புத்தகங்களும் திரைப்படங்களும்-ஒரு பார்வை
பலருக்கும் புத்தகம் படிக்கும் பழக்கம் இருக்கும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு நூலகம் இருக்க வேண்டும் என்பார்கள்.
சிலருக்குப் புத்தகம் படிப்பது சுவாசிப்பது போன்றது.. பயணங்களின் போதும் படிப்பது சிலருக்குப் பழக்கம். கண் மருத்துவர்கள் பயணத்தின் போது படிக்கக் கூடாது என்றாலும், படிக்காமல் இருக்க முடியாது. ஒவ்வொரு பள்ளியிலும், கல்லூரியிலும் மிக அவசியமானது நூலகம். குழந்தைகளுக்கு வாசிக்கும் பழக்கத்தைக் கண்டிப்பாய்ப் பெற்றோர்கள் கொண்டுவர வேண்டும். நல்ல புத்தகம் நல்ல நண்பன் என்பார்கள். நல்ல விமர்சனங்களை கேட்டுப் படிக்க தோன்றும்.
இப்போது எல்லோருக்கும் இணையம் மிகவும் அவசியம் ஆகி விட்டது. எல்லாவற்றையும் இணையத்தில் தேடிப்படிக்கும் பழக்கம் வந்துவிட்டது. அப்படியும், நூல் வெளியீடுகளும், புத்தககண்காட்சிகள் நடந்து கொண்டு இருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
தனக்கும்,தன் மகளுக்கும் வாசிப்பில் ஏற்பட்ட அனுபவங்களை அழகாய்ச் சொல்கிறார் ,”சிறகுகள் நீண்டன” என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் தாரா அவர்கள். வாசிப்பும் வசதியும் என்ற பதிவில் தன் சிறுவயதில் புத்தகம் படிக்கும் பழக்கம் இருந்ததையும், இப்போது தனக்கு ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களையும் சொல்கிறார்:-
//இப்போது மின் புத்தகங்கள், amazon, kindle, Apple, ipad போன்ற நவீன வாசிப்புவசதிகள் பிரபலமாகிவிட்டன. அச்சுப் புத்தகங்களின் மீதான கவனம் குறையத் தொடங்கிவிட்டது.
ஒரு குழந்தை எப்போது ஒரு அச்சுப் புத்தகத்தைப் படித்து மகிழ வேண்டும் என்பதும், எப்போது ஒரு புதிய நவீன வாசிப்பு வசதியை பயன்படுத்த வேண்டும் என்பதும் பெற்றோர் கையில் தான் இருக்கிறது// என்கிறார்.
//சங்க இலக்கியம் முதல் சயின்ஸ் வரை இசை முதல் இன்டெர்நெட் வரை எல்லாம் எழுதியிருக்கிறார்.
அனைத்துப் படைப்புகளின் பட்டியலையும் இறுதியில் தொகுத்துக் கொடுத்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். இந்நூல், சுஜாதா ரசிகர்களுக்கு மட்டுமல்ல... தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் நல்ல விருந்து என தைரியமாகப் பரிந்துரைக்கிறேன்.//
இப்படி இந்தப் புத்தகத்தை ’மதுரை அழகு’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் மதுரை அழகு அவர்கள் விமர்சனம் செய்து இருக்கிறார்கள். அதைப் படித்தால் புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தோன்றும்.
திரைப்படங்கள் பார்ப்பதும் நல்ல பொழுதுபோக்காய் இருந்த காலம். தொலைக்காட்சிகள் இல்லாமல் மக்கள் பொழுது போக்க, திரைப்படங்களை பார்த்தார்கள். அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலத்திலேயே தந்திர காட்சிகளும், பிரமாண்டமான காட்சி அமைப்புகளும் வியக்க வைக்கும். அப்படி அமைந்த பழைய படங்கள், இப்போது தங்கள் திறமைகளைக் காட்ட இளைஞர்கள் எடுக்கும் குறும்படங்கள், இவற்றை விமர்சிக்கும் தளங்கள் பற்றிக்காண்போம்..
//நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய பதிவு இது. என் அன்பிற்கினியவர்களே!.
ரெஜினா ப்ரெட் எனும் தொண்ணூறு வயது மூதாட்டி, வாழ்க்கை தனக்கு போதித்த நாற்பத்தைந்து முக்கிய பாடங்களை அழகாக சொல்லியிருக்கிறார்.
இதன் தமிழாக்கமும்,கொஞ்சமே கொஞ்சம் மசாலாத் தூவலும் மட்டும் அடியேன் செய்தது. யான்பெற்ற இன்பம் பெருக இவ்வலையகம்!
இதை எனக்கு மின்னஞ்சிய என் பாஸுக்கு நன்றி. //
இப்படி சொல்வது ,’வானவில் மனிதன்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் மோகன்ஜி அவர்கள்.
இப்படி சொல்வது ,’வானவில் மனிதன்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் மோகன்ஜி அவர்கள்.
நாற்பத்தைந்து முக்கிய பாடங்களிலிருந்து மூன்று முத்துக்கள்! உங்கள் பார்வைக்கு :-
//மகிழ்ச்சி ததும்பும் குழந்தைப் பருவத்திற்கு, உங்களுக்கு இன்னும் கூட அவகாசம் இருக்கிறது. இன்னொருமுறை,குழந்தையாய் மாறித்தான்
பாருங்களேன்! ஆனால் ஒன்று! இந்த இரண்டாவது குழந்தைப் பருவத்தின் மகிழ்ச்சிக்கு நீங்களே பொறுப்பு.
வாழ்க்கையை தணிக்கை செய்துகொண்டிருக்க வேண்டாம். நில்லுங்கள் இந்த நிமிடத்தில்.. இந்த கணத்தில் வாழுங்களேன்.
வாழ்க்கை ஒரு பரிசு.. அந்தப் பரிசின் சுகத்தை முழுக்க அனுபவியுங்கள்.//
திரைப்படங்கள் பார்ப்பதும் நல்ல பொழுதுபோக்காய் இருந்த காலம். தொலைக்காட்சிகள் இல்லாமல் மக்கள் பொழுது போக்க, திரைப்படங்களை பார்த்தார்கள். அறிவியல் முன்னேற்றம் இல்லாத காலத்திலேயே தந்திர காட்சிகளும், பிரமாண்டமான காட்சி அமைப்புகளும் வியக்க வைக்கும். அப்படி அமைந்த பழைய படங்கள், இப்போது தங்கள் திறமைகளைக் காட்ட இளைஞர்கள் எடுக்கும் குறும்படங்கள், இவற்றை விமர்சிக்கும் தளங்கள் பற்றிக்காண்போம்..
//நவம்பர் 10. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் பிறந்த நாள்.
அவருக்கு நிறைய புகழ் தேடித் தந்த ‘ஔவையார்’ படத்தைப் பற்றிச் சில வரலாற்றுத் தகவல்கள் என் களஞ்சியத்திலிருந்து!
ஔவையார்' படம் எடுத்ததற்காகத் தமிழ் நாட்டில் 1954-இல் பெரும் விழாக்கள் எடுக்கப் பட்டன. இதில் பேராசிரியர் 'கல்கி' முக்கியப் பங்கு எடுத்துக் கொண்டார்.
அந்த விழாக்கள் தொடர்புள்ள சில 'விகடன்' பக்கங்கள்//
இப்படிப் பல நமக்குத் தெரியாத அரிய தகவல்களைத் தருகிறார், ’பசுபதிவுகள்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் திரு. பசுபதி அவர்கள். பழைய விகடன் பத்திரிக்கையில் வந்த படங்களைக் காலத்தால் அழிக்க முடியாதபடி தன் பதிவில் -தன் களஞ்சியத்தில் தொகுத்து வைத்து இருக்கிறார். நாம் பார்த்துப் படித்து மகிழலாம்.
விவசாயி என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் ராஜா அவர்கள்.மனதைக் கனக்க வைக்கும் உலகப்படம் பார்த்தபின் தன் மனதில் தோன்றிய கதை ஒன்றைச் சொல்கிறார்.:--
அப்படிக் கதையில் என்ன இருக்கிறது என்று படிக்க ஆவலா? அமெரிக்காவில் இருக்கும் பேரனுக்கும், இந்தியாவில் இருக்கும் தாத்தாவுக்கும் இடையில் ஏற்படும் மொழிப்பிரச்சினையை இக்கதை கூறுகிறது. தாத்தாவுக்கும், பேரனுக்கும் பாலமாக இருப்பது பாசம் மட்டுமே! அதை எப்படிப் பேரன் சரி செய்தான்? படித்துப் பாருங்கள். கதையின் தலைப்பு;-
திரைப் படம் - பத்து கட்டளைகள் (THE TEN COMMANDMENTS)
//நான் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த நேரம். எங்கள் வீட்டிற்கு அருகில் பொன்மலை ரெயில்வே தொழிற்சாலையில் தச்சு வேலை செய்த ஒரு கிறிஸ்தவ பெரியவர் இருந்தார். ஒருநாள் அவரோடு பேசிக் கொண்டு இருந்தபோது அவர் ” பத்து
என்று சொல்வது,’ எனது எண்ணங்கள்’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும்
தி.தமிழ் இளங்கோ அவர்கள்.. அழகான படங்களுடன் கொடுத்து இருக்கும் விமர்சனம் படம் பார்க்காதவர்களையும் பார்க்க வைக்கும்.
நானும் இரண்டு முறை இந்த படத்தைப் பார்த்து இருக்கிறேன்.
நானும் இரண்டு முறை இந்த படத்தைப் பார்த்து இருக்கிறேன்.
ஜெர்சி கர்ல்... //திரைப்பட விமர்சகர்களால் பல்வேறு விதமாக விமர்சிக்கப் பட்ட படம். மனைவியை இழந்த கணவனுக்கும், அவன் மகளுக்கும் இடையேயான பாசப் பிணைப்பை பற்றிய ஒரு உருக்கமான படம்.//
வாழ்க வளமுடன்!
----------------
இப்படி திரைவிமர்சனம் செய்பவர், ’மங்கை’ என்ற வலைத்தளம் வைத்து இருக்கும் மங்கை அவர்கள்.
நெய்வேலி புத்தகக்கண்காட்சி நடத்திய குறும்படப் போட்டியில் முதல் பரிசையும், சென்னை வர்த்தக மையத்தில் நடத்தப்பட்ட குறும்படப் போட்டியில் இரண்டாவது பரிசையும் பெற்ற ‘பயணம்' குறும்படம், நாகர்கோயில் பகுதிகளில் அன்றாடம் காணும் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் பட்டது.
வட இந்தியாவில் மனநிலை சரியில்லாத நபர்களை, குறிப்பாக, முதியவர்களைப் பராமரிக்கத் திராணியில்லாதவர்கள், தென்னிந்தியாவிற்கு வரும் இரயில்களில் ஏற்றிவிடுவது வழக்கமாகி வருகிறது. இரக்கமற்ற இந்த செயலின் காரணமாக, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் கவனிப்பாரற்றுத் திரியும் பரிதாபத்திற்குரிய ஜீவன்களின் பின்னணி எத்தனை குரூரமானது என்று இப்படம் நிதர்சனமாக்கியிருக்கிறது.
எண்ணு, சொல், செய் எல்லோருக்கும் நன்மை தர
எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு.
எண்ணும்படி செய், செய்யும்படி எண்ணு.
வாழ்க வளமுடன்!
----------------


