வலைச்சரத்தில் ஏழாம் நாள் _ ஞாயிறு மலர்
➦➠ by:
சித்ராசுந்தரமூர்த்தி
அனைவருக்கும் இனிய காலை வணக்கம், இன்றுடன் முடியும் ஒரு வாரத்திற்கான வலைச்சர ஆசிரியர் பொறுப்பை மனநிறைவுடன் முடித்து உங்களிடமிருந்து விடை பெற வந்துள்ளேன். ஹலோ, என்ன ! எல்லோரும் சோகமாயிட்டீங்க ! வாராவாரம் இப்படித்தான் ஒருவர் விடைபெறுவதும், வேறொருவர் பொறுப்பை ஏற்க வருவதுமாக இருக்கும். இதற்கெல்லாம் கவலைப்படலாமா !
எங்கோ ஒரு மூலையில் இருந்த என்னை சீனா ஐயா பொறுப்பை ஏற்க அழைத்தபோது நான் 'ஆடி'த்தான் போனேன். அதன்பிறகான 'ஆவணி, புரட்டாசி'யையெல்லாம் எப்படி சமாளித்தேன் என்பது வேறுவிஷயம். இதோ அதோ என பல மாதங்கள் ஓ(ட்)டியபிறகும், பொறுமையாக இருந்து எல்லா வசதிகளையும் செய்துகொடுத்ததற்கு ஐயாவுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
ஒரு சிறிய வட்டத்திற்குள்ளேயே பதிவுகளைப் படித்துவந்த நான் அதன் பிறகுதான் பல பதிவர்களையும் தேடிச்சென்று படிக்க ஆரம்பித்தேன். இந்த ஒரு வாரமும் வெற்றிகரமாக அமைய உறுதுணையாய் இருந்த காமாக்ஷிம்மா, சகோதரி திருமதி மகி, சகோதரி திருமதி.ரஞ்ஜனி அவர்கள், சகோதரி திருமதி.இராஜலக்ஷ்மி அவர்களுக்கும் என் நன்றியைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
அறிமுகப் பதிவர்களிடத்தில், அவர்கள் அறிமுகமான தகவலைக் கொண்டுசேர்த்த திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், திரு.ரூபன் அவர்களுக்கும் நன்றி பல.
மேலும் தங்கள் பொன்னான நேரத்தை செலவிட்டு, பின்னூட்டங்கள் வாயிலாக உற்சாகத்தைக் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி பல. இந்த வலைச்சரம் மூலமாக நிறைய பதிவுலக நண்பர்கள் கிடைத்துள்ளார்கள். இனிதான் அவர்களுடைய தளங்களுக்குச் செல்ல வேண்டும்.
இந்த நல்ல வாய்ப்பை நல்கிய சீனா ஐயாவுக்கு மீண்டும் என் நன்றியைத் தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன், நன்றி !
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
வழமைபோல் இன்றைய அறிமுகங்களைப் பார்த்துவிடுவோமே ! அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு தங்களது கருத்துகளையும் பகிர்ந்துகொள்ளுங்களேன்!

1) திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களின் வலைத்தளம் பக்தி மணம் கமழும் மணிராஜ். தினமும் ஒரு பதிவென வருடம் முழுவதும் வந்துகொண்டே இருக்கிறது. தினமும் ஒருமுறை இந்த வலைப்பதிவுக்கு வந்து, வெளியாகியுள்ள கடவுளை வணங்கி மனமகிழ்ச்சியுடன் அன்றைய நாளைத் துவங்கலாம். அன்றன்று வரும் விசேஷங்களின் தன்மைக்கேற்ப பதிவுகளாக வருவது இன்னும் சிறப்பு. இவர்களின் பணி மகத்தானது. வாழ்த்துகள்.
""""""""""""""""""""""""""
2) ஆலயம் கண்டேன் என்ற வலைப்பதிவை நிர்வகிப்பவர் திருமதி ப்ரியா பாஸ்கரன் அவர்கள். இவர் ஆங்கிலத்திலும், தமிழிலும் அவர் தரிசித்த ஆலயங்களைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறார். ஆங்கிலத்தில் நிறைய பதிவுகள் உள்ளன. தமிழில் சில பதிவுகளே எழுதியிருக்கிறார். ஆனாலும் அவையனைத்தும் முத்தானவை. என்னை நிறையவே கவர்ந்துவிட்டன. திருவண்ணாமலையைப் பற்றி எழுதியதும் அதற்கு ஒரு காரணம்.
கோயிலின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வந்திருக்கிறேன். தீபம் சமயத்தில் மாடவீதி சுற்றி வருவதும், மலையைச் சுற்றுவதும், (பாதி)மலை ஏறி வந்ததும் உண்டு.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையைப் பற்றிய அரிய தகவல்களை இங்கே நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். படித்துப் பார்த்து, நினைத்த மாத்திரத்திலேயே, முக்தி பெறுவோமே !!
""""''''''''''''''''''''''''''''''''''''''
3) திருமதி காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்களின் வலைப்பூ சிறுவர் உலகம் . இங்கு ஏராளமான நீதிக்கதைகள் உள்ளன. உதாரணத்திற்கு ஒன்றிரண்டு தலைப்புகளைப் பார்க்கலாம்.
புத்திக் கூர்மை என்ற நீதிக்கதையில் ஆடு தன் புத்திக்கூர்மையால் எப்படி சிங்கத்திடமிருந்து தப்பியது என்பதை அறியலாம்.
மரம் வளர்ப்பதன் அவசியத்தை மரத்தின் அவசியம் என்ற நீதிக்கதையின் மூலம் குழந்தைகளுக்குச் சொல்லலாம்.
வீட்டில் சிறுவர், சிறுமியர் இருந்தால் படிக்கச் சொல்லலாம், அல்லது நாம் படித்து அவர்களுக்குச் சொல்லலாம்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
4) இளையநிலா என்ற தளத்தின் ஆசிரியர் சகோதரி இளமதி அவர்கள். இவரது பதிவுகளில் இவரது கவிதையும், க்விலிங் வேலைப்பாடும் மிகப் பிரபலமானவை. அதனுடனேயே மேலும் ஒரு சிறு கவிதையும், பதிவோடு பகிரும் பதிவர் என்று, வலையுலகில் இருந்து, திறமையான பதிவர்களில் ஒருவரைத் தேர்வு செய்து அறிமுகமும் செய்து வைக்கிறார்.
இவரது பதிவுகள் முழுவதும் கவிதைகள் கொட்டிக் கிடக்கின்றன. பதிவுலகில் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் தோழி இளமதி, மேலும்மேலும் இனிமையான கவிதைகளைப் படைத்து உலகப் புகழடைய வாழ்த்துவோம்! !
'"""""""""""""""""""""""""""""""""""
5) திரு.ரூபன் அவர்களின் வலைத்தளம் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள். இவர் கவிதைப்போட்டி, கட்டுரைப்போட்டி என ஆரோக்கியமான முறையில் போட்டிகள் வைத்து, திறமையான நடுவர்களைக்கொண்டு, தேர்ந்தெடுத்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கிக்கொண்டிருக்கிறார்.
தற்போது தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் கட்டுரைப்போட்டியை அறிவித்திருக்கிறார். அவரது முயற்சியில் வெற்றிபெற வாழ்த்துவோம்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""
6) திருமதி லக்ஷ்மி பாலகிருக்ஷ்ணன் அம்மா அவர்களின் வலைப்பூ மலர்வனம். இங்கு இலக்கியம், கதைகள், கட்டுரைகள், சமையல் குறிப்புகள் என ஏராளமாக உள்ளன.
கணவன்,மனைவி இரண்டு பேருமே வேலைக்குப் போனாலும், சுமை என்னவோ மனைவிக்குதான் என்பதை புரிதல் என்ற தலைப்பிலுள்ள இந்தக்கதை கூறுகிறது.
இவர் செய்த திணை அடை/தோசையை வீட்டிலுள்ளவர்கள் வாயைத் திறக்காமலேயே சாப்பிட வைக்க இவர் செய்யும் தந்திரம்தான் என்ன ! அது என்ன என்பதை நாமும் தெரிந்துகொண்டு நம் வீட்டிலும் அதை செயல்படுத்திப் பார்ப்போமே !
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
7) ஆசிரியர் மோகன்குமார் அவர்களின் வலைப்பதிவு வீடுதிரும்பல். அனுபவங்கள், பயணக்கட்டுரைகள், சிறுகதைகள், சினிமா விமர்சனங்கள் போன்ற எண்ணற்றவை பொதிந்துள்ளன இவரது பதிவுகளில்.
இணையமே கதியாகக் கிடப்பவர்களுக்கானது இணையப் பித்து என்ற இந்தப்பதிவு. சிந்திக்க வேண்டிய விஷயம்தான்.
ஆட்டோவில் போவதென்றாலே ஒரு சுகம்தான். சமயங்களில் முகம் சுளிக்கும்படியான நிகழ்வுகளும் நடப்பதுண்டு. ஆனால் சென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா அவர்களுடைய சேவை மனப்பான்மையைக் காண இங்கே போய்த்தான் வாருங்களேன்.
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
8) எழுத்தாளரின் பெயரிலேயே உள்ளது ஆறுமுகம் அய்யாசாமி என்ற வலைப்பூ.
இவர் ஓர் அடிமையாம், இவரது பலவீனங்கள்தான் என்னென்ன? உறவுகளைப் பற்றிய அழகான கவிதை 'அடிமையின் பலம்!' என்ற தலைப்புடன். விருப்பத்தின்பேரில் தன் உறவுகளுக்கு எப்படியெல்லாம் தான் அடிமையாக இருக்கிறார் என்பதைக் காட்டுகிறது இந்த கவிதை.
விசேஷங்களுக்குப் போனால் மொய்யை எழுதி(அழுது)விட்டு வருவார்கள் என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அந்த மொய்யை நோட்டுப் புத்தகத்தில் எழுதுபவர்களின் நிலையைப் பற்றிக் கவலைப்பட்டுள்ளோமா ? இங்கே 'மொய்யெனப்படுவது…!' என்ற தலைப்பில் நகைச்சுவையாகக் கூறி நம்மை சிரிக்க வைத்துவிடுகிறார்.
புதிதாக எழுத ஆரம்பித்திருக்கும் இவர் மேலும் சிறக்க வாழ்த்துகள்.
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடை பெறுகிறேன், நன்றி !!
""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""