07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, April 10, 2010

ஆரம் (வலைச்சரம்)

என்றோ ஒருநாள் மூத்த பதிவரொருவர் தன் வலைப்பக்கத்தில் பதிந்திருந்தார்....புதிதாய் வருபவர்கள், மற்றும் இன்னும் சிலரை ஒரு பிராணிக்கொப்பாக. அவரின் அந்த தவறுதலான சொல்லுக்காக நானே வருந்துகிறேன். புதிதான நாற்றங்கால்கள் யாவும் உடனே நெல்மணிகளை வெளிக்கொணர்வதில்லை. தட்டிக்கொடுப்பதிலும், குட்டிவிடுவதிலும்தான் இங்கே இத்தனை விளைச்சல்கள் கிடைக்கிறது. எவரும் பிறந்தவுடன் விருட்சமாக ஆகிவிடுவதில்லை. (விருட்சமாகவே பிறப்பவர்களும் உண்டு). தேடிப்பிடித்து படிப்பதில்தான் அடையாளம் காணயியலும். எனக்கு அன்றையநாளில் எவரேனும் நீரூற்றாமல் இருந்திருந்தால் என்றோ நான் இவ்வலைமண்ணில் இலைவிடாமல் மறைந்திருப்பேன்.


மோதிரக்கையுடையவர்கள் குட்டுவதினாலும் தட்டிக்கொடுப்பதினாலும் புதியவர்கள் நேர்பட வளர நிறைய வாய்ப்புண்டு. உற்சாகமில்லா வாழ்வினை வாழ யாருக்குத்தான் விருப்பமிருக்கும். எனக்கும்கூட இருந்ததில்லை. ‘அருமை’யென்ற வார்த்தைக்கு இங்கிருக்கும் மதிப்பும் வலிமையும் அளவிற்கரியது. அதற்கேங்காத ‘என்’னெந்த இடுகைகளும்கூட உறங்கியதில்லை. நான் வலையுலகிற்கு வந்து ஏறக்குறைய ஒன்றரை வருடங்களாகியும், இந்த மனநிலையிலிருந்து நான் மாறுபடவில்லை. இதை மாயையென்பாரும் உண்டு. மாயைக்குள் அகப்படாத கனவுகள்கூட இல்லை.


இன்று புதிதாய் (சமீபத்தில்) இக்கலை(வலை)யுலகில் காலடியெடுத்து வைத்தவர்களில் எனக்குத்தெரிந்த ஒருசிலரை காட்ட எண்ணுகிறேன்.


நான் வலையுலகில் நுழைந்தபொழுது என் வலைப்பக்கங்களை எப்படி மாற்றியமைப்பது அதிலுள்ள தொழிற்நுட்பங்கள் என்னனென்ன, எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதே தெரியாமலிருந்தேன். பிறகு ஒவ்வொன்றாய் நானே முயன்று கண்டுபிடித்து மாற்றிக்கொண்டேன். அப்பொழுதும் நிறைய பதிவர்கள் இந்த தொழிற்நுட்பத்தினைப்பற்றி எழுதியிருந்திருக்கிறார்கள். நான் கண்டதில்லை. தமிழ்மண ஓட்டுப்பட்டையை எப்படி இணைப்பது என்பது பற்றி நானும் கதிர் அய்யாவும் மிகவும் ‘ஆராய்ந்து’ செய்தோம். அவ்வளவு தெரிவின்மை எனக்குள்.


இப்பொழுது அப்படியில்லை. இங்கே நிறையபேர் இருக்கிறார்கள். நமது வலைப்பூவை எப்படியெல்லாம் அழகுப்படுத்தலாம் அல்லது அதில் அத்தியாவசியமானதை எப்படி இணைப்பது என்பன போன்றவற்றை சொல்லிக்கொடுக்கிறார்கள். அவ்வகையில் நான் சமீபத்தில் அறிந்தவர்...


நண்பர் வந்தேமாதரம் சசிகுமார்

வலைப்பூ பற்றின நிறைய தொழிற்நுட்ப விபரங்களை அவர் தனது தளத்தில் தருகிறார். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


(பிளாக்கர்) இந்த ‘வகை’யில் அவர் எழுதியுள்ளவை எனக்கும் உங்களுக்கும்கூட பயனளிப்பவை...


வலைப்பூ பற்றின தகவல்கள் தவிர பொதுப்படையான தொழில்நுட்ப உதவிகளும் இவரது தளங்களில்


(தொழில்நுட்பம்) என்கிற ‘வகை’யில்.


••••••••••


புதிய வார்ப்பு

புதிய வார்ப்புதான் நான் கண்ட அளவில். அச்சப்படுத்தாமல், அடித்தடித்து தீட்டாமல் தானே உருவான வார்ப்பு. இவரின் புலமையுடன் கட்டப்பட்டுள்ள கட்டுரைகள் வெகுவாக மனதை பிசைகிறது. கொஞ்சம் இளைப்பாறக்கூட முடிகிறது. கட்டுக்குள் சிக்காத காற்றுக்கொப்பான எழுத்துக்கள் இங்கே பரவியிருக்கின்றன.


ஒத்த சொல்லு,ஒரு செயலு !!!!
உங்களையும் என்னையும் சுற்றி ஏதோவொரு சூழ்நிலையில் சந்தர்ப்பவசத்தால் சூறாவளி போன்றோ அல்லது சுனாமி போன்றோ உருவாகுவது தற்கொலையெண்ணம் (இருக்கலாம்) கொஞ்சம் மனதை கெட்டிப்படுத்தினால் நாளையெனும் வசந்தம் அதை கடந்துவிடும். அந்தமுறையில் மனதினை திடப்படுத்தும் மருந்து இந்த இடுகையில். சமீபத்திய இன்னொன்றும் மற்றும் ஒரு கொலை!!!

நிலா காய்கிறது !!!

(படித்த பொழுதுகளில் கொஞ்சநேரம் அந்த இடுகைக்கு குழந்தையாய் இருந்தேன். படிப்பவரின் மனநிலைக்கேற்ப மூன்றில் ஒரு கதாபாத்திரம் ஒட்டிக்கொள்ளும். என்வயதிற்கேற்ப என்னுடன் வந்தது குழந்தை வேடம். மிகையில்லை. படியுங்கள் உணரலாம்.)

•••••••••••

பிரேமா மகள்

நான் தற்சமயம் கண்ட மற்றொரு தளத்திற்கு சொந்தக்காரர். எள்ளலும், துள்ளலும் நிறைந்த பெண்மணி எழுத்துகளிலும். சமீபத்தில் வலையுலகில் சுற்றிவந்த ‘பெண் பார்த்தக் கதை’ தொடரிடுகையை, இவரை பெண் பார்த்த கதையை மையமாக வைத்து நகையுடன் கலந்துள்ளார்.


இவரிடம் நான் கண்ட எண்ணங்கள்..


கதவை திற. காற்று வரட்டும்

(தன்னுடைய அனுபவத்தையும் ஆற்றாமையையும் இவ்விடுகையில் பதிந்துள்ளார். கொஞ்சம் புத்தியை இந்த இடுகையின் மூலமும் பெற்றேன். உண்மையை உணரவேண்டியதுதான் நமது செயல்)


இந்த பெண்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்?

(நாகரீக குகைக்குள் புகுந்து தாமே மூடிக்கொண்ட கதவினை விடுவிக்கத்தெரியாமல் அதற்குள்ளேயே வாழக்கற்றுக்கொண்டுவிடும் நகரத்து பெண்மணி பற்றின இடுகை. தனது அனுபவத்தின் வாயிலாக எழுதியிருக்கிறார்.)


•••••••••••••


எவ்வாசல் நுழைந்தேனும் நுகரக்கூடிய தளம் இங்கேயொன்று காணப்பெற்றேன். இத்தளம் புதிதல்ல ஆயினும் புதிதாய் காண்பவர்களுக்கு அப்படித்தான். அது மூலிகை வளம். கே.பி. குப்புசாமி என்பவர் இத்தளத்தில் நிறைய முலிகைப்பயிர்களை அடையாளம் கண்டு பயிர்செய்துள்ளார்.


உடல் நலத்திற்கு இங்கே இயற்கை விதைத்திட்ட விதைகள் ஏராளம். அதை இனம் கண்டறிந்து பயன்படுத்த தவறுவது நமது தவறே. உடலில் உண்டாகும் எப்பிணியாயினும் அதற்கான மருந்தை இங்கே நம்பூமி தன்மேல் எழுதிவைத்திருக்கிறது. ஒவ்வொரு மூலிகைச் செடிக்குமான அத்தனை தகவல்களும் இங்கே கிடைக்கப்பெறுகின்றன. பிரதியெடுத்து பாதுகாக்க வேண்டியன ஒவ்வொன்றும்.


இதை (குண்டுமணி)

இதை (அத்தி)

இதை (இலந்தை) இப்படி எதற்கான மருத்துவ குணங்கள் மற்றும் தகவல்கள் உங்களுக்கு தேவை...???. பாருங்கள் வேறொன்றும் நான் சொல்லப்போவதில்லை.


********


நல்வாய்ப்பினை நல்கிய அய்யா சீனா அவர்களுக்கும், மற்றும் வாழ்த்துக்களையும், ஆதரவினையும் பின்னூட்டங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் அலைபேசி வழியும் பகிர்ந்திட்ட அனைத்து வலையுலக பெருமக்கள் மற்றும் வாசகர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

என்றும் பாசமுடன்,


36 comments:

 1. அட...சாமி... நாம இந்த தமிழ்மணம் ஓட்டுப் போட கண்டுபிடிச்ச கதையவே பல இடுகையா எழுதலாமே

  ReplyDelete
 2. சசிக்குமார்-தொழில்நுட்பத்தில் உபயோகமான அறிமுகம்...

  வாழ்த்துக்கள் பாலாசி அண்ணா.....

  ReplyDelete
 3. புதிய பூக்கள் - நல்ல அறிமுகம்

  அதுவும் நம்ம வீட்டு பொண்ணுங்க லாவண்யா, ரோகினிக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 4. //அதுவும் நம்ம வீட்டு பொண்ணுங்க லாவண்யா, ரோகினிக்கு வாழ்த்துக்கள்//

  நானும்.. நானும்...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 5. சிறப்பான அறிமுகங்கள். நேர்த்தியான நடை. வலைச்சரம் மிளிர்ந்தது உன் எழுத்தால். பாராட்டுகள் பாலாசி.

  ReplyDelete
 6. சிறப்பான அறிமுகங்களை உங்கள் பிரமிக்கும் எழுத்தால் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி பாலாசி.

  ReplyDelete
 7. பாராட்டுகள் பாலாசி.
  நேர்த்தியான அறிமுகங்கள்.

  ReplyDelete
 8. நல்ல அறிமுகங்கள்..

  ReplyDelete
 9. //என்வயதிற்கேற்ப என்னுடன் வந்தது குழந்தை வேடம்.//

  இதுக்கு ஏதாவது சொல்லணுமே:-)

  ReplyDelete
 10. வாழ்த்துக்கள் லாவண்யா..& ரோகிணி

  ReplyDelete
 11. //
  ஈரோடு கதிர் said...
  அட...சாமி... நாம இந்த தமிழ்மணம் ஓட்டுப் போட கண்டுபிடிச்ச கதையவே பல இடுகையா எழுதலாமே
  //
  ஆஹா:))

  --
  வாழ்த்துகள் பாலாசி. மூலிகை வளம் அற்புதமான தளம். இதோடு நில்லாமல் சிறப்பான பக்கங்களை உங்கள் வலைப்பக்கத்திலும் பகிருங்கள். :)

  நன்றி!

  ReplyDelete
 12. வழக்கம்போல் அருமை,
  வாழ்த்துக்கள் பாலாசி.

  ReplyDelete
 13. ஆசிரியரின் செந்தமிழுக்கு முதல் வணக்கம்! நிறைவாகச் செய்தீர்கள்... வாழ்த்துகள்!!

  ReplyDelete
 14. சிறப்பான அறிமுகங்கள்

  ReplyDelete
 15. நல்ல அறிமுகங்கள் பாலாசி. ஒவ்வொரு இடுகைக்கும் கொடுக்கும் தலைப்பு அழகு :)

  ReplyDelete
 16. //ஈரோடு கதிர் said...
  அட...சாமி... நாம இந்த தமிழ்மணம் ஓட்டுப் போட கண்டுபிடிச்ச கதையவே பல இடுகையா எழுதலாமே//

  ஆமா..ஆமா... அது பெரிய கதைல்ல...

  //புதிய பூக்கள் - நல்ல அறிமுகம்
  அதுவும் நம்ம வீட்டு பொண்ணுங்க லாவண்யா, ரோகினிக்கு வாழ்த்துக்கள்//

  நன்றிங்க உங்கோட வாழ்த்து அவர்களுக்கும் உற்சாகமளிக்கும்...

  //Blogger அகல்விளக்கு said...
  சசிக்குமார்-தொழில்நுட்பத்தில் உபயோகமான அறிமுகம்...
  வாழ்த்துக்கள் பாலாசி அண்ணா.....//

  //நானும்.. நானும்...
  வாழ்த்துக்கள்...//

  நல்லது... நன்றி ராசா...

  //Blogger வானம்பாடிகள் said...
  சிறப்பான அறிமுகங்கள். நேர்த்தியான நடை. வலைச்சரம் மிளிர்ந்தது உன் எழுத்தால். பாராட்டுகள் பாலாசி.//

  மிக்க நன்றி அய்யா.. உங்களின் பாராட்டிலும் நனைகிறேன்...

  //Blogger அஹமது இர்ஷாத் said...
  Very Good introduction//

  வாங்க அஹமது... எனது நன்றிகள் உங்களுக்கும்...

  //Blogger ஜெஸ்வந்தி said...
  சிறப்பான அறிமுகங்களை உ்கள் பிரமிக்கும் எழுத்தால் அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி பாலாசி.//

  மிக்க நன்றி ஜெஸ்வந்தி...

  ReplyDelete
 17. //நேசமித்ரன் said...
  பாராட்டுகள் பாலாசி.
  நேர்த்தியான அறிமுகங்கள்.//

  மிக்க நன்றிகள் அய்யா... தங்களின் தொடர்ந்த வருகைக்கும் வாழ்த்துதலுக்கும்...

  //Blogger *இயற்கை ராஜி* said...
  நல்ல அறிமுகங்கள்..//‘

  நன்றிங்க அக்கா...

  //என்வயதிற்கேற்ப என்னுடன் வந்தது குழந்தை வேடம்.//
  இதுக்கு ஏதாவது சொல்லணுமே:-)//

  அட நம்புங்க எனக்கு 16வயசுதான் ஆகுது... :-)

  //வாழ்த்துக்கள் லாவண்யா..& ரோகிணி//

  மீண்டும் நன்றிகள்...அவர்கள் சார்பாகவும்

  //Blogger 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

  ஆஹா:))//

  ஆச்சர்யமா இருக்குங்களா? உண்மைதாங்க...

  // வாழ்த்துகள் பாலாசி. மூலிகை வளம் அற்புதமான தளம். இதோடு நில்லாமல் சிறப்பான பக்கங்களை உங்கள் வலைப்பக்கத்திலும் பகிருங்கள். :)
  நன்றி!//

  கண்டிப்பாக அப்படியானதொரு வலைப்பக்கம் எனக்கு தெரிந்தால் பகிர்கிறேன்... தங்களுக்கும் நன்றி...

  //Blogger சைவகொத்துப்பரோட்டா said...
  வழக்கம்போல் அருமை,
  வாழ்த்துக்கள் பாலாசி.//

  மிக்க நன்றி நண்பரே...

  //Blogger பழமைபேசி said...
  ஆசிரியரின் செந்தமிழுக்கு முதல் வணக்கம்! நிறைவாகச் செய்தீர்கள்... வாழ்த்துகள்!!//

  தங்களின் வருகைக்கும் பின்னூட்டதிற்கும் எனது வணக்கங்களும் நன்றிகளும்...

  //Blogger T.V.ராதாகிருஷ்ணன் said...
  சிறப்பான அறிமுகங்கள்//

  நன்றி டி.வி.ஆர்... அய்யா...

  //Blogger ச.செந்தில்வேலன் said...
  நல்ல அறிமுகங்கள் பாலாசி. ஒவ்வொரு இடுகைக்கும் கொடுக்கும் தலைப்பு அழகு :)//

  மேலும் நன்றிகள் உங்களுக்கும்....

  ReplyDelete
 18. இதுவரை யாரும் அறிமுகம் செய்திடாத அற்புத தளம் குப்புசாமி அய்யாவின்
  மூலிகை வளம்.

  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 19. வாழ்த்துகள் பாலாஜி

  ReplyDelete
 20. எனக்கு கூட பயமா போச்சு... உங்களையே சொல்லிக்கிட்டீங்க...ஆ...கா. ஒரு வாரம் போனதே தெரியலை.

  ReplyDelete
 21. என்றோ ஒருநாள் மூத்த பதிவரொருவர் தன் வலைப்பக்கத்தில் பதிந்திருந்தார்....புதிதாய் வருபவர்கள், மற்றும் இன்னும் சிலரை ஒரு பிராணிக்கொப்பாக. அவரின் அந்த தவறுதலான சொல்லுக்காக நானே வருந்துகிறேன். புதிதான நாற்றங்கால்கள் யாவும் உடனே நெல்மணிகளை வெளிக்கொணர்வதில்லை. தட்டிக்கொடுப்பதிலும், குட்டிவிடுவதிலும்தான் இங்கே இத்தனை விளைச்சல்கள் கிடைக்கிறது. எவரும் பிறந்தவுடன் விருட்சமாக ஆகிவிடுவதில்லை.

  உண்மை பாலாசி....

  அறிமுகபதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 22. //விஜய் said...
  இதுவரை யாரும் அறிமுகம் செய்திடாத அற்புத தளம் குப்புசாமி அய்யாவின்
  மூலிகை வளம்.
  நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
  விஜய்//

  நன்றிங்க விஜய்...

  //Blogger வினையூக்கி said...
  வாழ்த்துகள் பாலாஜி//

  நன்றி வினையூக்கி முதல் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும்...

  //Blogger தாராபுரத்தான் said...
  எனக்கு கூட பயமா போச்சு... உங்களையே சொல்லிக்கிட்டீங்க...ஆ...கா. ஒரு வாரம் போனதே தெரியலை.//

  வாங்க அய்யா... வணக்கமும் நன்றியும்...

  //Blogger தமிழரசி said...
  உண்மை பாலாசி....
  அறிமுகபதிவர்களுக்கு வாழ்த்துக்கள்..//

  நன்றிங்க தமிழரசி அக்கா...

  //Blogger முனைவர்.இரா.குணசீலன் said...
  வாழ்த்துக்கள் நண்பா..//

  நன்றி முனைவர்.இரா.குணசீலன் அவர்களே...

  ReplyDelete
 23. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் பாலாசி...

  ReplyDelete
 24. //////////////////என்றோ ஒருநாள் மூத்த பதிவரொருவர் தன் வலைப்பக்கத்தில் பதிந்திருந்தார்....புதிதாய் வருபவர்கள், மற்றும் இன்னும் சிலரை ஒரு பிராணிக்கொப்பாக. அவரின் அந்த தவறுதலான சொல்லுக்காக நானே வருந்துகிறேன். புதிதான நாற்றங்கால்கள் யாவும் உடனே நெல்மணிகளை வெளிக்கொணர்வதில்லை. தட்டிக்கொடுப்பதிலும், குட்டிவிடுவதிலும்தான் இங்கே இத்தனை விளைச்சல்கள் கிடைக்கிறது. எவரும் பிறந்தவுடன் விருட்சமாக ஆகிவிடுவதில்லை. (விருட்சமாகவே பிறப்பவர்களும் உண்டு). தேடிப்பிடித்து படிப்பதில்தான் அடையாளம் காணயியலும். எனக்கு அன்றையநாளில் எவரேனும் நீரூற்றாமல் இருந்திருந்தால் என்றோ நான் இவ்வலைமண்ணில் இலைவிடாமல் மறைந்திருப்பேன்.//////////  உண்மைதான் நண்பரே !

  '' ஊக்குவிக்கு ஆள் இருந்தால் இன்று

  ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான் ''  அனுபவங்களை மிகவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் .!

  பகிர்வுக்கு நன்றி !

  தொடருங்கள் . மீண்டும் வருவேன்.

  ReplyDelete
 25. நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் பதிவர்கள் அனைவரும் சிறப்பானவர்களே .!அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

  ReplyDelete
 26. சிறப்பான அறிமுகங்கள்
  எழுத்து நடை நல்லாயிருக்கு

  ReplyDelete
 27. சிலர் ஏற்கனவே அறிமுகம்தான். மற்றவர்களை சென்று பார்க்கிறேன்.

  அறிமுகத்துக்கு மிக்க நன்றி பாலாசி.

  ReplyDelete
 28. //கலகலப்ரியா said...
  வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் பாலாசி...//

  மிக்க நன்றி அக்கா...

  //Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் ♥..♪ ♫ said...
  உண்மைதான் நண்பரே !
  '' ஊக்குவிக்கு ஆள் இருந்தால் இன்று
  ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான் ''
  அனுபவங்களை மிகவும் அழகாக சொல்லி இருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் .!
  பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் . மீண்டும் வருவேன்.//

  நன்றிங்க சங்கர் உங்களின் வருகைக்கு கருத்திற்கும்...

  //Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

  நீங்கள் அறிமுகம் செய்திருக்கும் பதிவர்கள் அனைவரும் சிறப்பானவர்களே .!அனைவருக்கும் வாழ்த்துக்கள் !//

  மீண்டும் நன்றிகள்...

  //Blogger பிரியமுடன் பிரபு said...
  சிறப்பான அறிமுகங்கள்
  எழுத்து நடை நல்லாயிருக்கு//

  நன்றிங்க பிரபு

  //Blogger அக்பர் said...
  சிலர் ஏற்கனவே அறிமுகம்தான். மற்றவர்களை சென்று பார்க்கிறேன்.
  அறிமுகத்துக்கு மிக்க நன்றி பாலாசி.//

  நன்றங்க அக்பர்....

  ReplyDelete
 29. நம்ம பாலாசி இன்னைக்கு யார அறிமுக படுத்த போறார்னு ஒரு ஆர்வத்தோட படிச்சுக்கிட்டு வந்த எனக்கு ஒரு அதிர்ச்சி,
  "டேய் நம்பள பத்தி தான் எழுதீர்க்காங்க",
  நம்ப முடியல ,வந்து மூணு மாசமே ஆன என் எழுத்துக்கும்
  ஒருஅங்கீகாரம் ,
  கண்ணையும்,மனதையும் நிறைத்தது,
  அறிமுகம் செய்த உனக்கும் ,
  எனையும் லாவண்யவையும் வாழ்த்திய மற்றவர்க்கும் ,
  எனது நன்றி !!!!

  ReplyDelete
 30. என் பதிவினை பாராட்டி, நற் அறிமுகம் தந்த பாலாசி அவர்களுக்கு நன்றி..

  எழுத்து என் ஆயுதம் என்பதுதான் நான் பணிபுரியும் இடத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டது.. நான் கற்றுக் கொண்டதும் அது மட்டுமே,.

  பெருமைக்குச் சொல்லவில்லை.. என் எழுத்தினால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறேன்.. என் மீது வழக்கும் தொடர‌ப்பட்டிருக்கிறது... எழுத்துக்காக என்னை இந்த உலகம் கொண்டாடி இருக்கிறது..

  அதெல்லாம் நான் வேலைப் பார்கும் நிறுவனத்திற்குத்தான் சொந்தம்.. அடையாள அட்டையை கழட்டி வைத்துவிட்டால், நான் இந்த சமூகத்தின் சாதாரண குடிமகள்..

  ஆனால் பிரேமாமகள் அப்படியில்லை.. தன்னைத் தேடி திரியும் ஒரு அகதி.. அவளில் முகமுடி இங்கே யாருக்கும் தெரியாது.. அப்படி தெரிந்தவர்களும் அதற்காக அவளை பாராட்டவில்லை என்பதும் தெரியும்.. என்னை, பிரேமாவின் மகளாக கொண்டாடும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..

  ReplyDelete
 31. This comment has been removed by the author.

  ReplyDelete
 32. கதிர் அய்யாவா????????????????
  இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்..நான்..

  ReplyDelete
 33. அறிமுகங்கள் அனைத்தும் அருமை..
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 34. //ரோகிணிசிவா said...
  நம்ம பாலாசி இன்னைக்கு யார அறிமுக படுத்த போறார்னு ஒரு ஆர்வத்தோட படிச்சுக்கிட்டு வந்த எனக்கு ஒரு அதிர்ச்சி,
  "டேய் நம்பள பத்தி தான் எழுதீர்க்காங்க",
  நம்ப முடியல ,வந்து மூணு மாசமே ஆன என் எழுத்துக்கும்
  ஒருஅங்கீகாரம் ,
  கண்ணையும்,மனதையும் நிறைத்தது,
  அறிமுகம் செய்த உனக்கும் ,
  எனையும் லாவண்யவையும் வாழ்த்திய மற்றவர்க்கும் ,
  எனது நன்றி !!!!//

  உங்களுக்கும் நன்றி..நன்றி...

  //Blogger பிரேமா மகள் said...
  என் பதிவினை பாராட்டி, நற் அறிமுகம் தந்த பாலாசி அவர்களுக்கு நன்றி..
  எழுத்து என் ஆயுதம் என்பதுதான் நான் பணிபுரியும் இடத்தில் கற்றுக் கொடுக்கப்பட்டது.. நான் கற்றுக் கொண்டதும் அது மட்டுமே,.
  பெருமைக்குச் சொல்லவில்லை.. என் எழுத்தினால் சமுதாயத்தில் மாற்றம் ஏற்படுத்தி இருக்கிறேன்.. என் மீது வழக்கும் தொடர‌ப்பட்டிருக்கிறது... எழுத்துக்காக என்னை இந்த உலகம் கொண்டாடி இருக்கிறது..
  அதெல்லாம் நான் வேலைப் பார்கும் நிறுவனத்திற்குத்தான் சொந்தம்.. அடையாள அட்டையை கழட்டி வைத்துவிட்டால், நான் இந்த சமூகத்தின் சாதாரண குடிமகள்..
  ஆனால் பிரேமாமகள் அப்படியில்லை.. தன்னைத் தேடி திரியும் ஒரு அகதி.. அவளில் முகமுடி இங்கே யாருக்கும் தெரியாது.. அப்படி தெரிந்தவர்களும் அதற்காக அவளை பாராட்டவில்லை என்பதும் தெரியும்.. என்னை, பிரேமாவின் மகளாக கொண்டாடும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..//

  ம்ம்ம்........ நன்றிங்க....

  //Blogger பிரேமா மகள் said...
  கதிர் அய்யாவா????????????????
  இதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன்..நான்..//

  ஆமங்க அக்கா....

  //Blogger Ananthi said...
  அறிமுகங்கள் அனைத்தும் அருமை..
  வாழ்த்துக்கள்..//

  வாங்க ஆனந்தி வணக்கம் நன்றி....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது