07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label ஜ.ரா.ரமேஷ் பாபு. Show all posts
Showing posts with label ஜ.ரா.ரமேஷ் பாபு. Show all posts

Sunday, August 14, 2011

பிரிவோம் சந்திப்போம்

அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும், வலைச்சர வாசகர்களுக்கும் வணக்கம்

இன்று வலைச்சரத்தில் கடைசி நாள், எனக்கு இந்த வாய்ப்பை அளித்த ஐயா சீனா மற்றும் அவர் குழுவுக்கும் நன்றி. எடுத்துக்கொண்ட பணியை சிறப்பாய் அல்லது முழுமையாய் செய்து விட்டேனா தெரியவில்லை ஆனால் நிறைவாய் செய்தேன்.

இந்த ஒரு வாரம் ஓடியே விட்டது. இதுவரை என் பதிவுகளுக்கு கருத்துக்களை சொல்லி உற்சாகப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

என்னுடைய பதிவுகள் யாரையும் காயப்படுத்தி இருந்தால் மன்னியுங்கள். இனி ஒரு சந்தர்ப்பம் ஐயா தருவாரா தெரியவில்லை, கொடுத்தால் சந்தோஷமாய் செய்வேன்.

இப்போது பிரிவோம் மீண்டும் மெய்தேடியில் சந்திப்போம்.

அங்கே வலைச்சர அனுபவம் பற்றி சில பதிவுகள் எழுதலாம் என்று திட்டம்.

யாராவது கொஞ்சம் தமிழ்மணத்தில் இணைத்து விடுங்களேன்

இன்றைய செய்தி

"வேறுபாடுகளையும் ஒழுங்கின்மையையும் கொண்டு, சமமானவர்களுக்கும் சமமற்றவர்களுக்கும் ஒரேவித சமத்துவத்தை அளிக்கும் கவர்ச்சி மிக்க அமைப்பே மக்களாட்சி.'' - [பிளாட்டோ]

இன்றைய வலைப்பூ நண்பர்கள்

1. மூட நம்பிக்கைகளை தூக்கி எறியும் இன்னொரு தாத்தா இவர். ஒவ்வொரு பதிவும் நாம் பின்பற்றி வரும் பழக்க வழக்கங்களில் இருக்கும் முட்டாள்தனத்தை பட்டவர்த்தனமாக உரித்து காட்டுகிறார். பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ?? இது ஒரு சாம்பிள் பதிவு அவருடைய எழுத்தின் வீரியத்தை உணர

2. இவர் அரசியல் பதிவுகள் தருவதில் சமர்த்தர், தேன்மொழி என்று தலைப்பிட்டு தீமொழி பேசி வரும் இவர் பதிவுகள் அருமை. இவரின் சமீபத்திய சூடான பதிவு

3. வலைபதிவர்களையும் வலைப்பூக்களையும் அறிமுகபடுத்தும் அருமையான பணியை செய்துவருகிறது இவரது வலைப்பூ. சமீபத்தில் அறிமுகம் செய்த பதிவர் நம்ம ஆபிசர் . என்னை பத்தி தேடி பார்த்தேன் ஒண்ணும் கிடைக்கலை..

அன்புடன்
ஜ. ரா. ரமேஷ் பாபு 


மேலும் வாசிக்க...

Saturday, August 13, 2011

கழுத்தில் தொங்கும் எமன்


அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும், வலைச்சர வாசகர்களுக்கும் வணக்கம் 

இன்றைய செய்தி

* உங்கள் மொபைல் போனின் தனி அடையாள எண்ணைத் தனியே குறித்து வைக்கவும்.

* மொபைல் போன் தொலைந்துவிட்டால், காவல் நிலையத்தில் புகார் கொடுக்கையில் பயன்படும். அந்த போனைப் பயன்படுத்துபவர்களை அறிய இது உதவும்.

* மொபைல் போனில் கதிர்வீச்சு இருப்பது உண்மையே. அதன் வேக அளவு தான் போனுக்கு போன் மாறுபடும்.

* கருவுற்ற தாய்மார்கள் அடிக்கடி மொபைல் போன் பயன்படுத்துவது வளரும் குழந்தையைப் பாதிக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

எனவே சற்றுத் தள்ளி வைத்து, இயர்போன் மூலம் பயன்படுத்தலாமே. கூடுமானவரை பயன்படுத்துவதனைத் தவிர்க்கலாமே.

யாராவது கொஞ்சம் தமிழ்மணத்தில் இணைத்து விடுங்களேன்


இன்றைய வலைப்பூ நண்பர்கள்

1.    தொழில்நுட்ப செய்திகள் அளிப்பதில் வல்லவர் இவர். குறிப்பாக மொபைல் தொழில்நுட்பம் பற்றி பல அறிய தகவல்களை நமக்கு அளிக்கிறார். ராக்கெட் ராஜா என்று தலைப்பிட்ட அவருடைய வலைப்பூ நமக்கு பல ஆச்சரிய    செய்திகளை தருகிறது.  அவருடைய சமீபத்திய பதிவு விண்வெளி பற்றிய  அநேக வியக்க வைக்கும் செய்திகளை தருகிறார்
   

2.    இவர் ஒரு தொழில்நுட்ப பதிவர் இவரின்  வலைப்பூ  சாஃப்ட்வேர் பற்றிய கட்டுரைகளே அக்கிரமித்து உள்ளன.  இவருடைய சமீபத்திய பதிவு உங்கள் போட்டோவில் நிழல்படம்போல தண்ணீர் அனிமேசன் உருவாக்குவது எப்படி? எளிமையா உங்களுக்கு ஃபோட்டோஷாப் சொல்லி குடுக்கும்

3.   வலைப்பூ முழுவதும் எங்கு பார்த்தாலும் தொழில்நுட்ப செய்திகள் லிங்க்குகளாய் நிரம்பி வழிகிறது. அவர் தரும் செய்திகள் மிகவும் ஆச்சரியத்தை தருகிறது. புது புதிதாய் சாஃப்ட்வேர்களை அறிமுகம்    செய்கிறார். இவரின் சமீபத்திய பதிவு இலவச ஆட்டோ ரன் வைரஸ் நீங்கி 3.1 முழு பதிப்பு  எல்லோருக்கும் தேவைப்படும் ஒரு சாஃப்ட்வேர். 


அன்புடன்
ஜ. ரா. ரமேஷ் பாபு

மேலும் வாசிக்க...

Friday, August 12, 2011

காகிதப்பூக்கள்...

அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும், வலைச்சர வாசகர்களுக்கும் வணக்கம்

இன்றைய கவிதை

இவன் கடவுளின் குழந்தை
------------------------------------
தீட்டை கழிக்கும்
தண்ணீர் இவன் கை பட்டதால்
தீட்டானதாம்

பிணம் மிதங்கும்
கங்கை புனிதம்
இவன் கை பட்ட நீரை
வாங்க தயங்கும் மனிதம்

==========================================

தேடு கொஞ்சம் நல்லா தேடு
---------------------------------------
எது இல்லை வாழ்வில்
என்று நீ தேடினால்
எதுவும் இல்லை என்றே
தோன்றும்

எது இருக்கிறது வாழ்வில்
என்று நீ தேடினால்
எல்லாம் இருக்கும் என்றே
தோன்றும்

இன்றைய வலைப்பூ நண்பர்கள்

1. அழகான கவிதைகளால் நிரம்பி இருக்கும் வலைப்பூ இவருடையது ஒவ்வொரு பதிவிலும் அவருடைய வார்த்தை ஜாலங்கள் நினைவுகளின் மறுபக்கம் இது ஒரு சாம்பிள் பதிவு அவருடைய வார்த்தை ஜாலங்கள் தெரிந்து கொள்ள

2. இவர் புலம்பல் கவிதைகள் தருவதில் சமர்த்தர், இவர் வேண்டாம் என்று சொன்னாலும் இவர் பேனா கேட்பதிலையாம். இவரின் சமீபத்திய புலம்பல் பதிவு இது புலம்பலா இல்லை அலம்பலா தெரியல

3. இவரும் ஒரு கவிஞர் பிற கவிஞர்களின் கவிதைகளும் இவரது வலைப்பூ முழுக்க . சமீபத்தில் இவர் எழுதிய கவிதை நீயே ஒரு கவிதை - அம்மா கொஞ்சம் படிச்சு பாருங்களேன்

அன்புடன்
ஜ. ரா. ரமேஷ் பாபு


மேலும் வாசிக்க...

Thursday, August 11, 2011

ஹோட்டல் எமவிலாஸ் - சைவம்

அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும், வலைச்சர வாசகர்களுக்கும் வணக்கம்

இன்று முட்டை இல்லா வெஜ் ஆம்லெட் செய்வது எப்படின்னு சொல்லி  தரப்போறேன்

தேவையான பொருட்கள்

1. சோளமாவு - 2 தேக்கரண்டி
2. அரிசிமாவு - 2 தேக்கரண்டி
3. வெங்காயம் - 1 பெரியது பொடியாக நறுக்கி கொள்ளவும்
4. தூள் பெருங்காயம் - தேவையான அளவு
5. உப்பு - தேவையான அளவு
6. பச்சை மிளகாய் - 2 நீளமானது பொடியாக நறுக்கி கொள்ளுங்கள் (மூலம் இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது அல்லது மிளகு தூள் சேர்த்துக்கொள்ளுங்கள்)

செய்முறை

சோளமாவு, அரிசிமாவு இரண்டையும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக இல்லாமலும் ரொம்ப தண்ணீராக இல்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள்.

இந்த சோளமாவு கரைசலில் வெட்டி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக கலக்கிக்கொள்ளுங்கள்.

தோசை கல்லை அடுப்பில் வைக்கவும், நன்கு சூடேறிய பிறகு சிறிது எண்ணை ஊற்றி தோசை கல் முழுவதும் தேய்த்துக்கொளுங்கள். ஒரு கரண்டியில் கரைத்த மாவை எடுத்து ஆம்லெட் சைஸ்க்கு ஊற்றுங்கள்,

நன்கு சிவந்து வந்ததும் திருப்பி போடுங்கள். சூடாய் பரிமாறுங்கள்

டிஸ்கி 1 : சமைத்து மட்டும் பாருங்கள், சாப்பிடுவதற்க்கு நான் கியாரண்டி இல்லை.

டிஸ்கி 2 : மேலே வைத்த தலைப்புக்கும் கீழே சொல்லப்பட்டுள்ள பதிவர்களுக்கும் எந்த சமந்தமும் இல்லை, சும்மா தமாசுக்கு தலைப்பு அப்பிடி. யாரேனும் தவறாக இருக்கிறது என்று நினைத்தால் மன்னியுங்கள்.

இனி வலை உலகில் எனக்கு பிடித்த சிலர்

1. வித விதமாய் சமையல் செய்வது எப்படி என்று சொல்லிதரும் அழகான வலைப்பூ இவருடையது. பயணிக்கும் பாதை என்று தலைப்பிட்டு இஸ்லாம் / சமையல்/கைவினை/செய்திகள்/மருத்துவம்/டிப்ஸ் என்று பல சுவாரஸ்ய குறிப்புகளை தருகிறார், சமீபத்தில் இவர் பதிவிட்ட நண்டு முருங்கைக்காய் குருமா பதிவில் பல சுவாரசியமான செய்திகளையும் தருகிறார்..


2. அடுத்த சமையல் ராஜா இவர், பல உபயோகமான குறிப்புகளும் தருகிறார். இந்த பதிவு ஒரு சாம்பிள் இவர் எப்பிடி அல்வா கிண்டுறார்ன்னு தெரிஞ்சுக்க


3. அடுத்து பார்க்கபோறதும் சமையல் சொல்லி தர்றவங்க தான், காரட் ஃப்ரை எப்பிடி பண்ணியிருக்காங்க பாருங்க. கொஞ்சம் கஷ்டம் என்ன தெரியுமா, எல்லாம் இங்கிலீஷ்-ல இருக்கு அப்புறம் ஆந்திரா ஸ்டைல் மாதிரி தெரியுது

அன்புடன்
ஜ.ரா.ரமேஷ் பாபு

மேலும் வாசிக்க...

Wednesday, August 10, 2011

மாப்பு வச்சுட்டான்யா ஆப்பு


அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கு வணக்கம்.

இன்றைய செய்தி  

ஒரு ரெப், ஒரு கிளெர்க் அப்புறம் அவங்க மேனேஜர் மூணு பேரும் மதிய உணவுக்கு ஒரு ஹோட்டலுக்கு போய்கிட்டு இருந்தாங்க வழியில ஒரு விளக்கு கெடைச்சது, அதை எடுத்து கிளெர்க் தேய்க்க ஒரு பூதம் வெளியே வந்துச்சு.

"சொல்லுங்க உங்களுக்கு என்ன செய்யணும்."

"நான் யாரும் இல்லாத தீவுக்கு போகணும், வேகமா போட் ரைட் (boat ride) பண்ணனும்." - கிளெர்க் கேட்டார்

"சரி ஜீ பூம் பா .." கிளெர்க் அவர் கேட்ட மாதிரி ஒரு தீவுக்கு போயிட்டார்

"அடுத்த விருப்பம் யாருடையது" ரெப் மற்றும் மேனேஜர்-ஐ பார்த்து பூதம் கேட்டுச்சு

"நானு நானு" - ரெப் அவசரமா சொன்னார்

"என்ன வேணும்?"

"நான் கூட ஒரு கூட்டம் இல்லாத பீச்சுக்கு என் காதலியோட போயி சன் பாத், ஆயில் மசாஜ் எல்லாம் பண்ணிக்கணும்"

"சரி ஜீ பூம் பா" - ரெப்பும் மறைஞ்சுட்டார்

"உங்களுக்கு என்ன பண்ணனும்" மேனேஜர்-ஐ பார்த்து பூதம் கேட்டுச்சு

"ம்... லஞ்ச் டைம் முடிஞ்ச உடனே நீ அனுப்பி வச்ச ரெண்டு பேரும் ஆஃபிஸ்க்கு திரும்பி வரணும்"

நீதி : எப்போதும் உங்கள் மேனேஜர்-ஐ முதலில் பேச அனுமதியுங்கள்

டிஸ்கி : இந்த வெஜிடபுள் பிரியாணி நல்லா இல்லைன்னா இங்கே  சிக்கன் பிரியாணி  இருக்கு.. 

இன்றைய வலைப்பூ நண்பர்கள்

1. இவர் வியாபாரம் / ஷேர் மார்க்கெட் / சுய வேலை வாய்ப்பு / அக்கவுண்டிங் பற்றிய வலைப்பதிவு நடத்துகிறார். டேலி (TALLY) கத்துக்கலாமா? இவருடைய சமீபத்திய பதிவு. இவரின் எளிதான எழுத்து நடையில் சிக்கலான விஷயங்களை புரிய வைக்கிறார்

2. அறிவியல் கட்டுரைகள் எழுதுவதில் இவர் சமர்த்தர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என தலைப்பு வைத்துக்கொண்டு நாம் அறியாத பல செய்திகளை தருகிறார். அறிவியல் தவிர்த்து இவர் சமூக கட்டுரைகளும் எழுதி வருகிறார். இவர் எழுதிய கட்டுரைகளில் என்னை உலுக்கிய கட்டுரை இது தீண்டாமை தேசம் !

3. கவிதைகள் எழுதுவதில் விற்பன்னர் இவர், வசந்த மண்டபம் என்று தலைப்பிட்ட வலைப்பூ இவருடையது. இவரின் பதிவுகள் எல்லாம் இவரின் கலைகளின் மேல் உள்ள ஈடுபாட்டை எடுத்துரைக்கும். இவரின் இந்த பதிவு பதினொன் ஆடற்கலைகள்!!! இயவ்ரின் திறமைக்கு சான்று..

அன்புடன்
ஜ.ரா.ரமேஷ் பாபு
 

மேலும் வாசிக்க...

Tuesday, August 9, 2011

இது ஆம்பளைங்க சமாச்சாரம்

அன்பார்ந்த நண்பர்களுக்கும், வலைச்சர வாசகர்களுக்கும்

இன்றைய செய்தி

1) எல்லா ஆண்களும் எப்போதுமே பிசி

2) சிலர் பிசியா இருந்தாலும் பெண்களுக்கு என்று நேரம் ஒதுக்குகின்றனர்

3) சிலர் பெண்களுக்கு நேரம் ஒதுக்கினாலும், அவர்களை கவனிப்பது இல்லை

4) சிலர் அவங்களால பார்த்துக்கிட முடியாலைன்னாலும் பெண் ஒருவர் துணையாய் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றனர்

5) சிலர் பெண் ஒருவர் துணைக்கு இருந்தாலும், தங்களின் அதிர்ஷ்டத்தை இன்னொர பெண்ணிடம் முயற்சிக்கின்றனர்

6) சிலர் இன்னோர் பெண்ணிடம் முயற்சித்தாலும், அந்த பெண் விலகி செல்லும் போது மிகவும் மனஉளைச்சலில் மாட்டிக்கொள்கிறார்கள்

7) அந்த பெண் விலகிப்போனாலும், தன் தவறை பற்றி உணராமல் வேறு ஒருவரிடம் முயற்சி செய்கின்றனர்..

டிஸ்கி 1 : எங்க அருவாள்ன்னு தேடும் நண்பர்களுக்கு இங்க வந்து பாருங்க இது பொம்பளைங்க சமாச்சாரம்

டிஸ்கி 2 : இதை படிக்கும் போது யாருக்காவது யாரோ ஒரு பிரபலத்தின் பெயர்  ஞாபகம் வந்தால் கம்பெனி பொறுப்பல்ல

இனி வலை உலகில் எனக்கு பிடித்த சிலர்

1. அட என சொல்ல வைக்கும் நகைச்சுவை செய்திகள் தரும் வலைப்பூ மனசாலி. வலைப்பூ முழுவதும் சிரிப்பு துணுக்குகள் எப்போது படித்தாலும் களுக் என சிரிப்பை வர வைக்கும் சிரிப்புகளுக்கும் பஞ்சம் இல்லை. "மனதில் பட்டதை எழுதுகிறேன்" என்று தலைப்பு வைத்துக்கொண்டு நகைச்சுவை அதகளம் செய்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் நான் ரசித்த அவர் பதிவுகளில் ஒன்று S என்ற வார்த்தையில் ஆரம்பித்து X என்ற வார்த்தையில் முடியும் சொல் என்ன?

2. நான் ரசித்த எழுதுக்கள் இவருடையது. இயல்பான நடை சுருக்கமாய் தான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு போகிறார். டெல்லிக்கு சென்று வந்த உணர்வை தரும் இவருடைய பல படைப்புகளில் சர்க்கஸ் ஒரு சிறந்த படைப்பு

3. சினிமா செய்திகள் தருவதில் சமர்த்தர். சுட சுட சினிமா செய்திகள் இவரின் வலைப்பூ முழுவதும். சினிமா ரசிகர்களுக்கு ஒரு விருந்து இவருடையது, சினிமா பற்றிய கிசு கிசுகளுக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது சமீபத்திய கிசு கிசு ராகவா லாரன்ஸை காதலிக்கும் லட்சுமிராய்? 

இன்னும் வருவேன்

மேலும் வாசிக்க...

Monday, August 8, 2011

வந்தனமையா வந்தனம்

அன்பார்ந்த வலையுலக நண்பர்களுக்கும், சக பதிவர்களுக்கும் இந்த வாரம் ஆசிரியர் பொறுப்பு அளித்த சீனா ஐயா அவர்களுக்கும் முதற்கண் என் வணக்கங்கள்.  இந்த பணியை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற பயத்துடனே துவங்குகிறேன்.  வரும் 7  நாட்களும் சிறந்த பதிவுகளை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை, உங்களின் ஆதரவை தொடரந்து வழங்கும் படியும் கேட்டுக்கொள்கிறேன.

இடுகைகளில் ஏதேனும் தவறுகள் இருப்பின் மன்னியுங்கள் மேலும் அதை சுட்டிக்காட்டினால் தவறுகளை  உடனடியாக திருத்தம் செய்து கொள்கிறேன்.

முக்கிய குறிப்பு :  பதிவுகள் எல்லாம் பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் பதிவேற்றம் செய்யப்படும், அலுவலகத்தில் இருந்து செய்வதால் இந்த தாமதம். முடிந்த வரை விரைந்து பதிவிட முயற்சி செய்கிறேன்.

இந்த இடுகை என்னுடைய வலைச்சரத்தில் முதல் இடுகை, மேலும் என்னுடைய 125 வது பதிவு எனவே ஒரு நகைச்சுவை பதிவாக தொடங்க விருப்பம்..

அதற்கு முன்  என்னை பற்றி ஒரு சுய அறிமுகம்.

நான் ரமேஷ் பாபு நான் பிறந்தது மதுரையில் ஆண்டு 1980, ராமசுப்ரமணியன்,  ஜெயந்தி தம்பதிகளுக்கு மகனாய். கல்வி அறிவை பெற்றது விருதுநகர் இந்து நாடார் உறவின் முறைக்கு பத்தியப்பட்ட விருதுநகர் இந்து நாடார் மேல்நிலைபள்ளியில்  பன்னிரண்டாம் வகுப்பு முடித்த ஆண்டு 1997.

பிறகு சௌராஷ்ட்ரா கல்லூரியில் இளங்கலை BIO CHEMISTRY 3 1/2 ஆண்டுகள் படித்தேன் (அரியர் இருந்த்தால் ஆறு மாதம் தாமதம்).
பிறகு மதுரை காமராஜர் யூனிவர்சிட்டியில் MCA அது மூன்றாண்டுகள் சரியாய் முடித்து விட்டேன். முடித்த ஆண்டு 2004. அது முதல் இன்று வரை கணினி துறையில் பணியாற்றி வருகிறேன். கடந்த ஆறாண்டுகளாய் பெங்களூர் வாசம். ஊருக்கு வந்து செல்வது வருடத்திற்கு ஒன்றோ இரண்டோ முறை.

எனக்கு ஒரே ஒரு மனைவி மற்றும் ஒரு குழந்தை பெயர் ரோஹித்.  நேற்றோடு 3 ஆண்டுகள் நிறைவு செய்து விட்டார்  இப்போ பள்ளிக்கும் சென்றுவர ஆரம்பித்து விட்டார். 

இப்போ நான் பிளாக் எழுத ஆரம்பிச்ச கதையை சொல்றேன்

ரொம்ப நாளா வெறுமனே வாசகனாய் இருந்து விட்டு இப்போது தான் எழுத ஆரம்பிச்சு இருக்கேன். இது வரை 124 பதிவுகள் என்னுடைய வலைப்பூ உரைக்கல்லில்.

எழுத துவங்கிய காலத்தில் விழிப்புணர்வு பதிவுகளை எழுதுவது என்றே துவங்கினேன். காரணம் தொடர்ந்து வினவு, சவுக்கு போன்ற வலை தளங்களை தொடர்ந்து வாசித்ததின் ஹாங் ஓவர், முதல் பதிவு லஞ்சம்  தவிர் அப்பறம் வந்துட்டான்யா வந்துட்டான் 

ஆரம்பித்த பின் தான் தெரிந்தது அது எவ்வளவு கடினமான பணி என்று. வேலைபளு காரணமாக நிறைய செய்திகளை சேகரிக்க முடியவில்லை, அது மட்டும் இன்றி அவர்கள் போல எழுத்தும் கை வரவில்லை. பிறகு தமிழ்மணம் / இண்ட்லியில் பல்சுவை பதிவுகளை பார்த்த பின் அது போல எழுதலாம் என்று முடிவு செய்தேன் (என்ன ஒரு சோம்பேறித்தனம்).   

எல்லா தளங்களிலும் (கவிதை / சினிமா விமர்சனம் / கட்டுரை)   நிறைய பேர் இருந்ததால் எனக்கென்று ஒரு தளம் தேவைபட்டதால் கதை சொல்லியாய் மாறினேன்.  அதுவும் நீதி கதைகள் / தன்னம்பிக்கை கதைகள் போன்றவை என் விருப்ப்மாக இருந்தது. ஒரே நீதிக்கு புதிதாய் கதை சொல்லும் உத்தி கை வந்தது. அதை பற்றிக்கொண்டேன்..


நான் விரும்பும் பதிவர்கள் சிலர் இவர்கள் எல்லோருடைய விருப்பமாயும் இருக்கலாம். என்னை எழுத தூண்டிய எழுத்துக்கள் இவர்களுடையவை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு  தளத்தில்  சிறந்து விளங்குகிறார்கள் 

ஈரோடு கதிர்

பாமரன்

பலா பட்டறை

சிபி செந்திக்குமார்

நாஞ்சில் மனோ

கவிதை வீதி சௌந்தர் - (இவர் என்னை முதலில் தான் வலைச்சரத்திற்கு அறிமுகம் செய்து வைத்தவர்)

பிரபாகரன் - (இவர் என்னை முதலில் தான் வலைபூவில் பிறருக்கு அறிமுகம் செய்து வைத்தவர்)

தமிழ்வாசி பிரகாஷ்

விக்கி உலகம்

செங்கோவி
கோகுலத்தில் சூரியன் வெங்கட்

நாற்று நிரூபன்

இன்னும் விட்டு போன நண்பர்கள் மன்னிக்கவும் உங்களை அடுத்த பதிவில் அறிமுகம் செய்து வைக்கிறேன்.

அன்புடன்

ஜ ரா ரமேஷ் பாபு 


மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது