07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, August 25, 2011

விஸ்வநாதன்... வேலை வேண்டும் :-))

அனைவருக்கும் வணக்கம்,
நேத்து கொஞ்சம் மருந்து  வாடை அதிகமா தெரிஞ்சதுன்னு நினைக்கிறேன்.. மனசு சந்தோசமா இருந்தா எந்த நோயும் அண்டாது! மனசு சந்தோசமா இருக்க என்ன வேணும்? இந்த காலத்துல வேற என்ன? பணம்தான்! பணம் ஈட்ட நல்ல வேலை கிடைக்கணும்.. நல்ல வேலை கிடைக்க நல்லா படிக்கணும்! என்னடா..இதுதான் எல்லோருக்கும் தெரியுமேன்னு சொல்றீங்களா? பரவாயில்ல.. ஆனா இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று எல்லோருக்கும் தெரிவதில்லை! முறையான வழிகாட்டல் இல்லாமல் தவறான கல்வியை தவறானா கல்லூரியில் படித்தவர்களும் உண்டு! அப்படியே நல்ல படிப்பு படித்தாலும் எவ்வாறு வேலை தேடிக்கொள்வது என்று பலபேருக்கு தெரிவதில்லை! இந்த கவலைகள் உங்களுக்கு இருந்தால் மேலும் படியுங்கள்.. இல்லையென்றாலும் படியுங்கள்.. நண்பர்களுக்கு சொல்லுங்கள்!
பல கிராமப்புற மாணவர்களுக்கு பள்ளி முடிந்து கல்லூரி செல்லும்போது அங்கு அரசு தனக்கு என்ன சலுகைகளையும் உதவிகளையும் தருகிறது என்பதுகூட முழுமையாக தெரியாது! அவர்களுக்காகவே இவர் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு அரசு அளிக்கும் சலுகைகளையும் கவுன்சிலிங் பற்றியும் குடிமகன் என்று பேரை வைத்துக்கொண்டு விளக்கமாக கூறுகிறார் சென்று பாருங்கள்!

சரி..கல்லூரியை முடித்துவிட்டீர்கள்? மேற்படிப்பு வெளிநாட்டில் படிக்க ஆசையா? ஆனால் எந்த கல்லூரி எந்த நாட்டில் சிறந்தது என்ற குழப்பம் வரும்! உங்களுக்காகத்தான் இந்த தளம்! MBA என்ற தளத்தை வைத்துக்கொண்டு மஹா கொடுக்கும் பட்டியலையும் தகவல்களையும் சென்று பாருங்கள்! உதவியாக இருக்கும்.

நம்மில் பலருக்கு ஆசிரியர் தொழில்தான் கனவாக இருக்கும்..அதிலும் அந்த வேலை அரசாங்க வேலையாக அமைந்துவிட்டால்? இரட்டை சந்தோசம்தான்! தமிழக அரசின் ஆசிரியர் வேலைவாய்ப்பு செய்திகளை இந்த தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பு செய்திகள் தளத்தில் சென்று பாருங்கள்! அரசின் அறிவிப்புகள் தகவல்கள் உடனுக்குடன் இங்கு கிடைக்கின்றது!

தமிழ்நாடு மட்டும் இல்லை இந்தியாவில் எந்த மூலையில் அரசாங்க வேலையிருந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பவரா நீங்கள்? அப்போ.. நீங்கள் அவசியம் சென்று இந்த கவர்மென்ட் ஜாப்ஸ் இன் இந்தியா என்ற தளத்தை பாருங்கள்! கண்டிப்பாக உங்களுக்கு வேலை கிடைக்கும்!

படித்த படிப்புக்கு வேலையில்லையே என்று கவலைப்படுபவரா நீங்கள்? நீங்கள் அவசியம் இந்த சர்காரி - நவ்க்ரி என்ற தளத்தை பாருங்கள்.. உங்கள் வேலையை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்! அவ்வளவு வேலைவாய்ப்பு செய்திகள் இங்கு கொட்டி கிடக்கின்றது!

உள்நாட்டில் வேலை வேண்டாம்..வெளிநாட்டில்தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவரா நீங்கள்? ஒரு நாட்டுக்கு செல்லும் முன் அந்த நாட்டின் குடிநுழைவு விதிகளை பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்! இந்த தகவல்களுடன் அங்கு உள்ள வேலை வாய்ப்புகளையும் பட்டியல் இடுகிறது இந்த தளம். அவசியம் சென்று பாருங்கள்.

வெளிநாட்டில் குறிப்பாக சிங்கபூரில்தான் வேலை வேண்டுமா? நீங்கள் இந்த தோத்தவண்டா தளத்தை தொடர்ந்து வாருங்கள்.. உங்கள் வேலை தேடும் முயற்சி வெற்றி அடையும்! அவ்வப்போது சிங்கப்பூரின் வேலைவாய்ப்பு செய்திகளை பதிந்து வருகிறார் இவர்.


எவ்வளவு படித்து எங்கு வேலை பார்த்தாலும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உண்மையாக உழையுங்கள்! உயர்வு உங்களை தேடி வரும்! (யாருப்பா அது? நீ ஏன்டா அலுவலக நேரத்துல வேலை பார்க்காம இந்த பதிவ போட்டன்னு கேக்குறது? அட்வைஸ் வேப்பெண்ணை மாதிரி கொடுக்குறது ஈசி.. குடிக்கிறதுதான் கஷ்டம்..ஹி..ஹி)


 
நன்றியுடனும் வாழ்த்துக்களுடனும்,
வைகை 


43 comments:

 1. வணக்கம்,

  வேலைவாய்ப்புத் தகவல்கள் சார்ந்த வலைத்தளங்களா??

  இருங்க எனக்கு எதாவது வேலை கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்.... :)

  ReplyDelete
 2. பகிர்வுகள் அருமை மாப்ள......அதே நேரத்துல இந்த அட்வைஸ் பன்றியே அததான்யா தாங்க முடியல....பயபுள்ள நீ திருந்தறதே கெடயாது இதுல வேப்பன்னே விளக்கன்னேன்னு விளக்கம் வேற ஹிஹி...

  ReplyDelete
 3. மாணவன் said...
  வணக்கம்,

  வேலைவாய்ப்புத் தகவல்கள் சார்ந்த வலைத்தளங்களா??

  இருங்க எனக்கு எதாவது வேலை கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்.... :)//

  வணக்கம் :)
  அதெல்லாம் படிச்ச புள்ளைங்களுக்கு தம்பி.. உன்னைமாதிரி படிச்சிகிட்டு இருக்குற பயலுகளுக்கு இல்லை :))

  ReplyDelete
 4. விக்கியுலகம் said...
  பகிர்வுகள் அருமை மாப்ள......அதே நேரத்துல இந்த அட்வைஸ் பன்றியே அததான்யா தாங்க முடியல....பயபுள்ள நீ திருந்தறதே கெடயாது இதுல வேப்பன்னே விளக்கன்னேன்னு விளக்கம் வேற ஹிஹி...//

  தக்காளி விடுயா.. இப்ப அட்வைஸ் செஞ்சாதான் உண்டு.. நம்ம ப்ளாக்ல செஞ்சா தொரத்தி அடிப்பாங்கள்ள?

  ReplyDelete
 5. மச்சி, எம்மெல்லே ஆக எங்கே படிக்கணும்னு சொல்லவே இல்லை?

  ReplyDelete
 6. //இருங்க எனக்கு எதாவது வேலை கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்.... :)//

  வணக்கம் :)
  அதெல்லாம் படிச்ச புள்ளைங்களுக்கு தம்பி.. உன்னைமாதிரி படிச்சிகிட்டு இருக்குற பயலுகளுக்கு இல்லை :))///

  இல்லண்ணே.. எதாவது பார்ட் டைம் ஜாப் இருக்குமான்னு பார்த்தேன்.... :))

  ReplyDelete
 7. நாகராஜசோழன் MA said...
  மச்சி, எம்மெல்லே ஆக எங்கே படிக்கணும்னு சொல்லவே இல்லை?//


  அதுக்கு சத்தியமூர்த்தி பவன் போய் வேட்டி கிழிக்க கத்துக்க மச்சி :))

  ReplyDelete
 8. மாணவன் said...
  //இருங்க எனக்கு எதாவது வேலை கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்.... :)//

  வணக்கம் :)
  அதெல்லாம் படிச்ச புள்ளைங்களுக்கு தம்பி.. உன்னைமாதிரி படிச்சிகிட்டு இருக்குற பயலுகளுக்கு இல்லை :))///

  இல்லண்ணே.. எதாவது பார்ட் டைம் ஜாப் இருக்குமான்னு பார்த்தேன்.... :))//

  உனக்குத்தான் சாட் பண்ணவே நேரம் இல்லையே தம்பி? என்கூடத்தான் :))

  ReplyDelete
 9. அருமையான தளங்களின் அறிமுகங்கள்..!

  ஆமா நம்ம ரேஞ்சுக்கு இங்கிட்டு எல்லாம் வேலை கிடைக்குமா..?

  ReplyDelete
 10. மக்கா வைகை சிங்கப்பூர்ல ஆர் ஜெ ஆகணும் ..இதுக்கு என்ன செய்யணும் ..

  ReplyDelete
 11. அருமையான தளங்களின் அறிமுகங்கள்.. வாழ்த்துகள்.

  ReplyDelete
 12. வெங்கட் said...
  அருமையான தளங்களின் அறிமுகங்கள்..!

  ஆமா நம்ம ரேஞ்சுக்கு இங்கிட்டு எல்லாம் வேலை கிடைக்குமா..?//


  நம்ம ரேஞ்சுக்கு இன்னும் வேலை கண்டுபிடிக்கல.. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க.. நிலாவுக்கு போற ராக்கெட் பாதிவழில நின்னுபோனா தள்ளிவிட்ற வேலை ஒன்னு இருக்கு..அப்ப சொல்றேன் :))

  ReplyDelete
 13. இம்சைஅரசன் பாபு.. said...
  மக்கா வைகை சிங்கப்பூர்ல ஆர் ஜெ ஆகணும் ..இதுக்கு என்ன செய்யணும் ..//


  மக்கா சொல்லீட்டிங்கள்ள?... சொல்லிட்டிங்கள்ள மக்கா? விடுங்க மக்கா.... இன்னும் ஆறு மாதத்துல அதுக்குண்டான வேலைய மாணவன் பார்த்துருவான் :))

  ReplyDelete
 14. TERROR-PANDIYAN(VAS) said...
  அருமையான தளங்களின் அறிமுகங்கள்.. வாழ்த்துகள்.//


  நமக்குத்தான் வரலையே? அப்பறம் தம்கட்டி முக்குர? :))

  ReplyDelete
 15. I am sure that it will be useful to many.

  ReplyDelete
 16. நாகராஜசோழன் MA said...
  மச்சி, எம்மெல்லே ஆக எங்கே படிக்கணும்னு சொல்லவே இல்லை?//

  அட ராசப்பா அந்த எழவுக்கு படிப்பே தேவை இல்லை... :))வூர்ல வெந்தது வேகாதது, பொட்டி கடைல கடன் சொன்னது, பீடிய கிள்ளி குடிச்சது, இந்த மொத்த க்ரூப்பும் அங்கதான் இருக்கு... :))

  ReplyDelete
 17. ஏன்னே கேக்ரான் மேக்ரான் கமபனில வேலை வேணும்... எந்த ப்ளாக் போகணும் லிங்க் ப்ளீஸ்.. :))

  ReplyDelete
 18. மேல இருக்குற கமென்ட் எல்லாம் விடுங்க ... நீங்க கலக்குங்க மாம்ஸ் ... ஒவ்வொரு நாளும் பின்றீங்க :))

  ReplyDelete
 19. வேலை வாய்ப்பு பற்றிய தளங்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி அண்ணா. வாழ்த்துக்களுடன் எதிர்ப்பார்க்கிறேன் அடுத்த பதிவை.

  ReplyDelete
 20. Chitra said...
  I am sure that it will be useful to many.//

  Thanks.. :))

  ReplyDelete
 21. karthikkumar said...
  நாகராஜசோழன் MA said...
  மச்சி, எம்மெல்லே ஆக எங்கே படிக்கணும்னு சொல்லவே இல்லை?//

  அட ராசப்பா அந்த எழவுக்கு படிப்பே தேவை இல்லை... :))வூர்ல வெந்தது வேகாதது, பொட்டி கடைல கடன் சொன்னது, பீடிய கிள்ளி குடிச்சது, இந்த மொத்த க்ரூப்பும் அங்கதான் இருக்கு... :))//

  மச்சி.. பொம்பளைய கைய புடிச்சி இழுத்தது..இதை விட்டுட்டியே? ? :))

  ReplyDelete
 22. karthikkumar said...
  ஏன்னே கேக்ரான் மேக்ரான் கமபனில வேலை வேணும்... எந்த ப்ளாக் போகணும் லிங்க் ப்ளீஸ்.. :))//


  கோ டூ சிரிப்பு போலிஸ் ப்ளாக் :)

  ReplyDelete
 23. karthikkumar said...
  மேல இருக்குற கமென்ட் எல்லாம் விடுங்க ... நீங்க கலக்குங்க மாம்ஸ் ... ஒவ்வொரு நாளும் பின்றீங்க :))//


  தேங்க்ஸ் மச்சி :))

  ReplyDelete
 24. vaigai...differnt thinking..differnt post...hats off...:-)

  ReplyDelete
 25. காந்தி பனங்கூர் said...
  வேலை வாய்ப்பு பற்றிய தளங்களை பகிர்ந்துக்கொண்டமைக்கு மிக்க நன்றி அண்ணா. வாழ்த்துக்களுடன் எதிர்ப்பார்க்கிறேன் அடுத்த பதிவை.//


  நன்றி காந்தி.. கண்டிப்பாக :))

  ReplyDelete
 26. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  I am sure that it will be useful to many. (C&P)//

  நன்றி அண்ணா! (த்தூ..) :))

  ReplyDelete
 27. வெட்டி ஆபிசர்களுக்கு தேவையான பயனுள்ள தளங்கள் பங்கு நான் ஊர்ல இருக்கும்போதே இந்த மாதிரி யாராவது என்னை கைட்னஸ் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் .. இப்பமட்டும் என்ன நானும் தேடி பார்க்குறேன் பங்கு ....

  ReplyDelete
 28. ஆனந்தி.. said...
  vaigai...differnt thinking..differnt post...hats off...:-)//

  ரொம்ப நன்றி.. அடிக்கடி வாங்க..காணாம போய்டறீங்க? :))

  ReplyDelete
 29. தினேஷ்குமார் said...
  வெட்டி ஆபிசர்களுக்கு தேவையான பயனுள்ள தளங்கள் பங்கு நான் ஊர்ல இருக்கும்போதே இந்த மாதிரி யாராவது என்னை கைட்னஸ் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் .. இப்பமட்டும் என்ன நானும் தேடி பார்க்குறேன் பங்கு ....//

  கண்டிப்பா.. நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்து பங்கு :))

  ReplyDelete
 30. பகிர்வுக்கு நன்றிங்கோ....

  ReplyDelete
 31. அறிமுகமான அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 32. நல்ல அறிமுகங்கள் அண்ணா

  ReplyDelete
 33. பயனுள்ள அறிமுகங்கள்.
  அறிமுகமான நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 34. இன்னும் வேலைவாய்ப்பு பற்றிய செய்திகளைத் தாங்கிய பதிவர்கள் நிறையத் தோன்றவேண்டும்..

  இன்றைய வலைப்பதிவர்கள்
  தம் அருகாமையில் இருக்கும் வேலைவாய்ப்புகளைத் தம் வலையில் அறிமுகப்படுத்துவதும் வரவேற்புக்குரியாதாகும்.

  ReplyDelete
 35. ஏணுங்ணா,

  இந்த படிக்காத பயபுள்ளைக்கி அங்க ஒரு வேலையும் காணமே!

  இந்த ‘லிங்க்’ குடுக்கிறத விட்டுட்டு வேலை புடிச்சிக்குடுக்கிற வேலைய ஆரம்பிங்ணா. ( நாங்கெல்லாம் ஓசியில மங்களம் பாடிக்குவோம்ல.)

  ReplyDelete
 36. நீங்க ஒரு எம்ப்ளாய்ண்ட்மெண்ட் எக்ஸ்சேஞ்ச்ங்க!:-)

  ReplyDelete
 37. //(யாருப்பா அது? நீ ஏன்டா அலுவலக நேரத்துல வேலை பார்க்காம இந்த பதிவ போட்டன்னு கேக்குறது? //

  நான் கேட்க நினைச்சேன்... நீங்களே போட்டுட்டீங்க!!!

  ReplyDelete
 38. மச்சி நல்ல கான்செப்ட்ட எடுத்திருக்க... நல்லா போய்ட்டு இருக்கு, தொடர்ந்து கலக்கு..........

  ReplyDelete
 39. @ வைகை - இந்த மாபெறும் மேடையில் என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!

  ReplyDelete
 40. தங்களால் அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 41. நல்ல அறிமுகங்கள்.. வாழ்த்துக்கள் உங்களுக்கும் , அறிமுகங்களுக்கும்

  ReplyDelete
 42. அருமையான தளங்களின் அறிமுகங்கள்..!

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது