07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 27, 2012

கோவை மு சரளாதேவியின் சுய அறிமுகம் :வலைசரம் முதல் நாள்

வணக்கம் அன்பார்ந்த வாசக வட்டங்களே !
வணக்கத்திற்குரிய கருத்தாளர்களே !
வலையுலகில் உலாவும் தமிழ் தாயின் தவபுதல்வர்களே!
என்னை வலைச்சர ஆசிரியர் பணிக்கு அழைத்த திரு சீனு அவர்களுக்கும்
உங்கள் அனைவருக்கும் என் அன்பில் ஊறிய வார்த்தைகளால் வணக்கம்
சொல்லுவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன்

நான் என்கிற கோவை மு சரளாதேவியின் சுய அறிமுகம் :
நான் ஒரு பெண்

இந்த அறிமுகம் ஓன்று போதும்
வேறு குறிப்புகள் ஒன்றும் என்னை
இதைவிட அடையாளபடுதிவிட முடியாது
என்னை பற்றி

அகிலத்தின் சாட்சியே நான்தான் - ஆனாலும்
அணுவைவிட அலட்சியமாய் பார்கிறார்கள்
எல்லாம் இருக்கிறது என்னிடம் - ஆனாலும்
எதுவும் இல்லாதவளாய் இருக்கிறேன்

புதுமையின் மூலம் நான் - ஆனாலும்
பெண் என்னும் பதுமையாக பார்கிறார்கள்

கவிதையின் கரு நான் - ஆனாலும்
கவிதாயினியாக மட்டும் பதிவு செய்கிறார்கள்

எல்லாமே என்னில் தோன்றியதுதான் - ஆனாலும்
எதுவாகவும் நான் இல்லை

நான் கல்வி துறையில் பணியாற்றி வருகிறேன் தமிழின் முனைவர் பட்டம் வாங்கி விட்டேன் அதற்கான புலமையை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன் .

எழுத்து என் சுவாசம் அதன் மீது நான் பால்யம் முதல் காதல் கொண்டு இருக்கிறேன் அதை முதல் காதல் முதல் முத்தம் படித்தால் புரிந்துகொள்வீர்கள் .

என் கவிதை பயணம் என்னோடு பால்யம் முதல் இன்று வரை பல பருவம் கடந்து பயணித்து வருகிறது ஆனாலும் அதை வலை உலகிற்கு அறிமுகம் செய்தது வலைசரம் தான் அதனால் என் நன்றியை தெரிவிக்க கடமை பட்டு இருக்கிறேன் .நன்றி வலைசரம்

என்னுடைய முதல் கவிதைகள் எழுச்சிமிக்க கவிதைகள் ஈழத்து சகோதரிக்காக உதித்தது இந்த கவிதை மூலம் நான் எழுச்சி கவிதாயினியாக அழைக்கப்பட்டேன்
தமிழரின் இருண்ட காலம்

சமூகத்தின் அவலங்களை என் எழுத்தில் சாடியிருக்கிறேன் பெண்ணுக்கு இழைக்கப்படும் கொடுமைக்கு எதிராக எழுத்தை வாளாக தூக்கினேன்
சடங்கு
ஆனாலும் அதில் ஒன்றும் மாறவில்லை என் வலை பக்கம் திரும்பி பார்ப்பார் யாரும் இல்லை ஒரு சில உன்னத உள்ளங்கள் உணர்வுகளை மதித்தனர்.

அதன் பின் என் கோபங்களை விழுங்கி அன்பை நேசத்தை காதலை நட்பை கவிதையாக வடிக்க ஆரமித்தேன் ......அமோக வரவேற்ப்பு கருத்து மாலைகளால் என்னை அலங்கரித்தனர். புகழ் ஒரு மனிதனை உச்சியில் நிற்க வைக்கும் என்பதை உணர்ந்தேன்.

காதல் காதல் காதல்
காதல் இல்லையேல் மீண்டும் காதல் என்று காதலால் நிரப்பப்பட்ட என் நாட்குறிப்பை அனைவரும் உணர்ந்தனர்
நாட்குறிப்பின் பக்கங்கள் - 2 ( நாடி துடிப்பு )

கவிதை எழுத ஆரமித்தபின் அகத்திற்குள் ஒரு அகம் இருப்பதை உணர்ந்தேன் அது ஞானம் என்று சொல்லுகிரார்கள அந்த ஞானத்தின் கதவை திறந்தேன் அற்புத உணர்வுகளை உணருகிறேன் நீங்களும் உணர என்னுடன் வாருங்கள் .
உள்ளத்தின் ஓசை - 10 ( மரணம் )

என் சுயத்தை உங்கள் முன் தோலுரித்து காட்டிவிட்டேன் .இனி பிடித்த தளங்களை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன் வாருங்கள் .
கவிதையின் காதலி என்பதால் முதல் அறிமுகம் கவிதையால் நிரப்படுகிறது

என்னை வியப்பில் நிறுத்திய எழுத்துக்கு சொந்தகாரர் அற்புத புதையல் இவர் .
கவிதைக்காரன் டைரி
அகத்திணை இலக்கியத்தின் கூறுகளை அப்பட்டமாய் விளக்குகிறார் தன கவிதை கொண்டு
நிலைக்கண்ணாடி
காதலியை எப்படி கவருவது என்று அற்புத தகவல்களுடன் இருக்கிறது இவரின் கவிதை
ரசித்தவைகளும் ரணமானவைகளும்

நாளை புதிய தளங்களை பரிசளிக்கிறேன் காத்திருங்கள்

42 comments:

 1. வலைச்சரத்தில் சிறப்பான சுய அறிமுகம். கூடவே மூன்று அறிமுகங்களும். உங்கள் பக்கத்திற்கும் அறிமுகம் செய்யப்பட்டவர்கள் பக்கத்திற்கும் செல்லுமுன் - ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள் சகோ.

  ReplyDelete
 2. ///நான் கல்வி துறையில் பணியாற்றி வருகிறேன் தமிழின் முனைவர் பட்டம் வாங்கி விட்டேன் அதற்கான புலமையை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.///

  ///புலமையை இன்னும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்.///

  I like this humility! Great quality!

  ReplyDelete
 3. அன்பின் கோவை மு சரளா

  அருமையான சுய அறிமுகம் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா - ஆமாம் எனக்கு என்ன புதுப் பெயர் சூட்டி உள்ளீர்கள் - சீனு என்று .......

  ReplyDelete
 4. சுவையான சுய அறிமுகம், வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. தங்கள் அறிமுகமே அருமை.
  அதில் நான் காணுவதோ எளிமை.
  நான் ஒரு பெண் என்பது பெருமைக்குரியதன்றோ !
  பெண்ணாகப் பிறப்பதற்கே மாதவம் செய்திடவேண்டுமென்ற‌
  கவியின் குரலைக் கேட்டதில்லையோ ?

  பெண் ஒரு சமூகத்தின் கண்.
  உண்ணாது உறங்காது உற்றவரைக்
  கண்ணெனக் காத்திடும் பொன்.

  சுப்பு ரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com
  http://kandhanaithuthi.blogspot.com

  ReplyDelete
 6. எழுத்து என் சுவாசம் .....

  அருமையான் அறிமுகப் பகிர்வுகள்...

  வலைச்சர வாழ்த்துகள் !

  ReplyDelete
 7. அறிமுகப்படுத்திய தளங்கள் அனைவரும் எனக்கு புதியவை...

  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்... (மூன்றாவது அறிமுகத்திற்கு (http://tamilkaadhal.blogspot.in) தான் கருத்து சொல்ல முடியவில்லை... [wrong settings])

  தொடர வாழ்த்துக்கள்... நன்றி சகோதரி... (TM 2)

  ReplyDelete
 8. என்ன காரணத்தினால் நீங்கள் இதுவரை தமிழ்மணத்தில் இணையவில்லை?

  கட்டாயம் இணையவேண்டும்!!!

  ReplyDelete
 9. //எல்லாமே என்னில் தோன்றியதுதான் - ஆனாலும் எதுவாகவும் நான் இல்லை
  மிகவும் ரசித்தேன்.

  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 10. அன்புத் தோழி சரளா ,
  முத்திரை பதிக்கும் சுய அறிமுகப் பதிவு !
  ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் !
  அறிமுகங்கள் உங்கள் பார்வையில்
  களை கட்டும் என்ற ஆவலுடன் ...

  ReplyDelete
 11. சுய அறிமுகம் மிக மிக அருமை
  இவ்வார வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. பதிவர் சந்திப்பு முடிந்த அடுத்த நாளே வலைச்சர எண்ட்ரி.. ஆஹா!

  ReplyDelete
 13. அட தோழி .....நீங்களா இந்த வாரம் ஆசிரியர் ! மிக மகிழ்ச்சி வாழ்த்துகள் ! அசத்துங்க !

  ReplyDelete
 14. சுய அறிமுகம் அருமை வாழ்த்துக்கள்...

  கலக்குங்க., இந்த வாரம்...

  ReplyDelete
 15. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி

  ReplyDelete
 16. இந்த வார ஆசிரியராக நீங்க... மகிழ்ச்சி! தமிழில் முனைவரா... அதுதான் வார்த்தைகள் விளையாடுகிறது! வாழ்த்துக்கள் அக்கா, இனிமேல் அப்படித்தான் அழைப்பேன்! நேற்று உங்களைப் பார்த்தது முதல்... முடிவு செய்துவிட்டேன்!

  ReplyDelete
 17. நான் ஒரு பெண்

  அகிலத்தின் சாட்சியே நான் தான்

  புதுமையின் மூலம் நான்

  கவிதையின் கரு நான்

  எல்லாமே என்னில் தோன்றியதுதான்

  நான் கல்வி துறையில் பணியாற்றி வருகிறேன் தமிழின் முனைவர் பட்டம் வாங்கி விட்டேன்

  எழுத்து என் சுவாசம் அதன் மீது நான் பால்யம் முதல் காதல் கொண்டு இருக்கிறேன்

  என் கவிதை பயணம் என்னோடு பால்யம் முதல் இன்று வரை பல பருவம் கடந்து பயணித்து வருகிறது

  என் சுயத்தை உங்கள் முன் தோலுரித்து காட்டிவிட்டேன் ...

  மிகச்சிறப்பான சுய அறிமுகம்.

  தொடர்ந்து வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்.

  VGK

  ReplyDelete
 18. நான் யார் ? எனும் தேடலுடன் வலைச்சர ஆசிரியராக பொருப்பேற்ற கவிதாயினியை வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 19. அறிமுகம் அருமை.
  அம்மனிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 20. ஆர்பாட்டமில்லாத அழகிய முத்தான அறிமுகம்...

  சிப்பிக்குள் இருக்கும்வரை முத்துக்களின் பிரகாசம் கண்களுக்கு தெரிவதே இல்லை...

  சிப்பி பிரசவித்தப்பின்னரோ முத்து பிரகாசமாய் நிறைந்து அழகை தருகிறது...

  தமிழை ரசித்து ருசித்து படைத்தை அறியமுடிந்தது...

  உங்களின் அறிமுகம் படித்ததுமே உங்கள் வலைத்தளம் செல்லவேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது...

  வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க என் அன்பு வாழ்த்துகள் தோழியே...

  ReplyDelete
 21. அறிமுகமே அசத்தல்....தொடரட்டும் உங்கள் ஆசிரியர் பணி

  ReplyDelete
 22. லலிதமான
  வரிகளில்
  சுய அறிமுகம்
  அழகு

  இந்த வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு
  வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தோழி

  ReplyDelete
 23. நேற்றுதான் நேரில் கண்டேன்

  இன்று வலைச்சரப் பணியென அறிந்து கொண்டேன்!மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 24. அருமை... ரொம்ப பிடித்திருக்கிறது...

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 25. வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துகள்!

  ReplyDelete
 26. அசத்தல் அறிமுகம் தொடருங்கள் சகோ.

  ReplyDelete
 27. வணக்கம் தோழி. கவிதை பாடி மனதைக் கொள்ளையடித்த உங்களை இப்போது வலைச்சர ஆசியராகப் பார்ப்பதில் மிகமிக மகிழ்வாக இருக்கிறது. நிறையப் படிப்பவர். எழுதுபவர் நீங்கள். உங்களுடன் பயணிக்கும் இந்த வலைச்சர வாரம் இனிமையானதாக அமையும். உங்களுக்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. வணக்கம் டீச்சர்..

  ReplyDelete
 29. அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள் தோழி!!!

  ReplyDelete
 30. விருந்தினர்கள் வருகையால் கணனி திறக்க முடியவில்லை. அவர்கள் தூங்கும் போது சிறிது திறந்தேன் கோவை சரளா வலைச்சர ஆசிரியர்.
  நான் தங்கள் வலைப்பக்கம் வந்து கருத்துகள் இட்டேன். எதுவுமே பிiதிபலிப்பு இல்லை. ரெம்ப பிஸி போலும்.
  இந்த வாரத்திற்கு நல்வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 31. நேற்று உங்களை நேரில் காண முடிந்தது.. பேச வேண்டும் என்று நினைத்தேன்.. உங்களிடமும் சசிகலா அக்காவிடமும்... முடியவில்லை.. ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.... கவிதைக்காரன் டைரி எனக்கு ஏற்கனவே அறிமுகம்... நன்றி...

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள்.தொடருங்கள்.

  ReplyDelete
 33. அசத்தலான ஆரம்பம்! தொடர்ந்து கலக்குங்க!

  ReplyDelete
 34. அறிமுகமே ஆட்கொள்கிறது!
  இனி-
  வாசிப்பில் மனம் மகிழும்!

  வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 35. வலைச்சர வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 36. பதிவர் சந்திப்பிற்கு அடுத்தபடியான வலைச்சர ஆசிரியர் அறிமுகம் ரசிக்கும்படியாய் இருந்தது தோழி...

  அடுத்தடுத்து ரசனைவாதிகளை விருந்துவைப்பீர்கள் என்று காத்திருக்கிறோம்,

  ReplyDelete
 37. உங்கள் வலைச்சர பணி சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்க்ள் சகோ...

  ReplyDelete
 38. அருமையான அறிமுகம்.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 39. இவங்க எங்க ஊர் சொந்த காரங்க என்பதில் பெரும் மகிழ்ச்சி...வரவேற்கிறேன்...

  ReplyDelete
 40. வாழ்த்துக்கள் ஆசிரியரே ,வெற்றிகரமாக பொறுப்பை நடத்த வாழ்த்துக்கள் .

  ReplyDelete
 41. ஆரம்பமே அசத்தாலாய் இருக்கு. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
  தொடருங்கள்

  ReplyDelete
 42. சென்னை பதிவர் நம் குடும்ப விழாவில் கலந்துகொண்டு வந்த களிப்பில் மீளாமல் இருந்துவிட்டேன் ஆகையால் பின்னூட்டம் இட முடியவில்லை நேற்று இன்று பார்த்ததும் மனம் குதூகளிகிறது உங்களின் அன்பின் வகைகளை கண்டு மகிழ்ச்சி என் அன்பிற்கு பாத்திரமான உங்கள் அனைவருக்கும் .............நன்றிகளுடன் நான்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது