07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, March 24, 2010

காவிய புதன் - வலைச்சரத்தில்

>இன்று வலைச்சரத்தில் மூன்றாவது நாள், புதன்கிழமை. பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காதுன்னு பெரியவங்க சொல்வாங்க‌. எல்லா நல்ல காரியங்களும் புதன்கிழமையில் வைத்தால் மனதுக்கு சந்தோஷம் என்று சொல்பவர்கள் நிறையபேர் உண்டு. சரி விஷயத்துக்கு வருவோம்.

பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் தங்கள் திறமைகளை நிலைநாட்டி வருகிறார்கள். வலைப்பக்கங்களில் தனது எழுத்துக்கள் மூலம் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆம், இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை மையமாக கொண்ட வலைப்பக்கங்கள், நமது வலைச்சரத்தை அலங்கரிக்கப்போகின்றன.

ஸாதிகா மேடம்

பல்வேறு துறைகளில் சாதனை படைக்கும் பெண்கள் இங்கே பளிச்சிடுகிறார்கள்.

சாப்பிட சாப்பிட திகட்டாத ஒரு களஞ்சியமே இங்கே காணலாம். ஆபிஸில் முன்னேறக்கூடிய வழிகளையும் ஸாதிகா சொல்லிருக்காங்க.

சித்ரா டீச்சர்

தலைப்புதான் வெட்டிபேச்சு. ஆனா விவரம் ரொம்ப ஜாஸ்தி. நிறைய பயனுள்ள கட்டுரைகள் இவரின் பக்கத்தை அலங்கரிக்கின்றன. அமெரிக்கா பொளாதாரம் எப்படி இருக்குன்னு இவரிடம் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். அதேமாதிரி அமெரிக்காவில் ஷாப்பிங் போகும்போது சித்ராவிடம் ஆலோசனை கேட்டு செல்லலாம். திருநெல்வேலின்னா அல்வாதான் நமக்கு தெரியும். இவர் புட்டுபுட்டு வைக்கிறார்.

அம்பிகா

சாதனை பெண்கள் இவரது வலைப்பூவை அலங்கரிக்கின்றனர். அன்பையும், ஆதரவையும் வேண்டி நிற்கும் ஒரு சாதனை பெண் இங்கே மிளிர்கிறார்.

கணவனால் கொடுமைக்கு ஆளான‌ பெண்ணை பற்றி இங்கே. உங்க வீட்டுல ரோஜா செடி வளரணுமா?... கேளுங்க அம்பிகாவிடம்.

மைதிலி கிருஷ்ணன்

பேய்களை பற்றிய ஆய்வு நடத்திவருகிறார் மைதிலி கிருஷ்ணன். எதுவும் சந்தேகம் என்றால் கேளுங்க. வெளியூர் சென்று படிக்கும் பெண்களா நீங்க? மைதிலி என்ன சொல்கிறார் என்று கேட்டுவிட்டு செல்லுங்கள்.

ஜெஸ்வந்தி

தண்ணீரின் அவசியம் என்னவென்று தெரிஞ்சிக்கலாம் வாங்க. இரண்டரை அடி உள்ள மனிதர் என்னவானார்?...

அனன்யா மகாதேவன்

யார்யாரெல்லாம் பிரபலமாகணுமோ அவங்களெல்லாம் பாலக்காட்டு பக்கம் வாங்க.. ஹிந்தியில் வெளுத்து வாங்குகிறார். நெட்லெயிருந்து சுடுவாங்கன்னு கேள்விபட்டிருக்கிறேன். சுட்ட பழத்தையும் சுட்டிருக்கிறார். :‍-)))

லக்ஷ்மி SRK

வட இந்திய உணவுகள் இவருக்கு அத்துப்படி. வித்யாசமாக சாப்பிடணுன்னு தோணிச்சின்னா வாங்க இங்கே.

சிநேகிதி

விதவிதமான நாக்குக்கு ருசியா சமைத்து சாப்பிட விரும்புபவர்கள் வரலாம் இங்கே தயக்கமின்றி.. பொதுவா பெண்கள் பதிவுகளில் பெண்களுக்கு டிப்ஸ் நிறைய சொல்வாங்க. இவர் ஆண்களுக்கும் சொல்கிறார். அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள் நிறைந்த இந்த இல்லம் ஒரு இனிய இல்லமே

பத்மா

இருளின் நிறம் என்ன?.. கேட்கலாம் வாங்க.. வித்யாசமான பக்கங்கள் கொண்ட காகித ஓடம்

பத்மினி

வித்யாசமான எண்ணங்களை கொண்ட வலைப்பூவுக்கு சொந்தக்காரர். கம்ப்யூட்டரை கதை எழுத பணிக்கிறார். பேய் பங்களாவில் என்ன நடந்தது?.. தெரியலியே.. தெரிந்து கொள்ள மந்திரவாதியின் மனைவியிடம் கேட்போமா..

க.நா.சாந்தி லக்ஷ்மணன்

அந்தமானின் அழகை இவர் வலைப்பூவில் காணலாம். தமிழோசை ஒலிக்கச் செய்திருக்கிறார். அழைப்பதில் இத்தனை அர்த்தம் உண்டா?..

ஜலீலா

எல்லாவிதமான சமையலாகட்டும், கட்டுரைகள், அழகு குறிப்புகள், ஆல்இன்ஆல் ஜலீலாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். தம் பிரியாணி வாசம் இங்கே மூக்கை துளைக்குது..

பவி

வண்ணவண்ணமான எண்ணங்களை கொண்ட வலைப்பூ இது. பயனுள்ள டிப்ஸ், அருமையான கருத்துக்களை கொண்ட பக்கங்களை காணலாம். மயில் ஆடும் அழகே தனிதான்.

ஹூசைனம்மா

இவரின் சொல்வதை பார்த்தா தண்ணீர் பஞ்சமே இருக்காதுபோல.. பரம்பரை படமா இல்லையே!! ஓ ஜீன்ஸ்.. இவருக்கு பிடிக்கும் பெண்களை எல்லோருக்கும் பிடிக்கும். கலக்குறாங்க ஹூசைனம்மா. வித்யாசமான பக்கங்கள் சென்று வாருங்களேன்.

தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்....

உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.

,


34 comments:

 1. சகோதரி ஜலீலா அவர்களின் பதிவுகளை விரும்பி படிக்கும் வாசகன் நான்.

  மற்ற அறிமுகங்கள் எனக்கு புதிது என்றாலும் வாசித்துவிடுகிறேன்

  வாழ்த்துக்கள்

  விஜய்

  ReplyDelete
 2. :) அருமையான பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 3. அட, அட, அடடா......... மிக்க நன்றி, சார்.
  அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!
  ஒரே பதிவில், எத்தனை அறிமுகங்கள் ... எத்தனை இடுகைகள்...... அசத்திட்டீங்க!

  ReplyDelete
 4. காவிய புதன், நல்லா இருக்கு.

  ReplyDelete
 5. நாளைக்கு என்ன காமெடி வியாழனா?

  ReplyDelete
 6. வாசகர்களுக்கு என்னையும், எனக்கும் சிலரையும் அறிமுகம் செய்து வைத்ததற்கு நன்றி ஸ்டார்ஜன்!!

  ReplyDelete
 7. ஸ்டார்ஜன் சார்! நன்றி சின்ன வார்த்தை!
  ஏதாச்சும் வித்தியாசமா... ஒண்ணும் தோணல.ரொம்பபபப......
  நன்றிறிறிறிறி......

  ReplyDelete
 8. நன்றி ஸ்டார்ஜன்.என்ன சொல்வதென்று தெரில

  ReplyDelete
 9. இத்தனை பேரா. அவர்களுக்கு தனித்தனியாக 3 இடுகைககளா.

  கலக்கிட்டே போ!

  அறிமுகம் மிக அருமை. உன் உழைப்பு தெரிகிறது.

  ReplyDelete
 10. அருமையான பகிர்வுக்கு நன்றி நண்பா

  ReplyDelete
 11. அருமையான அறிமுகங்கள் ஸ்டார்ஜன்.

  இவர்களை பிந்தொடரலாம் என்றிருக்கிறேன்.

  ReplyDelete
 12. ஆத்தீ.... இவ்ளோ பெரிய ஆளுங்க மத்தியில நானா? ரெம்பப்பெருமையா இருக்குங்க... ரொம்ப நன்றிங்க! :-)
  மற்ற தோழியர் அறிமுகத்துக்கு நன்றிகள் பல!

  ReplyDelete
 13. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய ஸ்டார்ஜனுக்கு மிக்க நன்றி + சந்தோஷம்.

  இது இரண்டாம் முறை அறிமுகம். நன்றி.முன்பு முத்தான முத்துக்கள் இப்ப சமையல் அட்டகாசம்..

  வாசகர்களுக்கும் மிக்க நன்றி.வருகை தரும் வாசகர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.

  சகோதரர் விஜய்க்கும் ஸ்பெஷல் நன்றி

  இதில் எனக்கு தெரிந்த நெருக்கமான‌ தோழிகள் ஸாதிகா அக்கா, ஹுஸைனாம்மா, சித்ரா வும் அறிமுகம் ரொம்ப சந்தோஷம்.

  மற்ற தோழிகளுக்கும் பாராட்டுக்கள்,

  மொத்தத்தில் ஸ்டார்ஜனில் தேர்வுகள் அருமை

  ReplyDelete
 14. அறிமுகத்துக்கும், ஊக்கமளித்ததர்க்கும் நன்றி ஸ்டார்ஜன். ஆனா பேய்கள பற்றி ஆராய்ச்சி செய்கிறேன்னு ஒரு பீலா விட்டிருக்கீங்களே.. பாவம் வாசகர்கள் பேய்கள பத்தி தெரிஞ்சிக்கிற ஆர்வத்துல என்னோட ப்ளாக் வந்தது கிளிக்கி இருக்காங்க போல இருக்கு. என்ன உதைக்காம விட்டா சரி தான். இந்த ப்ளாக் நான் துடங்க காரணமா இருந்த சித்ராவுக்கு தான் நான் நன்றி சொல்லணும்.

  ReplyDelete
 15. அன்புமிக்க நண்பர்களே!

  இந்த பக்கத்தில் ஸ்மைலி சிம்பல் நானாக சேர்க்க வில்லை. இடுகையை வெளியிடும்போது HTML error ஆகிவிட்டது. தவறாக நினைக்க வேண்டாம்.

  ReplyDelete
 16. அருமையான அறிமுகங்கள். நன்றி ஸ்டார்ஜன்.

  ReplyDelete
 17. வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்திய ஸ்டார்ஜனுக்கு மிக்க நன்றி.அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 18. சகோ ஸ்டார்ஜன் என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியது மகிழ்ச்சியாக உள்ளது.என்னுடைய மகிழ்ச்சிகலந்த நன்றி.

  ReplyDelete
 19. ஸாதிகா., சித்ரா., அம்பிகா., மைதிலி .,பத்மா.,சாந்தி ., ஜலீலா ., -ஹுசைனம்மா எலலோரும் நல்லா படிச்சு இருக்கேன் வாழ்த்துக்கல் மற்றவர்களையும் படிக்கிறேன் நன்றி ஸ்டார்ஜன் மற்றும் சீனா சார்

  ReplyDelete
 20. பலரும் எனக்கு தெரிந்தவர்கள். சிலர் படித்ததில்லை.

  நல்ல அறிமுகங்கள். நன்றி ஸ்டார்.

  ReplyDelete
 21. அருமையான அறிமுகம்...

  நிறைய பேர் ஏற்கனவே நான் தொடர்ந்து படிக்கும் ப்ளாக்கர்கள் தான் என்றாலும், சில புதிய அறிமுகங்கள் உள்ளன..

  நன்றி ஸ்டார்ஜன்...

  ReplyDelete
 22. அருமையான பகிர்வுக்கு நன்றி.சந்தோஷம்.
  நன்றி ஸ்டார்ஜன்

  ReplyDelete
 23. வருகைதந்து கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

  விஜய்
  V.Radhakrishnan
  T.V.ராதாகிருஷ்ணன்
  Chitra
  சைவகொத்துப்பரோட்டா
  நாமக்கல் சிபி
  ஹுஸைனம்மா
  க.நா.சாந்தி லெட்சுமணன்
  padma

  அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 24. வருகைதந்து கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

  அக்பர்
  கார்த்திகை பாண்டியன்
  கட்டபொம்மன்
  அநன்யா மஹாதேவன்
  Jaleela
  மைதிலி கிருஷ்ணன்
  மின்மினி
  ஜெஸ்வந்தி
  ஸாதிகா

  அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 25. வருகைதந்து கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

  தேனக்கா
  ராகவன் அண்ணே
  ஜமால்
  கோபி
  பவி

  அனைவருக்கும் நன்றிகள்.

  ReplyDelete
 26. அறிமுகப்படுத்தப்பட்ட அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். பலரும் நான் வாசிப்பவர்கள் + என் தோழிகள் என்பதில் சந்தோஷம்

  ReplyDelete
 27. வாங்க புதுகைதென்றல்

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 28. //அன்புமிக்க நண்பர்களே!

  இந்த பக்கத்தில் ஸ்மைலி சிம்பல் நானாக சேர்க்க வில்லை. இடுகையை வெளியிடும்போது HTML error ஆகிவிட்டது. தவறாக நினைக்க வேண்டாம்.//

  கடைசியில காவிய புதன் - காமெடி புதனாயிடுச்சா?

  ReplyDelete
 29. வாங்க சிபி

  அப்படியெல்லாம் விட்டுருவோமா என்ன‌...

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 30. உங்கள் வலைச்சரத்தில் என்னை குறிப்பிட்டதற்கு நன்றி ஸ்டார்ஜன்.
  ஒரு வாரம் ஊரில் இல்லாததால் தாமதமாகத் தான் படிக்க நேரிட்டது. மன்னிக்கவும்.

  ReplyDelete
 31. வாங்க அம்பிகா மேடம்

  மிக்க மகிழ்ச்சி

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது