07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label அறுசுவை விருந்து. Show all posts
Showing posts with label அறுசுவை விருந்து. Show all posts

Tuesday, January 14, 2014

சமைக்கலாம் வாங்க!

           

 என்ன, பால் பொங்கிட்டா? வயிறு வீங்கிட்டா? இந்தப் பிள்ள கேட்கிற நேரத்தைப் பாருன்னு நினைக்கிறீங்களா? மன்னிச்சிக்கோங்க. பொங்கல் களேபரத்துல இங்கவர லேட்டாயிருச்சு. கரும்பு, மஞ்சள் தோரணம் கட்டி, சாமிக்கு நெல், பழம், காய்கறிகள் எல்லாம் படைச்சு, சூரியன் உதிக்கிறதுக்குள்ள பொங்கலைப் பொங்கவச்சு, ‘குலைவிட்டு, பானையை இறக்கிவச்சு, அப்புறம் மார்க்கெட்ல கிடைக்கிற காயெல்லாம் சேர்த்து ஒரு கதம்பக் குழம்பு வெச்சு, அப்பளம் பொரிச்சு, வெண்பொங்கலோட சர்க்கரைப் பொங்கலும் சேர்த்து சாப்பிடுறதுக்கு மறுபடியும் இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கணும் :-)

            செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கு ஈயப்படும்னு சொல்லுவாங்க. ஆனா நான் அவ்வளவு நல்லவளா இருந்தா உலகம் அழிஞ்சிறாது? அதோட, ‘நன்கு பசித்தபின் உணவுன்னும் சொல்லிக் கேட்டிருக்கேன். ஆனா இப்போ உள்ள டயட்டீஷியன்ஸ் என்ன சொல்றாங்கன்னா, பசிக்கிதோ இல்லையோ அந்த நேரத்துக்கு சாப்பிடணும். பசி வந்தப்புறம்தான் சாப்பிடனும்னு இருந்தா பசியில நமக்கே தெரியாம நாம நிறைய சாப்பிடுறோம்னு. அதனால சத்துள்ள சுத்தமான உணவுகளை நேரத்துக்கு சாப்பிடுவோம்.

            இன்னைக்கு நாம பார்க்கப் போறது எல்லாமே சமையல் ப்ளாக்ஸ் தான். எப்படி பசி வந்தபிறகு தான் சாப்பிடணும்னு நினைக்கக் கூடாதோ, அதே மாதிரி பசியோட இருக்கும்போது தயவு செஞ்சு இந்த ப்ளாக்ஸ் பக்கம் போயிறாதீங்க. அவ்வளவுதான்..

1.    சமையல் தளம்னு சொன்னவுடனே என் நினைவுக்கு வர்றது கீதா அசல் அக்காவோடஎன் சமையல் அறையில்ப்ளாக் தான். அய்யோ, அழகழகான எவ்வளவு ரெசிபிஸ்! உலகத்துலயே ரொம்ப கொடுத்துவச்சவங்க கீதா அக்காவொட குடும்பத்தினர்தான்னு அடிக்கடி நினைச்சிப்பேன் :-)

இவங்களோடமிளகாய் துவையல்பாருங்க. ரொம்ப சிம்பிளான காரசாரமான ஒரு சைட் டிஷ். இத மாதிரி நிறைய சட்னி வகைகள் கொடுத்திருக்காங்க. இதோ இங்கே25 வகையான சத்தான டயட் தோசைபடங்களோட கொடுத்திருக்காங்க. அசைவ சமையல் குறிப்புகளும் அருமை. முக்கியமாசெட்டிநாடு பெப்பர் சிக்கன்அப்புறம்மீன் பிரியாணி’.

2.    அடுத்ததாக ஷஷிகா அக்காவோட ப்ளாக். பார்த்தாலே வாயில நீர் ஊறும் படங்களோட சுவையான ரெசிபிஸ் கொடுத்திருக்காங்க.

இவங்களோடமிளகு சீரக இட்லிஒரு நாள் செஞ்சு பாருங்க. அவ்ளோ டேஸ்டி. காரசாரமானகோங்கூரா துவையல், பாசிப்பருப்பு வடையோட ஒருராஜஸ்தானி தாளி’, அசைவத்துல இவங்களோடகருவாட்டுக் குழம்புரெசிபி எல்லாம் எடுத்துக்காட்டுகள் தான். போய் பாருங்க.

3.    ஆசியா உமர் அக்காவோட ப்ளாக் அடுத்தது. நாம வழக்கமா செய்ற சமையல் வகைகள் மட்டுமில்லாம ரொம்ப வித்யாசமான ரெசிபிஸ், முக்கியமா அசைவ உணவுவகைகளுக்கு இவங்களை அடிச்சிக்கவே முடியாது.

உதாரணத்துக்கு சிக்கன் மக்லூபா’, ‘கிரீன் சிக்கன் பார்பிக்யூ’, ‘கிரில்ட் ஃபிஷ் எல்லாம் பார்க்கவே அழகா இருக்கு

4.    அடுத்தது மனோ சாமிநாதன் மேடத்தோடமனோஸ் கிட்சன்’. நியூ இயர் அன்னைக்குரஸ் மலாய்செய்முறை போட்டாங்க பாருங்க. பார்த்தால் செய்யாம விடமாட்டீங்க. ‘வெண்டக்காய் தயிர் பச்சடிமாதிரி நிறைய பச்சடி வகைகள் கொடுத்திருக்காங்க. ‘பலாக்காய்ல வடைசெஞ்சிருக்காங்க. அப்புறம்பாகற்காய் பொடிமாஸ்னு ஒரு ரெசிபி கொடுத்திருக்காங்க. பாகற்காய் சாப்பிட விரும்பும் டயபடிக் ஆட்கள் இந்த மாதிரி சுவையா செஞ்சு உணவுல சேர்த்துக்கலாம்.

5.    ஜலீலா கமல் அக்காவோட சமையல் அட்டகாசங்கள்பார்க்கலாம். இவங்க கொடுத்திருக்குறதேங்காய் மினி தோசை குழந்தைகள் விரும்பி சாப்பிடக் கூடிய உணவுஃபிலிப்பைனிஅராபிக்இடாலியன்குஜராத்திஹைதரபாதினு' இவங்க கவர் பண்ணாத ஏரியாவே கிடையாது போல. சமையல் குறிப்பு போக உணவு சம்பந்தப்பட்ட எக்கச்சக்கமான பதிவுகள் நிறைஞ்சு கிடக்குற இவங்களோட ப்ளாக் ஒரு பொக்கிஷம்.

6.    அப்புறம் மாதேவி அக்காவோடசின்னு ரேஸ்ரிப்ளாக். பெயருக்கேற்றாற்போல சுவையான ரெசிபிஸ் நிறைய இருக்கு. இவங்களோடபனங்காய்ப் பணியாரம்’, ‘யாழ்ப்பாணம் கிராமத்துப் பக்குவசமையல் குறிப்புகள் எல்லாம் நமக்கு ரொம்ப புதுசா இருக்கும். ‘தேங்காய்ப் பால் கஞ்சிகுறிப்பு ஒன்னு கொடுத்திருக்காங்க. சுவையா இருக்கும் போல பார்த்தாலே தெரியுது.

7.    அப்புறம்மகிஸ் கிட்சன்’. இதிலேயும் வெரைட்டியான ரெசிபிஸ். சுரைக்காய்ல கூட்டு வெச்சிருப்போம், சாம்பார்ல போட்டிருப்போம். ஆனா இவங்கசுரைக்காய் வெச்சு பாயசம்பண்ணிருக்காங்க. இவங்களோடசர்க்கரைப் பொங்கல் பாருங்க. கொஞ்சம் வித்யாசமா இருக்கு. ‘பாலைக்கீரை உருண்டைக் குழம்பு'மேத்தி ரோட்டி' எல்லாம் மிஸ் பண்ணக்கூடாதவை.

8.    அடுத்து நாம பார்க்கப் போறதுவிஜி பார்த்தியோட வலைத்தளம். சமையல் மட்டுமில்லாம வேறு குறிப்புகளும் நிறைய இருக்கு இவங்க ப்ளாக்ல. கலர்ஃபுல்லானபைனாப்பிள் அல்வா, ‘வெண்டைக்காய் மோர்க் குழம்பு’, ‘சப்பாத்தி உப்மா’, ‘வெந்தயக்கீரை சாம்பார்மாதிரி வித்யாசமான ரெசிபிஸ் நிறைய புகைப்படங்களோட போட்டிருக்காங்க. நிச்சயமா பாருங்க.


10.  சித்ரா அவங்களோட காரைக்குடி சமையல்ப்ளாக் நாம அடுத்ததா பார்க்கப் போறது. இவங்களோடபிரெட் வடை, ‘பீட்ரூட் கட்லெட்’, ‘ரவா புட்டு’, ‘குழிப் பணியாரம்’, ‘பருப்பு உருண்டைக் குழம்பு எல்லாத்துக்கும் படங்களோட செய்முறை விளக்கம் கொடுத்திருக்காங்க. இதையும் ட்ரை பண்ணிப் பாருங்க :-)


இன்னைக்கு நிறைய சமையல் வலைத்தளங்கள் பார்த்தாச்சு. நான் சொல்லியிருக்கிற ரெசிபிஸ் மட்டுமில்லாம, அந்தத் தளங்கள்ல இருக்குற எல்லாப் பதிவுகளையுமே பாருங்க. வித விதமா சமையல் செஞ்சு உங்க வீட்டில இருக்குறவங்களையும் விருந்தினர்களையும் நல்லா கவனியுங்க! மீண்டும் சந்திக்கலாம் :-) 
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது