07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label மாதங்களில் மார்கழி. Show all posts
Showing posts with label மாதங்களில் மார்கழி. Show all posts

Monday, December 23, 2013

மாதங்களில் மார்கழி

வலைச்சர அன்பர்களுக்கு வணக்கம். வாழ்க வளமுடன்.
மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
மீண்டும் வாய்ப்பு கொடுத்த சீனா சாருக்கு நன்றி.

எனக்கும் வலைச்சரத்திற்கும் உகந்தது, மார்கழி மாதம்தான் போலும்! 2012ல் ஜனவரி மாதம் 1 ம் தேதியில் வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு திரு. வை. கோபாலகிருஷ்ணன் சார் பரிந்துரைக்க, சீனாசார் அன்புடன் அழைத்தார்.  அவர்கள் அழைப்பை ஏற்றுக்கொண்டு என்னால் முடிந்தவரை வலைச்சரப் பொறுப்பை ஏற்று செய்தேன்.

முந்திய வாரம்  திரு. துரைசெல்வராஜு அவர்கள் அருமையாக வலைச்சர ஆசிரியர் பணியைச் செய்தார்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

முன்பு ”வலைச்சரத்தில் நான்” என்ற அறிமுக உரையில் என்னைப்பற்றி விரிவாகப் பகிர்ந்து இருக்கிறேன். எப்படி வலைத்தளம் ஆரம்பித்தேன், என் வலைத்தளத்தின் பெயர்க்காரணம் எல்லாம் எழுதி இருக்கிறேன்.
 லிங்  கொடுத்து இருக்கிறேன்.  படித்துப் பாருங்கள்.
 2009 மே மாதம் 31ம் தேதி வலைத்தளம் ஆரம்பித்து எழுதி வருகிறேன். அடிக்கடி வெளியூர்களுக்குச்  சென்றுவருவதால்  154 பதிவுகள் தான் எழுதி இருக்கிறேன். போனமுறை கொடுக்காத பதிவுகளை இப்போது கொடுத்து இருக்கிறேன். படித்து உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

இதோ என் பதிவுகளில் சில:-

’ உலக சுகாதார தினம்’  தாய் சேய்நலம், முதியோர் நலம்
உலக சுகாதார தினத்தில் குறிப்பிட்டுச் சொல்லப்படுவது முதுமையும் ஆரோக்கியமும்.உலக சுகாதார தினத்தில் தாய் சேய் நலமும் பாதுகாக்கப்படவேண்டும் என்று
சொல்லப்படுகிறது.

'மார்கழி கோலங்கள்' என்ற பதிவில் கோலங்கள் போடுவதால் உண்டாகும் நன்மைகளைச் சொல்லி இருக்கிறேன்.

’மார்கழியின் சிறப்பு ’  மார்கழியின் சிறப்பைச் சொல்லும் பதிவு
 மார்கழி என்றாலே  மாதவன், மகேசன் புகழ்பாடுவது, கோலங்கள், இசைவிழா இவை முக்கியம் அல்லவா?

'பாவை நோன்பு'-  மார்கழியில் நோற்கப்படும் நோன்பைப்பற்றிச் சொல்லும் பதிவு. பாவையர் மழை வேண்டியும், நல்ல கணவரை அடைய வேண்டியும் பாவைப் பாடல்களைப் பாடினார்கள்.
மார்கழி மாதம் பாவை நோன்பு இருந்தால் மழை வளம் பெருகும். நல்ல இறை நம்பிக்கை உள்ள கணவன் கிடைப்பார். மழை வளம் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும். மக்கள் நலம் பெறுவர்.

 இந்தக் காலத்தில் ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என்று சொல்வது போல் அந்தக் காலத்திலும்  உள்ளது, ஒன்று வாங்கினால் ஒன்று இனாம் என்று. படித்துப்பாருங்களேன்.


ஒவ்வொரு வருடமும் மார்ச் 22 தேதியன்று உலக தண்ணீர் தினமாக உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதற்கான விழிப்புணர்வுக் கட்டுரை.

அன்புள்ள என்று ஆரம்பித்து ,பேரோ அல்லது கண்ணே மணியே என்றோ ஏதோ எழுதி, இங்கு நாங்கள் எல்லோரும் நலம், அங்கு எல்லோரும் நலமா?நலம் நலம் அறிய ஆவல் என்று
அந்த காலத்தில் கடிதம் இப்படித்தான் நலம் விசாரித்து எழுதிக் கொள்வார்கள். ’இங்கு மழை பெய்கிறது,அங்கு மழை உண்டா? மாடு கண்ணு போட்டுதா,வெள்ளாமை எப்படி இருக்கு? ’என்று ஊர் நடப்பு, நாட்டு நடப்பு எல்லாம் கேட்டுக் கொள்வார்கள்.
பழைய கடிதத்தை எடுத்துப்பார்த்தால் அந்த அந்தக் காலக்கட்டங்களின் நிலை புரியும். என் சொந்தங்கள் எப்படி கடிதம் எழுதினார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசையா படித்துப் பாருங்கள்.

அவரவர்களுடைய அடிமனமே வாழ்க்கைத் துணைவரைத் தேர்ந்தெடுக்கிறது. அவரவர்கள் மனத்தின் தரத்தைக் கொண்டு அவர்களுக்கு வாழ்நாளில் என்னென்ன இன்பம், துன்பம் வர வேண்டுமோ அதற்குச் சரிபங்கேற்க ஒரே ஒருவரால் தான் முடியும். அந்த ஒருவரை அவரவர் அடிமனமே தேர்ந்தெடுக்க, அது பல பேர் மனதில் பிரதிபலிக்க, மற்றவர்கள் வெறும் கருவிகளாகத் திருமணத்தை நடத்திவைப்பார்கள். இதையே
’மனம்போல் மாங்கல்யம்’ என்றும், ‘திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது’ என்றும்

கூறுவர். யார் சொல்லும் கருத்து இது?- படித்துப் பாருங்கள்.


 இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரைநோய்
குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது.
சர்க்கரைநோய்ச் சிகிச்சைக்கான சிறப்பு- 
மருத்துவமனைகளில் சர்க்கரை நோய்க் கல்வித்
துறை என்ற தனிப் பிரிவே செயல்படுகிறது
வெண்டைக்காய் எப்படி சர்க்கரைநோயைப் போக்கும்?- படித்துப் பாருங்களேன்.

மழை என்றாலே மகிழ்ச்சிதான்.  மழைக்காலத்தில் சூடாய் ஏதாவது சாப்பிட்டுக் கொண்டு, அல்லது புத்தகங்களைப் படித்துக் கொண்டு இருக்காமல் மழையை  ரசிக்க பிடிக்கும். மழைக்கால என் மலரும் நினைவுகளைச் சொல்லும் பதிவு.

இன்று வலைச்சரம் வந்து இருக்கும்  அன்பர்களை வருக வருக என்று இருகரம் கூப்பி வரவேற்கிறேன். ஒருவாரகாலம் உங்கள்  அன்பும் ஆதரவும் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன்.
                                  ------
"எண்ணமே எக்காலத்திற்கும் வாழ்க்கையின் சிற்பி, எண்ணி எண்ணிட இனிதே பயக்கும்."- வேதாத்திரி மகரிஷி
                                  ------



மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது