07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, August 8, 2011

வந்தனமையா வந்தனம்

அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும், சக பதிவர்களுக்கும் இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பு அளித்த சீனா ஐயா அவர்களுக்கும் முதற்கண் என் வணக்கங்கள்.  இந்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பயத்துடனே துவங்குகிறேன்.  வரும் 7  நாட்களும் சிறந்த பதிவுகளை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை, உங்களின் ஆதரவை தொடரந்து வழங்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன.

இடுகைகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் மன்னியுங்கள் மேலும் அதை சுட்டிக்காட்டினால் தவறுகளை  உடனடியாக திருத்தம் செய்து கொள்கிறேன்.

முக்கிய குறிப்பு :  பதிவுகள் எல்லாம் பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் பதிவேற்றம் செய்யப்படும், அலுவலகத்தில் இருந்து செய்வதால் இந்த தாமதம். முடிந்த வரை விரைந்து பதிவிட முயற்சி செய்கிறேன்.

இந்த இடுகை என்னுடைய வலைச்சரத்தில் முதல் இடுகை, மேலும் என்னுடைய 125 வது பதிவு எனவே ஒரு நகைச்சுவை பதிவாக தொடங்க விருப்பம்..

அதற்கு முன்  என்னை பற்றி ஒரு சுய அறிமுகம்.

நான் ரமேஷ் பாபு நான் பிறந்தது மதுரையில் ஆண்டு 1980, ராமசுப்ரமணியன்,  ஜெயந்தி தம்பதிகளுக்கு மகனாய். கல்வி அறிவை பெற்றது விருதுநகர் இந்து நாடார் உறவின் முறைக்கு பத்தியப்பட்ட விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைபள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஆண்டு 1997.

பிறகு சௌராஷ்ட்ரா கல்லூரியில் இளங்கலை BIO CHEMISTRY 3 1/2 ஆண்டுகள் படித்தேன் (அரியர் இருந்த்தால் ஆறு மாதம் தாமதம்).
பிறகு மதுரை காமராஜர் யூனிவர்சிட்டியில் MCA அது மூன்றாண்டுகள் சரியாய் முடித்து விட்டேன். முடித்த ஆண்டு 2004. அது முதல் இன்று வரை கணினி துறையில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஆறாண்டுகளாய் பெங்களூர் வாசம். ஊருக்கு வந்து செல்வது வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ முறை.

எனக்கு ஒரே ஒரு மனைவி மற்றும் ஒரு குழந்தை பெயர் ரோஹித்.  நேற்றோடு 3 ஆண்டுகள் நிறைவு செய்து விட்டார்  இப்போ பள்ளிக்கும் சென்றுவர ஆரம்பித்து விட்டார். 

இப்போ நான் பிளாக் எழுத ஆரம்பிச்ச கதையை சொல்றேன்

ரொம்ப நாளா வெறுமனே வாசகனாய் இருந்து விட்டு இப்போது தான் எழுத ஆரம்பிச்சு இருக்கேன். இது வரை 124 பதிவுகள் என்னுடைய வலைப்பூ உரைக்கல்லில்.

எழுத துவங்கிய காலத்தில் விழிப்புணர்வு பதிவுகளை எழுதுவது என்றே துவங்கினேன். காரணம் தொடர்ந்து வினவு, சவுக்கு போன்ற வலை தளங்களை தொடர்ந்து வாசித்ததின் ஹாங் ஓவர், முதல் பதிவு லஞ்சம்  தவிர் அப்பறம் வந்துட்டான்யா வந்துட்டான் 

ஆரம்பித்த பின் தான் தெரிந்தது அது எவ்வளவு கடினமான பணி என்று. வேலைபளு காரணமாக நிறைய செய்திகளை சேகரிக்க முடியவில்லை, அது மட்டும் இன்றி அவர்கள் போல எழுத்தும் கை வரவில்லை. பிறகு தமிழ்மணம் / இண்ட்லியில் பல்சுவை பதிவுகளை பார்த்த பின் அது போல எழுதலாம் என்று முடிவு செய்தேன் (என்ன ஒரு சோம்பேறித்தனம்).   

எல்லா தளங்களிலும் (கவிதை / சினிமா விமர்சனம் / கட்டுரை)   நிறைய பேர் இருந்ததால் எனக்கென்று ஒரு தளம் தேவைபட்டதால் கதை சொல்லியாய் மாறினேன்.  அதுவும் நீதி கதைகள் / தன்னம்பிக்கை கதைகள் போன்றவை என் விருப்ப்மாக இருந்தது. ஒரே நீதிக்கு புதிதாய் கதை சொல்லும் உத்தி கை வந்தது. அதை பற்றிக்கொண்டேன்..


நான் விரும்பும் பதிவர்கள் சிலர் இவர்கள் எல்லோருடைய விருப்பமாயும் இருக்கலாம். என்னை எழுத தூண்டிய எழுத்துக்கள் இவர்களுடையவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு  தளத்தில்  சிறந்து விளங்குகிறார்கள் 

ஈரோடு கதிர்

பாமரன்

பலா பட்டறை

சிபி செந்திக்குமார்

நாஞ்சில் மனோ

கவிதை வீதி சௌந்தர் - (இவர் என்னை முதலில் தான் வலைச்சரத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர்)

பிரபாகரன் - (இவர் என்னை முதலில் தான் வலைபூவில் பிறருக்கு அறிமுகம் செய்து வைத்தவர்)

தமிழ்வாசி பிரகாஷ்

விக்கி உலகம்

செங்கோவி
கோகுலத்தில் சூரியன் வெங்கட்

நாற்று நிரூபன்

இன்னும் விட்டு போன நண்பர்கள் மன்னிக்கவும் உங்களை அடுத்த பதிவில் அறிமுகம் செய்து வைக்கிறேன்.

அன்புடன்

ஜ ரா ரமேஷ் பாபு 


16 comments:

 1. வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகள்..

  ReplyDelete
 2. வாங்க ரமேஷ் பாபு

  வாழ்த்துகள்

  ReplyDelete
 3. வாழ்த்துக்கள் சொல்லும் சக பதிவர்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றிகள் கோடி..

  ReplyDelete
 4. வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள் நண்பரே.

  ReplyDelete
 5. அடிச்சி ஆடுங்க பாஸ்.

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் மச்சி, தொடர்ந்தும் ஜமாயுங்கள். அறிமுகங்களால் அசத்துங்கள் சகோதரா.

  ReplyDelete
 7. வாழ்த்துக்கள் மச்சி, தொடர்ந்தும் ஜமாயுங்கள். அறிமுகங்களால் அசத்துங்கள் சகோதரா.

  ReplyDelete
 8. நாங்களும் சொல்லுறோமையா வந்தனம்...
  வாழ்த்துக்கள் ...

  காட்டான் குழ போட்டான்..

  ReplyDelete
 9. அன்பின் ரமேஷ் பாபு - 125 க்கு நல்வாழ்த்துகள் - கலக்குக இங்கும் - நட்புடன் சீனா

  ReplyDelete
 10. அன்பின் ரமேஷ் பாபு - 125 க்கு நல்வாழ்த்துகள் - கலக்குக இங்கும் - நட்புடன் சீனா

  ReplyDelete
 11. 125 வது பதிவாகவும்
  வலைச்சர ஆசிரியர் பதிவாகவும்
  இந்தப் பதிவு
  அமைந்தது மகிழ்வூட்டிகிறது
  ஜமாயுங்கள்

  ReplyDelete
 12. 125- வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. எனக்கு ஒரே ஒரு மனைவி மற்றும் ஒரு குழந்தை பெயர் ரோஹித். நேற்றோடு 3 ஆண்டுகள் நிறைவு செய்து விட்டார் இப்போ பள்ளிக்கும் சென்றுவர ஆரம்பித்து விட்டார்.  ...HAPPY BIRTHDAY, ROHIT! :-)

  ReplyDelete
 14. வலைச்சர வாரத்திற்கு வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது