07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, August 24, 2011

கண்கள் இரண்டால்..உன் கண்கள் இரண்டால்... :-))

அனைவருக்கும் வணக்கம்,
நேற்று இசை மழையில் நனைந்த உங்கள் மனதுக்கு கொஞ்சம் ஜலதோஷம் பிடித்திருக்கும்! அதனால்தான் இன்று கொஞ்சம் மருந்துகளோடு வருகிறேன்! பெரும்பாலும் எல்லோருக்குமே நம் உடல் உறுப்புகள்மீது அதிக அக்கறை இருக்கும்! அற்புத கீர்த்தி வேண்டின்.. ஆனந்த வாழ்வு வேண்டின் என்ற காலம் போய்.. அற்புத கண்கள் வேண்டின்.. அளவான தொப்பை வேண்டின்..இப்படி வேண்டிக்கொள்ளும் நிலைக்கு வந்துவிட்டோம்! இதற்க்கு நமது வேலை சூழ்நிலையும் உணவு பழக்க வழக்கங்களும்தான் காரணம்! இந்த சூழ்நிலையிலும் நம் உடம்பை பராமரிப்பது எப்படி என்று பல பெரியவங்க இலவசமாகவே சொல்றாங்க.. என்னான்னுதான் கொஞ்சம் போய் பாருங்களேன்! :)கண்... நம் உடம்பில் அதிமுக்கியமான உறுப்பு! ஒருவனின் வாயில் வரும் வார்த்தைகளை விட கண்களில் வரும் வார்த்தைகள் உண்மையை சொல்லிவிடும்! பல அழகான பெண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தவித்த பல ஆண்களில் நானும் ஒருவன்.. அவ்வளவு கூர்மை.. நம்ம கஜோல் கண்கள் போல! அந்த கண்களை எப்படி பாதுகாப்பது? எப்படி சோர்வடைய விடாமல் செய்வது? அழகாக்குவது? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை தெரிய வனப்பு தளத்தில் சந்திரகௌரி சொல்லுகிறார் போய் பாருங்கள்!

என்றுமே இளமையாக இருக்க வேண்டும்! இப்படி யாருக்குத்தான் ஆசை இருக்காது? ஆனால் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று யாருக்குமே தெரியாது! மெடிக்கல் நியூஸ் என்ற இந்த தளத்தை சென்று பாருங்கள்.. அள்ள.. அள்ள குறையாத அமுத சுரபியாக மருத்துவ தகவல்கள் கொட்டி கிடக்கிறது!

முதுகுவலி.. இதுதான் இன்றைய பெரும்பாலோனரின் பிரச்னை! ஏனென்றால் நமது வேலைகளை நாம் அவ்வாறு அமைத்துக்கொண்டோம்! சில தமிழ் படங்களை உட்க்கார்ந்து பார்த்தாலும் முதுகு வலிதான் மிச்சம்! கவலைய விடுங்கள் எதுவுமே தப்பில்லை என்று சொல்லி டாக்டர் சுனில் முதுகு வலிக்கான காரணங்களையும் தீர்வையும் சொல்லுகிறார் போய் பாருங்கள்! அப்பறம் பாருங்க.. நீங்க தைரியமா பவர் ஸ்டார் படமே பார்க்கலாம்!

சில குழந்தைகளும் சரி..  டீன் ஏஜில் இருக்கும் குழந்தைகள் சிலருக்கும் இயல்பான சுறுசுறுப்பான நடவடிக்கை இல்லாமல்... ஒருவித சோகைத்தன்மையுடன் இருப்பார்கள்! இதற்க்கு ரத்த சோகையே காரணம் அதை எப்படி குணமாக்குவது என்று வழிமுறைகளுடன் ஆயுர்வேதமருத்துவத்தில் சொல்லுகிறார் சென்று பாருங்கள்!

மன அழுத்தம்.. இன்று சர்வ சாதாரணமாக இது அனைவருக்கும் உள்ளது! சில பேரோட பதிவ படிச்சா அது இன்னும் கூடும்.. அத விட்ருங்க! ஆனா.. வெளிப்படையான நோயை விட இது கொஞ்சம் ஆபத்தானது! கவனிக்காமல் விட்டால் குடும்பத்தையே சிதைக்கும் தன்மையுள்ளது! இந்த உளவியல் நோய்க்கு சித்த மருத்துவத்தில் தீர்வு உள்ளது என்று அடித்து கூறுகிறார் போளூர் தயாநிதி! இதை பார்க்காமல் விட்டோமே என்று மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் எதற்கும் சென்று பார்த்துவிடுங்கள்!

குழல் இனிது.. யாழ் இனிது என்பார்..தன் மக்கள் மழலை சொல் கேளாதோர்.. இதைவிட குழந்தைகளின் அருமையை எப்படி சொல்லமுடியும்? இன்று பல தம்பதியர்களின் கவலையே குழந்தை இல்லை என்பதுதான்! இதற்க்கு உளவியல் ரீதியாகவும் மருத்துவ ரீதியாகவும் பல காரணங்கள் உள்ளன! இதைப்பற்றிய பல வாசகர்களின் சந்தேகங்களுக்கு பதிலையும் தீர்வையும் மருத்துவம் பேசுகிறது என்று சொல்லிக்கொண்டிருக்கிறார் பாருங்கள்!

எல்லாத்துக்கும் மருந்து சொல்லியாச்சு.. காதல் நோய்க்கு மருந்து எங்கன்னு கேக்குறவங்களுக்கு.. காதல் நோய்க்கு மருந்தும் காதல்தான்! கொஞ்சம் அதிகமாக உண்மையாக காதலித்துப்பாருங்கள்... அதுவே மருந்து போலதான்!


நன்றியுடனும் வாழ்த்துகளுடனும்..
வைகை.

68 comments:

 1. வணக்கம்!

  சோதனை மறுமொழி! :)

  ReplyDelete
 2. வணக்கம் வைகை பங்கு... நல்ல பயனுல்ல பதிவுகள் இன்று அருமை தொடருங்கள் உங்கள் பணியை ....

  ReplyDelete
 3. மாணவன் said...
  வணக்கம்!

  சோதனை மறுமொழி! :)

  சோதனை = ஆய்வு

  ReplyDelete
 4. மாணவன் said...
  வணக்கம்!

  சோதனை மறுமொழி! :)//


  நல்லா சோதனை பண்ணிக்கங்க சார் :))

  ReplyDelete
 5. நல்ல பயனுள்ள அறிமுகங்கள்..
  அறிமுகத்தின் விதங்களும் அருமை..
  இதோ பார்க்கிறேன்..

  ReplyDelete
 6. தினேஷ்குமார் said...
  வணக்கம் வைகை பங்கு... நல்ல பயனுல்ல பதிவுகள் இன்று அருமை தொடருங்கள் உங்கள் பணியை ....//


  பங்கு வாங்க.. நன்றி..இதுல உங்களுக்கு பயனுள்ளது நிறைய இருக்கு :)

  ReplyDelete
 7. தினேஷ்குமார் said...
  மாணவன் said...
  வணக்கம்!

  சோதனை மறுமொழி! :)

  சோதனை = ஆய்வு//


  மாணவா..இப்பிடி ஒரு தமிழ் கவிஞர வச்சிக்கிட்டு தப்பு பண்ணலாமா? :)

  ReplyDelete
 8. vidivelli said...
  நல்ல பயனுள்ள அறிமுகங்கள்..
  அறிமுகத்தின் விதங்களும் அருமை..
  இதோ பார்க்கிறேன்..//


  நன்றிங்க..அவசியம் சென்று பாருங்கள் :))

  ReplyDelete
 9. பல அழகான பெண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தவித்த பல ஆண்களில் நானும் ஒருவன்..

  என்னே தங்கள் வார்த்தை வர்ணிப்பு ஆஹா பங்கு பிச்சுட்டீங்க போங்க ... அங்க பாருங்க அண்ணி துறட்டிட்டு ஓடிவராங்க ஓடுங்க பங்கு ஓடுங்க ...

  ReplyDelete
 10. தினேஷ்குமார் said...
  பல அழகான பெண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தவித்த பல ஆண்களில் நானும் ஒருவன்..

  என்னே தங்கள் வார்த்தை வர்ணிப்பு ஆஹா பங்கு பிச்சுட்டீங்க போங்க ... அங்க பாருங்க அண்ணி துறட்டிட்டு ஓடிவராங்க ஓடுங்க பங்கு ஓடுங்க ...//

  நான் அழகான பொண்ணுன்னு சொன்னதே அண்ணியத்தானே? ( ஏன் இந்த கொலை வெறி?) :)

  ReplyDelete
 11. பயனுள்ள அறிமுகங்கள்!இணைந்துவிட்டேன்!பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 12. அறிமுகபடுத்தபட்ட வலைத்தளங்கள் அனைத்தும் அருமை... மிகவும் பயனுள்ள மருத்துவத்தகவல்களை கொண்ட வலைத்தளங்களை பகிர்ந்துகொண்ட உங்களின் இந்த உழைப்பிற்கு ஒரு சல்யூட்! :)

  ReplyDelete
 13. இன்றைய சூழலுக்கு தேவையான மிகவும் பயனுள்ள மருத்துவத் தகவல்கள் கொண்ட வலைத்தளங்களை பகிர்ந்துகொண்டமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....

  ReplyDelete
 14. //காதல் நோய்க்கு மருந்து எங்கன்னு கேக்குறவங்களுக்கு.. காதல் நோய்க்கு மருந்தும் காதல்தான்! கொஞ்சம் அதிகமாக உண்மையாக காதலித்துப்பாருங்கள்... அதுவே மருந்து போலதான்!///

  இத கொஞ்சம் ஒரைக்குற மாதிரி நம்ம தல டெரர்க்கும், டெரர்கும்மியின் புதிய தலைவர் சிரிப்பு போலீஸ் ரமேசுக்கும் கொஞ்சம் தெளிவா விளக்கி சொல்லுங்கண்ணே அப்பவாவது ஒரைக்குதான்னு பார்ப்போம்... :)

  ReplyDelete
 15. வழக்கம்போலவே தொடரட்டும் உங்கள் மகத்தான பணி!

  வாய்ப்பிற்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்... நன்றி வணக்கம்! :)

  ReplyDelete
 16. கோகுல் said...
  பயனுள்ள அறிமுகங்கள்!இணைந்துவிட்டேன்!பகிர்வுக்கு நன்றி!//  நன்றி..தொடர்ந்து வாங்க :))

  ReplyDelete
 17. மாணவன் said...
  அறிமுகபடுத்தபட்ட வலைத்தளங்கள் அனைத்தும் அருமை... மிகவும் பயனுள்ள மருத்துவத்தகவல்களை கொண்ட வலைத்தளங்களை பகிர்ந்துகொண்ட உங்களின் இந்த உழைப்பிற்கு ஒரு சல்யூட்! :)//


  நன்றி திரு.மாணவன் அவர்களே :))

  ReplyDelete
 18. மாணவன் said...
  இன்றைய சூழலுக்கு தேவையான மிகவும் பயனுள்ள மருத்துவத் தகவல்கள் கொண்ட வலைத்தளங்களை பகிர்ந்துகொண்டமைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் பல....//


  இங்கயே நன்றி சொல்லிக்கிட்டு இருந்தா எப்பிடி? அங்க போயும் பாருங்கண்ணே :))

  ReplyDelete
 19. மாப்ள பயனுள்ள தகவல்கள் அடங்கிய பதிவு....நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 20. மாணவன் said...
  //காதல் நோய்க்கு மருந்து எங்கன்னு கேக்குறவங்களுக்கு.. காதல் நோய்க்கு மருந்தும் காதல்தான்! கொஞ்சம் அதிகமாக உண்மையாக காதலித்துப்பாருங்கள்... அதுவே மருந்து போலதான்!///

  இத கொஞ்சம் ஒரைக்குற மாதிரி நம்ம தல டெரர்க்கும், டெரர்கும்மியின் புதிய தலைவர் சிரிப்பு போலீஸ் ரமேசுக்கும் கொஞ்சம் தெளிவா விளக்கி சொல்லுங்கண்ணே அப்பவாவது ஒரைக்குதான்னு பார்ப்போம்... :)//


  உரைக்கிற மாதிரின்னா? கொஞ்சம் மொளகா பொடி கலந்து சொல்லவா? :)

  ReplyDelete
 21. மாணவன் said...
  வழக்கம்போலவே தொடரட்டும் உங்கள் மகத்தான பணி!

  வாய்ப்பிற்கு நன்றிகூறி விடைபெறுகிறேன்... நன்றி வணக்கம்! :)//


  ரேடியோ ஸ்டேசன்ல வேலை பார்க்கிற மாதிரியே பேசுறியே? :)

  ReplyDelete
 22. விக்கியுலகம் said...
  மாப்ள பயனுள்ள தகவல்கள் அடங்கிய பதிவு....நன்றி மற்றும் வாழ்த்துக்கள்!//


  நன்றி மாப்ள.. :)

  ReplyDelete
 23. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  நீங்கள் தொகுத்து, அறிமுகப்படுத்தும் விதத்தில் - உங்களின் உழைப்பு தெரிகிறது . பாராட்டுக்கள், வைகை சார்.

  ReplyDelete
 24. Chitra said...
  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  நீங்கள் தொகுத்து, அறிமுகப்படுத்தும் விதத்தில் - உங்களின் உழைப்பு தெரிகிறது . பாராட்டுக்கள், வைகை சார்.//

  நன்றிங்க..உண்மைய சொன்னா நான் படிக்காமல் விட்ட தளங்களை எனக்கு அடையாளம் காண கிடைத்த வாய்ப்பு இது :))

  ReplyDelete
 25. அருமையான தொகுப்பு ..ஒரு ரவுண்டு போய் பார்க்கிறேன்

  ReplyDelete
 26. ஆனாலும் நீ சேலம் சித்த வைத்தியர பத்தி ஒரு வார்த்தை சொல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது

  ReplyDelete
 27. இம்சைஅரசன் பாபு.. said...
  அருமையான தொகுப்பு ..ஒரு ரவுண்டு போய் பார்க்கிறேன்//

  மக்கா..கேப்டன் போற ரவுண்டு போயிராதிங்க :))

  ReplyDelete
 28. இம்சைஅரசன் பாபு.. said...
  ஆனாலும் நீ சேலம் சித்த வைத்தியர பத்தி ஒரு வார்த்தை சொல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது//


  ஹி..ஹி..அத யாருக்கு சொல்லணுமோ அவங்க ரெண்டு பேருக்கும் தனியா சொல்லிட்டேன் :)

  ReplyDelete
 29. மாணவன் said...
  வணக்கம்!

  சோதனை மறுமொழி! :)/////


  சத்தியா ச்சி சத்திய சோதனை. :)

  ReplyDelete
 30. வைகை said...
  மாணவன் said...
  வணக்கம்!

  சோதனை மறுமொழி! :)//


  நல்லா சோதனை பண்ணிக்கங்க சார் :))////  அப்போ சேலம் போக சொல்றீங்களா மாம்ஸ்?.. :))

  ReplyDelete
 31. இம்சைஅரசன் பாபு.. said...
  ஆனாலும் நீ சேலம் சித்த வைத்தியர பத்தி ஒரு வார்த்தை சொல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது///

  ஹா ஹா பாபு மாம்ஸ் ராக்ஸ் .. :))

  ReplyDelete
 32. கலக்கற மச்சி....

  ஒரு டவுட்டு இருக்கு... விடு தனியா போரம்ல கேட்டுகறேன் :)

  ReplyDelete
 33. அருமையான அறிமுகங்கள்

  ReplyDelete
 34. உண்மை சுடும் ப்ளாக்ல இந்த வாரம் பதிவே வராதுன்னு சந்தோசப்படுறதா? இல்லை வலைச்சரத்துக்கு இந்த நிலைமையான்னு வருத்தப்படுறதா?

  ReplyDelete
 35. //உண்மை சுடும் ப்ளாக்ல இந்த வாரம் பதிவே வராதுன்னு சந்தோசப்படுறதா? இல்லை வலைச்சரத்துக்கு இந்த நிலைமையான்னு வருத்தப்படுறதா?//

  ஒரு நல்லது ஒரு கெட்டது .. :)

  ReplyDelete
 36. ஆனா ஒவ்வொரு பதிவுக்கும் நீங்க சொல்லிருக்கிற விதம் உண்மைலயே ரசிக்கும்படியா இருக்கு ணா :)

  ReplyDelete
 37. நன்றியுடனும் வாழ்த்துகளுடனும்..
  பயனுள்ள அறிமுகங்கள்!
  nice

  ReplyDelete
 38. எடுத்துச் சொன்னவிதம் அருமை!

  ReplyDelete
 39. அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 40. காதல் நோய்க்கு மருந்து எங்கன்னு கேக்குறவங்களுக்கு.. காதல் நோய்க்கு மருந்தும் காதல்தான்!

  என்னும் தங்கள் கருத்தை மெய்ப்பிக்கும்

  இருபேராண்மைகள் என்னும் இடுகை..

  http://gunathamizh.blogspot.com/2010/07/250.html

  ReplyDelete
 41. அனைத்தும் பயனுள்ள அறிமுகங்கள். நன்றி. தொடரட்டும் தங்கள் பணி.

  ReplyDelete
 42. நாகராஜசோழன் MA said...
  :))//


  தமிழ்வாசி - Prakash said...
  பகிர்வுக்கு நன்றி...//


  இருவருக்கும் நன்றிகள் :))

  ReplyDelete
 43. karthikkumar said...
  மாணவன் said...
  வணக்கம்!

  சோதனை மறுமொழி! :)/////


  சத்தியா ச்சி சத்திய சோதனை. :)//

  அது சத்யா இல்லை மச்சி சந்தியா :)

  ReplyDelete
 44. karthikkumar said...
  வைகை said...
  மாணவன் said...
  வணக்கம்!

  சோதனை மறுமொழி! :)//


  நல்லா சோதனை பண்ணிக்கங்க சார் :))////  அப்போ சேலம் போக சொல்றீங்களா மாம்ஸ்?.. :))//

  பப்ளிக்கா சொல்ல வேண்டாம்னு பார்த்தேன்.. சொல்லிட்ட :))

  ReplyDelete
 45. karthikkumar said...
  இம்சைஅரசன் பாபு.. said...
  ஆனாலும் நீ சேலம் சித்த வைத்தியர பத்தி ஒரு வார்த்தை சொல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது///

  ஹா ஹா பாபு மாம்ஸ் ராக்ஸ் .. :))//


  ஆமா... நீண்ட கால கஸ்டமருக்கு கோவத்த பார்த்தியா? :))

  ReplyDelete
 46. அருண் பிரசாத் said...
  கலக்கற மச்சி....

  ஒரு டவுட்டு இருக்கு... விடு தனியா போரம்ல கேட்டுகறேன் :)//


  நன்றி மச்சி..

  நீ என டவுட் கேக்க போறேன்னு தெரிஞ்சு போச்சு :)

  ReplyDelete
 47. "என் ராஜபாட்டை"- ராஜா said...
  அருமையான அறிமுகங்கள்//


  நன்றிங்க :))

  ReplyDelete
 48. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  உண்மை சுடும் ப்ளாக்ல இந்த வாரம் பதிவே வராதுன்னு சந்தோசப்படுறதா? இல்லை வலைச்சரத்துக்கு இந்த நிலைமையான்னு வருத்தப்படுறதா?//


  நீ ஏன் சிரமப்படற? சிரிப்பு போலிஸ் ப்ளாக்ல கொஞ்ச நாளா பதிவு இல்லாம மக்கள் நிம்மதியா இருக்காங்களாம் :))

  ReplyDelete
 49. கோமாளி செல்வா said...
  //உண்மை சுடும் ப்ளாக்ல இந்த வாரம் பதிவே வராதுன்னு சந்தோசப்படுறதா? இல்லை வலைச்சரத்துக்கு இந்த நிலைமையான்னு வருத்தப்படுறதா?//

  ஒரு நல்லது ஒரு கெட்டது .. :)//


  அடப்பாவி? யூ டூ கோமாளி? :))

  ReplyDelete
 50. கோமாளி செல்வா said...
  ஆனா ஒவ்வொரு பதிவுக்கும் நீங்க சொல்லிருக்கிற விதம் உண்மைலயே ரசிக்கும்படியா இருக்கு ணா :)//


  நன்றி செல்வா :))

  ReplyDelete
 51. இராஜராஜேஸ்வரி said...
  நன்றியுடனும் வாழ்த்துகளுடனும்..
  பயனுள்ள அறிமுகங்கள்!
  nice////


  முனைவர்.இரா.குணசீலன் said...
  எடுத்துச் சொன்னவிதம் அருமை!//


  இருவருக்கும் நன்றிகள் :))

  ReplyDelete
 52. முனைவர்.இரா.குணசீலன் said...
  காதல் நோய்க்கு மருந்து எங்கன்னு கேக்குறவங்களுக்கு.. காதல் நோய்க்கு மருந்தும் காதல்தான்!

  என்னும் தங்கள் கருத்தை மெய்ப்பிக்கும்

  இருபேராண்மைகள் என்னும் இடுகை..

  http://gunathamizh.blogspot.com/2010/07/250.html//

  நல்ல வேள ஒத்துக்கினிங்க.. பயந்துகிட்டே இருந்தேன் :))

  ReplyDelete
 53. காந்தி பனங்கூர் said...
  அனைத்தும் பயனுள்ள அறிமுகங்கள். நன்றி. தொடரட்டும் தங்கள் பணி.//


  நன்றி காந்தி :)

  ReplyDelete
 54. வலைச்சரம் மூலம் எனது பதிவுகளை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி வைகை

  ReplyDelete
 55. நான் கேட்க வேண்டிய கேள்வியை பாபு கேட்டுவிட்டதால்.... தால்...ல்....

  ReplyDelete
 56. எம்மை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றிகளும் .எம்மோடு அறிமுகமானவர்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள் நன்றி .

  ReplyDelete
 57. அறிமுகம் செய்தவிதம் அருமை...
  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 58. பல அழகான பெண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தவித்த பல ஆண்களில் நானும் ஒருவன்.. //

  என்னையும் கூட சேத்துக்குங்க

  ReplyDelete
 59. dr suneel krishnan said...
  வலைச்சரம் மூலம் எனது பதிவுகளை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி வைகை//


  நன்றி.. பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து எழுதுங்கள் :))

  ReplyDelete
 60. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  நான் கேட்க வேண்டிய கேள்வியை பாபு கேட்டுவிட்டதால்.... தால்...ல்....///


  பாபு கேட்டதுக்கு நான் பதில் சொல்லிவிட்டதால்... தால்....ல்....

  ReplyDelete
 61. போளூர் தயாநிதி said...
  எம்மை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியமைக்கு உளம் கனிந்த பாராட்டுகளும் நன்றிகளும் .எம்மோடு அறிமுகமானவர்களுக்கு உளம் கனிந்த வாழ்த்துகள் நன்றி .///


  நன்றி.. பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து எழுதுங்கள் :))

  ReplyDelete
 62. சே.குமார் said...
  அறிமுகம் செய்தவிதம் அருமை...
  அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.//


  நன்றிங்க... தொடர்ந்து வாங்க :)

  ReplyDelete
 63. மாய உலகம் said...
  பல அழகான பெண்களின் கண்களை நேருக்கு நேர் பார்க்கமுடியாமல் தவித்த பல ஆண்களில் நானும் ஒருவன்.. //

  என்னையும் கூட சேத்துக்குங்க//


  நம்ம சொல்லிட்டோம்..பல பேர் சொல்லல..அவ்வளவுதான் :)

  ReplyDelete
 64. வலைச்சரத்தில் வாசம் செய்து, வருவோரை அழைத்தெடுத்து தெரிந்த சில தகவல்களைப் பலர் அறியத் தெரிவித்து வாழுகின்ற என்னை, என் தளத்தை அறியவைத்த ஆசிரியர் வைகைக்கு நன்றி பல பகிர்ந்து நிற்கின்றேன். மற்றைய வலைகளையும் அறிமுகப்படுத்தியிருக்கின்றீர்கள். அனைத்தையும் பர்வையிட வேண்டும் என்று ஆசை மேலிடுகின்றது. ஆனால், ஏனோ இந்த நாள் மணித்துளிகளை மட்டுப்படுத்தியிருக்கின்றார்களோ தெரியவில்லை. ஓடுகின்ற கடிகாரத்துடன் சேர்ந்தே ஓடுகின்றோம். கிடைக்கும் நேரத்தில் பலரைத் தேடுகின்றோம். வலைச்சரத்துக்கும் வைகை அவர்களுக்கும் வாழ்த்துகள்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது