07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 28, 2012

வலைசரம் இரண்டாம் நாள் - நிரம்பி வழியும் அன்பு

வலைசரத்தில் நான் தொடுத்த
மாலைகளை பற்றிய உறவுகளின்
கருத்துகளில் நான் மீண்டும்
துளிர்கிறேன் ஒரு விருட்சமென .

இன்று நான் பேசுவது அன்பை பற்றி

அன்பின் மைய்யபுள்ளியில்தான் இந்த அகிலமே சுழலுகிறது என்பதை நம்மால் மறுக்க இயலாது .அன்பின் அதிர்வுகளை அனைவராலும் உணர முடியும் நம்மிடம் அன்பு இருக்கிறதா என்று விலங்குகள் கூட உணர்ந்துகொள்ளும் ஆற்றல் பெற்றவை .

அதன் ஆற்றல் அதீதம் அதனால் தான் பல காத தூரம் தாண்டியும் அதை உணர முடிகிறது .உலகத்திலே மிகவும் வேகமாக செல்லக்கூடியது ஒளி என்று கூறுகிறார்கள் .ஆனால் அதைவிட வேகமாக செல்லக்கூடியது "கருணை நிறைந்த அன்பு " நினைத்த மாத்திரத்திலேயே கைகளைக் கொண்டு கண்ணீரை அகற்றும் சக்தி அன்பிற்கு உண்டு .

அந்த அன்பை பரிமாறும் போது , பரிசளிக்கும் போது மற்றவர்களின் பாத்திரங்களோடு ஒப்பிடாதீர்கள் உங்களை உங்களின் அன்பை
அலங்காரமாக்குவதில்  முனைப்பாக இருக்காதீர்கள் .

உங்களின் அன்பை உங்களுடையதாக மட்டும் கொடுங்கள் அதன் எதார்த்தத்தில் நீங்கள் உயர்ந்து இருப்பீர்கள் .

*********

உன் அன்பை வெளிபடுத்த
நீ மேற்கொள்ளும்
சிரத்தைகள்
அவசியமற்றது ........

ஒரு கைக்குலுக்கையில்
ஒரு கண் துடைப்பில்

இதயம் நனைக்கும்
ஒரு பார்வையில் ......

நேசம் உதிர்க்கும்
ஒரு புன்னகையில்

நீ வெளிப்படுத்தி
சென்றிருக்க முடியும் .......
*******


புதிய உறவுகளின் முகவரி உங்களுக்காக .....

வாருங்கள் அவர்களோடு நம் நேசத்தை பரிமாற

நாளை நிறைய புதிய தளங்களுடன் உங்களை சந்திக்கிறேன் .............


30 comments:

 1. இரண்டு புதிய தளங்களை அறிந்தேன் நன்றி

  ReplyDelete
 2. அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

  TM (1)

  ReplyDelete
 3. அன்பின் சக்தி மகத்தானது! தங்கள் பதிவு அருமை சகோ!

  ReplyDelete
 4. இரண்டு பேர் எனக்குப் புதியவர்கள்... இரண்டு பேரின் வலைத்தளத்தைப் படிக்கிறேன் தொடர்ந்து....

  சிறப்பான பகிர்வுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 5. அருமையான பதிவு... இந்த நான்கு வலைதளங்களுமே எனக்குப் புதிது.

  ReplyDelete
 6. கருத்திட்டு நீர் வார்த்த அத்துனை அன்பு உள்ளங்களுக்கும் என் அன்பை படையளிடுகிறேன் .............நன்றியுடன்

  ReplyDelete
 7. அறிமுகங்கள் நன்று...

  ReplyDelete
 8. அறிமுகங்கள் அதிருது...

  கலக்குங்க தோழி...

  ReplyDelete
 9. //உன் அன்பை வெளிபடுத்த
  நீ மேற்கொள்ளும்
  சிரத்தைகள்
  அவசியமற்றது ........//

  உண்மைதான்...

  ReplyDelete
 10. // ஒரு கைக்குலுக்கையில்
  ஒரு கண் துடைப்பில்

  இதயம் நனைக்கும்
  ஒரு பார்வையில் ......

  நேசம் உதிர்க்கும்
  ஒரு புன்னகையில்//

  அன்பிற்கு ஆயிரம்
  பொற்காசு தேவையில்லை.
  ஒரு சின்ன அரவணைப்பு போதுமெனப்
  புகட்டுமிந்த பதிவுக்கெனது
  பாராட்டுகள் முதற்கண்.

  அன்பு, காதல், கருணை, வாத்ஸல்யம், பிரேமை, பிரியா நட்பு என‌
  ஆயிரம் பெயர்கள் அதற்கு நாம் சூட்டினாலும்
  அடித்தளத்தில் நம் மனதில்
  அணுவாக இருந்தாலும் அற்புதமாய் இருக்கவேணும்
  தியாகமென்னும் பெரு உணர்வு.


  தியாகம் என்னும் யாகத்தில்
  தீ வேள்வியில் குதிப்பவர்
  திக்கனைத்தும் வெல்கிறார்.
  புவனைத்தை ஆள்கிறார்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 11. //நுன்மதியின் தேடல்
  அதிசயாவின் தேடல்
  நிரஞ்சனாவின் தேடல்
  அருணா சதாசிவத்தின் தேடல் //

  அருமையான அனைத்துத் தேடல்களுக்கும் என் அன்பான பாராட்டுக்கள்.

  அவர்கள் நால்வரின் வலைத்தளத்தையும் தேடி ஓட வைத்துள்ள தங்களுக்கும் வாழ்த்துகள்.

  அன்புடன்,
  VGK

  ReplyDelete
 12. அன்பின் அதிர்வுகளும்
  ஆற்றல்களும் அதீதம்..

  அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்.

  ReplyDelete
 13. //ஒரு கைக்குலுக்கையில்
  ஒரு கண் துடைப்பில்

  இதயம் நனைக்கும்
  ஒரு பார்வையில் ......

  நேசம் உதிர்க்கும்
  ஒரு புன்னகையில்

  நீ வெளிப்படுத்தி
  சென்றிருக்க முடியும் .......//

  வெகு அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

  நன்றி,

  அன்புடன்
  VGK

  ReplyDelete
 14. kavithai azhaku!

  arimukam-
  3 perkal
  puthithu!

  vaazhthukkal!

  ReplyDelete
 15. அக்கா.. ஒவ்வொரு கணமும் அன்பின் தேடலுக்காய்த்தான் என் வாழ்க்கை நிகழ்ந்து வருவதான உணர்வு என்னிடம் உண்டு. நீங்கள் எழுதியதைப் படிக்கையில் மகிழ்கிறேன் நான். என்னை இங்கே அறிமுகப்படுத்திய உங்களின் அன்பிற்கு நன்றி கூறி உங்களை அன்னியப்படுத்த நான் விரும்பவில்லை, வலைச்சர ஆசிரியராகியிருக்கும உங்களுக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியோட என் வாழ்த்து.

  ReplyDelete
 16. நீங்க தொடுத்த மாலைகள் அருமை
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. பயனுள்ள பதிகளை தெரிந்து கொண்டேன்

  ReplyDelete
 18. தேடல் அருமை !...அறிமுகமான வலைத்தளங்களுக்கு என் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .உங்களுக்கு என்
  அன்பு கலந்த நன்றி தோழி .

  ReplyDelete
 19. வாழ்த்துக்கள் இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு .
  அட நானும் யாருக்கும் அறிமுகம் இல்லீங்க :):)

  ReplyDelete
 20. நான்கு தேடல்களுமே அருமை

  ReplyDelete

 21. அன்பின்
  தேடலில்
  தோழமை உறவுகள்

  ம்ம்ம் அழகு

  ReplyDelete
 22. இரண்டு புதிய அறிமுகங்கள் சென்று வருகிறேன் சிறப்பாக தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் சகோ.

  ReplyDelete
 23. அன்பு மனதில் இருந்தால் மட்டும் போதாது அதை தக்க சமயத்தில் வெளிப்படுத்தவும் வேண்டும் என உணர்த்தியிருக்கிறீர்கள்...

  ReplyDelete
 24. சிறப்பான அறிமுகங்கள்! பகிர்வுக்கு நன்றி!

  இன்று என் தளத்தில்
  பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
  http://thalirssb.blogspot.in/2012/08/6.html
  மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
  http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

  ReplyDelete
 25. அன்பு (கமெண்ட்ஸ்) ரொம்பி வழியுது சகோ, எனக்கு பொறாமையா இருக்கு!

  ReplyDelete
 26. அநேகமாய் நான்கு பேரும் பெண்கள் என நினைக்கிறேன். வி ஆண்கள் ஆர் பாவம் :)

  ReplyDelete
 27. hi dr,,,gudeveng.thaks alot....!IAM NT IN HME...THATS y unable to cme on time dr!thanku..

  ReplyDelete
 28. அன்பின் தேடல் அதிகமாக மனசில் தேங்கிவிட்டது! அவர்களை பின் தொடர்வதால்!

  ReplyDelete
 29. நான்கு அறிமுகங்கள் மிக்க நன்றி.
  இரண்டு போர் தெரியும். மற்றதைப் பார்ப்பேன்.
  நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது