அம்மையார் பற்றிய பதிவு கண்களில் நீரை வரவழைக்கும்.

அதன்பின் எனக்குக் கிடைத்தது  - அன்பின் சகோதரி  சுமஜ்லா  அவர்களின், 

என் எழுத்து இகழேல்.

நிறைந்த களஞ்சியமாக விளங்குகின்றது இவரது தளம். அவருடைய கைவண்ணத்தில் - அவருடைய சமீபத்திய பதிவு ஒன்று உங்களுக்காக..

கர்ப்பத்தில் தங்கியிருக்கும் தன் மகவைப் பற்றிய - தாயின் கனவுகளுக்கு -

காலம் காட்டும் விடை!..
 
அப்போதெல்லாம் பற்பல  தளங்களில் - பதிவுகளைப் படித்தாலும் கருத்துரை வழங்க விரும்பும் போது  -  அது எதையெல்லாமோ கேட்கும்.  

பயந்து கொண்டு வந்த வழியே சத்தமில்லாமல் - திரும்பி விடுவேன்

அதை இப்போது நினைத்தாலும் வருத்தமாக இருக்கின்றது. 

அதன்பின் சூழ்நிலை மாறுதலால் - குவைத் வந்தபிறகு இரண்டாண்டுகள் எனக்கும் இணையத்திற்கும் இடைவெளியானது. 

அப்போது தான் - உடன் பணி புரிந்து கொண்டிருக்கும் குடந்தை ஸ்ரீதர் - எனக்குத் தெரிந்தது உங்களுக்கும் - என - Photo Shop - நுணுக்கங்களைப் பதிவிட சித்திரம் பேசுதடி என ஒரு தளத்தினைத் தொடங்கினார். 

அழகாக அருமையாக  இயங்கிக் கொண்டிருந்த தளம் ஏதோ காரணத்தால் சிதைந்து போனது.

மனம் வருந்திய ஸ்ரீதர், அதன் பின் - எதையும் பதிவிடவில்லை.

இவரே என்னை வலைத் தளம் தொடங்கும்படி உற்சாகப்படுத்தியவர்.

இங்கே - இதன் மூலம் ஸ்ரீதர் அவர்களை மீண்டும் பதிவிட வருமாறு அழைக்கின்றேன்.

ஆயிற்று. நானும் ஒரு தளத்திற்கு உரியவனாகிய பிறகு, ஓடும் எழுத்துக்கள் உருளும் எழுத்துக்கள் - அதென்ன மினுக்கிக் கொண்டு எழுத்துக்கள்!..  - ஆச்சரியம். ஆனால் ஒன்றும் புரியவில்லை. இதைப் பற்றி யாரிடம் கேட்பது?..

அப்போது , நான் இருக்கின்றேன்.. வாங்க!.. என்று கைகொடுத்தவர் - மேலத்தாணியம் ஆசாத். 

நிறைந்த தொழில் நுட்ப பதிவுகள்    - இவருடையது. 

ஆண்ட்ராய்டு மொபைல் காணாமல் போய்விட்டால் - கவலைப்படாமல் (?) அடுத்து ஆக வேண்டியதைப் பற்றிக் கூறுகின்றார்.

எதற்கும் களவு போகாமல் பார்த்துக் கொள்வோமாக!..

வலைத் தளத்துக்குள் வந்த பிறகு பல - தகவல்களைப் பதிவிட்ட பின்னர்  -  முதல் வருகையாளர் - அமெரிக்கக் கொடியுடன் வந்தார். நண்பர்களாக வந்து செல்கின்றார்கள் என்று அறிந்த போதும் - அவர்களது உள்ளக் கிடக்கையை அறிந்து கொள்ள முடியவில்லை.

திடீரென ஒரு வெளிச்சம்.  திண்டுக்கல் கலங்கரை விளக்கத்தில் இருந்து!..

தேனீக்கள் வட்டமிடா பூவிதழும் உண்டு
திண்டுக்கல் வந்தறியா வலைப்பூவும் உண்டோ?..
தண்மேகம் தழைத்துவர மண்முழுதும் மலரும்..
தனபாலன் கருத்துரைக்க வலைத்தமிழும் வளரும்!..

தீதும் நன்றும் பிறர் தர வாரா.. வலிகளை ஏற்றுக் கொள்.. எதுவும் கடந்து போகும்.. என்று சங்க நாதமிடும் அவர் திருக்குறளுடன் திரைப்பாடல்களை இணைத்துத் தரும் - தன்னம்பிக்கைத் தொடர்கள் உன்னதமானவை.  

புன்னகையுடன் போய்க் கொண்டிரு..
வாழும் காலத்திலேயே சொர்க்கம் -  என்கின்றார். 

அதன்பின் தொடர்ந்த தேடல்களில் -
பளீரென்ற ஒரு புன்னகைப் பூ!.. ஆச்சர்யம் .. ஆனந்தம்!..

நம்ம கரந்தை ஜெயக்குமார் சார் அல்லவா!.. வான்மழை கண்ட பயிர் என ஆனேன். உண்மையில் கண்களில் நீர் வந்தது அப்போது!..

பரிவு - பாசம் இவற்றின் இருப்பிடமான அவர் , கணித மேதை இராமானுஜம் அவர்களைப் பற்றிய அரிய தகவல்களைத் திரட்டும் போது நானும் உடன் இருந்தேன் என்பது எனக்குப் பெருமை!..

தமிழ் மொழிக்கென தனிப் பல்கலைக் கழகம் வேண்டும் - என 1921-ல் குரல் எழுப்பிய,  கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் அற்புத வரலாற்றை - வலையில் பகிர்ந்தவர். அவருடைய பதிவுகள் சிறப்பானவை.  அவற்றுள் - உங்களுக்காக,

யானையை விழுங்கும் பாம்பு ,
மண வாழ்க்கையினைத் துவக்கும் இருவர்.

கரந்தை ஜெயக்குமார் அவர்களுடைய தளத்தில் தான் கண்டேன் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய பேராசிரியர் ஹரணி அவர்களை!..

தஞ்சை கரந்தையைச் சேர்ந்த இவரும்  எனது பயணத்தில்  - அன்பால் இணைந்தவர்.

பன்முகத் திறமையாளராகிய, அன்பின் ஹரணி அவர்கள் -  வித்தியாசமான கோணங்களில் சிந்தனை உடையவர். குறுங்கவிதை, சிறுகதைகள், கட்டுரைகள் -  என நிறைந்து இருக்கின்றது - அவருடைய வலைத்தளம். அவருடைய படைப்புகளில் சில..

மழையைத் தடுத்த போதிலும்
மனதைத் தடுக்க முடியவில்லை!..

மனதை வருத்தும் இன்றைய சூழலில், தான் விரும்புவதையும் விரும்பாததையும் முன் வைத்து இயற்றிய - புதிய ஆத்திச்சூடி.

ஆலய வரலாறு, கட்டுரைகள், கலை மற்றும் இலக்கியம்  பற்றிய தகவல்கள்  - என தஞ்சாவூரான் எனும் புனை பெயரில் பதிவிடும் -

ஐயா வெ. கோபாலன் அவர்களின் தளம் பாரதி பயிலகம். அதிலிருந்து -

மகாகவி பாரதியார் எழுதிய பெண் விடுதலை எனும் கட்டுரை.

சிறந்த தேசபக்தரும் சுதந்திரப் போராட்டவீரரும், குமரியும் திருத்தணியும் தமிழகத்துடன் சேரவேண்டும் எனப் போராடி வெற்றி பெற்றவருமான  -

சிலம்புச்செல்வர் - கர்மவீரர்

ஐயா சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களைப் பற்றிய கட்டுரை.

கல்வி கரையில.. கற்பவர் நாள் சில - என்று ஒரு சொல்வழக்கு உண்டு.

அன்பு நண்பர்களே!.. மேலும் தளங்களுடன் - 
நாளை சந்திக்கும் வரை நமது சிந்தனைக்கு,

நன்றி - நூல்முகம். (Facebook)
இன்று இந்த அளவுடன் உங்களிடம் விடை பெற்றுக் கொள்கின்றேன்.  வணக்கம்.

34 comments:

  1. அன்பின் துரை செல்வராஜூ

    அருமையான அறிமுகங்கள் - பல புதிய (எனக்கு ) அறிமுகங்கள் - பதிவு அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..

      Delete
  2. அழகான அறிமுகங்கள். அனைவருக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். தங்களுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் வாழ்த்துரைக்கும் மிக்க நன்றி!..

      Delete
  3. நிறைந்த களஞ்சியமாக விளங்குகின்ற சிறப்பான அறிமுகங்கள்.. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தி பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  4. வாழ்த்துக்கள்.
    அறிமுகங்கள். நன்று. மாதவி பந்தல் சுவாரசியமான தளம்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி!..

      Delete
  5. முதலில் நன்றிகள் பல...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. அன்பின் தனபாலன்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      Delete
  6. அன்பு நண்பருக்கு,

    என் வலைத் தளத்தைப் (வகுப்பறை) பற்றிக் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி

    அன்புடன்
    வாத்தியார்

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  7. அருமையான பதிவர் அறிமுகங்கள்! அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
    நேரம் கிடைக்கும்போது அவர்களிடமும் செல்கிறேன் ஐயா! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோதரி..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தி பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து அனைவரையும் வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  9. வணக்கம்
    ஐயா.

    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து பதிவிட்ட விதம் நன்று... பாராட்டுக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ரூபன்..
      தாங்கள் வருகை தந்து வாழ்த்தி பாராட்டியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  10. வணக்கம்
    த.ம 3வது வாக்கு.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பின் ரூபன்..
      தாங்கள் வருகை தந்து வாக்களித்தமைக்கு மிக்க நன்றி!..

      Delete
  11. மாதவிப் பந்தலின் ரசிகை நான். வகுப்பறைக்கும் போய்விட்டு வருவேன்.
    DD, கரந்தையார் எனது படிக்கும் லிஸ்டில் எப்போதும் இருப்பவர்க்கள். மற்ற புதியவர்களைப் படிக்கிறேன்.
    அறிமுகங்களுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா!..
      தங்களின் வருகைக்கும் இனிய கருத்துரைக்கும் மிக்க நன்றி!..

      Delete
  12. எல்லா பதிவர்களுமே எனக்குப் புதியவர்கள்தான். நேரம் கிடைக்கும்போது சென்று வருகிறேன். அருமையாக அறிமுகம் செய்துவைத்துள்ளீர்கள். பாராட்டுகளும், வாழ்த்துகளும் !!

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து பாராட்டியதுடன்
      அனைவரையும் வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  13. உண்மையிலேயே என் கணணும் கலங்கித்தான் போனது. தங்களை வலைப் பூவில் பார்த்த போது. பல ஆண்டுகள் கழித்து தங்களை வலைப் பூவின் வழியாக சந்திக்க நேர்ந்தது மிக்க மகிழ்வினைத் தந்தது. வலைப் பூவிற்குத்தான் நன்றி செர்ல்ல வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      மிகவும் நெகிழ்ச்சியான தருணம்.
      தங்களுடைய வருகையும் கருத்துரையும் கண்டு மிக்க மகிழ்ச்சி.

      Delete
  14. அறிமுக ஊர்வலம் மிகவும் அமோகமாக நிகழ்த்தப் படுகின்றது .
    தங்களின் கடுமையான உழைப்பு இப் பகிர்வினைப் பார்க்கும் போது
    புரிகிறது !! வாழ்த்துக்கள் ஐயா .இங்கே அறிமுகமான அனைவருக்கும்
    என் இனிய வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்ததுடன் - அனைவரையும்
      வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  15. அருமையான தளங்களை குறிபிட்டமைக்கு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து
      வாழ்த்தியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  16. சிறப்பான அறிமுகங்கள்.......

    சிலர் தளங்கள் தொடர்ந்து படிப்பவை. சிலர் எனக்குப் புதியவர்கள். மிக்க நன்றி துரை செல்வராஜூ

    ReplyDelete
    Replies
    1. அன்புடையீர்..
      தாங்கள் வருகை தந்து கருத்துரை
      வழங்கியமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete
  17. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அன்பின் குமார்..
      தாங்கள் வருகை தந்து
      வாழ்த்துரைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி!..

      Delete

தமிழ் மணத்தில் - தற்பொழுது