07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 18, 2010

வானவில் - இப்படம் நாளை கடைசி !

கட்டுரை 

வித்யா.. சென்னையின் நல்ல ஹோட்டல்கள் போய் சாப்பிட்டு விட்டு படங்களுடன் போட்டு நமக்கு பசி கிளப்புவார். சினிமா விமர்சனம், பழைய நினைவுகள் பகிர்வு என ரசனையாய் இருக்கிறது இவரது ப்ளாக். (மேடம் நமக்கு எப்போதாவது பின்னூட்டம் போட்டால் "நல்ல பதிவு" என மட்டும்
சொல்லிட்டு போய்டுவாங்க..)

நகைச்சுவை 

அம்பி வாசித்துள்ளீர்களா? பெங்களூரில் வசிக்கும் தமிழர்; அவ்வபோது எழுதினாலும் ரசித்து சிரிக்க வைப்பவர். சாப்பாடு, ஹவுஸ் பாஸ், பெண்களூர் பற்றி இவர் எழுதும் பதிவுகள் சுவாரஸ்யமானவை.

மருத்துவம்/ ஹெல்த் பக்கம்

டாக்டர் தேவன் மாயம் பல உபயோகமான கட்டுரைகள் எழுதுகிறார். மருத்துவர்களே வலை உலகில் நேரடியாக தமிழில் எழுதும் போது நமக்கு அது
மிக பயன் உள்ளதாக உள்ளது. டெங்கு பற்றி எழுதியுள்ள பதிவை வாசியுங்கள்.. 


சிறுகதை

பத்திரிக்கைகளில் ஏற்கனவே பழக்மான பெயர் விமாலதித்த மாமல்லன்.. இவரது வலைப்பூவில் சிறுகதை, கட்டுரைகள் எழுதி வருகிறார்..  அப்படி ஒரு சிறுகதை 


டெக்னிகல் பதிவுகள் 

சூர்யா கண்ணன் அவசியம் நாம் அறிய வேண்டிய பதிவுகள் சில எழுதுகிறார். Laptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது .. வாசித்து பாருங்கள்

புத்தக விமர்சனம்

முழுக்க முழக்க புத்தக விமர்சனங்களுக்கான ப்ளாக் கிருஷ்ண பிரபுவினுடையது. அவ்வப்போது தான் வாசிக்கும் நல்ல புத்தகங்களை நம்முடன் பகிர்கிறார். ப்ளாகின் பெயரே நான் வாசித்த தமிழ் புத்தகங்கள் தான்!!

எழுதாமல் இருப்பவர் 

ஜெட்லியின் நண்பர் சங்கர். முன்பெல்லாம் " பார்த்ததும் படித்ததும்" பதிவில் இவரும் அவ்வபோதாவது எழுதுவார். சமீப காலமாய் ஏதும் எழுதலை. பின்னூட்டங்களில் கூட அதிகம் காண வில்லை. மறுபடி வாங்க சங்கர் உங்க வழக்கமான உற்சாகத்துடன்..

***
இன்னும் ஒரே நாள் தான் நண்பர்களே..  இப்படம் நாளை கடைசி !

12 comments:

 1. நனறி நண்பரே! உங்களின் அறிமுகங்களை சென்று பார்க்கின்றேன்.

  //இன்னும் ஒரே நாள் தான் நண்பர்களே.. இப்படம் நாளை கடைசி !//

  நல்ல நகைசுவை போங்கள்!

  ReplyDelete
 2. அன்பின் மோகன் குமார்

  நாளை கடைசி என வருத்தமா - நீட்டிக்கலாமா - அடுத்த ஆசிரிய வருத்தப் படுவாரே !

  ஆகா சும்மாதான் .....

  நல்வாழ்த்துகள்
  நட்புடன் சீனா

  ReplyDelete
 3. அருமையான அறிமுகங்கள்.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  தலைப்பு:)!

  ReplyDelete
 4. நிறைய நல்ல பதிவுகளை வாசித்து, தொகுத்து தந்து இருப்பதில் உங்கள் உழைப்பு தெரிகிறது. பாராட்டுக்கள்!

  ReplyDelete
 5. நல்ல பகிர்வு. இருவரைத் தவிர அனைவரையும் படித்திருக்கிறேன். நன்றி.

  நாளையோட படம் கடைசின்னாலும், படம் சூப்பர் ஹிட் தான் :)

  ReplyDelete
 6. அருமையான அறிமுகங்கள்.

  அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. அம்பி ஒரு காலத்தில ப்ரபல பதிவர்ங்க. இப்பதான் அதிகம் எழுதறதில்லை.

  ReplyDelete
 8. நாளையுடன் முடிகிறதா?!

  நாளை பார்ப்போம்.

  ReplyDelete
 9. Happy about it.. thank you mohan...

  ReplyDelete
 10. மிக்க நன்றி மோகன்குமார்.

  அப்புறம் சார் ஒழுங்கா பாருங்க. நீங்க எப்போதாவது போடும் அனைத்துப் பதிவுக்கும் பின்னூட்டம் போடறேன்:)))

  ReplyDelete
 11. என்னது நானு யாரா? : நன்றி
  **
  நன்றி சீனா சார்
  ***
  ராமலக்ஷ்மி மிக்க நன்றி
  **
  சித்ரா : நன்றி
  **
  அடடா மகிழ வைத்து விட்டீர்கள் பின்னோக்கி .
  **
  தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி குமார்
  **
  சின்ன அம்மணி : ஆமாம் சரியா சொன்னீங்க
  **
  அமைதி அப்பா: ஆம் நன்றி
  ***
  கிருஷ்ண பிரபு: நலமா? நன்றி
  ***
  வித்யா: ஹஹா ரைட்டு !!
  ***
  சனி & ஞாயிற்று கிழமை பொதுவாய் நிறைய பேர் ப்ளாக் பக்கம் வருவதில்லை என்பார்கள்; ஆனால் இந்த பதிவிற்கு பலர் பின்னூட்டமும் ஓட்டும் இட்டது மிக மகிழ்ச்சி

  நன்றி நண்பர்களே !

  ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது