07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 16, 2011

சரம் 2 – பிஸியாயிட்டாங்களாமாம்..அங்க யாருப்பா அது??? படிக்கலாமா வேணாமான்னு யோசிச்சுகிட்டே வலைச்சரத்த திறக்குறது??? பொறியில சிக்கினதுக்கப்புறம் எலி யோசிச்சுப் பிரயோஜனம் இல்ல. ம்ம்ம் ஆரம்பிங்க..
நேத்து, முதல் சரம் படிச்சிட்டு கடுப்பாயிருப்பீங்க. கவலைப் படாதீங்க. இன்னைக்கு என்னைய பத்தி சொல்லமாட்டேன். (பெருமூச்சு விட்றீங்களா???? இருக்கட்டும் இருக்கட்டும்)
பொதுவா புத்தகம் படிக்கிற, முக்கியமா தொடர்கதை படிக்கிற பழக்கம் இருக்குறவங்களுக்கு, தங்களுக்குப் பிடிச்சிருந்தா, விடாம படிச்சுகிட்டே வருவாங்க. திடீருனு அந்த தொடர், பாதில நின்னுபோச்சுனா வருத்தமாவும் ஏமாற்றமாவும் இருக்கும். அதுமாதிரி தான் வலையுலமும். பதிவுலக நண்பர்கள்ல பலர், (கரண்டி இல்லாமலே) கலக்கலா பதிவுகள எழுதுறாங்க. ஆனா என்னானு தெரில, நல்லா எழுதிகிட்டிருக்கும்போதே திடீருன பிஸியாயிட்றாங்க. அதன் காரணமா கொஞ்ச நாள் பதிவுகள் எழுதுறதுல இடைவெளி விட்டுட்றாங்க.
நா எப்பவுமே அலுவலகத்துக்கு வந்ததும் (தூங்குறதுக்கு முன்னாடி) முதல் வேளையா அந்த மாதிரியான நண்பர்களோட வலைதளத்துக்குப் போய், ஏதாவது புதுப் பதிவுகள் வந்துருக்கானு சோதிச்சுப் பாத்துக்குவேன். ரொம்ப நாளைக்கப்புறம் அவங்க தளத்துல பதிவுகள பாக்கும்போது, ஏதோ நாமளே எழுதினாப்ல ஒரு சந்தோசம் வரும் பாருங்க.. (எங்கயோ முஸ்தபா முஸ்தபா பாட்டு கேக்குதே.. நண்பேன்டா..)
அந்த மாதிரியான நண்பர்கள்ல இவரும் ஒருத்தர். பேச்சுத் தமிழ்ல பதிவெழுதுறது இவருக்கு கைவந்த கலை. சராசரியான நாட்கள்ல மிகச் சாதாரணமா நடக்குற சம்பவங்கள கூட அழகா, நகைச்சுவையா விவரிச்சிடுவார். இவரோட நேர்முகத் தேர்வு“ங்குற ஒரு சித்தரிப்பு பதிவு கடஞ்செடுத்த மொக்கையா இருக்கும், ஆனாலும் ரசிப்பதற்கேற்ற கோர்வை.
அடுத்ததாக, இவரும் இப்போ கொஞ்ச நாளா பிஸியா இருக்கார் போல.. அப்பப்ப பரோட்டா கடைய திறந்து வைப்பார். திடீருனு லீவு விட்ருவார். இவரோட நீங்களும் கடவுள் தான்“குற பதிவுல இரத்த தானம் பற்றிய விழிப்புணர்வு தகவல்கள் அருமையா குடுத்துருப்பார்.
அப்புறம், இவர் ஒரு பிரபல பதிவர். தொழில் காரணமா பதிவுகள்ல அடிக்கடி இடைவெளி விட்ருவார். இவர் எழுதுற பதிவுகள வச்சு சரமாரியான விமர்சனங்களும் வாக்குவாதங்களும் நடக்கும். நச் பதிலடிகளுக்கு பிரபலமானவர்னும் சொல்லலாம். இவர் எழுதிய மனிதனுக்குள் மிருகம்“ங்குற பதிவில் பகிரப்பட்ட தகவல், படிக்கும் அனைவரையுமே அதிர்ச்சியில் ஆழ்த்திவிடும்.
அடுத்து, நம்ம நண்பர் இவர். ரொம்ம்ம்ப படிப்பாளி. அதுனால சமீப காலமா பதிவுகள் குறைஞ்சிடுச்சு. இவரோட முதிர் கண்ணன்கள்“ங்குற பதிவுல வெளிநாட்டுல வேலை பாக்குற ஆண்களுக்கு, பெண் கிடைக்கிறதுல இருக்குற கஷ்டத்த ரொம்ம்ம்ப பீல் பண்ணி சொல்லிருப்பார். (பதிவு, நண்பருக்காகனு சமாளிச்சது வேற விசயம்..).
அடுத்து, இவர் ஒரு பெண் பதிவர். பிஸியாயிட்டவங்க லிஸ்ட்ல இவங்களும் ஒருத்தர். தொடர்கதையிலும் சிறுகதையிலும் வல்லவர். முக்கியமா டிப்ஸ் குடுக்குறதுல ரொம்ம்ம்ம்ம்ப நல்லவர் தான் போங்க.. இவரோட காதலில் விழாமல் தப்பிப்பது எப்படி“ங்குற பதிவு பலருக்கு ரொம்பவே உபயோகமா இருந்துருக்கும்னு நெனைக்கிறேன்.
யார்ரா அது? கொட்டாவி விட்றது???
சரி சரி.. இன்னைக்கு சரம் தொடுத்தது போதும்னு நெனைக்கிறேன். (நிம்மதியா??)

கிளம்புறதுக்கு முன்னாடி, எங்கயோ படிச்ச வாசகங்கள பகிர்ந்துக்குறேங்க..

மனிதன்  +   தன்னம்பிக்கை  =   வெற்றி
மனிதன்  +   கவலை  =   கண்ணீர்
மனிதன்  +   ஆனந்தம்  =    புன்னகை
மனிதன்  +   இயலாமை  =    கோபம்
மனிதன்  +   அன்பு  =   காதல்
மனிதன்  +   ஆசை  =   காமம்
மனிதன்  -   அன்பு  =   குரோதம்
மனிதன்  -   ஆசை  =   அமைதி

நாளைக்கு மூணாவது சரம் தொடுக்கலாம்.
கிளம்புறேங்க..
.
.

25 comments:

 1. ம்ம்ம்ம். நல்ல அறிமுகங்கள் தான். அறிமுகப்படுதியவருக்கும், அறி முகம்
  ஆனவங்களுக்கும் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நல்ல அறிமுகங்கள்..
  பகிர்ந்தமைக்கு நன்றி...

  வாழ்த்துக்கள் இந்திரா

  ReplyDelete
 3. நல்ல அறிமுகங்கள். வாழ்த்துகள் அனைவருக்கும். தொடரட்டும் உங்கள் அறிமுகங்கள்...

  ReplyDelete
 4. அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. அறிமுகங்களுக்கு நன்றி..

  ReplyDelete
 6. யார்ரா அது? கொட்டாவி விட்றது???//அது நாங்க இல்லைங்கோ....

  ம் நல்ல அறிமுகங்கள் நேரம் குறைவு பிறகு வாசிக்கின்றேன்
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 7. நல்லாயிருக்கே.. சூப்பர்

  ReplyDelete
 8. அருமையான அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்! :))

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் (ஆசிரிய) தங்கச்சி. கடை அறிமுகத்திற்கு நன்றி.

  ReplyDelete
 11. //Lakshmi //

  //ஜ.ரா.ரமேஷ் பாபு//

  //சி.பி.செந்தில்குமார்//

  //வெங்கட் நாகராஜ்//

  //சசிகுமார்//  நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

  ReplyDelete
 12. //MANO நாஞ்சில் மனோ//

  //அமைதிச்சாரல் //

  //siva //

  //தமிழ்வாசி - Prakash //

  //இராஜராஜேஸ்வரி //

  //பன்னிக்குட்டி ராம்சாமி//

  //வைகை //

  நண்பர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..

  ReplyDelete
 13. //சைவகொத்துப்பரோட்டா said..

  வாழ்த்துக்கள் (ஆசிரிய) தங்கச்சி. கடை அறிமுகத்திற்கு நன்றி.//


  வாங்க அண்ணாத்தை..
  வருகைக்கு நன்றி.

  ReplyDelete
 14. வாழ்த்துக்கள் டீச்சர்,அறிமுகங்கள் அனைத்தும் அற்புதம்.நானும் இப்போது தான் தொடர்ந்து எழுத ஆரம்பித்து இருக்கிறேன்.நான் ஆரம்பித்து 2 வருடங்கள் ஆகிவிட்டது.நானும் பிஸி,பிஸி என்று தான் இருந்து விட்டேன்.ஆனால் மீண்டும் எழுத ஆசைப்பட்டு நேற்று முதல் ஆரம்பித்து இருக்கிறேன்.பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி...

  ReplyDelete
 15. அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. //ஸ்வீட் ராஸ்கல் //


  வருகைக்கு நன்றி நண்பரே..
  மீண்டும் எழுத ஆரம்பித்தமைக்கு மகிழ்ச்சியும் வாழ்த்துக்களும்.

  ReplyDelete
 17. //முனைவர்.இரா.குணசீலன் //


  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 18. கொட்டாவி விட்டதுக்கப்பறமும் எங்களை விடாமல்..கடைசியா படிக்க வச்சுதான் அனுப்புறீங்க.. எங்கயோ படிச்சதை பகிர்ந்ததா போட்டுருந்தீங்க பாருங்க அங்க நிக்குறீங்க...அருமை... அசத்துக்குங்க... சொல்ல மறந்துட்டேன்..வலைச்சரத்தில் அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 19. //மாய உலகம் said...

  கொட்டாவி விட்டதுக்கப்பறமும் எங்களை விடாமல்..கடைசியா படிக்க வச்சுதான் அனுப்புறீங்க.. எங்கயோ படிச்சதை பகிர்ந்ததா போட்டுருந்தீங்க பாருங்க அங்க நிக்குறீங்க...அருமை... அசத்துக்குங்க... சொல்ல மறந்துட்டேன்..வலைச்சரத்தில் அறிமுகமானவர்களுக்கு வாழ்த்துக்கள்//


  பாராட்டிற்கும் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி நண்பரே..

  ReplyDelete
 20. கோவை புத்தக கண்காட்சியில் கேண்டீன் எடுத்திருக்கிறேன், சத்தியமா நேரம் இல்லைங்க, மெயில் பார்த்து தான் இதுக்கு கூட வந்தேன்!

  ReplyDelete
 21. மன்னிக்கனும்,

  நன்றி சொல்ல மறந்துட்டேன்.

  ReplyDelete
 22. enakku remba perumai ah irukunga... thanks a lot... ungaluku kaavey indha weekend kandipa oru padhivu poduren...

  u knw wht, aftr a long time i miss my blog :( ....

  thank u thank u....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது