07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, August 23, 2011

முதன் முதல் ராக தீபம் ஏற்றும் வேளை :-))

அனைவருக்கும் வணக்கம்!
உங்களையெல்லாம் நெனச்சா எனக்கு பாவமா இருக்கு.. நேத்து நான் கொடுத்த என்னோட பதிவுகளின் லிங்க்  பார்த்திட்டு இத்தனை நாளா எப்பிடி  இதையெல்லாம்  படிக்காம விட்டோம்னு நீங்க நினைக்கிறது எனக்கு தெரியுது! பரவாயில்லை விடுங்க... திருக்குறளையே மக்கள் ரொம்ப வருடம் கழித்துதான் கொண்டாடினாங்க! என் பதிவுகள படிச்சத உங்க வரலாற்று பக்கங்களில் குறித்து வைத்து கொள்ளுங்கள்.. வருங்கால சந்ததிகளிடம் பெருமையா சொல்லலாம்! ( மனசாட்சி - தம்பி.. போன் வொயர் பிஞ்சு ஒரு நாள் ஆச்சு! )


இசை...
இந்த வார்த்தைய கேட்டாலே மனசு லேசாகும்.. இதையே கொஞ்ச நேரம் கண்மூடி கேட்டால்? நம் மனதே நம்மிடம் இருக்காது! இசை..அது எந்த வடிவத்தில் இருந்தாலும் ரசிக்கமுடியும்! நமது மனநிலைக்கு ஏற்ப! இன்றைக்கும் அப்பிடித்தான்..உங்களை இசை மழையில் நனைய வைக்க முயற்சி செய்கிறேன்! எதற்கும் மனதிற்கு மட்டும் ஒரு குடை பிடித்து படியுங்கள்!


இசை என்று சொல்லும்போது இளையராஜா என்று ஞாபகம் வருவதை யாராலும் தவிர்க்க இயலாது! இசையோடு கலந்து வாழும் ஜீவன் அது!

அவரது காலத்தால் அழியாத எத்தனையோ பாடல்களும் பின்னணி இசை கொண்ட படங்களும் உள்ளது! அதில் குறிப்பிட்டு சொல்லமுடியாது.. ஆனால் சிந்து பைரவி... இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது! இந்த படத்தில் உள்ள பாடல்களையும் பின்னணி இசையையும் அழகான வர்ணிப்போடு ரேடியோஸ்பதியில் வகைப்படுத்துகிறார் கானா பிரபா போய் கொஞ்சம் நனைந்து வாருங்கள்!

சில பாடல் வரிகள் நம் மனதில் சிம்மாசனம்  போட்டு அமர்ந்திருக்கும்.. அந்த பாடல் வரிகளை கேட்க்கும்போது பல நினைவுகளை நம் மனதினில் கிளறிவிட்டு செல்லும்! அப்படித்தான் இந்த தளமும்... இந்த தமிழ் மூவி சாங்க்ஸ் தளத்தில் உள்ள இந்த பாடலை கேட்டுப்பாருங்கள்.. அதுவும் பாடல் வரிகளுடன் கொடுத்திருகிறார்!

சோகம்... இந்த வார்த்தையை கேட்க சங்கடமாக இருந்தாலும் நமது சோகத்துக்கு இளையராஜா பின்னணி இசைத்தால்? ஆஹா.. அந்த சோகம் கூட கொஞ்சம் சுகமாகத்தான் இருக்கும்! உங்களுக்கு எந்த சோகமாக இருந்தாலும் ரவி ஆதித்யா தரும் இந்த பின்னணி இசை தொகுப்புகளை கேட்டுப்பாருங்கள்! பிறகு நீங்களே சோகத்துக்காக ஏங்க ஆரம்பித்து விடுவீர்கள்!

நீங்கள் ஒரு இசை ரசிகராக இருந்தால் கண்டிப்பாக இந்த ஷெனாய் பற்றி அறிந்திருப்பீர்கள்! நீங்கள் கூட அது வெறும் சோக கீதம் வாசிக்க மட்டுமே என்று நினைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்! இளையராஜா அதை எப்படி உடைத்திருக்கிறார் என்று இந்த வேணுவனம் தளத்தில் சென்று பாருங்கள்! ராஜாவின் இசை நுணுக்கத்தை பற்றி பண்டிட் பாலேஷ் என்ன சொல்கிறார் என்று!

உயர்ந்த உள்ளம் படத்தில் வரும் எங்கே என் ஜீவனே... பாடலை தெரியாதவர்கள் இருக்க முடியாது! அதில் இளையராஜா சோலோவாக ஒரு முறையும்.. ஜேசுதாசும் ஜானகி அம்மாவும் சேர்ந்து ஒருமுறையும் பாடியிருப்பார்கள்! இதே பாடலை இளையராஜாவும் ஜானகி அம்மாவும் சேர்ந்து பாடினால் எப்படி இருக்கும்? சொல்லும்போதே எப்பிடி இருக்கு? அந்த அனுபவத்தை சேக்காளியின் இந்த தளத்தில் சென்று  அனுபவித்து வாருங்கள்!

யுவனின் ரசிகரா நீங்கள்? அப்ப வாங்க.. உங்களுக்காத்தான் இந்த தளம்! யுவனின் ஒவ்வொரு அசைவையும்.. அவரது பாடல்கள், ஆல்பம், இசைத்தொகுப்பு என்று அள்ள அள்ள குறையாமல் தொகுத்திருக்கிறார் இந்த ரசிகர்! சந்தேகம் இருந்தா நீங்களே இந்த தளத்தில் சென்று பார்த்துக்கொள்ளுங்கள்!

சின்மயி... இந்த பேரை கேட்டாலே சும்மா அதிர வில்லை......... கொஞ்சம் மென்மையா தாலாட்டும் உணர்வுதான் வருது! கன்னத்தில் முத்தமிட்டாள் படத்தில் இவர் பாடிய ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை யாரால் மறக்கமுடியும்? அதுமட்டுமா? இப்போ வந்த கிளிமஞ்சாரோ பாடல் வரை அவர் குரலில் மயங்காதவர்கள் குறைவுதான்! அவரின் முதல் டப்பிங் பேசிய அனுபவத்தை அவரின் இந்த தளத்தில் விவரிக்கிறார்! சென்று பாருங்கள்!

இந்த பதிவுக்கடலில் நான் கண்டெடுத்த முத்துக்களில் சிலவற்றை மட்டும் கொடுத்திருக்கிறேன்! இந்த இசையென்னும் இன்ப வெள்ளத்தில் தொபுக்கடீர்னு குதிச்சு நீந்த வேண்டியது இனி உங்கள் பொறுப்பு!

நன்றியும்.. வாழ்த்துக்களுடன்,
வைகை.

71 comments:

 1. அன்பு நண்பா இசைக்கு மயங்காதவர்கள் யார் தான் இரு்க்கிறார்கள்..

  மதம் பிடித்த யானை கூட யாழிசைக்கு மயங்கும் என்று சொல்கிறது இலக்கியம்!

  அருமையான இசைப்பதிவுகளை அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள்.

  தங்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 2. அருமையான அறிமுகங்கள்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. மாப்ள அறிமுகங்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. இந்த இசையென்னும் இன்ப வெள்ளத்தில் தொபுக்கடீர்னு குதிச்சு நீந்த வேண்டியது இனி உங்கள் பொறுப்பு!


  ..... அருமையான அறிமுகங்கள். ரவி ஆதித்யா அவர்கள், இளையராஜாவின் இசைக்குள் ஒன்றி போய், அனுபவித்தபடியே பதிவுகளை எழுதி இருப்பார்.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. வணக்கம்ணே,

  வலைப்பதிவுகளின் அறிமுகங்கள் அசத்தல்...அதுவும் முதல் நாள் அறிமுகமே மங்களமரமான செவிக்கினிமையான இசைப் பதிவுகளை அறிமுகபடுத்தி ஆரம்பித்த விதம் அருமையோ அருமை...

  ReplyDelete
 6. அறிமுகப்படுத்தபட்ட அனைத்து நண்பர்களும் மேலும் பல சிறந்த படைப்புகளை வழங்க வாழ்த்தி வணங்குகிறேன்...

  பயனுள்ள சிறந்த இசைப்பதிவுகளை அறிமுகபடுத்திய உங்களுக்கு சிறப்பு நன்றிகள் பல... :)

  ReplyDelete
 7. //திருக்குறளையே மக்கள் ரொம்ப வருடம் கழித்துதான் கொண்டாடினாங்க! என் பதிவுகள படிச்சத உங்க வரலாற்று பக்கங்களில் குறித்து வைத்து கொள்ளுங்கள்.. வருங்கால சந்ததிகளிடம் பெருமையா சொல்லலாம்!///

  கண்டிப்பாக அண்ணே, உங்களின் வரலாற்றுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

  மக்களே எதிர்பாருங்கள் விரைவில்....

  வைகை (உண்மை சுடும்) - ஒரு வாழும் வரலாறு (வரலாற்று நாயகர்)

  :)

  ReplyDelete
 8. என் வலைப்பதிவோடு சகபதிவர்களின் பதிவுகளையும் தொகுத்துச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 9. இசைக்கு மயங்காதவர் யாரும் இல்லை ..முதல் நாள் இசை பற்றிய அறிமுகங்கள் .அருமை வைகை

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள். அருமையான அறிமுகங்கள்.

  ReplyDelete
 11. அறிமுகங்கள் அனைவருக்கும வாழ்த்துக்கள்.
  குறிப்பாக ரவி ஆதித்யா நல்ல தேர்வு.
  பாராட்டுக்கள்.

  ReplyDelete
 12. இதையே கொஞ்ச நேரம் கண்மூடி கேட்டால்?//

  உங்க வீட்டுல உள்ளதை எவனாவது தூக்கிட்டு ஓடிடுவான்

  ReplyDelete
 13. அது எந்த வடிவத்தில் இருந்தாலும் ரசிக்கமுடியும்!//

  சதுரமா வட்டமா இருந்தாலுமா?

  ReplyDelete
 14. இசையோடு கலந்து வாழும் ஜீவன் அது!

  இளையராஜாவை ஒரு நிமிசத்துல ஜந்துவாகிட்டியே ராஸ்கல்

  ReplyDelete
 15. இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது!//

  எங்க வீட்டு பக்கத்து வீட்டு குழந்தைக்கு மூணு வயசுதான் ஆகுது. அதுக்கு இதெல்லாம் எப்படி நியாபகம் இருக்கும்?

  ReplyDelete
 16. கானா பிரபா போய் கொஞ்சம் நனைந்து வாருங்கள்!
  //

  சளி பிடிக்காது?

  ReplyDelete
 17. சில பாடல் வரிகள் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்.

  சிம்மாசனம் மூன்று வேடங்களில் பெரிய டாக்டர் நடித்த படம்!!!

  ReplyDelete
 18. இளையராஜா அதை எப்படி உடைத்திருக்கிறார்//

  அய்யயோ உடைச்சிட்டாரா?

  ReplyDelete
 19. உயர்ந்த உள்ளம் படத்தில் வரும் எங்கே என் ஜீவனே... பாடலை தெரியாதவர்கள் இருக்க முடியாது!///

  டெரர்க்கு தெரியாதாம்!!!

  ReplyDelete
 20. ஜானகி அம்மாவும் சேர்ந்து//

  ஜானகியோட அம்மாவும் பாடகியா?

  ReplyDelete
 21. தொபுக்கடீர்னு குதிச்சு நீந்த வேண்டியது இனி உங்கள் பொறுப்பு!//

  எனக்கு நீச்சல் தெரியாது!!!

  ReplyDelete
 22. வைகை (உண்மை சுடும்) - ஒரு வாழும் வரலாறு (வரலாற்று நாயகர்)//

  thooo

  ReplyDelete
 23. //சோகம்... இந்த வார்த்தையை கேட்க சங்கடமாக இருந்தாலும் நமது சோகத்துக்கு இளையராஜா பின்னணி இசைத்தால்? ஆஹா.. அந்த சோகம் கூட கொஞ்சம் சுகமாகத்தான் இருக்கும்!//

  கண்டிப்பா அண்ணா, இளையராஜாவின் சோக கீதங்கள் கூட சுகமானது தான். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 24. சிறந்த அறிமுகங்கள் நண்பரே.. பகிர்வுக்கு நன்றி ..:))

  ReplyDelete
 25. மக்களே எதிர்பாருங்கள் விரைவில்....

  வைகை (உண்மை சுடும்) - ஒரு வாழும் வரலாறு (வரலாற்று நாயகர்)

  :)///

  மச்சி பேமென்ட் எல்லாம் வாங்கிட்டியா?.. இன்னும் வைகை ஏதும் பேலன்ஸ் வெச்சிருக்காரா?.. சொல்லு மச்சி வாங்கி கொடுத்துடறேன்.. :))

  ReplyDelete
 26. அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 27. அறிமுகங்கள் அனைவருக்கும்
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 28. முனைவர்.இரா.குணசீலன் said...
  அன்பு நண்பா இசைக்கு மயங்காதவர்கள் யார் தான் இரு்க்கிறார்கள்..

  மதம் பிடித்த யானை கூட யாழிசைக்கு மயங்கும் என்று சொல்கிறது இலக்கியம்!

  அருமையான இசைப்பதிவுகளை அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள்.

  தங்களுக்கும் அறிமுகம் செய்யப்பட்ட பதிவர்களுக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.//


  நன்றி... தொடர்ந்து வாருங்கள் :))

  ReplyDelete
 29. Rathnavel said...
  அருமையான அறிமுகங்கள்.
  வாழ்த்துக்கள்.//


  நன்றி ஐயா :)

  ReplyDelete
 30. விக்கியுலகம் said...
  மாப்ள அறிமுகங்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்//


  தக்காளி..போய் கேட்டு பாருயா.. உனக்கு கரெக்ட் பண்ண உதவும் :))

  ReplyDelete
 31. Chitra said...
  இந்த இசையென்னும் இன்ப வெள்ளத்தில் தொபுக்கடீர்னு குதிச்சு நீந்த வேண்டியது இனி உங்கள் பொறுப்பு!


  ..... அருமையான அறிமுகங்கள். ரவி ஆதித்யா அவர்கள், இளையராஜாவின் இசைக்குள் ஒன்றி போய், அனுபவித்தபடியே பதிவுகளை எழுதி இருப்பார்.
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//

  நன்றிங்க.. உண்மைதான் இசையின் இன்னொரு முகத்தை காண்பிகிறார் :))

  ReplyDelete
 32. மாணவன் said...
  வணக்கம்ணே,

  வலைப்பதிவுகளின் அறிமுகங்கள் அசத்தல்...அதுவும் முதல் நாள் அறிமுகமே மங்களமரமான செவிக்கினிமையான இசைப் பதிவுகளை அறிமுகபடுத்தி ஆரம்பித்த விதம் அருமையோ அருமை...//

  நன்றி சொல்லனுமா? எல்லாம் உன் ஆசிர்வாதம் :))

  ReplyDelete
 33. மாணவன் said...


  கண்டிப்பாக அண்ணே, உங்களின் வரலாற்றுத் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறது.

  மக்களே எதிர்பாருங்கள் விரைவில்....

  வைகை (உண்மை சுடும்) - ஒரு வாழும் வரலாறு (வரலாற்று நாயகர்)//

  மவனே..எத்தன எடத்துல இதே டயலாக்க சொல்றேன்னு பார்ப்போம் :)

  ReplyDelete
 34. கானா பிரபா said...
  என் வலைப்பதிவோடு சகபதிவர்களின் பதிவுகளையும் தொகுத்துச் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே//


  வாங்க பிரபா...நன்றி :))

  ReplyDelete
 35. இம்சைஅரசன் பாபு.. said...
  இசைக்கு மயங்காதவர் யாரும் இல்லை ..முதல் நாள் இசை பற்றிய அறிமுகங்கள் .அருமை வைகை//


  வாங்க மக்கா.. ஆனா நீங்க வேற எதுலயோ மயங்க்கிட்டிங்கலாமே? :))

  ReplyDelete
 36. Madhavan Srinivasagopalan said...
  வாழ்த்துக்கள். அருமையான அறிமுகங்கள்.//


  நன்றி சார் :)

  ReplyDelete
 37. இந்திரா said...
  அறிமுகங்கள் அனைவருக்கும வாழ்த்துக்கள்.
  குறிப்பாக ரவி ஆதித்யா நல்ல தேர்வு.
  பாராட்டுக்கள்.//


  நன்றி.. கண்டிப்பா அவர் அனைவராலும் அறியபடவேண்டியவர் :)

  ReplyDelete
 38. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  இதையே கொஞ்ச நேரம் கண்மூடி கேட்டால்?//

  உங்க வீட்டுல உள்ளதை எவனாவது தூக்கிட்டு ஓடிடுவான்//


  நீ அங்க இருக்கப்ப இங்க யார் தூக்க போறா? :))

  ReplyDelete
 39. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  அது எந்த வடிவத்தில் இருந்தாலும் ரசிக்கமுடியும்!//

  சதுரமா வட்டமா இருந்தாலுமா?//


  எப்பிடி இருந்தாலும் உன் கண்ணுக்கு தெரியவா போகுது? :))

  ReplyDelete
 40. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  இசையோடு கலந்து வாழும் ஜீவன் அது!

  இளையராஜாவை ஒரு நிமிசத்துல ஜந்துவாகிட்டியே ராஸ்கல்//

  ஜீவன் என்று சொல்லும்போது அப்படித்தான் சொல்லமுடியும்.. எந்த ஸ்கூல்ல தமிழ் படிச்ச? :))

  ReplyDelete
 41. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  இந்த படத்தை யாராலும் மறக்க முடியாது!//

  எங்க வீட்டு பக்கத்து வீட்டு குழந்தைக்கு மூணு வயசுதான் ஆகுது. அதுக்கு இதெல்லாம் எப்படி நியாபகம் இருக்கும்?//


  அந்த புள்ளைய இந்த படத்த பார்க்கசொல்லு அப்பறம் மறக்காது :))

  ReplyDelete
 42. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  கானா பிரபா போய் கொஞ்சம் நனைந்து வாருங்கள்!
  //

  சளி பிடிக்காது?//


  உன்னை மாதிரி சனிக்கெல்லாம் சளி புடிக்காது :))

  ReplyDelete
 43. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  சில பாடல் வரிகள் நம் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும்.

  சிம்மாசனம் மூன்று வேடங்களில் பெரிய டாக்டர் நடித்த படம்!!!//

  இன்னுமா திருந்தல நீ?

  ReplyDelete
 44. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  இளையராஜா அதை எப்படி உடைத்திருக்கிறார்//

  அய்யயோ உடைச்சிட்டாரா?//


  ஆமா..சேர்க்க ஆளில்லையாம் போறியா? :))

  ReplyDelete
 45. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  உயர்ந்த உள்ளம் படத்தில் வரும் எங்கே என் ஜீவனே... பாடலை தெரியாதவர்கள் இருக்க முடியாது!///

  டெரர்க்கு தெரியாதாம்!!!//


  டெரருக்கு இது மட்டும்தான் தெரியாதா? :))

  ReplyDelete
 46. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  ஜானகி அம்மாவும் சேர்ந்து//

  ஜானகியோட அம்மாவும் பாடகியா?//


  ஆமா.. உனக்கு தெரியாதா? :))

  ReplyDelete
 47. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  தொபுக்கடீர்னு குதிச்சு நீந்த வேண்டியது இனி உங்கள் பொறுப்பு!//

  எனக்கு நீச்சல் தெரியாது!!!//


  உனக்கு சாப்பாட்ட தவிர வேற ஒண்ணுமே தெரியாதுன்னு எங்களுக்கும் தெரியும் :))

  ReplyDelete
 48. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  வைகை (உண்மை சுடும்) - ஒரு வாழும் வரலாறு (வரலாற்று நாயகர்)//

  thooo//


  பொறாம? :))

  ReplyDelete
 49. காந்தி பனங்கூர் said...
  //சோகம்... இந்த வார்த்தையை கேட்க சங்கடமாக இருந்தாலும் நமது சோகத்துக்கு இளையராஜா பின்னணி இசைத்தால்? ஆஹா.. அந்த சோகம் கூட கொஞ்சம் சுகமாகத்தான் இருக்கும்!//

  கண்டிப்பா அண்ணா, இளையராஜாவின் சோக கீதங்கள் கூட சுகமானது தான். வாழ்த்துக்கள்.//


  வாங்க காந்தி.. நன்றி :)

  ReplyDelete
 50. karthikkumar said...
  சிறந்த அறிமுகங்கள் நண்பரே.. பகிர்வுக்கு நன்றி ..:))//


  நன்றிக்கு நன்றி நண்பரே :))

  ReplyDelete
 51. karthikkumar said...
  மக்களே எதிர்பாருங்கள் விரைவில்....

  வைகை (உண்மை சுடும்) - ஒரு வாழும் வரலாறு (வரலாற்று நாயகர்)

  :)///

  மச்சி பேமென்ட் எல்லாம் வாங்கிட்டியா?.. இன்னும் வைகை ஏதும் பேலன்ஸ் வெச்சிருக்காரா?.. சொல்லு மச்சி வாங்கி கொடுத்துடறேன்.. :))///

  மச்சி.இதுக்கெல்லாம் காசு தேவையில்ல..அன்பால சேர்ந்த கூட்டம்! நான் என்ன போலீசா? :))

  ReplyDelete
 52. தமிழ்வாசி - Prakash said...
  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்...//


  நன்றி தமிழ்வாசி :))

  ReplyDelete
 53. Lakshmi said...
  அறிமுகங்கள் அனைவருக்கும்
  வாழ்த்துக்கள்.//


  நன்றிங்க :))

  ReplyDelete
 54. வாழ்த்துக்கள். அருமையான அறிமுகங்கள்:)

  ReplyDelete
 55. பங்கு கலக்குங்க நான் அப்புறம் வர்றேன்

  ReplyDelete
 56. //அந்த அனுபவத்தை சேக்காளியின் இந்த தளத்தில் சென்று அனுபவித்து வாருங்கள்//
  தங்கள் பதிவில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே.அதை எனக்கு தெரிவித்த மாணவனுக்கு நன்றி சொல்வதை விட 100/100 மதிப்பெண் வழங்கினால் மகிழ்வார் என்பதால் 1/1 மதிப்பெண் வழங்கி என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.

  ReplyDelete
 57. பரவட்டும் பரவட்டும் இசைவெள்ளம் பரவட்டும்........

  ReplyDelete
 58. ராக தீபங்கள் அறிமுகங்கள் அருமை

  ReplyDelete
 59. தங்களுக்கும் தங்களால் இன்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 60. //மனசாட்சி - தம்பி.. போன் வொயர் பிஞ்சு ஒரு நாள் ஆச்சு! //

  உங்கள விடவும், உங்க மனசாட்சி ரொம்ப நல்லவனா இருப்பான் போல.

  ReplyDelete
 61. இசை முகங்களை அறிமுகம் செய்திருப்பது அடியேனுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

  நன்றிண்ணே!

  ReplyDelete
 62. Harini Nathan said...
  வாழ்த்துக்கள். அருமையான அறிமுகங்கள்:)//


  நன்றி..தொடர்ந்து வாங்க :))

  ReplyDelete
 63. தினேஷ்குமார் said...
  பங்கு கலக்குங்க நான் அப்புறம் வர்றேன்//


  வாங்க பங்கு.. ஒன்னியும் அவசரமில்லை..மெதுவா வாங்க :))

  ReplyDelete
 64. சேக்காளி said...
  தங்கள் பதிவில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி நண்பரே.அதை எனக்கு தெரிவித்த மாணவனுக்கு நன்றி சொல்வதை விட 100/100 மதிப்பெண் வழங்கினால் மகிழ்வார் என்பதால் 1/1 மதிப்பெண் வழங்கி என் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன்.//

  மாணவனுக்கு இதுவே அதிகம் :))

  ReplyDelete
 65. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  பரவட்டும் பரவட்டும் இசைவெள்ளம் பரவட்டும்........//


  பரவுறது இருக்கட்டும்..தொபுக்கடீர்னு குதிச்சேளா இல்லையோ?

  ReplyDelete
 66. Jaleela Kamal said...
  ராக தீபங்கள் அறிமுகங்கள் அருமை///


  நன்றிங்க :)

  ReplyDelete
 67. மாய உலகம் said...
  தங்களுக்கும் தங்களால் இன்று வலைச்சரத்தில் அறிமுகபடுத்திய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்//

  நன்றி.. தொடர்ந்து வாங்க :)

  ReplyDelete
 68. சத்ரியன் said...
  //மனசாட்சி - தம்பி.. போன் வொயர் பிஞ்சு ஒரு நாள் ஆச்சு! //

  உங்கள விடவும், உங்க மனசாட்சி ரொம்ப நல்லவனா இருப்பான் போல.//


  அது அப்பிடித்தான் அண்ணே.. நான் நல்லவன்... மனசாட்சி ரொம்ப நல்லவன் :)

  ReplyDelete
 69. சத்ரியன் said...
  இசை முகங்களை அறிமுகம் செய்திருப்பது அடியேனுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது.

  நன்றிண்ணே!//


  கண்டிப்பா..இசையை ரசிப்பவர்களுக்கு பிடிக்கும்! என்னைப்போல :)

  ReplyDelete
 70. மச்சி முதல் பால்லயே சிக்சர் அடிச்சி இருகே!

  இளையாராஜா வெச்சி மங்களகரமான ஆரம்பிச்சி இருக்கே... கலக்கு

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது