07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Monday, April 19, 2010

என் பதிவுகள்

கையில் வடை மடித்த காகிதம் கிடைத்தால், அதைக் கூடப் படிக்கும் பழக்கம் யார் வழியாக எனக்கு வந்தது என்பது ஆராய்ச்சிக்குரியது. ஆராய்ச்சி செய்ய யாருமில்லாததால் அடுத்த மேட்டருக்குச் செல்வோம்.

வலையுலகம் அறிமுகமானது 2007 ல். படிப்பதற்கு இவ்வளவு விடயங்கள் அதுவும் ஓசியில் என்ற போது, தேர்தலில் ஓட்டளிக்கும் வாக்காளர்கள் போல், அதன் மீது இயல்பாகவே காதல் உருவானது. ஆறு மாதம் தொடர்ந்து படித்து வந்த போது தான் அந்த விபரீத ஆசை உருவானது. நாமே ஏன் ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கக் கூடாதென்று. அப்படி என் ஊர் பெயரில் ஆரம்பிக்கப்பட்டது தான் கடலையூர்.

அறிமுகப்பதிவு என்ற என் கத்துக்குட்டிப் பதிவுற்கு பதிவர்கள் பின்னூட்டமிட்ட போது, றெக்கை இல்லாமல் பறக்கத் துவங்கியது மனசு.

சுஜாதா பற்றிய இந்தப் பதிவு என்னால் மறக்க முடியாத ஒன்று. அதன் பின் நான் தலைவர் பற்றிப் போட்ட மற்ற பதிவுகள் சுஜாதா 1 , சுஜாதா 2 நண்பர்கள் தேசிகன் மற்றும் பாஸ்டன் பாலா இருவரின் தொகுப்பிலும் இடம் பெற்றது மகிழ்ச்சிக்குரிய ஒன்று.

அவ்வைசண்முகி படம் பற்றிப் போட்ட இந்தப் பதிவை விட இந்தப் பதிவில் இடப்பட்ட நண்பர்களின் பின்னூட்டங்கள் சிறப்பாக இருந்தது என்பது என் கருத்து.

நான் போட்ட சில ஆகச் சிறந்த, கருத்தாழமிக்க, சமுதாயத்தையே புரட்டிப் போடத்தகுந்த (சரி...சரி அடிக்க வராதீங்க) பதிவுகளை யாரும் படிக்கக் கூட இல்லாததால், சினிமா விமர்சன மொக்கைப் பதிவுகள் போடத் துவங்கினேன். அதில் எனக்குப் பிடித்தது பிள்ளைக்காதல் , பீமா , அஞ்சாதே
போன்றவை.

சில, பல பிரபலங்களை வைத்து கிண்டல் தொனியில் எழுதப்படும் லூசுப்பையன் வகையராவைச் சார்ந்த பதிவுகளான குசேலன் -2, குருவி -2 ,
நித்யானந்தர் போன்றவையும் எனக்குப் பிடித்ததே.

என் அனுபவங்களை வைத்துப் போடப்பட்ட திருப்பூர் , குழந்தைகள், சம்பளம்
போன்ற பதிவுகளையும் படித்துப் பாருங்களேன்.

பங்குசந்தை பத்தியெல்லாம் ஒரு பதிவு போட்ருக்கேன்னா பாத்துக்கோங்களேன்..

கடைசியா ஒரு கருத்து சொல்லனும்ல....

நானே நொங்காம எழுதிக்கிட்டு இருக்கேன். புதுசா வரவங்கல்லாம் தைரியமா எழுதுங்க பாஸூ....

அன்புடன்

செல்வம்

12 comments:

 1. வருக வருகவே.... வாழ்த்துக்கள் தொடருங்கள்

  ReplyDelete
 2. உங்க பதிவுகள படிச்சிட்டு வரேன்,
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. ரைட்டு செல்வம் கச்சேரி களை கட்டுது. கலக்குங்க..... ஒருவாரத்துக்கு நான் கியாரண்டி. எல்லாரும் இங வாங்க பச்ச புள்ள வசமா சிக்கியிருக்கு......

  ReplyDelete
 4. உங்கள் அறிமுக பதிவே அசத்தல். இன்னும் நெரய சொல்லுங்க. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. அறிமுக பதிவே அசத்தல். செல்வம் கச்சேரி களை கட்டுது..!

  ReplyDelete
 6. வருக..வருக.. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. நன்றி...ரமேஷ், சைவகொத்துப்பரோட்டா, முரளி,இராமசாமி கண்ணண்,குமார்,சித்ரா,அமைதிச்சாரல்.

  பொறுமையாய்ப் படித்த அத்துணை தோழர்களுக்கும் நன்றி.

  அன்புடன்
  செல்வம்

  ReplyDelete
 8. ரொம்ம்ம்ம்ம்ப்ப்ப்ப்ப சீனியர் போல நீங்க!! ஆனாலும் இப்பத்தான் பாக்கிறேன்!! தொடருங்க!!

  ReplyDelete
 9. நல்லாவே அறிமுகம்..

  ReplyDelete
 10. வலையுலக பீஷ்மர், கதையுலக பிரம்மா ஆகிய நான் எழுதிய காவிய காதல் கதை இங்கே படித்து மகிழுங்கள்...

  www.idhayame.blogspot.com

  ReplyDelete
 11. நன்றி..ஹீசைனம்மா, மின்மினி..

  இதயமே....படிச்சுருவோம்....

  அன்புடன்

  செல்வம்

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது