அன்புமிக்க நண்பர்களே!!
இன்று வலைச்சரத்தில் ஆறாம் நாள், சனிக்கிழமை. என்னடா வெள்ளிகிழமையைக் காணோமே என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. நேற்று எனக்கு உடல்நலம் சரியில்லை. அதனால் என்னால் இடுகை எழுதமுடியவில்லை. இப்போது பரவாயில்லை, நலம். சுவாரசியமான, வித்யாசமான பக்கங்களை இந்த வலைச்சரம் கோர்க்கப் போகிறது.
சேட்டைக்காரன்இந்த வலைப்பக்கத்தின் ஒரே நோக்கம் நகைச்சுவை. சிரிங்க சிரிங்க சிரிச்சிக்கிட்டே இருங்க. அருமையான எழுத்து நடையில், வலைப்பூவில் காமெடி ராஜாங்கமே நடத்தியிருக்கிறார். சில பக்கங்களை மட்டுமே குறிப்பிட முடியாத நிலையில் நான் உள்ளேன். இவர் எழுதிய அனைத்து இடுகைகளும் சுவாரசியத்துடன் கூடிய நகைச்சுவை இடுகைகள்.
இவர் கடந்த 3 மாதங்களுக்குப் பின்தான் எழுத வந்தார். வந்த அன்னைக்கே கண்ணுல கத்திய விட்டுட்டுனே என்கிறமாதிரி அனைத்துமே சிரிப்பலைகள். இவர் இப்போது 100 இடுகைகள் வெளியிட்டுள்ளார்.
வாங்க நாம் அனைவரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வோம்.
சைவகொத்துப்பரோட்டாஇந்த வலைப்பக்கமும் சுவாரசியமான காமெடி கலந்த இடுகைகளை அடிப்படையாக கொண்டது. நிறைய சுவாரசியமான இடுகைகள் உண்டு. கவிதை, கட்டுரை,திரைப்பார்வைகள் அடங்கியுள்ளன.
திரிரோசஸ்,
சேட்டைக்காரன்,
சாமி,
மறுஜென்மம்,இதெல்லாம் திரைப்படங்கள் அல்ல. சுவாரசியமான இடுகைகள். நீங்களும் ஒரு தடவை சென்று வாருங்களேன்.
பனித்துளி சங்கர்.
சங்கர்,
சங்கரின் பனித்துளி நினைவுகள் என்ற பெயரிலும்
RDX அந்நியன் என்ற பெயரிலும் உள்ள வலைப்பக்கங்களில் எழுதி வருகிறார். இது ஒரு தகவல் களஞ்சியம். செய்திகள், கட்டுரைகள் நிரம்பி வழிகின்றன. தகவல்கள் அறிந்து கொள்ளலாம்.
சுந்தர வடிவேலு.
இவர் 100 இடுகைளுக்குமேல் எழுதியுள்ளார்.
மனசு என்பது எதற்கும் தயாராகிவிடும்.
இசையை பற்றிய விளக்கம்,பாட்டி சுட்ட வடைக்கதையில் வரும் காக்கா என்ன ஆனது? தெரியலியே...
குழந்தையின் வருகை ஒரு தென்றல் வருவதை போன்றது. தென்றல் காற்றை அனுபவிங்க.
அபத்தங்களையெல்லாம் பட்டியல் போட்டுள்ளார். இப்படி நிறைய சுவாரசியங்கள் உண்டு.
மங்குனி அமைச்சர். ( ஷாஜஹான் )மீண்டும், காமெடி கலந்த சுவாரசியங்கள் நிறைந்த
இடுகைகளை உங்கள் முன் சமர்ப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். சீரியஸ் போலிசை பார்த்திருப்பீங்க. சிரிப்பு போலிஸ் மருதமலைக்கு அப்புறம்
மங்குனிஅமைச்சராக உங்கள்முன்.
கட்டபொம்மன்இதோ உங்கள்முன் மன்னர் கட்டபொம்மன் பராக் பராக்.
அறிமுகம் கொடுக்கிறார் பாருங்க.
மயில் ராவணன்கதைகள், கவிதைகள், செய்திகள், நிறைந்த சூப்பர்
கதம்பம். சென்று வாருங்களேன்.
ராமசாமி கண்ணன்இவர் சாத்தூர்மாக்கான் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார்.
வாழ்நாள் கனவு இப்படி அமைந்தால் எனக்கு மிக்க சந்தோசம்.
வாசிக்கபடாமலே ஒரு கடிதமா.. காதல்கதை இப்படித்தான் இருக்குமோ?...
சே.குமார்இவர்
சிறுகதைகள்,
நெடுங்கவிதைகள்,
மனசு,
கிறுக்கல்கள் பக்கங்களில் எழுதி வருகிறார். கதைகளில்
மழலை இதயம்,
மனசு, குடும்ப விளக்கு, ஆசிரியர் இப்படி நிறைய அருமையான கதைகள் உண்டு.
சிவாஜி சங்கர்சுவாரசியமான
இறகுகளை பற்றி அறிந்து கொள்ள இங்கே வந்து போகலாமே..
ட்ரீமர் ( ஹரிஷ் நாராயண் )சிறுகதைகள், கவிதை சுவாரசியமான தகவல்கள் நிறைந்த இந்த
டிரீமர் நமக்கு ஒரு புதுவிதமான அனுபவத்தை கொடுக்கிறது.
தொடந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
மீண்டும் நாளை சந்திக்கிறேன்...
உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.