07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, March 19, 2010

சினிமா சினிமா சினிமா

               ஆம், பாதி பேர் கரெக்டா சொல்லிட்டிங்க, சினிமாதான். வெள்ளிகிழமைன்னா உடனே பசங்க பாதிப்பேர் எனக்கு போன் பண்ணுவாங்க “மச்சி, எனக்கொரு டிக்கெட்” என்று. எவ்ளோ மொக்கைன்னு ஒரு படத்தை சொன்னாலும் நாம ஒரு தடவை பார்த்துட்டுவந்து ஆமா மொக்கைதான்னு ஜஸ்டிஃபை பண்ணிக்கிற டைப், சினிமா பைத்தியம் நான். ஆக் வெள்ளிகிழமை வேற எதபத்தி எழுதுறது, சொல்லுங்க?




இதோ என் சினிமா நண்பர்கள்.
               இவருடைய எழுத்துக்களில் இருக்கும் வசீகரம். அழகு. ரொம்ப ஜாலியா இருக்கும் இவரோட ஃப்லோ. என்னுடைய உலக திரைப்படங்களின் குரு இவரும் அண்ணன் வண்ணத்துப்பூச்சியும்தான். குடுத்துவச்ச ஆளுங்க, பொறாமையா இருக்கு பாலா, ஆனா சந்தோசமாவும் இருக்கு, பாலாவும் என்னோட நண்பர் என்று சொல்லிக்கொள்வதில். ரொம்ப நாளா கொஞ்சமும் புரியாம பார்த்துகிட்டு இருந்த ப்ரஸ்டீஜ் படம் இவரோட விமர்சனத்துக்குபிறகு கொஞ்சமா புரிஞ்சது, கொஞ்ச நஞ்சம் புரிஞ்ச மொமெண்டோ படம் இவர் விமர்சனத்தை படித்தபிறகு சுத்தமா புரியலை. இவருடைய சமீபத்திய தொடர்பதிவுகளான பிக்ஸார் ஸ்டோரியும், அவதார் தி டெக்னாலஜி-யும் கலக்கல் ஒரு தொகுப்பா புத்தகமே போடலாம் அந்த அளவிற்கு ஸ்டேண்டேர்ட் ரைட்டிங். இவருடைய இன்னுமொரு கலக்கல் தொடர், (A-Z) 18+ .
            இவருடைய எழுத்துக்களில் உள்ள உற்சாகம் படிக்கும்போது நம்மையும் தொற்றிக்கொள்ளும், அதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. பாலா,  ஒரு நல்ல மனிதன். இதன் காரணத்தை நான் ஏற்கனவே சொல்லியுமிருக்கிறேன்.




               தொடர்ந்து பின்னூட்டங்களின் மூலமாகவே பேசிக்கொண்டிருந்தோம். சென்னையில் நடந்த சிறுகதை பட்டறை எங்களுக்கான அறிமுகத்தை கொடுத்தது. சிலரிடம் விசாரித்து அவர்தான் சூர்யா என்று தெரிந்துகொண்டபின் அவரிடம் சென்றேன் “ஹலோ, நான் முரளி, திருப்பூர்லிருந்து வருகி...” அவ்வளவுதான் சொன்னேன். என்னை கட்டிபிடித்துக்கொண்டார். சில வினாடிகளுக்கு பின் என்னை விளக்கி என்னைய்யா நீ இவ்ளோ சின்ன பையனா இருக்க, நீ எழுதுறத வச்சி நீ பெரிய ஆளா இருப்பேன்னு நினைச்சேன்” என்றவாறு மறுபடியும் கட்டிபிடித்துக்கொண்டார். நானும் அவர் அவ்வளவு பெரிய மனிதராக இருப்பார் என்று நினைக்கவில்லை. எனக்கு அண்ணன் இருந்தால் இப்படி இருக்கலாம். 
               இவர் சினிமா பார்ப்பதை பார்க்கவே இவருடன் ஒரு சில நாட்கள் தங்கவேண்டும் போல இருக்கும். ஒரு மனுஷன், ஒரு படத்தை இவ்ளோ ஆழமா கவனிக்கமுடியுமான்னு யோசிக்க வச்சவர். இவர் எழுத்துக்களை படியுங்கள், நான் சொல்வது எவ்வளவு நிஜம் என்று தெரியும். நிச்சயம் நேரம் கிடைக்கும்போது இவரோடு சேர்ந்து பார்க்கவேண்டும் என்று சில படங்களைகூட தெரிவு செய்து வைத்திருக்கிறேன். போப்பின் கழிவறை, வட்டம்,  மரியா உலக திரைப்படம் பார்க்க விரும்புபவர்கள் அவசியம் இவரது பதிவை முழுவதுமாக ஒரு சுற்று வாருங்கள்.


               சூரியனுக்கு டார்ச் அடிச்ச கதையா இவருக்கு அறிமுகம்ன்னு சொல்லு இவருடைய ஆயிரகணக்கான ரசிகர்களிடம் வாங்கிகட்டிகொள்ள விருப்பமில்லை. வயது வித்தியாசம் எதுவும் பார்க்காத, நல்ல நண்பர். எப்போதாவது சினிமா அல்லது சிறுகதை இதில் ஏதாவது ஒன்றை எழுதினால் அதை படித்துவிட்டு உடனே போன் செய்து அவரது கருத்துக்களை பகிர்ந்து கொள்வார். வேற என்ன சொல்றதுன்னு தெரியலை, நல்ல மனுஷன். அவ்ளோதான். சீக்கிரமா இவரு ஒரு படம் பண்ணனும்ன்னு ரொம்பவே சீரியஸா வேண்டிக்கிறேன். வாழ்த்துக்கள், தல.
          உலக சினிமா மட்டுமில்ல உள்ளூர் சினிமாவா, தெலுங்குஹிந்தி,  எந்தபடமா இருந்தாலும் மொதோ நாளா பார்த்துட்டு  பிச்சி பிச்சி வைப்பாரு விமர்சனத்தை. அனேக பதிவர்கள் இவரது விமர்சனத்திற்கு பிறகே படம் பார்க்க விரும்புகின்றனர். இவரது தொடர்பதிவான சினிமா வியாபாரம் விரைவில் புத்தகமாக வர இருக்கிறது. அந்த அளவிற்கு தரமும் இருக்கும் இவரது எழுத்தில். வெறுமனே பதிவு எழுதி என்ன கிழிச்சன்னு கேட்கமுடியாது, அதன்மூலம் சம்பாதிக்கவும் முடியும்ன்னு சொல்லிகொடுத்தவர்.



கருந்தேள் கண்ணாயிரம், ராஜேஷ், பக்கத்து ஊர் பங்காளி,

மொதோ விஷயமே பயபுள்ளைக்கு இன்னும் ரெண்டு நாள்ல கல்யாணம், எல்லாருமா போயி, இப்பொதைக்கு அவர் பதிவுல மொய் வச்சிட்டு வாங்க.
பாலா பதிவுகளில் இவருக்கு ஒரு இண்ட்ரோ குடுத்தார், அப்போதிலிருந்து தொடர்ந்து வாசிச்சிட்டேதான் இருக்கேன். ரொம்ப செலக்டிவான படங்களைதான் பார்க்கிறார், நல்ல நல்ல படங்களாய். ஆங்கிலத்தில் எழுதிகொண்டிருந்த இவர், ஏதோ என்னையெல்லாம் மனசில வச்சி இப்போ தமிழ்ல எழுதுறார். நல்லா இருங்கப்பூ...

நண்பா, என்னுடைய வாழ்த்துக்கள், உங்களின் திருமண வாழ்க்கைக்கு. சீகிரன் இங்கயும் திரும்பி வாங்க. இவருடைய பதிவுகளில் எனக்கு பிடித்த சில பதிவுகள் 4 வாரம் 3 மாதம்  2 நாள் , எனக்கு ரொம்ப புடிச்ச சூரிய உதயத்திற்கு முன்  இதுபோக ஏ.ஆர்.ரகுமான் பற்றீய இவரது இந்த பதிவும் மிகவும் அருமையான பதிவு.





இன்னும் நிறைய பேர் இருக்காங்க, இன்னும் விளக்கமா இவர்களின் அறிமுகத்தை என் மற்ற பதிவுகளில் சொல்கிறேன். நல்ல படம் பாருங்க, சந்தோஷமா இருங்க.

என்ஜாய். லைஃப் இஸ் ப்யூட்டிஃபுல்.

10 comments:

  1. மன்னிக்கனும் நண்பர்களே! அந்த சினிமா பாரடைஸோ படத்தை எடிட் செய்து சிறுவனின் படத்தை மட்டுமே போட நினைத்தேன், ஆனால் நேரமின்மையால் அப்படியே பதிவிட்டுவிட்டேன்.
    :-)

    ReplyDelete
  2. அருமையான அறிமுகங்கள்.

    சிலர் தெரிந்தவர்கள்தான் என்றாலும் உங்களின் அறிமுகம் அருமை.

    ReplyDelete
  3. அன்பின் முரளி

    சினிமா - பதிவர்கள் - அறிமுகம் அருமை - வாழ்த்துகள்

    ReplyDelete
  4. சூர்யாஜி ஸ்பெஷல் எப்போமே கட்டிப்பிடி வைத்தியம்தான்..:))

    --
    பதிவு அசத்தல்..:))

    ReplyDelete
  5. அட...அட... விளக்கங்களும் அறிமுகங்களும் அருமை... முன்னமே அறிந்தவர்களாயினும்....

    ReplyDelete
  6. அருமையான அறிமுகங்கள்....

    ReplyDelete
  7. நண்பர் சூர்யாவுக்கும் கேபிள் ஜீக்கும் மற்ற வலைப் பதிவருக்கும் வாழ்த்துக்கள்... பகிர்வுக்கு நன்றி முரளி...

    ReplyDelete
  8. நன்றி புதுகை தென்றல்
    நன்றி சீனா சார்,
    நன்றி சங்கர் ஜீ
    நன்றி கனிமொழி,
    நன்றி பாலாசி,
    நன்றி சங்கவி,
    நன்றி லக்ஷ்மணன்,
    நன்றி பத்மா மேடம்.

    :-)

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது