07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Thursday, April 15, 2010

செண்பகமே செண்பகமே .. 4

கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க..

செண்பகமே செண்பகமே..

செண்பகமே செண்பகமே.. 2

செண்பகமே செண்பகமே.. 3

செண்பகம் செண்பகம் வீடெல்லாம் ஒரே மணம் ரொம்ப நல்லாருக்கே.. வந்தது யாரு நம்ம பக்கத்தூட்டு மாலதி மாதிரியே இருக்கு..

ஆமா மச்சான் மாலதிக்காவேதான்.. நான் இன்னைக்கி இறால்பிரியாணி செஞ்சேன்..

கொண்டா கொண்டா சாப்பிட்டிருவோம். ஓ மணமே நல்லாருக்கே..

சாப்பிடு என்ஆச மச்சான்..

ம்ம்ம்.. என்னருமையா இருக்குபுள்ள.. பரவாயில்லையே நல்ல விதவிதமா சமைக்க கத்துக்கிட்ட.. ஒண்ணு தெரியுமாபுள்ள நம்ம ரெண்டுபேருக்கும் செம பாராட்டுக்கள்.. எல்லோரும் இது நல்ல ஜோடி.. அசத்துறாங்க.. வாழ்த்துகள்ன்னு சொல்லிருக்காவ..

அப்படியா மச்சான் அவுக எல்லாத்துக்கும் நம்ம நன்றியை தெரிவிச்சிக்கிருவோம்.

ஆமாபுள்ள.. எங்க கதைய படிச்சிக்கிட்டிருக்கிற எல்லாத்துக்கும் நன்றிங்கோ..

ஆமா மாலதிக்கிட்ட சமையலபத்தி பேசிக்கிட்டிருந்தீயாபுள்ள..

ஆமா இன்னும் கொஞ்சம்பேரு பாக்கியிருக்கு மச்சான்.

அப்படியாபுள்ள... சொல்லுபாப்போம்..

இவுக பேரு.. கவிசிவா... இவுக நாம கஷ்டப்படுததுக்கு ஒரு வழிய சொல்லிருக்காவ..

என்னவழிபுள்ள.. சீக்கிரம் சொல்லு..

ஆமா மச்சான்.. நாம பணக்காரவுகளா ஆவுறதுக்கு வழி இருக்காம்.. நாம எல்லோரும் இந்தோனேசியா போனோமுன்னா பணக்காரவுகளா ஆயிடலாமா..

அட அப்படியா.. இது நல்லாருக்கே.. உடனே கிளம்பிறவேண்டியதுதான்..

இன்னும் நிறைய விஷயத்தை பத்தி எழுதிருக்காவ.. நீயே படிச்சிபாரு மச்சான்.

அட ஆமா அடுத்தவுக யாருபுள்ள.. அட இங்கபாருபுள்ள.. ஏதோ வித்யாசமாருக்கு..

ஆமா மச்சான்.. இதுக்குபேரு..ரஸா மலாய்.. இத செஞ்சவுக மனோ சுவாமிநாதன்... வித்யாசமாவும் அருமையா இருக்கும் நினைக்கிறேன்.. ஒரு நாள் செஞ்சிதாரேன்..

என் ஆச பொண்டாட்டி என்னருமையா சமையல்ல வெளுத்து வாங்குறே.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச் இச்.....

இவுக பேரு இமா.. இவுக மருதாணி வச்சிருக்கிற அழகே தனிதான்.. அப்புறம் சமையல் குறிப்பு, அழகு குறிப்புன்னு அசத்திருக்காவ..

ரொம்ப நல்லாருக்கு.. அடுத்தவுக யாருபுள்ள..

இவுக பேரு செபா மேடம்.. இவங்க தன் அனுபவ குறிப்புகள சொல்லிருகாவ.. ரொம்ப நல்லாருக்கு மச்சான்..

ஆமா என் செல்ல பொண்டாட்டி.. இச் இச் இச் இச்..

போதும் மச்சான் போதும் அடுத்தவகள பாப்போமா..

ஆங் சரி பொண்டாட்டி.. பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும். :))

இவுக பேரு வானதி.. ரொம்ப அருமையான கதையெல்லாம் நிறய சொல்லிருக்காவ.. சிறுகதை ரொம்ப நல்லாருக்கு மச்சான்.

ஆமாபுள்ள நாம சேர்ந்து படிப்போமா.. அடுத்தவுக யாரு..

இவுக பேரு மலர்விழி.. இவங்க அனுபவ கட்டுரைகள், அறிவியல் கட்டுரைன்னு நிறைய எழுதிருக்காவ மச்சான். நாம ஒரு தடவை போய் பாத்துட்டு வரலாமா மச்சான்..

ஆங்! சரிபுள்ள.. வேற யாரு..

இவுக பேரு இலா.. இவுக கவிதை, கட்டுரை, சிறுகதைன்னு அசத்துறாவ..

அடுத்தவக யாரு புள்ள..

இவங்க கீதா ஆச்சல்.. நல்ல நல்ல விதவிதமான சமையல் செஞ்சி அசத்துறாக.. பார்லி சக்கர பொங்கல்.. வாழைக்கா பொடிமாஸ். இப்படின்னு நிறைய தினுசுதினுசா இருக்கு..

சே எவ்வளோ விஷயமெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்கே என் செல்ல பொண்டாட்டி.. இந்தா வாங்கிக்கோ இச் இச் இச் இச்...

என் ராசா என்மேல அம்பூட்டு ஆசயா.. மீதிய நாளைக்கி பாப்போமா மச்சான்..

சரி என் செல்லம்..


தொடரும்..


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவானாக உங்கள் ஸ்டார்ஜன்.

39 comments:

 1. வித்தியாசமா இருக்கு உங்க பதிவுகள். அறிமுகங்களும் தான்.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஸ்டார்ஜன் தம்பி தூள் கிளப்புறீங்க போங்க‌..

  ReplyDelete
 3. அசத்தலான அறிமுகங்கள்...

  ReplyDelete
 4. //////கதை புரியாதவங்க முதல்லருந்து வாங்க..

  செண்பகமே செண்பகமே..

  செண்பகமே செண்பகமே.. 2

  செண்பகமே செண்பகமே.. 3/////////

  நண்பருக்கு வணக்கம் !
  இதற்கான சுட்டியையும் இதில் இணைத்திருந்தால் . புதிதாக வருபவர்களுக்கு இன்னும் எளிதாக இருந்திருக்கும் .
  புரிதலுக்கு நன்றி !


  பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் மீண்டும் வருவேன் .

  ReplyDelete
 5. எல்லோரும் எனக்கு தெரிந்த முகங்களே வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 6. அறிமுகங்களுக்கு நன்றி "தம்பதிகளே" :))

  ReplyDelete
 7. புதிய அறிமுகங்கள் நல்லாயிருக்கு. சென்று பார்க்கிறேன்.

  ReplyDelete
 8. ....... இத்தனை பதிவுகளை படித்து, சரியாக அறிமுகப்படுத்தி அசத்துறீங்களே!
  பாராட்டுக்கள்!

  ReplyDelete
 9. அறிமுகங்கள் அருமை..

  ReplyDelete
 10. நல்ல ஒரு அறிமுகம். புதியதாக வருபவர்களை அறிமுக படுத்தினால் நல்லது

  ReplyDelete
 11. அசத்தலான அறிமுகங்கள்...

  ReplyDelete
 12. எல்லாரும் அருமை .அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 13. ஸ்டார்ஜன்....வித்தியாசமாக் அருமையாக இருக்கின்றது...அனைவரையும் அசத்தலாக அறிமுகபடுத்து இருக்கின்றிங்க...சூப்பர்ப்...வாழ்த்துகள்..

  ReplyDelete
 14. எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நன்றி என்னும் மூன்று எழுத்துக்களில் எல்லாவற்றையும் அடக்கி விடுகிறேன். என் கதைகளுக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம். உங்கள் வலைச்சரத்தில் என்னைக் குறிப்பிட்டமைக்கு என் அன்பு கலந்த நன்றிகள்.
  வானதி

  ReplyDelete
 15. என்னை அறிமுக படுத்தியதற்கு மிக்க நன்றி ,ஸ்டார்ஜன்.மிகவும் சந்தோஷமாக உணருகிறேன்.மேலும் பலரை தெரிந்து கொள்ளவும் முடிகிறது.நல்ல முயற்சி.நன்றி.

  ReplyDelete
 16. அறிமுக‌ங்க‌ளின் இடுகைக‌ள் அனைத்தும் அருமை ஸ்டார்ஜ‌ன்..

  ReplyDelete
 17. என்னையும் என் தாயாரையும் (செபா) ஒன்றாக இங்கு அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜான். ;) நான் எதிர்பாராதது எல்லாம் நடக்கிறது வலையுலகில். ;) புதிதாக நிறைய அறிமுகங்கள் கிடைத்திருக்கிறது. அங்கு பின்தொடர்வோர், பின்னூட்டம் இடுவோரை விட மேலும் சிலர் என் உலகைச் சுற்றி வருவதை அறிகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. மீண்டும் நன்றிகள். ;)

  வாழ்த்துத் தெரிவித்துள்ளோர் அனைவர்க்கும் எனது நன்றி.

  அன்புடன் இமா

  ReplyDelete
 18. வாங்க புதுகைத்தென்றல்

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 19. வாங்க ஸாதிகா அக்கா..

  மிக்க நன்றி அக்கா..

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 20. வாங்க மேனகா

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 21. வாங்க பனித்துளி சங்கர்

  இணைப்பு கொடுத்துவிட்டேன்.

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 22. வாங்க ஜலீலா

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 23. வாங்க சைவகொத்துப்பரோட்டா

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 24. வாங்க அக்பர்

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 25. வாங்க சித்ரா

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 26. வாங்க மின்மினி

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 27. வாங்க எல்கே

  நன்றி நாளைக்கு அறிமுகப்படுத்திருவோம்..

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 28. வாங்க குமார்

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 29. வாங்க பத்மா

  வாழ்த்துகளுக்கு நன்றி

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி..

  ReplyDelete
 30. வாங்க கீதா ஆச்சல்

  நன்றி பாராட்டுக்கு..மேலும் சிறப்பாகட்டும்

  வாழ்த்துகளுக்கும் வருகைக்கும் நன்றி

  ReplyDelete
 31. வாங்க வானதி

  நன்றி பாராட்டுக்கு.. மேலும் சிறப்பாகட்டும்..

  வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 32. வாங்க மலர்விழி

  நன்றி பாராட்டுக்கு.. வருகைக்கு நன்றி

  ReplyDelete
 33. வாங்க ஸ்டீபன்

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

  ReplyDelete
 34. வாங்க இமா

  நன்றி பாராட்டுக்கு.. இன்னும் மேலும்மேலும் உங்கள் எழுத்து சிறக்கட்டும்.

  வருகைக்கு நன்றி.. வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் தாயாருக்கும்.

  ReplyDelete
 35. அடிபொழி ஸ்டார்ஜன்...

  ReplyDelete
 36. அன்புள்ள ஸ்டார்ஜன் அவர்களுக்கு!

  தங்களது வலைச்சரத்தில் என் தளத்தைக் அறிமுகப்படுத்தி எழுதியதற்கு என் இதயங்கனிந்த நன்றியையும் மகிழ்வையும் நெகிழ்வையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 37. வாங்க ராஜா

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

  ReplyDelete
 38. வாங்க மனோ சாமிநாதன்

  வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி

  ReplyDelete
 39. பாராட்டுக்கள்...

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது