07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, December 12, 2013

வலைச்சரத்தில் நான்காம் நாள் _ வியாழன் மலர்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம். வந்துட்டேங்க, இன்றைக்கு அறிமுகமாகின்ற‌ பதிவர்களுடனும், அவர்களின் பதிவுகளுடனும்....படித்துவிட்டு கருத்தைப் பகிர்ந்துகொள்வோமே !!
                                         ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

1) திருமதி மகி அவர்களின் வலைப்பூ வெல்கம் டூ மகிஸ் ஸ்பேஸ். இவர் எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவரே. கோவையில் பிறந்துவளர்ந்து தற்பொழுது USA ல் தன் கணவர், பெரியண்ணா,  புதுவரவான தன் குட்டிப் பாப்பாவுடனும் வசிக்கிறார்.

இவரது வலைப்பூவில் சமையல் மட்டுமின்றி இவரது அனுபவங்கள், நினைவுகள், இயற்கை காட்சிகள் என எல்லாமும் இருக்கும். பன்முகத் திறமையாளர். இவரது உலகத்தில் நுழைந்தாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது. மற்றவரையும் கலகலப்பாக்கிவிடுவார். இந்தத் தன்மை எல்லோருக்கும் எளிதில் வந்துவிடாது.

இப்போல்லாம் பூமி ஒழுங்காதான் சுத்துதா ? அதுல பயிர்பச்சை எதுவும்  விளையுதா? ஜனங்க நடமாடிட்டுதான் இருக்காங்களா? இதுல எதைப் பற்றியுமே கவலைப்படாமல் இவங்க ஒரு உலகத்துல சுத்திட்டிருக்காங்கலாம் ! இரவுபகல் தெரியாத(ம்ம், நல்ல்ல்லா வேணும்) அந்த உலகம் என்ன‌, எதுன்னு, வாங்க நாமும் போய் பார்த்துட்டு வந்திடலாம் ! 

எந்தப்பதிவு வெளி வந்தாலும் கூடவே (சமைத்த)காய்கறிகளுடன் கூடிய ஒரு சாப்பாட்டுத் தட்டும் வந்து தவறாமல்  நம் கண்ணைப்பறிக்கும்.

இவர் தன் வீட்டில் தொட்டிச்செடிகள் வளர்த்து, அதிலிருந்து அறுவடை செய்து   சமையலே செய்து  அசத்தியிருக்கிறார் பாருங்கள் .

ஓரிகாமி காகிதங்களை வைத்து 3D ஓரிகாமி உருவங்களை எப்படி செய்வது என சொன்னதோடு நின்றுவிடாமல் பூக்கூடை, பூ ஜாடி போன்றவற்றையும் இங்கே செய்துகாட்டுகிறார்.

கோவைக்கு அருகேயுள்ள அனுவாவி சுப்பிரமணியர் திருக்கோயில் த‌ரிசனத்தின் முதல் பகுதியை இங்கேயும்,  இரண்டாம் பகுதியை இங்கேயும்  காணலாம்.

ஒருமுறை அவள்விகடனில் இவரது கட்டுரை கண்களில் விரியும் கவிதைப்பூக்கள் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. இவரைப்போய் எப்படி நான் அறிமுகம் செய்து வைப்பது?  நீங்களே சொல்லுங்கள் !!!

கடைசியா, அவங்க வீட்டில் நமக்காக சுட்டு வைத்திருக்கும் முறுக்கில் ஆளுக்கொன்றாக எடுத்து கடித்துக்கொண்டே போவோமே !!
                        ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

 2) இது இமாவின் உலகம்  வலையின் ஆசிரியர் திருமதி.இமாக்றிஸ்.  உண்மையிலேயே இவர் ஒரு ஆசிரியையும்கூட.

இவரது பதிவுகள் கொஞ்சம் வித்தியாசமானவைகளாக இருக்கும். படித்தோமா, பின்னூட்டம் கொடுத்தோமா என அத்துடன் முடிவதாக இருக்காது. கொஞ்சம் சிந்திக்கத்தூண்டும். சில சமயங்களில் என்னதான் மூளையைப் போட்டுக் கசக்கினாலும்.....ம்ஹூம்.

இவரது பதிவில் உள்ள அழகான ஈழத்தமிழில் இருக்கும் சில வார்த்தைகளை பலமுறை, பலமாக‌ யோசித்து மீண்டும்மீண்டும் படித்துப்பார்ப்பேன். எத்தனை தடவை படித்தாலும் சுவையாகவே இருக்கும்.

இங்கு இல்லாத விஷயங்களே இல்லை எனலாம். குப்பைக்கு போகவேண்டியவைகளை எல்லாம் என்னமாய் சிந்தித்து இங்கே  மீள்சுழற்சி செய்திருக்கிறார் பாருங்கள்.

செல்லப்பிராணி வளர்ப்பவர்களுக்கு அவை செய்யும் குறும்புகளை ரொம்பவே பிடிக்கும்.  அப்படி எடுக்கப்பட்டவைதான் இங்குள்ள படங்கள்.

ரோஜா பூத்து முடித்த பிறகு அதில் நிறைய காய்கள் வருவ‌தைப் பார்த்திருக்கிறேன். அதற்குமேல் அதைப் பற்றித் தெரியாது. அதன் பயன்களை இங்கே சென்று படித்துப் பாருங்களேன்.

இதுமாதிரி ஏராளமானவை கொட்டிக்கிடக்கின்றன. நேரம் கிடைக்கும்போது சென்று பார்வையிட்டால் உங்களுக்கு நேரம் போவதே தெரியாது.
                         ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

3) பென்சில் நதி  என்ற  இந்த வலைப்பூவின் ஆசிரியர் திரு இராஜா சந்திரசேகர். அவருடைய எண்ணற்ற‌ புதுக்கவிதைகளை இந்த வலைப்பூவில் பதிவாக்கியிருக்கிறார்.

இங்கே உள்ளதுபோல் சிறுசிறு கவிதைகளாக இருந்தால் என்னைப் போன்ற ஆட்களுக்கு ஒரு வரப்பிரசாதம். எந்தக் கவிதையைத் தேர்ந்தெடுப்பது ! இந்தக் கவிதைதான் என்றில்லை, ஒவ்வொன்றும் படிக்க படிக்க இனிமை சேர்க்கிறது.

'பூ' பற்றி இங்கே என்ன சொல்கிறார் பாருங்கள்:


உன் புன்னகையிலிருந்து
விழுகிறது பூ
கவிதைச் சூடிக்கொள்ள

 'அப்பா சட்டை'  பற்றி:

அப்பா சட்டையைப்
போட்டு வந்து
காட்டுகிறது குழந்தை
தன்னை இளமையாகப்
பார்க்கிறார் அப்பா

 எப்படியும் ....என்ற தலைப்பிலுள்ள நம்பிக்கைக்கவிதை இங்கே.

எப்படியும் விடிந்துவிடும்
என்ற நம்பிக்கையில்
விழித்திருக்கிறேன்

இவரது கவிதைத் தொகுப்புகள் பல விருதுகளைப் பெற்றுள்ளன என்பது மகிழ்ச்சியைத் தரக்கூடியது.

                         ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

4)  இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரை எனும் கடற்கரை நகரத்தைச் சேர்ந்தவரான musabbihu என்பவர் இந்த வலைப்பதிவை எழுதியிருக்கிறார்.

மொத்தமாக மூன்று வலைப்பதிவுகளை எழுதியிருக்கிறார். ஒன்றில் மீன், இன்னொன்றில் சிக்கன், அடுத்தது மட்டன் என எல்லாமே அசைவப் பிரியர்களுக்கானது.

மீனில்  மீன் பிரியாணி , மீன் சூப்  , மீன் புட்டு   என நிறைய குறிப்புகள் உள்ளன.
மீன் செய்முறையில் ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் ஏராளமான குறிப்புகள் உள்ளன. 

அதென்ன ரோகினி சிக்கன்? இங்கே சென்றுதான் பாருங்களேன்.

மட்டன் சமோசா போன்ற வித்தியாசமான குறிப்புகள் எல்லாம் உள்ளன. 

நான்வெஜ் சமையல் குறிப்பு வேண்டுவோர் இங்கே சென்று பயனடையலாம்.
                             ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

5) சிவா என்பவரால் நிர்வகிக்கப்படும் 'தோட்டம்' என்னும் வலைப்பதிவில் தோட்டம் போடுவதற்கான எல்லா குறிப்புகளும் உள்ளன.


விதை விதைத்து, முளைத்து, பாதுகாப்பாக வளர்த்து, பூத்து, காய்த்து, காயாகவோ அல்லது கனியாகவோ அறுவடை செய்யும்வரை ஒன்று விடாமல் படங்களுடன் பகிர்ந்துகொள்வது பார்ப்பவர்களுக்கு 'ஏன் நாமும் ஒரு தோட்டம் போடக்கூடாது' எனும் எண்ணத்தைத் தூண்டும் என்பது நிச்சயம்.

செடிகொடிகளை படம் எடுத்துப் போடும்போது எவ்வளவு நேரம் அவற்றைப் பார்த்தாலும் நேரம் போவதே தெரியாது.

தோட்டம் போடுவதற்கு நிகராக அவரது புகைப்படம் எடுக்கும் ஆர்வமும் தெரிகிறது.

வெங்காயம் விற்கும் விலையில் 'இதை நாமே தோட்டத்தில் பயிரிட்டால் என்ன' என்று நினைக்கத் தோன்றுகிறதுதானே !

ரோஜா முதல்  காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் வரை இங்கு பயிர்செய்து அறுவடை செய்யப்பட்டுள்ளன.

தோட்டத்தை நன்றாகச் சுற்றிப் பார்த்துவிட்டு களைப்பு தீர இங்கேயுள்ள தர்பூசணி ஜூஸை ஆளுக்கொரு க்ளாஸாக எடுத்துக்கொள்வோம்.
                     ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;
நாளை மீண்டும் வேறுசில பதிவர்களுடன் வருகிறேன், நன்றி !
                   ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

'வலைச்சரம் எனக்கு எப்படி அறிமுகமானது' ......... (தொடர்ச்சி)

ஒருமுறை தோழி ரஞ்ஜனி அவர்கள் 'உங்களுக்குத்தான் தெரியுமே வலைச்சரத்தைப் பற்றி...' என்று கூறியிருந்தார். உண்மையில் எனக்கு அதைப்பற்றி ஒன்றுமே தெரியாது. எல்லாம் ஒரு சோம்பல்தான். நாம் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறோம். அதனால் (வலைச்சர)நாட்ல என்ன நடக்குதுன்னு தெரிந்துகொள்ளும் ஆவல் இல்லை. இவர்வேறு 'உங்களுக்குத்தான் தெரியுமே' என்று சொல்லிவிட்டதால்..... இவரையேக் கேட்டிருக்கலாம்தான். ஆனாலும் தெரியாதென்று காட்டிக் கொள்ளவில்லை.

அதன்பிறகு 'அப்படி என்னதான் நடக்குது அங்கே' என நேரத்தை செலவழித்து, பொறுமையாக படித்துப் பார்த்தேன். இருந்தாலும் சில சந்தேகங்க‌ள் தொடர்ந்தன. ஆகட்டும், ரஞ்ஜனி அவர்கள் பொறுப்பேற்கும்போது என்ன செய்கிறார்,  என பார்க்கும் ஆவலில் காத்திருந்தேன்! அந்த ஒரு வாரத்தில் வலைச்சரத்திற்கு தினமும் விடாமல் வந்து பார்வையிட்டுத் தெரிந்துகொண்டேன் ஆசிரியரைப் பற்றியும், அதன் பணிகள் என்னவென்றும் !!
                ;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

44 comments:

 1. அன்பின் சித்ரா சுந்தர் - அறிமுகங்கள் அனைத்துமே எனக்குப் புதியதாக இருக்கின்றன - சென்று பார்க்கிறேன். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
  Replies
  1. சீனா ஐயா,

   வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி ஐயா.

   Delete
 2. வணக்கம்
  இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரூபன்,

   தொடர்ந்து வந்து ஆதரவு கொடுப்பதற்கு நன்றிங்க. வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க

   Delete
 3. Replies
  1. வாங்க காயத்ரிதேவி,

   வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

   Delete
 4. முன்னிருவர் நன்கறிந்தவர்கள்.
  பின்னிருவரை சென்று பார்க்கிறேன் சகோதரி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகேந்திரன்,

   பதிவுகளை பார்த்துவிட்டு வாருங்கள். தங்களின் வருகைக்கும் நன்றிங்க.

   Delete
 5. அறிமுகத்திற்கு மிக்க நன்றி சித்ராக்கா!
  //இரவுபகல் தெரியாத(ம்ம், நல்ல்ல்லா வேணும்) அந்த உலகம் என்ன‌, எதுன்னு, //ஹ்ம்..இப்படியும் ரசிக்கிறீங்களா? ரொம்ப டாங்க்ஸூ! ;)

  அறிமுகத்தை தகவலளித்த ரூபன் அவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த, தெரிவிக்கப்போகும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்!

  அறிமுகமான மற்ற பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி,

   இல்லையா பின்ன , "யாம் பெற்ற இன்பம் பெறுக மகியும்"

   எனக்கும் எல்லோருக்கும் போய் வாழ்த்து சொல்லி வரவழைக்க விருப்பம்தான். ஆனால்...ஆனால்......நேரம் டக்கு டக்குனு ஓடிப்போகுது ! வருகைக்கு நன்றிங்க.

   Delete
 6. அட...! இன்று கூட ஒரு தளம் (http://kilakaraifish.wordpress.com/) புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி,

   தினமும் இதே ஸ்லோகத்துடன் வர வாழ்த்துக்கள்.

   Delete
 7. அருமையான தளங்களின் கலகல்ப்பான அறிமுகங்களுக்குப் பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜேஸ்வரி,

   பாரட்டுகளுக்கும் நன்றிங்க.

   Delete
 8. மீண்டும் ஒரு கலக்கல்!.. எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் எட்டி இருந்து ஒரு வாழ்த்து சொல்லி விட்டு - ஒரே ஓட்டமா வந்து பென்சில் நதியில் தண்ணீர் குடித்து விட்டு - தோட்டத்தில் சற்று ஓய்வு!.. ரோகினி சிக்கனா!.. - சாமியே.. சரணம்!..

  ReplyDelete
 9. வாங்க துரை செல்வராஜூ,

  மாலை போட்டிருக்கீங்களா! இந்தக் குறுகிய நேரத்தில் எல்லா இடங்களையும் சுற்றிப் பார்த்துவிட்டு, சிறிது ஓய்வும் எடுத்துவிட்டு வந்து தகவலும் சொல்லிட்டீங்க. நன்றிங்க பாராட்டுக்கும்.

  ReplyDelete
 10. அருமையான அறிமுகங்கள்... ஓரிகாமி பற்றி மகி அவர்கள் எழுதியிருந்ததை இங்கு குறிப்பிட்டதற்கு நன்றிங்க... நான் ஒரு பூக்கூடை தயாரித்து பாதியில் தப்பாகி விட்டது....இனி முயற்சி செய்து பார்க்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆதிவெங்கட்,

   ஓரிகாமியில் உங்களுக்கும் விருப்பமா ! எனக்கும் உண்டு. ஆனால் இவ்வளவு பொறுமையாக..... ! நடக்காத காரியம். வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றிங்க.

   Delete
 11. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. தோட்டத்தை விட்டு இன்னமும் வெளிவரவில்லை என் நினைவுகள்....

  ReplyDelete
  Replies
  1. வாங்க எழில்,

   தோட்டத்தில் உங்களுக்கும் விருப்பமா ! நான் ஒன்றிரண்டு செடிகள்தான் வைத்திருப்பேன், அதையே மணிக்கணக்கில் நின்று பார்த்துக்கொண்டே இருப்பேன். வருகைக்கு நன்றிங்க.

   Delete
 12. மஹி ரொம்ப நன்றாகத் தெரியும். இமாவின் தளத்திற்கு போய் ரோஜாவைப் பார்த்து வந்தேன். மற்றவைகள் புதிது. அழகாக மலர் விரிகிறது. மகிழ்ச்சி அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாக்ஷிமா,

   வித்தியாசமான கருத்துடன் தினமும் வருகை தருவது மகிழ்ச்சிமா. அறிமுக இடங்களுக்கு சென்று வந்ததும் மகிழ்ச்சிமா. அன்புடன் சித்ரா .

   Delete
 13. யாவருக்கும் வாழ்த்துகள் அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாக்ஷிமா,

   வாழ்த்துகளுக்கும் நன்றிமா .

   Delete
 14. அழகாய் அறிமுகங்கள் செய்து வைஹ்திருக்கிரீர்கள். மகியைத்தவிர எல்லோருமே புதியவர்கள் . சென்று படிக்கிறேன்.
  அறிமுகமான எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜலக்ஷ்மி,

   உங்களுக்கு வேலை கொடுக்கத்தான் புதியவர்கள் வந்திருக்கிறார்கள். தூக்கம் வராத நேரத்தில் நன்றாக நேரம் போகுமே. பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றிங்க.

   Delete
 15. நல்ல அறிமுகங்கள்,அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க வவ்வால்,

   வருகைக்கும், பாராட்டுகளுக்கும் நன்றிங்க. பரிசு வந்து சேர்ந்திருக்கும்னு நினைக்கிறேன்.

   Delete
 16. புதிய சில தளங்கள் இனித்தான் பார்க்க வேண்டும் பகிர்வுக்கு நன்றிகள்!

  ReplyDelete
  Replies
  1. தனிமரம்,

   வாங்க, தங்களின் கருத்துப் பகிர்வுக்கும் நன்றிங்க.

   Delete
 17. காலையில் அவசரமாக வந்து யார்யார் இன்றைய வலைச்சரத்தை அலங்கரித்து இருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டுப் போனேன். மகி எனக்கும் தோழி. குட்டிப் பாப்பாவிற்கும் அவருக்கும் வாழ்த்துக்கள். உண்மையிலேயே பல்துறை வித்தகி அவர்.
  இமாவின் உலகம் மிகவும் விரிந்து பரந்து இருக்கிறது. வாழ்த்துக்கள் இமா!
  பென்சில்நதியின் கவிதைகள் குட்டி குட்டியாக ரசிக்கும்படி இருக்கிறது. அப்பாவின் சட்டை என்ன ஒரு கற்பனை என்று வியக்க வைக்கிறது. பல விருதுகள் பெற்ற திரு இராஜா சந்திரசேகருக்கு வாழ்த்துகள்.
  தோட்டம் பதிவுகளைப் படித்து ரசித்திருக்கிறேன்.
  கூடிய விரைவில் டியூஷன் பீஸ் அனுப்பவும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரஞ்ஜனி,

   எல்லோரையும் வாழ்த்தியதற்கு நன்றிங்க. சுய கற்றல்தானே நடந்தது. அதுக்குமா ட்யூஷன் ஃபீஸ் வாங்குவிங்க?

   Delete
 18. இமா அண்ட் மஹி .:).வாழ்த்துக்கள் மற்றும் மற்ற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க அஞ்சு,

   அறிமுகங்களுக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்ததற்கு நன்றிங்க.

   Delete
 19. இன்றும் வித்தியாசமான புதிய அறிமுகங்கள். நன்றி!!!!

  ReplyDelete
  Replies
  1. அ. முஹம்மது நிஜாமுத்தீன்,

   வாங்க. உங்கள் பாராட்டுகளுக்கும் நன்றிங்க.

   Delete
 20. This comment has been removed by the author.

  ReplyDelete
 21. என் வலைப்பூ அறிமுகத்திற்கும் நீண்ட விரிவுரைக்கும் நன்றி :-) - 'தோட்டம்' சிவா

  ReplyDelete
 22. அறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.....

  ReplyDelete
  Replies
  1. வாங்க வெங்கட்நாகராஜ்,

   வருகை புரிந்து வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டதற்கும் நன்றிங்க.

   Delete
 23. சூப்பர் அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஆஸியா ஓமர்,

   பாராட்டுகளுக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றிங்க.

   Delete
 24. நீண்ட விடுமுறையிலிருந்தேன். வீடு திரும்பிய பின்னரும் வலையுலகில் அதிக நேரம் செலவளிக்க இயலவில்லை. இப்போதுதான் பார்க்கிறேன். உங்கள் வாரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமை எனக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. மறந்து போன பல நிகழ்வுகளை இன்று உங்கள் உதவியால் இரைமீட்க முடிந்தது. என் அன்பு நன்றி.

  சித்ரா அவர்களால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். சமயம் கிடைக்கும் போது அனைவர் பக்கமும் வருகை தருவேன்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது