07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 20, 2010

அப்பா…..அன்புள்ள அப்பா

எனக்குத் திருமணம் முடிந்து, புதிய வீடு குடிபோகும் அன்று லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வீட்டைக் கழுவி விட்ட அப்பாவிடம் ஏதோ ஒரு புதிய பரிமாணம் ஒன்று தெரிந்தது.

”உணரப்படாத அன்பு தான் பெரிய வலி”என்று கூறுவார்கள். அந்த வலியை அதிகம் அடைந்திருப்பது அப்பாக்களாய்த்தான் இருக்கும்.

அப்பாக்களின் பொதுக் குணங்கள் என்று சிலவற்றைப் பட்டியலிடலாம்.

1. தான் நினைக்கும் எதையும் அம்மா மூலம் பேசுவது.
2. தான் மிகவும் கண்டிப்பு போல நடிப்பது.
3. பாசத்தை சீக்கிரத்தில் வெளிப்படுத்தாமை இன்னும் நிறைய சொல்லலாம்.

இனி...அப்பாக்கள் பற்றிய பதிவர்களின் பார்வைகள்

நர்சிம்மின் - இந்த அப்பா பற்றிய பதிவு நாம் சொல்ல ஆசைப்படுவதை அவர் நமக்காய் சொன்ன பதிவு.

நவீன்பிரகாஷின் - இப்பதிவு, கவிதைகள் மற்றும் படங்கள் வாயிலாக நமக்கு உணர்த்துவது ஏராளம்.

கிருத்திகாவின் இப்பதிவில் எனக்குப் பிடித்த வரி” அவர் இருந்த வரை நான் குழந்தையாகவே இருந்து வந்தேன்’.

லோஷனின் இந்தப் பதிவு, தன் அப்பாவையே தன் குழந்தைக்கும் ரோல் மாடலாக இருக்க செய்வதற்கான ஆசையை வெளிப்படுத்திய விதம் அழகு.

சூரியக்கதிரின் இப்பக்கத்தில் 4 ஆசிரியர்கள் தங்கள் அப்பாக்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சந்திரசேகர்
எழுதிய இப்பதிவு கதையாக
இருந்தாலும் நேசிக்கத்தகுந்தது.

அதிரையின் இக்கதை உணர்த்தும் வலிகள் ஏராளம்.

தூரத்துஅப்பா குழந்தையிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் தூரத்து அப்பா கவிதையாக.

ஞானசேகரின்
இக்கவிதையும் அப்பாவைப் பற்றிய சிறந்த ஒன்றுதான்.

புதிய தலைமுறை திரு.கல்யாண்ஜியின்
அப்பா பற்றிய கதை விகடனின் முத்திரைக்கதையாக வந்தது.

17 comments:

 1. //”உணரப்படாத அன்பு தான் பெரிய வலி”என்று கூறுவார்கள். அந்த வலியை அதிகம் அடைந்திருப்பது அப்பாக்களாய்த்தான் இருக்கும்.//

  சரியாய் சொன்னீர்கள்
  என்று படுகிறது.

  ReplyDelete
 2. //////எனக்குத் திருமணம் முடிந்து, புதிய வீடு குடிபோகும் அன்று லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வீட்டைக் கழுவி விட்ட அப்பாவிடம் ஏதோ ஒரு புதிய பரிமாணம் ஒன்று தெரிந்தது.

  ”உணரப்படாத அன்பு தான் பெரிய வலி”என்று கூறுவார்கள். அந்த வலியை அதிகம் அடைந்திருப்பது அப்பாக்களாய்த்தான் இருக்கும்.///////


  உங்களின் வார்த்தைகள் மிகவும் அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறது அப்பாக்களின் அன்பையும் , வலியையும் .பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் மீண்டும் வருவேன் .

  ReplyDelete
 3. பெற்றவர்களின் பாசத்தை நாம் நமது திருமணத்திற்குப் பிந்தான் புரிந்து கொள்ளத் துவங்குகிறோம்!!

  ReplyDelete
 4. அப்பாவின் அன்பை அருமையா சொல்லிருக்கீங்க செல்வம்.

  ReplyDelete
 5. சிறந்த தொகுப்பு.

  அப்பாவிலிருந்து ஆரம்பித்தது அருமை!

  ReplyDelete
 6. அருமையான தொகுப்பு!! வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. "அப்பா…..அன்புள்ள அப்பா"
  பதிவர்களின் பார்வைகளையும் இணைத்துப் பகிர்ந்தது சிறப்பு.

  ReplyDelete
 8. நன்றி...சைவகொத்துப்பரோட்டா, சங்கர்,ஹீஸைனம்மா,மின்மினி,
  வெயிலான்,திருமதி.மேனகா,மாதேவி.

  பொறுமையாய்ப் படித்த தோழர்களுக்கு நன்றி.

  அன்புடன்

  செல்வம்

  ReplyDelete
 9. அப்பாவைப் பற்றிய பதிவு நல்லா இருக்கு. நான் திருமணம் முடித்த பிறகு தான் அப்பாவின் அருமையை உணர்ந்தேன்.

  ReplyDelete
 10. 'அப்பா'டி, கரெக்டாத்தான் சொல்லிருக்கீங்க.

  ReplyDelete
 11. என்ன இருந்தாலும் நாமெல்லாம் அப்பா புள்ளைகதானே செல்வம்....
  எனக்கு அப்பா ஒரு வாழும் உதாரணம்.

  ReplyDelete
 12. அன்பின் செல்வம்

  அப்பா பற்றிய இடுகைகளை அறிமுகம் செய்தது நன்று. நல்லதொரு சிந்தனை.
  நல்வாழ்த்துகள் செல்வம்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 13. அப்பா ...... இப்படி தீம் செலக்ட் செய்து, அதன் படி அறிமுகப் படுத்தும் உங்களுக்கு பாராட்டுக்கள்.

  ReplyDelete
 14. நன்றி....வானதி, மங்குனிஅமைச்சர், நிசாமுதீன்,முரளி,சீனாஐயா, சித்ரா

  அன்புடன்

  செல்வம்

  ReplyDelete
 15. ”உணரப்படாத அன்பு தான் பெரிய வலி"

  சூப்பாரான‌ வ‌ரிக‌ள்

  அப்பாக்களின் தொகுப்பு அருமை,

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது