07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, April 13, 2010

செண்பகமே செண்பகமே ..2

கதை புரியாதவங்க முதல்ல இருந்து வாங்க..

செண்பகம் : மச்சான் காலையில பாதியிலே விட்டுட்டுபோன பதிவர்களை பற்றி சொல்லுங்க மச்சான்..

மணி : என்ன இது இவ்வளோ ஆர்வமா இருக்கியே.. பரவாயில்லை..

ரொம்ப பீத்திக்காத மச்சான்.. கேட்டா சொல்லுவியா..

சரிசரி சொல்லுறேன்.. காலையில பயணத்துல உள்ள அனுபவத்த பார்த்தோமா..

இவருபேரு மதார். இவரு சென்னையிலஇருந்து திருநெல்வேலி போறதுக்கு டிக்கெட் எடுத்திருக்காக.. ஆனா பாரு..

அட நம்மூரா அந்தம்மா... என்னாச்சி மச்சான் என்னாச்சி...

பாவம் அவங்கபட்ட கஷ்டத்த நீயே படிச்சிப்பாரு..

அட ஆமா மச்சான்.. அரசு பஸ்ஊழியர்கள் பண்ணுன தவறால.. சே...

சரிமச்சான் ராத்திரி 11 மணியாயிருச்சி.. படுங்க.. காலையில பாப்போம்.

பொழுது விடிகிறது.

மச்சான் ஏமச்சான்! எங்க இவரக்காணோம் காலங்காத்தால எங்கப்போனாரு...

கவிதையே தெரியுமா என்கனவு நீதானடி என்இதயமே புரியுமா...

அட அட என்னமா பாட்டெல்லாம் படிக்கிறீக மச்சான். ரொம்ப சந்தோசமாருக்கு மச்சான்.

என்ராசாத்தி அடியே உனக்காகத்தானடி இந்த உயிரே..

மச்சான் ரொம்ப புல்லரிச்சி போச்சி.. அழுகஅழுகாச்சியா வருது.

உனக்காகத்தான் கவிதை எழுதிக்கிட்டிருக்கேன். சரியா வரமாட்டேங்குது..

இதுக்கேன் கவலப்படுதே மச்சான்! கவிதை எழுதிதான் உன் அன்பை வெளிக்காட்டணுமா. எப்பவுமே நான் உன் மனசுலதான்; நீ என் மனசுல.., என்மேல இம்பூட்டு அன்புவச்சிருக்கிறத நினைச்சா ரொம்ப பெருமையா இருக்கு மச்சான்..

சரிப்புள்ள.. நம்ம வலையுலகில பதிவர்கள் என்ன எழுதிருக்காங்கன்னு பாப்போமா..

ஆங்.. சரி மச்சான்..

நம்ம ஏஞ்சல் ஒரு கவிதை எழுதிருக்காக..

ஆமா மச்சான் இந்த கவிதை நமக்கானது மச்சான்.. ரொம்ப நல்லாருக்கு.

இதப்பாரு புள்ள.. இதுவும் நமக்குதான்..

அடுத்து யாரு மச்சான்..

காதல் கவிதை சரத்தை இங்க ஒருத்தர் தொடுக்கிறார் பாரு..

பேரென்ன மச்சான்..

பேரு வித்யாசாகர்.. ஒவ்வொன்னும் ஒவ்வொரு ரகம்.. அருமையாக இருக்கு புள்ள..

ஆமா மச்சான்.. அடுத்து யாரு இருக்காவுக..

ஏப்புள்ள.. இதயம் பேசுறத கேட்டிருக்கியா..

ஆமா மச்சான்.. சத்தம் கேட்குது.. ( மணியின் நெஞ்சில் சாய்ந்துகொண்டு )

அடப்போபுள்ள.. என் இதயம் எப்பவுமே உனக்குதானே அதில் நீதான் இருக்கே..

என் ஆசமச்சான் இந்தா வாங்கிக்கோ இச் இச் இச் இச்...

ரொம்ப நன்றி புள்ள.. அடுத்தவுகள பாப்போமா..

சரிசரி அடுத்தவுகள பாரு.

காட்சிகள் ரொம்ப நல்லாவே இருக்கு.. படம் ரொம்ப நல்லாருக்கு புள்ள..

என்ன மச்சான் கவிதைய கேட்டா படத்தபத்தி சொல்றீக..

ஏபுள்ள இந்த சினிமா படம் எடுக்கிறாவுள்ள அவுகளேதான்.. இந்த கற்றதுதமிழ் படம் எடுத்தாகளே அவுக பேரு ராம்.

ஆமா அதுக்கென்ன இப்போ..

அவரோட பக்கத்துல சுமதி கவிதைகள்ன்னு கவிதைகளா எழுதியிருக்காரு புள்ள..

படிச்சிக்காட்டு மச்சான்.. ரொம்பவே நல்லாருக்கு மச்சான்.

அடுத்தவுகள பாரு புள்ள..

இங்க ஒருத்தரு செயின் தொலைஞ்சி போன கதைய சொல்லிருக்காகபுள்ள..

அட இது கத மச்சான்.. அடுத்தது மச்சான்..

நான் உனக்கு இந்தமாதிரி ஒரு கவிதையத்தான் தேடிக்கிட்டிருந்தேன்.

அதாரு மச்சான்.. என்ன கவித..

இவங்க பேரு ஹேமா.. இவரோ கவிதய எல்லோரும் விரும்புதாகன்னா பாத்துக்கோயேன்.

அடுத்தவுக யாரு மச்சான்

இவுக பேரு கோமா.. கவிதையை மத்தாப்பு போல அழகா சுத்தவிட்டிருக்காக பாருபுள்ள.. நல்ல ரசனை.

ஆமா மச்சான்.. ரொம்ப நல்லாருக்கு..


சரிமச்சான் பக்கத்துவீட்டு மாலதிஅக்கா கடத்தெருவுக்கு போறதுக்கு கூப்பிட்டாக நான் போயிட்டுவாரேன் மச்சான். எங்கயும் போயிறாதீக.. நான் வருதவரைக்கும் இத நினைச்சிக்கிட்டே இரு.. இந்தா மச்சான் வாங்கிக்கோ. இச் இச் இச் இச்...

ஓகே என்ராசாத்தி..


தொடரும்...


உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

35 comments:

 1. ஆஹா அருமை !
  கதை சொல்வதுபோல் அறிமுகம் மிகவும் சிறப்பாக உள்ளது !


  பகிர்வுக்கு நன்றி !
  தொடருங்கள் மீண்டும் வருவேன்

  ReplyDelete
 2. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.. காட்சி தளத்தில் உள்ள சுமதியின் கவிதைகள் மிகவும் நன்றாக இருக்கும்.... பகிர்ந்தமைக்கும் நன்றி....

  ReplyDelete
 3. எத்தனை இச், கொடுக்கப்படவேண்டியதுதான்.... அருமை தொடருங்கள்....

  ReplyDelete
 4. சுவை குறையாம‌ல் அறிமுக‌ம் ந‌ல்லா இருக்கு ஸ்டார்ஜ‌ன்..

  ReplyDelete
 5. ம்ம்..நடத்துங்க..ரொம்ப சுவாரஸ்யமாக இருக்கு.

  ReplyDelete
 6. ஸ்டார்ஜன் ரொம்ப நல்லா இன்ரஸ்டிங்கா இருக்கு ஸ்டோரி.. கலக்கிப்புட்டீக..

  ReplyDelete
 7. அதிர்ஷ்டக்கார மணி. இந்த செண்பகம் எவ்வளவு கொடுக்குது பாருங்களேன்.

  அறிமுகங்கள் அருமை.

  ReplyDelete
 8. மிக்க நன்றி ஸ்டார்ஜன். பிறருக்கு உதவ தன் திறமையை கையாண்டு; தன் எழுத்து யுத்தியால் எங்களை போன்றோரை கவுரவப் படுத்தியது போற்றத் தக்கது.

  உங்களின் நடை ரசிக்க வைக்கிறது. அந்த ரசனையில் எட்டி தலை காட்டுகிறது எங்களை போன்றோரின் உழைப்பும். வாழ்க!


  வித்யாசாகர்

  ReplyDelete
 9. //அக்பர் said...
  அதிர்ஷ்டக்கார மணி. இந்த செண்பகம் எவ்வளவு கொடுக்குது பாருங்களேன்.

  அறிமுகங்கள் அருமை.//

  ரிப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்.. :))

  ReplyDelete
 10. நன்றி ஸ்டார்ஜன்

  ReplyDelete
 11. நன்றி ஸ்டார்ஜன்

  thank you for introducing me.

  ReplyDelete
 12. வாங்க பனித்துளி சங்கர்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 13. வாங்க பாலாசி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 14. வாங்க இர்ஷாத்

  பாராட்டுக்கு நன்றி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 15. வாங்க சைவகொத்துப்பரோட்டா

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 16. வாங்க ஸ்டீபன்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 17. //அக்பர் said...
  அதிர்ஷ்டக்கார மணி. இந்த செண்பகம் எவ்வளவு கொடுக்குது பாருங்களேன்.

  அறிமுகங்கள் அருமை.//

  ரிப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ய்.

  ReplyDelete
 18. Thanks starjan .that trip u mentioned so tragedic .congrats to all.

  ReplyDelete
 19. நீங்கள் அறிமுகப் படுத்தும் விதமே, ஒரு அருமையான பதிவு.

  ReplyDelete
 20. செம்பகமும் ஸாரி செண்பகமும் மணியும் உங்கள் எழுத்தில் அருமையா பதிவர் அறிமுகம் செய்கிறார்கள். அருமை ஸ்டார்ஜன். தொடருங்கள்...

  உங்கள் தளத்திற்கு வந்த அந்த பெயரில்லா பூச்சியின் செயல் குறித்து சிறிதாவது கண்டிக்கும் விதமாக வலைச்சரத்தில் தாங்கள் தொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 21. வாங்க ஸாதிகா

  நன்றி பாராட்டுகளுக்கு..

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 22. வாங்க மின்மினி @ நன்றி மின்மினி

  வாங்க அக்பர் @ ரொம்ப நன்றி பாராட்டுக்கு தொடருங்கள் கருத்துக்களை..

  ReplyDelete
 23. வாங்க வித்யாசாகர்

  நன்றி பாராட்டுக்கு.. உங்கள் எழுத்துக்கள் மேலும் சிறக்கட்டும்.

  ReplyDelete
 24. வாங்க ராஜா

  ரிப்பீட்டே பெருசா இருக்கே..

  நன்றி தங்கள் அன்புக்கு..

  ReplyDelete
 25. வாங்க கோமா

  நன்றி பாராட்டுக்கும் கருத்துக்கும்

  ReplyDelete
 26. வாங்க ஏஞ்சல்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 27. வாங்க ஜெய்லானி

  ரிப்பீட்டே பெருசா இருக்கு.. என்ன எல்லோரும் ரிப்பீட்டா; நான் அப்பீட்டாகிறேன்.

  நன்றி தங்கள் அன்புக்கு...

  ReplyDelete
 28. வாங்க மதார்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 29. வாங்க சித்ரா

  நன்றி கருத்துக்கும் தொடர்ஆதரவுக்கும்

  ReplyDelete
 30. வாங்க குமார்

  ரொம்ப நன்றி குமார்.. தங்கள் அன்புக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன். அதை பற்றி குறிப்பிடலாம்; ஆனால் இந்த தளத்தில் மற்றபதிவர்களின் அறிமுகம் மட்டுமே தொடுக்கவேண்டும்.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி குமார்.

  ReplyDelete
 31. வாங்க www.bogy.in

  தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 32. அருமை ஸ்டார்ஜன். தொடருங்கள்

  ReplyDelete
 33. பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி அத்திரி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது