07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 6, 2010

மலர்களிரண்டு (வலைச்சரம்)

(அடர்கருப்பு) காமராஜ் எனது பொறாமைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர். என்போன்ற வாசிப்பறிவற்றவர்களுக்கு இவ்வலைப்பூவில் வாய்க்கப்பெற்றதொரு சொற்பூவனம். வார்த்தை ஜாலங்கள், வர்ணனைகளற்ற இயலெழுத்துக்களுக்கு சொந்தக்காரர். ஒரு மலையின் உச்சியை மணற்மேட்டில் நின்று காண்பதுபோன்ற உணர்வு எனக்கும். பொன்கள் நிரம்பிய ஒரு குகைக்குள் புகுந்து எதைத் தொடுவது எதை விடுவது என்றதொரு குழப்ப நிலையையை இவரது ஒவ்வொரு இடுகைகளும் பறைச்சாற்றும். இவரது சில இடுகைகளை படித்துவிட்டு உடற்படிந்த புழுதியினை உதிர்க்க முடியாத மனநிலையில் மூர்ச்சையுற்று திரும்பவேண்டிய கட்டாயம் எனக்கும் வாய்த்திருக்கிறது. அவ்வளவு தரம். மழையின் சாரலில் மெலிந்து வீசும் கரிசல் மண்ணின் வாடை இவரது எழுத்துக்கள். நுகாராத நாசிகளுக்கு கொடுப்பனையில்லையென்பேன். பொன், முத்து, வைரம், வைடூரியம் போன்று இவரது எழுத்துக்களை தரம்பிரித்து உங்களுக்கு அடையாளம் காண்பிப்பதில் எனக்கும் உடன்பாடில்லைதான். தேன்கூட்டினுளிருக்கும் சாளரத்தின் வழி எது வழிந்தாலும் அமிர்தம்தான். சில துளிகள் மட்டும்....

இவரது முதல் இடுகை..
நெட்டை மரங்களும், பெட்டை வீரமும்

(
இதை வாசித்துவிட்டு என் வளராத மீசையை முளையாமலே பார்த்துக்கொள்கிறேன்)

இன்னொன்று
மௌனத்துச் சலனங்கள்.

(கடந்து வந்த மனிதர்கள், உதிர்ந்துவிடும்பொழுது மனிதத்தன்மைக்கேயுண்டான தவிப்புடன்)••••••••••••••••••••••••••••••


(சிந்தனி) தங்கமணி பிரபு. என் ஆரம்பகால எழுத்தூணுக்கு அடித்தளமிட்டவர். தவறுகளை தவறாமல் சுட்டிக்காட்டி குட்டுவைத்தவர். சிந்தும் குருதியில் ஒட்டப்பட்ட காகிதத்தாள் போன்று அடுத்தவரின் வலிகளையும் தம்முள் ஈர்த்துக்கொள்ளவெண்ணும் நன்மனிதன். இவரது எழுத்துக்களில் மெல்லிய இழையாய் கோபம் கொஞ்சிக்கொண்டிருக்கும், சிலசமயங்களில் அதிகமாகக்கூட. சமுதாயத்தின் மீது சுற்றப்பட்ட ஒரு பாசப்போர்வை இவரது எழுத்துக்கள். வாழைப்பழத்தினூடே செருகப்பட்ட ஊசிபோல வழுக்கவும், வலிக்கவும் செய்யாத இடுகைகளுக்கு சொந்தக்காரர். (சில விண்ணங்களை தவிர்த்து). எனது விரலினால் இவரையும் காண்பிப்பது என்றும் எனக்கு பெருமிதமே. சில சாட்சிகள்...

இங்கே பாருங்கள் இந்த மனிதனுக்குள் மறைந்துகிடக்கும் ஒரு விதைச்சான்றை...

புறம் பூண்டு வந்தது
நிர்வாணம்

அகம் பூண்டு வந்தது
பேரன்பு

அவற்றை
மறைக்கவும்
அவிழ்க்கவும்
ஓயாமல் நாமுண்ணும்
பாவக்கனிகள்!!

முந்தானைகள் ஓய்ந்துபோகும்

(நடைமுறை வாழ்வில் காலிடறும் பெண்களை, குனிந்துப்பார்க்கும் ஆண்களின் சிகப்புக்கண் கொடூரத்தை, ஆற்றாமைவழி எடுத்துணர்த்தும் கவிதை)

நானும் சிவனும் – (சிறு)கதை

(இடுகாட்டிற்குள் முளைத்த பூ, மறைந்திருந்து நோட்டமிட்டாற்போல் நம்மையும் கண்கொள்ளச்செய்யும் ஒரு சிறுகதை. தந்தைக்கும் மகனுக்குமான பாசவலைகள் எக்கணங்களில் பின்னப்பட்டனவென்பதை அவர்பார்வையில் அவிழ்த்துவிட்டிருக்கிறார்)

•••••••••••••••••••••••••••

வாசிப்பனுபவங்கள் அவ்வளவாக தழுவப்படாத ஒரு வறட்டு வாழ்க்கைக்கு சொந்தக்காரன் நானே. சொல்லும்பொழுதும் கொஞ்சம் கூனவும், கூசவுமே செய்கிறது. நிறைய கற்கவேண்டும் ஆர்வம் மட்டும் தாங்கி வாழ்கிறேன். வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் அதற்கேற்றார்போல் மாற்றியமைத்துக்கொள்ள விழைகிறேன்.

என் பலநாள் இரவுகளுக்கு உறக்கமளித்தவை பழையப்பாடல்களே. நிம்மதியிழந்த நினைவுடன் புரண்டுகொண்டிருந்த என் உடலுக்கும் நித்திரையுணர்வைக்கொணர்ந்தவை பழையப்பாடல்கள்தான். என்னுடலும் உயிரும் திகட்டாமல் சுவைத்துக்கொண்டிருக்க கண்ணதாசனின் வரிகளும்.......

அவ்வாறு நான் கண்ட முத்துக்கள் இங்கே. உடுத்திக்கொள்வதும் உதறிச்செல்வதும் அவரவர் விருப்பம்...

தாழையாம் பூமுடிச்சி...தடம் பார்த்து நடைநடந்து.. இப்பாடலின் குரலிசை மழையில் நனையாத கிராம, நகர மண்களில்லையெனலாம்..கண்ணதாசனுக்குரிய ரசிகர் பட்டாளத்தினை சம்பாதித்துக்கொடுத்தப்பாடல்...
ரசித்தேன் இவ்வரிகளை
அங்கம் குறைந்தவனை...ஓர் அழகில்லா ஆண்மகனை...

மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா?

வீட்டில் மணம்பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா?
மணம்பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா?
....

மண்பார்த்து விளைவதில்லை, மரம் பார்த்து படர்வதில்லை.....

மங்கையரும் பூங்கொடியும் கண்ணையா...
அவர் கண்ணிலே கலங்கமுண்டோ சொல்லையா...

அடடா...கல்மனமும் கரையாதோ இவ்வரிகளில்...யாழிசைக்கலந்த தெள்ளமுது...


பாடியவர்கள்: டி.எம். சௌந்தர்ராஜன், பி.லீலா
படம்: பாகப்பிரிவினை
இசை: எம்.எஸ். விசுவநாதன்


என்றும் தங்களின் ஆதரவினை நாடும்,

பாசமுடன்,35 comments:

 1. இரண்டுமே அருமையான மலர்கள் பாலாசி...

  வாழ்த்துகள்!!!!

  ReplyDelete
 2. இரண்டு மலர்களும், அவர்களின் வாசமும் அருமை...

  திகைக்க வைக்கிறது அவர்கள் எழுத்துப்புலமை...

  ReplyDelete
 3. நல்ல எழுத்துக்கு நிறைவான அறிமுகம். இன்றும் தமிழமுது பாட்டுடன். அசத்துறாயப்பா:). பாராட்டுகள்

  ReplyDelete
 4. இவ்விரு மலர்களை இதுவரை அறிந்ததில்லை....அறியும் முன் ஒரு தகவல்...உங்கள் தமிழ் மேலும் நிரூபித்திருக்கிறது “ தமிழுக்கு அமுதென்று பேரென்று”...

  வாழ்த்துக்கள் பாலாசி..உங்க தமிழ் ஆர்வம் பெருமிதமாய் இருக்கு...

  ReplyDelete
 5. வாழ்த்துகள்!!

  ReplyDelete
 6. அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள் பாலாசி.

  ReplyDelete
 7. அவர்களின் பக்கங்களை நான் இன்னும்
  படித்ததில்லை, உங்களின் எழுத்து நடை
  படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது,
  நன்றி, & வாழ்த்துக்கள் பாலாசி.

  ReplyDelete
 8. அருமையான பகிர்வு. Best wishes!

  ReplyDelete
 9. வாசிப்பனுபவங்கள் அவ்வளவாக தழுவப்படாத ஒரு வறட்டு வாழ்க்கைக்கு சொந்தக்காரன் நானே. சொல்லும்பொழுதும் கொஞ்சம் கூனவும், கூசவுமே செய்கிறது. நிறைய கற்கவேண்டும் ஆர்வம் மட்டும் தாங்கி வாழ்கிறேன். வாய்ப்புகளையும் சூழ்நிலைகளையும் அதற்கேற்றார்போல் மாற்றியமைத்துக்கொள்ள விழைகிறேன்.
  100/100

  ReplyDelete
 10. அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள் பாலாசி

  ReplyDelete
 11. /அடர்கருப்பு) காமராஜ் எனது பொறாமைக்குரிய எழுத்தாளர்களில் ஒருவர்/
  எனக்கும்!

  ReplyDelete
 12. மௌனத்து சலனங்களை இப்போது தான் வாசிக்கிறேன்.


  மனத்தை அழுத்திய பாரத்தை இறக்கி வைக்க விரும்பவில்லை.

  அருமையான பகிர்வு.

  ReplyDelete
 13. //தேன்கூட்டினுளிருக்கும் சாளரத்தின் வழி எது வழிந்தாலும் அமிர்தம்தான்.//

  மனதில் இருப்பதை மிக நன்றாக எழுதுவது கைகூடியிருக்கிறது உங்களுக்கு பாலாசி.
  அன்புடன்
  சந்துரு

  ReplyDelete
 14. அருமை பாலாசி!
  சொன்ன விதம் அசத்தல்.

  தொடருங்கள்.

  :)

  ReplyDelete
 15. //ஈரோடு கதிர் said...
  இரண்டுமே அருமையான மலர்கள் பாலாசி...
  வாழ்த்துகள்!!!!//

  நன்றிங்க அய்யா...

  //Blogger அகல்விளக்கு said...
  இரண்டு மலர்களும், அவர்களின் வாசமும் அருமை...
  திகைக்க வைக்கிறது அவர்கள் எழுத்துப்புலமை...//

  உண்மை ராசா... நன்றியும்...

  //Blogger வானம்பாடிகள் said...
  நல்ல எழுத்துக்கு நிறைவான அறிமுகம். இன்றும் தமிழமுது பாட்டுடன். அசத்துறாயப்பா:). பாராட்டுகள்//

  நன்றிங்கய்யா... பாராட்டுக்களுக்கும்...

  //Blogger தமிழரசி said...
  இவ்விரு மலர்களை இதுவரை அறிந்ததில்லை....அறியும் முன் ஒரு தகவல்...உங்கள் தமிழ் மேலும் நிரூபித்திருக்கிறது “ தமிழுக்கு அமுதென்று பேரென்று”...
  வாழ்த்துக்கள் பாலாசி..உங்க தமிழ் ஆர்வம் பெருமிதமாய் இருக்கு...//

  மிக்க நன்றிங்கக்கா...

  //Blogger Mrs.Menagasathia said...
  வாழ்த்துகள்!!//

  நன்றிங்க..

  //Blogger ரோகிணிசிவா said...
  mmmm , ena solrathu superba irukku.//

  நன்றிங்கா...

  //Blogger ராமலக்ஷ்மி said...
  அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள் பாலாசி.//

  நன்றிங்க அக்கா...

  //Blogger சைவகொத்துப்பரோட்டா said...
  அவர்களின் பக்கங்களை நான் இன்னும்
  படித்ததில்லை, உங்களின் எழுத்து நடை
  படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது,
  நன்றி, & வாழ்த்துக்கள் பாலாசி.//

  நன்றிங்க நண்பரே... படித்துப்பாருங்கள்...

  //Blogger Chitra said...
  அருமையான பகிர்வு. Best wishes!//

  நன்றிங்க சித்ரா....

  ReplyDelete
 16. //T.V.ராதாகிருஷ்ணன் said...
  அருமை பாலாசி...//

  நன்றிங்க அய்யா...

  //Blogger தாராபுரத்தான் said...
  100/100//

  நன்றிங்க அய்யா..

  //Blogger நேசமித்ரன் said...
  அருமையான பகிர்வு. வாழ்த்துக்கள் பாலாசி//

  நன்றிங்க நேசமித்ரன்..

  //Blogger அன்புடன் அருணா said...
  எனக்கும்!//

  இன்னும் எத்தனையோ பேர் இருக்கலாம்... நன்றிங்க அருணா...

  //Blogger தமிழ் உதயம் said...
  மௌனத்து சலனங்களை இப்போது தான் வாசிக்கிறேன்.
  மனத்தை அழுத்திய பாரத்தை இறக்கி வைக்க விரும்பவில்லை.
  அருமையான பகிர்வு.//

  மிக்க நன்றி தமிழ்உதயம்... பாரத்தையும் இறக்கிவிட்டால் பகிர்ந்துகொள்ளலாம்...

  //Blogger தாமோதர் சந்துரு said...
  மனதில் இருப்பதை மிக நன்றாக எழுதுவது கைகூடியிருக்கிறது உங்களுக்கு பாலாசி.
  அன்புடன்
  சந்துரு//

  நன்றிங்க தாமோதர் அய்யா...

  //Blogger அண்ணாமலையான் said...
  congrats//

  நன்றி அண்ணாமலையான்...

  //Blogger 【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

  அருமை பாலாசி!
  சொன்ன விதம் அசத்தல்.
  தொடருங்கள். :)//

  நன்றிங்க ஷங்கர்...

  ReplyDelete
 17. (சிந்தனி) தங்கமணி பிரபு, அருமையான உணர்வு கொண்டவர்!! சமரசம் செய்து கொள்ளாத நெஞ்சுக்காரர்!!

  ReplyDelete
 18. அன்பின் பாலாசி

  அருமையான அறிமுகங்கள் - காமராஜ் மற்றும் தங்கமணி பிரபு

  அழகில்லா ஆண்மகனை - மகளை அல்ல - திருத்தலாமே

  நன்று பாலாசி

  நல்வாழ்த்துகள் பாலாசி

  நட்புடன் சீனா

  ReplyDelete
 19. உங்களின் அறிமுகங்கள் அனைத்தும் அருமை நண்பரே !  //////////அங்கம் குறைந்தவனை...ஓர் அழகில்லா ஆண்மகனை...
  மங்கையர்கள் நினைப்பதுண்டோ பொன்னம்மா?
  வீட்டில் மணம்பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா?
  மணம்பேசி முடிப்பதுண்டோ சொல்லம்மா?....////////


  உங்களின் ரசனை மிகவும் சிறப்பு ! பகிர்வுக்கு நன்றி !
  தொடருகள் .
  மீண்டும் வருவேன் .

  ReplyDelete
 20. நன்றி பாலாசி பகிர்வுகளுக்கு.

  ReplyDelete
 21. அன்பின் பாலாசி

  லேபிளில் க.பாலாசி என இட்டால் - நாளை யாராவது க.பாலாசி எனத் தேடினால் உன்னால் இடப்பட்ட அனைத்து இடுகைகளும் வரும். விதி முறைகளில் இதுவும் ஒன்று. ஏற்கனவே ஒரு மறுமொழியில் இதனைக் கூறி இருக்கிறேன். லேபிள்களைத் திருத்துக,

  நல்வாழ்த்துகள் பாலாசி
  நட்புடன் சீனா

  ReplyDelete
 22. இருமலர்களும், அவற்றின் மணமும் அருமை.
  நல்லதோர் பகிர்வு.

  ReplyDelete
 23. வாவ்!

  நம்ம காமு!ரொம்ப சந்தோசமாய்,பெருமையாய் உணர்கிறேன் பாலாஜி.

  தங்கமணி பிரபுவை அறிமுகம் செய்ததற்கு நன்றி.அவரின் இந்த ஒரு கவிதையே யாரையும் அவரிடம் சேர்க்கும்.ஓடிப் போய் நானும் சேரனும்.

  ReplyDelete
 24. வாசமலர்களுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 25. அருமையான அறிமுகம் பாலாசி.

  ReplyDelete
 26. நண்பர் பாலாஜிக்கு வலைப்பூவில் உங்கள் அறிமுகப்பூக்கள் அருமை.

  உங்கள் முதல் சரத்தில் பூத்த பூக்கள் இரண்டும் அரிதாக கிடைக்கும் குறிஞ்சிப் பூக்கள்தான் என்பதை உங்கள் எழுத்துக்கள் உணர்த்துக்கின்றன.

  ஆழமான அழகான எழுத்துக்கள்.

  தாழையாம்... பாடல் அடிக்கடி கேட்கத்தூண்டும் அழகான பாடல்...

  உங்கள் அறிமுகத்தில் பாடலும் இணைந்தது கூடுதல் சிறப்பு.

  தொடரட்டும் உங்கள் கலக்கல் அறிமுகம். மின்னட்டும் இந்த வார வலைச்சரம்.

  ReplyDelete
 27. ஆசிரியருக்கு வணக்கமும் வாழ்த்துகளும்!

  ReplyDelete
 28. //தேவன் மாயம் said...
  (சிந்தனி) தங்கமணி பிரபு, அருமையான உணர்வு கொண்டவர்!! சமரசம் செய்து கொள்ளாத நெஞ்சுக்காரர்!!//

  ஆமங்க நண்பரே... நன்றி...

  //Blogger cheena (சீனா) said...
  அன்பின் பாலாசி
  அருமையான அறிமுகங்கள் - காமராஜ் மற்றும் தங்கமணி பிரபு
  அழகில்லா ஆண்மகனை - மகளை அல்ல - திருத்தலாமே
  நன்று பாலாசி
  நல்வாழ்த்துகள் பாலாசி
  நட்புடன் சீனா//

  நன்றிங்கய்யா... திருத்தினேன்...

  //Blogger ♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
  உங்களின் அறிமுகங்கள் அனைத்தும் அருமை நண்பரே !
  உங்களின் ரசனை மிகவும் சிறப்பு ! பகிர்வுக்கு நன்றி !
  தொடருகள் .
  மீண்டும் வருவேன் .//

  நன்றிங்க பனித்துளி சங்கர்...

  //Blogger இராமசாமி கண்ணண் said...
  நன்றி பாலாசி பகிர்வுகளுக்கு.//

  நன்றிங்க வருகைக்கும்...

  //Blogger cheena (சீனா) said...
  அன்பின் பாலாசி
  லேபிளில் க.பாலாசி என இட்டால் - நாளை யாராவது க.பாலாசி எனத் தேடினால் உன்னால் இடப்பட்ட அனைத்து இடுகைகளும் வரும். விதி முறைகளில் இதுவும் ஒன்று. ஏற்கனவே ஒரு மறுமொழியில் இதனைக் கூறி இருக்கிறேன். லேபிள்களைத் திருத்துக,
  நல்வாழ்த்துகள் பாலாசி
  நட்புடன் சீனா//

  சுட்டியமைக்கு நன்றிங்கய்யா... மாற்றிவிட்டேன்...

  //Blogger அம்பிகா said...
  இருமலர்களும், அவற்றின் மணமும் அருமை.
  நல்லதோர் பகிர்வு.//

  நன்றிங்க அம்பிகா...

  //Blogger பா.ராஜாராம் said...
  வாவ்!
  நம்ம காமு!ரொம்ப சந்தோசமாய்,பெருமையாய் உணர்கிறேன் பாலாஜி.
  தங்கமணி பிரபுவை அறிமுகம் செய்ததற்கு நன்றி.அவரின் இந்த ஒரு கவிதையே யாரையும் அவரிடம் சேர்க்கும்.ஓடிப் போய் நானும் சேரனும்.//

  நன்றிங்க அய்யா...

  ReplyDelete
 29. //D.R.Ashok said...
  :)//

  நன்றிங்கண்ணா...

  //Blogger துபாய் ராஜா said...
  வாசமலர்களுக்கு வாழ்த்துக்கள்.//

  நன்றிங்க ராஜா...

  //Blogger அக்பர் said...
  அருமையான அறிமுகம் பாலாசி.//

  நன்றி அக்பர்...

  //Blogger சே.குமார் said...
  நண்பர் பாலாஜிக்கு வலைப்பூவில் உங்கள் அறிமுகப்பூக்கள் அருமை.
  உங்கள் முதல் சரத்தில் பூத்த பூக்கள் இரண்டும் அரிதாக கிடைக்கும் குறிஞ்சிப் பூக்கள்தான் என்பதை உங்கள் எழுத்துக்கள் உணர்த்துக்கின்றன.
  ஆழமான அழகான எழுத்துக்கள்.
  தாழையாம்... பாடல் அடிக்கடி கேட்கத்தூண்டும் அழகான பாடல்...
  உங்கள் அறிமுகத்தில் பாடலும் இணைந்தது கூடுதல் சிறப்பு.
  தொடரட்டும் உங்கள் கலக்கல் அறிமுகம். மின்னட்டும் இந்த வார வலைச்சரம்.//

  நன்றிங்க குமார்.. உங்களின் வருகைக்கும் வாழ்த்துதலுக்கும்...

  //Blogger பழமைபேசி said...
  ஆசிரியருக்கு வணக்கமும் வாழ்த்துகளும்!//

  நன்றிங்கய்யா...

  ReplyDelete
 30. இரு மலர்களும் நறுமலர்கள்!!!

  ReplyDelete
 31. //இதை வாசித்துவிட்டு என் வளராத மீசையை முளையாமலே பார்த்துக்கொள்கிறேன்//

  அருமை.
  ################
  க.பாலாசி
  வலைசரத்தில்
  நீ சாகசி...
  ################

  டிஸ்கி: இங்கே நீ என்று ஒருமையில் குறிப்பட்டதை தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்....

  ReplyDelete
 32. அடர்கருப்பு காமராஜை நீங்கள் அறிமுகபடுத்தி இருபது மிகவும் அருமையாய் இருக்கிறது.
  //இவரது சில இடுகைகளை படித்துவிட்டு உடற்படிந்த புழுதியினை உதிர்க்க முடியாத மனநிலையில் மூர்ச்சையுற்று திரும்பவேண்டிய கட்டாயம் எனக்கும் வாய்த்திருக்கிறது.//

  ReplyDelete
 33. //ஹரிணி அம்மா said...
  இரு மலர்களும் நறுமலர்கள்!!!//

  நன்றிங்க...

  //Blogger அஹமது இர்ஷாத் aid...

  அருமை.
  ################
  க.பாலாசி
  வலைசரத்தில்
  நீ சாகசி...
  ################

  டிஸ்கி: இங்கே நீ என்று ஒருமையில் குறிப்பட்டதை தவறாக எடுத்து கொள்ளவேண்டாம்....//

  அப்டில்லாம் ஒண்ணுமில்லைங்க நண்பரே... நன்றிங்க...

  //Blogger இனியாள் said...
  அடர்கருப்பு காமராஜை நீங்கள் அறிமுகபடுத்தி இருபது மிகவும் அருமையாய் இருக்கிறது.//

  நன்றிங்க இனியாள்....

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது