07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது
Showing posts with label செல்வம். Show all posts
Showing posts with label செல்வம். Show all posts

Sunday, April 25, 2010

நன்றியுரை

யாருமே இல்லாத கடையில் (என் பதிவுகள்) டீ ஆத்திக்கொண்டிருந்த என்னைக் கூட்டி வந்து கஃபே காஃபிடேயில் (வலைச்சரம்) வந்து காஃபி ஆத்த வைத்த சீனா ஐயாவிற்கு முதல் நன்றி.

நான் ஆத்திக்கொடுத்த காஃபியைக் குடித்து விட்டு மட்டும் போகாமல் அதை நல்லாயிருக்குன்னும் சொல்லிவிட்டுப் போன தோழர்களுக்கும் நன்றி.

என்ன தான் சுய எள்ளல் தொனியில் எழுதினாலும், பாராட்டிற்கு மனம் ஏங்கத்தான் செய்கிறது. அது கிடைக்கும் போது மனம் குதூகலிக்கிறது. ஆனால் பாராட்டுவதற்கு என்று நல்ல மனம் வேண்டும்.

நான் நிறைய பதிவுகள் படித்தாலும் என் சோம்பேரித்தனத்தாலோ, அல்லது வேறு ஏதோ ஒரு தனத்தாலோ யாருக்கும் அதிகம் பின்னூட்டம் போடுவதேயில்லை. இனி கூடுமான வரை நல்ல விஷயங்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது. அதற்கும் நன்றி.

இனி வரும் வாரங்களில் வலைச்சரத்தில் கலக்கப்போகும் தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.

அன்புடன்

செல்வம்
மேலும் வாசிக்க...

Friday, April 23, 2010

தமிழ்சினிமாவின் சிறந்த ஆளுமைகள்

தமிழர்களின் சினிமா மீதான காதல் உணர்வுப்பூர்வமானது. அதனால் தான் இன்றும் படங்களில் நடித்து விட்டால் போதும்,முதல்வர் நாற்காலியை எட்டிப்பிடித்து விடலாம் என்ற ஆசையில் நிறையபேர் சுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தமிழ்நாட்டின் வரலாற்றை சற்று நேரம் செலவிட்டுப் படித்துப்பார்த்தால் புரியும். கலைஞரோ, எம்ஜிஆரோ, ஜெயலலிதாவோ வெறும் சினிமாவில் இருந்ததால் மட்டும் முதல்வர்கள் ஆகிவிடவில்லை. அது ஒரு காஸ்ட்லி விசிட்டிங்கார்ட் அவ்வளவுதான். அதையும் தாண்டி எவ்வளவோ உள்ளது.

நம் தமிழ்சினிமா மிகச்சிறந்த திறமையாளர்கள் பலரைக் கொண்டது. அதில் எனக்கு மிகவும் பிடித்த ஆளுமைகள் பற்றி பதிவர்கள் பார்வையில் இன்று...

எம்.ஆர்.ராதா :காலத்தைத் தாண்டி ஒலித்த கலகக்காரனின் குரல். சுகுணாவின் இப்பதிவு ராதாவின் பல முகங்களை வெளிக்கொண்டு வந்தது.

நாகேஷ் : சுதேஷமித்திரனின் இப்பதிவு காலத்தை வென்ற கலைஞனை அழகாக ஞாபகமூட்டுகிறது.

கவுண்டமணி : முரளிகண்ணனின் கவுண்டமணி பற்றிய தொடர் பதிவுகளில் வெளியான பின்னூட்டங்கள், இன்றும் அவர் மீது ரசிகர்கள் கொண்டிருக்கும் அன்பிற்குச் சாட்சி.

ஸ்ரீதர் : ஆர்.வி அவர்களின் வலைப்பூவில் ஸ்ரீதர் பற்றிய நிறைய இடுகைகள் உள்ளன. வாசித்துத்தான் பாருங்களேன்.

பாரதிராஜா :இயக்குநர் மகேந்திரன் பாரதிராஜா பற்றிச் சொன்னதைத் தொகுத்து தந்திருக்கிறார் முருகன். இதைப் படித்தால் பாரதிராஜாவின் வாழ்க்கைக்குறிப்பு இலவசம்.

பாக்யராஜ் : றேடியோஸ்பதி இந்தப் பதிவில் பாக்யராஜின் பல படங்களுக்கு சிறு குறிப்பு கொடுத்திருப்பார்.

மணிரத்னம் : அ.ராமசாமியின் இக்கட்டுரை மணியின் கருத்தியலையும் அலசுகிறது.

இளையராஜா : நம் ராகதேவனின் இசையைப் பற்றி நிறைய பதிவுகளைப் படித்திருப்போம். இளையராஜா பற்றிய விமர்சனங்கள் ஏன் உணர்வுப்பூர்வமாகி விடுகின்றன? ஏனெனில் அவரின் இசை தமிழர்களின் உணர்வோடு கலந்திருப்பதால் தான். அவருடைய வாழ்க்கைகுறிப்பு அடங்கிய pdf இத்தளத்தில்..


பி.சி.ஸ்ரீராம்: ஒளிப்பதிவு மேதை குறித்த ஆனந்தவிகடனின் 25 இது.


அஜயன்பாலாவின் இந்த 1980-1989 தமிழ்சினிமா கட்டுரை,தமிழ்சினிமாவை நேசிப்பவர்கள் அனைவராலும் வாசிக்கப்படவேண்டிய ஒன்று.

அன்புடன்

செல்வம்
மேலும் வாசிக்க...

Thursday, April 22, 2010

புதுசு....கண்ணா…..புதுசு

வலைச்சரத்தின் நோக்கமே புதிய பதிவர்களை வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது தான். சனவரி 2010 லிருந்து இந்த வலைப் பெருங்கடலில் தம்மை இணைத்துக் கொண்ட பதிவர் நண்பர்களின் வலைப்பூக்களை இவ்விடுகையில் காண்போம்.

கோப்புகள் ராஜ் என்பவரால் துவங்கப்பட்டிருக்கும் வலைப்பூ இது. நமக்குத் தேவையான பைல்களை இலவசமாகத் தரவிறக்கிக் கொள்ளலாம். ராஜ் உங்ககிட்ட இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்.:-)

விஜய் ஆம்ஸ்ட்ராங் – மாத்தியோசி திரைப்பட ஒளிப்பதிவாளர் நமக்கு ஒளிப்பதிவு பற்றி நிறைய சொல்லித்தருகிறார்.

குறுந்தொகை குறித்த நண்பர் விஜயின் பதிவு இது.

அஷீதாவின் பதிவு இது.குழந்தையின் மழலை கேட்க முடியாத ஏக்கக் கவிதையை நீங்களும் படித்துதான் பாருங்களேன்.

எழுத்தாளர் அமுதவனின் பதிவு இது. சிவக்குமார் பேச்சு பற்றிய இவருடைய இடுகை சிவக்குமாரின் பேச்சாற்றலை இயல்பாய் விவரிக்கிறது.

நெற்றிக்கண் என்ற பதிவு இது. சினிமா, கிசுகிசு என்று சுவாரஸ்யமாக கலந்து கட்டி அடித்து வருகின்றனர்.

அக்குபஞ்சர் பற்றி ஒரு மருத்துவர் சொல்லித்தரும் வலைப்பூ இது.

துணையெழுத்து
எழுதப்பட்டு இருப்பது 4 கட்டுரைகள் என்றாலும், நாலுமே நச்.

ஜெய்யின் உலகத்திரைப் படங்களுக்கென்றே ஒரு பிரத்யேக வலைப்பூ இது.

சீதாம்மா எங்கள் ஊரின் பக்கத்து ஊரிலிருந்து (எட்டயபுரம்) ஒரு அம்மா வாழ்க்கையை சொல்லித் தருகிறார்கள்.
மேலும் வாசிக்க...

Wednesday, April 21, 2010

குழந்தைகள்….பெண்கள்.....ஆண்கள்

குழந்தைகள் மீதான நம் விருப்பம் தான் மனித இனத்தை இன்னும் உயிரோடு வைத்திருப்பதற்கான முதல் காரணி. அதிலும் இயல்பாகவே பெண்களுக்கு குழந்தைகள் மீதான ஆசை அதிகமாகத்தான் இருக்கும். ஆண்களும் தங்களைத் தாயுமானவனாக உணர்வது குழந்தை பெறும் போது தான். எனவே இன்று பதிவர்களின் பார்வையில் குழந்தைகள்...

தீபாவின் இந்த நேஹா பற்றிய பதிவு, அவ்வளவு அழகு.

அமித்து பற்றிய அவர் அம்மாவின் பதிவு. அமித்துவின் மொழிநடை தான் உலகிலேயே சிறந்த மொழிநடை.

சித்ராவின் பதிவு பிரசவ வேதனையை இவ்வளவு லைட்டாகக் கூட சொல்ல முடியுமா? முடியும். குழந்தைகள் மீது தீராக் காதல் இருந்தால்...

ரவியின் இந்தப் பதிவு குழந்தை வளர்ப்பை அறிவியல் / உளவியல் பூர்வமாகச் சொல்லித்தருகின்றது.

ரிதன்யா பற்றிய இப்பதிவு குழந்தை பிறப்பு நேரத்தை அழகாக விவரிக்கிறது.

பப்பு பற்றிய இப்பதிவில் பப்புவின் கேள்வி” அழற குழந்தைங்களை திட்டக் கூடாது! உனக்கு தெரியாது?”

நிலா - உங்களுக்கு சோர்வாக உள்ளதா? ரிப்ரெஷ் செய்ய வேண்டுமா...நம் தேவதை நிலாவின் வீட்டிற்குச் சென்று வாருங்கள்.

ராம்குமாரின் இப்பதிவு குழந்தைகள் வளர்ப்பைப் பற்றி நிறைய பேசுகிறது.

தாத்தாபாட்டியில் வல்லிசிம்ஹன் குழந்தைகள் உணவு பற்றி சொல்லித்தருகிறார்.

லக்கிலுக்
- கல்யாணத்திற்கும், குழந்தைபிறப்பிற்கும் இடைப்பட்ட காலவெளி நீண்டு விட்டால் ஏற்படும் அவஸ்தைகளை இதை விட சிறப்பாக யாரும் சொல்லமுடியுமா?
மேலும் வாசிக்க...

Tuesday, April 20, 2010

அப்பா…..அன்புள்ள அப்பா

எனக்குத் திருமணம் முடிந்து, புதிய வீடு குடிபோகும் அன்று லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு வீட்டைக் கழுவி விட்ட அப்பாவிடம் ஏதோ ஒரு புதிய பரிமாணம் ஒன்று தெரிந்தது.

”உணரப்படாத அன்பு தான் பெரிய வலி”என்று கூறுவார்கள். அந்த வலியை அதிகம் அடைந்திருப்பது அப்பாக்களாய்த்தான் இருக்கும்.

அப்பாக்களின் பொதுக் குணங்கள் என்று சிலவற்றைப் பட்டியலிடலாம்.

1. தான் நினைக்கும் எதையும் அம்மா மூலம் பேசுவது.
2. தான் மிகவும் கண்டிப்பு போல நடிப்பது.
3. பாசத்தை சீக்கிரத்தில் வெளிப்படுத்தாமை இன்னும் நிறைய சொல்லலாம்.

இனி...அப்பாக்கள் பற்றிய பதிவர்களின் பார்வைகள்

நர்சிம்மின் - இந்த அப்பா பற்றிய பதிவு நாம் சொல்ல ஆசைப்படுவதை அவர் நமக்காய் சொன்ன பதிவு.

நவீன்பிரகாஷின் - இப்பதிவு, கவிதைகள் மற்றும் படங்கள் வாயிலாக நமக்கு உணர்த்துவது ஏராளம்.

கிருத்திகாவின் இப்பதிவில் எனக்குப் பிடித்த வரி” அவர் இருந்த வரை நான் குழந்தையாகவே இருந்து வந்தேன்’.

லோஷனின் இந்தப் பதிவு, தன் அப்பாவையே தன் குழந்தைக்கும் ரோல் மாடலாக இருக்க செய்வதற்கான ஆசையை வெளிப்படுத்திய விதம் அழகு.

சூரியக்கதிரின் இப்பக்கத்தில் 4 ஆசிரியர்கள் தங்கள் அப்பாக்களைப் பற்றிப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

சந்திரசேகர்
எழுதிய இப்பதிவு கதையாக
இருந்தாலும் நேசிக்கத்தகுந்தது.

அதிரையின் இக்கதை உணர்த்தும் வலிகள் ஏராளம்.

தூரத்துஅப்பா குழந்தையிடமிருந்து அந்நியப்பட்டிருக்கும் தூரத்து அப்பா கவிதையாக.

ஞானசேகரின்
இக்கவிதையும் அப்பாவைப் பற்றிய சிறந்த ஒன்றுதான்.

புதிய தலைமுறை திரு.கல்யாண்ஜியின்
அப்பா பற்றிய கதை விகடனின் முத்திரைக்கதையாக வந்தது.
மேலும் வாசிக்க...

Monday, April 19, 2010

என் பதிவுகள்

கையில் வடை மடித்த காகிதம் கிடைத்தால், அதைக் கூடப் படிக்கும் பழக்கம் யார் வழியாக எனக்கு வந்தது என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆராய்ச்சி செய்ய யாருமில்லாததால் அடுத்த மேட்டருக்குச் செல்வோம்.

வலையுலகம் அறிமுகமானது 2007 ல். படிப்பதற்கு இவ்வளவு விடயங்கள் அதுவும் ஓசியில் என்ற போது, தேர்தலில் ஓட்டளிக்கும் வாக்காளர்கள் போல், அதன் மீது இயல்பாகவே காதல் உருவானது. ஆறு மாதம் தொடர்ந்து படித்து வந்த போது தான் அந்த விபரீத ஆசை உருவானது. நாமே ஏன் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கக் கூடாதென்று. அப்படி என் ஊர் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது தான் கடலையூர்.

அறிமுகப்பதிவு என்ற என் கத்துக்குட்டிப் பதிவுற்கு பதிவர்கள் பின்னூட்டமிட்ட போது, றெக்கை இல்லாமல் பறக்கத் துவங்கியது மனசு.

சுஜாதா பற்றிய இந்தப் பதிவு என்னால் மறக்க முடியாத ஒன்று. அதன் பின் நான் தலைவர் பற்றிப் போட்ட மற்ற பதிவுகள் சுஜாதா 1 , சுஜாதா 2 நண்பர்கள் தேசிகன் மற்றும் பாஸ்டன் பாலா இருவரின் தொகுப்பிலும் இடம் பெற்றது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

அவ்வைசண்முகி படம் பற்றிப் போட்ட இந்தப் பதிவை விட இந்தப் பதிவில் இடப்பட்ட நண்பர்களின் பின்னூட்டங்கள் சிறப்பாக இருந்தது என்பது என் கருத்து.

நான் போட்ட சில ஆகச் சிறந்த, கருத்தாழமிக்க, சமுதாயத்தையே புரட்டிப் போடத்தகுந்த (சரி...சரி அடிக்க வராதீங்க) பதிவுகளை யாரும் படிக்கக் கூட இல்லாததால், சினிமா விமர்சன மொக்கைப் பதிவுகள் போடத் துவங்கினேன். அதில் எனக்குப் பிடித்தது பிள்ளைக்காதல் , பீமா , அஞ்சாதே
போன்றவை.

சில, பல பிரபலங்களை வைத்து கிண்டல் தொனியில் எழுதப்படும் லூசுப்பையன் வகையராவைச் சார்ந்த பதிவுகளான குசேலன் -2, குருவி -2 ,
நித்யானந்தர் போன்றவையும் எனக்குப் பிடித்ததே.

என் அனுபவங்களை வைத்துப் போடப்பட்ட திருப்பூர் , குழந்தைகள், சம்பளம்
போன்ற பதிவுகளையும் படித்துப் பாருங்களேன்.

பங்குசந்தை பத்தியெல்லாம் ஒரு பதிவு போட்ருக்கேன்னா பாத்துக்கோங்களேன்..

கடைசியா ஒரு கருத்து சொல்லனும்ல....

நானே நொங்காம எழுதிக்கிட்டு இருக்கேன். புதுசா வரவங்கல்லாம் தைரியமா எழுதுங்க பாஸூ....

அன்புடன்

செல்வம்
மேலும் வாசிக்க...

என் பெயர் செல்வம்

புரியுது..புரியுது மனசுல பெரிய ஆதவன்னு நினைப்பான்னு நீங்க கேக்கிறது புரியுது. இருந்தாலும் எப்படி ஆரம்பிக்கிறதுன்னு தெரியல......

நான் முதல்பதிவு போட்டவுடனே யாருமே படிக்காமே, தெரியாம படிச்சவங்களும் நாலு திட்டு திட்டி அனுப்ச்சிருந்தாங்கன்னா உங்களுக்கு இந்த கொடுமையே வந்திருக்காது. இப்ப வருத்தப்பட்டு என்னா பண்றது? டூ லேட் பாஸ்.

நானும் ரவுடிதான்னு சொல்லிக்கிட்டு 2 ½ வருஷமா வலையுலகைச் சுத்தி சுத்தி வந்ததுல கற்றதும் அதிகம். பெற்றதும் அதிகம்.

சிறுவர்மலர், பூந்தளிர், ராணி காமிக்ஸ், குமுதம், விகடன், ராஜேஷ்குமார், பாலகுமாரன், சுஜாதான்னு படிப்படியா ஏறுன வாசிப்பனுபவத்தை லிப்ட் மூலமாக ஒரேயடியாக ஏற்றிவிட்டது இந்த வலையுலகம் தான்.

வாழ்க்கை என்பது கற்பதும், பகிர்வதும் என்று கொண்டால் சரியான மீடியம் வலையுலகம் தான். இன்னும் நிறைய கற்றலையும், பகிர்தலையும் எதிர்நோக்கி....

வலைச்சரத்தில் என்னை யாராவது அறிமுகப்படுத்தமாட்டார்களா? என்று ஏங்கியுள்ளேன். இன்று என்னையவே வலைச்சர ஆசிரியராக இருக்கச் சொன்னது சீனா ஐயாவின் சகிப்புத்தன்மையைக் காட்டுகிறது.

வலைச்சரம் குழுவிற்கும், என்னையும் வந்து படிக்கப் போகும் அன்பு பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றி.

ஸ்டார்ட் மீஸிக்........

இப்படிக்கு

செல்வம்
மேலும் வாசிக்க...

தமிழ் மணத்தில் - தற்பொழுது